ஆய்வு: பால், நிறம், வெள்ளை!
“முரட்டுத்தனம் மிக்க சட்டத்தரணி, மரியாதையீனம் தொடர்பான, தமது மேன்முறையீட்டு முயற்சியில் தோல்வியுற்றார்.” ஜூன் 15, 2016 ‘ரொறன்ரோ ஸ்ரார்’ பத்திரிகை இப்படியொரு தலையங்கத்துடன் செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றது. இதில் சம்பந்தப்பட்டவர் ரொறன்ரோவைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான Joseph Groia என்பவர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் ரொறன்ரோவில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது, எதிர்த் தரப்பினருக்காக வாதாடிய இவர், வழக்குத்தொடுநர் குறித்துத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதுவே இவர் மீதான குற்றச்சாட்டு.
தாம் குற்றமற்றவர் என நிரூபிப்பதற்கு எடுத்த முதல் இரு முயற்சிகளும் தோற்றுப் போகவே, மூன்றாவது முயற்சியாக, ஒன்ராறியோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தமது முறையீட்டை Joseph Groia சமர்ப்பித்திருந்தார். அதுவும் தற்போது தோல்வியில் வந்து முடிந்துள்ளது! இங்கு சட்டத்தரணி ஒருவர் தண்டனைக்குள்ளாவதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது, தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் அவரது தகாத நடத்தை!
1974 ஜனவரி பத்தாம் திகதி, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் கடைசி நாள் நிகழ்ச்சியின்போது, 9 தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். அது தொடர்பான விசாரணை யாழ். நீதவான் மன்றில் நடைபெறுகிறது. அந்நாளைய யாழ். பொலிஸ் அதிபர் ஆரியசிங்க, இன்ஸ்பெக்ரர் பத்மநாதனிடம், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறார், “இவர்தான் பிரச்சினைக்குக் காரணம். இவரைக் கவனிக்க வேண்டும்.” இவ்வார்த்தைகள் அமிர்தலிங்கத்தின் காதில் விழவே அவர் எழுந்து, நீதிபதி பாலகிட்ணரிடம் முறைப்பாடு செய்கிறார். ஆனால் நீதிபதியோ முறைப்பாட்டாளரையே நீதிமன்றை விட்டு வெளியேற்றுகிறார். இதனை அவதானித்துக்கொண்டிருந்த முன்னாள் மாவட்ட நீதிபதி தம்பித்துரை, “திரு. அமிர்தலிங்கம் அவர்கள் மதிப்புக்குரிய, ஆற்றல் மிக்க, ஒரு சிறந்த சட்டத்தரணி மட்டுமல்ல, இலங்கையிலுள்ள சுமார் இரண்டரை மில்லியன் தமிழரது மரியாதைக்கும் உரிய ஒரு தலைவர். அத்தகைய ஒருவரை இவ்வாறு நீதிமன்றை விட்டு வெளியேற்றி அவமதிப்பது, முறையற்ற செயல்” எனக் கூறித் தமது ஆட்சேபனையை முன் வைக்கிறார். நீதிபதி பாலகிட்ணர் தமது தவறை உணர்ந்து, அமிர்தலிங்கத்தை மீள அழைத்து, மன்னிப்புக் கோரி, ஆசனத்தில் அமர வைக்கிறார். இங்கு சட்டத்தரணி ஒருவர் தண்டனைக்குள்ளாவதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது, அவரது அரசியல்!

சிலப்பதிகாரம் சங்க காலத்தைத் தொடா்ந்து எழுந்த காப்பியம் ஆதலால் சிலம்பில் சங்க இலக்கியச் சாயல்கள் சில தொடா்ந்தும் சில மாற்றம் பெற்றும் அமைந்து வரக் காணஇயலுகின்றது.வஞ்சினம் என்பது புறப்பாடல்களில் காணக் கூடிய ஒன்று.சிலம்பில் வஞ்சினம் இடம்பெறக் கூடிய பல சூழல்களை நாம் அறிமுடிகிறது.சிலம்பில் கண்ணகி சேர மன்னன் ஆகியோரது வஞ்சின மொழிகள் தாண்டி வஞ்சினம் வெளிப்படக் கூடிய சில இடங்களும் காணப்படுகின்றன.
தமிழில் தோன்றிய பாவடிவங்களை யாப்பிலக்கணமரபின் அடிப்படையில் நால்வகைப்படுத்தி நோக்கலாம். இந்நால்வகைப் பாவடிவங்களில் ஒன்று கலிப்பாவாகும். இப்பாவடிவமானது ‘துள்ளல்’ என்ற ஓசைப்பண்பிலிருந்து உருவானதாகும். ஏனைய மூன்று பாவடிவங்களான ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா ஆகியவற்றைவிட தமிழரின் இசைமரபுடன் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள பா வடிவம் கலிப்பாவாகும். குறிப்பாகத் தமிழின் பண்டைய இசைமரபு நூல்கள் பெரும்பான்மையும் அழிந்துபட்ட நிலையில் அக்காலத்தய இசைமரபின் இயல்புகளைத் தெரிந்து தெளிவதற்குத் துணையாக நிற்கும் முக்கிய பா வடிவம் இதுவாகும். அத்துடன் தமிழில் காலந்தோறும் தோன்றிய இசைவடிவங்கள் பலவற்றின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது இப்பாவடிவம் ஆகும் என்பதும் தமிழரின் இசைவரலாற்றினூடாக அறிந்து கொள்ளக்கூடிய முக்கிய செய்தியாகும். இவ்வாறான இப்பாவடிவத்தின் இசையியல் முக்கியத்துவத்தை தமிழ் இலக்கணநூல்களின் துணைகொண்டு எடுத்துரைக்கும் முயற்சியாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது. 
சமுதாயம்,, சமூகம் - விளக்கம்
தற்காலப் பெண்ணியவாதிகள் பாலுறவை முன்னிறுத்தியே பெண்விடுதலைக்கான போராட்டத்தை துவக்கியுள்ளனர். பாலியல் அடிமைத்தனமே அனைத்துச் சிக்கலுக்கும் காரணம் என்பது இவர்களின் வாதமாகும். ஆதலால், ‘புனிதப்படுத்தப்பட்ட’, ‘மர்மப்படுத்தப்பட்ட’ ஆண் - பெண் அந்தரங்கம் பாடுபொருளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தந்தை வழிச் சமூகம் ‘குடும்பம்’ என்ற நிறுவனத்தின் மூலமாகப் பெண்ணின் பாலியலை அமுக்கி வந்ததாகக் கருதியே பாலுறவைப் பாடவிளைந்துள்ளனர்.
ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்புலவரான சிவசம்புப் புலவர் காலம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களிடையே மாறுபாடான கருத்துகள் நிலவுகின்றன. புலவரது நூல்கள் அச்சாகி வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்து, அச்சாகி வெளிவந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய எழுத்துக்களில் புலவரது காலம் பற்றிய பல்வேறுபட்ட கணிப்புக்களை அவதானிக்க முடிகின்றது. புலவரின் செய்யுட்களை அவர் வாழ்ந்த காலப்பின்புலத்தில் வைத்து ஆராய்வதற்கு அவரது காலம் பற்றிய சரியான கணிப்பு அவசியமாகும். இத்தேவை கருதியே புலவரின் காலம் தொடர்பாக இச்சிறுகட்டுரை ஆராய முனைகிறது. 
“தமிழில் மாதிரி உரைநடை நவீனம் பொது மக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு சுவை பொருந்தியதாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என தமிழுக்குப் புதிய உரைநடை நவீனமான நாவலெனும் இலக்கிய வடிவம் வேதநாயகம்பிள்ளையினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதிலிருந்து. நாவல் எனும் இலக்கிய வடிவம் பல்வேறு வளர்ச்சிக்கு உட்பட்டு இந்நூற்றாண்டிலும் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வடிவமாகவும் மிளிர்கின்றது. 
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பிறந்த முல்லைமணி என்னும் புனைபெயரைக் கொண்ட வே.சுப்பிரமணியம் இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சிறப்புக்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தையும் வழங்கியது. பாடசாலை அதிபராகவும், ஆசிரியகலாசாலை விரிவுரையாளராகவும், பிரதம கல்வி அதிகாரியாகவும், மாவட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய இவர் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கியத்திறனாய்வு போன்ற துறைகள் மூலம் தமிழ் எழுத்துலகில் கால் பதித்தார். இவர் மல்லிகைவனம், வன்னியர்திலகம், மழைக்கோலம், கமுகஞ்சோலை போன்ற நாவல்களைப் படைத்துள்ளார். இவற்றுள் “கமுகஞ்சோலை” என்னும் நாவல் இங்கு அலசப்படுகிறது.
மனித சமூகம் இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்து குடிமைச் சமூக நாகரிகத்தை ( civic society ) நோக்கி வளா்ந்த ஒரு வளா்ச்சிக் கட்டத்தை சங்ககாலம் என்று குறிப்பிடுவா்.இச்சங்க கால வாழ்க்கை முறைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.சங்கம் மருவிய கால இலக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியப் பதிவுகள் சில இடங்களில் அவ்வாறேயும் சில இடங்களில் மாற்றம் பெற்றும் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
முன்னுரை
முன்னுரை
ஒவ்வொரு காலகட்ட சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடே இலக்கண நூல்களை உருப்பெறச் செய்கின்றன. இலக்கணம் சமூகத்தின் உற்பத்திப் பொருளாக உள்ளது. சமூகத்தின் அடையாளப்படுத்தும் தன்மை இதில் வெளிப்படும். இலக்கணம் புனிதமானது; மாறாதது என்னும் கருத்தாக்கத்தை யதார்த்த நிலையில் காணும் பொழுது கட்டுடைத்தலுக்கு உள்ளாகின்றது. தமிழ் இலக்கண மரபில் தோன்றிய தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோக விவேகம் போன்றவை அந்த நூல்கள் எழுந்த காலகட்டத்தின் சமூக நிலையையே பிரதிபலிக்கின்றன. மரபை ஒட்டிய இலக்கணப் பெருக்கத்தில் ஐரோப்பியர் வருகையினால் உருப்பெற்ற இலக்கணங்கள் வேறொரு புரிதலுக்குள் கொண்டு சென்றன. இலக்கணநூல் உருவாக்கத்தில் எளிமையாக்கமும் புதுமையாக்கமும் செயல்படுத்தப்பட்டது. பதினெழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மரபை அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழ் இலக்கண நூல்கள் உருப்பெற்ற அதே காலகட்டத்தில் ஐரோப்பியரால் மரபை மீறிய இலக்கண நூல்கள் படைக்கப்பட்டன. ஐரோப்பிய சிந்தனையில் இலக்கணம் படைக்க விழைந்த கிறித்துவ பாதிரிமார்களுக்கு தமிழின் நீண்ட இலக்கணமரபை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ் இலக்கண மரபின் முன்னோடிகளான அகத்தியர், தொல்காப்பியர், பவணந்தியாரின் துணை தேவையாக இருந்துள்ளதை ஐரோப்பியர் இயற்றிய தமிழ் இலக்கண நூல்களின் முகவுரையின் வழி அறியலாகின்றது.

மனிதப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளும் இடம், காலம், சூழல் என்னும் பௌதிகத்திற்குள் ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறது. இதில் பண்பாட்டினை அனைத்து நிலைகளிலும் வெளிப்படுத்திக் காட்டுவது காலமும் சூழலுமே ஆகும். அதே போன்று சங்ககால மக்களின் வாழ்வியல் பின்புலங்களைத் தற்காலச் சூழலில் இனங்காணுவதற்கு மூலப்பனுவல்கள் தேவையான ஒன்றாகிறது. இப்பனுவல்கள் எழுத்தாக்கம் பெறும்போது தொகுப்பாக்கம் பெறவில்லை. மாறாக வாய்மொழி மரபுத்தன்மையில் மக்களாலும், பாண்மரபுகளாலுமே அவை பாடப்பட்டு, பின்னர் அவை கவிதையாக்கம் பெற்றன. இந்நிலையிலிருந்து சங்கப் பனுவல்களைப் பார்க்கும்போது சூழல்த் தன்மையும் காலவரையறையும் வெளிப்பட்டு நிற்கிறது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









