இணையத்தள அறிமுகம்: திசைகள் - வான் வழியே ஒரு வாசிகசாலை!
- எழுத்தாளர் மாலனின் 'திசைகள்' மின்னிதழ் தற்போது 'வான் வழியே ஒரு வாசகசாலை' என்னும் தாரக மந்திரத்துடன் இணையத்தில் மின் நூலகமாகப் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கின்றது. 'திசைகள்' மின்னூலகத்தினை www.thisaigal.in என்னும் இணைய முகவரியில் பாவிக்கலாம். 'திசைகள்' மின்னூலகத்தில் எழுத்தாளர் மாலன் அதனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ள அறிமுகக்குறிப்பினைப் பகிர்ந்து கொள்கின்றோம். -
திசைகள் என்பது எனக்கு ஒரு மந்திரச் சொல். எட்டுத் திக்கையும் குறிப்பது என்பது அதற்குச் சொல்லப்படும் வழக்கமான பொருள். ஆனால் என்னைப் பொருத்தவரை அது 360 பாகைகளை (டிகிரியை) குறிப்பது.
தமிழின் விளிம்புகளை இயன்றவரை விரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை எனக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும் சொல். அது.
தமிழ் வெகுஜன இதழ்களை வணிக வெறியும், இலக்கியச் சிற்றேடுகளை கோஷ்டிப் பூசல்களும், மொய்த்துக் கொண்டிருந்ததின் விளைவாக இளந்தலைமுறையினர் இடையே சோர்வும் கசப்பும் முளை கட்டத் தொடங்கியிருந்த நேரத்தில் முதியவர்களைத் தவிர்த்து விட்டு, முற்றிலும் இளைஞர்களைக் கொண்டு நம்பிக்கை விதைக்க முற்பட்ட முயற்சி அச்சுத் திசைகள்
நம்பிக்கையையும் உற்சாகமும் சந்தோஷமும்தான் மனிதர்களையும் பூக்க வைக்கிற விஷயம்… எண்ணற்ற பத்திரிகைகள் மண்டியிருக்கிற இந்த நேரத்தில் திசைகள் இவற்றுக்குத்தான் நாற்றுப்பாவ ஆசைப்படுகிறது…
இது முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், திசைகள் என்ற இளைஞர்கள் பத்திரிகைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது எழுதிய வரிகள். இத்தனை காலத்திற்குப் பின் திரும்பிப் பார்க்கும் போது, திசைகள் பாவிய நாற்றுக்கள் விளைந்து செழித்து அடுத்த தலைமுறைக்குக் கனிகளையும் கனிகளுக்குள் பொதிந்து வைத்த விதைகளையும் தந்திருப்பதைக் காணமுடிகிறது.

பிரதிலிபி என்றொரு இணையதளம் இந்திய மொழிகள் பலவற்றில் மின்நூலகளைத் தனது தளத்தில் வெளியிட்டு வருகிறது. இது எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களைத் தாங்களே மின்னூலாகப்... பதிப்பிக்க உதவும் தளம். என்னுடைய ஆங்கில நூலை நானே அமேசான் தளத்தில் பதிப்பித்த போது தமிழ்நூலகளையும் பதிப்பிக்க எண்ணினேன். ஆனால் அமேசான் தமிழுக்கு இடமளிப்பதில்லை
[எழுத்தாளர் ஜீவி தனது வலைப்பதிவான 'பூ வனத்தில்' எழுதிய கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது. இந்த மீள்பதிவின் மூலம் ஜீவியின் 'பூ மனம்' வலைப்பதிவினைப் 'பதிவுகள்' தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றது. 
[எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழ் இலக்கிய உலகில் 'வானம் வசப்படும்', 'மானுடம் வெல்லும்' ஆகிய நாவல்கள் மூலமும், சிறுகதைகள் முலமும் தனக்கென்றோர் இருப்பிடத்தை நிலைநிறுத்திக்கொண்டவர். ஆர்ப்பாட்டமில்லாமல் செயற்படுபவர். அவரது
புதிய பனுவல் :
முனைவர் தெ.வெற்றிச்செல்வனை ஆசிரியராக்கொன்டு வெளிவரும் இணையத்தளம் 'பன்னாட்டுத் தமிழ் ( A Study of International Tamilology) '. அத்தளத்தினை இம்முறை 'பதிவுகள்' வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். 'திணைசார் சமூக வாழ்வியல் கொண்ட தமிழர், திணைபெயர் வாழ்வியல் மாற்றம் பெற்று உலகெங்கிலும் பரவி வாழ்கின்றனர். வணிகம், போர் போன்ற பண்டைக்கால தமிழர் பரவல் காரணமாகவும், வேலைவாய்ப்பு, அகதிமைசார் அலைந்துழல்வு போன்ற சமகால தமிழர் பரவல் காரணமாகவும் உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் சிறப்பாக தமிழ் அடையாளத்தைப் பேணுவதில் பல்வேறு இடர்ப்பாடுகள் சூழ்ந்த போதிலும், ஓரளவு உலகளாவிய தமிழியல் முயற்சிகள் குறித்த அடையாளங்கள் ஆங்காங்கே தென்படாமல் இல்லை. கல்வி, தமிழாய்வு இவற்றில் இவர்கள் செலுத்திவரும் கவனம் இப்போது கூர்மைப்பட்டுள்ளது. பன்னாட்டுத் தமிழியல் குறித்த ஊடகம், மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், கல்வி, வரலாறு, அரசியல்அறிவியல், பொருளாதாரம் பல்இன மக்களிடையே வாழ்வியல் பொருத்தப்பாடு, ஆய்வியல் என பல்துறைத் தேவைகளை வெளிக்கொண்டு வர உள்ளது, இவ்விதழ். படைப்புகள், நூல்அறிமுகங்கள், கூட்டநிகழ்வுகள், பதிவுகள், பின்னூட்டங்கள் அனுப்பி உதவி, தொடர்ந்து ஆதரவு தர விழைகிறோம்' என்று உலகத்தமிழ் வாசகர்களைக் கேட்டுக்கொள்ளும் 'பன்னாட்டுத் தமிழ்'க் குழுவினருக்கு உங்கள் ஆதரவினை வழங்குங்கள். 'பன்னாட்டுத் தமிழ்' இணையத்தளத்தின் முகவரி:
உலகெங்கும் பிரசுரமாகும் ஈழத்தவரின்; தமிழ் நூல்களைத் தேடிப் பதிவுசெய்யும் பணியை பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருபவர் நூலகவியலாளர் என்.செல்வராஜா. ஒரு தேசிய நூலகத்தின் கடமையை தன் இனத்தின் வரலாற்றுத் தேவைக்காகத் தன் தோளில் சுமந்து, நிறுவனரீதியான பொருளாதார உதவிகள் எவையுமின்றிச் செய்துவரும் செயல்வீரர். பிரபல எழுத்தாளரும், மூத்த நூலகவியலாளரும் பன்னூலாசிரியருமாக எம்மிடையே வலம்வருபவர் செல்வராஜா. 30க்கும் அதிகமான நூல்களைத் தமிழுலகிற்கு வழங்கிய போதிலும் இவர் தன்னை எழுத்தாளர் என்று கூறிக்கொள்வதில் கூச்சப்படுபவர். நூலகவியலாளராகவே நம் மத்தியில் வாழத்துணிந்தவர். இன்று ஈழத்து நூலகவியலாளர் என்றதும் அறிவுஜீவிகளின் சிந்தையில் உதிக்கும் முதல் பெயர் செல்வராஜாவினுடையதாகவே இருக்கும். நடராஜா-சிவபாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வராக 20.10.1954இல் பிறந்த இவர், நீர்கொழும்பு விவேகானந்த வித்தியாலயம் (பின்னாளில் விஜயரத்தினம் மகாவித்தியாலயம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது), நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்.
“மௌனம் ஒரு விதையாயிற்று. அதிலிருந்து வேர் முளைத்தது. அது மண்ணைக் கவ்வி உறிஞ்சியது. அதில் அர்த்தம் நிரம்பியது. காவியம் முளைவிட்டது. மண்ணைப் பிளந்து வெளிவந்தது”. விஷ்ணுபுரம் நாவலும் விஷ்ணுபுரம் கோயிலைப் போன்றே பிரம்மாண்டமானது. திசைக்கொரு கோபுரம். மேகங்களைத் தாண்டி விண்ணில் எழும் அவற்றின் முகடுகள். பூலோகத்தை மட்டுமல்ல, புவர்லோகத்தையும், சுவர்லோகத்தையும் அதன் மேல் உலகங்களையும் உள்ளடக்கிய அதன் வெளி. பிரக்ஞையின் பல அடுக்குகள். இதெல்லாம் சேர்ந்தது விஷ்ணுபுரம். நம் கண்ணையும் கருத்தையும் கவர்வது போல பல்வேறு விதமான புடைப்புத் தூண்கள், சுதைகள், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்ப அற்புதங்கள் எல்லாம் செறிந்தது விஷ்ணுபுரம். இடையறாது ஒலித்து அதிர்வெழுப்பும் சுவர்ணகண்டம் போல, சோனாவின் நீரொழுக்குப் போல, ஒரு இடையறாத தொடர்ச்சி, அதில் பல்வேறு சலனங்கள்.
'பெயரற்ற யாத்ரிக'னின் '
[
'எழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்' என்று கூறும் எழுத்தாளர் சத்யானந்தனின் வலைப்பதிவான tamilwritersathyanandhan என்னும் இணையத்தளத்தினைப் பதிவுகள் வாசகர்களுக்கு இம்முறை அறிமுகப்படுத்துகின்றோம். தனது மேற்படி வலைப்பதிவில் தனது கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், தொடர் கட்டுரைகள் மற்றும் நாவல் போன்ற பல படைப்புகளை ஆவணப்படுத்தியிருக்கின்றார் சத்யானந்தன். அண்மையில் பதிவு செய்திருந்த 'அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்' என்னும் கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்திருக்கின்றோம். மேற்படி தளமானது எழுத்தாளர் சத்யானந்தனின் படைப்புலகை அறிந்து கொள்வதற்குரிய நல்லதொரு தளம். இது போல் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தமது படைப்புகளை ஆவணப்படுத்துவது அவசியமானதாகும். அவரது தளத்தில் அவரது ஆக்கங்களை வாசிப்பதற்கு
'ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்' என்னும் வலைப்பதிவினை இணைய இதழுக்கு அறிமுகம் செய்கின்றோம். மிகவும் பயனுள்ள வலைப்பதிவு. உடல் நலம், இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றியும் பல்வேறு இணையத்தளங்களில் வெளிவந்த ஆக்கங்களையும், தனது ஆக்கங்களையும் உள்ளடக்கித் தனது வலைப்பதிவில் மீள்பிரசுரம் செய்கின்றார். மிகவும் பயனுள்ள வலைப்பதிவு. மேற்படி வலைப்பதிவினை நடாத்திவரும் ரத்னவேல் நடராஜன் தன்னைப் பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றார்: 'எனது பெயர் ரத்னவேல். எங்களது பூர்விகம் சிவகாசி. எனது படிப்பு SSLC. திரு காமராஜர் காலத்தில் இலவச கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது. எனக்கு மூன்று பையன்கள். அனைவரும் எனது மனைவியின் விடா முயற்சியால் நன்கு படித்து கணிப்பொறியில் பொறியாளர்களாக பணிபுரிகிறார்கள். இரண்டு பையனகளுக்கு திருமணமாகி விட்டது. சென்னையில் இருக்கிறார்கள். கடைசி பையன் நியுஜெர்சியில் இருக்கிறான். தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர் சம்பந்தமாக சிவகாசியில் தேவை என்றால் என்னை அணுகலாம். நான் அனைத்து துறைகளைப் பற்றிய செய்திகளை அறிய எல்லா வழிகளிலும் படிக்கும் ஒரு தீவிர வாசகன். திரு சுஜாதா 'ரத்தம் ஒரே நிறம்' புத்தகம் எழுதுவதற்கு நான் அவருக்கு அனுப்பிய 'தமிழக நாடார் வரலாறு' புத்தகம் தான் மூல காரணம். அதில் எனக்கு பெருமை. எனக்கு பிடித்த தலைவர்கள்; காமராஜர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அப்துல் கலாம். எனது கொள்கை - முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில். தொடர்புக்கு.
அனைத்து சமூக சக்திகளையும் எழுதுமாறும் கருத்துக்களை பதிவிடுமாறும் அழைக்கிறோம்! “நமது மக்கள் எதிர்கொள்கின்ற நீண்டதும் பெரியளவிலுமான அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு நெருக்கடிகளையும் சவால்களையும் மேலாதிக்கத்தினையும் அக/புற முரண்பாடுகளையும் எவ்விதமான அணுகுமுறைக்கு ஊடாக குறைக்க முடியும் அல்லது தீர்க்கமுடியுமென நீங்கள் நம்புகிறீர்கள்?” என்ற இந்தக் கேள்விக்கு பலரிடம் பல்வேறு பதில்கள் இருக்கலாம்… சமூக மாணவர்களாகிய எங்களைப் பொறுத்தவரை நமது பண்பாட்டுத்தளத்தில் எழுத்து ,வாசிப்பு, கற்றல்,உரையாடலின் மூலம் இந்த நிலைமைகளை மாற்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்க முடியுமென நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்.அதற்கான களங்களைத் திறப்பதும் இந்த வழிமுறை மீது நம்பிக்கை வைத்து தொடர்சியாக செயற்படுவதும் இன்று அவசியமாக உள்ளது.!/
அன்புடையீர், இந்திய நவீன இலக்கியத்தை குறிப்பாக தமிழ்படைப்புகளை பிரெஞ்சு மட்டுமே அறிந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற வகையிலும், எதிர்காலத்தில் இயலுமாயின் சிறந்த சில படைப்புகளை பிரெஞ்சுமொழியில் கொண்டுவரவேண்டுமென்ற ஆதங்கத்துடன் ஒரு பிரெஞ்சு வலைத்தளத்தை: 



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









