பதிவுகள் முகப்பு

சிங்களத் திரையுலகின் ஆளுமை பிரசன்ன விதானகே! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
26 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காடும், காட்டை அண்மித்த பிரதேசமும் கொண்ட அந்தச்சிங்களக் கிராமத்தில் ஒரு முதிய விவசாயியின் சிறிய குடும்பம். மனைவி இல்லை. இரண்டு மகள், ஒரு மகன். வானம்பார்த்த பூமி. குடிதண்ணீருக்கும் குளத்தை தேடிச்செல்லவேண்டும். குடும்பத்தின் ஏழ்மையை போக்குவதற்காக மகன் பண்டார இலங்கை இராணுவத்தில் சேர்ந்து உள்நாட்டுப் போர்க்களம் சென்றுவிடுகிறான். விடுதலைப்புலிகளின் ஈழப்போராட்டத்தில் ஒரு கண்ணிவெடித்தாக்குதலில் அவன் உடல் சிதறிச்செத்துவிட்டான் என்ற செய்தியுடன், அவனது உடல் மூடிய சவப்பெட்டியில் சீலிடப்பட்டு வருகிறது. அவனது தந்தையான முதியவர் வின்னிஹாமி க்கு கண்பார்வையும் மங்கல். தட்டுத்தடுமாறி, ஊன்றுகோலுடன் நடமாடும் அவருக்கு செவிப்புலன் கூர்மையானது. பறவைகளின் குரலும், குளத்தில் கும்மாளமிட்டு குளிக்கும் சிறுவர்களின் சிரிப்பொலியும் கேட்டு பரவசமடைபவர். ஒரு வாகனத்தில் சவப்பெட்டியை எடுத்துவந்து அந்த குடிசையில் ஒப்படைத்துவிட்டு விடைபெறும் இராணுவத்தினர், உடல் மிகவும் மோசமாக சிதறியிருக்கிறது. அதனால் திறக்கவேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றனர். இலங்கையின் தேசியக்கொடி போர்த்தப்பட்ட அந்த சவப்பெட்டியை பார்த்து சகோதரன் பண்டாரவை நினைத்து கதறி அழுகின்றனர் சகோதரிகள். தேசத்தை காக்கச்சென்றவன், சிதறுண்டு வருகிறானே என்ற சோகம் அக்கிராமத்தை சூழ்ந்துவிடுகிறது. குடும்பத்தலைவர் வின்னிஹாமி கண்ணீரே சிந்தாமல் திக்பிரமை பிடித்திருக்கிறார். அந்த சவப்பெட்டியை தடுமாற்றத்துடன் தடவிப்பார்க்கிறார். தேசியக்கொடிதான் அவரது மங்கிய கண்களுக்குத் தெரிகிறது. கிராமத்தின் பௌத்த பிக்கு மற்றும் கிராமத்துப்பாடசாலை ஆசிரியர், கிராம சேவகர் உட்பட பலரும் வந்து முதியவருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: பேதங்கள் கடந்த மாற்றுச் சிந்தனையாளர்! கலாநிதி ஏ. சி. எல் . அமீர்அலி எழுதியிருக்கும் சிந்தனைச்சுவடுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
26 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை காலம் காலமாக ஒரு வர்த்தக சமூகமாக கருதி வந்தவர்களின் பார்வையை முற்றாக மாற்றியவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்களில் அறிஞர் அஸீஸ், கலாநிதி பதியுதீன் முகம்மது ஆகியோரும் முதன்மையானவர்கள். அறிவார்ந்த தளத்தில் இயங்கத்தக்க இச்சமூகத்திடம் சந்தர்ப்பங்களை வழங்கிப்பாருங்கள் என்று தமது சிந்தனையிலும் எழுத்திலும் செயற்பாடுகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பவர்களின் அடிச்சுவட்டில் வந்திருப்பவர்தான் கலாநிதி ஏ. சீ. எல். அமீர் அலி அவர்கள். மேற்கு அவுஸ்திரேலியாவில் மெடோக் பல்லைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றியவரான அமீர் அலியின் அரசியல் விமர்சனக் கட்டுரைகளும் ஆய்வேடுகளும் பிரசித்தம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதிவரும் ஆக்கங்கள் இலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் தொடர்ந்தும் வெளிவந்து, அரசியல் மற்றும் உலகப்பொருளாதாரம் குறித்து பேசிவரும் பலருக்கு உசாத்துணையாகவும் மிளிர்கின்றன. சிலர் அமீர் அலியை , ஒரு மேற்குலக சிந்தனாவாதி எனவும் வர்ணிப்பவர். ஒருகாலத்தில் இலங்கையில் இவரது ஆலோசனைகளைப் பெற்றவர்தான் முன்னாள் கல்வி அமைச்சர் ( அமரர் ) பதியூதின் முகம்மத்.

அவரது வாக்குமூலம் ஒன்றையும் இங்கே பதிவிடுவது பொருத்தமானது.

மேலும் படிக்க ...

சிறுகதை: என்னைப் பேசச் சொன்னால்.. - முல்லை அமுதன் -

விவரங்கள்
- முல்லை அமுதன் -
சிறுகதை
26 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சும்மா இருந்திருக்கலாம். இன்றெனப்ப்பார்த்து மனைவி புத்தகங்களைக் கலைத்து மீள அடுக்கத்தொடங்கினாள். எதிர்பார்க்கவில்லை. காலையிலேயே தேநீருடன் வருபவள் இன்று காணவில்லையேயென இறங்கிவந்தேன் .கடைசிப்படியில் ஒரியோ படுத்திருந்தது. ஒரியோ எங்களது செல்லப்பூனை.வந்து இரண்டுவருடமாகிறது. பிள்ளைகளுக்கு பரீட்சையில் சித்தியடைந்தால் வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தேன். இப்போது பிள்ளைகளுள் ஒன்றாகிவிட்டது. நாய்க்குட்டி ஒன்றிருந்தால் நன்றாக இருக்குமே என்கிறாள் கடைசிப்பெண்.முன்பென்றால் துணிந்து வாங்கிவிடுவேன்.இப்போது வேலைக்குப்போகாத நிலையில் வீட்டிற்குப்பாரமாகிவிட்டேனோ என்கிற நினைப்பு வர ஓய்ந்து போன ஒரு மனநிலையும் வந்துவிட்டது.கம்பீரமாக வேலை,வீடு,நண்பர்கள், புத்தகம்,பிள்ளைகள் என வலம்வந்தவனை முடக்கிப்போட்டுவிட்டது இந்த கொறோனா... வேலைக்கு போகாமல் வீட்டினுள் முடங்க எல்லாம் இழந்ததுபோல... படுக்கை,கணினி என இந்த ஒருவருடம் ஓடிவிட்டது.

'என்னப்பா...இண்டைக்குத் தேத்தண்ணி இல்லையோ?'

பதில் அவளிடமிருந்து கிடைக்கவில்லை.

-'நீங்க ரீமாஸ்டர் தானே..போடுங்கோவன்' என்று சொன்னது மாதிரி

இருந்தது.அவள் சொல்லவில்லை.எண்டைக்கெண்டாலும் சொல்லலாம்.படியில் படுத்திருந்த பூனையும் எழுந்து என்னுடன் வந்தது.அதற்கு சாப்பாட்டைப்போட்டுவிட்டு தேநீர் தயாரிக்கத்தொடங்கினேன்.முந்தி அம்மா குசினிக்குள் வரவிடமாட்டாள்...தானே சமைக்கவேண்டும்..தானே தரவேண்டும்..என்று நினைப்பாள்.அப்பாவும் கண்டிப்பென்றாலும் வேலை ஒண்டும் செய்யவிடமாட்டார்..

'போய் படிக்கிற வேலையைப்பார்' என்பார்.

மேலும் படிக்க ...

இணுவையூர்.மயூரனின் 'ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்' - ஓர் அறிமுகம்! - முல்லைஅமுதன் -

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
நூல் அறிமுகம்
26 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மண்ணும் அதன் வாசமும் ஒருவனால் சுவாசிக்கப்படுகையில் அவனை தாலாட்டுகிற இயற்கை கூடவே வந்து குந்தியிருந்து பலகதைகள் சொல்லி மகிழ்வூட்டும்.அதே இயற்கை அவனை கைப்பிடித்து நகர்த்தும்.காலம் அவனை அடையாளப்படுத்துமாகில் நெருக்கமுடன் அணைத்து மகிழ்விக்கும்.அந்த மகிழ்வே அவனை ஆலிங்கனம் செய்யத்தூண்டும்.அந்தத் தூண்டுதலே அவனை எல்லாமாகி நிற்கவைக்கும்.அந்த எல்லாமாகி நிற்பவனிடம் வானம் சாமரை வீசும்.காற்று காதலைத் தூதுவிடும்.நானிருக்கிறேன் என மண் தன்னை விசாலப்படுத்தி வரவேற்கும்.பூக்கள் பூக்கவும்,செடிகள் துளிர்க்கவும் புத்துயிர்ப்பாய் கிராமம் கைகுலுக்கிக்கொள்ளும்.

இப்படித்தான் ஒரு கிராமம் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மண்ணில் புரட்டிஎடுத்து தனக்கெனவே வளர்த்தெடுக்கும். பெரிதாகும் எந்த உயிரும் பூத்தாலும்,காய்த்தாலும்,கருகிச் சருகாகும் வரை மனத்தில் அதே சுவாசத்துடனே வாழ்கின்றான்.அவனே வாழ்வில் அலைக்கழிப்பிற்கு ஈடு கொடுத்து கிராமத்தை விட்டு நகர்ந்தாலும் அந்த மண் தன்னுடன் உறவாடியவனை காலம் முழுதும் தன்னுடன் இணைத்தே பயணிக்கவைக்கும்.இதனால்தான் புலம் பெயரும் ஒவ்வொருவருவரும் மண்ணின் நினைவுகளுடன் வாழ்வதும் தவிர்க்கமுடியாமல் இருந்துவிடுகிறது.முதுமை வரை தொடரும் அழிவடையா ஞாபகச் சின்னங்களாகிவிடும்.அதனால் தான் புலம்பெயர் சூழலுக்குள் இருந்துகொண்டு அவனால் எழுதப்படும் எழுத்துகள் அனைத்தும் மண்சார்ந்தே பயணிக்கின்றன.இணுவில் கிராமத்தில் பிறந்து தன் இள வயதுக் கனவுகள், குறும்புகள், விளையாட்டு, உணவு, விளையாட்டு, உறவுகள், நண்பர்கள், பாடசாலைகள். ஆசிரியர்கள் எல்லாவற்றையும் இழக்கும்படியாக இனமுரண்பாடுகள்,யுத்தம் இவற்றால் நம்மைப்போலவே நாட்டைவிட்டு வெளிநாடொன்றில் வாழ்கின்ற சூழலுக்குள் வாழ்ந்தாலும் தமிழையும்,தன் கனவுகளையும் கவிதைக்குள் இருத்தி சுகானுபவம் பெறும் படைப்பாளனாக, கலைஞனாக, ஊடகவியலாளனாக மண்ணின் பெருமைகளை,கலை இலக்கிய பண்பாட்டினை கட்டியெழுப்பும் பலருள் ஒருவனாக தன்னை நிலைநிறுத்தி,இன்று ஒரு நூலையும் எமக்குத்தந்து படைப்புலகத்தில் கவிஞனாக அடையாளப்படித்தி நிற்கிறார் இணுவையூர் மயூரன் அவர்கள்.

ஈழத்துப்பித்தன் எனும் பெயரிலும் தன்னை அடையாளப்படுத்தி நிற்பவர்.ஊடகராகவும், 'குருத்து'இதழின் ஆசிரியராகவும் பலராலும் அறியப்பட்டவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற இக் கவிதை நூலைப் பற்றி பேசும் தகுதி எனக்குண்டா எனத்தெரியவில்லை.எனினும் எனக்குள்ளே முகிழ்த்த வாசிப்பறிவு அத் தகௌதியை உடையதாக்கும் எனவும் நம்புகிறேன்.

மேலும் படிக்க ...

நிகழ்வு: செம்மொழி வேந்தர் முத்தமிழறிஞர் கலைஞரின் 98ஆவது பிறந்தநாள் பெருவிழா!

விவரங்கள்
- தகவல்: பேரா. பால சுகுமார் -
நிகழ்வுகள்
26 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

தொடர்நாவல்: ஒரு கல் கரைந்தபோது! (3) - ஶ்ரீராம் விக்னேஷ் (நெல்லை,, வீரவநல்லூர்) -

விவரங்கள்
- ஶ்ரீராம் விக்னேஷ் (நெல்லை,, வீரவநல்லூர்) -
நாவல்
24 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் மூன்று!

இடைவேளை விட்டுத் தொடங்கிய காட்சியிலே, கண்ணுக்குத் தெரிந்தது ஆஸ்பத்திரி வார்டு. பார்வையின் கோணத்தை அங்குமிங்கும் ஓடவிட்டேன். சந்தேகமே இல்லை. திருநெல்வேலி “மேட்டுத் திடல்” (ஹைகிரவுண்ட்) அரசு மருத்துவ மனையேதான்.இரண்டு நாட்கள் சுயநினைவின்றிக் கிடந்ததை எதிரே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த காலண்டர் உறுதிப்படுத்தியது. உடலெங்கும் காயங்கள். முக்கியமாக வலது காலைச் சுற்றி ஏகப்பட்ட பாண்டேஜ் துணி, பந்துபோல திரட்டிச் சுற்றப்பட்டிருந்தது. தலைமாட்டில் கண்ணீருடன் அம்மா. வெறுப்புக்காட்டும் முகத்தோடு அக்கா. அவளின் கைத்தடியாக அருகே அத்தான். அக்கா, அத்தான் இருவருக்கும் காயங்களும், கட்டுக்களும் இருந்தபோதிலும் என்னளவுக்கு இல்லை. கண்களை அகலத் திறந்து எல்லோரையும் பார்த்தபோது, அக்காளின் சுடுகணைகள் திருப்பள்ளியெழுச்சி ஆகின.

“பொம்பளைங்க எப்பவுமே சொய அறிவோட நடந்துக்கணும்….. வண்டிய ஓட்டுறத்துக்கு ஸ்டேரிங்கைப் புடிச்சா தெருவைப் பாப்பாளா….  எங்களையெல்லாம் கைலாசம் அனுப்பப் பாத்திட்டியேடி….”

வேதனையின் மத்தியிலும் பலமாகச் சிரித்துவிட்டேன் நான். எனக்குள்ளே பேச நினைத்தது தவறுதலாக வார்த்தையாக வந்துவிட்டது.

“சொய அறிவு….. அப்பிடீன்னா என்னது அக்கா….”

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு (2009 -1 &2) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
24 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


2009 - 1
அற்றைத் திங்களின் அவ்வெண்ணிலவு அப்போதும் காய்ந்துகொண்டிருந்தது. குன்றுகள்தான் ஒவ்வொன்றாய்ப் பறிபோய்க்கொண்டிருந்தன. மக்கள் திகிலடைந்திருந்தனர். தங்கள் கனவு ராஜ்யம் அழிந்துபோகும் நிர்க்கதி. அது மன மெய்களின் மொத்தமுமான ஸ்தம்பிதமாக இருந்தது.

உலகத் தமிழரங்கில் வெளிச்சமிடப்பட்ட நாடக மேடை தகர்ந்துகொண்டிருந்ததில் எங்கெங்கும்தான் அந்த நிர்க்கதி. ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் வீதியிலிறங்கியிருந்தனர். ‘Stop the Geanocide’ என்ற சுலோக கொடிகள் இளைஞர்கள் கையில் நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தன.

கிழக்கு மாகாணம் முழுவதும் ராணுவத்தின் கையில் வீழ்ந்திருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் கருணா அம்மான் கிழக்குப் புலிகளின் பெருவலிமையுடன் பிரிந்துவிட்டாரென்று அறிந்தபோது வந்துவிழுந்த ஏக்கத்தை, வன்னியிலிருந்து சென்ற இருநூறு திறல் படைத்த அதிரடிப் புலி வீரர்களால் அவர் தோற்கடிக்கப்பட்ட செய்தி வெளிவந்து போக்கியது. இப்போது முற்று முழுதாய்த் தெரிந்தது, கருணா அம்மான் அன்று தோற்கடிக்கப்படவில்லையென.

2004இன் அந்த நிலைமையில் அவர்கள் பெரிய நம்பிக்கையீனம் எதனையும் அடைந்துவிடவில்லை. கிழக்கு முற்றாக பறிபோயிருந்தபோதும் அவர்கள் பெரிய மனப் பாதிப்பைக் கொண்டுவிடவில்லை. ஆனால் அப்போது வன்னியின் பெரும் பகுதியும் பறிபோயிருக்கிறது. கிளிநொச்சி, மாத்தளன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய சில கோட்டைகளே எஞ்சியிருந்த அந்த நிலைமை  அவர்களை அடிவேர்காண அதைத்தது.

மேலும் படிக்க ...

ஆய்வு: மில்மன் பாரி (Milmanparry) – ஆல்பட் பெட்ஸ் லார்டின் வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு – ஒர் அறிமுகம்! - முனைவர். கோ. புஷ்பவள்ளி -

விவரங்கள்
- முனைவர். கோ. புஷ்பவள்ளி, புதுச்சேரி – 605 014 -
ஆய்வு
22 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மொழியை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படும் கலை பல்வேறு வடிவங்களையுடையது. அவை வாய்மொழியாகவும் பாட்டு வடிவமாகவும் கதை வடிவமாகவும் நாடகமாகவும் உரைநடை வடிவமாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். மனித இன நாகரிக வளர்ச்சியில் நெடுங்காலமாகப் படைக்கப்பட்டுக் கலைத் தன்மையோடு கூடியவையை இலக்கியமாக கருதும் எண்ணப்போக்கு உருவாகியதை உணர முடிகிறது. ‘இலக்கியம் எழுத்து வடிவத்தை வெளிப்படுத்தும் கலை’ என இலக்கிய இயல்பு நூலாசிரியர் விளக்கமளிக்கிறார். ஆனால் இன்றளவும் மக்களோடு கலந்த காவியமாகத் திகழும் நாட்டார் வழக்காற்றில் வாய்மொழி மரபான பாடல்களும் (Oral literature) இவையும் வாய்மொழி இலக்கியமாகவே கருதப்படுகின்றன. எனவே ஏட்டிலக்கிய வடிவத்திற்கு மூலகர்த்தாவாக இருப்பது வாய்மொழி இலக்கியமே என்பதை நம்மால் மறுக்க முடியாது. இவ்வாறு வாழ்க்கையின் விழுமியமாக விளங்குகின்ற இலக்கியங்களை 20- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஒப்பிட்டு ஆராயும் நிலை இலக்கிய உலகில் தோற்றம் பெற்றது. இத்தகைய ஓப்பியல் ஆராய்ச்சியின் விளைவாக ஏட்டிலக்கியத்திற்கு அடிப்படையாக வாய்மொழி இலக்கியமே அடிப்படைத் தரவாக அமைந்தது என்ற கருத்து ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் படிக்க ...

ஆய்வு: சிலம்பில் மன்னர்களின் பழக்கவழக்கங்கள்! - முனைவர் மூ.சிந்து -

விவரங்கள்
- முனைவர் மூ.சிந்து எம்.ஏ.,பி.எட்.,எம்ஃபில்.,பிஎச்.டி.(யுஜிசி- நெட்.,செட்), உதவிப்பேராசிரியர், டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), காளப்பட்டி, கோவை – 48 -
ஆய்வு
22 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

தனிமனிதனிடம் இயல்பாக அமையப்பெற்ற செயல் பழக்கமாகும். “பழக்கம்” என்பது பலநாளாகக் கற்கும் செயலாகும். இதைத் தொடர் வழக்கமாகக் கொள்ளும் நிலையாகும். பழக்கம் என்பது தனி மனிதனது நடவடிக்கை என்றும், வழக்கம் சமூகம் சார்ந்தாகவும் அமைகிறது. தனிமனிதனும், சமுதாயமும் ஒருங்கிணைந்து அவற்றால் வெளிப்படுவது பழக்கவழக்கமாகும்.இவை இயற்கையாகவும், செயற்கையாகவும் தோன்றக்கூடியது. மனிதனின் மனதில் தோன்றும் எழுச்சி, உணர்ச்சி,விருப்பு, வெறுப்போடு தொடர்புடையதாக அமையும்.

பழக்கம் – தனிமனிதனைச் சார்ந்த தொடக்க நிலை
வழக்கம் – சழுதாயம் சார்ந்த தொடர்நிலை

சிலப்பதிகாரம் மக்கள்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப் படுகின்றது. இந்நூலில் மூன்று நாட்டு மன்னர்களும், மக்களும் சிறப்பு பெறுகின்றனர். அரசனின் கோல் ஆட்சி யின் கீழ் வரும் மக்களாகச் சிலப்பதிகார மக்கள் இருந்தமையை உணரமுடிகிறது. அத்தகைய சிறப்புமிக்க மன்னர்களின் பழக்கவழக்கங்களை ஆராய்வதாக அமைகிறது. சிலம்பில் மன்னர்களின் பழக்கவழக்கங்களைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

முடிசூடல்
வரைவுரைத்தல் (நன்மொழிகூறல்)
வாழ்த்துரைத்தல்
திறைசெலுத்துதல்
முரசறைதல்
பறையறைதல்
சிறைவீடு

முடிசூடல்

அரசர்களின் வாழ்வில் முக்கிய நிகழ்வாக முடிசூடல் நிகழ்வு அமைந்திருந்தது. இந்நிகழ்வு வயது காரணமாகவோ, இறப்பிற்குப்பிறகு, புதியவருக்கோ தன் மகனுக்கோ முடிசூட்டி தன் பதவியை ஒப்படைப்பதாகும். சிலம்பில் அரசனது ஆட்சிக்குப் பிறகு அவரது இளவல்கள் பதவியை ஏற்று நடப்பது சுட்டப்படுகிறது.

மேலும் படிக்க ...

ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 12 கவிதைகள்!

விவரங்கள்
- ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) -
கவிதை
20 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

   

1. அடையாளமும் அங்கீகாரமும்

    இத்தனையத்தனை யெனச் சொல்லவியலா
    எத்தனையெத்தனையோ காக்கைகளில்
    தனித்தொரு காக்கையாகத் தன்னை யாரும் பார்க்கவில்லையே
    என்ற ஏக்கம்
    எந்தக் காக்கையையும் தாக்கியிருக்காது
    என்றே தோன்றுகிறது.

    சக பறவைகள் இரைதேடப்
    பறக்கவேண்டும்.
    தூண்டில்களுக்கும் துப்பாக்கிகளுக்கும்
    இரையாகாமல் தப்பிக்கவேண்டும்.
    நிழல் தேடி நிறைய தூரம் செல்லவேண்டும்...
    தன் கூடிருக்கும் மரம் தொலையாதிருக்கிறதா
    என்று தொடர்ந்து கண்காணித்துவரவேண்டும்...
    தானியமென்று சிறுகல்லை முழுங்கியதில்
    ஏற்பட்ட உபாதைகளை
    யாரிடம் பகிர்ந்துகொள்வது?
    இதில் யாரை யார் புகழ்ந்துபோற்றுவது.....

மேலும் படிக்க ...

கவிதை: எந்நாளும் எந்தையர் நாள்தான் எமக்கு எந்தையே! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
20 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

*அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!

எந்நாளும் எந்தையர் நாள்தான் எமக்கு எந்தையே!

இரவு கவிந்திருக்கும் பொழுதுகளில்
இல்முன் சாய்வு நாற்காலியில்
அண்ணாந்து படுத்திருப்பாய்.
அப்பொழுதுன் சாறத்தைத்தொட்டிலாக்கி
அதில் நானுன்னுடன்
அண்ணாந்து படுத்திருப்பேன்.

மேலும் படிக்க ...

புகலிடச் சிறுவர் இலக்கியம்: சுவிட்சர்லாந்தில் சிறுவர் இலக்கியம்!

விவரங்கள்
- வ.ந.கி -
சிறுவர் இலக்கியம்
20 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் மதிவதனி பத்மநாதன் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகின்றார். மதுரையில் பிறந்து, இலங்கையில் வளர்ந்து தற்போது சுவிட்சர்லாந்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். பேராதனைப் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரியான இவர் வாணமதி , மதிவதனி ஆகிய பெயர்களில் இலக்கிய  உலகில் அறியப்பட்டவர். கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் சிறுவர் இலக்கியமென இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்துபட்டது.

புகலிடத் தமிழர்கள் மத்தியில் சிறுவர் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டி வரும் எழுத்தாளர்களில், குறிப்பாகப் பெண் எழுத்தாளர்களில், நானறிந்தவரை,  பத்மா இளங்கோவன் (பிரான்ஸ்), ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா (கனடா), வாணமதி (சுவிஸ்) ஆகியோர் முக்கியமானவர்கள். (ஏனைய நாடுகளிலும் சிறுவர் இலக்கியத்துறையில் பங்களித்து வரும் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை அறிந்தவர்கள் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.) பல்வேறு இணைய இதழ்கள், அச்சிதழ்கள் ஆகியவற்றில் எழுதிவரும் இவரது பல படைப்புகள் முத்துக்கமலம் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றை நீங்கள் http://www.muthukamalam.com/writer/vaanamathy.html என்னும் இணைய முகவரியில் வாசிக்கலாம்.

மேலும் படிக்க ...

ஓராயம் அமையம் இலாபநோக்கற்று இயங்குமோர் அமைப்பு.! நீங்களும் இணைந்து திட்டங்களை முன்னெடுக்கலாம்!

விவரங்கள்
- வ.ந.கி -
சமூகம்
20 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
1971-1977 காலப்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியில், சமகால வகுப்புகளில் கல்வி கற்று வெளியேறி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் மாணவர்களில் சிலர் இணைந்து உருவாக்கிய, சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும், பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பே ஓராயம் அமைப்பு. இவ்வமைப்பு புலத்து மக்களோடு இணைந்து செயற்படும் வகையில் கல்வி, விவசாயம், நீர்வளப்பாதுகாப்பு, சுகவாழ்வு, சூழற்பாதுகாப்பு, இளையோர் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் ஆறு உபகுழுக்களை அமைத்து இயங்கத்தொடங்கியுள்ளது. இதற்காக இவர்கள் இணையத்தளமொன்றினையும் உருவாக்கியுள்ளார்கள்.
 
இவ்வமைப்பு தற்போது மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தைப் பின்தங்கிய பிரதேசமாக அடையாளம் கண்டு அப்பகுதி மாணவர்களுக்கு உதவும் செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதுபோல வேறு பல திட்டங்களையும் தற்போது பொறுப்பேற்று நடைமுறைப்படுத்தி வருகின்றது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மாணவர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு 46 மாதம் ரூபா 750 வழங்கும் திட்டம், முன் பள்ளி மேலதிக உதவித்தொண்டர் ஆசிரியர்கள் 10 பேருக்கும் மாதம் ரூபா 3,500 வழங்கும் திட்டம், நன்கு படிக்கும் ஐந்து உயர்வகுப்பு (A/L) மாணவர்களுக்கு Tablet வழங்கும் திட்டம் மற்றும் வறுமையான குடும்ப நிலையில் வாழும் 26 பாடசாலைகளில் கல்வி கற்கும் 719 மாணவர்களுக்கு Pen Drive வழங்கும் திட்டம் எனப் பல திட்டங்களை மேற்படி மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்திட்டம் உள்ளடக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க ...

என் நினைவில் நிலைத்து நிற்கும் கவிஞர் மஹாகவியின் கவிதை வரிகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
இலக்கியம்
19 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் மஹாகவியின் நினைவு தினம் ஜூன் 20. அதனையொட்டிய நினைவுக்குறிப்புகளிவை!

யாழ்ப்பாணம் பற்றி எத்தனையோ கவிஞர்கள் கவிதைகள் பல  இயற்றியிருக்கின்றார்கள். ஆனால் கவிஞர் மஹாகவியின் 'யாழ்ப்பாணம்' பற்றிய வரிகளைப்போல் இதுவரை வேறெவரும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. அவ்வரிகளைக் கீழே தருகின்றேன். இவ்வரிகள் அவரது புகழ் பெற்ற காப்பியமான 'கண்மணியாள் காதை'யில் இடம் பெற்றுள்ளன.

"யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!" எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு -
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆழக் கடலுள் அமிழ்ந்தன வே எங்கள்
அன்றைப் பெரும்புகழ்; ஆதலினால்,
வீழத் தொடங்கி முடிந்தன வாம் பல
விந்தை!" என்றோர் கதை வந்ததுண்டு -
வீழத் தொடங்கிய விந்தை முழுவதும்
மீட்டுக் கொடுத்த பெருமையிலே
'ஈழத் தமிழகம்' என்று நிலம் தனில்
இன்று நிமிர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆறு நடந்து திரிந்த வயல்கள்
அடைந்து கதிர்கள் விளைந்திட, வான்
ஏறி உயர்ந்த மலை ஏதும் இல்லையே!"
என்ற ஒரு கதை சொல்வதுண்டு -
"ஏறி உயர்ந்த மலை இல்லை ஆயினும்
என்ன? இருந்தன தோள்கள்!" என்றே
கூறி, உழைத்த பின் ஆறிக், கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்!"

மேலும் படிக்க ...

கண்ணீர் அஞ்சலி: கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார். - குரு அரவிந்தன் (தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்) -

விவரங்கள்
குரு அரவிந்தன் (தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்) -
நிகழ்வுகள்
19 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எமது இனிய நண்பர் கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் திடீரென எம்மைவிட்டுச் சென்ற 14ஆம் திகதி யூன் மாதம் 2021 அன்று பிரிந்து விட்டார். கோவிட்-19 காலச் சூழ்நிலையில் நேரடியான தொடர்புகள் அற்ற நிலையில் அவரது திடீர் மறைவு கனடிய தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றது. இந்தக் குறுகிய காலத்தில் இவரைப் போன்ற மூத்த தலைமுறைத் தமிழ் உணர்வாளர்கள் பலரை நாம் இழந்திருக்கின்றோம். இந்த மண்ணில் தமிழ் மொழியும், எமது பண்பாடும் நிலைத்து நிற்கப் பாடுபட்டவர்களில் நண்பர் கலாநிதி வசந்தகுமார் அவர்களுக்கும் பெரியதொரு பங்குண்டு. கடந்த சுமார் 30 ஆண்டுகளாக எங்களைப் போலவே அவரும் கனடிய மண்ணில் எம்மினத்தின், எமது மொழியின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தார்.

‘வானவில்’ என்ற நிகழ்ச்சிகள் மூலம்தான் இவர் எனக்கு முதலில் அறிமுகமானார். 90 களின் தொடக்கத்தில் இருந்து கனடாவில் எமது மொழி மற்றும் பாரம்பரியத்தைப் பேணக்கூடிய வகையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் வருடம் தோறும் நடைபெறுவதை அவதானிக்க முடிந்தது. ஒன்று உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலை பழைய மணவர்களின் ‘வானவில்’ கலை நிகழ்ச்சி, மற்றது நான் கல்வி கற்ற மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் ‘முத்தமிழ் விழா’ நிகழ்ச்சி. குறிப்பாக நாடக ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் பழைய மணவர்களின் நிகழ்ச்சிகளாக இவை இரண்டும் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பல தடவைகள் கனடா தமிழ் எழுத்தாளர் இணைய நிகழ்வுகளிலும், ஸ்ரீமதி நிராசந்துரு அவர்களின் நடனக்கல்லூரி பட்டமளிப்பு நிகழ்வுகளிலும் சந்தித்து அவருடன் உரையாடியிருக்கின்றேன். ஒருமுறை நூல் வெளியீட்டு நிகழ்வின் போதும், என்னை அழைத்துச் சபையோருக்கு அறிமுகம் செய்து, முதற்பிரதி வாங்கவைத்துக் கௌரவித்திருந்தார்.

மேலும் படிக்க ...

கவிதை: நானோர் தமிழன்! - தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

விவரங்கள்
- தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -
கவிதை
19 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


நானோர் தமிழன் நாடெலாம் அலைந்தும்
வானத் தமிழை மறந்திடா மனிதன்

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
பற்றிப் படர்ந்த பழந்தமிழ்; இலக்கியம்

முற்றும் துறந்த முனிவர் மறையெலாம்
சித்தர் இறையைச் சொன்னதிப் பூமி

காலக் கோட்டில் காவுறும் மலையில்
ஞாலம் தோன்றி நயந்தஇப் பாதை

ஆதி மொழியாய் அட்ட திக்கெலாம்
சேதி உரைத்த செந்தமிழ் வழியாய்

நீதியும் போதனை நெறியும் மிக்கோர்
சாதனை கண்டதோர் சரித்திரம் ஆனதே !

மேலும் படிக்க ...

கவிதை: வழித்தடங்கள்! - முனைவர் ம இராமச்சந்திரன் -

விவரங்கள்
- முனைவர் ம இராமச்சந்திரன் -
கவிதை
19 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



வலசைப் போகும் ஒற்றைப் பறவையின்
சுதந்திரப் பெருவெளியில் இலக்கற்றுப்
பெருமரத்தில் இளைப்பாறுகிறேன்

புதுப்பெருக்கில் கால் நனைக்கும் சிறுமியின்
துள்ளல் மிகுந்த உற்சாக மகிழ்ச்சியில்
நழுவிப் போனது தண்ணீர் மட்டுமல்ல
எனது வாழ்க்கையும்

நடந்து செல்லும் எருமையின்
தியான பவனியில் கரைந்துபோக
மறுக்கும் சிறுவனின் பயணம்

மேலும் படிக்க ...

நிகழ்வு: அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஜூன் 20, 2021 அன்று நடத்தவிருக்கும் இணையவழி காணொளி நினைவரங்கு! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
19 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், ஏறக்குறைய இருபது வருடகாலமாக இயங்குகிறது. தமிழ் எழுத்தாளர் விழாக்கள், இலக்கிய சந்திப்புகள் மற்றும் வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்குகள் நடத்திவந்திருக்கும் இச்சங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் அவ்வாறு ஓரிடத்தில் அதாவது மண்டபங்களிலோ அல்லது திறந்த அரங்குகளிலோ, அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த முடியாது போய்விட்டது. சமகாலத்தில் சமூக இடைவெளி பேண வேண்டியிருப்பதனால், நவீன தொழில் நுட்பம் எமக்கு வழங்கியிருக்கும் வரப்பிரசாதம் மூலம் கணினியில் இணையவழி காணொளி ஊடாக அரங்குகளை நடத்திவருகின்றோம். அதன் ஊடாக உலகின் எந்தப்பாகத்தைச் சேர்ந்தவர்களுடனும் முகம் பார்த்து நேரடியாக உரையாடக்கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கியம், கல்வி, இதழியல், சமூகம் மற்றும் வானொலி ஊடகத்துறை சார்ந்து பணியாற்றி, அவுஸ்திரேலியாவிலேயே மறைந்த ஆளுமைகளை நினைவுகூரும் வகையிலும், இந்த நாட்டில் வாழும் இளம் தமிழ் சந்ததிகளிடம், குறிப்பாக இங்கு தமிழையும் ஒரு பாடமாக உயர் வகுப்பிலும் படிக்கின்ற மாணவர்களுக்காகவும், பல்கலைக்கழக பிரவேச பரீட்சைகளில் தோற்றவிருக்கும் தமிழ் மாணவர்களுக்காகவும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை இணைய வழி அரங்கின் ஊடாக நடத்தி வருகின்றது. இதனை மெய் நிகர் தொடர்பாடல் எனவும் அழைக்கின்றார்கள். இந்த நாட்டிற்கு வந்து தமிழ் சார்ந்த அனைத்து சமூகப்பணிகளையும் மேற்கொண்டு மறைந்தவர்களின் வாழ்வையும் பணிகளையும் இத்தகைய அரங்குகள் மூலம் திரும்பிப்பார்க்கின்றோம். அந்த வகையில், இங்கு மறைந்த தமிழ் ஆளுமைகளை நினைவுகூரும் அரங்கினை இன்று 20 ஆம் திகதி ஞாயிறு – இரவு 7-00 மணிக்கு ( அவுஸ்திரேலியா – மெல்பன் நேரம் ) இணையவழி காணொளியூடாக நடத்தவிருக்கிறது.

மேலும் படிக்க ...

படகு அகதிகள் - தாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' நாவலை முன்வைத்து ஒரு பார்வை! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
16 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மலர்களின் வாசனை  மனதுக்கு உவப்பானது. அனைவரும் அறிந்தது. ஆனால் உயிரின் வாசனையை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே இருப்பர். விலைமதிக்க முடியாத உயிரின் மேன்மையை மனிதன் உணரும் கணங்கள் அநேகமாக மரணத்தை நிகர்த்த துன்பம் தருவனவாகவே அமைந்திருத்தல் கூடும்.அவ்வாறான வலிமிகுந்த தருணங்களை எழுத்தினால் மொழிபெயர்க்கும் வல்லமை கொண்ட படைப்பாளர்கள் அவற்றின் மூலம் வரலாற்றுக்கான தமது தடங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டே செல்கின்றனர்.

தாமரைச்செல்வியின் உயிர்வாசமும் அத்தகைய ஒரு படைப்பு என ஐயமின்றிக் கூறலாம். மனிதஜீவன்களின் அவல வலிகளையும், குருதியின் வாசனையையும் தன் எழுத்தெங்கும் தெளித்துக் கொண்டே செல்லும் இந்தப் படைப்பு கற்பனையல்ல.  தமிழர் வரலாற்றின் உணர்வு பூர்வமான ஆவணமாகவும் கருதப்படும் தகைமை கொண்டது. நேர்மையான எழுத்தாளர்கள் முக்காலத்தினை பிரதிபலிக்கும் பிரதிநிதிகள். அவர்களின் மூலமே  பல வரலாறுகள் இன்றும் உயிர் வாழ்கின்றன.

தாமரைச்செல்வி அவர்கள் ஈழத்து இலக்கிய உலகின் அனுபவமும் புகழும் மிகு படைப்பாளி ஆவார். தமது 'பச்சைவயல் கனவு' என்ற நாவலுக்காக இலங்கை அரசின் சாகித்தியவிருது உட்பட பல பெருமைகளை தனதாகக்  கொண்டவர். தமது இலக்கிய வாழ்வில்பொன் விழாவினை அண்மிக்கும் இவர் ஆறு நாவல்களையும், மூன்று குறுநாவல்களையும், இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இலங்கை, இந்திய  பாடநூல்களின் இவரது இருகதைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. பல்கலை இறுதியாண்டு மாணவர்கள் இவரது எழுத்துகளை ஆய்வு செய்திருக்கின்றனர் என்பது மேலதிக பெருமை.

இந்த நாவலில் அவர்  பேசவிழைந்தது யுத்தம் தந்த நெருக்கடிகளினால் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும்,  வாழ்வாதாரத்தை இழந்த தமது உறவுகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், ஆபத்துகள் நிறைந்த படகுப் பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவை வந்தடைந்த உண்மையான அகதிகள் பற்றியதாகும். போருக்குப் பின்னரான தமிழ்மக்களின் வாழ்வியலில் முக்கிய கூறான இந்த அகதிகளின் அவலங்கள்  நியாயமான பார்வையுடன் பார்க்கப்பட வேண்டும் என்ற ஆதங்கமும், எதிர்கால தலைமுறைக்கு புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் கடத்தப்பட வேண்டும் என்பதும் இவரது எழுத்தில் முதன்மைப் படுத்தப் படுகின்றன.

மேலும் படிக்க ...

தமிழ் மொழிச்செயற்பாட்டகம்: கே.கணேஷ்

விவரங்கள்
- தகவல்:எம்.பெளசர் -
நிகழ்வுகள்
16 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"சிவரமணியின் கவிதைகள்”: சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி! - சூரியகுமாரி பஞ்சநாதன் -

விவரங்கள்
- சூரியகுமாரி பஞ்சநாதன் -
இலக்கியம்
15 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் முருகபூபதியின் பார்வையில் : "சூரியகுமாரி பஞ்சநாதன் யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சிவத்தம்பி, நுஃமான் , சித்திரலேகாவின் மாணவி. அத்துடன் கவிஞர் சிவரமணியின் தோழி.  சூரியகுமாரி கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும் சிறிதுகாலம் பணியாற்றியவர். பின்னர் கொழும்பில் வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியாற்றினார். தற்போது துபாயில் பணியாற்றுகிறார். அங்கு சென்றபின்னர், எழுதுவதும் குறைந்துவிட்டது.  சிறந்த ஆற்றல் மிக்க விமர்சகர்."


சமகாலத்து ஈழத்து இலக்கியப் பரப்பில் முற்போக்கு சிந்தனையை அடித்தளமாக வைத்துத் தம்மை இனங்காட்டிய இளம் பெண் கவிஞர்களுள் தனித்து முத்திரை குத்துமளவிற்குத் தன்னை வித்தியாசமாகவும் தனித்துவத்துடனும் வெளிப் படுத்திய சிவரமணி தற்கொலை செய்ததன் மூலம் தனது ஒரு சில கவிதை ஆக்கங்களை மட்டுமே எமக்கு எச்சமாக விட்டுச் சென்றுள்ளார்.

தனித்துவமிக்க அவருடைய 22 கவிதைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பானது "சிவரமணி கவிதைகள்” என்ற தலைப்புடன் பெண்கள் ஆய்வு வட்டத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டது.

மேற்படி நூலில் சித்திரலேகா மெளனகுரு அவர்களின் "சிவரமணியின் வாழ்வும் கவிதையும் ஒரு அறிமுகம்” என்ற குறிப் பேட்டின் மூலம் சிவரமணியின் வாழ்க்கை நோக்கினையயும் இவருடைய கவிதை ஆளுமையையும் அறியக்கூடியதாகவுள்ளது. சிவரமணி ஏன் தற்கொலை புரிந்தார்? அச்சம்பவத்தின் மூலம் அவர் சமூகத்திற்கு எதனை உணர்த்த விழைந்தார்? என்பன போன்ற வினாக்களுக்கு எம்மால் இன்றும் தெட்டத் தெளிவான ஒரு முடிவுக்கு வரமுடியாமலே உள்ளது.

மேலும் படிக்க ...

ஆய்வு: வெறியாடலும்,நடுகல் வழிபாடும்! - முனைவர் க. செந்தில் குமார் -

விவரங்கள்
- முனைவர் க. செந்தில் குமார், உதவிப்பேராசிரியர், டாக்டர் என்.ஜி..பி கலை அறிவியல் கல்லூரி, காளப்பட்டி, கோவை – 641048 -
ஆய்வு
14 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் நெறிகளில் ஒன்றாக அமைந்தது முருக வழிபாடு குறிஞ்சி நில மக்களின் குல தெய்வமாக விளங்கியது. தலைவியானவள் காதலால் இன்புற்று தலைவன் பிரிந்த பிறகு துன்புற்று வாடும் போது வேலனை அழைத்து வெறியாடுட்டு நிகழ்த்தியமையும், பிறகு தலைவிக்கு நோய் தீர்ந்தமையும் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. வெறியாட்டில் முருகனுக்குப் பொருட்கள் படைத்தும், வெறியாட்டுக்களம், பண்ணமைந்த பாடல்கள் பாடியும், செவ்வரளிப் பூக்கள் சூட்டி வழிபாடு செய்தமையை எடுத்துரைக்கின்றது.    

வழிபாடு

வழிபாடு என்னும் சொல் வணங்குதல், வழியில் செல்லுதல், பின்பற்றுதல், நெறிப்படுத்துதல், பூசனை என்று அகராதிகள் பொருள் தருகின்றன. பூசனை என்பது தெய்வங்களை மகிழ்விப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயலாகும். வழிபாடு என்பது வணக்கம், பூசை, வழக்கம் எனும் பொருள்படும் இறைவனைத் தேவைக்காக நாடுதலும், நன்றியுணர்வால் அணுகுவதும் உண்டு. மனிதனின் நோய்களைத் தீர்க்கவும் வழிபாடானது நிகழ்த்தப்பட்டது. மனிதன் இன்புற்று வாழவும், நீண்ட ஆயுளுக்காகவும் இறைவனை வழிபட்டுனர். மிகப் பழங்காலத்திலிருந்தே வழிபாடு என்பது இருந்தது என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

பண்டைக் காலத்தில் மக்கள் மன்றங்களிலும், மரங்களிலும், கற்களிலும் தெய்வம் உறைந்ததாக நம்பி வழிபட்டனர் என்பதைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம் பெறுகின்றன. முருகன் வழிபாடு சங்க காலத்தில் இருந்தமையை மெய்ப்பிக்கும் பொருட்டு நக்கீரனார்

“அரும்பெறன் மரபிற் பெரும் பெயர் முருக“ 1

என்பதன் வாயிலாக இவர் காலத்திற்கு முன்பிருந்தே முருக வழிபாடு என்பது மரபாகப் போற்றப்படுகிறது. குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனின் வேல் போர்க் கருவியாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டு விளங்கியதைக் காணமுடிகிறது.

மேலும் படிக்க ...

ஆய்வு: மொழி பெயர்ப்பின் தேவையும் பயனும்! - முனைவர் வே. கீதா -

விவரங்கள்
- முனைவர் வே. கீதா, இணைப் பேராசிரியர், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருமலையாம்பாளையம், கோயமுத்தூர் - 105 -
ஆய்வு
14 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழில் மொழிபெயர்ப்பில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பாரதியார். அவர் இராமாயணத்தை மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பின் வழியாக நமக்கு அரசியல், தத்துவப் பார்வையை ஊட்டினார். இன்றைய மார்க்சியத் தத்துவமும் ஜனநாயகக் கோட்பாடும் மொழிபெயர்ப்பில் கிடைத்ததுதான் .

நோக்கம்:

ஒரு செயலை நாம் எதற்காக செய்கிறோம், எந்த லட்சியத்திற்காக செய்கிறோம் என்று கருதுவதே நோக்கம். அந்த செயலின் நோக்கம் நிறைவேறி விட்டால் அதாவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தினால் அதனைப் 'பயன் 'என்று கூறலாம்.

தமிழ்மொழியின் சிறப்பை சுப்பிரமணிய பாரதியார் "யாமறிந்தமொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்றும் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை எனக்கு செய்தல் வேண்டும் என்கிறார்.”1 ஒரு செயலை நாம் எதற்காக செய்கிறோம் என்று எந்த அளவு செய்கிறோம் என்று கருதுவதே நோக்கம். அந்த செயலின் நோக்கம் நிறைவேறி விட்டால் அதாவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தினால் அதனைப் பயன் என்று கூறலாம். தமிழ்மொழியின் சிறப்பை சுப்பிரமணிய பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் மொழிபெயர்ப்பு முன்னோடியாகத் திகழ்ந்தவர் இன்றைய மார்க்சிய தத்துவமும் ஜனநாயக கோட்பாடும் மொழிபெயர்ப்பில் கிடைத்தது .

தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்றும் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை எனக்கு செய்தல் வேண்டும் என்கிறார். ஒரு செயலை நாம் எதற்காக செய்கிறோம் என்று எந்த அளவு செய்கிறோம் என்று கருதுவதே நோக்கம் அந்த செயலின் நோக்கம் நிறைவேறி விட்டால் அதாவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தின அதனை பயன் என்று கூறலாம்.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
13 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று பழைய புத்தகங்களைத் தேடியபோது கவிதைப்புத்தகமொன்று அகப்பட்டது. நெடுங்கவிதையது. பெயர் " சாம்பல் வார்த்தைகள்:. கலை, இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்களின் நெடுங்கவிதை நூல்.  யாளி பதிவு வெளியீடு. வெளியிட்ட ஆண்டு ஜனவரி 1994. அட்டைப்பட வடிவமைப்பு ஏ.கோபாலன்.  நூல் வடிவமைப்பை இந்திரனே செய்திருக்கின்றார்.

வாழ்க்கைக்கடலின் அலைகளால் நம்பிக்கைக்கரைகள்  அரிக்கப்பட்ட நிலையில் நம்பிக்கை இழந்திருக்கின்ற கவிஞரின் வலியினை மொழி கொண்டு வெளிப்படுத்தியிருக்கின்றார் கவிஞர். ஆனால் அதனை அவர் நேரடியாக யதார்த்தரீதியில் தன்னை , தன் நம்பிக்கையின்மையை , தானடைந்த வலியினை உங்களுக்குக்கூறவில்லை. மாறாக கனவுகளையும், கற்பனைகளையும் பற்றிக்கொண்டு அவற்றினூடு அதனை வெளிப்படுத்துகின்றார். இரக்கத்தை யாசிக்கின்றார். ஆனால் அதே சமயம் அவ்விரக்கத்தை யாசிப்பது யாரிடமிருந்து என்பதில் கவிஞர் குழம்பியிருக்கின்றார்.

இக்கவிதையின் மொழி எத்தகையது? கனவுகளையும் கற்பனைகளையும் பற்றிக்கொண்டு ஆழ்மனபடிவுகளை யதார்த்தத்துக்குக் கொண்டு வருவதால் 'மிகையதார்த்த' மொழியாகவே எனக்குப் படுகின்றது. மிகையதார்த்த மொழி மானுடரின்  யதார்த்த இருப்பை, இருப்பின் முரண்களை, அநீதிகளை , இவற்றின் காரணமாகக் கவிஞர் அடைந்த வலியினை உங்களுக்குப்  புரிய வைக்கின்றதா என்பதைக் கவிதையை படிக்கும் நீங்கள்தாம் கூறவேண்டும்.

ஆனால் கவிஞரை வேதனை அடைய வைப்பவை எவை? கவிஞரின் வலிக்குக் காரணமானவை எவை? அவர் வாழும் யதார்த்த உலகின் அவர் மீதான தாக்கம், அத்தாக்கத்தின் விளைவாக அவரைடைந்த வேதனை, வலி , இவற்றையே மிகையதார்த்த மொழியில் நெடுங்கவிதையாக்கியிருக்கின்றார் கவிஞர் இந்திரன். உண்மையில் நவீன இந்தியா , மநு தர்மம்  இவற்றை இந்நெடுங்கவிதை விமர்சனத்துக்குள்ளாக்குகின்றது. 

மேலும் படிக்க ...

அறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்

விவரங்கள்
- விதை குழுமம் -
நிகழ்வுகள்
12 ஜூன் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. தமிழ்மொழிச் செயற்பாட்டகம்: இணையவழித் தொடர் கலந்துரையாடல் - அ.ஸ.அப்துஸ் ஸமது - எம்.பெளசர் -
  2. இரணைமடுக்குளத்திலிருந்து யாழ் மாவட்டத்துக்கு..! - வ.ந.கிரிதரன் -
  3. சிந்தனைக்களம் (இசை, நடனம்) உரைத்தொடர் - 7: 'கர்நாடக இசைமரபில் இராக ஆலாபனை'
  4. அஞ்சலி: மலேசியத் தமிழ் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மறைவு! - வ.ந.கிரிதரன் -
  5. லண்டன் (கனடா) துயர் - வ.ந.கிரிதரன் -
  6. வாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்! மகாபாரதம் - சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை! - முருகபூபதி -
  7. தமிழ்மொழிச் செயற்பாட்டகம்: செங்கை ஆழியான்! - எம்.பெளசர் -
  8. சினிமாவிலும் அரசியலிலும் சாதித்திருக்கும் முழுநேர எழுத்தாளரின் வாழ்க்கைப்பயணம்! - முருகபூபதி -
  9. கலைஞர் கருணாநிதி நினைவாக... - வ.ந.கிரிதரன் -
  10. கவிதை: பார்போற்றும் பாரதி! - முனைவர் கோ. புஷ்பவள்ளி -
  11. கவிதை: உனக்காய் என்ன செய்தோம்..? - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -
  12. கவிதை: விதியொன்று செய்! - முனைவர் பீ. பெரியசாமி -
  13. கவிதை: ஆனை பார்த்தவர்! - வ.ந.கிரிதரன் -
  14. இளையோர் பார்வையில் ஈழப்போராட்டம்
பக்கம் 95 / 104
  • முதல்
  • முந்தைய
  • 90
  • 91
  • 92
  • 93
  • 94
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • அடுத்த
  • கடைசி