
“அடிமைகளை கொண்டிருந்தால், இசையை நீங்கள் இன்னும் மெருகூட்டி இசைக்கலாம்…”
வாதத்துக்குரிய இவ்வரிகள் டால்ஸ்டாயினுடைது.
இப்பின்னணியில், இளையராஜா முதலானோர் சிற்சில சவால்களை முன்னிறுத்த செய்யலாம். ஆனால், யதார்த்த விதிகளை ஒட்டி பயணிக்கும் டால்ஸ்டாய், விடயங்களை சற்று ஆழமாகவே அணுகுவது போல் தெரிகின்றது. இங்குதான், கார்க்கியின் தேர்வும் முக்கியத்துவம் எய்துகின்றது.
அடித்தட்டு மக்களிடையே இருந்து வந்த விஞ்ஞானிகளை போற்றி புகழ்ந்திருக்கும் கார்க்கி, தன் இறுதி நூலான ‘கிளிம்மில்’ கூட இவ்விடயத்தை தொடாமல் இல்லை. ‘கிளிம்மில்’ காணப்படும், புத்திஜீவியின் வேர்கள் வித்தியாசப்பட்டிருக்கலாம். ஆனால், வேர்களை கார்க்கி, தொட்டு விசாரிக்கும் முறைமையும், காலத்துடன் அவர் பயணிப்பதும், இதன் பயனாக வெவ்வேறு வேர்களை அவர் தொடத்துணிவதும் தர்க்கபூர்வமாகின்றது.
இதற்கு உறுதுணையாக டால்ஸ்டாயின் சிந்தனைகளும் கார்க்கிக்கு பலம் சேர்த்திருக்கலாம்.
டால்ஸ்டாய் கூறுவார்:
“இசை மனித ஆத்மாவை அடக்கி, மந்தப்படுத்தி செயலின்மையை ஊக்குவித்து, போதையை ஏற்றுகின்றது… கத்தோலிக்க திருச்சபை, யாவரையும் விட அதிகமாய், இம்முக்கிய குணாம்சத்தை உணர்ந்ததாய் உளது…”