பதிவுகள் முகப்பு

மறக்க முடியாத சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள் (சுந்தர்)! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தின்  நினைவு தினம் மார்ச் 3 -

இலங்கைத்  தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை என்றால் முதலில் நினைவுக்கு வருவது சிரித்திரன் சஞ்சிகைதான். சிரித்து இரன் என்னும் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறப்பான பெயர் மட்டுமல்ல சஞ்சிகையின் நோக்கத்தையும் சிறப்பாகவே வெளிப்படுத்தும் பெயர். யாழ் மாவட்டக் கரவெட்டியைச் சேர்ந்த சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் (சுந்தர்) இந்தியாவுக்குக் கட்டடக்கலை கற்கச் சென்று சிறந்த கேலிச் சித்திரக்காரர்களிலொருவராகத் திரும்பி வந்தார். இந்தியாவில் 'பிளிட்ஸ்', 'கொஞ்ச்' சஞ்சிகைகளில் இவரது கேலிச்சித்திரங்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் பிரபல கேலிச்சித்திரக் கலைஞர்களாக விளங்கிய ஆர்.கே.லக்‌ஷ்மண், போல் தாக்கரே ஆகியோருடன் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

இலங்கை திரும்பிக் கட்டடத்திணைக்களத்தில் படவரைஞராகப் பணியாற்றியவரைத் தினகரனில் கேலிச்சித்திரங்கள் வரைய அழைத்தவர் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள்.  அப்பொழுது இவர் தினகரனில் சுந்தர் என்னும் பெயரில் வரைந்த 'சவாரித்தம்பர்' என்னும் தொடர் கேலிச்சித்திரங்களை மறக்கவே முடியாது. அவரது ஊரான கரவெட்டியில் வாழ்ந்த, அவருக்கு அறிமுகமான ஒருவரை ஆதர்சனமாகக்கொண்டே அவர் அப்பாத்திரத்தை  உருவாக்கியதாக ஊடகக்கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். அத்தொடரில் வரும் சின்னக்குட்டி, பாறி மாமி பாத்திரங்களும் கரவேட்டியில் வாழ்ந்தவர்கள் என்றும் அக்கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். பின்னர் அவர் 1963இல் சிரித்திரன் சஞ்சிகையை கொழும்பில் ஆரம்பித்ததும், அதன் பின் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்டதும் யாவரும் அறிந்ததே.

மேலும் படிக்க ...

கீழடி அகழாய்வு : பதிப்பும் பதிப்புச் சிக்கலும் - முனைவர் ம இராமச்சந்திரன் -

விவரங்கள்
- முனைவர் ம இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ் ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
07 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 முனைவர் ம இராமச்சந்திரன் -மதுரை மாவட்டம் வைகை ஆற்றின் கரையிலிருந்து வடக்கே 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கீழடி. மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவைச் சேர்ந்தவர்கள் 2014 தொடங்கி 2017 வரையில் மூன்று கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டனர். பலவகை  அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவை திராவிடப் பண்பாட்டை மேலும் செழுமைப்படுத்துவதாக இருந்தமையால் இவ்வாய்வு மேலும் தொடர பலத் தடைகள் உருவாக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை இதைக் கையில் எடுத்து 2017 இல் தனது நான்காவது கட்ட ஆய்வை மேற்கொண்டது. அதேபோல 2018 இல் ஐந்தாம் கட்ட ஆய்வும் செம்மையாகச் செய்து முடிக்கப்பட்டது.

கீழடி அகழாய்வில் 5000 திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை சங்க கால மக்களின் வாழ்வில் பண்பாட்டை வெளிக்கொணர்வதாக இருக்கின்றன. அவை செங்கற் கட்டுமானங்கள், சுடுமண் உறைக் கிணறுகள், கூரை ஓடுகள், அணிகலன்கள், இரும்புக் கருவி பாகங்கள், வட்டச் சில்லுகள், சுடுமண் காதணிகள், கண்ணாடி, செம்பு பொருட்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், மட்பாண்ட ஓடுகள், ரெளலட்டட் மட்பாண்டங்கள், அரட்டைன் ஓடுகள், தமிழி என்றழைக்கப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட மட்கல துண்டுகள், கீறல்கள், குறியீடுகள், வடிவங்கள் போன்றவையாகும்.

இவற்றின் மூலம் தமிழ்நாட்டின் தொடக்க வரலாற்றுக் காலக் கணிப்பில் பல மாற்றங்களும் புதிய அவதானிப்புகளும் ஏற்பட்டுள்ளன. கீழடியில் சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாய்வு முடிவுகள் கீழடி மக்கள் பண்பாட்டின் காலம் கி.மு 6 முதல் கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் நகரமயமாதல் ஏற்படவில்லை என்ற கருத்தை மறுக்கும் விதமாகக்  கீழடிச் சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும்  தமிழ் பிராமி எழுத்து வடிவத்தின் காலம் கி.மு.5 என்ற காலக்கணிப்பு கீழடி மூலம் கி.மு.6 என்று மாற்றமடைந்துள்ளது.

மேலும் படிக்க ...

திருப்பூர் சக்தி விருது 2021 விழா - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
நிகழ்வுகள்
07 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திருப்பூர் சக்தி விருது 2021 விழா

7/3/2021 , மதியம் 4-7 மணி , காமாட்சியம்மன் கல்யாண மண்டபம், ( பழைய பேருந்து நிலையம் பின்புறம் ) திருப்பூர்

திருப்பூர் சக்தி விருது 2021 ( 17ம் ஆண்டில்) : இவ்வாண்டு விருது பெறுவோர் : எழுத்தாளர்கள் , கல்வியாளர்கள், பிற துறையினர்

படைப்பிலக்கியம்:
புதிய மாதவி , மும்பாய்.,ராஜலட்சுமி பாண்டிச்சேரி,
கிருத்திகா பொள்ளாச்சி, தேவகி ராமலிங்கம், சென்னை.
பொற்கொடி சென்னை, வான்மதி சென்னை.,
பிரபாவதி சுகுமார் கோவை,அம்பிகாவர்ஷினி மதுரை , பா.தென்றல் காரைக்குடி, ஜெயஸ்ரீ கோவை
 ஜெயா வேணுகோபால் தர்மபுரி, மங்கை கோவை,
,உமாராணி விழுப்புரம், பவித்ரா நந்தகுமார்,
 ஆரணி இரா.பிரபா பாண்டி, கமலம் சுப்ரமணியம் , கொடுவாய், அறச்செல்வி கோவை , சரஸ்வதி சண்முகம் திருப்பூர்

மேலும் படிக்க ...

சுதந்திரன் பற்றிய ஞானம் சஞ்சிகைக் கட்டுரையும், அ.ந.கந்தசாமி பற்றிய தவிர்ப்பும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மார்ச் மாத ஞானம் சஞ்சிகையில் நூலகர் என்.செல்வராஜா 'ஈழத்து இதழியலில் சுதந்திரனின் வழித்தடம்! விரிவான ஆய்வுக்கான சில குறிப்புகள்' என்றொரு கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரையினைப் படித்துப் பார்த்தபோது எனக்கு உண்மையில் அதிர்ச்சியாகவிருந்தது.  1949 - 1952 காலகட்டத்தில்  சுதந்திரனின் ஆசிரியப்பீடத்திலிருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் பெயரை அங்கு நான் காணவில்லை.  ஏன் இந்தத்தவிர்ப்பு? நூலகர் செல்வராஜாதான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.. அ.ந.க.வின் சுதந்திரன் பத்திரிகைக்கான பங்களிப்புப் பற்றிய பல குறிப்புகளை முகநூலிலும் , பதிவுகள் இணைய இதழிலும் பதிவு செய்துள்ளேன். சுதந்திரனில் அவர் எழுதிய படைப்புகள் பற்றிய விபரங்களையும் பதிவு செய்துள்ளேன். கவீந்திரன், கலையரசன், பண்டிதர் திருமலைராயர், அ.ந.கந்தசாமி ஆகிய பெயர்களில் அ.ந.க.வின் படைப்புகள் சுதந்திரனில் அவர் ஆசிரியராகவிருந்த காலகட்டத்தில் வெளியாகியுள்ளன. அதன் பின்னரே அ.ந.க இலங்கைத் தகவற்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பத்தாண்டுகள் (1953 -1963) பணிபுரிந்தார்.அக்காலகட்டத்தில் அவர் தகவற் திணைக்களத்தின் தமிழ்ச் சஞ்சிகையான ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஆசிரிய பீடத்திலிருந்தார்.

அ.ந.க.வின் சுதந்திரனுக்கான பங்களிப்பு பற்றி மேலும் குறிப்பிடுவதற்கு முன்னர் சிலவற்றைச் சுட்டிக்காட்டுகின்றேன். எழுத்தாளர் என்.கே.ரகுநாதனின் நேர்காணலொன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதனை எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா தனது வலைப்பதிவில் பதிவு செய்துள்ளார். அதில் என்.கே.ரகுநாதன் கேள்வியொன்றுக்குப் பின்வருமாறு பதிலளித்திருப்பார்:

" கேள்வி: உங்களின் இலக்கியப் பயணம் எப்படி  ஆரம்பமானது?

என்.கே.ரகுநாதன்: சிறுவயதில் இருந்தே எனக்கு நன்றாக வாசிக்கும் பழக்கம் இருந்தது. எங்கள் ஊரவரான யாழ்ப்பாணக் கவிராயர் எனப்படும் கவிஞர் பசுபதிக்கும் எனக்கும் இடையில் நல்லதொரு நட்பும் இருந்தது. இவையும் நான் எழுதிய கதைகள் எல்லாவற்றையும் உடன் பிரசுரம் செய்த சுதந்திரன் பத்திரிகையின்  ஆசிரியர் அ.ந. கந்தசாமியும் என் இலக்கியப் பயணத்தில் முக்கிய பங்கு வகித்தனர் எனலாம்.  அதை விட 1951 ம் ஆண்டு எனது 20 வயதில் எழிலன் என்ற புனைபெயரில் நான் எழுதிய முந்திவிட்டாள் என்ற கதை இந்தியாவில் அந்த நேரம் வெளிவந்த பொன்னி என்ற சஞ்சிகையில் அட்டைப் படத்துடன் பிரசுரமாகி மிகுந்த ஊக்கம் தந்தது."

மேலும் படிக்க ...

ஆய்வு: குறுந்தொகையில் வண்ணங்கள் - முனைவர் கோ. சுகன்யா -

விவரங்கள்
- முனைவர் கோ. சுகன்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் – 641004 -
ஆய்வு
04 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை :

ஒலியமைப்பினைச் சார்ந்து வரக்கூடிய செய்யுளுறுப்புகளில் ஒன்று வண்ணம் என்பதாகும். பேராசிரியர் இதனை சந்த வேறுபாடு என்று குறிப்பிடுவார். தொல்காப்பியர் வரையறுத்துள்ள செய்யுளுறுப்புகளில் இருபத்தாறாவது உறுப்பாக வண்ணம் உரைக்கப்பட்டுள்ளது. இவ்வண்ணத்தின் வகைகளாக இருபது வகைகளைக் குறிப்பிடுகிறார். உலக வழக்கில் சிந்துப்பாடல்களிலும், நாடகப் பாடல்களிலும் இலக்கியத்தில் சந்த விருத்தங்களிலும் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப்பாடல்களிலும், நூற்றுக்கணக்கான வண்ணங்கள் பயின்று வருகின்றன. உலக வழக்கு செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்குகளிலும் காணப்பெரும் வண்ணங்கள் எழுத்து, சொல், தொடைநலன் என்பவற்றால் அமைவன. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வண்ணத்தியல்பு என்னும் நூலினை எழுதியுள்ளார். அவ்வகையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் பயின்று வரும் வண்ணங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஒலிக்கோலம் :
பழைய மரபு நெறியில் ஒலிக்கோலத்தை ‘வண்ணம்’ என்றனர். ஒரேஓர் ஒலி அல்லது அதற்கினமான ஒலிகள் ஓரடியிலோ, அல்லது பாடல் முழுவதிலுமோ பயின்று வருவதினையே வண்ணம் என்று கூறியுள்ளனர். வல்லொலி எழுத்துக்கள், மெல்லொலி எழுத்துக்கள் ஆகியவற்றைப் புலவர் ஏதேனும் ஒரு காரணத்தோடு திட்டமிட்டே அமைத்திருக்கிறார். இந்த ஓசைநயமே படிப்போர்க்கு இன்பத்தை விளைவிக்கும் வண்ணமாகும். தொல்காப்பியரின் வண்ணம் பற்றிய கருத்துக்கள் இத்தகையதே. சங்க இலக்கியப்பாடல்கள் வாய்மொழியாக வழங்கப் பெற்றவை. அதனால்தான் தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்களுக்கு சங்கப் பாடல்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் கூற முடியாமல் இடர்ப்படுகின்றனர்.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 370 : கம்பரும், பாரதியும் & வடமொழியும் பற்றி..... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
04 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியும், வடமொழியும்!

" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!"

இங்குள்ள 'நாமமது தமிழரெனக் கொண்டிங்கு' என்னும் தொடரில் வரும் 'நாமம்' வடசொல்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
03 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் - முருகபூபதி -அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் செயற்படுத்தப்படவுள்ள இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டு அமையவுள்ளது.

1. கடந்த 2019, 2020 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழி பெயர்ப்பு ஆகிய ஐந்துவகை தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

2. ஒவ்வொரு வகையிலும் சிறந்ததாகத் தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கு தலா 50 ஆயிரம் இலங்கை ரூபா பரிசாக வழங்கப்படும்.

3. நூலாசிரியரின் முழுப்பெயர், வயது, முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை அடங்கிய சுயவிபரக் குறிப்பொன்றினையும் நூலுடன் இணைத்தனுப்புதல்வேண்டும்.

மேலும் படிக்க ...

மானுட விடுதலைக்கவி கண்ணதாசன்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
-ஊர்க்குருவி -
கலை
01 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மானுட விடுதலைக்கவி கண்ணதாசன்! - ஊர்க்குருவி -

கவிஞர் கண்ணதாசனின் சிறந்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். எவ்விதம் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' உலக மக்களை விளித்துப்பாடப்பட்டதோ அவ்விதமே இப்பாடலையும் எடுக்கலாம். திரைப்படக்கதைக்குப் பொருந்தும் வகையில் வரிகள் இருந்தாலும், இப்பாடல் இவ்வுலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் அமைந்துள்ளது. இனி பாடலின் முக்கிய  வரிகளைப் பார்ப்போம்.

"அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்"

மேலும் படிக்க ...

'ரொறன்ரோ' தமிழ்ச் சங்க இணைய வெளிக்கலந்துரையாடல்: நூல்களைப் பேசுவோம் - நயினை மான்மியம்!

விவரங்கள்
தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
01 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூல் அறிமுகம்: யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis)‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ (Talking to My Daughter: A Brief History of Capitalism ) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
01 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவஜோதி யோகரட்னம் ‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ என்ற கிரேக்க இடதுசாரிப் பொருளியலாளார் யானிஸ்  வருஃபாகிஸ் அவர்களது நூல் குறித்து பேச உள்ளேன். இதனை எஸ்.வி. ராஜதுரை தமிழில் மிகச் செழுமையாக மொழிபெயர்த்து க்ரியா வெளியீடாக 2020 இல் வெளிந்துள்ளமை மிகப் பாராட்டுக்குரியதாகும். 203 பக்கங்களை அடக்கியுள்ள இந்நூல் மிக நேர்த்தியாக,  அடிக்குறிப்புகளோடு அச்சிட்டிருப்பது வாசகனை வாசிப்பில் ஆவல்கொள்ளச் செய்கிறது.  பொருளாதாரம் பற்றிய புத்தகம் என்ற தலைப்பைப் பார்த்தபோது சிரத்தை எடுத்துப் படிக்க முடியாத வகையில் மிகவும் கடினமாக இருக்குமோ அல்லது சலிப்பைத் தரக்கூடியவிதமாக இருக்குமோ என்று எண்ணினேன். பொருளாதாரத்துறை சார்ந்த வல்லுநர்கள்தான் அதனை வாசித்து விளங்குவார்கள் என்றும் சிந்தனையைக் குழப்பிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்புத்தகத்தை வாசித்தபோது சாதாரண நடைமுறை விஷயங்களிலிருந்து மிக உன்னதமான விஷயங்கள்வரை எல்லாவற்றையும் பொருளாதார முடிவுகள்தான் தீர்மானிக்கின்றன என்றும், வாழ்க்கைச் சம்பவங்களோடும்,  கலைச் சொற்களோடும் யானிஸ் அவர்கள் மகள் ஸீனியாவுக்கு அளிக்கும் விளக்கம் அற்புதமானது. மகளுக்கு பொருளாதாரம் பற்றி விளக்குவதுபோல் சுவையாக விவரிப்பது விநோதமான முயற்சியாகவும் எனக்குத் தென்பட்டது.  

           கோவிட் -19 தொற்று உலக நாடுகள் எல்லாவற்றிலும் பேசிச்கொண்டிருக்கும் இந்த வேளையில்,  நாம் இதனைப் பேசுவது பொருத்தமா என்று எண்ணும்போது உலக மக்கள் முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள் என்ற சில அறிஞர்களின் கருத்தும் இந்நூலில் எனக்குக் கிடைத்தது. இதுவரை அனுபவித்து வந்த வசதிகளில் பெரும்பாலானவை வரலாறாக மாறப்போவதையும் காணப்போகிறோம் என்ற ஒரு கருத்தும் உண்டு. கொரோனா நோய்த் தொற்று எப்படி மனித வாழ்க்கையின் ஒரு பகுதியோ அதே போலத்தான் புத்தகக் வெளியீட்டுச் செயற்பாடுகள் இன்னொரு பகுதி என்று கூறியவர் க்ரியா ராம் அவர்கள். அவர் கோரோனா தாக்கத்தால் மறைந்தாலும்,  அவரையும் இவ்வேளை என் மனதில் நினைந்து அஞ்சலித்து இதனை விதைக்கிறேன். உண்மையில் இலக்கியப் படைப்புக்கள்,  கவிதைகள்,  அறிவியல் புனைகதைத் திரைப்படங்கள் போன்றன இல்லாவிட்டால்; நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வது கடினம்.

மேலும் படிக்க ...

சிறுவர் கதை: அரசாளும் தகுதி யாருக்கு? - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுவர் இலக்கியம்
28 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுபதுகளில் , எனது மாணவப்பருவத்தில், பதின்ம வயதினில் எழுதிய குழந்தைகளுக்கான சிறுகதை. இச்சிறுகதை சிரித்திரன் சஞ்சிகை வெளியிட்ட 'கண்மணி' சிறுவர் சஞ்சிகையில் வெளியானது. 'கண்மணி' சஞ்சிகை ஓரிரு இதழ்களுடன் நின்று போனது துரதிருஷ்டமானது. - வ.ந.கி -



மேலும் படிக்க ...

கல்வியியலாளர் பேராசிரியர் ப. சந்திரசேகரம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்று! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் பற்றி அண்மையில்தான் சரியாக அறிந்துகொண்டேன். பேராசிரியர்கள் கைலாசபதி, கா,சிவத்தம்பி, மெளனகுரு, பாலசுந்தரம், நா.சுப்பிரமணியன், சபா.ஜெயராசா, எம்.ஏ. நுஃமான் போன்றோரை அறிந்த அளவுக்கு இவரை நாம் பெரிதாக அறிந்திருக்கவில்லை.  பல்கலைக்கழக மட்டத்தில் அறிந்திருந்த அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் இவரை அதிகமாக அறிந்திருக்கவில்லையென்றே கருதுகின்றேன். இதற்கு  முக்கிய காரணங்கள் இவருடன் பழகிய சக பேராசிரியர்கள் போதுமான அளவில் ஊடகங்களில் இவரைப்பற்றி அதிகம் எழுதாததும், இவரது படைப்புகளைத் தாங்கிய நூல்கள் அதிக அள்வில் வெளிவராததும் என்று  கருத வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மண்டூரைச் சேர்ந்த பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் கல்வியியற் துறையில் முக்கியமான பங்களிப்பு செய்தவர். இவருடன் கூட சபா ஜெயராசா அவர்களும் நினைவுக்கு வருகின்றார். இவரது படைப்புகளைப் பார்க்கும்போது இவர் மேலைத்தேய, கீழைத்தேயக் கல்வித்தத்துவங்களை உள்வாங்கித் அவற்றிலிருந்து தான் உருவாக்கிய எண்ணங்களைத் தன் மாணவர்களுக்குப் போதித்த,  எழுதிய ஒருவராக இனங்காண்பேன்.  இவரது சிந்தனைப்போக்கைப் பேராசிரியர் மெளனகுரு அவர்கள் 'சந்திரசேகரனிஸம் என்பார்.

இவரது படைப்புகளைப் பார்க்கும்போது இவர் மேலைத்தேய, கீழைத்தேயக் கல்வித்தத்துவங்களை உள்வாங்கி, அவற்றிலிருந்து தான் உருவாக்கிய எண்ணங்களைத் தன் மாணவர்களுக்குப் போதித்த, எழுதிய ஒருவராக இனங்காண்பேன். இவரது சிந்தனைப்போக்கைப் பேராசிரியர் மெளனகுரு அவர்கள் 'சந்திரசேகரனிஸம் என்பார். இவரைப்பற்றிய பேராசிரியர் சி.மெளனகுருவின் கட்டுரையைப் படிக்கையில் இவர் மார்க்சியக்கோட்பாடான பொதுவுடமைத்தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரென்பதை அறிய முடிகின்றது. அதேசமயம் இவரது கட்டுரைகளைப் படிக்கையில் இவர் முற்று முழுதாகப் பொருள்முதல்வாதச் சிந்தனையில் மூழ்கிய மார்க்சியவாதியாகவும் தெரியவில்லை.  ஆன்மாவே அனைத்துக்கும் அடிப்படை என்னும் கருத்துமுதல்வாதச் சிந்தனை மிக்க ஒருவராகவே இவரை அறிய முடிகின்றது. இவ்விடயத்தில் இவரை நான் 'காண்பது சக்தியாம். இக்காட்சி நித்தியமாம்' என்று பொருளையும் ,சக்தியையும் ஒன்றாகக் காணும்  மகாகவி பாரதியாருடன் வைத்து இனங்காண்பேன். உண்மையில் நவீன அறிவியலும் அதைத்தானே (பொருளும் சக்தியும் ஒன்று) எடுத்துக்காட்டுகின்றது. சக்தியையும் பொருளையும் ஒன்றாகக் காணும் ஆதிசங்கரரின் கோட்பாடுகளையொட்டிய அத்துவைதவாதியாகவும் இனங்காண்பேன். கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய இரு தத்துவப்போக்குகளையும் உள்வாங்கிய , இரண்டுக்குமிடையில் ஒருவித சமரசத்தைக்கண்ட கல்வியியற் சிந்தனையாளராக இவரை நான் காண்பேன்.

மேலும் படிக்க ...

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு & கவிதைப்பட்டறை 2021 - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
அரசியல்
27 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சுப்ரபாரதிமணீயனின்  இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு கோவையில் வெள்ளி அன்று கோவை பீளமேடு கிளஸ்டர்  மீடியா கல்லூரியில் நடைபெற்றது. மாலு மற்றும் 1098 என்ற திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் Notch,  1098 என்ற பெயர்களில்  மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன Notch நாவலை கோவையைச் சார்ந்த பேரா .பாலகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார்.

1098 நாவலை மதுரையைச் சார்ந்த பேராசிரியர் வின்செண்ட் மொழிபெயர்த்துள்ளார் இவற்றை டெல்லியைச் சார்ந்த Authours press பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

விசாரணை திரைப்படத்தின் மூல கதையாசிரியர் சந்திரகுமார் , பாரதியார் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் செல்வராஜ்,, ஆவணப்பட இயக்குனர் மயன்,  மொழிபெயர்ப்பாளர் கோவிந்த சாமி உட்பட பலர் நூல்களின் வெளியீட்டில் கலந்து
கொண்டார்கள் .  பேரா பாலகிருஷ்ணன் மறைந்த கவிஞர் வேனில் கிருஷ்ணமூர்த்தி மறைவை ஒட்டி அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாலு - Notch நாவல்  மொழிபெயர்ப்பு அனுபவத்தை விவரித்தார் . 1098 நாவலின் மையமான பெண்மைய சிந்தனை மையம் பற்றியும் மொழிபெயர்ப்பு சிறப்பு பற்றியும் விவரித்தார் . சுப்ரபாரதிமணியன் இந்த இரு நாவல்களின் படைப்பு அனுபவங்களை விவரித்தார்.

பீளமேடு கிளஸ்டர்  மீடியா கல்லூரி நிர்வாகிகள் அரவிந்தன் , திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்  . ஜாப்பர் நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )! ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
27 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அமரர் தா.பாண்டியன்சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியே இறந்திருக்கவேண்டியவர் ! இதனை  வாசிக்கும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா..? அந்தத் திகதியை எவரும், ஏன் முழு உலகமுமே மறந்திருக்காது. அந்தநாள் எத்தகையது என்பதை தா. பாண்டியனின் வாக்குமூலத்திலிருந்தே இங்கே தருகின்றேன். அந்த வாக்குமூலத்தை அவர் தமது 69 வயதில்தான் பதிவுசெய்துள்ளார்.

“ பிறந்த நாளைப் பலர் மறக்காமல் கொண்டாடிவருகிறார்கள். நான் என் பிறந்த நாளை, நான் கடந்துவிட்ட 69 ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் கொண்டாட நேரிட்டது. பிறந்தநாளையே நினைக்காதிருந்த எனக்கு அதை 1992 இல்  கொண்டாடவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் என் மனைவி , குழந்தைகளிடமிருந்து வந்தது. 1991 மே, 21 ம் நாளன்று சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூரில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக வந்த ரஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். அன்று அந்த இடத்தில் அவர் அருகில் இருந்தவன் நான். மூன்றடி தூரத்திற்குள்  நின்று இருந்த நானும், குண்டுகள் பட்டுக் காயமடைந்தேன். வெடித்த வேகத்தில் தூக்கி எறியப்பட்டேன். இறந்துபோனதாகவே அறிவிக்கப்பட்டேன். சில பத்திரிகைகளில் இறந்தோர் பட்டியலில் என் பெயரும் இருந்தது. அன்று இரவு முழுவதும் என் குடும்பத்தார்க்கும் நான் கொல்லப்பட்ட ஒருவன்தான். ஏனெனில் அதுதான் அவர்களுக்கு தரப்பட்ட செய்தி.
இருந்தும் உயிர்தப்பி வாழ்கிறேன்… எப்படித் தப்பினேன்..? என்பதை இன்றும் என்னால் தெளிவாகக் கூற முடியவில்லை. ஏனெனில், எனக்கு வலதுபுறம் இருந்தவரும் கொல்லப்பட்டார்… இடதுபுறம் நின்றவரும் வீழ்ந்தார். எனக்குப்பின்னிருந்த  ஏழெட்டுப்பேர் ரத்த வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டுக்கிடந்ததையும் கண்டேன். என்னைச்சுற்றிலும் குண்டு விபத்துக்குப்பலியாகி மடிந்தவர்கள் பதினெட்டுப்பேர். ராஜீவ்காந்தியுடன் பத்தொன்பது பேர். ஒரு நொடியில், ஒரே இடத்தில் களப்பலியாயினர். இவர்கள் மத்தியில் நின்ற நான், அதுவும் ராஜீவ்காந்தியின் அருகில் நின்று மொழிபெயர்த்துக்கொண்டிருந்த நான் குண்டின் குறிக்கு எப்படித் தப்பினேன் ?.... இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், பதிந்த குண்டுகள், இரும்புத் துகள்கள், ஆணிகள் என் உடம்பில் இன்றும் இருந்து அந்த நாளை நினவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. வலதுகை விரல்கள் சிகிச்சைக்குப்பிறகும் சரியாகவில்லை. அதனால் உணவருந்தும்போதும், எழுதும்போதும், தலைவாரும்போதும், வலது கையை பார்க்குந்தோறும், அந்தச் சோக நிகழ்ச்சியை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. எனவே, அதை நான் மறுபிறவி எடுத்த நாளாக என் குடும்பத்தினர் கருதியதில் வியப்பில்லை. எனவேதான், 1992 மே 18 ம் நாள் மட்டும் 60 வது பிறந்தநாளை யாருக்கும் தெரிவிக்காமல் எங்கள் ஊரிலுள்ள தோட்டத்தில் இருக்கப்போனோம். பிறந்த நாள் மே 18. – மறுபிறவிகொண்ட நாள் மே 21. இப்போது மே 21- தான் நினைவில் நிற்கிறது. “

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
27 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு  - முருகபூபதி -

கலையும் இலக்கியமும் இனத்தின் கண்கள் – அறிந்ததை பகிர்தல் - அறியாததை அறிந்துகொள்ள ஆவனசெய்தல் முதலான சிந்தனைகளின் அடிப்படையில் 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம், அடுத்தடுத்து ஏனைய மாநிலங்களிலும் முன்னெடுக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு மெல்பனில் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திய இவ்வியக்கம், பின்னர் சிட்னி, கன்பரா முதலான மாநிலத்தலைநகரங்களிலும் எழுத்தாளர் ஒன்றுகூடல் விழாக்களை நடத்தியது. அத்துடன், காலத்துக்குக்காலம் கலை – இலக்கிய சந்திப்புகளையும் மேற்கொண்டுவந்தது.

மேலும் படிக்க ...

சிறுகதை : அவரும் நானும் ஒரு படகுப் பயணிகள்! - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
27 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கொஞ்ச நாளாய் தான் அந்த இயற்கை எழில் சூழ்ந்த ,அதாவது பச்சை மரங்கள் செடிகள் கொண்ட நடைபயிலுகிற பூங்கா என்று சொல்ல முடியாத, காடு என்றும் சொல்ல முடியாத  பச்சை வளையப்பகுதியிலே நடக்கிறான். எல்லாம் கொரானாவின் கதவடைப்பால் வந்த உபயம். இதற்கு முந்தியும் பறவைகள் கீச்சிடும் அந்த பகுதி இருந்தது தான்.இறங்கி இருக்கவில்லை.வீட்டிலேயே கனநாள் கிடைக்கையில் ஏற்பட்ட உடல் மூட்டுகளில் வலியோடு ஏற்பட்ட கீரீச் கிரீச் என்ற சத்தங்களிற்குப் பிறகு,நடப்போம் என இறங்கி இருக்கிறான்.இந்த நாட்டில் எல்லாப் பகுதியிலும் பாம்பு போல போற இந்த பச்சை வழிப்பாதைகள் கிடக்கின்றன. எவ்வளவு பேர்களுக்குத் தெரியுமோ?, நாம் குளிக்கிற , பாத்திரம் கழுவுற தண்ணீர் , சலவை செய்கிற நீர், மழை, பனி நீர் எல்லாம் வீதிகளில் வலையமைப்பில்  ஓடுற குழாய்க்கால்களில் ஓடி ,அடைப்புகள் ஏற்பட்டால்  கிடக்கிற மனிதர் இறங்கி வேலை செய்கிற துளைகள் போன்ற கட்டமைப்புகளுடன் சேர்கின்றன.பிறகு இவை ஓடி வந்து பெரிய ஏரிகளை அடைகின்றன. இந்தக் கட்டமைப்பில் தொழிற்சாலைப் பகுதியிலிருந்து வெளியேறுகிற நீரை வடிகட்டி இரசாயன கலப்பில்லாது விட வேண்டும் என்ற விதிகளை சிலர் மீறி விடுகிறார்கள். பிறகென்ன நாம் குடிக்கிற நீரில் நஞ்சு கலந்து விடுகிறது. ஏரி நீரைத் தான் நாம் எல்லோருமே குடிக்கிறோம். சில பகுதிகள் பாதிக்கப் பட்டுக் கிடக்கின்றன. அவை பெரும்பாலும் முதல்குடி மக்களின் பகுதிகளாக கிடப்பது தான் பரிதாபம். தொழிற்சாலைகளுக்கும் வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்க வேண்டும். அவற்றை அரசாங்கள் செய்யாது அவர்களே செய்ய வேண்டும் என தட்டிக் கழித்து விட்டதாலேயே தவறுகளும் கணிசமாகி விட்டிருக்கின்றன. மனிதக்கழிவு நீர்களுக்கு வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்கின்றன. அதில் வடிகட்டி உர உப்புகள் கூடத் தயாரிக்கப்படுகின்றன. வடிகட்டிய நீரும் இதே வாய்க்காலிலே விடப்படுகின்றன. இலங்கை. இந்தியா போன்ற நாடுகளில் குடிமனைகளில் பரவி சேதம் ஏற்படுத்துபவை இங்கே ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன . இந்த வாய்க்கால்கள் சில நதிகள் என்றும் கூட அழைக்கப்படுகின்றன. நீளம் கூடியதால் அழைக்கிறார்களோ? மழைக்காலத்தில் பெருமளவு நீர் பெருக்கெடுத்து ஓடுறதும் ஏற்படுகின்றது.

மேலும் படிக்க ...

தர்க்கம் செய்வோம் வாருங்கள்: தனித்தமிழ் பற்றி முகநூலில் ஒரு தர்க்கம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தர்க்கம் செய்வோம் வாருங்கள்!- அண்மையில் முகநூலில் நானிட்ட தனித்தமிழ் பற்றியதொரு பதிவும், அதற்கான எதிர்வினைகளும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. தர்க்கம் ஆக்கபூர்வமாக இருந்ததால் இந்த முடிவு. -


எனது முகநூற் பதிவு: தனித்தமிழ் பற்றி..

தனித்தமிழ் என்பதில் எனக்குப் பூரண உடன்பாடில்லை. பல் திசைகளிலிருந்தும் வரும் மொழிகளிலிருந்து புதிய சொற்களை உள்வாங்குதலென்பது மொழியொன்றின் தவிர்க்க முடியாத அம்சங்களிலொன்று. அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும். இவ்விதம் ஏனைய மொழிச் சொற்களை உள்வாங்குவதால் மொழியானது வளமடைகின்றது என்பதை நம்புவன் நான். எவ்விதம் பிறநாட்டுத் தொழில்நுட்பங்களை, அறிவியலை எல்லாம் உள்வாங்குகின்றோமோ , எவ்விதம் அவ்விதம் உள்வாங்குவதால் நாம் பெரும்பயன் அடைகின்றோமோ அவ்விதமே மொழி விடயத்திலும் பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான். இதனையுணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள் தமிழ் இலக்கணத்தில் திசைச்சொற்கள் என்னும் பிரிவையே ஏற்படுத்தி வைத்தார்கள்.

மேலும் படிக்க ...

‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் பற்றி.. முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
வாசகர் கடிதங்கள்
26 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாசகர் கடிதங்கள்

அன்புள்ள நவஜோதி வணக்கம்.

வாழ்த்துக்கள். அன்புள்ள நவஜோதி, வணக்கம்.   உங்களது பிரித்தானிய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த பார்வை - கனடா பதிவுகளில்  படித்து உண்மையிலேயே களைத்துப்போனேன்.  படித்த எனக்கே அப்படி என்றால், இத்தனை ஆர்வத்துடன் -  தேடுதலுடன் இந்த அறிமுகக்குறிப்பிற்காகவும் - திறனாய்விற்காகவும் பல நாட்கள்  உழைத்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். தமிழ்நாட்டவர் இதனைக்கேட்டு திகைத்திருப்பார்கள். பிரித்தானியாவில் இத்தனை எழுத்தாளர்களா...?   அனைவரும் அவரவர் துறைகளில்  தம்மால் முடிந்ததை செய்திருக்கிறார்கள்.  உங்கள் ஆக்கம் ஆவணமாகத் திகழுகிறது.   வாழ்த்துக்கள். உங்கள் கடின உழைப்புக்கு தலைவணங்குகின்றேன்.

மேலும் படிக்க ...

MEDIA ADVISORY: Citizenship ceremony to mark Black History Month

விவரங்கள்
Immigration, Refugees and Citizenship Canada
நிகழ்வுகள்
25 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

February 25, 2021— To mark Black History Month, the Honourable Marco E. L. Mendicino, P.C., M.P., Minister of Immigration, Refugees and Citizenship, and the Institute for Canadian Citizenship, along with distinguished guests, will welcome 20 candidates into the Canadian family at a special virtual citizenship ceremony.

மேலும் படிக்க ...

‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
25 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவஜோதி யோகரட்னம் - அரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ ஆற்றிய உரை. -


அரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘பிரித்தானியாவில்; புலம் பெயர் படைப்பிலக்கியங்கள்’ குறித்து பேசுவதற்கு என்னை அழைத்த முனைவர் சௌ.பா. சாலாவாணிஸ்ரீ, தலைவர் முனைவர் பொ. ரமேஷ், முதல்வர் முனைவர் கி.மாரியம்மாள், முனைவர் மா. கர்ணன், மற்றும் மாணவச் செல்வங்கள், பார்வையாளர்கள் அனைவருக்;கும் எனது அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

   ஈழத்தமிழர்களுக்குக் குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழர்களுக்கு  லண்டன் ஒரு கனவுத் தேசமாகவே இருந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கிய மிஷநெறிகளின் உயர்கல்வி செயற்பாடுகளாலும், லண்டன் கனவு நிரந்தரமாகவே அவர்களின் நெஞ்சில் பதிந்திருக்கிறது. ஆரம்பகாலங்களில் உயர் கல்வி கற்பதற்காகவும் உயர் தொழில்களை நாடியும் ஈழத்தமிழர்கள் லண்டன் நோக்கிப் புலம்பெயர்ந்திருந்தனர். மருத்துவர்களாகவும், கணக்காளர்களாகவும், உயர்கல்வி சார்ந்தும் இலண்டன் நோக்கிய புலப்பெயர்வுகள் இடம்பெற்றது.

   1982ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்பின் அகதிகளாக ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் லண்டனில் தமிழ் பத்திரிகைகளின் தோற்றமும், எழுத்தாளர்களின் பிரவேசமும், புனைகதை ஆக்கங்களும், விமர்சனக் கூட்டங்களும், நூல் வெளியீடுகளும், கலை நிகழ்ச்சிகளும் வாரத்திற்கு இரண்டு முறை என்ற வகையிலாயினும் தொடர்ந்து இடம்பெற்றவண்ணமே உள்ளன. இப்பின்னணியிலேயே லண்டனில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்; பற்றி நான் பேச இருக்கிறேன்.

   நாவல்; - சிறுகதை – கவிதை - கட்டுரை போன்றவற்றை பிரித்துக் கூறுவது மிகப்பொருத்தாக இருக்கும் என நம்புகிறேன். நாவல் இலக்கியத்தைப் படைத்தவர்கள் மற்றைய இலக்கிய வடிவங்களையும் படைத்திருப்தையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அத்தோடு நேரத்தை மனிதிற்கொண்டு முழுப் பட்டியலையும் இங்கு சொல்வதும் சாத்தியமில்லை. முடிந்தவரை தேர்ந்தெடுத்திருக்கிறேன். சில நூல்கள் தவறவிட்டிருக்கலாம் என்று கூறி...

மேலும் படிக்க ...

நீண்டதொரு மதிப்பீட்டுக்கான தொடக்க அறிவித்தல்! மீள்வாசிப்புகளும் பதிவுகளும் ... - பெளசர் -

விவரங்கள்
- பெளசர் -
நிகழ்வுகள்
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அமரர் சண்முகலிங்கம் நினைவாக..! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், காந்தீயம், தேடகம் போன்ற அமைப்புகளின் முன்னாள் உறுப்பினராகவிருந்தவர் அமரர் சண்முகலிங்கம் அவர்கள். பெப்ருவரி 22 அவரது நினைவு நாள்.

எப்பொழுது கண்டாலும் சிரித்த முகத்துடன் , வாயூற  உரையாடும் இவரது தோற்றம் நினைவுக்கு வருகின்றது. தான் நம்பிய கொள்கைகளுக்காகத் தன் இருப்பில் உறுதியாகத் தடம்  பதித்தவர். இவர் காந்திய அமைப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்தபோது அச்செயற்பாடுகளுக்காக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையினில் வாடியவர். இவரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும்போதெல்லாம் நான் அவரது சிறை அனுபவங்கள் பதிவு செய்யப்பட வேண்டியவை; ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. அவற்றைப் பற்றி எழுதுங்கள். 'பதிவுகள்' இணைய இதழுக்கும் எழுதுங்கள் என்று வலியுறுத்துவதுண்டு. எழுதுவதாக உறுதியளிப்பார்.

மேலும் படிக்க ...

மண்ணின் மகள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

படித்தவர்கள் பலர் பிற நாடுகளில் வாழ்ந்து , தம் பொருள் வளம் பெருக்குவதையே நோக்காகக்கொண்டு வாழ்கையில், இவர் தான் கற்றதை, அறிந்ததைத் தன் மண்ணுக்கு வழங்குவதற்காக வந்தார். தன் மண்ணின் அனர்த்தங்களை எதிர்கொண்டு , சமூக, அரசியல் ரீதியிலும் அவற்றைக் களையத் தன் பங்களிப்பினைச் செய்தார். அதற்கு இவருக்கு எம் மண்  கொடுத்த பரிசு? தூக்கிப் போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய மண் புழுதியிலே போட்டு மிதித்துச் சீரழித்தது. எம் மண்ணின் வரலாற்றின் அவமானம் இம்மண்ணின் மகளின் மடிவு! முடிவு! தானிழைத்த வரலாற்றுத் தவறினை, இவரை நினைவில் வைப்பதன் மூலம் ஓரளவு தீர்த்துக்கொள்கிறது. எந்தக் கல்வி நிலையத்துக்காக இவர் தன் வாழ்வையே அர்ப்பணித்தாரோ அந்தக் கல்வி நிலையம் இதுவரை இவரை நினைவு கூர்ந்திட என்ன செய்தது? ஒரு சிலை கூட வைத்ததா? நினைவு  கூர்ந்ததா? மிகவும் வெட்கக்கேடான விடயமென்னவென்றால் .. இவரிடம் கல்வி கற்றவர்களில் சிலரே இவரின் முடிவுக்கும் காரணமாக இருந்தார்களென்ற தகவல்கள்தாம்.

என் வாழ்க்கையில் ஒரு முறையாவது இவரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.  அதனை  நினைவினில் பாதுகாத்து வைத்திருக்கின்றேன். அப்பொழுது நான் நினைக்கவில்லை அதுவே இவரைச் சந்திக்கும் இறுதிச் சந்தர்ப்பமாக இருக்கப்போகுதென்பதை.  இப்பொழுதும் என் நினைவில் அச்சந்தர்ப்பம் நேற்றுத்தான் நடந்ததுபோல் நினைவிலுள்ளது.

எண்பத்திரண்டு என்று நினைக்கின்றேன். நண்பருடன் கைதடியில்  இயங்கிக்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்கு மொறட்டுவைத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையுடன் சென்றபோது மாணவர்களுடன் உடலொன்றை அறுத்துக்கூறுபோட்டவாறு பாடம் நடத்திக்கொண்டிருந்த இவரைச் சந்தித்தேன். நுட்பத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு வழங்க இன்முகத்துடன் வரவேற்ற இவரது தோற்றம் இன்னும் நினைவில் பசுமையாக நிற்கிறது.

மேலும் படிக்க ...

கே.எஸ். சிவகுமாரன்: ஈழத்து இலக்கியத்தின் தனிப்பெரும் விருட்சம் - மு. நித்தியானந்தன் -

விவரங்கள்
மு. நித்தியானந்தன்
இலக்கியம்
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்து இலக்கியத்தோப்பில்  வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ். சிவகுமாரன். இந்த பெரும் இலக்கிய வியக்திக்கு இணைசொல்ல இங்கே யாருமில்லை. நூறு கவிஞர்களைக் காட்ட முடியும்; நூறு நாவலாசிரியர்களைக் காட்ட முடியும்; நூறு கட்டுரையாளர்களைக் காட்ட முடியும். கே.எஸ். சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டுகாலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. அந்த வாசிப்பின் வியாபகம் அசலானது. அயராத எழுத்துப்பணியே அவரின் மூச்சாக இருந்திருக்கிறது. இவரின் எழுத்துக்கள் 5,000 பக்கங்களில், முப்பத்தேழு நூல்களாக மலர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இன்னும் நூல் வடிவம் பெறாத இவரின் எழுத்துக்கள், இன்னும் ஓர் ஆயிரம் பக்கங்களை மிக எளிதாகத் தாண்டிவிடும். இந்தளவு பல்துறை சார்ந்து, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுத்தை ஓர் இயக்கமாக எண்ணிச் செயற்பட்ட வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியவில்லை.

'ஆராய்ச்சிக் கட்டுரைகள்' எழுதுவது, பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்களுக்கு அது தொழில். பதவி உயர்வுக்குப் புள்ளிகள் தேடித்தரும் பொறி. 1980இல் வெளிவந்த நூலுக்கு 30 ஆண்டுகள் கழித்து வெளியான இரண்டாம் பதிப்புக்கு 'மறுவாசிப்பு' செய்கிறேன் என்று சொல்லி ஒரு பல்கலைக்கழகப் 'புலமையாளர்', அடிக்குறிப்பு சகிதம் அச்சியந்திரம் உருவானதில் ஆரம்பித்து, மேனாட்டார் வருகை, மிஷனரிகளின் செயற்பாடு என்று ஆரத்தி எடுத்து, கூடவே காவடியும் எடுத்து, ஆய்வுப்பரப்பிற்குள் நுழையவே பாதிக்கட்டுரை முடிந்து விடுகிறது. இன்னுமொரு பேராசிரியர் தவில் கலைஞனின் வாழ்க்கையை எழுதப்போனவர், தவில் எப்படி இருக்கும் என்று சொல்லி, தவில் வளர்ந்த கதை சொல்லி, தவில் வாசித்தவன் கதை சொல்ல வருவதற்கிடையில் விடிந்துவிடுகிறது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புநெறி பயிலும் மாணவர்களுக்கான பாட போதனையில் பேராசிரியர் க. கைலாசபதியின்  'புனைகதை' பற்றிய சிறப்பு விரிவுரைகளை நான் முழுதும் கேட்டிருக்கிறேன். George Lukacsஇன் The Historical Novel நூலை விரித்துவைத்து, அந்நூலினை வாசித்து, கல்கியின் நாவலை விமர்சிக்கும் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் இலக்கியப் புலமையின் தரம் வேறு. கே.எஸ். சிவகுமாரன் தனது விமர்சனக் கட்டுரை ஒன்றில் Ralph Cohen எழுதிய New Directions in Literary History என்ற நூலில் Robert Weismann என்ற மார்க்சிய அறிஞர் எழுதிய Past Significance and Present Meaning in Literary History  என்ற கட்டுரையின் சாரத்தைத் தருகிறார். எத்தகைய வாசிப்பு இது.Walter Sutton and Richard Foster என்போர் இணைந்து எழுதிய  Modern Criticism: Theory and Practice என்ற பாரிய நூலைப் பற்றிய தகவல்களைத் தருகிறார் கே.எஸ். சிவகுமாரன். Ceylon Daily News பத்திரிகையில் 1973இல் ஆறு இதழ்களில் எஸ்ரா பவுண்ட் பற்றி மேர்வின் த சில்வா, ரெஜி சிறிவர்தன ஆகிய இரு ஆங்கில விமர்சகர்களுக்கிடையே நடந்த இலக்கிய விவாதத்தைச் சுருக்கமாகத் தமிழ் வாசகர்களின் முன் வைத்த ஆர்வத்தை எப்படிப் பாராட்டுவது? தொடர்ச்சியான அந்த இலக்கிய விவாதத்தைக் கருத்தூன்றிக்  கிரகித்து, தமிழ் வாசகர்களை மிரட்டாமல் சுருக்கமாக - எளிமையாக அப்பெரும் இலக்கிய சர்ச்சையை, சாதாரண தமிழ் வாசகனுக்கு எடுத்துச்செல்லும் பணி எத்தகைய பணி! ஆழ்ந்த வாசிப்போடு, அதனை எளிமையாக - சுருக்கமாக தமிழில் வழங்குவதற்கு எத்தகைய ஆளுமை வேண்டும்!

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானங்கள்: "தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ" - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் முத்துலிங்கத்தின் சிந்தையை வசியம் செய்யும் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, கே.ஜே.ஜேசுதாஸ் & வாணி ஜெயராமின் குரல், எம்ஜிஆர் & லதாவின் சிறப்பான நடிப்பு , என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எல்லாமே நன்கிணைந்து எனைக் கவர்ந்த கானமிது. கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளை ஒவ்வொன்றாக இரசித்தவாறே, அவற்றைப் பாடும் பாடகர்களின் குரல்களையும், அபிமான நடிகர்களின் நடிப்பையும் இரசித்துப்பாருங்கள் நிச்சயம் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். இப்பாடலின் பொருளை விளங்கி அமைக்கப்பட்டுள்ள இசை, அதையுணர்ந்து அனுபவித்துப் பாடும்  பாடகர்களின் குரலினிமை , விளங்கி நடிக்கும் நடிகர்களின் நடிப்பு எல்லாமே என்னை ஈர்த்தனவென்பேன்.

இப்பாடலின் முக்கிய சிறப்புகளிலொன்று பாடலில் வெளிப்பட்டுள்ள லதாவின் நடனத்திறமை. லதா சிறந்த நர்த்தகி. லதாவின் நடனத்திறமையினை வெளிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள பாடலோ என்னும் வகையில் பாடல் முழுவதும் லதாவின் நடனத்தை வெளிப்படுத்தும் வகையில் பாடற் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரும் நிதானமாக அதனை இரசித்துக்கொண்டிருப்பதன்  மூலம், லதாவின் நடனத்துக்கு இடையூறேதும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றார்.

"வண்ண ரதம் போலவே
தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே
துள்ளி நான் ஓடவா"

என்னும் வரிகளுக்கு லதா வெளிப்படுத்தும் நடனத்திறமை என்னை  மிகவும் கவர்ந்தது. இப்பாடலில் பின்வரும் வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை:

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்!
  2. வாசிப்பும், யோசிப்பும் 369: ஷோபாசக்தியின் பொக்ஸ்: 'நிலவே நீ சாட்சி!' - வ.ந.கிரிதரன் -
  3. ஓவியர் கருணா இயூஜின் வின்சென்ற் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவும் பகிர்வும் - 'தாய்வீடு' திலீப்குமார் -
  4. சிறுகதை: ஆப்பு - மு தனஞ்செழியன்
  5. தொடர் நாவல்: கலிங்கு (2006 - 6) - தேவகாந்தன் -
  6. பதிவுகள் தளத்தில் சில மாற்றங்கள்
  7. கவிதை: எமக்கும் கீழே தட்டையர் கோடி! - வ.ந.கிரிதரன் -
  8. பத்திரிக்கைச் செய்தி: திருப்பூரில் புத்தகக் கண்காட்சி - சுப்ரபாரதிமணியன் -
  9. ஆய்வு: நீலகிரி படகர்களும் வெள்ளியும் ஒரு குறியீட்டியல் நோக்கு “பெள்ளிய கம்புக ஒரெயலி” - முனைவர் கோ.சுனில்ஜோகி -
  10. கருத்துக்கள் சங்கமித்த மல்லிகை ஜீவா நினைவேந்தல்! முரண்அறுத்து முன்னோக்கிச்செல்லும் இயக்கம்!
  11. பதிப்பாய்வுகள் - பேசுபவர்: பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள்
  12. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணையவழி நினைவரங்கு
  13. (நூல் அறிமுகம்) தொன்மத்தின் மீதான காமம் : தேவகாந்தனின் “மேகலை கதா” வை முன்வைத்து சில குறிப்புகள்! - இராகவன் -
  14. ஆய்வு: புறநானூற்றில் வானவியல் செய்திகள்
பக்கம் 120 / 122
  • முதல்
  • முந்தைய
  • 113
  • 114
  • 115
  • 116
  • 117
  • 118
  • 119
  • 120
  • 121
  • 122
  • அடுத்த
  • கடைசி