பதிவுகள் முகப்பு

பெண்: சாதியா, வர்க்கமா அல்லது ஒடுக்கப்பட்ட பாலினமா? - மூலம்: எவேலின் ரீட் | ஆங்கிலவழித் தமிழில் : இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & துறைத்தலைவர், பூசாகோஅர. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் -641004, தமிழகம், இந்தியா -

விவரங்கள்
- மூலம்: எவேலின் ரீட் | ஆங்கிலவழித் தமிழில் : இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & துறைத்தலைவர், பூசாகோஅர. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் -641004, தமிழகம், இந்தியா -
ஆய்வு
11 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எவாலின் ரீட் , Evelyn Reed  (1905 - 1979)

எவாலின் ரீட் ஓர் அமெரிக்க கம்யூனிஸ்ட் மற்றும் பெண்ணியவாதி. 1940 ஜனவரி மாதத்தில் எவாலின் ரீட் நாடு கடத்தப்பட்ட ருஷ்யப்புரட்சியாளர் லியான் ட்ராட்ஸ்கி, அவருடைய மனைவி நடாலியா செடோவா இருவரையும் சந்திக்க மெக்சிக்கோவுக்குச் சென்றார். லியானின் இல்லத்தில் ரீட் அமெரிக்க ட்ராட்ஸ்கியின் தலைவரும் சோஷலிசத் தொழிலாளர் கட்சியின் தலைவருமான ஜேம்ஸ்.பி.கேனன் அவர்களைச் சந்தித்தார். அவ்வாண்டே ரீட் சோஷலிசத் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். அதன் பின் அவர் இறக்கும் வரை அக்கட்சியில் முன்னணித் தொண்டராகப் பணியாற்றினார். 1960-70 களில் பெண்விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஆழ்ந்து ஈடுபட்ட ரீட் பெண் கருக்கலைப்பு இயக்கக் கூட்டணியில் உறுப்பினராக இருந்தார். இக்காலகட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், ஐயர்லாந்து, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய இடங்களில் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தார் . சொற்பொழிவாற்றினார். ஃப்ரெட்ரிக் ஏங்கெல்ஸ், அலெக்சாண்டிரா கோலண்டை ஆகியோரின் பெண், குடும்பம் சார்ந்த ஆய்வுகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சியப்பெண்ணியம், பெண்ணொடுக்குமுறை, பெண் விடுதலை ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல புத்தகங்களை எழுதினார்.

பெண்களின் விடுதலை எதிர்கொள்ளும் சிக்கல்கள், தாய்வழிக் குலமுறையிலிருந்து தந்தை வழிக்குடும்ப முறையை நோக்கிய பெண் பரிணாமவளர்ச்சி ஆகிய நூல்களும் ஜோசஃப் ஹான்சன், மேரி –(எ) வாட்டர் ஆகியோருடன் இணைந்து எழுதிய பெண்ணின் இலக்கு பெண்ணுயிரியா ? அழகுப்பொருட்கள், நாகரிகம், பெண்ணுழைப்புச் சுரண்டல் (பெண்மீதான சுரண்டல்) என்ற நூலும் ரீடினுடைய குறிப்பிடத்தக்க நூல்களாகும். 1972 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் அதிபர் தேர்தலில் இவர் சோஷலிசத் தொழிலாளர் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இண்டியா, நியூயார்க் , விஸ்காசின் ஆகிய மாநிலங்களில் 13,878 ஓட்டுகளைப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

பாரதியார் நினைவு தினக் கவிதை: பாருலகில் நீ வரமாய் இருக்கின்றாய் பாரதியே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், ஆஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், ஆஸ்திரேலியா -
கவிதை
11 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாரதியாரின் நினைவு தினம் செப்டமப்ர் 11.

   

    பாரதியின் பாட்டாலே பலபேரும் விழித்தனரே.
    வேருக்கு நீராக விரைந்துமே சென்றதுவே.
    பாரதியின் கற்பனையில் பாரதமே இருந்திடினும்
    ஊரையெலாம் உலுக்கும்படி உணர்வாக எழுந்ததுவே.

    வறுமைதனில் வாடிடினும் வற்றாத கற்பனையால்
    நிறைவுடைய கவிதைகளை நீள்புவிக்குத் தந்தானே.
    வேதத்தை கற்றிடினும் விதம்விதமாய் யோசித்து
    பாதகத்தை சாடியதால் பலபேரும் போற்றினரே.

    பாப்பாவை  பார்த்தவன் பாடிய  பாட்டெல்லாம்
    கேட்பார்க்கு எல்லாமே கீதையாய் இருக்கிறது.
    மொழிபற்றி பாடியது முழுதுமே உண்மையென
    மொழியறிஞர் பாராட்டு முண்டாசுக் கவிஞனுக்கே.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவில் படைப்பிலக்கியவாதி தாமரைச்செல்விக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
11 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 10 ஆம் திகதி, சிட்னியில் நடத்திய 23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் , படைப்பிலக்கியவாதி  தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால இலக்கியச்சேவையை பாராட்டி வழங்கப்பட்ட சாதனையாளர் விருது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பாராட்டுரை. இவ்வுரையை சங்கத்தின் நிறுவன உறுப்பினரும் தற்போதைய துணை நிதிச்செயலாளருமான எழுத்தாளர் முருகபூபதி நிகழ்த்தினார். சங்கத்தின் உறுப்பினர் சட்டத்தரணி கலாநிதி ( திருமதி ) சந்திரிக்கா சுப்பிரமணியனின் தலைமையில் நடந்த எழுத்தாளர் விழாவின் முதல் அமர்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் கம்பர்லாந்து மாநகர மேயர் லிஸா லேக் அவர்கள் தாமரைச்செல்விக்கான விருதினை வழங்கினார்.

திருமதி. ரதிதேவி கந்தசாமி என்ற இயற்பெரைக்கொண்டிருப்பவரும், அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் தற்போது வதிபவருமான படைப்பிலக்கியவாதி , நீண்ட காலமாக தாமரைச்செல்வி என்னும் புனைபெயரில்  படைப்பிலக்கிய பிரதிகளை எழுதிவருகின்றார். அங்கயற்கண்ணி, கானா மணிவண்ணன், வெண்ணிலா சூரியகுமாரன், இந்துமதி முதலான புனைபெயர்களுக்கும் இவர் சொந்தக்காரர்.

மேலும் படிக்க ...

பாரதியாரின் நினைவாக: 'திக்குகள் எட்டும் சிதறி' மழைக்கவிதை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
10 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் செப்டம்பர் 11.  என்னை மிகவும் பாதித்த இலக்கிய ஆளுமைகளின் முதலிடத்தில்  இருப்பவர் மகாகவி பாரதியார். குறுகிய அவரது வாழ்வு மானுட உலகுக்கு ஒளி தந்ததொரு மின்னலாக அமைந்து விட்டது. என்னை அவரது சிந்தனைத்  தெளிவு மிகவும் கவர்ந்தது. அவரிடம் காணப்படும் முரண்பாடுகள் கூட அவரது தேடலின் விளைவுகளே.

தேசிய விடுதலை, வர்ண விடுதலை, வர்க்க விடுதலை, பெண் விடுதலை. மானுட விடுதலை பற்றி அவருக்கு மிகுந்த தெளிவு இருந்தது. அதனையே அவரது எழுத்துகள்,  வாழ்க்கை ஆகியன புலப்படுத்துகின்றன. வர்ண விடுதலைக்காக ஏனைய விடுதலைகளை அவர் புறக்கணித்து விடவில்லை. வர்ண விடுதலையை , பெண் விடுதலையை வற்புறுத்திய அவர் கூடவே வர்க்க விடுதலையையும் வலியுறுத்தினார். அத்துடன் நிற்கவில்லை மானுட விடுதலையையும் முன் வைத்தார். மானுட விடுதலையை வேண்டிய அவர் அதற்காக ஏனையு விடுதலைகளைப்  புறக்கணித்துப் போரிடாது ஓய்ந்திருக்கவில்லை.  அனைத்து விடுதலைகளுக்காகவும் களத்தில் இறங்கிப் போராடிய சமூக, அரசியற் போராளி அவர். அவரது அந்த ஆளுமை என்னை மிகவும் கவர்ந்தது.

இவ்விதம் மானுடரின் பல்வகை விடுதலைக்காகவும் குரலெழுப்பின அவரது எழுத்துகள். அத்துடன் நின்று விடவில்லை. மானுடரின் இருப்பு பற்றிய கேள்விகளையும் எழுப்பின. நல்லதோர் உதாரணம்  அவரது 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் 'நிற்பதுவே நடப்பதுவே' என்று ஆரம்பமாகும் புகழ்பெற்ற கவிதை.

தமிழ் இலக்கியத்துக்கான அவரது பங்களிப்பும் மகத்தானது. கவிதை, சிறுகதை, வசனகவிதை , காப்பியம் & மொழிபெயர்ப்பு என அவரது பன்முகப்பட்ட பங்களிப்பு முக்கியமானது.

மேலும் படிக்க ...

இலண்டன் ஊடாகக் கங்காரு தேசம் – 2 - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
10 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இம்முறை லண்டன் போக ஆயத்தமானபோது, சந்திக்கவேண்டுமென நான் விரும்பியவர்களில் கெளரி பரா முக்கியமான ஒருவராக இருந்தா. 2019இல் லண்டனில் நிகழ்ந்த ‘உதிர்தலில்லை இனி’ என்ற எனது நூல் அறிமுகத்தின்போது கெளரியை ஒரு தடவை சந்தித்திருந்தாலும்கூட, அவவுடன் உரையாடியிருக்கவில்லை. அந்தச் சந்திப்புக்குப் பின்னர்தான், நிறைந்த அர்த்தங்களுடனும் வித்தியாசமான பார்வையிலும் அவ செய்யும் பக்கச்சார்பற்ற நூல் விமர்சனங்களைக் கேட்கக் கிடைத்திருந்தது. அதனால் கவரப்பட்டிருந்த எனக்கு, 'ஒன்றே வேறே' என்ற என் சிறுகதைத் தொகுதி பற்றிய அவவின் கருத்தை அறிய வேண்டுமென்ற அவா ஏற்பட்டிருந்தது.

மச்சாளின் மகள் சூட்டா வீட்டில் சாப்பாட்டின் பின்னர் ஆறஅமரக் கதைத்துக்கொண்டிருந்தபோதே, அவவுக்கு அண்மையில் கெளரி பரா வசிப்பதாக அறிந்தேன். உடனே, கெளரியைச் சந்திக்கும் என் ஆவலைப் பூர்த்திசெய்வதற்கான ஒரு வழியைச் சூட்டா கண்டுபிடித்தா. இருவரினதும் வீடுகளுக்கு இடையிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் என்னைக் கொண்டுபோய் விட்டுவிட்டு, சூட்டாவும் திவ்வியாவும் அங்கு காத்திருந்தனர். சூடான கோப்பியுடனும் ருசியான சிற்றுண்டியுடனும், பல நாட்கள் பழகியவர்கள்போல மிக இயல்பாக நாங்கள் இருவரும் பேசினோம், சிரித்தோம், மகிழ்ந்தோம். திவ்வியாவையும் சூட்டாவையும் அதிக நேரம் காத்திருக்கவைக்க விரும்பாததால், நீண்ட நேரத்தைச் செலவழிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் விடைபெற வேண்டியிருந்தது.

மேலும் படிக்க ...

ஆய்வு: மா.சு.செளந்தரராசன் சிறுகதைகளில் மகள் பாத்திரப் படைப்பு! - பி.ஆர்.இலட்சுமி (முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்) , வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை-117. -

விவரங்கள்
- பி.ஆர்.இலட்சுமி (முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்) , வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை-117. -
ஆய்வு
10 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


முன்னுரை

பெண்களாய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமம்மா  - கவிமணி

குடும்பம் என்பது உறவுகள் கூடி வாழும் இல்லம். அத்தகைய உறவுகளில் தாய்ப்பாசத்திற்கு அடுத்த நிலை உறவாக மதிப்பிடக்கூடிய உறவு மகளாகும். இத்தகைய பெருமைக்குரிய மகள் நிலை உறவு குறித்துப் பெருந்தன்மை குடும்பக்கதைகள் சிறுகதைத்தொகுப்பில் எழுத்தாளர் செளந்தரராசன் படைத்துள்ள தன்மையினை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தளவை மா.சு.சௌந்தரராசன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் இராயகிரியில் சுப்பையா-மாரியம்மாளுக்கு பத்தாவது மகனாகப் பிறந்தார் (27-8-1953). விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டியில் தமது மனைவி-தங்கேஸ்வரியுடன் வாழ்பவர். ஒன்பதாம்வகுப்பு வரை படித்த இவர் தளவாய்புரம் அம்மையப்ப நாடார் பெண்கள் பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணி செய்தவர். ஆசிரியர் ஆகவேண்டும் என்ற கனவுகளோடு படிக்க முயற்சி செய்து முடியாமல் போனதால் எழுத்தாளராக வளர்ந்தவர். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தினர் உதவியுடன் இவரது சிறந்த கதைகளைத் திரு. அப்துல்ஹமீது அவர்கள் வானொலிக் கதைகளுக்காகப் பேசியுள்ளார். இவரது முதல் சிறுகதை14-10-1985 மாலைமுரசு இதழில் வெளி வந்தது. மேதகு.ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தபோது இவரது சிறுகதைகளைப் பாராட்டி உள்ளார்.

நா.கவிதா என்ற சிவகாசி கல்லூரி மாணவி இவரது படைப்புகளை ஆய்வு செய்து எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளார். நல்லஉள்ளம், தரிசனம், சுபசகுனம், பெருந்தன்மை, யோசனை போன்ற பெருமை மிகுந்த பல சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ள இவர் சிறுவர்களுக்கான பல நூல்களையும் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க ...

'எதிர்நீச்சல்' மாரிமுத்து திடீர் மறைவு! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
08 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் தொலைக்காட்சிச் 'சீரியல்க'ளில் பெரிதும் ஆர்வம் கொண்டவனல்லன். வீட்டில் எந்நேரமும் பார்ப்பார்கள். அதனால் அவ்வப்போது நானும் இலேசாக எட்டிப் பார்ப்பதுண்டு. அவ்விதம் எட்டிப்பார்த்தபோது என்னைக் கவர்ந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மாரிமுத்து. இவரை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது 'எதிர்நீச்சல்' மூலம்தான்.

அதன் பின்பே இவர் தமிழ்ச் சினிமாவில் உதவி இயக்குநராக, இயக்குநராக, நடிகராக விளங்கியவர் என்பதை அறிந்துகொண்டேன். அண்மையில் வெளியான விஜய், ரஜனி திரைப்படங்களிலும் சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியா – சிட்னியில் 23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
07 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

புலம் பெயர்ந்த தமிழர்கள் தம்முடன் தமது இயல்புகளையும் அழைத்துச் சென்றிருந்த போதிலும், இவர்கள் மத்தியில் கலை , இலக்கிய உணர்வுள்ளவர்கள் – அந்த இயல்புகளுக்கும் அப்பால், அடுத்த தலைமுறையின் தேவை கருதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழின அடையாளம் பேணப்படவேண்டும் என்ற கருத்தியலுக்கு வலுச்சேர்க்கும் பணிகள் ஒருபுறம் மேற்கொள்ளப்படும் அதே சமயம் – புகலிட இலக்கியத்தை ஆரோக்கியமான திசையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பிரயத்தனமும் நீட்சி பெற்றுள்ளது. “அறிந்ததைப் பகிர்தல் , அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்” என்ற சிந்தனையை முன்னிறுத்தி 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம், பின்பு ஆண்டுதோறும் மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் மெய்நிகர் வழியாக நடைபெற்ற எழுத்தாளர் விழா, இம்முறை சிட்னியில் இம்மாதம் 10 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு, நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில், சிட்னியில் தூங்காபி சமூக மண்டபத்தில் ஆரம்பமாகிறது.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தினால் (Australian Tamil Literary & Arts Society) ஒழுங்குசெய்யப்படும் இவ்விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக   Cumberland City Council  மேயர் லிஸா லேக், மற்றும் Strathfield City Council மேயர் கரன் பென்சபென் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

மெல்பன், சிட்னி, கன்பரா, குவின்ஸ்லாந்து மாநகரங்களில் வதியும் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் , வானொலி ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடும் இவ்விழாவில், இம்முறை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுவருபவரும், தமது நூல்களுக்கு இலங்கையில் தேசிய சாகித்திய விருதுகள் உட்பட பல இலக்கிய விருதுகளையும் பரிசில்களையும் பெற்றிருப்பவருமான எழுத்தாளர் தாமரைச்செல்வி பாராட்டி கெளரவிக்கப்படவிருக்கிறார். எழுத்தாற்றல் மிக்க மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவிருக்கின்றன.

மேலும் படிக்க ...

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பற்றிய சானல் 4 வெளியிட்ட காணொளி! - ஊருலாத்தி -

விவரங்கள்
- ஊருலாத்தி -
அரசியல்
07 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பற்றிய சானல் 4 வெளியிட்ட காணொளி - https://www.youtube.com/watch?v=uz-a62ikv9Q

இந்தக் காணொளியில் முன்பு பிள்ளையானின் ஊடகக் காரியதரிசியாகவிருந்த அஷாட் ஹன்ஸீர் மெளலானா பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றார்.

1. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவைக் கோத்தபாயா ராஜபக்சவின் கீழ் , பிள்ளையான் தலைமையில் இயங்கிய The Tripoli Platoon என்னும் ஆயுதக் குழுவே  , கோத்தபாயா ராஜபக்சவின் ஆணையின்படி கொன்றது.

2. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் கோத்தபாயா ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் பொருட்டு அவரது நம்பிக்கைக்குரிய இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரியான Suresh Salley  யின் ஏற்பாட்டில், முஸ்லிம் தீவிரவாத அமைப்பின் துணையுடன்  நடத்தப்பட்டன. பிள்ளையான அதற்கு உதவியாகவிருந்தார்.

3. The Tripoli Platoon கோத்தபாயா ராஜபக்சவின் கீழ் நேரடியாக இயங்கிய  பிள்ளையான் தலைமையிலான குழு. இதன் நோக்கம் அரசியல் எதிரிகளை ஒழிப்பதுதான். பலரின் கொலைகளுக்குக் காரணமாக இந்த அமைப்பு இருந்திருக்கின்றது.

இவையெல்லாம் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகள். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் எனப்பல வெளிநாட்டினர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே அந்நாடுகள் இக்குற்றச்சாட்டுகளைச் சும்மா விட்டுவிடப்போவதில்லை.

மேலும் படிக்க ...

'மாமன்னன்' விட்ட பிழையும், சரியும்! - ஊருலாத்தி -

விவரங்கள்
- ஊருலாத்தி -
அரசியல்
06 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சனாதனத்தைக் கொசுவை அழிப்பதுபோல் அழிக்க வேண்டுமென்றூ கூறியது இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பலத்தை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மதவெறி பிடித்த இந்து மதகுரு ஒருவர் உதயநிதியின் தலைக்குப் பத்துக் கோடி என்று அறிவித்திருக்கின்றார். நல்லவேளை உதயநிதி வட இந்திய மாநிலங்களில் வசிக்கவில்லை. வசித்திருந்தால் அந்தச் சாமியாரின் கட்டளையை ஏற்று ஒரு கூட்டம் புறப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக உதயநிதி இந்த எச்சரிக்கையை இலேசாக எண்ணிவிடக்கூடாது.  அவதானமாகவுமிருக்க வேண்டும்.  இவ்விதம் கொலை அச்சுறுத்தல் விட்ட அந்தச் சாமிக்கெதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்.

இந்தச் சர்ச்சையையைக் காரணமாக வைத்து தமிழகத்தின் ஆட்சியைக் கலைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசியற் கோமாளியான சுப்பிரமணியன் சுவாமி அதற்கான எச்சரிக்கையை ஏற்கனவே விட்டிருக்கின்றார்.  போதாதற்கு ஆளுநர் ரவியுடனான தமிழக அரசின் முரண்பாட்டையும் மறந்துவிட முடியாது. அப்படியேதும் நடந்தால் மிகப்பெரிய வெற்றியுடன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.  இன்றுள்ள திமுகவின் வசீகர ஆளுமைகளில் முன்னிலை வகுப்பவர்கள் உதயநிதியும், கனிமொழியும்தாம். ஸ்டாலின் தன் தொடர்ச்சியான அரசியற் செயற்பாடுகளால் இன்றுள்ள நிலைக்கு உயர்ந்திருப்பவர்.  ஆனால் உதயநிதி, கனிமொழி போல் மிகுந்த வசீகர ஆளுமை மிக்கவரல்லர். கனிமொழியின் 'தமிழ்', 'ஆங்கிலப்புலமை, உதயநிதியின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' தோற்றம், கலைஞரைப்போல் சமயத்துக்கேற்ப உதிர்க்கும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் பதில்கள், திரைப்பட நடிப்பு  காரணமாக திமுகவின் முக்கிய பலமாக இருப்பவர்கள் இவர்கள். உண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் பலமும் இவர்கள்தாம்.

மேலும் படிக்க ...

நீர்கொழும்பு மாண்மியம்- ஒரு சந்திப்பும் சில நினைவுகளும்! - பூங்கோதை -

விவரங்கள்
- பூங்கோதை -
இலக்கியம்
06 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியா - மெல்பேர்னிலிருந்து எமது மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர், நீர்கொழும்பை பூர்வீகமாகக் கொண்ட, திரு முருகபூபதி  இங்கிலாந்து வருகையின் போது ,  ஏறத்தாழ நாற்பது வருடங்களின் பின் ஒரு குடும்ப உறவினராக என்னைச் சந்தித்துக் கொண்டது மனதை நெகிழ வைத்தது.  பேசுவதற்கும் பழகுவதற்கும் மிக இனிமையான மனிதர். பல இலக்கிய விருதுகளை வென்றதற்கான  கர்வம் எதுவும் இல்லாதவர். நான் உரிமையுடன் சிறு வயதில் பார்த்துப் பழகியவர்.

என் வாழ்வில் மிக இனிமையான வசந்த காலம் என்றால் அது நான் என் பெற்றோரோடு நீர்கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதி தான். இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் ஒருவருக்கொருவர் அன்போடும் விட்டுக் கொடுத்தலோடும் அழகான ஒரு சமூகக் கட்டுமானத்தை அங்கு அமைத்திருந்தார்கள்.  

நீர்கொழும்பில் எம்மோடு வாழ்ந்த அநேகமான பல தமிழ்,  சிங்கள, முஸ்லிம் மற்றும் ஏனைய கலப்பு  இனக் குடும்பங்களை இன்று வரையும் நான்  நினைவில் வைத்திருந்தாலும், பல விடயங்கள் மறந்தும் போயிருந்தன.

வந்தாரை வாழ வைக்கும் சிங்கார நீர்கொழும்பில் தான் எனது தாயும் தந்தையும் தமது திருமண வாழ்வை 1966ம் ஆண்டில் ஆரம்பித்திருந்தனர். ஆனால் அதற்கு முன்பே என் தந்தை அங்கு தனது மூத்த சகோதரர் திரு செல்லத்துரையுடன் காலணிகள் விற்கும் தொழிலை ஸ்தாபித்திருந்தார்.

மேலும் படிக்க ...

'ரொறன்ரோ' தமிழ்ச் சங்கம்: 'குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் படைப்புலகம்'

விவரங்கள்
'ரொறன்ரோ' தமிழ்ச் சங்கம்
நிகழ்வுகள்
04 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அறிவித்தலைத் தெளிவாகப் பார்க்க ஒருமுறை அழுத்தவும். -

கைது! - முல்லைஅமுதன் -

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
கவிதை
04 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒவ்வொரு மாலைப்பொழுதும்
அவன் வீட்டிலேயே என் பொழுது கழியும்..
அவனின் பாட்டி தரும் தேநீர் சுவையாக இருக்கும்.
கொடியில்  காய்ந்த உடைகளை
அவனின் தங்கை
ஒரு புன்னகையுடன் எடுத்துச் செல்வதுண்டு.
நிச்சயமாய் காதல் இல்லை.
நூலக நூல்களைப் பரிமாறுவதுடனான நட்பே.
அவளும் தன் அறையிலிருந்து கேட்கட்டுமே என்று
வானொலியின் ஒலிஅளவை அதிகரித்துவைப்பான்.
ஆறு மணியானால் பாட்டி பாக்குரலில்
இடிப்பது கேட்கும்.
எட்டு மணியானால் சுருட்டின் வாசம்
அவளிடமிருந்து காற்றில் வந்து
மூக்கைத் திணறவைக்கும்.
மழை அதிகரித்திருந்தது.
வீடு வர நேரம் போய்விட்டது.
அம்மா முறைத்தாள்.
அப்பாவின் இருமல் ஒலித்தது.

மேலும் படிக்க ...

'தமிழர் வகைதுறைவள நிலைய (தேடகம்)' ஏற்பாட்டில் மாவை நித்தியானந்தனின் ஐந்து நூல்களின் வெளியீடும் அறிமுகமும்!

விவரங்கள்
_ தகவல்: பிறேமச்சந்திரா -
நிகழ்வுகள்
04 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பண்டாரவன்னியன் புத்தகசாலையும், வவுனியா நகர சபையும் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகக் கொண்டாட்டம்!

விவரங்கள்
- தகவல்: பண்டாரவன்னியன் புத்தகசாலை -
நிகழ்வுகள்
04 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அறிவித்தலைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஒருமுறை அழுத்தவும். -

கம்பராமாயணத்தில் வாலி மாட்சியும் வீழ்ச்சியும் - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II),மீனம்பாக்கம், சென்னை. -

விவரங்கள்
- முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II),மீனம்பாக்கம், சென்னை. -
ஆய்வு
03 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                  - வாலி : கம்போடியச் சிற்பம். -

முன்னுரை

கிட்கிந்தையின் மன்னன் வாலி. வானரக் குலத் தலைவன். சூரிய பகவானின் புத்திரன். சிறந்த சிவபக்தன். பாற்கடலைத் தனியாகக் கடையும் வல்லமை உடையவன். போரில் தனது எதிரில் நிற்பவர்களின் வீரத்தில் பாதியைத் தனக்கு வர, வரம் பெற்றவன். இலங்கை வேந்தன் இராவணனையே, தன் வாலில் கட்டித் தூக்கிய வலிமை பொருந்தியவன். நூல் பல கற்ற சிறப்புடையவன். சிறப்புகள் பல பெற்றவனானாலும் தன் வீரத்தில் தற்பெருமைக் கொண்டவன். மனைவியின் மேல் பேரன்பு கொண்டவன். வரம் பல பெற்றாலும் மதங்க முனிவரிடம் சாபமும் பெற்றவன். கோபம், நம்பிக்கையின்மை, தம்பி மனைவியைக் கைப்பற்றுதல், பிடிவாதம், பிறரை மதிக்காதத் தன்மை, தன் வீரத்தின் மீது கொண்ட கர்வம், வரபலத்தால் தன்னை யாராலும் வெல்லவே முடியாது என்ற இறுமாப்பு, யார் பேச்சையும் கேட்காதத் தன்மை போன்ற சில தீய குணங்களால் வீழ்ச்சியைக் கண்டவன் வாலி. இராமபிரானின் அம்பு பட்டதால், செய்த பாவத்தினின்று விடுபட்டு அமரரானான். இராமனின் அம்பு பட்டதால் மனமாற்றம் ஏற்பட்டு, இறக்கும் நிலையில் தம்பி சுக்ரீவனையும், மகன் அங்கதனையும் இராமனிடம் அடைக்கலப் படுத்தி விட்ட பின்பே, உயிர்த் துறந்தான். தம்பி சிலநேரம் மது அருந்திவிட்டு தீமை செய்தாலும் அவன் மேல் அம்பினை எய்து விடாதே என்றும், இராமபிரானிடம் கேட்டுக்கொள்கிறான்.அத்தகைய வாலியின் மாட்சியையும், வீழ்ச்சியையும் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்

வாலியின் சிறப்பு

தேவர்களுடன் சேர்ந்து, அசுரர்களின் எதிரில் நின்று மத்தாய் இருந்து சுழல்கின்ற மந்திர மலையின் வடிவம் தேயவும், சீறும் தன்மை கொண்ட வாசுகி எனும் பாம்பின் நடுவுடலானது தேய்ந்து போகவும், திருப்பாற்கடலை முற்காலத்தில் தான் ஒருவனாய் நின்று கடைந்த தோள் வலிமை உடையவன். (நட்புக் கோட்படலம் 115) பூமியும், நீரும், தீயும் காற்றும் ஆகிய அழிவற்ற பூதங்கள் நான்கும் ஒன்று கூடியது போன்ற வலிமையுடையவன். அலைகளையுடைய எல்லைப்புறக் கடல்கள் சூழ்ந்துள்ள சக்கரவாளகிரி என்னும் மலையிலிருந்தும் இங்கு இருக்கும் மலையில் தாண்டும் வன்மையுடையவன். (நட்புக் கோட் படலம் 116) அவன் போரில், தன்னை எதிர்ப்பவர் வந்தால் அவர்களிடம் உள்ள வலிமையில் பாதி அளவைத் தான் அடையும்படியான வரத்தைப் பெற்றவன். எட்டுத்திக்குகளின் எல்லை வரையும், நாள்தோறும் சென்று அங்குள்ள ’அட்ட மூர்த்தி’ எனப்படும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கும் அன்பை உடையவன்.

மேலும் படிக்க ...

இலண்டன் ஊடாகக் கங்காரு தேசம் - 1 - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
02 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                              - கல்வட்டம் ('ஸ்டோன்ஹெஞ்ச்' - Stonehenge) -

எங்களின் குடும்பப் பெறுமானங்களில் அறத்துக்கு அடுத்ததாக கல்வி மிகவும் முக்கியமானதொரு இடத்தை வகிக்கிறது. பட்டம்பெற்றால்தான் புத்திசாலியா, படிப்பிருந்தால் மட்டும் போதுமா என வைக்கப்படும் தர்க்கங்களில் உண்மை இருந்தாலும்கூட, கல்வித் தகமை எப்போதும் என்னை ஈர்த்திழுப்பதுண்டு. எனவே, இலங்கையிலிருந்து பெறாமகள் ஒருவர் இங்கிலாந்துக்குப் படிக்கப்போகிறார் என்பது எனக்குப் பெரிய விடயமாகத் தெரிந்தது. அதனால், அனுமதி கிடைத்தபோதே, அவவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வேன் என அவவுக்குச் சொல்லியிருந்தேன்.

பேராதனையில் நிகழ்ந்த என் பட்டமளிப்புக்கு யாழ்ப்பாணத்திலிருந்த என் பெற்றோர் வராததால் எனக்கேற்பட்டிருந்த வருத்தம், இலங்கையிலிருந்து லண்டனுக்கு அவவின் பெற்றோர் போவது சாத்தியமில்லை என்பதால் நானாவது அதில் கலந்துகொள்ள வேண்டுமென்ற உந்துதலை எனக்குத் தந்திருக்கவும்கூடும். எதுவோ அந்தப் பட்டமளிப்பு விழாவுக்காகக் கடந்த ஒக்ரோபரில் லண்டனுக்குப் பயணமாகியிருந்தேன்.

கற்றல் செயல்பாட்டின் அறுவடையைப் பரவசத்துடன் கொண்டாடும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஒன்றை ஐரோப்பிய நாடொன்றிலும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் London South Bank University வளாகத்துக்குள் கால்பதித்தேன். பட்டமளிப்பு நிகழவிருந்த அந்த மண்டபத்துக்குள் செல்வதற்குப் பல வாசல்கள் இருக்கின்றன என்பது மண்டபத்தின் அளவை எதிர்வுகூறப் போதுமானதாக இருந்தது. என் ரிக்கற்றில் குறிக்கப்பட்டிருந்த வாசலைத் தேடி உள்நுழைந்த என்னை முதலில் ஏமாற்றமே வரவேற்றது. அந்தப் பென்னம்பெரிய மண்டபம் வெறிச்சோடிப் போயிருந்தது. பட்டம் பெறவிருந்த சில மாணவர்கள்கூட நிகழ்வுக்குச் சமூகமளிக்கவில்லை என்றால் பாருங்களேன்.

மேலும் படிக்க ...

சிட்னியில் 2023 தமிழ் எழுத்தாளர் விழா ! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்கினேஸ்வரா -
நிகழ்வுகள்
02 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிட்னியில் செப்டெம்பர் 10 ஆம் திகதி 2023 தமிழ் எழுத்தாளர் விழாவில் இலக்கியப் படைப்பாளி தாமரைச் செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப் பங்களிப்பை பாராட்டும், கௌரவிப்பும் இந்நிகழ்வில் நடைபெறுகிறது.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் தூங்காபி Toongabbie சமூக மண்டபத்தில் காலை 10-00 மணிக்கு ஆரம்பமாகும்.

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களின் நூல்களின் கண்காட்சி, மலையகம் 200 கருத்தரங்கு , வாசிப்பு அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. அத்துடன் எழுத்தாற்றல் மிக்க மணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.

2023 தமிழ் எழுத்தாளர் விழாவின் காலை அரங்கில் வரவேற்புரையை கலாநிதி கார்த்திகா கணேசர் நிகழ்த்துவார். அதன்பின் கலாநிதி சந்திரிகா சுப்ரமணியன், Clr Lisa Lake , Mayor, Cumberland City Council   மேயர் வரவேற்று உரையை ஆற்றுவார். அதன்பின் இளம் எழுத்தாளர்களுக்கான சான்றிதழ்கள் பிரதம அதிதி கம்பர்லாந்து மேயரால் வழங்கப்படும்.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் (378) : செம்மனச்செல்வியின் 'காலப்புனல்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் பழைய ஈழமுரசு பத்திரிகைகளை எண்ணிம நூலகமான 'நூலகம்' தளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது ஒரு கட்டுரையொன்று கண்ணில் பட்டது.  10.11.1985 வெளியான ஈழமுரசில் வெளியான சிறுகதைத்திறனாய்வுக் கட்டுரை. அம்பலத்தரசன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை. ஈழமுரசில் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் சிறுகதைகளத் திறனாய்வு செய்வது வழக்கம். அவ்வகையில் அக்டோபர் மாதச் சிறுகதைகளைத் திறனாய்வு செய்திருந்தார் அம்பலத்தரசன். அக்டோபர் மாதக் கதைகளை எழுதியிருந்தவர்கள்: வடகோவை தி.செம்மனச்செல்வி, வதிலி சுக்கின், ச.முருகானந்தன் & சந்திரா தியாகராஜா. இவர்களில் சந்திரா தியாகராஜா , ச.முருகானந்தன் ஆகியோரை ஏற்கனவே அறிந்திருந்தேன். சந்திரா தியாகராஜா தற்போது சந்திரா ரவீந்திரன் என்று நன்கறியப்பட்ட புகலிட ,இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.

வடகோவை தி.செம்மனச்செல்வி வேறு யாருமல்லர். எமக்கெல்லாம் நன்கு அறிமுகமான எழுத்தாளர் வடகோவை வரதராஜன், யோக வளவன், அமரர் கோமகன் ("நடு' இதழ் ஆசிரியர்) ஆகியோரின் சகோதரிதான். யாழ்  பல்கலைக்கழகத் தமிழ்க் கலைத்துறைச் சிறப்புப் பட்டதாரி. ஆசிரியையாகப்  பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

மேலும் படிக்க ...

சிந்தனைக்களம் உரைத்தொடர்(32) : 'புல்லாங்குழல் இசை மரபு - அன்றும் இன்றும்'

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
01 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தின் 'தமிழ் எழுத்தாளர் வுழா 2023'

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
01 செப்டம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் நா. சோமகாந்தனின் (ஈழத்துச் சோமு) அறியப்படாத நாவல் 'களனி நதி தீரத்திலே' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
31 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் சோமகாந்தன் வெளியிட்ட நூல்களிலோ அல்லது அவர் பற்றிய கட்டுரைகளிலோ அவரது 'களனி நதி தீரத்திலே'  என்னும் இந்த நாவல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததாக எனக்கு நினைவிலில்லை.  ஒரு வேளை நான் தவற விட்டிருக்கலாம்.  நான் அறிந்த வரையில்  இந்நாவல் நிச்சயம் இதுவரை நூலாக வெளியாகவில்லையென்றே கருதுகின்றேன். ஆனால் அவரது நாவல்களில் இதுவொரு முக்கியமான நாவலாகவே எனக்குப் படுகிறது. 20.8.1961 தொடக்கம் 29.101.961 வரை மொத்தம் 11 அத்தியாயங்கள் வெளியாகியுள்ளன.  1- 4 வரையிலான அத்தியாயங்களுக்குத் தலைப்புகள் இடப்பட்டிருக்கவில்லை.

கதைச்சுருக்கம்: கதை சொல்லியும் அவன் நண்பன் நடராஜனும் பால்ய காலத்திலிருந்து நண்பர்கள். இருவரும் எஸ்.எஸ்.சி சித்தியடைந்து   கொழும்பில் வேலை கிடைத்துச் செல்கின்றார்கள். ஒன்றாகத் தங்கியிருக்கின்றார்கள். இருவரும் களனி கங்கை நதிக்கரையில் றோசலின் என்னும் அழகியொருத்தியைச் சந்திக்கின்றார்கள். அதன் பின் ஒரு நாள் வேலைக்குச் செல்லும் நண்பர்கள் வழக்கமாகச் செல்லும் ட்ரொலி வருவதற்கு நேரமெடுக்கவே 'ராக்சி' பிடித்துச் செல்லத்தீர்மானிக்கிறார்கள். றோசலின் அன்று புதிய வேலை கிடைத்துச் செல்வதற்காக 'ட்ரொலி'யை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். அவளுக்கும் நேரமாகிவிடவே இவர்களிடம் தனக்கும் 'ராக்சி'யில் இடம் தர முடியுமா  என்று கேட்கின்றாள். இவர்களும் சம்மதித்து அவளுக்கு உதவுகின்றார்கள். அன்று முதல் மூவரும் நண்பர்களாகின்றார்கள்.

அவர்களுக்கிடையில் நட்பு வளர்கிறது. அவள் இருவருடனும் சகஜமாகப் பழகி வருகின்றாள். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் அவள் பேச்சு, செயல்களை வைத்து அவள் மீது காதல் கொள்கின்றார்கள். ஒரு சமயம் கதை சொல்லி உடல் நலம் கெட்டு ஊருக்குச் சென்று திரும்புகையில் நண்பன் நடராஜன் றோசி மேல் காதல் கொண்டிருப்பதை அறிந்து அவன் மேல் ஆத்திரமடைகின்றான். றோசியும் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதி அவள் மீதும் கோபமடைகின்றான்.

றோசி காரணமாக நண்பர்களுக்கிடையில் மோதல் முற்றி கதை சொல்லி நண்பன் நடராஜனைத் தாக்கவே , நடராஜனும் ஆத்திரமடைந்து அவனைவிட்டு விலகி, றோசியின் வீட்டுக்கே சென்று விடுகின்றான். உண்மையில் அதுவரை றோசி அவர்களுடன் சாதாரணமாகவே பழகி வந்திருக்கின்றாள். நடராஜன் அவளிருப்பிடத்துக் சென்ற பின்பே அவனது தன்மீதான தீவிர காதலை உணர்ந்து அவனைக் காதலிக்கத்தொடங்குகின்றாள்.

மேலும் படிக்க ...

குறு நாவல் : கிராம விஜயம் - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
30 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் இரண்டு: அன்னரின் தீர்மானம்!

"பொதுவாக மாலைநேரம் ஜாரி பிரித்து கால்பந்து விளையாடுகிறோம்" என்று சுந்தரம் கூறியதை சங்கர் சேர் சொல்லவும் அவர் கேட்டிருந்தார். சங்கர் "இப்ப​ , இந்த​ உடம்பை தூக்கிக் கொண்டு விளையாட​ முடியிறதில்லை . இருந்தாலும் சில​ நேரம் விளையாடுகிறேனஂ" எனஂறிருக்கிறார் . தற்போது அவர் இவர்கள் கூறுகிற​ ' வெள்ளி ' விளையாட்டுக் கழகத்தினஂ தலைவராக​ இருக்கிறார் ." ஒருநாள் கடலுக்கும் போவோம்... " என்று கருணா கூற அவருக்கு விளங்கத் தானஂ   இல்லை . ஆனால் , சங்க காலத்தில் காட்டுக்கு போவது போல இதுவும்  ஒன்றாக இருக்கலாம் எனத் தோன்றியது. வவுனியாவில் நாய்களை பழக்கிக் கொண்டு வேட்டைக்குப் போகிறார்கள் . தமிழர் மத்தியில் நிலவி இருக்கிற​  அவ்வித பழக்க வழக்கங்கள் கிராமங்களில்  தொடர்கின்றன  .

கருணாவிடம் "டேய்  ,நான் தான்  உங்களைக் குழப்புற‌வன் . நீ என்னைக் குழப்பித் தள்ளுறாயே , பெளர்ணமியிலே கடல் பொங்கிறது .   தொழில் செய்ய போறதில்லையே நீ எப்படி ?" என புரியாமல்   கேட்கிறார் .

"அப்படி....போகாதபடியால் தான் வள்ளங்கள் கரையிலே இருக்கின்றன சேர் . அவிழ்த்தால் , வள்ளம் கவனம் என்று மட்டும்  சொல்வார்கள்"

அப்பாவியாக "கரையிலே இருந்து நூறு மீற்றர் தூரத்திற்குள்ளே தானே போகிறோம் . எங்களை கடல்  ஒன்றும் செய்யாது" என்கிறான் .

இளங்கன்று பயம் அறியவில்லை . விஞ்ஞானமும் அறியாது  .  ஜனநாயகத்தைத் தெரிந்து கொண்ட அரசாங்கங்க‌ள் என்ன ? , புத்திசாலிகளாகவா இருக்கினஂறன.  மக்களுக்கு கைவிலங்கைப் போட்டு வருத்திக் கொண்டு தானே இருக்கின்றன ? . அமெரிக்கா இந்திய​ புராணக் கதைகளைக் கொப்பி அடிதஂது   'சுப்பர்மனிதர்   , அந்த மனிதர் இந்த மனிதர்..என விஞஂஞான திரைப்படங்கள் என ரீல் விட்டு  எடுத்து பணத்தைக் குவித்துக் கொண்டு இருக்கிறது.

மேலும் படிக்க ...

பல்லவா் காலத் தமிழ் மொழியின் நிலைப்பாடு! - முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
- முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
29 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மொழி என்பது இவ்வுலகில் உள்ள மனித உயிர் அனுபவங்களை, நினைவுகளைப் பதிவிட, பரிமாற்றம் செய்து கொள்ளப் பயன்படும் கருவி அகும். மொழி என்ற ஒன்று இங்கு இல்லையெனில் மனித உயிர்கள் இருக்கும் ஆனால் மனித சமூகங்கள், வரலாறு இருக்காது. ஆக மொழி என்பது மானுடா்களை அவா்களது சமூகத்துடன் நிலத்துடன் பிணைக்கும் கருவி என்பது புலப்படுகின்றது. மொழி என்பதன் வழியேத் தான் சமூகம் மற்றும் இலக்கியம், வரலாறு தோற்றம் பெறுகிறது. இப்பின்புலத்தில் பல்லவா்காலத் தமிழ் மொழியின் நிலைப்பாட்டினை அறிய வேண்டும். காஞ்சியின் ஆட்சியைத் தொடா்ந்து, தமிழகத்தின் வடபகுதியையும் ஆள்கையில், பல்லவா்கள் அரசின் ஆட்சி நிருவாகத்திற்குச் சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினாலும், ஆளும் மக்களிடையே தம் ஆதிக்கத்தைச் செலுத்தும் நோக்கிலும் ஆளப்படுகின்ற மக்களின் ஏற்பு நோக்கியும் தமிழை அணைத்துக் கொண்டு, “பல்லவத் தமிழ் கிரந்தம்” என்னும் தமிழ் எழுத்து வடிவத்தை உருவாக்கித் தந்தனா். இவ்வாறாகப் பல்லவா் காலத் தமிழ் மொழி எழுத்தளவில் மட்டுமின்றி, இலக்கண அளவிலும் பல மாற்றங்களுக்கு உள்ளானது. வடமொழிச் சொற்கள் பல புகுந்ததன் விளைவாக தமிழ் மொழி நெகிழ்வுற்றது. சொல் வளம் செறிவடைந்தது என்றால் அது மிகையற்றதே. அவ்வகையில், திருவாசக இலக்கியத்தினைக் கொண்டு, பல்லவா்க காலத் தமிழ்மொழியின் நிலைப்பாட்டினை ஆராய்வதாக இவ் இயல் அமைந்துள்ளது.

பல்லவா் காலம்
பல்லவா் ஆட்சி தென்னிந்தியாவில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதி வரை நிலைத்து இருந்தது.பல்லவா்கள் இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவா்களாகவும்,தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள் என்றும், பஹலவா் எனும் பாரசீ மரபினா் எனவும் பல்வேறு கருத்துகள் வரலாற்று ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டாலும், பல்லவா்கள் தென்னிந்தியா்களே என்றும் சில வரலாற்றிஞா்கள் எடுத்துரைத்துள்ளமையும் இங்கு எண்ணத்தக்கது.

மேலும் படிக்க ...

மலையகத்தின் சதுரங்க ஆட்டத்தில் ஒரு புதிய திருப்பு முனை (3)! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
29 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

I

சென்ற கட்டுரை தொடர்  எதிர்பார்த்த வாதப்பிரதிவாதங்களைப்  பரந்தளவில் கிளப்பவே செய்திருந்தது. புலம்பெயர் அரசியலின்  தன்மை-தாக்கம், இவை பொறுத்த பல்வேறு எண்ணப்பாடுகள் கட்டுரைத் தொடரில் பரவலாக முன்வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒன்று முழங்காலையும், மொட்டைத்  தலையையும் தொடர்புபடுத்த இக்கட்டுரை தொடர் முயற்சிக்கின்றதா என்று அழுத்தமான முறையில் தன் கேள்வியை உள்ளடக்கத்  தவறவில்லை. அதாவது, ஹைலன்ஸில் மேற்கொள்ளப்பட்ட சிதைவுகளுக்கும், வடமாகாண சபையினது செயல்திறனின்மையால் எழுந்த சூனியமாக்கல் நிகழ்வுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய தொடர்புகளையும் இதன் பின்னணியில் இருந்து இயக்கியிருக்க கூடிய எந்தவொரு புலம்பெயர் அரசியலின் தீவிர முகத்தையும் பொறுத்தே இக்கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. காரணம் சென்ற கட்டுரை தொடர் மேற்குறித் த கேள்விகளையும் அதற்குரிய காரணங்களையும் ஆராய முற்பட்டதே  அன்னாரின் கட்டுக்கடங்கா கோபத்துக்கு காரணமாக அமைந்து போனதாய் இருக்கக்கூடும்.

ஆனால் கேள்விகளை திராணியுடன் கேட்டுக்கொள்ள தெரிந்திராத எந்த ஒரு சமூகமும் நாளடைவில் இடிந்து குட்டி சுவராகப் போய்விடும் என்பது ஏற்கனவே நாம் பார்த்த ஒன்றுதான். இந்தப் பின்னணியிலேயே எழுப்பப்பட்ட கேள்விகள் பொறுத்து கனதியான எதிர் தர்க்கங்களை முன் வையாது, வெறுமனே இது முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சு போடப்படும் முயற்சி என அவசரமாய் ஆரூடம் சொல்லும் போக்கும் இடம்பெற்றிருக்கின்றது. ஆனாலும்  முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சு போடும் நிகழ்வென்பது வரலாற்றில்  சற்று ஆழமாக பார்க்கத்தக்கதுதான்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த மூன்று முக்கிய நிகழ்வுகள்! - குரு அரவிந்தன் -
  2. காத்திருப்பேன்? - நிர்த்தியா ஜோதிராஜ் , ஹாலிஃபக்ஸ் -
  3. காணாமல் போன மனித உரிமைச் சட்டத்தரணியும், சமூகச் செயற்பாட்டாளருமான கந்தையா கந்தசாமி!
  4. பி.விக்னேஸ்வரனின் 'நினைவு நல்லது' நூல் அறிமுக விழா! - தகவல்: கணபதி சர்வானந்தா -
  5. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம் நினைவாக.... - வ.ந.கிரிதரன் -
  6. வித்துவான் வேந்தனார் குழந்தைப் பாடல்கள் பற்றிய சிறுகுறிப்பு! - வேந்தனார் இளஞ்சேய் -
  7. ‘விம்பம்’ லண்டனில் விமர்சன அரங்கு! - நவஜோதி ஜோகரட்னம் , லண்டன் -
  8. பயணியின் பார்வையில் (2): உலகத்தில் 'சுத்தமான' தலைவர் அமிர்! ஊடகப் பயணத்தில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவம்! - முருகபூபதி -
  9. முல்லைஅமுதன் கவிதைகள் இரண்டு!
  10. ஸ்டெம் கல்வி (Stem-Kalvi)தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் “ஆயிரம் தமிழ் வாசிப்புப் புத்தகங்கள்" செயற்றிட்டம். - கலா ஸ்ரீரஞ்சன் -
  11. Stem-Kalvi நிறுவனத்தின் "சிறுவர்களுக்கான 1000 புத்தகங்களை உருவாக்கும் திட்டம்'. - தகவல்: ஶ்ரீரஞ்சனி -
  12. சந்திராயன் 3 இன் வெற்றி மானுட குலத்தின் வெற்றி! - வ.ந.கிரிதரன் -
  13. ஜெயிலர் திரைப்படமும் , நியாயப்படுத்த முடியாத வன்முறையும்!
  14. சு.சமுத்திரத்தின் நெருப்புத் தடயங்கள் புதினம் காட்டும் சமுதாயமும் அதன் பின்புலமும் - முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி -635 752 -
பக்கம் 41 / 104
  • முதல்
  • முந்தைய
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • அடுத்த
  • கடைசி