பதிவுகள் முகப்பு

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்!

விவரங்கள்
- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் -
நிகழ்வுகள்
28 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் கடந்த  இருபது  வருடங்களுக்கும்  மேலாக  தமிழ்  இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை  கடந்த  2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம்  இயங்கிவருகிறது.   கடந்த  ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில்,  பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தது. மீண்டும் இந்த பரிசளிப்புத் திட்டம்  இம்முறையும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.  

  இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும்  விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

1. கடந்த 2022  ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய  நான்கு துறைகளில் வெளியான    தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

2. ஒவ்வொரு துறையிலும் சிறந்ததாகத் தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் தலா 50 ஆயிரம் இலங்கை ரூபா பரிசாக வழங்கப்படும்.

3. நூலாசிரியரின் முழுப்பெயர், வயது, முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை அடங்கிய சுயவிபரக் குறிப்பொன்றினையும் நூலுடன் இணைத்தனுப்புதல் வேண்டும்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: தூரிகைகளின் வேந்தர் ஓவியர் மாருதி - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
கிறிஸ்டி நல்லரெத்தினம்
28 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"தூரிகைகளின் வேந்தர்" என அழைக்கப்படும் பிரபல தமிழக ஓவியர் மாருதி இன்று காலமானார். இவரின் ஓவியங்கள் வண்ணக்கலவைகளில் குளித்து பார்ப்பவர் கண்களை பரவசப்படுத்தும். இவரின் தூரிகைகள் படைக்கும் பெண் பாத்திரங்களின் சிரிக்கும் கண்கள் தனித்துவமானவை!

வெ. இரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி (28 August 1938 – 27 July 2023), ஓவியர் மட்டுமல்லாமல் ஆடை வடிவமைப்பாளரும் கூட. கண்மணி, பொன்மணி, விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. ஓவியம் மட்டுமின்றி 'உளியின் ஓசை', 'பெண் சிங்கம்' ஆகிய திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணி செய்திருக்கிறார்.

இவர் புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28 அன்று டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர்கள் மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர்கள். வெங்கோப ராவ் ஆசிரியராக பணி செய்தார். அதனால் வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு இரங்கநாதன் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க ...

ஜோர்ஜ் அழகையா: புதிய தலைமுறையினர் தங்கள் வேர்களைத் தேடவேண்டும் என்றவர் இன்;றில்லை (22.11.1955 – 24.7.2023) .நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
.நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
27 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பி.பி.சி யின் தொலைக்காட்சியில் ஜோர்ஜ் அழகையா என்ற ஆங்கிலச் செய்தியாளர் தோன்றும்போது அவர் இலங்கையர் என்ற ஆர்வத்தோடும் பெருமையோடும் அவருடைய செய்திகளை அக்கறையோடு நான் பார்ப்பதுண்டு. இலங்கைத் தமிழர் ஒருவர் பி.பி.சியின் தொலைக்காட்சியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றுவது என்பது மிக மிக அபூர்வமான நிகழ்வாகும்.

இலங்கையில் 1958 ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம் அமுலுக்கு வந்தபோது இந்த நாடு தமிழர்களுக்குப் பாதுகாப்பானதல்ல என்று கருதி ஜோர்ஜ் அழகையாவின் தந்தை பொறியியலாளராக கானாவில் தொழில் தேடிச் சென்றார். ஆறு வயதில் தனது ஆரம்பக் கல்வியை கானாவிலே பயின்ற ஜோர்ஜ் அழகையா போட்ஸ்மவுத்திலுள்ள சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தனது இரண்டாம் நிலைக் கல்வியைத் தொடர்கிறார். அங்கு கூடைப்பந்தாட்டக் குழுவின் தலைவராகவும், பாடசாலைச் சஞ்சிகையின் பத்திராதிபராகவும், இல்ல மாணவர் தலைவராகவும் அவர் சிறப்புப் பெற்றிருந்தாலும் உயர் தரத்தில் போதுமான தகுதியைப் பெற்றிருக்கவில்லை. ‘உனது பெற்றோர்கள் உன்னை இங்கே அனுப்பி வைத்திருப்பது நீ கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காகவே’ என்று தனது கல்வி குறித்துச் சுட்டிக் காட்டிய பிறதர் டேமியன் அவர்களை தான் மறப்பதற்கு இல்லை என்கிறார் அழகையா. அக்கல்லூரியில் தனக்கு ஆங்கில ஆசிரியராக இருந்த டேவிட் செப்மான் (னுயஎனை ஊhயிஅயn) சிபார்சு செய்ததையடுத்தே அவர்; டேர்ஹார்ம் (னுரசாயஅ) பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறார். பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றபின் ‘ளுழரவா’ என்ற தீவிர அரசியல் கருத்துக்களைக் கொண்ட ஆங்கிலப் பத்திரிகையில் தென்னாபிரிக்கப் பத்திரிகையாளராக அவர் ஏழு ஆண்டு காலம் பணியாற்றியிருக்கிறார்.

மேலும் படிக்க ...

ஆசி கந்தராஜாவின் 'அகதியின் பேர்ளின் வாசல்' வரலாற்று நூல் வெளியீடு! - ஆசி கந்தராஜா -

விவரங்கள்
- தகவல்: ஆசி கந்தராஜா -
நிகழ்வுகள்
27 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'அகதியின் பேர்ளின் வாசல்' நாவல் வெளியீடு, கனடா, Scarborough நகரில், 29 July 2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, தமிழ்ச்சேர்ச் மண்டபம், Immaculate Heart of Mary Church. 131 Birchmount Rd, Scarborough, ON MIN 3J7 என்னும் முகவரியில் நடைபெறும். -


மேலும் படிக்க ...

ஜோர்ஜ் அழகையா ( George Alagiah ): ஓர் ஆசிய ஆளுமையின் குரல் ஓய்ந்தது! - சக்தி சக்திதாசன், லண்டன் -

விவரங்கள்
- சக்தி சக்திதாசன், லண்டன் -
அரசியல்
27 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜோர்ஜ் அழகையா ( George Alagiah ) எனும் பெயர் இங்கிலாந்து உத்தியோகபூர்வமான தொலைக்காட்சியான பி.பி.ஸி நிறுவனத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த ஒரு பெயராகும். 1955ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி ஶசிறீலங்கா அப்போதைய இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஒரு கிறீத்துவர்களான டொனால்ட் அழகையா எனும் பொறியியளாலருக்கும் , திரேசாவுக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகள் உண்டு. இவர் தனது பெற்றோர்களுடன் ஐந்தாவது வயதில் மேற்கு ஆபிரிக்க நாடான கானா நாட்டிற்குப் புலம் பெயர்ந்தார். கானா நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் புலம் பெயர்ந்த ஜார்ஜ் அழகையா தனது ஆரம்பக்கல்வியை சென்.ஜோன்ஸ் எனும் போர்ட்ஸ்மவுத் இடத்திலமைந்த உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். கல்லூரி வாழ்க்கையைத் தொடர்ந்து ஜார்ஜ் அழகையா அவர்கள் டர்காம் ( Durham ) யூனிவர்சிட்டியில் அரசியல் துறையில் பட்டம் பெற்றார். பட்டாதாரியாகிய பின்னால் 1980ம் ஆண்டு சவுத் எனும் இதழின் ஆபிரிக்க ஆசிரியராகப் பணிபுரிந்தார். சுமார் எட்டு வருடங்கள் இங்கு பணி புரிந்த பின்னால் 1989ம் ஆண்டில் இங்கிலாந்தின் முன்னனி ஊடகமான பி.பி.ஸியில் பணியில் அமர்ந்தார்.

மேலும் படிக்க ...

இனவாதத்தேசியமும், இனவாதமற்ற தேசியமும்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
25 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலத்துக்காலம் தென்னிலங்கையிலிருந்து இனவாதத்தைக் கக்கும் அமைச்சர்கள் தம் சுய  அரசியல் இலாபங்களுக்காக உருவாகிக்கொண்டு வருவதை வரலாற்றினூடு பார்த்து வருகின்றோம்.  முன்னாள் கடற்படை அதிகாரியும், அமைச்சருமான சரத் வீரசேகரா இன்றுள்ள சிறில் மத்தியூவாகத் தன்னைத் தென்னிலங்கை அரசியலில் கட்டமைத்து வருன்றார்.

மேலும் படிக்க ...

மணிப்பூரே! ஓ பற்றியெரியும் மணிப்பூரே! - ம.ஆச்சின் -

விவரங்கள்
- ம.ஆச்சின் -
கவிதை
25 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மணிப்பூரே! ஓ பற்றியெரியும் மணிப்பூரே!
மணிப்பூரு எரியுதம்மா!
மரண ஓலம் உலகெங்கிலும் ஒலிக்குதம்மா,
குக்கி பழங்குடியே மணிப்பூரில்
சிக்கித் தவிக்கிறியே,
உன் உரிமைக் குரல் கேட்கிறதே!  

மேலும் படிக்க ...

பாம்புப்பிடாரனும், படம் விரித்தெடுத்தாடிய பாம்பும்! (கறுப்பு ஜூலை நினைவாக..) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
24 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


இன்றுதான் இலங்கைத்தீவு  
இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த்தீவானது.
இந்து சமுத்திரத்தின் சொர்க்கம்
இன்றுதான்
இந்து சமுத்திரத்தின் நரகமானது.
இலங்கைத் தீவின் இருண்ட யுகம் உதித்த நாளும்
இன்றுதான்.
இலங்கைத் தமிழர்தம்
இரத்தம் குடிக்கப்பட்ட நாள்.
இப்பாரின் திக்குகளெங்கும் அவரைப் பேர்
இடரால்  பெருமளவில் அகதிகளாக
இடம் பெயர வைத்தநாள்!

மேலும் படிக்க ...

பயணத்தொடர்: வட இந்தியப் பயணம் (2) - நோயல் நடேசன் -

விவரங்கள்
- நோயல் நடேசன் -
பயணங்கள்
22 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                              -  தேவதாரு மரம் -

டெல்லியில் இருந்து சிம்லாவிற்குச் சென்ற இந்திய ரயில் பயணம் சுகமாக இருந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால் உணவு மற்றும் பத்திரிகைகளும் தரப்பட்டது. சிம்லா வட இந்தியாவில் மிகவும் சுத்தமான இடமாக எனக்குத்தெரிந்தது. எங்களுடன் பயணித்த ஆங்கிலப்பெண் சிம்லா ஸ்கொட்லாந்து நகரம்போல இருக்கிறதென்றாள். பெரும்பாலான வட இந்தியர்கள் தேன்நிலவிற்கு வரும் இடமாக இது தெரிந்தது . கடைத்தெருக்கள் மிக சுத்தமாகக் காட்சியளித்தன.

சிம்லாவில் எனக்கு ஜுடியின் இருமல் தொற்றிக்கொண்டது. ஒரு நாள் அறையிலே தங்கியிருந்தேன். ஆக இரண்டு இரவுகள் சிம்லாவில் தங்கியிருந்தோம். இமாலயப் பிரதேசம் என்ற இந்த மாநிலத்தில் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இங்குதான் முதல் முதலாகச் சமஸ்கிருத இலக்கியங்களில் கூறப்பட்ட தேவதாரு மரததை (Himalayan Chestnut tree) எங்கும் பார்க்கமுடிந்தது.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் வருடத்தில் ஒன்பது மாதங்கள் இங்கிருந்துதான் அரசாண்டனராம். ஆங்கிலேயர்களது வைசிராய் மாளிகை பெரிதானதில்லை. அந்த சிறிய மாளிகையில் 40 அதிகாரிகள் 800 வேலைக்காரரை வைத்து முழு இந்தியாவையும் அதனது 40 கோடி மக்களையும் வருடத்தில் 9 மாதங்கள் அரசாண்டார்கள் என்பது வியப்பான விடயமாகத்தோன்றியது. இங்குதான் சிம்லா மகாநாடு, சுதந்திரத்திற்காகப் போராடிய இந்தியத் தலைவர்களைச் சந்திப்பது, தீபெத்தின் பகுதியான அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவோடு இணைத்த நடவடிக்கை என எல்லா வரலாற்றின் முக்கிய விடயங்கள் நடந்தேறின.

மேலும் படிக்க ...

மலையகத்தின் சதுரங்க ஆட்டத்தில் ஒரு புதிய திருப்பு முனை! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
22 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கிட்டத்தட்ட 500-600 ஆசிரியர்கள், சடுதியாக, ஹட்டன் கல்வி வலயத்தில், ஜுன்-12, 2023முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரணங்களில் பிரதானமானது, சமரசங்களுக்கு கட்டுப்படாத அல்லது அடிவருடித்தனங்களுக்கு ஆட்படாத, மலையக ஆசிரிய ஒன்றியம் போன்ற நடுநிலை ஆசிரிய தொழிற்சங்கங்கள், ஆசிரிய இடமாற்ற சபையில் இருந்து அகற்றப்பட்டது என்பது முதற் காரணமாக இருக்கின்றது. இரண்டாவது, மேற்படி ‘சிதைப்பு’ படலமானது, மலையகத்தை சார்ந்தவர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டு அரங்கேற்றப்படுமாயின் - அது இன்னமும் கன கச்சிதமாக சோபிப்பதாய் அமைந்துவிடும் என்ற எண்ணப்பாடு சம்பந்தப்பட்டவர்களிடம் ஆழ வேரூன்றி இருந்தமையும் காரணமாகின்றது.

மேற்படி பின்னணியிலேயே, கிட்டத்தட்ட 29 குற்றச்சாட்டுகளை தன்மீது சுமந்திருந்தாலும் மலையகத்தை சேர்ந்த பெ.ஸ்ரீதரன் அவர்கள் ஹட்டன் கல்வி வலயத்தின் பணிப்பாளராக மீண்டும் மத்தியால் நியமிக்கப்படுகின்றார். 2016-2021 காலம் வரை ஹட்டன் கல்வி வலயத்தில், பணிப்பாளராய் ஏற்கனவே, பணி புரிந்த பெ.ஸ்ரீதரனின் காலப்பகுதியிலேயே, அதிக அளவிலான, திட்டமிடப்பட்ட, மாணவ இடைவிலகல் ஹட்டன் வலயத்தில் காணப்பட்டது என்ற பாரிய உண்மை போக, இதன் காரணமாய் சில மாணவ மணிகள் தற்கொலைக்கும் முயன்றிருந்தார்கள் என்பது போன்ற தீவிர குற்றச்சாட்டுக்கள் மனித உரிமை குழுவினருக்கும், உயர் கல்வி அதிகாரிகளுக்கும் செய்யப்பட்டிருந்தன. இது, இவ்அதிகாரிக்கு எதிராக செய்யப்பட்ட அனந்த முறைப்பாடுகளில், ஒரு சிலவே, என்ற கூற்றின் உண்மை வெளிப்பாடாகும்.

மேலும் படிக்க ...

(பயனுள்ள மீள்பிரசுரம் ) மாமன்னன் - ஒரு பார்வை - விடுதலை இராசேந்திரன் -

விவரங்கள்
- விடுதலை இராசேந்திரன் -
கலை
22 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- கீற்று இணையத்தளத்தில் வெளியான 'மாமன்னன்' பற்றிய விமர்சனமிது. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -


தொடர்ந்து சாதிக்கு எதிரான திரைப்படங்களை வழங்கிவரும் இயக்குநர் மாரி செல்வராஜ். இப்போது மாமன்னன் திரைப்படத்தை மக்களுக்கு சமர்ப்பித்து இருக்கிறார். சமகால அரசியலில் ஜாதியின் செல்வாக்கை இந்தப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பத்து ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக ரிசர்வ் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வடிவேலு. ஆனால் தன்னுடைய அதிகாரத்தை அவர் செலுத்தாமல் ஊரில் கலவரம் வந்துவிடக்கூடாது என்பதற்காக கட்சியில் மாவட்ட செயலாளர் சாதி வெறியர் ஒருவருக்கு பணிந்து போகிற ஒருவராகத்தான் இருக்கிறார். மகன் உதயநிதி ஸ்டாலின் இதில் கருத்து மாறுபாட்டோடு தந்தையிடம் பேசுவதையே நிறுத்திக்கொள்கிறார். பிறகு சமூகத்தில் நடக்கின்ற சாதிய ஒடுக்குமுறைகள் வடிவேலு கண்களை திறக்கச் செய்கின்றன. மகனின் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து மகனோடு போர்க்களத்திற்கு வருகிறார்.

மேலும் படிக்க ...

உயர்வு மனப்பான்மையும் , தாழ்வு மனப்பான்மையும் - வேந்தனார் இளஞ்சேய் -

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
22 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த உயர்வு மனப்பான்மை , தாழ்வு மனப்பான்மை பற்றிய எனது பார்வையை, இன்றுங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இந்த நீண்ட கட்டுரையை நீங்கள் பொறுமையாக , முழுமையாக வாசிக்க வேண்டுமென்று, அன்போடு வேண்டிக் கொள்கின்றேன். இந்த உயர்வு மனப்பான்மையும் , தாழ்வு மனப்பான்மையும் , ஓர் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றதே.

உயர்வு மனப்பான்மை

இங்கு உயர்வு நிலையில் உள்ள அமெரிக்கா , உலகில் தன் முதன்மை நிலையைத் தக்க வைத்திட எடுக்கும் முயற்சிகளை நாம் காண்கின்றோம். வணிகப் போட்டியில் சீனா தங்களை முந்திவிடாதிருக்க, அமெரிக்கர் எடுக்கும் பிரயத்தனங்களையும் நாம் காண்கின்றோம். சீனாவுடன் 5G வர்த்தகத்தை இங்கிலாந்து எடுக்காதிருக்க , அமெரிக்கா இங்கிலாந்திற்குக் கொடுக்கும் அழுத்தம் பற்றியும் நாம் உணர்கின்றோம். இது , உயர்நிலையில் உள்ள ஒரு அரசு , தனது முக்கியத்துவத்தை இழந்து விடாதிருக்கச் செய்யும் செயற்பாடுகள். இது பற்றிய பல்வேறு கருத்துப் பரிமாறல்கள், உலகளாவிய ரீதியில் நடக்கின்றன. பொதுவாகப் பல நடுநிலையாளர்கள் , அமெரிக்காவின், முக்கியமாக அமெரிக்க அதிபரின் , இத் தன்மையான செயற்பாடுகளை எதிர்க்கின்றார்கள்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் ஆழியாள் கவிதைகள் உரையாடல்!

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
21 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நினைவு கூர்வோம்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
21 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று , ஜூலை 21, நடிகர் திலகத்தின் நினைவு நாள். அவர் நினைவாக ஒரு பாடல்: https://www.youtube.com/watch?v=Vd_RC89xYeg

என்ன பாட்டு இந்தப் பாட்டு: கவிஞர் யுகபாரதியின் 'நெஞ்சமே! நெஞ்சமே!'

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
21 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் கேட்டதிலிருந்து அடிக்கடி நினைவில் வந்து வந்து போகும் பாடல் 'மாமன்னன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள  'நெஞ்சமே நெஞ்சமே' பாடல்.ஏ.ஆர்.ரகுமானின் இசை, கவிஞர் யுகபாரதியின் வரிகள், விஜய் ஜேசுதாஸ் & சக்திஶ்ரீ கோபாலனின் குரலினிமை , ஒளிப்பதிவு எல்லாம் கேட்பவர்தன் உள்ளங்களை ஈர்க்கின்றன. விஜய் ஜேசுதாஸின் குரல் சிற் சில இடங்களில் எனக்கு பாடகர் உன்னிமேனனின் குரலை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. மனத்தை இலேசாக வருடிச்செல்லும் குரல்.  https://www.youtube.com/watch?v=xvfDN_Ga2_M

மேலும் படிக்க ...

மொழிபெயர்ப்புக் கவிதைகள் சில! - லாங்ஸ்ரன் ஹியூஸ் | தமிழில்: க. நவம் -

விவரங்கள்
- லாங்ஸ்ரன் ஹியூஸ் | தமிழில்: க. நவம் -
கவிதை
20 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                     - எழுத்தாளர்   லாங்ஸ்ரன் ஹியூஸ் -

- எழுத்தாளர் க.நவம் மொழிபெயர்த்து 'நான்காவது பரிமாணம்' வெளியீடாக வெளியான 'எனினும் நான் எழுகின்றேன்' தொகுப்பிலிருந்து பெறப்பட்ட கவிதைகள். -


சுதந்திரம்

   -  லாங்ஸ்ரன் ஹியூஸ் | தமிழில்: க. நவம் -

சுதந்திரம் வரப்போவதில்லை
இன்றோ, இவ்வருடமோ
இனி ஒரு போதுமே
சமரசத்தாலும் அச்சத்தாலும்
சுதந்திரம் வரப்போவதில்லை

அடுத்தவனுக்குள்ளது போலவே
எனக்கும் உரிமையுண்டு
என்னிரு கால்களில் நிற்கவும்
எனக்கென நிலத்தினைச் சொந்தமாக்கவும்

“அவை அவை போக்கில் போகட்டும்.
நாளை என்பது இன்னொரு நாளே”
மனிதர் சொல்லக் கேட்டு மிகவும்
மனம் களைத்துவிடுகிறேன்.

மேலும் படிக்க ...

அடையாள , அரசியலைப் பேசும் மாரி செல்வராஜின் மாமன்னன்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
20 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மாமன்னன் திரைப்படத்தைத் தமிழ்த்திரையுலகின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக நான் இனங்காண்கின்றேன். முக்கிய காரணம் இயக்குநர் மாரி செல்வராஜ் இத்திரைப்படத்தில் கையாண்டுள்ள கரு.அதனை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள்.  வசனங்கள். நடிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள்.

கலைஞரின் பராசக்தி வசனங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றனவோ அவ்விதம் இத்திரைப்படத்தின் சில காட்சிகள், வசனங்கள் நிலைத்து நிற்கப்போகின்றன. உதாரணங்களாகப் பின்வருவனற்றைக் கூறலாம்:

1. தகப்பன் வடிவேலைப் பார்த்து மகன் உதயநிதி கதிரையில் உட்காரச் சொல்வது. அக்காட்சியில் அற்புதமாக நடித்திருப்பார் வடிவேலு. அவரது உடல் மொழி சிறப்பாக வெளிப்பட்டிருந்தது.  கடைசியில் மகனின்  உத்தரவுக்கமைய கதிரையில் அமர்வதும், எழாமல் இருக்கும்போது காட்டும் முகபாவங்களும் மறக்க முடியாதவை.

மேலும் இக்காட்சி முக்கியமானதொரு குறியீட்டுக் காட்சி. சமூக அடக்குமுறைகளுக்கெதிராகப் போராட வேண்டுமென்பதை, அடங்கி விடக்கூடாதென்பதை எடுத்துக்காட்டும் மிகவும் வலிமையான குறியீட்டுக் காட்சி.  சமூக அநீதிகளுக்குள் அடங்கி, ஒடுங்கிக் கிடக்கும் எவரையும் அதனை எதிர்கொண்டு , எதிர்த்துப்போராட வேண்டுமென்பதை எடுத்துக்காட்டும் மிகவும் வலிமையான குறியீடாகவே இக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் மிகவும் முக்கியமானது.

2. அச்சமயத்தில் வில்லனாக வரும் Fahadh Faasil கூறும் வசனம் : 'நான் அவரை உட்காரச்சொன்னது என் அடையாளம்.  உன்னை உட்காரச் சொன்னது என் அரசியல்'  வசனகர்த்தாவை நினைவில் வைத்திருக்கச் செய்யும் வசனமிது.  Fahadh Faasil சிறந்த நடிகர். பல்வேறு விருதுகளை நடிப்புக்காகப் பெற்ற நடிகர். அவரை நன்கு பாவித்திருக்கின்றார் இயக்குநர் இத்திரைப்படத்தில்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “நவீன தமிழ் ஆய்முறையியலில் ஜீ. யு. போப் அவர்களின் சிந்தனையின் விளைபயனும் விசைப்பயனும்”

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
20 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting  | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

மரபைக் கட்டுடைத்து ஆன்மீக வழியில் சமூக விடுதலையை நாடிய இராமலிங்கரின் சிந்தனைக் கருத்தியல்! - முனைவர் செ.சௌந்தரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், டாக்டர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை –

விவரங்கள்
- முனைவர் செ.சௌந்தரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், டாக்டர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை –
ஆய்வு
18 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையும் கிறிஸ்தவ மிஷனரிகளின் தீவிரச் செயல்பாடுகளும் ஒன்றுசேர்ந்து சைவ, வைணவ மதத்தின் சனாதன அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கின. இந்தக் காலக்கட்டத்தில் நுழைந்த நவீனக்கல்வி முறைகளால் நகரங்கள் முன்னேற்றமடைந்தாலும் சாதி, சமய அடிப்படைகளை மீறிய சிந்தனைக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. மாறாகச் சமய அடிப்படையிலான சமூக முன்னேற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடிந்தது. அதேநேரத்தில் காலனியத்தின் எதிர்வினைகள் காரணமாகச் சீர்த்திருத்த மரபுகள், இயக்கங்கள் போன்றவை பல புதிய போக்குகளையும் கொள்கைகளையும் தம்மிலிருந்து உருமாற்றிக் கொண்டன. அந்த வரிசையில் மரபைக் கட்டுடைத்து ஆன்மீக வழியில் சன்மார்க்கத்தையும் சமதர்மத்தையும் தேடியவராக வள்ளலார் காட்சியளிக்கிறார்.

பல தனிநபர் இயக்கங்களும், ஆசாரச் சீர்திருத்த முயற்சிகளும் தங்களின் சித்தாந்தங்களின் வழியாகச் சமூக மீட்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்த சூழலில் தோன்றியவர்தான் இராமலிங்கனார். அவர் எந்தவிதச் செல்வாக்கும் இன்றிச் சமய ஆதிக்கத்துக்கு எதிராக ஒரு புதிய ஆன்மீக வழிமுறையே கட்டமைத்து இருக்கிறார். அவர் தான் வாழ்ந்த காலத்தில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட நபரில்லை என்றாலும் சமயவாதிகளாலும் மிஷனரிமார்களாலும் விமர்சனத்துக்கு ஆளானார். ஆத்திக மரபில் தோன்றி சக ஆத்திகர்களுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று பழித்தூற்றப்பட்டார்.

மேலும் படிக்க ...

கானல் நீர் - முனைவர் சி. இரகு, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, மெட்டாலா, இராசிபுரம். நாமக்கல் மாவட்டம். -

விவரங்கள்
- முனைவர் சி. இரகு, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, மெட்டாலா, இராசிபுரம். நாமக்கல் மாவட்டம். -
கவிதை
18 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என்ன இது
ரொம்ப நீளமாவே
போய்க்கொண்டு இருக்கு.

என்ன ஏதும் தெரியலயே
அட நல்லா
கண்ணதிறந்து பாருப்பா
அது ரோடு.

என்னப்பா சொல்லுற
ரோடா அப்படினா
என்ன..?

பஸ்சு காருலாம் போகுமே
அந்த ரோடா.
ய்யோவ்  ஒன்னுமே
தெரியாத மாதிரி நடிக்காதய்யா
ரோட்டு நடுவுல நின்னுகிட்டு
என்ன குறும்பு தனத்த பாரு.

எவனவது உன்மேல
ஏத்திட்டு போய்யிட போறான்
அப்புறம் அவ்வளவுதான்
என்மேலயாவது
ஏத்திட்டு போய்டுவானுங்க.
நான் அவன்மேலே
ஏறிவிட்டு போய்டுவேன்.

மேலும் படிக்க ...

நீர்கொழும்பில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிகழ்ச்சி! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
18 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் பிறந்தநாள் ஜூலை 13. அவரைப் பதிவுகளும், அதன் படைப்பாளிகள், வாசகர்களும் வாழ்த்துகின்றார்கள்.  அவரது கலை, இலக்கியச் சேவையுடன், சமுக சேவையும் முக்கியமானது. அவரது தன்னலமற்ற சமூக,இலக்கியப் பங்களிப்பு போற்றுதற்குரியது. வாழ்த்துகள். - பதிவுகள்.காம் -


அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப் பெற்றுவரும்  நீர்கொழும்பு விஜயரத்தினம் மத்திய  கல்லூரி மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் தகவல் அமர்வும் அண்மையில் ( கடந்த 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ) கல்லூரியின் நூல் நிலைய மண்டபத்தில், அதிபர் திரு. ந. புவனேஸ்வரராஜாவின் தலைமையில் நடைபெற்றது. கடந்த பலவருடங்களாக,  கல்வி நிதியத்தின் உதவியைப் பெற்றுவரும் மாணவர்களுக்கான இந்த ஒன்றுகூடலில் இம்முறை நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியும்,  ஆசிரியர்களும் உதவி பெறும் மாணவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.

கல்வி நிதியத்தின் தொடர்பாளர் ஆசிரியை செல்வி லோஜினியின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சி, இக்கல்லூரியின் முதலாவது தலைமை ஆசிரியர் ( அமரர் ) பண்டிதர் க. மயில்வாகனன் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மங்கள விளக்கேற்றப்பட்டு தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் க.நவத்தின் 'எனினும் நான் எழுகின்றேன்' மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுப்பைப் பற்றிய எண்ணப்பதிவுகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
17 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

`

அண்மையில் நான் வாசித்த நூல்களில் என் கவனத்தை ஈர்த்த நூல்களிலொன்று ஒரு கவிதை நூல்.  எழுத்தாளர் க.நவம் மொழிபெயர்த்து 'நான்காவது பரிமாணம்' வெளியீடாகக்  கைக்கடக்கமான அளவில் வெளியாகியுள்ள கவிதைத்தொகுதியான 'எனினும் நான் எழுகின்றேன்'.  நோபல் பரிசு பெற்ற கவிஞர்களான பப்லோ நெருடா (சில் நாட்டுக் கவிஞன்), 'மாயா ஆஞ்ஜெலோ, அமெரிக்கக் கவிஞரான லாங்ஸ்ரன் ஹியூஸ், பாலஸ்தீனியக் கவிஞரான சாலா ஓமார் உட்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் எழுதிய கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத்தொகுப்பு.  மிகவும் சிறப்பான தேர்வு தொகுப்பின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றது.

மேலே செல்வதற்கு முன் சில வார்த்தைகள்: நூலிலுள்ள கவிஞர்கள் பற்றிய ஓரிரு வரிக் குறிப்புகள் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும். கவிதைகளுடன் கவிஞர்கள் பற்றிய அறிமுகத்துடன் , அவர்களைப் பற்றிய மேலதிகத்தேடல்களுக்கும் அது நிச்சயம் வழி வகுத்திருக்குமென்பதென் திடமான நம்பிக்கை. இதன் அடுத்த  பதிப்பில் நிச்சயம் நவம் இதனை நிறைவேற்றுவாரென்று  எதிர்பார்ப்போம்.  நூலின் அடுத்த முக்கியமான அம்சம்: மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலக் கவிதைகளையும் தொகுப்பு உள்ளடக்கியிருப்பது. அண்மைக்காலமாக இவ்விதமாக மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்புகள் வெளிவரத் தொடங்கியிருப்பதை அவதானிக்கிறேன். ஆரோக்கியமான விடயமிது. ஏனைய மொழிபெயர்ப்புக் கவிதைகளை வெளியிடும் பதிப்பகங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க ...

வாழ்த்துகள்: முனைவர் சுனில் ஜோகியின் 'ஓணி' சிறுகதைத்தொகுப்பு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
17 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் முனைவர் சுனில் ஜோகி பதிவுகள் இணைய இதழில் எழுதிய ஆதிக்குடிவாசிகளான படகர்களை மையமாக வைத்து எழுதிய சிறுகதைகள் தற்போது 'ஓணி ' என்னும் தலைப்பில் சிறுகதைத்தொகுப்பாக வெளியாகியுள்ளது.  தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமல்ல மானுடவியல் துறைக்கும்  வளம் சேர்க்கும் கதைகள் இவை. நூலின் அட்டையில் கதைகள் பற்றிய எனது வாழ்த்துக் குறிப்பையும் பிரசுரித்துள்ளார்.

சுனில் ஜோகி அவர்கள் இது பற்றி அனுப்பிய மின்னஞ்சலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.  முனைவர் சுனில் ஜோகியின் முக்கியத்துவம் மிக்க இச்சிறுகதைகளுக்குக் களமாக இருந்ததில் பதிவுகள் மகிழ்ச்சி அடைகின்றது.  நூலை தமிழகத்திலுள்ள 'மலர் புக்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  நூலைப் பெற முனைவர் சுனில் ஜோகியுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

மேலும் படிக்க ...

கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் தமிழ் அறிஞர் ஜி.யு.போப்புக்குச் சிலை!

விவரங்கள்
- ஊருலாத்தி -
இலக்கியம்
16 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் பிறந்தவர் தமிழ் அறிஞர் ஜி. யு. போப் (George Uglow Pope). கிறிஸ்தவ சமய போதகரான இவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாகத் தமிழுக்குச் சேவை புரிந்த இவருக்கு மெரினா கடற்கரையில் சிலை வைத்துக் கெளரவித்தது தமிழக அரசு. ஜூலை 15 அன்று இவருக்கு அவரது பிறந்த இடத்தில் நினைவுச்சின்னம் எழுப்பியுள்ளது கனடாத்தமிழர் பேரவை. தகவலையும், இப்புகைப்படத்தையும் பகிர்ந்துகொண்ட நண்பர் வரதீஸ்வரனுக்கு நன்றி.
மேலும் படிக்க ...

நோர்வே பயணத்தொடர் (4) : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
16 ஜூலை 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - தாயொருவர் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் சிற்பம் -

Fløyen மலையின் அழகுடன் எங்களின் அடுத்த நாள் ஆரம்பமானது. மலையின் இயற்கை அழகைக் கண்குளிரக் கண்டு களித்துவிட்டு, University Museum of Bergenக்குள் காலடியெடுத்து வைத்த எங்களை வாசலிலிருந்த சிற்பம் அதிசயிக்க வைத்தது. தாயொருவர் தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் காட்சி மிகத் தத்ரூபமாக அங்கு வடிக்கப்பட்டிருந்தது. அந்தத் தாயின் பார்வையிலும் முகத்திலும் அத்தனை பரிவு, அன்பு, கரிசனை, பெருமை என உணர்ச்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பால்குடித்துக்கொண்டிருப்பது போலவிருந்த அந்தப் பச்சிளங் குழந்தையும் அவ்வாறே நிஜம்போல அழகாயிருந்தது. மனித வாழ்வின் இயற்கையான ஒரு தருணத்தைக் காட்டும். அற்புதமான அந்த சிருஷ்டிப்பைவிட்டு என் கண்களை அகற்றுவது சிரமமாகவிருந்தது. அதன் அழகைப் படத்துக்குள் அடக்கலாமா எனப் பல கோணங்களில் நின்று முயற்சித்துப் பார்த்தேன், இருப்பினும் சிலையிலிருந்த உயிர்ப்பைப் படங்களில் கொண்டுவர முடியவில்லை. மானுடவியல், தொல்லியல், தாவரவியல், புவியியல், விலங்கியல், எனப் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்பான கலை மற்றும் கலாசார வரலாறுகளைக் கூறும் இவ்வாறான வியத்தக்க பொருள்கள் நிறைந்திருந்த அந்த அருங்காட்சியகத்தைச் சூழ்ந்திருந்த தாவரவியல் பூங்காவும் செழிப்பும் அழகும் மிகுந்ததாக அமைந்திருந்தது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. பயணத்தொடர்: வட இந்தியப் பயணம் (1) - - நோயல் நடேசன் - -
  2. சமீபத்திய சில சிறுபான்மையினர் மொழிப்படங்கள் : - சுப்ரபாரதிமணியன் -
  3. வாசிப்பு அனுபவம்: ஆசி கந்தராஜாவின் 'அகதியின் பேர்ளின் வாசல்' - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  4. சிறுகதை : எலிப்பொறி - சுப்ரபாரதிமணியன் -
  5. அஞ்சலி: செக் நாவலாசிரியர் மிலன் குந்தேரா மறைவு! புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை! – எழுத்தாளர் மிலன் குந்தேரா - நேர்காணல்: ஜோர்டன் எல்கிராப்லி, தமிழில்: ராம் முரளி
  6. இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வடபகுதி நிகழ்ச்சிகளில் மாணவர் ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும்! - முருகபூபதி -
  7. மறக்க முடியாத அராலி இந்துக் கல்லூரி! - வ.ந.கிரிதரன் -
  8. பாரதியாரின் 'நடிப்புச் சுதேசிகள்' பற்றி வித்துவான் வேந்தனார்! - வேந்தனார் இளஞ்சேய் -
  9. ஒட்டாத உறவுகள் ! -ஸ்ரீராம் விக்னேஷ்-
  10. சிறுகதை: சந்தியா அப்பு! - செ.டானியல் ஜீவா -
  11. நோர்வே பயணத்தொடர் : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே (3) - ஶ்ரீரஞ்சனி -
  12. ”புலம்பெயர்த் தமிழர்களின் இணையத் தமிழ்ப் பங்களிப்பு” - முனைவர் செ சு நா சந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர், வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி.
  13. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கலாசூரி சிவகுருநாதன் நினைவு நூல் வெளியீடு! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -
  14. யாழ் அராலி இந்துக்கல்லூரி நூற்றாண்டு விழா (1923 - 2023) - தகவல்: குகதாசன் குகநேசன் -
பக்கம் 44 / 104
  • முதல்
  • முந்தைய
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • அடுத்த
  • கடைசி