பதிவுகள் முகப்பு

'டொரோண்டோ'வில் எழுத்தாளர் சிவசங்கரி.... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதினைத் தனது 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்னும் தொகுப்புகளுக்காகப் பெற 'டொரோண்டோ' வந்திருந்தார் எழுத்தாளர் சிவசங்கரி.

இவரது எழுத்துகள் எழுபதுகளில், எண்பதுகளில் தமிழக வெகுடன இதழ்களை ஆக்கிரமித்திருந்தன. இவரது எழுத்து நடை அதுவரை எழுதி வந்த பெண் எழுத்தாளர்களின் எழுத்து நடையிலிருந்து சிறிது வேறுபட்டது. ஆண், பெண்ணுக்கிடையிலான  உறவினை, அன்பினை, அந்நியோன்யத்தை வெளிப்படுத்தும் எழுத்து. 'இந்தும்மா' போன்ற அன்பொழுக இவரது நாயகர்கள் தம் இதயங்க கவர்ந்த காதலிகள், மனைவிகளை அதிகம் அழைப்பதை இவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அதன் பாதிப்பை இந்துமதி போன்ற எழுத்தாளர்களிடம் காணலாம். அதிகமாகத் தமிங்கிலிஸ் பிரயோகங்களை இவரது எழுத்தில் காணலாம்.

இவரது நாவல்கள் பல தமிழ்த்திரைப்படங்களாக வெளியாகியுள்ளன. இவரது நாவல்களை அதிகம் வாசிக்காவிட்டாலும் கேள்விப்பட்டிருக்கின்றேன். 47 நாட்கள், ஒரு மனிதனின் கதை , நண்டு போன்ற இவரது கதைகளின் திரைப்பட வடிவங்களைப் பார்த்திருக்கின்றேன்.

என் பால்யப் பருவத்தில் விகடனில் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியான சிறு நாவல் 'எதற்காக?'

அந்நாவல் தொடராக வெளியானபோது வாசித்துள்ளேன். என் பால்ய காலத்து அழியாத கோலங்களில் அந்நாவலும் ஒன்று.  அதன் கரு   வாசிப்பவர் மனங்களைக் கடுமையாகப் பாதிக்கும். அது என்னை ஏன் பாதித்தது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.  இந்த மானுட இருப்பு பற்றிய  தேடல் எனக்கு எப்போதுமுண்டு. ஏன் எதற்காக உயிர்கள் ஒன்றையொன்று கொன்று தின்னும் வகையில் படைக்கப்பட்டுள்ளன?  எதற்காக எதிர்பாராத விளைவுகள் உயிர்களின் இருப்பில் ஏற்படுகின்றன? இவரது 'எதற்காக' என்னும் நாவலும் இப்பிரச்சினையை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ளதால்தான் முதல் வாசிப்பிலிருந்து இன்று வரை நினைவில் நிற்கிறது. காதல் மிகுந்த , ஒருவர் மீது ஒருவர் அன்பைக் கொட்டி வாழ்ந்து வரும் தம்பதிக்குக்  குழந்தை பிறக்கின்றது. இன்பத்தில் வளம் , நலத்துடன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாள் அந்தப்பெண் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கையில் மின்  ஒழுக்கினால் தீண்டப்பட்டு கருகி இறந்து விடுகின்றாள். எதற்காக இப்படி நடக்கின்றது என்று  கேட்கும் நாவலாசிரியை கடவுளிடமும் அதே கேள்வியைக் கேட்கின்றார் 'எதற்காக?'  வாசிக்கும் ஓவ்வொருவரும் கேட்கும் கேள்வி 'எதற்காக?'  

மேலும் படிக்க ...

வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (2) - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
ஆய்வு
06 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

3.2 இலக்கிய நாடகங்கள் : கதையும் கதைப்பண்புகளும்

சங்க இலக்கியம் முதலானவற்றையும் அவ்விலக்கியங்களில் வருகின்ற கதாபாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்படுகின்ற நாடகங்களை இலக்கிய நாடகங்கள் என்று அழைக்கலாம். நடுகல் பேசும், வாய்மை காத்த மன்னன், வீரகாவியம், வீராதி வீரன் இந்திரஜித், சதுரங்க வேட்டை, இராமவீரம், சத்தியவேள்வி (பீஷ்மரின் தியாகம்), வள்ளுவர் பொதுமை, இளங்கோவின் இலட்சியம், நாவுக்கரசரின் ஞானம் பக்தி தொண்டு ஆகியவற்றை இந்த அடிப்படையில் நோக்கலாம். இவற்றில் இதிகாசக் கதைமரபுகளுடன் தொடர்புபட்ட இராமாயணம், மகாபாரதம் முதலான கதைகள் உள்ளனவெனினும் அவை ஆய்வு வசதிக்காக இலக்கியப் பிரதிகள் என்ற வகைப்பாட்டிலேயே நோக்கப்பட்டுள்ளன.

3.2.1 இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்ட பிரதிகள்

நடுகல் பேசும், வீராதிவீரன் இந்திரஜித், இராம வீரம் ஆகிய மூன்றையும் இராமாயணக் கதைகளின் அடிப்படையில் நோக்குவோம். நடுகல் பேசும் என்பது மகுடபங்கம் தொகுப்பில் உள்ளது. இராமனுடன் போரிட்டு மாண்ட இராவணனின் வீரம் இந்நாடகத்தில் சொல்லப்படுகிறது.

கடலுக்குச் சென்ற மீனவர்கள் தங்கள் வலையில் அகப்பட்ட பெரியதொரு இரும்புப் பெட்டியைத் திறந்து பார்க்கிறார்கள். அப்பெட்டியில் ஏட்டுச் சுவடி அகப்படுகின்றது. அதை ஒரு பண்டிதரிடம் எடுத்துச் சென்று அதில் இருப்பது என்னவென அறிந்து கொள்கிறார்கள்.

மேலும் படிக்க ...

நூல் வெளியீடு: 54 சமகால ஆங்கிலக் கவிதைகளும் எழுத்தாளர் க.நவம் மொழியாக்கம் செய்த அவற்றிற்கான தமிழ்க் கவிதைகளும் அடங்கிய 'எனினும் நான் எழுதுகிறேன்'

விவரங்கள்
- க.நவம் -
நிகழ்வுகள்
06 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு முறை அழுத்தவும்.

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “காலத்தைக் கடந்து நிற்கும் சிலப்பதிகாரம்”

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
06 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு முறை அழுத்தவும்.

Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

குழந்தைகளை மகிழ்விக்கும் டைனஸோக்களின் உலகம்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
05 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டைனஸோக்கள் இப்போது உயிரோடு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் வரலாறு தெரிந்தவர்கள் அந்த டைனஸோக்கள் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்கள். அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் நவீன தொழில் நுட்ப உதவியுடன் அப்படி ஒரு உலகத்தை இப்போது உருவாக்கியிருக்கிறார்கள். சென்ற வாரம் டைனஸோ பற்றிக் கனடாவில் நடந்ததொரு காட்சிக்குச் சென்று பார்த்ததை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

டைனஸோக்கள் எப்படி இருந்திருக்கும் என்று பார்க்க விரும்பினால் கனடா, மிஸசாகாவில் இப்பொழுது நடைபெறும் கண்காட்சிச் சாலைக்குச் சென்றால் அங்கு பார்க்க முடியும். ((At Square One in Mississauga, located at 199 Rathburn Rd. W. Canada.) நவீன தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக பல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த டைனஸோக்களை அவை எப்படி இருந்திருக்கும் என்று ஓரளவு கற்பனையில் கணித்து ரோபோக்கள் வடிவில் உருவாக்கியிருக்கிறார்கள். சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கும் இப்படி ஒரு காட்சியைப் பார்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. ஏற்கனவே லண்டன், பாரிஸ், மட்ரிட், அமெரிக்காவில் டென்வர், ரெக்ஸாஸ், கொலராடோ, டலஸ் போன்ற இடங்களில் பல பார்வையாளர்கனைக் கவர்ந்த கண்காட்சியாக இது இருக்கின்றது.

மேலும் படிக்க ...

சிறுகதை: எங்கம்மா....! - ஸ்ரீராம் விக்னேஷ்-

விவரங்கள்
- ஸ்ரீராம் விக்னேஷ்-
சிறுகதை
05 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எங்கம்மா, திருநெல்வேலிக்கு வந்து, இந்த வீட்டை வாங்கிறப்போ எனக்கு பத்து வயசு. ஒத்தப்புள்ள நானு. அப்பா ஏவகூடவோ போயி ரெண்டு வருஷமாச்சு.

இப்போ வயசு நாப்பத்தைஞ்சு.... தொழில் கொத்தனார்.

எனக்கும் ஒத்தைப் பையன். ஒழுங்கா பத்தாம் கிளாசுகூட முடிக்கல. ஆத்தாக்காரி ஓவர் செல்லம். நான் வாயே தொறக்க முடியாது.

என்னை ஏசினாலும் பரவாயில்லை. ஆனால், அப்பப்போ எங்கம்மாவ வையிறதுதான் எனக்கு வருத்தம்.

. தனியா இருக்கிற நேரத்தில எங்கம்மா சொல்லும்....

“உங்கப்பன்கிட்ட .... நான் பட்ட கஷ்டத்த உன் பொண்டாட்டி படவேணாம்.... உன்னைய புடிச்சுப்போயிதான் ஓங்கிட்ட வந்தாளு..... அத எப்பவுமே நெனைப்பில வெச்சுக்க....”

எங்கம்மாவுக்கும் இப்போ எழுவது நெருங்கிகிட்டிருக்கு. இருந்தாலும், கண்ணாடி போடாமலே பேப்பர் படிக்கும்.... கையில கம்புவெச்சு அழுத்தாமலே வெறுசா நடக்கும்....

யாராச்சும் டூரிஸ்கைடுக வெளியூர் கோயிலுக்கெல்லாம் போறப்போ, என்னதான் பிரச்சினையிருந்தாலும், ஏங்கிட்ட வந்து, துட்டுக்குடுலேன்னு சண்டைபோட்டு புடுங்கிகிட்டு தானும் டூர் போயிடும்.

. பக்கத்து ஊர்ல, முதியோர் காப்பகம் ஒண்ணு இருக்கு. மேனேஜர் பொறுப்பில இருக்கிறவரு ஞாயித்துக் கெழமையில நான் வீட்டில இருக்கிறப்போ வந்து பேசீட்டுத்தான் போவாரு. நேர்மையாவும் பழகுவாரு.

“ஏல மேனேஜர் தம்பி.... உங்க காப்பகத்தில சேருறதிண்ணா, துட்டுக் குடுக்கணுமா.... இல்லே பிரீயா.....”

எங்கம்மா கேட்டிச்சு.

எனக்கு கொஞ்சம் கடுப்பாகிரிச்சு.

மேலும் படிக்க ...

ஆய்வு: வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப் பிரதிகள்! (1) - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
ஆய்வு
05 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1.1 அறிமுகம்

மனித வாழ்வு முழுவதும் ஏற்றமும் இறக்கமும் விரவிக் கிடக்கின்றன. அவ்வாழ்வில் ஏற்படும் சோதனைகளால் மனிதன் துவண்டு போகின்றான். செய்வதறியாது சோர்ந்து போகின்றான். அச்சோர்வை நீக்க ஆடலும் பாடலும் கேளிக்கையும் கூத்தும் தோற்றம் பெற்றன. “ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது அங்கே ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது” என்ற அழகான பாடல் வரிகள்கூட இவற்றையே மெய்ப்பிக்கின்றன. கிராமப்புற மக்கள் தமது ஓய்வு நேரத்தைக் கலைவாழ்வில் செலவழித்தனர். அவ்வேளைகளில் தமக்குத் தெரிந்த ஆற்றல்களைப் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறுதான் கலைச் செயற்பாடுகள் தோற்றம் பெற்றன.

நாடகக் கலையும் இன்பமூட்டக்கூடிய ஒரு கலைதான். மக்களின் வாழ்க்கை முறையிலும் வழிபாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் எவ்வாறு மண்ணின் வேர் பிணைந்திருக்கிறதோ அவ்வாறே நாடகக் கலையாலும் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் வரலாற்றையும் தலைமுறை தலைமுறையாகக் கடத்த முடிந்திருக்கிறது.

கடவுள் வழிபாட்டில், காதலில், பிரிவில், வெற்றியில், தோல்வியில், மொழியில், இலக்கியத்தில் என இன்னோரன்ன அம்சங்களுடன் இந்தப்பண்பு இணைந்திருக்கின்றது. ஒரு சமூகத்தின் பண்பாட்டை அறிய வேண்டுமாயின் அவர்தம் கலைகளைச் சீர்தூக்கிப் பார்த்தாலே கண்டுகொள்ளலாம் என்று கூறுவர். ஆதிகால மனிதர்களின் குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பித்த இந்தப் பண்பு வரலாறு முழுவதும் நீண்டிருக்கிறது.

நாடகக் கலையானது பாராம்பரியமும் பழமையும் மிக்கதொரு கலையாக இருக்கிறது. அது கூத்துக் கலையாக ஆரம்பித்து நாடகமாகி அரங்கியற் கலையாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது. மக்களின் சிந்தனையைத் தூண்டவும், அவர்களை ஒரே கொள்கை நோக்கித் திரட்டவும் இதனால் முடிந்திருக்கிறது. இன்று ஒருவருக்குத் தொழில் வாய்ப்பைத் தேடிக் கொடுக்கின்ற கற்கைத் துறையாகவும் உயர்ந்திருக்கிறது. இவ்வாறான கலைத்துறையில் தன்னை அர்ப்பணித்த வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகம் சார்ந்த பணிகளை மதிப்பிடுவதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.

மேலும் படிக்க ...

நேற்று 'டொராண்டோ'வில் நடந்த தமிழ் இலக்கியத் தோட்ட நிகழ்வு! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தால் 2001இல் ஸ்தாபிக்கப்பட்ட 'தமிழ் இலக்கியத் தோட்டம்' கனடிய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளை. 9 இயக்குநர்களையும், இரு போசகர்களையும் உள்ளடக்கிய இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக எழுத்தாளரும், சட்டத்தரணியுமான மனுவல் ஜேசுதாசனிருக்கின்றார். காரியதரிசியாக எழுத்தாளர் அ.முத்துலிங்கமும், பொருளாளராக எழுத்தாளர் என்.கே.மகாலிங்கமும் இருக்கின்றனர்.

நிகழ்வில் கலை, இலக்கியவாதிகள் பலரையும் காண முடிந்தது. எழுத்தாளர் முருகபூபதி பதிவுகள் இணைய இதழில் தொடர்ச்சியாக எழுதுபவர், அவரை இப்பொழுதுதான் முதன் முறையாகச் சந்தித்தேன்.   எழுத்தாளர் பாவண்ணனுடன் சில நிமிடங்களே உரையாட  முடிந்தது. அவர் என் மதிப்புக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர். அவர் கணையாழியில் எழுதிய 'குறி' சிறுகதை எனக்குப் பிடித்த சிறுகதைகளிலொன்று. அது பற்றி கணையாழிக்கு வாசகர் கடிதமொன்றும் எழுதியுள்ளேன். பதிவுகளிலும் பாவண்ணனின் 'போர்க்களம்'  என்னும் சிறுகதை வெளியாகியுள்ளது.

நிகழ்வில் எழுத்தாளர்கள் பாவண்ணன், என்.கே.மகாலிங்கம், பேராசிரியர் நா.சுப்பிரமணியன் தம்பதியர், ராஜாஜி ராஜகோபாலன் (மணற்காடர்), குரு அரவிந்தன், அகணி சுரேஷ், கவிஞர் புகாரி, நடராஜா முரளிதரன், 'உதயன்' லோகேந்திரலிங்கம்,  பா.அ.ஜயகரன், கனடா மூர்த்தி, சாம்ராஜ், காலம் செல்வம், தேவகாந்தன், ஶ்ரீரஞ்சனி, சுமதி ரூபன், டானியல் ஜீவா, சட்டத்தரணியும் முன்னாள் ஊடகவியலாளருமான பாலச்சந்திரன் முத்தையா, 'வெண்மேரி ' அறக்கட்டளை அநுரா , கலை இலக்கிய ஆர்வலர் முருகதாஸ், 'அகரம்தமிழ்' ஸ்தாபகர் (பெயர் உடனடியாக நினைவுக்கு வரவில்லை) ஆகியோரைச் சந்திக்க முடிந்தது.  நிகழ்வில் 'டொரோண்டோ'வின் வர்த்தக,கலை, இலக்கிய ஆளுமைகள் பலரைக் காண முடிந்தது.

மேலும் படிக்க ...

பதிவுகள்.காம் பதிப்புத்துறையில்......

விவரங்கள்
Administrator
வ.ந.கிரிதரன் பக்கம்
05 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பு விரைவில் வெளிவரவுள்ளது.  52  கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.  'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் இயங்கும் பதிவுகள்.காம் அச்சுருவில் வெளியிடும் முதல் நூலிது. சிறப்பாக வடிவமைத்துள்ளார்கள் காலச்சுவடு பதிப்பகத்தினர். எதிர்காலத்தில் மேலும் பல நூல்கள் பதிவுகள்.காம் வெளியீடுகளாக வெளிவர இது வழி சமைத்திருக்கின்றது.

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: இலக்கியவாதிகளும் இடதுசாரிகளும் நேசித்த பாக்கியம் பூபாலசிங்கம் மறைந்தார்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
03 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாணத்தில் முன்னர் அடிக்கடி தீக்குளித்தாலும் ஃபீனிக்‌ஸ் பறவையைப்போன்று உயிர்த்தெழுந்த அறிவாலயம்தான் பூபாலசிங்கம் புத்தகசாலை. அதன் நிறுவனர் அமரர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி , லண்டனிலிருக்கும் தொலைக்காட்சி – வானொலி ஊடகவியலாளரான  நண்பர் எஸ். கே. ராஜெனிடமிருந்து குறுச்செய்தியாக வந்தது. அச்செய்தியில் இடம்பெற்ற அன்னாரின் படத்தின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. பூபாலசிங்கம் தம்பதியரின் புதல்வன் ஶ்ரீதரசிங்கை தொடர்புகொண்டு, எனது ஆழ்ந்த இரங்கலை கூறியபோது, அக்கதையை நினைவுபடுத்தி ஊர்ஜிதப்படுத்தினார்.

2003 ஆம் ஆண்டு எமது மூத்த எழுத்தாளர் வரதர் அவர்களுக்கு சாகித்திய ரத்தினா விருது கிடைத்த சமயத்தில் அவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, வெள்ளவத்தையில் ஶ்ரீதரசிங் வீட்டில் தேநீர் விருந்துபசாரத்துடன் நடந்தது. அந்நிகழ்வுக்கு நான் சென்றிருந்தபோது,  பாக்கியம் அம்மாவை அழைத்து, அவரது கணவர் பூபாலசிங்கம் அவர்களின் படத்துக்கு அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டேன். அந்தப்படத்தையே நான் ராஜெனின் குறிப்பிலிருந்து பார்த்து, பாக்கியம் அம்மாவுக்கு மனதிற்குள் அஞ்சலி செலுத்தினேன்.

எமது தமிழ் சமூகத்தில் பொதுவாழ்க்கையில் அதிலும் இடதுசாரி முகாமிலிருந்து இயங்கும் எந்தவொரு ஆண்மகனுக்கும் வாய்க்கும் மனைவி சகிப்புத்தன்மையும் பொறுமையும் நிதானமும் மிக்கவராக இருக்கவேண்டும்.

வடபுலத்தில் நயினா தீவை பூர்வீகமாகக்கொண்டிருந்தவர்கள் பூபாலசிங்கம் தம்பதியர். நயினை நாகபூஷணி அம்பாளை குலதெய்வமாக போற்றியவர்கள். இவர்களின் குடும்பம் அந்த ஆலயத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், குடும்பத்தலைவர் பூபாலசிங்கம்,  இடதுசாரி இயக்கத்திலும் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வந்திருப்பவர். தங்களுக்கெல்லாம் இலக்கிய நூல்களை இலவசமாகத் தந்து படிக்கவைத்து எழுத்தாளராக்கிவிட்டவர்தான் புத்தகக் கடை பூபாலசிங்கம் என்று மல்லிகை ஜீவா அடிக்கடி சொல்லி வந்திருப்பதுடன் தனது வாழ்க்கை சரித நூலிலும் பதிவுசெய்துள்ளார்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் என்.சரவணனின் 'யாழ் நூலக எரிப்பு' பற்றிய 'தாய் வீடு' கட்டுரை பற்றிய முகநூல் பதிவும் , அதற்கான அவரது எதிர்வினையும்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
03 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் என்.சரவணன் அவர்கள் ஜூன் மாத 'தாய்வீடு' பத்திரிகையில் யாழ் நூலக எரிப்புப் பற்றி  ஒரு கட்டுரை 'யாழ் நூலக எரிப்பில் ரணில் விக்கிரமசிங்க' என்னும் தலைப்பில்  எழுதியுள்ளார்.  அதில் அவர் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது மே 31 ,1981 என்றே உறுதியாக எழுதியுள்ளார். ஆய்வாளரான அவரது இந்த முடிவு ஆச்சரியமளிக்கிறது.

அப்போது யாழ் நூலகராகவிருந்த ரூபவதி நடராஜா தனது 'யாழ்பபாணப் பொது நூலகம் அன்றும் இன்றும் ' என்னும்  நூலில் தெளிவாக நூலகம் எரிக்கப்பட்டது ஜுன் 1 இரவு என்றே குறிப்பிட்டிருக்கின்றார். 20.6.1981 வெளியான ஈழநாடு பத்திரிகைச் செய்தியிலும் யாழ் மாநகரசபை ஆணையாளர் சிவஞானமும் அவ்விதமே கூறுகின்றார். பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அமிர்தலிங்கம் அவர்களும் அவ்விதமே குறிப்பிடுகின்றார்.  இந்நிலையில் சரவணன் அவர்கள் நூலகம் எரிக்கப்பட்டது மே 31 என்று கூறும்போது ஏன் மேற்படி தகவல்கள் எல்லாம் தவறானவை என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ஏன்?

மேலும் படிக்க ...

இலங்கைப் பயணக் கதையினை எழுதுவது எப்படி ? - அமரர் கல்கி, மணியன், சாரு நிவேதிதா, அராத்து, அ.மார்க்ஸ், சரவணன் மாணிக்கவாசகன் மற்றும் புலம்பெயர் இலக்கிய ஆளுமைகள் எழுதிய இலங்கைப் பயணக் குறிப்புக்கள் தொடர்பாக --- - வாகீசன் -

விவரங்கள்
- வாகீசன் -
வாகீசன்
03 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது புத்தக அடுக்குகளில் இருந்து அமரர் கல்கி எழுதிய 'இலங்கைப் பயணக் கதை' நூல் எனது கண்ணில் பட்டது. இதனை நான் ஒரு தற்செயலான நிகழ்வாகக் கருதவில்லை. இன்று தமிழகத்தில் இருந்தும் மேற்குலக நாடுகளில் இருந்தும் புற்றீசல்கள் போல் இலங்கை நோக்கி படையெடுத்து பலரும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் 'இலங்கைப் பயணக் கதைகள் ' குறித்து நானும் ஏதாவது எழுத்தவேண்டும் என்ற சமிக்ஞையாகவே புரிந்து கொண்டேன். இது பற்றி எழுத வேண்டுமாயின் இதயம் பேசுகிறது மணியன் எழுதிய 'இலங்கை பயணக் கட்டுரை ' நூலும் மிக அவசியமானதாக எனக்குப் பட்டது. பல மணி நேரப் பிரயத்தனங்களின் பின் கேட்பாரற்றுக் கிடந்த அந்த நூலையும் என் கையில் எடுத்துக் கொண்டேன்.

கல்கியின் 'இலங்கைப் பயணம்' 1938 இல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. மணியனின் 'இலங்கைப் பயணக் கட்டுரை'யும் ஆனந்த விகடனிலேயே தொடராக 1978 இல் வந்து, பின் 1979 இல் நூலாக வெளி வருகின்றது. இருவருமே பார்ப்பனிய எழுத்தாளர்கள். இருவரது எழுத்துக்களிலும் அவர்களது சாதியபிமானம் பல்வேறு சமயங்களிலும் தலை தூக்கும். மணியன் பத்திற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்து அதனைப் பயணக் கட்டுரைகளாக எழுதியவர். முன்னரெல்லாம் ஒரு பயணக் கட்டுரையினை எப்படி எழுதக் கூடாது என்பதற்கு இவரை உதாரணமாகக் கொள்வார்கள். ஆனால் இப்போதுள்ள நிலையில் இவர்களிடமே ஆலோசனை கேட்க வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். கல்கி பின்னர் 'இலங்கையில் ஒரு வாரம்' என்ற நூலையும் 1950 வாக்கில் எழுதியிருப்பதாக அறிய முடிகின்றது. ஆயினும் அது எனது பார்வைக்குக் கிட்டவில்லை.

கல்கிக்குத் தெரியும் அவரது வாசகர்கள் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் இருப்பதென்பது. ஆயினும் அவர் தனது பயணத்தினை பயமின்றி நேர்மையாகப் பதிவு செய்கிறார். இராவணன் ஒரு முட்டாள் என்பதாகக் கூறிக் கொண்டே தனது கட்டுரையினை ஆரம்பிக்கின்றார், இலங்கை அரசு அன்று இந்தியப் பயணிகள் மீது இந்தியர்கள் மிகவும் சுகாதாரக் குறைவானவர்கள் என்ற வகையில் விதித்திருந்த கடுமையான கட்டுப்பாடுகளைக் கடுமையாகச் சாடுகின்றார். யாழ்ப்பாணத்தின் கல்வி மேம்பாடு அவரை அசர வைக்கின்றது. யாழ்ப்பாணத்துச் சாதீயக் கொடுமைகள் குறித்து அவர் எதுவும் பேசவில்லையாயினும் இங்குள்ள சீதன முறைமை தமிழகத்தை விட மிக மோசமாக உள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் இலக்கியத் தோட்டம் 2022ம் வருட விருதுகள்!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
நிகழ்வுகள்
03 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் வருடத்துக்கான இயல் விருது விழா ஜூன்  4, 2023 , ஞாயிறு அன்று 'ரொறன்ரோ - ஸ்கார்பரோவில் 430 Nugget Avenueவில் அமைந்துள்ள The Estate Banquet and Event Centre மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. விழாவில் பிரதம விருந்தினராக ஜப்பானியத் தமிழ் அறிஞரான Thomas Hitoshi Pruiksma கலந்துகொள்ளவுள்ளார். விழா இராப்போசன விருந்துடன் நிறைவு பெறும்.

கடன் நெருக்கடிகளும், உக்ரைன்-ரஷ்ய போரும் (பகுதி இரண்டு) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
02 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

எதிர்பார்க்கப்பட்டாற்போல், 149 குடியரசு கட்சியினரும் (Republicans) 165 ஜனநாயக கட்சியினரும், இணைந்து, ஒருமித்தாற் போல், அமெரிக்க காங்கிரசில் வாக்களித்து, அமெரிக்கா உலகில் பெறக்கூடிய, “கடன் எல்லையை”, 31.4 ட்ரில்லியன் டாலருக்கும் மேலே பெறலாம், என்று உயர்த்தி உள்ளனர். இப்படி உயர்த்தி விட்டதால், இனி தமது ராணுவத்துக்கு, அல்லது நடந்து கொண்டிருக்கும் ஓர் உக்ரைன்-ரஷ்ய போரில், உக்ரைனுக்கு, “உதவி” என்ற பெயரில் தான் வழங்குவதாய் கூறிக்கொண்டிருக்கும் நிதியை தொடர்ந்து வழங்குவதில் எந்த ஒரு தடங்கலும் ஏற்படப்போவதில்லை என்பது தெளிவு.

மொத்தத்தில், அமெரிக்க-ஆங்கிலேய-ஜெர்மனிய ஆயுத வியாபாரிகளின் பைகள் நிரம்ப போகின்றன என அவர்கள் மகிழ்ந்து கொள்ளும் நடைமுறையில். காசடிக்கும் இயந்திரங்களும், வட்டி வீதங்களை உயர்த்தும் வங்கிகளும், இறைமுறிகளை விற்று தீர்க்கும் மும்முரமும், ரொம்பவே, நேரமற்று, செயலில் இறங்க போகிறது என்பது தெளிவு.

சுருக்கமாக கூறினால், இந்த வாக்கெடுப்பு ஒற்றுமை நிலையானது, இவ்விரு கட்சிகளின் அரசியலானது, அடிப்படையில் போலித்தன்மை கொண்டது-போலியானது என்பதனையும், அது வேறு ஏதேனும் அரசியல் நலனை பிரதிபலித்து நிற்பது என்பதும்–எந்த ஒரு அடித்தள மக்களின் அரசியலையும் இது ஒரு சிறிதும் பிரதிபலிப்பது அல்ல–என்ற எண்ணப்பாடும், மேற்படி நடவடிக்கைகளால் (வாக்களித்ததற்கூடு) இன்று வெகுஜனமய படுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசியல்தான், மேற்கின் அனைத்து வெகுஜன ஊடகங்களிலும், திறைசேரி அதிகாரிகளிலும் (Janet Yellen அம்மையார் உட்பட), மற்றும் வெளிநாட்டு கொள்கைகளிலும் பிரதிபலித்து நின்று–எப்படி ‘கோடிகளை’ திரட்டி தமக்கு பதவி தரும் ஆயுத வியாபார-கோடீஸ்வரர்களின் காலடியில் சமர்ப்பிப்பது என்பதற்கான, சதி திட்டத்தை உருவாக்கி கொள்கின்றன-இவற்றில் இருந்து வீசப்பட்டு, பொறுக்கி எடுக்கப்படும் எலும்பு துண்டுகளோடு, வாசம் நிகழ்த்துவது திருப்தி தருவதாகவே உள்ளது எனும் கூட்டமும் மகிழ்ந்திருக்க. ஆனால், இத்திட்டங்கள் அல்லது இவ் அரசியல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட உகந்த சூழ்நிலை உலகில் தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டி உள்ளது. இதன் ஒரு வெடிப்பே, உக்ரைன்-ரஷ்ய போர் என்பதையே இக்கட்டுரை தொடர் வாதிக்க முனைந்த விடயமானது.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்த பதிவுகள் - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -

விவரங்கள்
- முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
ஆய்வு
01 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

முனிவர்கள் உலக இன்பங்களைத் துறந்து, பற்றற்று இருப்பர்.. ஐம்புலன்களை அடக்கி காடுகளில் தங்கி தவம் செய்பவர். சடைமுடி வைத்திருப்பர். காவி உடை அணிந்திருப்பர். கையில் கமண்டலம் வைத்திருப்பர்.வேள்விகள் புரிவர். தாம் செய்த தவத்தில், ஆற்றல் பல பெற்றனர். அவர்கள் சொல்லும் சொல்லுக்கு சக்தி உண்டு. கோபத்தினால் சாபமிட்டால் அது பலிக்கும் என்றாலும், தவத்தின் பலன் குறைந்துவிடும் என்பதால், பிறர் செய்யும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வர். இருப்பினும் சில முனிவர்கள், சில நேரங்களில் சாபமிடுவர்.கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்து ஆராய்வோம்.

தவம் செய்யும் முனிவர்கள்

முக்காலுடன் தவம் செய்பவர். தாமரை மணியாலான ஜெப மாலையையும், ஆமை வடிவமான மணையையும் வைத்திருப்பர். தவசியர் ஆமை வடிவில் உள்ள மணைப்பலகையில் அமர்ந்து தவமிருப்பர். ஆமை துன்பம் நேரும் போது, நான்கு கால்களும், தலையும் ஆகிய ஐந்து உறுப்புகளையும், முதுகு ஓட்டின் கீழே அடக்கிக் கொள்ளும். அது போல் ஐம்புலன்களின் பிணிப்பையும் அகற்ற வேண்டும். ஆமை போல் ஐந்து பற்றையும் தவசியர் அகற்ற வேண்டும் என்பதை நினைவு செய்யும் வகையில், ஆமை போல் செய்யப்பட்ட மணையில் அமர்ந்திருப்பர். தவசியர் புலித்தோலிலும் அமர்வது உண்டு. அப்புலித் தோலும் ஆமை வடிவினதாகக் கிழித்து அமைக்கப் பெற்றிருக்கும். உண்மையாக ஐம்புலப் பற்றை அகற்றி இருப்பர்.

தவசியர் குறித்துத் தொல்காப்பியர்

தவசியருக்கு பூணூல், கமண்டலம், முக்கோல், ஆமை வடிவினாலான பலகை ஆகியவை உரியன என்று தொல்காப்பியர் கூறுகிறார்.

"நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க்குரிய"
(தொல்காப்பியம்-மரபியல்நூ70)

தவம் செய்வோர் சொல்லுக்கு மாபெரும் வலிமை உள்ளது. அச் சொல் காலத்தை வென்று நிற்கிறது. அவர்கள் என்ன சொன்னாலும் அது அப்படியே பலிக்கிறது. துறவியர் சொன்ன சொல் தான் மந்திரமாகும். அவர்கள் செய்த தவத்தின் சக்தி, அவர்கள் சொல்லும் சொல்லில் ஊடுருவி, அச்சொல்லையே மந்திரமாக்குகிறது.

மேலும் படிக்க ...

யாழ் நூலக எரிப்பு தின நினைவுகள்.... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 ஜூன் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜூன் 1 1981 என் வாழ்வில் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று.  தமிழர்களின் சர்வதேசப் புகழ்பெற்ற அறிவுக் களஞ்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது சன நூல் நிலையம் எரிக்கப்பட்ட நாள். மனித நாகரிகத்தின் கறை படிந்த நாட்களில் ஒன்று.  தனிப்பட்டரீதியில் என் பால்ய பருவத்தில் நண்பனாக, ஆசிரியனாக விளங்கிய நிறவனம் அது. நான் செல்லும் அறிவாலயங்களில் ஒன்று.  வேலியே பயிரை மேய்ந்த கதையாக அன்றிருந்த த(ம்)ர்மிஷ்ட்டரின் அரசின் தூண்களாக விளங்கிய இனவெறி பிடித்த அமைச்சர்கள் சிலரின் தலைமையில் ,ஏவல் நாய்களாகப் படையினர் பாவிக்கப்பட்டு யாழ் நகர் எரிக்கப்பட்டது. யாழ் பஸ் நிலையத்தில் கடைகள் ,பூபாலசிங்கம் புத்தகக்கடையுட்பட, எரிக்கப்பட்டன. யாழ் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயமும் எரிக்கப்பட்டது.

இத்தருணத்தில் யாழ் பொது சன நூலகத்தில் கழித்த நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். யாழ் ஈழநாடு பத்திரிகை தனது மாணவர் மலரில் , வாரமலரில் எனது மாணவ, இளம் பருவத்து எழுத்துகளைப் பிரசுரித்து ஊக்குவித்ததை எண்ணிப் பார்க்கின்றேன்.

யாழ் நூலக எரிப்பு தமிழர்கள் உள்ளங்களில் ஏற்படுத்திய காயம் ஆறாதது. ஏனென்றால் அப்போது நடந்த வன்முறையில் அரிய வரலாற்று நூல்கள், ஓலைச்சுவடிகளையெல்லாம் நாமிழந்தோம். அவை திரும்பக் கிடைக்கப்போவதில்லை. தாவீது அடிகள் நூலகம் எரிக்கப்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமான சம்பவமும் நடந்தது.

மேலும் படிக்க ...

கவிஞர் வைரமுத்துவின் நீரியல் சிந்தனை - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி, சென்னை- 42. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி, சென்னை- 42. -
இலக்கியம்
31 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

நீரால் தழைக்கும் நிலம், பிள்ளைப் பேரால் தழைக்கும் குலம். இயற்கை வரப்பிரதாசம் நீர் ஆகும். மனிதனின் முயற்சியின்றி அமைந்தவை இயற்கை நீர்நிலை. முயற்சியால் அமைந்தவை செயற்கை நீர்நிலை. உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது நீர். நம் உடலில் நீரே மிகுதியாக உள்ளது. உடலில் நீர்ச்சத்து நீங்கிவிடின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்பதை உணரலாம்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

என்பார் வள்ளுவர். மழையின் மாற்று வடிவங்களே அருவி, ஆறு, ஓடை, கடல், ஏரி, குளம், இன்னபிற. ஐம்பெரும் பூதங்களுள் ஒன்று நீர். இறை வழிபாட்டிற்கு நீர் மிகவும் முக்கியமானதாகும். மங்கல நிகழ்ச்சியாயினும், அமங்கல நிகழ்ச்சியாயினும் அவற்றிற்கு முதல் தேவையாகக் கருதப்படுகிறது நீர். நீரின் தத்துவத்தில் அமைந்த ஆலயம் திருவானைக்கால் ஆகும்.

நீரின் ஏற்பட்ட வளர்ச்சி
நீரின் வளத்தினாலே ஆற்றங்கரையோரங்களில் சிறந்த நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக நகரங்கள் திகழ்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிக வளர்ச்சி சிந்துநதியில் வளர்ந்தது. நைல் நதியில் எகிப்து நாகரீகம் தழைத்து ஓங்கியது. எல்லா உயிர்களுக்கும் ஊட்டமளிப்பது நீர்தான்.

நீரின் சிறப்பு
நீரில்லாவிடில் வாழ்வில்லை. நீரின்றி அமையாது உலகம் என்பது வான்மறைந்த தந்த வள்ளுவர் கூற்று. அத்தகைய நீரின் சிறப்பாக காவியம் பேசுவது அரசர் முன்னின்று நடத்திய விழா நீர் விழாவாகும். நீர் விழாவின் போது கொடுங்குற்றம் செய்தவர்கள் கூட மன்னிக்கப்பட்டனர். மக்கள் பாவங்களைக் கழுவும் ஆற்றல் நீருக்கு இருப்பதாக நம்பிய நிலையும் காவியத்தில் இடம்பெறக் காண்கிறோம். ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்கின்றது நல்வழி.

அப்பூதிகள் திருநாவுக்கரசு பெயரால் தண்ணீர்ப்பந்தல் அமைத்து நீரறம் செய்து வந்ததைப் பெரியபுராணத்தால் அறிகின்றோம். இறந்தவர்களுக்கு நதியில் நீர்க்கடன் செய்தல் மரபு. நீர்க்கடன் செய்தாலே வீடுபேறடைய முடியும்.

மேலும் படிக்க ...

லண்டனில் தமிழ் மக்களின் சதுரங்கச் சுற்றுப் போட்டி! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
29 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அரசர்களின் விளையாட்டு எனக் கருதப்படும் சதுரங்கம் chess) இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டுக்குத் தமிழில் ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு. மதியூகமும்,  தந்திரமும் முக்கியமானதாகக் கருதப்படும் இவ்விளையாட்டானது தற்காலங்களில் பாடசாலைப் பாடவிதானத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் பூராகவுமுள்ள பல மில்லியக்கணக்கான மக்களால் வீடுகளில்,  பூங்காக்களில்,  கழகங்களில், இணையத்தளங்களில் விளையாடுவதோடு, கணனிகளிலும் போட்டித் தொடர்களாகவும் விளையாடப்பட்டு வருகின்றது.

இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி,  ஒரு கலையாகவும்,  அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. சில சமயங்களில் ஒரு போர் விளையாட்டாகவும்,  ‘மூளை சார்ந்த போர்க்’கலையாகவும் பார்க்கப்படுவதுண்டு. இப்படி 1500 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்தச் சதுரங்க விளையாட்டானது பல ஈடுபாடுள்ள சென் சதுரங்க ஆர்வலர்களை உருவாக்கியது எனலாம். அந்தகைய சிறப்புகளைக் கொண்ட சதுரங்க விளையாட்டை ‘உலகத் தமிழர் சதுரங்க பேரவை’ யின் (WTCF)  ஏற்பாட்டால் மிக அண்மையில் முதற் தடவையாக லண்டன் அல்பேட்டன் கொமியூனிற்றிப் பாடசாலை மண்டபத்தில் இப்போட்டி அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் படிக்க ...

கடன் நெருக்கடிகளும், உக்ரைன்-ரஷ்ய போரும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
28 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 I

உக்ரைன்-ரஷ்யா போர்களத்தில், அண்மையில் நடந்த இரு நிகழ்வுகள், உலக அளவில் ஊடகங்களில் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டன: ஒன்று, KHMELNYTSKYI எனும் இடத்தில், உக்ரைனின் ஆயுத தளபாடங்களின் சேமிப்பு நிலையத்தின் மீது ரஷ்யா, நடத்திய மாபெரும் தாக்குதல். மற்றது, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாய், “எமது அரண்”, “எமது இதயம்” என்று உக்ரைனினால் கொண்டாடப்பட்ட பக்மூத் (Bakhmuth) என்னும் பாதுகாப்பு கோட்டையின் ஒட்டுமொத்த வீழ்ச்சி

II

KHMELNYTSKYI ஆயுத கிடங்கானது, உக்ரைன் தலைநகர் கிவ்விலிருந்து 322km தொலைவிலும் இதனை விட நெருக்கமாக, மேற்படி கிடங்கு, போலந்து எல்லையிலிருந்து 119km தொலைவிலும் அமைந்து கிடக்கிறது. அதாவது, உக்ரைனின் மேற்கு புறமாய் அமையப்பெற்றிருந்த இம் மாபெரும் ஆயுத கிடங்கு, போலந்து எல்லைக்கு மிக அருகாமையிலும், ரஷ்ய எல்லைக்கு மிக தொலைவிலும் அமையப்பெற்றிருப்பது குறிக்கத்தக்கது. இருந்த போதிலும், ரஷ்யா, மே 15-16இன் இரவில், 18 ஏவுகணைகளையும் ஆறு ட்ரோன்களையும் கொண்டு மேற்படி, தொலைதூர தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது. 18 ஏவுகணைகளில் ஆறு ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் எனவும் ஒன்பது குரூஸ் (CRUISE) ஏவுகணைகள் எனவும் ஏனைய மூன்று ஏவுகணைகள் இனம் தெரியாதவை எனவும் கூறப்படுகின்றது. இவற்றில் பல ஏவுகணைகளைதான் சுட்டு வீழ்த்தி விட்டதாக உக்ரைன் அறிவித்த போதும், தாக்குதலின் போது இங்கிலாந்து அனுப்பி வைத்திருந்த யுரேனிய ((URANIUM) முனை கொண்ட தாங்கிகளுக்கான குண்டுகள் பலவற்றையும், கூடவே, உலகின் முதல் தர விமான-அணு எதிர்ப்பு ஏவுகணையான அமெரிக்காவின் பேட்ரியேட் ஏவுகணைகளும் அழிந்து விட்டதாக உக்ரைனினாலேயே அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: 'எங்கே அந்த வெண்ணிலா' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
28 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இரவுகளில் அமைதியாகக் காரில்  பயணிக்கையில், அல்லது தொலைதூரப்பயணங்களில், அல்லது இரவுகளின் தனிமையில் படுக்கையில் புரண்டிருக்கையில் கேட்பதற்குத் துணையாக வரும் குரல்களில் முக்கியமானதொரு குரல் பாடகர் உன்னிமேனனின் குரல். 'வருசமெல்லாம் வசந்தம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ரவிசங்கரின் வரிகளில், சிற்பியின் இசையில் ஒலிக்கும் இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள் நான் கூறுவதன் அர்த்தம் புரியும். இதயத்தை வருடிச் செல்லும் குரல் உன்னிமேகனுடையது. நடிகர் மனோஜ் ஆர்ப்பாட்டமில்லாத சிறந்த நடிகர். தமிழ்த் திரையுலகில் அவரால் சோபிக்க முடியாது போனது துரதிருஷ்ட்டமே.

மேலும் படிக்க ...

சிறுகதை : அதிகாரம் - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
27 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சோற்றுக்கையின் பிசுபிசுப்பு  வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம்  பழனிக்கு கண்களைக் கூசச் செய்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த எண்ணெய் மினுக்கல் போய் கை காயாது போகாது என்று தோன்றியது. சாதாரண சோற்று மிச்சம் என்றால் காய்ந்து விடும் . ஆனால் எண்ணெய் கலந்து இந்த மினுமினுப்பு அபரிதமாகி அறையையே நிறைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது.

வாஷ்பேசின் குழாய் மூடியைத்திரும்பத் திரும்ப திறந்தும் மூடியும் பார்த்தான். இடது கையால் அதன் மேல் படாலென்று தட்டு தட்டினான் . தண்ணீர் பொலீரென்று கொட்டி விடும் என்று நினைத்தான். பேருந்து நிறுத்தங்களில் எடை பார்க்கும் இயந்திரங்களை இப்படி தலையில் தட்டி காசை வரவழைத்த இரு முறை நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்து போயின அது போல் இப்போதும் திரும்பத்திருமப அதன் மேல் தட்டினால் தண்ணீர் குபுக்கென்று கொட்டும் என்பதை திடமாய் நம்பினான். . வாஷ்பேசின் கீழ்ப்பகுதியில் இருக்கும்  திறந்து மூடும் உபாயத்தை திருகினான். தண்ணீர் வராதது அவனை எரிச்சலடையச் செய்தது. கழிப்பறையிலிருந்து வெளிக்கிளம்பிய் நாற்றம் ரொம்ப நேரம் அங்கு நிற்க முடியும் என்று தோன்றவில்லை.

அவன் பெரும்பாலும் மேல்தளத்தில் உள்ள கழிப்பறையைத்தான் பயன்படுத்துவான். அலுவலகத்தில் மற்றவர்கள் இந்தக்கீழ்த்தளக் கழிப்பறையைப் பயன்படுத்துவார்கள். மற்றவர்கள் என்றால் அய்ந்து பேர். நான்கு பேர் வெளிப்புறப் பணியாளர்கள். இன்னொரு அறையில் கணினியோடு மல்லாடும் ஒருவர் ஆறாவது விரல். முக்கியமான விரல் அவர். பழனி  மேல்தளத்தில் உள்ளக் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்குக் காரணம் அவன் அதிகாரி. ஆறு பேருக்கு அதிகாரி அறையிலேயே  உட்கார்ந்து சாப்பிட்டுக் கொள்வதால் கையோடு கீழ்த்தளக்கழிப்பறை வாஷ்பேசினை டிபன்பாக்ஸ் கழுவப் பயன்படுத்துவார்.  இன்னும் இரண்டு தொலைபேசி இணைப்பகங்கள் தெற்கு, கிழக்கு என்று ஏழு கி.மீ தூரத்தில் இருந்தன. அவையும் அவனின் கட்டுப்பாட்டில் இருந்தன.  அவற்றில் இருவர், நால்வர் என்று பணியாட்கள் இருந்தனர்.எல்லாம் நகரின் மத்தியிலிருந்து தூரத்தில் பொதுமக்களின் பெரும் சேவைக்கென எப்போதோ உருவாக்கப்பட்டவை. ( ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல. சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்டவை. 1,76,000 கோடி ஊழலுக்குப் பின்னும் உயிர்த்திருக்கும் துறை ) . அவர்கள் இந்தத் தலைமையகத்திற்கு பெரும்பாலும் வரமாட்டார்கள். குட்டி ராஜ்யத்தின் அதிகாரி பழனி.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி இதழ்கள் அறிமுகமும், உரையாடலும்! - சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- சு. குணேஸ்வரன் -
நிகழ்வுகள்
26 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கியவெளி அரையாண்டு இதழ்கள் அறிமுகமும் உரையாடலும் 28.05.2023 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொதுநூலக குவிமாடத்தில் இடம்பெறவுள்ளது. மூத்த படைப்பாளி ஐ. சாந்தன் அவர்கள் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் இதுவரை வெளிவந்த மூன்று இதழ்களாகிய தி.ஜா சிறப்பிதழ், கவிதைச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ்கள் பற்றிய கருத்துரைகளை
வடகோவை வரதராஜன், ந.குகபரன், வேல்.நந்தகுமார், இ.இராஜேஸ்கண்ணன், சின்னராஜா விமலன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் நந்தினி சேவியர் நினைவாக.... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களின் பிறந்தநாள் மே 25. அதனையொட்டி நான் எழுதிய குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் தொகுப்பிது. முகநூல் எனக்கு நண்பராக்கிய மூத்த கலை,இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். இருந்தவரையில் விடாமல் இயங்கிக்கொண்டிருந்தார். அவரது விடா முயற்சியும், கொண்ட கொள்கை தவறாத உறுதிமிகு மனநிலையும் என்னை மிகவும் கவர்ந்தவை.

தனது எழுத்துகளைச் சமூகச் சீர்கேடுகளைச் சுட்டெரிக்கும் போர் வாளாகப் பாவித்தவர் அவர். எப்பொழுதுமே தான் நம்பும் கோட்பாடுகள் விடயத்தில் , குறிப்பாக மார்க்சியக் கருத்துகள் விடயத்தில், சமரசம் செய்து கொள்ளாதவர். சமூக, அரசியுல் & பொருளியல் விடுதலைக்கான மார்க்சியக் கருத்துகள் ரீதியில் அமைந்த போராட்டம், அதனுடன் இணைந்த தீண்டாமைக்கெதிரான போராட்டம் என்பவற்றில் தெளிவான, உறுதியான  கருத்துகளைக் கொண்டிருந்தார்.

இன்னுமொரு விடயமும் என்னை மிகவும் கவர்ந்தது. தான் வாசித்த, தனக்குப்பிடித்த இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றிய விபரங்களைச் சுருக்கக் குறிப்புகள் மூலம் ஆவணப்படுத்தியவர் அவர்.சிலர் அக்குறிப்புகளை உதாசீனப்படுத்தினர். அவை விமர்சனங்களல்ல என்றும் கிண்டல்  செய்தனர். ஆனால் அவர்கள் அவற்றின் நோக்கத்தை, முக்கியத்துவத்தைக் காணத்தவறி யானை பார்த்த குருடர்கள் என்பேன். அவற்றின் மூலம் அவர்  எழுத்தாளர்கள் பலரை ஆவணப்படுத்தியுள்ளார். அதுதான் அவரது நோக்கமும் கூட. அதனைக் காணத்தவறியவர்கள்தாம் அவற்றில் குற்றம் குறை கண்டார்கள். ஆனால் அதற்காக அவர் அதனை நிறுத்தவில்லை. தொடர்ந்தும் அறிமுகப் படுத்திக்கொண்டேயிருந்தார். இலங்கைத் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கு உதவும் ஆவணக்குறிப்புகளாக அவை எப்போதுமிருக்கும்.

அவரது முகநூற் குறிப்புகளும் முக்கியமானவை. அவற்றினூடு அவரது சினிமா, இலக்கியம், அரசியல் பற்றிய எண்ண ஊட்டங்களை அறிய முடியும். அவை நிச்சயம் ஆவணப்படுத்த வேண்டிய பதிவுகள்.

மேலும் படிக்க ...

'ரொக் இசையின் இராணி (Queen of Rock 'n' Roll) மறைவு! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
25 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எண்பதுகளில் தனது நாற்பதுகளில் What's Love Got to Do with It பாடலின் மூலம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தவர் 'டீனா டேர்னர்' (Tina Turner).  அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்திலுள்ள பிறவுண்ஸ்வில்லில் பிறந்தவர் இவர். இயற்பெயர் - Anna Mae Bullock.

அக்காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் இசைச் சானல்களில் லயனல் ரிச்சி, புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பில்லி ஜோயெல், மைக்கல் ஜோன்ஸன், சிந்தி லோப்பர் போன்றவர்களுடன் இவரது பாடல்களும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். இளையவர்களுக்கு மத்தியில் சரிக்கும் சமமாக இளமைத்துடிப்புடன் இயங்கிக்கொண்டிருந்தார். இவரை எப்போதும் இரசிகர்கள், விமர்சகர்கள் 'ரொக்கின் இராணி' என்றழைப்பார்கள். அது மிகையான கூற்றல்ல.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: தேனாற்றங் கரையினிலே.. ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
25 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் நடிகர் சரத்பாபுவின் மறைவினையடுத்து நடிகை ரமாபிரபா பற்றிய செய்திகள் இணையத்தை நிறைத்துவிடத் தொடங்கி விட்டன. காரணம் - அவர் சரத்பாபுவின் முதல் மனைவியாக வாழ்ந்தவர். அதன் பின் திரைப்பட உலகைவிட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்த ரமாபிரபாவை அண்மைக்காலமாக அவரது முதுமைப் பிராயத்தில் தெலுங்கு சினிமா மீண்டும் திரையுலகுக்கு அழைத்து வந்துவிட்ட தகவல்களயும் அறிய முடிகின்றது. சரத்பாபுவின் கடைசிப்படமான 'வசந்த முல்லை'யிலும் இருவரும் நடித்திருப்பது காலத்தின் கோலம்.

ரமாபிரபாவின் படங்களை அதிகம் நான் பார்த்ததில்லை. ஆனால் பார்த்த படங்களில் இரண்டு மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ளன. ஒன்று சாந்தி நிலையம். அதில் ஜெமினியின் பெறா மகள்களில் மூத்த பெண் கீதாவாக நடித்திருப்பார். அடுத்தது ஶ்ரீதரின் 'உத்தரவின்றி உள்ளே வா' திரைப்படத்தில் சித்த சுவாதீனமற்ற பெண் ஆண்டாள் ஆக நடித்திருப்பார். நாகேஷை எந்நேரமும் 'நாதா நாதா'  என்றழைத்துத் துரத்தித் திரிவார். அப்படி அழைக்கும்போதெல்லாம் நாகேஷ் விழுந்தடித்து ஓடுவார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. வண.பிதா. செ. அன்புராசா அடிகளாரின் 'அன்புள்ள ஆரியசிங்க' வாசிப்பு அனுபவம் - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  2. முதல் சந்திப்பு: மே 22 – தெணியான் முதலாம் ஆண்டு நினைவு தினம்! நினைவுகளில் வாழும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான் ( 1942–2022) - முருகபூபதி -
  3. 'பழைய நினைவுகள் அதிலும் பால்ய , பதின்ம வயது நினைவுகள் அழியாத கோலங்களாக வாழ்வில் நிலைத்து வருபவை...' - வ.ந.கிரிதரன் -
  4. பாலேந்திராவின் 'அரங்கக் கட்டுரைகள்' புத்தக வெளியீடும் ஆனந்தராணியுடனான அறிமுகமும்! - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி ) -
  5. நடிகர் சரத்பாபு மறைந்தார்! - ஊர்க்குருவி -
  6. இளவாலை விஜயேந்திரன் கவிதைகள் - எம். ஏ. நுஃமான் -
  7. பத்தினாதனின் ‘அந்தரம் நாவல் குறித்த எனது பார்வை. - நவஜோதி ஜோகரட்னம் , லண்டன் -
  8. பேரவையின் இலக்கியக் குழு வழங்கும் இலக்கிய நிகழ்வில் "கதைகளும் நாமும்"
  9. நியூசிலாந்து சிற்சபேசனின் புதிய நூல்; வெளியீடு - மெய்நிகர் அரங்கு!
  10. அஞ்சலிக்குறிப்பு: இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி யோகா பாலச்சந்திரன் கனடாவில் மறைந்தார்! - முருகபூபதி -
  11. கலை,இலக்கியப் பங்களிப்பு மிக்க 'நுட்பம்' சஞ்சிகை பற்றி.... - வ.ந.கி -
  12. முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.) - வ.ந.கிரிதரன்
  13. புலம்பெயர் படைப்பாளர்களின் பாடுபொருள் - தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீனப் படைப்புக்கள் ஒப்பீடு! - முனைவர்.ர.விஜயப்ரியா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
  14. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்
பக்கம் 48 / 104
  • முதல்
  • முந்தைய
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • அடுத்த
  • கடைசி