பதிவுகள் முகப்பு

ஹிதுமதெ ஜீவிதெ என்றழைக்கப்பட்ட படுகாகஹே டொன் சுமதிபாலா! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் இம்மனிதனைப்பற்றிய செய்திக்குறிப்பொன்றை வாசித்தேன். இவனது வாழ்க்கை என் கவனத்தை ஈர்த்தது. நமது தமிழ்ப்பட நாயகர்கள் பலர் திரைப்படங்களில் செய்ததைத்தான் இவன் தன் வாழ்க்கையில் செய்திருந்தான். அதனால் இவன் தன் வாழ்வின்  43 வருடங்களைச் சிறையில் கழித்திருந்தான். பின்னர் விடுதலையான இவன் நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தான். அது பற்றிய செய்தியினை ஜூலை 17, 2022 வெளியான டெய்லி நியூஸ் (இலங்கை) வெளியிட்டிருந்தது.

இவன் களுத்துறை மாவட்டத்தில் பிறந்தான். இவனது பெயர் படுகாகஹே டொன் சுமதிபாலா.  ஆனால் இவன்  'ஹிதுமதெ ஜீவிதெ' (Hitumate Jeevithe) என்றே அறியப்பட்டிருந்தான்.  இவனுக்கு ஒரே யொரு சகோதரி. அழகுமிக்க அச்சகோதரி 1972 புது வருட தினத்தில் நடைபெற்ற அழகுராணிப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாள். ஆனால் அவனது சகோதரி அழகு ராணிப் போட்டியில் வெற்றி பெற்றபின் வீடு திரும்பவில்லை.  அவளுக்கு என்ன நடந்தது?  களுத்துறைக் காவல்துறை அதிகாரி  ஒருவன் இவனது சகோதரியைக் காரில் கடத்தி,  ஹொட்டலொன்றுக்குக் கொண்டு சென்று பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய பின் கொலை செய்திருக்கின்றான். இதனை அறிந்த ஹிதுமதெ ஜீவிதெ அந்தக் காவல் துறை அதிகாரியைக் கொன்றிருக்கின்றான். அதற்காக அவனுக்குத் தூக்குத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருக்கின்றார். சிறையிலிருந்தபோது இவன் ஐந்து தடவைகள்  தப்பிச் சென்றிருக்கின்றான். தனது சகோதரியின் மரணத்துடன் தொடர்புள்ளவர்களாகக் கருதப்பட்ட மேலும் ஐவரைக் கொலை செய்திருக்கின்றான்.

1978இல் இவனது மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மரண தண்டனையை இலங்கை அரசு ஒழித்ததே அதற்குக் காரணம். பின்னர் பல வருடங்கள் சிறையிலிருந்த இவன் 2018இல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றான். விடுதலையானதிலிருந்து இவன் குளியாப்பிட்டியிலிருக்கும் பெளத்த ஆலயமொன்றில் தங்கி வாழ்ந்திருக்கின்றான்.

மேலும் படிக்க ...

சிறுகதை: முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? - வ. ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ. ந.கிரிதரன் -
சிறுகதை
07 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  7.5.2023 ஈழநாடு வாரமலரில் வெளியான சிறுகதை -

"முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்,
அலமரல் அசை வளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே?" - "குறுந்தொகை 28, ஔவையார் -

'டொராண்டோ மாநகரின் 'தோர்ன்கிளிவ் பார்க் டிரை'விலிருந்த தொடர்மாடிக்கட்டடங்களிலொன்றில்தான் கடந்த ஆறுவருடங்களாக அமுதா வசித்து வருகின்றாள். இலங்கையிலிருந்து முள்ளிவாய்க்காலில் யுத்தம் மெளனிக்கப்பட்டதற்குப்பின்னால் கனடா வந்த தமிழர்களில் அவளும் ஒருத்தி. அவளது நல்ல காலம் அவளுக்கு அவளது இருப்பிடத்துக்கு அண்மையில் எக்ளிண்டன் வீதியும், டொன்மில்ஸ் வீதியும் சந்திக்கும் சந்திக்கண்மையிலிருந்த 'புளூ ஷிப்' நிறுவனங்களிலொன்றான 'கலக்டிகா'வில் வேலை கிடைத்திருந்தது. உலகின் பல பாகங்களில் கிளைகளைக்கொண்ட பெரியதொரு தொழிற்சாலை. கணனிக்குரிய  'பவர் சப்ளை', 'மெமரி கார்ட்' போன்ற பல பொருட்களைத்தயாரிக்கும் நிறுவனம். ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் மூன்று 'ஷிவ்ட்டு'களில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அமுதா வேலை செய்வது மாலை நேர 'ஷிவ்ட்'. மூன்று மணிக்குத் தொடங்கும் வேலை இரவு பதினொரு மணிக்கு முடிவடையும். வேலை முடிந்ததும் டொன் மில்ஸ் வழியாகச் செல்லும் நம்பர் 25 பஸ்ஸில் தோர்ன்கிளிவ்  பார்க் சென்று அவளது இருப்பிடத்துக்கு அண்மையிலிறங்கிச் செல்வது அவளது வழக்கம்.

மேலும் படிக்க ...

புத்தனுக்குக் கவிதைத் தூது - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
05 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மன்னவர் குலத்தே தோன்றி;
மனங்களை ஆட்சி செய்யும்;
பன்னரும் ஞான வானே!
பரமனே! புத்தா! போற்றி!
உன்னரும் உருவை எண்ணி;
ஊறிடும் கவிதை மாலை,
என்னரும் சொல்லால் கோர்த்து;
எடுத்தொரு தூது விட்டேன்...!

பூரணை தன்னில் பூத்து;
புவனியை உய்க்க வந்த
ஆரணப் பொருளே! எங்கள்
அருந்தவ முனியே! கேளும்..!
காரணம் இன்றி எங்கள்
காணிகள் பறித்தார்; உம் பேர்
பாராயணங்கள் பண்ணி;
பலப்பல சிலைகள் வைத்தார்!

மேலும் படிக்க ...

பண்டைத் தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள் , இந்துக்களின் கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
05 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுநா இதழில் வெளியான கட்டுரை -

பகுதி 1 : பண்டைத் தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்

பண்டைய தமிழர்கள் தரைவழியாகவும் கடல்வழியாகவும் பாரதத்தின் ஏனைய நகரங்களுடன் மட்டுமல்ல கடல்கடந்தும் ஏனைய நாடுகளுடனெல்லாம் வணிகம் செய்து சிறப்புற்று விளங்கியதை வரலாறு கூறும். யவனர்கள், அரேபியர்களெல்லாம் கடல்கடந்து தமிழகம் வந்து வர்த்தகம் செய்ததை வரலாற்றறிஞர்களின் பிரயாணக் குறிப்புகள், பண்டையத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தகவல்கள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களெல்லாம் புலப்படுத்தும். கிழக்கிந்தியத் தீவுகள் கூட்டத்தை உள்ளடக்கிய சாவகம் (இன்றைய இந்தோனேஷியா), ஈழம், காழகம் (பர்மா) போன்ற நாடுகளுடனெல்லாம் தமிழர்களின் வர்த்தகம் கொடி கட்டிப் பறந்தது.

யவனர்கள், அரேபியர்களெல்லாம் தமிழகத்துடன் வியாபாரம் செய்து வந்தார்கள். இவர்களைப் பற்றி ‘பயனற வறியா யவனர் இருக்கையும் / கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள் / கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பும்’ எனவும், ‘மொழி பெயர் தேத்தோர் ஒழியா விளக்கம்’ எனவும் சிலம்பும், ‘மொழிபல பெருகிய பழிநீர் தேஎத்துப் / புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் / முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ எனப் பட்டினப்பாலையும் கூறும். கிரேக்கர்களும், ரோமர்களும் யவனர்களென சிறப்புப் பெயர் பெற்றிருந்தார்களென மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார். வணிகத்தின் பொருட்டுத் தமிழகம் வந்த யவனர்கள் வணிகத்தில் மட்டுமின்றி வேறு சில தொழில்களைச் செய்ததையும் அறிய முடிகிறது. மதுரையின் கொற்கைத் துறைமுகம் தமிழ் வாணிபத்தில் சிறந்து விளங்கியது. கோட்டை மதில்களுடன் விளங்கிய மதுரையின் கோட்டை வாயில்களை யவன வீரர்கள் காத்து நின்றதை ‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்து / அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு’ எனச் சிலம்பும், ‘மந்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை / மெய்ப்பை புக்கு வெருவருந் தோற்றத்து / வலிபுணரி யாக்கை வன்கண் யவனர்’ என முல்லைப் பாட்டும் கூறும். இதுதவிர யவனர்கள் தச்சுத் தொழிலிலும்  சிறந்து விளங்கியதை மணிமேகலையின் ‘யவனத் தச்சர்’ பற்றிக் கூறும் வரிகள் தெரிவிக்கும். புதுச்சேரிக்கு அண்மையில் அரிக்கமேடு என்னும் பகுதியில் நிகழ்ந்த அகழ்வாரய்ச்சிகள் யவனர்கள் கண்ணாடி மணிகளைச் செய்வதில் சிறந்து விளங்கியதை எடுத்துக் காட்டும்.

மேலும் படிக்க ...

நுட்பம் (1980/1981) - மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
04 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலை படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் 80/81ற்கான தமிழ்ச் சங்கத்தில் இதழாசிரியர் குழுத்தலைவராக இருந்திருக்கின்றேன். அப்போது வெளியான 'நுட்பம்' சஞ்சிகைக்கான  இணைய இணைப்பிது. ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம். அட்டைப்படத்தை வடிவமைத்தவர் நண்பர் சிவசாமி குணசிங்கம் (கட்டடக்கலைஞர், ஆஸ்திரேலியா). உற்றுப்பார்த்தீர்களென்றால் 1980இல் 1981 தெரியும். இவ்விதமான வித்தைகள் செய்வதில் வல்லவர் குணசிங்கம்.

https://drive.google.com/file/d/176wFekyBaWU-8KszyzSSzNWZvjbopoI8/view?usp=sharing

மேலும் படிக்க ...

எழுத்தாளர் முனியப்பதாசன் எழுதிய தொடர்கதை - 'காற்றே நீ கேட்டிலையோ? ' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
04 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் ஒருவர் முனியப்பதாசன். இவர் பற்றி எழுதியவர்கள் இவரது சிறுகதைகள் பற்றியே குறிப்பிட்டுள்ளார்கள். யாருமே இவர் தொடர்கதை எதுவும் எழுதியதாகக் குறிப்பிட்டதில்லை. ஆனால் இவர் தொடர்கதையொன்றும் எழுதியுள்ளார். அது கடல் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட தொடர்கதை. அது ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளியான தொடர்கதை. அதன் பெயர் - காற்றே நீ கேட்டிலையோ? தொடர்கதை முழுமையடையவில்லை. நான்கு அத்தியாயங்களையே என் தேடலில் காண முடிந்தது. இருந்தாலும் இது முக்கியமானதோர் அவதானிப்பு. இதுவரையில் யாருமே முனியப்பதாசனின் இத்தொடர்கதை பற்றிக் கூறாததால் இப்பதிவு  முக்கியத்துவம் மிக்கது. ஆவணச்சிறப்பும் மிக்கது. இத்தொடர்கதை ஈழநாடு பத்திரிகையின் 6.10.1966 பதிப்பில் ஆரம்பமாகி , ,28.10.1966 பதிப்பு வரையில் , மொத்தம் நான்கு அத்தியாயங்கள் வெளியாகியுள்ளது.

ஈழநாடு (வியாழக்கிழமை) - 6.10.1966 -  காற்றே நீ கேட்டிலையோ? - முனியப்பதாசன் - அத்தியாயம் ஒன்று - https://noolaham.net/project/404/40379/40379.pdf
ஈழநாடு (வியாழக்கிழமை) - 13.10.1966 -  காற்றே நீ கேட்டிலையோ? - முனியப்பதாசன் - அத்தியாயம் இரண்டு - https://noolaham.net/project/404/40386/40386.pdf
ஈழநாடு (வெள்ளிக்கிழமை) - 21.10.1966 -  காற்றே நீ கேட்டிலையோ? - முனியப்பதாசன் - அத்தியாயம் மூன்று - https://noolaham.net/project/404/40393/40393.pdf
ஈழநாடு (வெள்ளிக்கிழமை) - 28.10.1966 -  காற்றே நீ கேட்டிலையோ? - முனியப்பதாசன் , அத்தியாயம் நான்கு - https://noolaham.net/project/404/40399/40399.pdf

எழுத்தாளர் முனியப்பதாசன் பற்றி...

எழுத்தாளர் முனியப்பதாசனின் எழுத்துப்பிரவேசம் 1964இல் கலைச்செல்வி சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'வெறியும் பலியும்' சிறுகதை முதற்பரிசு பெற்றதுடன் ஆரம்பமாகியது. கடற் தொழிலாளர் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதை. கலைச்செல்வியின் ஆசிரியரும், பதிப்பாளருமான சிற்பி சரவணபவன் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளார். அவர்களில் இவருமொருவர். இவரது இயற்பெயர் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். யாழ் இந்துக் கல்லூரியின் அருகிலிருந்த ஒழுங்கைப்பகுதியில் வாழ்ந்ததாக அறிகின்றேன். இவரது கதைகள் ஈழநாடு, சுதந்திரன், கலைச்செல்வி, விவேகி போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகின. ஈழநாடு ஆசிரியர் ஹரன் இவரது எழுத்தின்பால் பெரு மதிப்பு மிக்கவரென்றும், அவரே இவரது சிறுகதையொன்றை ஆனந்தவிகடனுக்குக் கொண்டு சென்று கொடுத்ததாகவும், அது விகடனில் முத்திரைக்கதையாக வெளியாகியதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க ...

மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் உழைக்கும் பெண்கள்! - முனைவா் த. அமுதா ,கௌவர விரிவுரையாளா், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி(த), வேலூா் -2 -

விவரங்கள்
- முனைவா் த. அமுதா ,கௌவர விரிவுரையாளா், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி(த), வேலூா் -2 -
ஆய்வு
04 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

          -  எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி -

முன்னுரை
இலக்கியம் என்பது மனிதனைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் வெளியாகும் வெறும் சொல் மட்டும் இல்லை. மனித வாழ்வு எத்தனை அளவெல்லாம் விரிவடைய முடியுமோ அதனை விளக்கிக் காட்டும் மெய்யுரை. அழகான மனோநிலைகள். அரிதரிதான உணர்ச்சிகள், மகத்தான கனவுகள், ஆழ்ந்தகன்ற சித்தாந்தம், அறிவரிய இலட்சியம் போன்றவைகளை உள்ளடக்கிய அமுதசுரபியே இலக்கியம். இலக்கியத்தைப் படைக்க விரும்பும் படைப்பாளிகள் சமூகத்தில் காணலாகும் ஏற்றத்தாழ்வுகள், குறைநிறைகள், வாழ்க்கைப் போக்குகள் ஆகிய பலவற்றையும் கண்டு அவற்றைத் தமது சொந்தப்பட்டறிவோடு இணைத்துக் கூறுவர். இவ்வகையில், மிகச் சிறந்து விளங்கியவர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். இவர் எழுதிய சிறுகதைகளில் பெண்களின் அவல நிலைகளை எடுத்துக்காட்டுகிறார். இவர் பொருளாதாரத்தின் பங்களிப்புதான் பெண்ணுரிமையின் முதல் படிக்கட்டு. எந்தெந்தச்சமூகங்களில் பெண்கள் உழைப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ அந்தச் சமூகங்களின் பொருாதாரம் விரைவாக வளரும்.  சமூக நீதியின் முதல் விதை அப்போதுதான் முளைக்கும் என்று சொல்லுகின்றார். இவர் தமது சிறுகதை இலக்கியங்களில் காலந்தோறும் உழைக்கும் பெண்களை படம் பிடித்து காட்டுவதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்ணியம்
17 ஆம் நூற்றாண்டில்தான் பெண்ணியம் என்ற சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. அப்போது அது என்ன பொருளில் வழங்கியதோ அதனின்றும் இப்போது அது முற்றும் மாறுபட்டதாகவே அமைந்துள்ளதை பெண்ணியம் என்ற சொல் பெண் விடுதலை, பெண்ணடிமை, பெண் கல்வியின்மை, பெண்ணுரிமை முதலிய பல பொருள் தருவதாக இன்று பொருள் கொள்ளப்படுகிறது. பெண்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அவா்களுக்குக் கல்வியின் மூலம் விழிப்புணர்வு ஊட்டி சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பினைப் பெற்றுத் தருவ பெண்ணியமாகும்.

மேலும் படிக்க ...

குறிஞ்சிப்பாட்டு சுட்டும் 'பிறங்குமலை மீமிசைக்கடவுள் முருகப்பெருமான்' - - முனைவர் மு.சுதா, பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -

விவரங்கள்
- முனைவர் மு.சுதா, பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -
ஆய்வு
04 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமான் பற்றிய குறிப்புகளைத் தொல்காப்பியம் சங்கஇலக்கியம் போன்ற பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் காணமுடிகின்றன. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரேயே முருகவழிபாடு இருந்தமையைத் திறனாய்வாளர்கள் சுட்டுகின்றனர். ”சேயோன் மேய மைவரை உலகமும்”(தொல்.பொருள்.அகத்.நூ-5) எனத் தொல்காப்பியம் மலை சார்ந்த பகுதியான குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளாக முருகனைச் சுட்டுகிறது. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாகப் போற்றப்பட்டு வழிபடப்பட்டு மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த முருகக்கடவுள் பற்றிய செய்திகளைச் சங்க இலக்கியங்கள் முழுவதும் காணமுடிகின்றன.

“உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்
முருகற் சீற்றத்து உருகெழு குருசில்”(பொருந.131-132)

எனவும்,

“முருகன் நற்போர் நெடுவேள் ஆவி”(அகம்.1)

என்றும்,

“அணங்குடை முருகன் கோட்டத்து“(புறம்.299)

எனவும் பல இலக்கியச் சான்றுகளைச் சுட்டிச் செல்லலாம். வெறியாட்டு என்ற நிகழ்வு முருகவழிபாடாகச் சுட்டப்படுவதையும் அகநூல்களில் காணமுடியும். இவ்வாறு மலையும் மலைசார்ந்த நிலப்பகுதியான குறிஞ்சி நிலத்தின் கடவுளாகப் போற்றப்படும் முருகனைக் குறித்த செய்திகள் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்றிருப்பதை எடுத்துரைக்கும் முகமாக இக்கட்டுரை அமைகின்றது.

மேலும் படிக்க ...

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
03 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அபத்தம் (இணைய இதழ்) வைகாசி 2023 இதழில் வெளியான கட்டுரை.

               'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீடு. ஓவியம் - AI -

நவீனக் கட்டடக்கலையின் முக்கிய சிந்தனைகள் சிலவற்றினை சாதாரண வாசகருக்கும் அறியச்செய்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம். நவீனக் கட்டடக்கலையின் முக்கிய கோட்பாடுகளாக  "லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function),  ஃப்ராங்க் லாயிட் ரைட் அவர்களின் சேதனக் கட்டடக்கலை (Organic Architecture),  கட்டடக்கலைஞர் லட்விக்  மீஸ் வான் டெர் ரோவின் (Ludwig Mies Van der Rohe)  ''குறைவில் நிறைய (Less is more) '   போன்ற கோட்பாடுகளையும் மற்றும்   லெ கொபூசியேவின்  (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.  இவை நவீனக் கட்டடக்கலைக்கு வளம் சேர்த்த சிந்தனைகள். இவற்றைப்பற்றிய சுருக்கமான விளக்கங்களைத்  தமிழில் தருவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.

லூயிஸ் சல்லிவன் (Louis Sullivan)

1. லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)

ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.

இக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.

மேலும் படிக்க ...

பனிவிழும் பனைவனம் நூல் வெளியீடும் , பாலேந்திராவின் 'அரங்கக் கட்டுரைகள்' நூல் அறிமுக நிகழ்வும் & வாழும் தமிழ் கண்காட்சியும்

விவரங்கள்
- தகவல்: 'காலம்' செல்வம் -
நிகழ்வுகள்
02 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தெளிவாகப் பார்க்க, படத்தை ஒருமுறை அழுத்தவும்.-

நூல் அறிமுக நிகழ்வும், வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும்! - தகவல் - பிறேம் -

விவரங்கள்
- தகவல் - பிறேம் -
நிகழ்வுகள்
02 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தெளிவாகப் பார்க்க, படத்தை ஒருமுறை அழுத்தவும்.-

உழைப்பாளர் தினக்கவிதை - 'காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம். - கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
01 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உழைப்பாளர் தினத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 'சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி' பாடலைப் பகிர்ந்துகொள்கின்றேன் - https://www.youtube.com/watch?v=TyYEYFTuec0

பாமர மக்களின் பேச்சுத்தமிழில் உயிரோட்டத்துடன் எழுதப்பட்டுள்ள கவிதை. எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் இசையில், பானுமதி , டி.எம்.எஸ் குரலில் , எம்.ஜி.ஆர் & பானுமதி நடிப்பில் ஒலிக்கும் பாடல். கேள்வியும், பதிலுமாக ஒலிக்கும் பாடலின் கருத்து உலகில் உழைப்பாளர் நிலையினை எடுத்துக் கூறுவதுடன் நின்று விடாது அவர்களுக்கு எதிர்காலத்தில் மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. அதுவே இப்பாடலின் சிறப்பு.

அவள் கூறுகின்றாள் 'காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்' என்கின்றான். அதற்குப் பதிலளிக்கும் அவனோ 'இப்போ காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னேவ் என்று நம்பிக்கையூட்டுகின்றான்.  அத்துடன் மேலும்

மேலும் படிக்க ...

உழைப்பவர் உயர்வை உரைத்திடும் தினம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
01 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மே1  - உழைப்பாளர் தினம்!


உழைத்துமே உயர்ந்திடு வோமே!
உதிரமே உழைப்பவர் பலமே!
உலகமே ஏத்திடு தினமே!
உயர்வுடை மே தினமே!

உண்ணும் உணவும் உழைப்பே!
ஓடும் காரும் உழைப்பே!
விண்ணில் பறக்கும் யாவும்
எண்ணி லடங்கா உழைப்பே!  

விருந்தும் மருந்தும் உழைப்பே!
விளக்கின் வரவும் உழைப்பே!
அருந்தும் அனைத்தும் உழைப்பே!
அனைவரும் மதிப்போம் உழைப்பை!  

வானுயர் கட்டடங்கள் உழைப்பே!
வான்வெளிப் பயணங்கள் உழைப்பே!  
நீள்கடல் ஆராய்ச்சி உழைப்பே!
நிம்மதி தருவதும் உழைப்பே!  

மேலும் படிக்க ...

கதிரையதிகாரம் - துவாரகன் -

விவரங்கள்
- துவாரகன் -
கவிதை
01 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அதிகாரம் என்ன செய்யும்?
மண்டியிட வைக்கும்
மானிடத்தைக் கொல்லும்
அதிகாரம் என்ன செய்யும்?
குதிக்கால் உயர்த்திப் பேசும்
சுட்டுவிரல் காட்டி அடக்கும்
சாட்டையின் கைமாற்றம்
நுகத்தடியில் மாட்டப்படும்

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: சிறுகதை இலக்கியத்தில் அழகியலை ஆராதித்த குப்பிழான் ஐ. சண்முகன் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
28 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மைக்காலமாக , காலை விடியும்போது இன்று என்ன செய்தி வரப்போகிறதோ? என்ற யோசனையுடன்தான் துயில் எழுகின்றேன். இந்த யோசனை கொவிட் பெருந்தொற்று பரவிய காலத்திலிருந்து தொடருகின்றது. அடுத்தடுத்து எமது கலை, இலக்கிய குடும்பத்திலிருந்து பலரும் விடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இயல்பாகவே மரண பயமும் வருகின்றது.

கடந்த 24 ஆம் திகதி காலை விடிந்தபோது, சிட்னியில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான இலக்கிய நண்பர் கானா. பிரபாவிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில், எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் முதல் நாள் 23 ஆம் திகதி மறைந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. என்ன நடந்தது? என நான் தொலைபேசி ஊடாக கேட்பதற்கு முன்பே, அவர் என்னைத் தொடர்புகொண்டு இந்த துயரச் செய்தியை மேலும் ஊர்ஜிதப்படுத்திச் சொன்னார்.

இறுதியாக சில வருடங்களுக்கு முன்னர் வடமராட்சிக்கு சென்றிருந்தபோது, இலக்கிய நண்பர் தெணியானுடன், குப்பிழான் ஐ. சண்முகனை பார்க்கச்சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் இல்லாத வடமராட்சிக்குத்தான் இனிவரும் காலங்களில் வரப்போகின்றேன் என்பதை நினைக்கும்போது சோகம் மனதை அழுத்துகிறது. தனது பெயரின் தொடக்கத்தில் குப்பிழான் என்ற பூர்வீக ஊரின் பெயரை சண்முகன் பதிவுசெய்துகொண்டிருந்தாலும், அவரது வாழ்க்கை பெரும்பாலும் கழிந்தது, கரணவாயில்தான்.

1970 களில் நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் அவர் கொழும்பு மலே வீதியில் அமைந்திருந்த அரசாங்க பரீட்சைத் திணைக்களத்தில் எழுதுவினைஞராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அதே வீதியில் அமைந்திருந்த இலங்கை ஆசிரியர் சங்க பணிமனையில் நான் சிறிது காலம் வேலை செய்துகொண்டிருந்தபோது குப்பிழான் சண்முகனை அடிக்கடி சென்று பார்ப்பேன்.

மேலும் படிக்க ...

பொன்னியின் செல்வன் 2: 'சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ?'

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
28 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
பொன்னியின் செல்வன் 2 திரைப்படப்பாடலொன்று ஹரிச்சந்திரன் குரலில், இளங்கோ கிருஷ்ணனின் எழுத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் , ரவிவர்மனின் ஒளிப்பதிவில் ஒலிக்கும் பாடல். இளங்கோ கிருஷ்ணன் போன்ற தமிழ்த் திரையுலகின் புதிய தமிழ்க் கவிஞர்கள் சங்கக்கவிஞர்களைப் போல் செறிவுமிகு தமிழ்ச் சொற்களைக் கையாள்வது மகிழ்ச்சியளிப்பது.  பாடலைக் கேட்க

கவிதை: பாடல்களைத் தொலைத்தவள். - தமயந்தி (தமயந்தி சைமன்) -

விவரங்கள்
- தமயந்தி (தமயந்தி சைமன்) -
முகநூல் குறிப்புகள்
28 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -


தனது குழந்தைகளுக்கான
ஏராளமான இனிய பாடல்களை
நாலாதிசைக் கரைகளின்
மணற்பரப்பெங்கும் எழுதிவைத்த அவள்
அவ்வப்போது வந்து தொட்டுத்தடவி
புவுத்திரம் பார்த்துச் செல்வாள்.

ஆழியரவிந்த மைகொண்டு எழுதிய பாடல்கள்.
அத்தனை எழுத்தும்
கொத்தடங்கா முத்துக்களால்
ஆழிப்பட்டு நூல் திரித்து  
கோத்துக் கட்டிய பாடல்கள்

சொல்லுக்குச் சொல்
நாவடத்தில் குழைத்த
மீனாம்பல் திரவியம் பூசிய பாடல்கள்.

மேலும் படிக்க ...

குப்பிழான் சண்முகம் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் - Zoom வழியான அஞ்சலி நிகழ்வு! - பெளசர் -

விவரங்கள்
- பெளசர் -
நிகழ்வுகள்
28 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சிறுகதை : போகம் - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
27 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

     ' ஒரே பயிர்ச் செடியில்  ,  ஆண்  பூக்கள் பூத்து , பெண் பூக்களும் பூக்கின்றன ' என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும் ? . சிறிமாவின்  காலத்தில்  , அதிசயமாக இலங்கையில் கல்வி முறையை மாற்றி இருக்கிறார்கள் . அதில் , விவசாயப் பாடமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது . அப்பாடத்திட்டத்தை இன்னும் சீர் படுத்தி இருக்க வேண்டும் . அதிலேயும் இந்த  எளிய கருத்துக்கள் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படவில்லை .  அசேதன பசளைப் பாவிப்பு இருந்தளவுக்கு சேதன  பாவிப்பும்  சொல்லிக் கொடுக்கப் படவில்லை . அது , சீனக் கல்வி முறை . ஒருவேளை அங்கே இருந்த புத்தகத்தையே   அப்படியே  ......தமிழ்படுத்தி , நடைப்படுத்திஇருப்பார்களோ ? .  

   முதல் நிலவிய     கல்வியிலும் அப்படித்தான் நடைபெற்றிருந்தது . ஒரே  காலனி  சிந்தனை , மயக்கம் .  இலங்கையின் அறுபது வீத உணவை.... வழங்குகிற ...தமிழர்களின் ஒத்துழைப்பையும் ( தமிழர் விவசாய முறைகளை  ) கெளரவத்துடன் பெற்றிருக்க வேண்டாமா ? . விவசாய அறிவு அவர்களை விட   இவர்களிடமே  அதிகமாகவே  இருக்கிறது . எதிலும்  ,  இன அலட்சியம்    தொடர்க்கிறது  .  தமிழர் பசளை முறைக்கு முற்றாகவே  கல்தா ! மொழிக்கு அவமரியாதை . நிலம் பறிப்பு . ஒற்றையாட்சி என்ற பம்மாத்துப் போர்வையிலே பயங்கரவாதச் சட்டங்கள்  , அந்த போலி நாட்டைக் காப்பாற்ற அவசரகாலச் சட்டங்கள் வேற  .  நச்சுக்களை உற்பத்தி செய்கிற பார்ளிமெண்ட்   மிலேச்சத்  தனமாக  ஆண்டு வருகிறது . காலனிக் (படுத்திய  நாடுகளின் )  கூட்டம்  , இலங்கையையும் ஒரு இஸ்ரேலாக்கும்  ஒரு  முயற்சியில்    எடுப்பார் கைப் பிள்ளையாக்கி விட்டிருக்கிறது . நேரு   ,  இந்தியா வல்லரசாகி விடும் என  மனக்கணக்கு போட்டார் . அதனால் ஏற்பட்ட தவறு தான் இலங்கையை ஒரு நாடாக இயங்க விட்டது . இன்று உக்ரேன் ரஸ்யாவின் மார்பில் உதைக்கிற ஒன்றாக மாறியது  போல இந்த நாடும்  இந்தியாவிற்கு  .மாறி  விட்டிருக்கிறது .  
 
இரண்டாம் உலகப் போருக்குப் பின் , இன்று வரையிலும்  ஜேர்மனியிலும்  , யப்பானிலும்  அமெரிக்கா  பெரிய இராணுவத்தளங்களைப் போட்டு ( வெளியேறாமலே ) தன் கைப்பாவைகளாகவே வைத்திருக்கின்றது . இவ்விருவருமே  அவர்களது அமைப்பிலே  இருக்கின்றன . நாகரிக அடிமை நிலைகள் .     இந்த கதை ,  இந்த முயற்சி விடுதலைக் காலத்தில் நடக்கிறது .  

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியா படைப்பாளிகளின் கதைத் தொகுதி 'தைலம்'! புகலிட வாழ்வியலை சித்திரிக்கும் கதைகள்! - சியாமளா யோகேஸ்வரன் - குவின்ஸ்லாந்து -

விவரங்கள்
- சியாமளா யோகேஸ்வரன் - குவின்ஸ்லாந்து -
நூல் அறிமுகம்
27 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியச் சூழலையும், இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் மையப்படுத்தி மெல்பனில் வதியும்  எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தியின்  தெரிவிலிருந்து  வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பே ‘தைலம்’ நூல்.  யூகலிப்டஸ் மரங்கள் அவுஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படும் மரமாகவும்,  இந்நாட்டுக்கே பிரத்தியேகமான குவாலா கரடிகளின் வாழ்விடமாகவும் காணப்படுகின்றது. அந்த மரங்களில் இருந்து சாரமாகப் பெறப்படும் தைலத்தைப் போன்று இங்குள்ள மக்களின் வாழ்க்கைச் சாராம்சத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தொகுக்கப்பட்ட சிறுகதைகளுக்கு தைலம் என்று பெயரிடப்பட்டமை சாலப் பொருத்தமாகவே காணப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் இழப்பையும், புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தம் அடையாளத்தைக் கட்டிக் காக்க எண்ணும் தமிழ் மக்களின் மனப்பாங்கையும், புகுந்த இடத்துக்கேற்ப முற்றிலுமாய் தம்மைத் தொலைக்கத் தயாராக உள்ளவர்களின் மனப்பாங்கையும், நவீன தொழில் நுட்பத்தால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் தமது  எழுத்துக்களில் எழுத்தாளர்கள் அற்புதமாக வடித்திருக்கின்றார்கள் என்றேதான் கூற வேண்டும்.

முதலாவது கதை தென் துருவத்தேவதை கன்பரா யோகன் எழுதியது.  புகலிடம் தேடி வந்து தனிமையை மட்டுமே அறிந்திருந்த கதிர் என்கின்ற இளைஞன், தந்தையார் தென்துருவத்தில் வேலை செய்த போது பிறந்த ஒரு வெள்ளையினப் பெண்ணின் உருவத்தில் தேவதையைக் காண்கின்றான். கதையோடு சோப்புத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையைக் கற்பனைக்கு கொண்டு வந்திருந்த விதமும் அருமை.
சரளமாக ஆங்கிலம் பேச முடியாத தயக்கத்துடன், தானாக வலிந்து சென்று நட்பு கொள்ள முடியாத ஒதுக்கமும் சேர்ந்து கொள்ள ஒடுங்கி வாழப் பழகும் ஒருவனுக்கு வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொடுக்கின்றாள் ஒரு தேவதை. உயரத்தில் ஏறி நின்று உலக இயற்கையை ஆராதிக்கவும், தன் கூட்டில் இருந்து மெல்ல வெளியே வந்து உலகோடு ஒன்றவும் கற்றுக் கொடுத்தவள்,  சொல்ல முடியாத சோகத்தைத் தனக்குள்ளே சுமந்து கொண்டிருக்கின்றாள். வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொடுத்த அவளுக்குள் பெரும் சோகமொன்று ஒளிந்திருந்தது என்பதை அவளது மரணத்தின் பின்தான் தெரிந்து கொள்கின்றான் கதிர்.  

மேலும் படிக்க ...

சமுத்திரன் கூறியதும் கூற மறந்ததும் கூறியவற்றில் குறிப்பிடத் தவறியதும் 'சமுத்திரன் எழுத்துகள் தொகுதி -03 - கலை இலக்கியம் சமூகம் அரசியல் -விமர்சனப் பார்வை' நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! - வாகீசன் -

விவரங்கள்
- வாகீசன் -
வாகீசன்
27 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சமுத்திரனின் 'சமுத்திரன் எழுத்துகள் தொகுதி -03 - கலை இலக்கியம் சமூகம் அரசியல் -விமர்சனப் பார்வை' நூல் பார்வைக்குக் கிட்டியது. சமுத்திரன் எழுத்துகள் என்ற நான்கு நூல்களின் தொகுப்பாக சமூக-இயல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நூற்தொகுதி ஒன்றின் மூன்றாவது நூலாக இது வெளி வந்திருக்கின்றது. 4 தொகுப்புக்களாக இந்த நூல்கள் வெளிவந்திருந்த போதிலும், கடந்த காலங்களில் எனக்கு கலை, இலக்கிய, பண்பாட்டுத் தளங்களில் பயணிப்பதற்கு அதிக சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்த படியினால் இந்த மூன்றாவது நூலே எனது தெரிவில் முதலாவதாக விளங்கியது.

சமுத்திரன் எழுத்துக்கள் சிறு வயது முதலே எனக்கு அறிமுகமாயிருந்தது. ஆயினும் எனக்குள் அவை அதிக பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆனால் பிறிதொரு சமயம், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஏ.ஜே.கனகரட்னாவின் 'மார்க்சியமும் இலக்கியமும்' நூல் எனது கைக்குக் கிடைத்தது. அதில் ரெஜி சிறிவர்த்தனவின் 'உருவம், உள்ளடக்கம், மார்க்சிய விமர்சனம்' என்ற கட்டுரை இடம்பெற்றிருந்தது. இது 'லங்கா கார்டியன்' இல் சமுத்திரன் எழுதிய கட்டுரை ஒன்றிற்கு எதிர்வினையாக எழுதிய கட்டுரையாகும். அந்தக் காட்டமான கட்டுரையை வாசித்தபோது அந்த விவாதத்தினை கிளப்பிய சமுத்திரனின் கட்டுரையினை வாசிக்கும் ஆர்வம் மேலிட்டது. ஆனால் இதுவரை அந்தக் கட்டுரையினை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ரெஜி சிறிவர்த்தனவின் எதிர்வினைக்கு சமுத்திரன் எழுதிய பதிலாக அன்றைய 'சமர்' இதழ் ஒன்றில் 'கலை இலக்கியத்தில் உள்ளடக்க உருவ உறவும் மார்க்சீய விமர்சனமும்' என்ற கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது. அந்தக் கட்டுரையின் கனதியில் இருந்தும், படைப்புக்களில் உருவ உள்ளடக்கம் குறித்து தர்க்க ரீதியாக அவர் வெளிப்படுத்திய கருத்துக்களில் இருந்தும் அவருடைய ஆளுமையின் வீச்சினை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதன் பின்பு என் பார்வைக்குக் கிட்டிய அவரது கட்டுரைகள் எதனையும் நான் தவறவிட்டிருக்கவில்லை.

மேலும் படிக்க ...

சந்திரா இரவீந்திரனின் 'மாமி சொன்ன கதைகள்'! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நூல் அறிமுகம்
26 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனக்குத் தெரிந்து மாமியாருடனனான தமது அனுபவங்கள் எழுத்தில் வடித்தவர்கள் இருவர். ஒருவர் நடிகை பானுமதி ராமகிருஷ்ணா. அடுத்தவர் இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர் சந்திரா இரவீந்திரன். தற்போது புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் அவர் இலங்கையில் இருந்த காலத்திலேயே சந்திரா தியாகராஜா என்னும் பெயரில் எழுதிக்கொண்டிருந்தவர். நீண்ட காலமாக அவர் சந்திரா இரவீந்திரனின் மூத்த அக்காவாக இருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் பின்னர் புகலிடத்தில்தான் இருவருமே ஒருவர் என்பதை அறிந்து கொண்டேன்.

பானுமதி ராமகிருஷ்ணா மிகச்சிறந்த நடிகை, பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், நர்த்தகி மட்டுமல்லர் தெலுங்கில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும் கூட. இவர் தனது மாமியாருடனான அனுபவங்களை நகைச்சுவைப் புனைகதைகளாக்கித் தெலுங்கில் எழுதிய கதைகள் 'பானுமதி கதலு'  என்னும் பெயரில் தொகுப்பாக வெளியாகி மிகுந்த வரவேற்பைப்பெற்றது. அத்துடன் ஆந்திர மாநிலத்தின் சாகித்திய விருதினையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவை தமிழில் ராணிமுத்து வெளியீடாக எனது பால்ய பருவத்தில் 'மாமியார் கதைகள்' என்னும் பெயரில் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியானது. கதைகள் 'மாமியாரும் ஆவக்காய் ஊறுகாயும்' போன்ற தலைப்புகளில் இருந்தன. வாசித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தது இன்றும் பசுமையாக நினைவிலுள்ளது. பின்னர் வானதி பதிப்பகத்தின் வெளியீடாக இரு தொகுதிகள் வெளிவந்தன. 'மாமியார் கதைகள்', 'மாமியாரும் புதையலும்' என்னும் தலைப்புகளில் வெளியாகின.

மேலும் படிக்க ...

லண்டன் 'விம்பம்' ஏற்பாட்டில், 'சமூகம் இயல் பதிப்பக' வெளியீடாக சமுத்திரனின் (பேராசிரியர் என்.சண்முகரத்தினம்) நான்கு நூல்களின் அறிமுகமும் , கலந்துரையாடலும்! - எம்.பெளசர் -

விவரங்கள்
- எம்.பெளசர் -
நிகழ்வுகள்
25 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எதிர்வரும் சனி ( 29 ஏப்ரல் - மாலை )இலங்கையின் கடந்த 50 வருட அரசியல் , சமூக நிலைமைகளை முன் வைத்து , கல்வியலாளர், அரசியல் செயற்பாட்டாளர் சமுத்திரனின் எழுத்துக்களை கொண்ட 4 நூல்களின் அறிமுகமும் கலந்துரையாடலும்…ஈடுபாடும் ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறோம்!

மேலும் படிக்க ...

இலாப நோக்கற்று இயங்கும் ஓராயம் அமையம்! - வ.ந.கி-

விவரங்கள்
- வ.ந.கி-
சமூகம்
24 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உலகம் கொரோனாப் பெருந்தொற்றில் மூழ்கிக் கிடந்த காலகட்டத்தில் ,  1971-1977 காலப்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியில், சமகால வகுப்புகளில் கல்வி கற்று வெளியேறி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் மாணவர்களில் சிலர் இணைந்து உருவாக்கிய, சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும், கனடாவிலும், இலங்கையிலும் பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பே ஓராயம் அமையம் ஆகும். இவ்வமைப்பு புலத்து மக்களோடு இணைந்து செயற்படும் வகையில் கல்வி, விவசாயம், நீர்வளப்பாதுகாப்பு, சுகவாழ்வு, சூழற்பாதுகாப்பு, ஆரம்பக் குழந்தைக் கல்வி எனப் பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தி வருவதுடன், கடந்த மூன்று வருடங்களாகப் பல்வேறு திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை, ஏப்ரில் 22, 2023 அன்று  ஓராயம் அமையம்  'செல்நெறியும் பகுப்பாய்வும்' என்னும் தலைப்பில் மெய்நிகர்க் கலந்துரையாடலொன்றினை நடத்தியிருந்தது. இதில் கடந்த மூன்று  வருடங்களாக இயங்கிவரும் ஓராயம் அமையம்  தன் கடந்த கால, நிகழ்கால, எதிர்காலத் திட்டங்கள் பற்றி உரையாடியது. இந்நிகழ்வில்  முன்பள்ளிக் கல்வி மேம்பாடு,   பாடசாலை மற்றும் வீட்டுத்தோட்டங்கள்,  கிராமியக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும்  சுகவாழ்வு ஆகிய நான்கு விடயங்களையொட்டிக் கலந்துரையாடப்பட்டது.  இந்நிகழ்வில் இத்துறைகளைச் சார்ந்த ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் பங்குபற்றியிருந்தார்கள்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் மறைவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
24 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் (குப்பிழான் ஐயாத்துரை சண்முகலிங்கம்) அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் தெரியப்படுத்தியது. எதிர்பாராத செய்தி.  அவர் மறைவால் வாடும் குடும்பத்தவர், நண்பர்கள், எழுத்துலகைச் சேர்ந்தவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் 'பதிவுகள்' சார்பாகவும் , என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்.

நந்தினி சேவியர், கே.எஸ்.சிவகுமாரன்  , குப்பிழான் ஐ.சண்முகன் இவர்கள் என் முகநூல் நண்பர்களாகவுமிருந்தவர்கள்.  நான் என் இளமைப்பருவத்தில் வியந்து நின்ற  இவர்களைப்போன்ற இலக்கிய ஆளுமைகளுடன் நண்பர்களாகப் பழக, கருத்துகளைப் பரிமாற நவீன இணையத்தொழில் நுட்பம் வழி சமைத்துத் தந்தது நவீனத் தொழில் நுட்பத்தின் ஆரோக்கியமான அம்சங்களிலொன்று.

சிலரைப் பார்த்ததுமே பிடித்துப் போய்விடும். இவரை நான் ஒருபோதும் நேரில் பார்த்ததில்லை. ஆனால் இவரது மீசை, புன்னகையுடன்  கூடிய முகத்தோற்றத்தைக் காட்டும் புகைப்படத்தை முதலில் பார்த்ததுமே இவரை எனக்குப் பிடித்துவிட்டதென்பேன். அமைதியான, எதிர்த்து ஓங்கிப் பேசாத ஒருவர் என்பதை அப்புகைப்படம் எடுத்துக்காட்டியது. அது போலவே இவர் இருப்பதை  இவருடனான  நேர்காணல்கள் எடுத்துக்காட்டின.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. சிறுகதை: ஜள்ளெ - முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
  2. முதல் சந்திப்பு: பல்துறை ஆற்றல் மிக்க கலா வித்தகி ஆனந்தராணி பாலேந்திரா! - முருகபூபதி -
  3. நான் நினைவில் வைத்துக்கொள்கிறேன் கோமகன்! - நெற்கொழுதாசன் -
  4. சிறுகதை: இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்.... - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
  5. குரு அரவிந்தன் வாசகர் வட்டம் சிறுகதைத் திறனாய்வுப் போட்டி-2023, முடிவுகள்! - சுலோச்சனா அருண் -
  6. நினைவு கூர்வோம்: புரட்சிப்பெண் பிறேமாவதி மனம்பெரி! - வ.ந.கி -
  7. கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் - எழுத்தாளர் அரங்கம் எட்டு!
  8. நினைவு கூர்வோம்: அன்னை பூபதி கணபதிப்பிள்ளையின் நினைவு நாள் ஏப்ரில் 19. - வ.ந.கி -
  9. எழுத்தாளர் ரொய் ரட்னவேல் ( Roy Ratnavel)வாழ்க்கை அனுபவ நூலான Prisoner # 1056 (கைதி # 1056) வெளியீடு! - வ.ந.கி -
  10. முகநூற் பதிவு: கிருஷ்ணரும், நாரதரும் கூடிப்பெற்ற 60 பிள்ளைகளில் 37 வது பிள்ளையின் பெயர் சோபகிருது. - சூர்யா சேவியர் (Surya Xavier) -
  11. கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 'தூங்காதே! தம்பி தூங்காதே!' - ஊர்க்குருவி -
  12. Srilankan Australians ( Inc ) Presents மெல்பனில் புத்தகம், ஓவியம், ஒளிப்படக் கண்காட்சி! - முருகபூபதி -
  13. புத்தாண்டு பிறக்கட்டும்.! பெய்யட்டும் இன்பப் பெருமழை! - வ.ந.கிரிதரன் -
  14. நெஞ்சாரச் சித்திரையை வரவேற்று மகிழ்வோம்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
பக்கம் 50 / 104
  • முதல்
  • முந்தைய
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • அடுத்த
  • கடைசி