பதிவுகள் முகப்பு

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022ஆம் ஆண்டுக்கான இயல் விருதுகள்!

விவரங்கள்
- தகவல்: தமிழ் இலக்கியத் தோட்டம் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த போட்டி முடிவுகள்! சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள்!

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
27 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக  அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு  இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது.

இந்தத்  தீர்மானத்திற்கு அமைவாக குறிப்பிட்ட ஆண்டில் இலங்கையில் வெளியான சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு முதலான ஐந்து துறைகளில் வெளியான நூல்கள், அவற்றை எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தன. அதன்பிரகாரம் கிடைக்கப்பெற்ற நூல்களை தேர்ந்த இலக்கிய வாசகர்கள் படித்து,  பரிந்துரை செய்தவற்றிலிருந்து இறுதிக்கட்டத் தேர்வில் சிறந்த நூல்களாக தெரிவானவற்றுக்கு பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இம்முறை சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் மூன்று நூல்கள் போட்டியில்  பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. நாவல், மொழிபெயர்ப்பு துறைகளில் இம்முறை எந்த நூலும் பரிசுக்குரியதாக தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.


போட்டி முடிவுகளும் பரிசுத் தொகையும்

வேப்பமரமும் பவளம் ஆச்சியும்    ( சிறுகதை )
விவேகானந்தனூர் சதீஸ்  எழுதியது   - பரிசு -   ரூபா ஐம்பதினாயிரம்

கடவுள் என்பது துரோகியாயிருத்தல் ( கவிதை )
சி. கருணாகரன் எழுதியது.  பரிசு ரூபா ஐம்பதினாயிரம்.

மன்னார் மாதோட்டப் புலவர்கள் – கலைஞர்கள் ( கட்டுரை )
அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார்   எழுதியது.
பரிசு - ரூபா ஐம்பதினாயிரம்.  

பரிசு பெற்றவர்களுக்கான  பரிசுத் தொகையும் சான்றிதழ்களும்,  2023  பெப்ரவரி  மாதத்தில்   குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கு  அனுப்பி வைக்கப்படும் . பரிசுத்தொகை – இலங்கை நாணயத்தில் தலா 50 ஆயிரம் ரூபா. (50,000/= ரூபா )

மேலும் படிக்க ...

மெல்பனில் ஆவூரானின் சின்னான் ( குறுநாவல் ) வெளியீடு முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
27 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும்,  எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான ஆவூரான் சந்திரனுக்கு இந்த ஆண்டு மணிவிழாக் காலம்.  இவர் எழுதிய சின்னான் ( குறுநாவல் ) வெளியீடு,  ஜனவரி  28 ஆம் திகதி ( 28-01-2023 ) சனிக்கிழமை மாலை      3-00 மணிக்கு மெல்பனில்  பேர்விக் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் நடைபெறும். முகவரி: 112, High Street, Berwick, Vic – 3806

மேலும் படிக்க ...

நினைவுகளின் தடத்தில் - (27 & 28) - வெங்கட் சாமிநாதன் -

விவரங்கள்
- வெங்கட் சாமிநாதன் -
வெங்கட் சாமிநாதன் பக்கம்
26 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அமரர்  கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் தடத்தில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


மே 2009 இதழ் 113 

நினைவுகளின் தடத்தில் - (27 )

எனக்கு அப்போது அதன் தீவிரம் தெரியவில்லை. அத்திம்பேர் அது பற்றிப் பேசிய விவரங்களிலிருந்தும், பேசிய தோரணையிலிருந்தும், ஏதோ ஒரு ஊரை விட்டு இன்னொரு ஊருக்கு வந்த பாவனையில் தான் நான் அதை எடுத்துக் கொண்டேன்.அப்படித்தான் என் மனதில் அது இறங்கியது. அத்தை சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது என்னைக் கேலி செய்து கொண்டும் இருந்தாள். அவள் கேலி பண்ணும்போது அப்பாவும் அம்மாவும் சந்தோஷமாகச் சத்தமிட்டுச் சிரித்தனர். என் வெட்கப்பட்ட முகம் அவர்களை இன்னமும் சத்தமிட்டுக் கொண்டாட வைத்தது. ஏதோ புதிதாக ஏதோ ஊரிலிருந்து வந்த உறவினர்கள், நான் புதிதாகப் பார்த்து உறவையும் தெரிந்து கொள்ளும் உறவினர்கள் என்று தான் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

அந்த நாட்களில், 1947 ஆரம்ப மாதங்களில், அவருக்கு வயது 30-35 இருக்க வேண்டும். லாகூரில் இருந்தவர் என்றால் தேவங்குடியிலிருந்து நேராக லாகூரில் வேலை கிடைத்துச் சென்றவரில்லை. எங்கெங்கோ அலைந்து திரிந்து, கடைசியாக லாகூர் சென்றடைந்திருக்க வேண்டும். அவர் நல்ல சாஸ்திரோக்தமான, தெய்வ நம்பிக்கையுள்ள, தன் ஆசாரங்களை விட்டு விடாத மனிதர். லாகூர் முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட ஊர். அதோடு இந்து முஸ்லீம் அரசியல் பகைமை தீவிரமாகிக்கொண்டு வந்த காலம். இனி உங்களைக் காப்பாற்ற முடியாது என்று அவரது முஸ்லீம் வீட்டுச் சொந்தக் காரர் கைவிரித்து விட்ட நிலைமை. அந்த காலத்தில் 25,000 ரூபாய் பாங்கிலிருந்து சேர்த்து வைத்ததை எடுக்கமுடியாது குடும்பத்தோடு ஓடி வந்தவர் என்றால், அது பெரிய பணம், பெரிய இழப்பு. அந்த அளவு சேர்க்க எவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கும் அவருக்கு, எத்தனை வருடங்களாக அந்த வட இந்தியக் கோடியில் அவர் இருந்திருக்கிறார், ஆசாரம் மிகுந்த ஒரு தஞ்சை கிராமக் குடும்பம். அப்போது அவர் லாகூரில் தன் வாழ்க்கை பற்றிச் சொன்னதிலிருந்து அவரது லாகூர் நாட்கள் மிக சந்தோஷமாகத் தான் கழிந்திருக்கின்றன, கலவரங்கள் தீவிரமடைந்த கட்டம் வரை. லாகூர் அவருக்கு மிகப் பிடித்தமான இடமாகத் தான் இருந்திருக்கிறது.

மேலும் படிக்க ...

சிரித்திரன்: செல்வி ஆனந்தராணி இராசரத்தினத்துடன் (திருமதி ஆனந்தராணி பாலேந்திரா) ஒரு நேர்காணல்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாடகக் கலைஞரான ஆனந்தராணி பாலேந்திராவின் கலைத்துறைப்பங்களிப்பு , குறிப்பாக நவீனத் தமிழ்நாடகத்துறையில் முக்கியமானது. நாடக நடிகை, திரைப்பட நடிகை, நர்த்தகி எனத் தன் ஆளுமையை மேடை, திரை, வானொலி எனப் பல்வேறு களங்களிலும் சிறப்பாக வெளிப்படுத்தியவர்.  

இவருடனான நேர்காணலொன்று சிரித்திரன் சஞ்சிகையின் டிசம்பர் 1981 இதழில், 'தேன்பொழுது' என்னும் பகுதியில் வெளியாகியுள்ளது. இந்நேர்காணல் இவர் செல்வி ஆனந்தராணி இராசரத்தினமாக இருந்தபோது எடுக்கப்பட்ட நேர்காணல். நேர்காணலை எடுத்தவர்கள் பொன் பூலோகசிங்கம் & கனக.சுகுமார்.

இந்நேர்காணலில் ஆனந்தராணி பாலேந்திரா அவர்கள் அளித்த பதில்கள் அவர் நவீன நாடகத்துறை, நாடகமயப்பட்ட நடனத்துறையில் எவ்வளவுதூரம் ஆழ்ந்த புரிதலைக்கொண்டிருந்தார் என்பதை விளக்குகின்றன.  ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் தான் பிறேக்டின் 'அந்நியப்படுத்தப்பட்ட நடிப்பு' வகையிலேயே நடிப்பதாகக் கூறுகின்றார்.

மேலும் படிக்க ...

முகநூற் குறிப்பு: செங்குத்துக் காடு - Vertical Forestம் - பா.ரவீந்திரன் -

விவரங்கள்
- பா.ரவீந்திரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
25 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பாலமோகன், சுவிஸ் ரவி, பா.ரவி ஆகிய பெயர்களில் எழுதும் எழுத்தாளர் பா.ரவீந்திரனின் முகநூற் குறிப்பிது. - பதிவுகள்.காம் -


கட்டடக்கலை ஒரு அற்புதமான கலை. பின்நவீனத்துவம் தோன்றிய களமும் அதுதான். இப்போ கட்டடக் கலையில் புதிய சகாப்தமொன்றை Vertical Forest (செங்குத்துக் காடு) நிறுவியிருக்கிறது.  செங்குத்து காடு என்றால் என்ன. அதன் கருத்தாக்கம் (concept) என்ன.

மாடிக் குடியிருப்புகளில் மனிதஜீவியை மட்டும் மையப்படுத்தும் வாழ்முறையைத் தவிர்த்து (அதாவது மனித மையநீக்கம் செய்து), சாத்தியப்பாடான அளவு இயற்கையுடனான கூட்டு உறவை மையப்படுத்துவதே இதன் கருத்தாக்கம் ஆகிறது. அதாவது மனிதர்கள், மரம் செடி கொடிகள் மற்றும் பறவைகள் போன்ற உயிரினங்களுடனான கூட்டு உறவை மையப்படுத்துகிற கருத்தாக்கம் கொண்ட கட்டடத் தொகுதியை நகர வாழ்வியலுக்குள் நிர்மாணிப்பதாகும். இதை மரங்களின் இருப்பிடத்தில் மனிதர்கள் வாழ்வதான கருத்தாக்கமாகவும் சிலர் குறிப்பிடுவர். அதாவது செங்குத்துக் காட்டில் மனிதர்கள் வாழ்வதான ஒரு பரிணாமத்தை இக் கருத்தாக்கம் தருகிறது.

மேலும் படிக்க ...

வளர்மதி 60இல் (1963 - 2023) உள்ளம் பொற்கிழி பரிசுப் போட்டிகள்! - தகவல்: செல்வன் -

விவரங்கள்
- தகவல்: செல்வன் -
நிகழ்வுகள்
25 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மகளின் பார்வையில் நான்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் எனது பிறந்தநாளையொட்டி (ஜனவரி 23) எனது இளைய  மகள் தீபிகா எனக்களித்த அன்பளிப்பு. நான் எனது நாவலான 'குடிவரவாள'னை வாசித்துக்கொண்டிருக்கும் காட்சியை அழகாக வரைந்திருக்கின்றாள். நன்றி மகளே.

ஆய்வு: இன்ப, துன்ப உணர்வில் தலைவன் நெஞ்சொடு கிளத்தல் - திருமதி கு.வளா்மதி, உதவிப் பேராசிாியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி. -

விவரங்கள்
- திருமதி கு.வளா்மதி, உதவிப் பேராசிாியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி. -
ஆய்வு
24 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

மாந்தர் தனக்குத்தானே மனதுக்குள் பேசுவதும், தனக்குத்தானே வாய்திறந்து பேசுவதும் ‘ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்’ எனப்படும். சங்கப்பாடல்களில் காணப்படும் நெஞ்சொடு கிளத்தல் மற்றும் தனிமொழியில் அமைந்த பாடல்களை ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் எனும் நிலையில் ஆராய இயலுகின்றது. சங்கஅக-புறப்பாடல்களில்;, ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, அஃறிணைப் பொருட்களுடன் பேசுதல்’ என்ற அடிப்படையில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் அமைந்துள்ளது. சங்க அகப்பாடல்களைப் புறப்பாடல்களுடன் ஒப்பிடும் போது மாந்தர்கள் தனக்குத் தானே பேசுவதாக அமைந்துள்ள பாடல்கள் அகஇலக்கியங்களிலேயே மிகுதியாகக் காணப்படுகின்றன. களவுக்காலத்திலும், கற்புக்காலத்திலும் தலைவன் - தலைவிக்கு இடையிலான பிரிவின்போதே தனக்குத்தானே பேசிக்கொள்ளும் சூழல் மிகுதியும் உருவாகின்றது. இதன் காரணம் பிரிவே, உணர்ச்சியை மிகுவிக்கிறது எனலாம். மாந்தர் கேட்போர் யாருமின்றி தன்னந்தனியாக நின்று பேசுவது ‘தனக்குத்தானே பேசுதல்’ எனப்படும். இம்முறை சங்க இலக்கியங்களில் ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி’ என்ற சொற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் இன்ப, துன்ப உணர்வில் தலைவன் நெஞ்சொடு கிளத்தல் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

நெஞ்சொடு கிளத்தல்

அகமாந்தர் பிரிவுத்துயரத்தினால் தனிமையில் தன் நெஞ்சிற்குக் கூறும் நிலை ‘நெஞ்சொடு கிளத்தல்’ ஆகும். நெஞ்சொடு கிளத்தலில், நெஞ்சுக்குக் கூறுபவரின் நனவுமனச் செயல்பாடுகளும் நனவிலி மனவுணர்வுகளுமே ஒன்றுக்கொன்று எதிர்கொள்கின்றன. தொல்காப்பியர், களவிலும் கற்பிலும் தலைவன், தலைவியின் கூற்றுகளை வரையறுக்குமிடத்து ‘நெஞ்சொடு பேசுவதும்’ அவர்களுக்கு உரியது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை,

“நோயும் இன்பமும் இருவகை நிலையில்
காமம் கண்ணிய மரபிடை தெரிய
எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய
உறுப்புடை யதுபோல் உணர்வுடையது போல்
மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும்”1

என்ற நூற்பா விளக்குகின்றது. சங்க அகப்பாடல்களில் தலைவன், தலைவி இருவருமே நெஞ்சொடு பேசுவதைக் காணமுடிகிறது.

மேலும் படிக்க ...

புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல் - நோயல் நடேசன் -

விவரங்கள்
- நோயல் நடேசன் -
நூல் அறிமுகம்
23 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் இந்திரனது ‘தமிழ் அழகியல்’ ‘புத்தகத்தைப் படிக்கும் வரை நான் தமிழில் அழகியலை முழுமையான ஒரு பகுதியாகச் சிந்திக்கவில்லை . ஆனால் , உலகத்தின் பல வசதியான நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்தாலும் துபாயில் உள்ள நட்சத்திர விடுதிகள்தான் என்னைக் கவர்ந்தன. அதற்கான காரணத்தை யோசித்தேன். அரேபியா இஸ்லாமியர்களிடம் எப்பொழுதும் இன்ரீரியரர் டிசையின் (interior design) நன்றாக இருந்தது. உருவங்கள் அற்று அவர்கள் சிந்திப்பதாலோ? தெரியவில்லை.

அதேபோல் லண்டனில் உள்ள கட்டிடங்களுக்கும் பாரிசில் உள்ள கட்டிடங்களுக்கும் வெளித்தோற்றத்தில் தென்படும் வித்தியாசம் சாமானியனுக்கும் புரியும் . ஒரு குளிர் காலத்தில் ஜேர்மனியில் நின்றபோது, பெரும்பாலான இளம் பெண்கள் ஓடுவதற்கான காலணிகளை அணிந்திருந்தார்கள். ஆனால், பாரிசில் எனது மனைவி கடையொன்றின் உள்ளே சென்றபோது நான் நடைபாதையில் நின்று அவதானித்தேன். 80 வயதான ஒரு கறுப்பு நிறப் பெண், அந்த வருடத்தின் மோஸ்தரான குதிக்காலுள்ள காலணியை அணிந்தவாறு சிரமப்பட்டு நடந்துவந்தார்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 26: “மொழிபெயர்ப்பு இலக்கியமும் அதன் இயங்குநிலையும்”

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
23 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சிறுகதை: அவனும் அவளும் - முனைவா் சி. இரகு , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். -

விவரங்கள்
- முனைவா் சி. இரகு , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். -
சிறுகதை
23 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கத்தரி வெயில் கொளுத்தோ கொளுத்தென கொட்டிக் கொண்டிருக்க,  ரகு சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஓரமாய் பேருந்திற்காகக் காத்துக்கொண்டிருந்தான். மூன்று புறங்களிலும் பேருந்து கிழக்கு, மேற்கு, தெற்காக முப்புறங்களிலும் சென்றுகொண்டிருந்தன. ரகு வடக்கிலிருந்து வருகின்ற ஒவ்வொரு பேருந்தை எல்லாம் உற்றுநோக்கிக்கொண்டிருந்தான். ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாய்கொண்டே போயிருக்க. அவன் உடல் முழுவதும் வியா்வைத் துளிகள் வெளிவரத் தொடங்கின. கதிரவனின் தாக்கம் அளவுக்கதிமாகவே போய்க்கொண்டிருந்தது.

     சற்றுநேரம் கழித்து திருச்சியிலிருந்து கரூா் செல்லக்கூடிய PRT தனியார் பேருந்து ஒன்று வந்தது. அப்பேருந்து வருவதை அறிந்த ரகு பேருந்தினை உன்னிப்பாகக் கவனித்கொண்டே இருந்தான். பேருந்து முன்புறம் கண்ணாடியை ஒட்டியே ஒரு மங்கை ஒருத்தி உட்காந்திருந்தாள். அவளைக் கவனித்துக்கொண்டே முன்புறம் ஏறலாமா, பின்புறம் ஏறலாமா என்று எண்ண்ணிக்கொண்டே ஒரு வழியா பின்புற படிக்கட்டில் ஏறினான்.

   பேருந்தில் ஏறிய பின்னா் கடைசி சீட்டுக்கு முன்னாடி சீட்டுல இடம் இருந்தும் உட்காராமல் நின்று கொண்டே இருக்கின்றான்.  ரகுவின் தோழா்கள்  புதியதாய் ஆடை எடுத்து கொடுத்ததை உடலுக்கு ஏற்றவாறு நன்றாக தைத்து ஒரு புதுமையான தோற்றத்தில் இருந்தான். ஆள் பாதி ஆடை பாதி என்னும் பழமொழிக்கு ஏற்றவாறு பெண்களுக்கே பிடித்தமான பிங்க் கலா்ல சட்டைய உடுத்திக்கொண்டு, அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆபீசர் போல இருந்தான்.   

பேருந்தில், கண்ணாடி முன்னாடி உட்கார்ந்திருந்த அவள் பேருந்து செல்லும் எதிர்திசையை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த பெண்ணை ரகு முதலில் பார்த்தான், தலையை கீழேபோட்டான். அவளும் பார்த்து பார்க்காத மாதிரி இருந்தாள். மீண்டும் அவளை ரகு பார்க்கின்றான், பார்த்த மறுகணமே மீண்டும் தலையை கீழே போட்டுவிடுகின்றான். பிறகு மனதை தைரியமாக வைத்துக்கொண்டு பார்க்கின்றான்.

 அப்பொழுது  ரகுவிற்கு ஓா் எண்ணம் உதயமானது. என்னவென்றால் வகுப்புத் தோழி வினோத்தீ ரகுவிடம் ஒரு பெண்ணை வச்சக்கண்ணு வைக்காம தொடா்ந்து பார்த்துகிட்டே இருந்தா எந்த பெண்ணாக இருந்தாலும் மடக்கிடலாம்னு சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் ரகுவும் தொடா்ந்து இரண்டு முறை மூன்று முறை பார்த்துக்கிட்டே இருந்தான். அவளும் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தவள் அவனை தொடா்ந்து பார்க்கத் தொடங்குகின்றாள்.  

மேலும் படிக்க ...

ஜெய்சங்கரின் வரவின் பின்னால் அந்தரிக்கும் சக்திகள் - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
22 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எதிர்ப்பார்க்கப்பட்டது போல், ஜெய்சங்கரின் வருகையின் பின், பல்வேறு சக்திகள், பேச்சுவார்த்தையின் தாக்கத்தை முற்றாக இல்லாதொழிக்கவோ என்னவோ, கங்கணம் பூண்டாற் போல், வரிந்து கட்டி களத்தில் இறங்கியுள்ளது இப்போது தெரியவந்துள்ளது.  இதில், முதலாவது வெடி ஓசை, ஜனாதிபதி அவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டது. அதாவது, ஜெய்சங்கர், பேச்சுவார்த்தை முடித்து நாட்டை விட்டு கிளம்பிய கையோடு, அன்னார், தமிழ் தலைவர்களை பேச அழைத்துள்ளார். ஜனாதிபதியின், பேச்சுக்கான இவ் அழைப்பை பலர் நிராகரித்துள்ள வேளை, சம்பந்தனும் சுமந்திரனும், கிளம்பி ஜனாதிபதி அவர்களை சந்தித்துள்ளனர்.  இதற்காரன காரணம், சுமந்திரன், ஜெய்சங்கரிடமே தெரிவித்துள்ளது போல், பேச்சுவார்த்தைக்கு இந்நாட்டின் உயர்பீடம் அழைக்கும் போது, அப்பேச்சுவார்த்தைகள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், நாங்கள் அதில் பங்குபற்றாவிட்டால், பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாரில்லாதவர்கள் - அதுவும் அழைத்த போதும் கூட, என்ற அவபழிக்கு ஆளாகும் சூழ்நிலையிலேயே, இவ்வாறு கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் எழுகின்றன என்று கூறப்பட்டாற் போலும் இருக்கலாம்.  இருந்தும், இது, தமிழ் தலைவர்களிடையே பிளவுகளை உருவாக்க கூடியது என்பதில் ஐயமில்லை.
இது விடயத்தின் ஒரு பக்கம். விடயத்தின் மறுபக்கமே, சுவாரஸ்யமானது - சாணக்கிய நகர்வு சம்பந்தமானது.

யாழில், தனது பொங்கல் விழாவில், 13 உடனடியாக அமுல்படுத்தப்படாது என்ற தனது நிலைப்பாட்டை அவிழ்த்து விட்ட ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கூற்றுக்கு நேர் விரோதமான நிலையில், அண்மையில் வருகை தந்த ஜெய்சங்கரின் நிலைப்பாடு இருந்துள்ளது. அதாவது ’13 உடனடியாக முழுமையாக அமுல்படுத்தப்பட்டாக வேண்டும்’ என்பது அவரது நிலைப்பாடாகின்றது.  இத்துடன் நிறுத்தாது, அன்னார் உடனடியாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டாக வேண்டும் என்ற அழைப்பும் அவரால், அன்னார் கையில் திணிக்கப்பட்ட கதையுமானது.  அப்படி எனில், தான் இந்தியா செல்லும் முன், சில விடயங்களை இங்கே முடித்தாக வேண்டும் - (காட்டுவதற்கேனும் அல்லது பேசுவதற்கேனும்). முக்கியமாக, 13வது திருத்த சட்டத்தின் அமுலாக்கத்தை அல்லது மாகாணசபை தேர்தலை - இழுத்தடிப்பது – என்பதற்கு வழிவகை செய்யும் வகையில், சில நகர்வுகள் இங்கே மேற்கொள்ளப்பட்டாக வேண்டி உள்ளது.

மேலும் படிக்க ...

ஸ்நேகா பதிப்பக நூல் வெளியீடு: 'தண்ணீர் - நீரலைகளும், நினைவலைகளும்' - தகவல்: பாலாஜி -

விவரங்கள்
- தகவல்: பாலாஜி -
நிகழ்வுகள்
21 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூல் அறிமுகம்: தாயிரங்கு பாடல்கள் - ஓர் அறிமுகம்! - பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் -

விவரங்கள்
- பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் -
நூல் அறிமுகம்
21 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- மணற்கேணி பதிப்பகத்தின் வாயிலாகக் கலாநிதி செல்லத்துரை சுதர்சனின் "தாயிரங்கு பாடல்கள்" என்ற  கவிதைத் தொகுதி  2023 சென்னை புத்தகத் திருவிழாவில் வெளிவந்துள்ளது.  அத்தொகுதிக்குப் பேராசிரியர்  நுஃமான்  எழுதிய அறிமுகமிது. -


கலாநிதி செல்லத்துரை சுதர்சன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக ஈழத்து இலக்கிய உலகில் தீவிரமாகச் செயற்பட்டுவரும் இளந் தலைமுறையைச் சேர்ந்த ஒரு முக்கியமான ஆளுமையாக அறியப்படுபவர். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில்; சிறப்புப் பட்டம் பெற்று, அங்கேயே சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றிவருகிறார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழ்நாட்டின் முக்கியமான எழுத்தாளர்கள், விமர்சகர்கள், அறிஞர்களுடன் நெருக்கமான உறவு உடையவர். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் என்றவகையில் தமிழியல் ஆய்வில் ஆழமாகத் தடம்பதித்துவருபவர். முக்கியமான ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆசிரியர், பதிப்பாசிரியர் என்றவகையில் இதுவரை சுமார் இருபது நூல்கள் வெளியிட்டுள்ளார். இளந் தலைமுறையைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களுள் இவரளவு தீவிரமாகச் செயற்படுபவர்கள் மிகச் சிலர் என்றே சொல்லவேண்டும்.

சுதர்சன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கவிஞராகவும் தன்னை நிலைநாட்டிக்கொண்டவர். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே 2004ல் அவருடைய முதலாவது கவிதைத் தொகுதி மற்றுமொரு மாலை வெளிவந்தது. அதே ஆண்டில் பல்கலைக்கழக மாணவர்களின் கவிதைகளைத் தொகுத்து என் தேசத்தில் நான் என்ற தொகுதியையும் அவர் வெளியிட்டார். நீண்ட கால இடைவெளியின் பின்னர் காலிமுகம் 22 என்ற அவருடைய இரண்டாவது தொகுதி சமீபத்தில் வெளிவந்தது. இப்போது, காலிமுகம் 22 தொகுப்புக் கவிதைகளையும் உள்ளடக்கிய அவரது மூன்றாவது கவிதைத் தொகுதி தாயிரங்கு பாடல்கள் என்ற தலைப்பில் வெளிவருகின்றது.

தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்கு ஈழம் வழங்கிய ஒரு முக்கியமான கொடை அதன் அரசியல் எதிர்ப்புக் கவிதைகள் எனலாம். முப்பது ஆண்டுகால யுத்தமும் அது ஏற்படுத்திய அவலமும் அதன் விளைவாக இன்றுவரை தொடரும் அரசியல் நெருக்கடிகளும் அதன் அடிப்படையாகும். அதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டுக் கவிஞர்கள் இந்தக் குரூர அனுபவத்துக்கு ஆளாகவில்லை. அதனால் துரதிஷ்டவசமாகத் தமிழ்நாட்டுக் கவிதை இந்த அளவு அரசியல் கூர்மைபெறாது போயிற்று.

மேலும் படிக்க ...

சிறுகதை: இருக்கிறன் - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
சிறுகதை
20 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆறுமுகத்தாற்றை முகம் பெருத்த யோசனையில் ஆழ்ந்திருந்தது. தலையை பக்கவாட்டில் குலுக்கிக் கொண்டார். எதுவும் தோன்றவில்லை. மேலும் கீழுமாகப் பார்த்து யோசித்தார். அதுவும் சரிவரவில்லை.ஒழுகும் மூக்கைப் துடைப்பதற்கு என்று கைகாவலாக வாயில் கவ்வும் கை லேஞ்சியையும் வழமை போல கவ்விக் கொண்டார். அவனிட்டையாவது கேட்டுப் பாப்பம்.

''டேய் தர்மா...தர்மா'' என்று அதட்டலாகக் கூப்பிட்டார். வேலையில் இருந்த செருக்கு இன்னும் மறையவில்லை.

கழிவறையில் இருந்து அவனும் அதே தொனியில் பதில் சொன்னான்.

''கொஞ்சங் இருக்க மாத்தையா. இந்தா வாறேங். இப்பதா வந்தது. நா கக்கூஸ் போ வாணாமா'' ?

 ''சரி சரி இருந்திட்டு வடிவா கையை கழுவிக் கொண்டு வந்து சேரு''என்று நக்கலாய் சொன்னவர் சிந்தனையைத் தொடர்ந்தார்.

அங்கை என்னை கூட்டிக் கொண்டு போவினமோ மாட்டினமோ. என்னட்டை ஊர் புதினங்கள் சொல்லவும், எங்கையும் கூட்டிக் கொண்டு போகவும் யார் இருக்கினம். எல்லாருக்கும் அவரவற்றை வேலை. இந்தக் கலி காலத்திலை அவையையும் குறை சொல்ல ஏலாது. ஓடியாடி நாலு காசு பாத்தாத் தானே இங்கத்த விலைவாசியிலை சீவிக்கலாம். எனக்கு ஏலுமான காலத்திலை அவைக்கு இவைக்கெண்டு எல்லாருக்கும் தானே ஓடித் திரிஞ்சனான். எத்தினை கியூவிலை நிண்டு சொந்த பந்தங்களுக்கு தேவையானதை செய்து குடுத்திருப்பன். எல்லாற்றை அன்பும் நான் ஓடித் திரியுற மட்டும்தான் போல. இப்ப என்னைக் கூட்டிக் கொண்டு போக கெஞ்ச வேண்டி இருக்கு.

மேலும் படிக்க ...

கோல்டன் குளோப் விருதினைப் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
20 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் இந்தியர்கள் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த நிகழ்வாக 'கோல்டன் குளோப்' விருதினை RRR திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' என்னும் பாடல் சுயமாக எழுதப்பட்ட சிறந்த பாடல் என்னும் பிரிவுக்காகப் பெற்ற நிகழ்வினைக் குறிப்பிடலாம். சிறந்த  பிற மொழித்திரைப்படப் பிரிவுக்காகவும்  'RRR' பரிந்துரை செய்யப்பட்டபோதும் அந்த விருதினை மெக்சிக்கோ நாட்டுப் படமொன்று பெற்றுக்கொண்டது. இயக்குநர் ராஜ் மெளலி நிச்சயம் பெருமைப்படத்தக்க விருது.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தழுவலாக்க முயற்சிகள்”

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
20 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (19) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
19 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம்  (19) : எங்கோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு...

நள்ளிரவு. நகர் மெல்ல மெல்ல ஓசைகள் அடங்கித் துஞ்சத் தொடங்குகின்ற நேரம். சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தபடி அண்ணாந்து வானத்தை நோக்கியபடியிருக்கின்றேன். இருவர் ஒரே நேரத்தில் இலகுவாகச் சாய்ந்திருக்கும் வகையிலான அகன்ற் சாய்வு நாற்காலி. அருகில் என்னுடன் ஒட்டி இணைந்தபடி, தன் தலையை என் வலது பக்கத்து மார்பில் சாய்த்தபடி , ஒருக்களித்து படுத்தபடி என்னுடன் அகன்ற ஆகாயத்தைப் பார்த்தபடி மெய்ம்மறந்திருக்கின்றாள்  மனோரஞ்சிதம்.

விரிந்திருக்கும் இரவு வான் எப்பொழுதுமே என் மனத்தின் இனம்புரியாத இன்பக் கிளர்ச்சியைத்தருமொன்று. எண்ணப்பறவையைச் சிறகடித்துப் பறக்க வைக்குமொன்று. இரவு வானை இரசித்தபடி எவ்வளவு நேரமென்றாலும் என்னாலிருக்க முடியும். தெளிந்த வானில் நகரத்து ஒளி மாசினூடும், நூற்றுக்கணக்கில் நட்சத்திரங்களை என்னால் காண முடிந்தது. நட்சத்திரத்தோழியருடன் பவனி வரும் ஓர் இளவரசியாக முழுமதி விளங்கிக்கொண்டிருந்தாள். முகில்களற்ற தெளிந்த இரவு வானம் சிந்தைக்கு ஒத்தடம் தருவதுபோல் ஒருவிதத் தண்மை மிகுந்த உணர்வினைத் தருகின்றது.

விரிந்திருக்கும் வானில் கொட்டிக்கிடக்கும் சுடர்களிலொன்று இன்னுமொரு 'கலக்சியாக' அண்டமாகவிருக்கக் கூடும். அதன் மூலையிலுள்ள சுடரொன்றின் கிரகத்தில் என்னைப்போல் ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒன்று விரிந்திருக்கும் ஆகாயத்தின் ஆழங்களைக் கண்டறிவதற்கான தேடலில் மூழ்கிக் கிடக்கக்கூடும்.  இவ்விதம் நினைக்கையிலேயே நெஞ்சில் இன்பம் பொங்கியது.  அவ்வின்பம் வெளிப்பட வாய் விட்டு 'நண்பனே' என்றழைக்கின்றேன்.

"என்ன கண்ணா, யாரை அழைக்கின்றாய். அருகில் என்னைத்தவிர வேறு யாருமேயில்லையே?" என்று கூறியபடி என் தாடையைச் செல்லமாகத் தட்டினாள் மனோரஞ்சிதம்.

"கண்ணம்மா, நான் என் அண்டத்து நண்பனைப்பற்றி எண்ணினேன். அவனை அழைத்தேன்." என்றேன்.

"அண்டத்துச் சிநேகிதனா? இல்லை சிநேகிதியா?'' என்று குறும்பு குரலில் தொனிக்கப் பதிலுக்குக் கேட்டாள்  மனோரஞ்சிதம்.

"ஏன் கண்ணம்மா, சிநேகிதி ஒருத்தி எனக்கு இருக்கக் கூடாதா?" என்று பதிலுக்கு அவளைச் சீண்டினேன்.

"கண்ணா, உனக்கு என்னைத்தவிர சிநேகிதி வேறு எவளும் இருக்கக் கூடாது. என்னால் தாங்க முடியாது."

"கண்ணம்மா, நீயா இப்படிப் பேசுவது?"

"நான் பேசாமால் வேறு யார் பேசுவதாம் கண்ணா? அது சரி நான் பேசியதிலென்ன தவறு கண்ணா?"

"கண்ணம்மா, நீ நட்பையும், காதலையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறாயடி. நட்பு எத்தனை பேருடனும், எந்தப் பாலினருடனும் இருக்கலாம். ஆனால் காதல் காதலுக்குரியவரிடம் மட்டுமே இருக்க முடியும். காதலுக்குரியவர் சிறந்த நண்பராகவுமிருக்க முடியும். ஆனால் சிறந்த நண்பர் எல்லாரும் காதலர்களாக இருந்து விட முடியாது கண்ணம்மா. நீ என் காதலி கண்ணம்மா. நீ  என் சிநேகிதி கண்ணம்மா."

மேலும் படிக்க ...

ஜெய்சங்கரின் வரவும், தமிழ் கேள்வியும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
19 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இரு தினங்களின் முன், இலங்கையின் தூதுவர் மிலிந்த மொரகொட, இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலை, புதுடெல்லியில் சந்தித்து சீன உளவு கப்பல் யுவாங்-5 வரவின் பின்னராய், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக  Hindustan times செய்தி வெளியிட்டிருக்கின்றது. (16.01.2023) இதற்கு இரு தினங்களின் முன்னதாக, இலங்கை தூதுவர் அவர்கள், குஜராத் மாநிலத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து, குஜராத் முதலமைச்சருடனும், வேறு சில பாரதிய ஜனதா முக்கியஸ்தர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் செய்தி குறிப்புகள், பதிவு செய்திருந்தன.

அஜித் டோவாலுடனான மேற்படி சந்திப்பானது, யுவாங்-5இன் வரவால், சீர்குலைந்ததாய் கருதப்பட்ட இலங்கை-இந்திய உறவுநிலையை, மறுசீரமைப்பது குறித்தும், இனி வார இறுதியில் வரவிருக்கும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களின் வரவு குறித்துமே சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.  உறவுகளை மறுசீரமைப்பதற்கான இவ்வகையான முயற்சிகள், இலங்கை-இந்திய உறவுகளுக்கு மாத்திரம் தனித்துவமான ஒரு பிரச்சினை என்றிராது, இஃது ஓர் உலகலாவிய நடைமுறையாக இன்று உருவாகத் தொடங்கியுள்ளது என்பது குறிக்கத்தக்கதாகும்.

மேலும் படிக்க ...

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -

விவரங்கள்
- கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
நிகழ்வுகள்
17 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* படங்களை அழுத்துவதன் மூலம் பெரியதாக, தெளிவாகப் பார்க்கலாம்.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு நாளை (18-01-2023) ஆரம்பமாகிறது. “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் நாளையும் (18-01-2023) நாளை மறுதினம் (19-01-2023) இணையவழியாகவும் நடைபெறவுள்ளது. பேராதனைத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் மாநாட்டின் இணையவழி அமர்வுகள் 19-01-2023  காலை 9 மணிக்கு ஆரம்பிக்கின்றன.
இணைவதற்கான வழி: Join Zoom Meeting

மேலும் படிக்க ...

மனுஸ்மிருதி ஒரு மேலோட்டப் பார்வை எழுப்பும் கேள்வி! - சேசாத்திரி ஶ்ரீதரன் -

விவரங்கள்
- சேசாத்திரி ஶ்ரீதரன் -
சமூகம்
17 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் சேசாத்திரி ஶ்ரீதரன் அவர்கள் மனுஸ்மிருதி பற்றிய தனது கருத்துகளை இக்கட்டுரையில் எழுதியுள்ளார். இது பற்றிய உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். - பதிவுகள்.காம் -


மனுநூல் ஒரு நாட்டின் அல்லது நிருவாகத்தின் சட்டம் போன்றது அல்ல.  அது தனிநபர் ஒழுக்கத்திற்கான இயமம், நியமம் (dos and dont's) போன்ற ஒழுக்க விதியை உரைப்பதே ஆகும். இது 12 அத்தியாயங்களில் 2,685 பாக்களாக உள்ளது. பிரம்மச்சரியம், கிருஹஸ்தாசிரமம், வானப்ரஸ்தம், சந்நியாசம் ஆகிய வாழ்வின் நால்வகை கூறுகளை எப்படி கடக்க வேண்டும் என்று விவரிக்கிறது. நால் வருணத்தார்க்கும் தனித்தனியாக உள்ள நடக்கை விதிகள் பற்றி விவரிக்கிறது.

நூலின் காலம்: எந்த ஒரு நூலுக்கும் காலக் கணிப்பு செய்வது மூக்கணாங் கயிறு போடுவது போன்றதாகும். அதை முன்பு மத நோக்கில் தப்பும் தவறுமாக செய்ததால் இன்று இந்நூல் குறித்து பல சச்சரவுகளுக்கு வழிவகுத்துள்ளது. இனி மனுநூலின் காலம் குறித்து ஆய்வோம். வேதங்கள் இருக்கு, யசுர், அதர்வணம் என மூன்றே ஆகும். இம்மூன்று வேதங்களின் கலவையாகவே சாம வேதம் நான்காவதாக பிற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டது. இதை செய்தவர் சைமினி மகரிஷி. சாம வேதம் குறித்து இந்நூல் குறிப்பிடுவதால் இந்நூல் சைமினிக்கு பிற்பட்ட காலத்தில் தான் எழுந்திருக்க வேண்டும். புராணம், ஆரண்யம், உபநிடதம், வேதாந்தம்- மீமாம்சம் பற்றி இந்நூல் ஆங்காங்கே கூறுவதால் பாகவதம் இயற்றிய வாதராயண வியாசர், அவரது மாணாக்கர் சைமினி ஆகியோர் காலத்திற்கு கி.பி. 550-650 பிற்பட்டது இந்நூல் எனத் தெரிகிறது. அதன்படி இதை கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 8 ஆம் நூற்றாண்டு முற்பகுதி நூல் எனக் கொள்வதில் தவறில்லை. வியாசரின் புராண தெய்வங்களுக்கு நான்கு கைகள் உண்டு ஆனால் குப்தர் கால தெய்வச் சிலைகளில் இரண்டு கைகள் மட்டுமே உண்டு என்பதால் வியாசரின் காலம் கி. பி. 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கொள்ளப்படுகிறது. புராணங்களை எழுதிய வாதராயண வியாசர் அதில் திருப்தி கொள்ளாமல் தான் ஆரண்யங்களை இயற்றினார் என்பது பொதுக் கருத்து. அவரது மாணாக்கர்கள் தான் உபநிடதங்களை உருவாக்கினர். இந்த புராணம், ஆரண்யம், உபநிடதம், வேதாந்தம் பற்றிய குறிப்பு இந்நூலின் காலக் கணிப்பிற்கு பெரிதும் உதவுகின்றன.

மேலும் படிக்க ...

வாசகர்களின் கவனத்துக்கு!

விவரங்கள்
Administrator
வ.ந.கிரிதரன் பக்கம்
17 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



'டொரோண்டோ'வில் எனது நூல்களான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' (சிறுகதைத்தொகுப்பு), குடிவரவாளன் (நாவல்), அமெரிக்கா (நாவல்) மற்றும் நல்லூர் இராஜாதானி (சிங்கள மொழியில்) ஆகிய நூல்களை முருகன் புத்தகசாலையில் வாங்க  முடியும். முருகன் புத்தகசாலையில் இலங்கை, இந்திய மற்றும் புகலிடத் தமிழ் நூல்களை, சஞ்சிகைகளை & பத்திரிகைகளைப் பெற முடியும்.

முருகன் புத்தகசாலை, 5215 Finch Avenue East, Suite# 109, Toronto , Ontario என்னும் முகவரியில் இயங்குகின்றது. GTA ஸ்குயரில் அமைந்துள்ளது. தொலைபேசி இலக்கம்: 416-321-0285

மேலும் படிக்க ...

முகநூல் குறிப்பு: பர்மாவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வைணவ ஆலயம் ! நானாதேசி விண்ணகர் ஆழ்வார் கோவில்! - தனசேகரன், மியான்மர் -

விவரங்கள்
- தனசேகரன், மியான்மர் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
17 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் 55% முதல் 60% வரை தமிழ் மொழியில் உள்ளன. இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட 100,000 கல்வெட்டுகளில் சுமார் 60,000 கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் இருந்ததையும் , கல்வெட்டும் பட்டியலில் தமிழ் மொழியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் தான் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. சில தமிழ் கல்வெட்டுகள் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும், இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல பர்மாவில் காணப்படும் அயல் மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளின் பட்டியலில் தமிழும் ஒன்று.

பர்மாவின் பண்டைய தலைநகரான (Bagan) பாகனில் 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாகன் நகரத்தில் உள்ள ஒரே ஒரு வைணவம் விஷ்ணு கோயிலுடன் ( Nat Hlaung Kyaung Temple) தொடர்புடையதாக இந்த கல் பொறிக்கப்பட்டுள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க ...

எம்ஜிஆர் நினைவாக: 'அதோ அந்த பறவை போல வாழவேண்டும்.' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
17 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எம்ஜிஆர் பிறந்த தினம் ஜனவரி 17. அவர் எனக்கு என் பால்ய பருவத்தில் அறிமுகமானது திரைப்படங்கள் மூலம். முதலில் நினைவு தெரிந்து பார்த்தது 'எங்க வீட்டுப்பிள்ளை' . இரண்டாவதாக பார்த்தது 'ஆயிரத்தில் ஒருவன்'.  முதல் பார்த்தலிலேயே குழந்தைகளான எங்களைக் கவர்ந்து விட்ட வசீகர முகம் அவருடையது.

'ஆயிரத்தில் ஒருவன்' பாடல்கள் எல்லாமே மனத்தில் நிலைத்து நிற்பவை. அவற்றில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்களிலொன்று.  மானுட விடுதலையை வேண்டும் வரிகள் இப்பாடலை வரலாற்றில் நிலைத்து நிற்க வைத்து விட்டன.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. அடையாளம் குறித்த தேடல்: வ.ந. கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ - ஒரு பார்வை! - கலாநிதி சு. குணேஸ்வரன் -
  2. பேராசிரியர் கோபன் மகாதேவா பகிர்ந்துகொண்ட எண்ணங்கள்.. - வ.ந.கிரிதரன் -
  3. பேராசிரியர் கோபன் மகாதேவாவின் ஆக்கங்கள் சில!
  4. பேராசிரியர் கோபன் மகாதேவன் மறைவு!
  5. பொங்கல் கவிதை: பொங்கலிட்டு மகிழ்வோமே தங்கமே தங்கம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண், அவுஸ்திரேலியா -
  6. சிங்கிஸ் ஐத்மாத்தாவின் அன்னை வயல்! - வ.ந.கிரிதரன் -
  7. வாசிப்புப் பகிர்வு: 'சிந்துவின் தைப்பொங்கல்' - தகவல்: ஶ்ரீரஞ்சனி -
  8. சிந்தி லோப்பரின் 'Time After Time'! - ஊர்க்குருவி -
  9. நிகழ்வு: சிலாவத்துறை பாடசாலை வரலாறு நூல் வெளியீடு - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -
  10. யாழ்ப்பாணத்தில் ஜனவரி 10, 1974இல் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாட்டுத் துயர நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -
  11. சிறுகதை; பிரியாவும் ஜேம்சும் - தேவகி கருணாகரன், சிட்னி, அவுஸ்திரேலியா -
  12. இசையும் அரசியலும் - இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடன் ஒரு நேர்காணல்! - நேர்காணலைக் கண்டவர் - ஜோதிகுமார் -
  13. லயனல் ரிச்சியின் 'ஹலோ' - ஊர்க்குருவி -
  14. தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (18) : தளைகள்! தளைகள்! தளைகள்! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 57 / 104
  • முதல்
  • முந்தைய
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • அடுத்த
  • கடைசி