பதிவுகள் முகப்பு

யாழ்ப்பாணத்தில் ஜனவரி 10, 1974இல் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாட்டுத் துயர நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
10 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இன்று என் வாழ்வில், உலகத் தமிழர்கள் வாழ்வில் மறக்க  முடியாத துயர நினைவுகளைச் சுமந்து நிற்குமொரு நாள். இருக்கும் வரையில் என் நினைவை விட்டு இந்நாள் ஒருபோதும்  ஓடி விடப்போவதில்லை. ஏனென்றால் இந்நாளில் நடந்த அந்தத் துயர நிகழ்வின் நேரடிச் சாட்சிகளில் ஒன்றாக நானிருந்திருக்கின்றேன். 1972இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10இல் , இரவில் நடந்த கூட்டத்தில் பொலிசார் ஏற்படுத்திய கலவரமும், அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக அறுந்து விழுந்த மின் கம்பியில் அகப்பட்டு உயிரிழந்த  துயரச் சம்பவமும்,  அது வரை அமைதி வழியில் சென்று கொண்டிருந்த இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை ஆயுத வழிக்குத் திசை திருப்பின.

இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் முதன் முதலில் உரும்பிராய் சிவகுமாரனை ஆயுதம் தூக்க வைத்தது அன்று நடைபெற்ற தமிழ் மக்களின் மரணங்கள்தாம்.  அன்று யாழ் மேயராக விளங்கிய அல்ஃபிரட் துரையப்பா அவர்களைப் பொன்னாலையில் வைத்துத் தமிழ் இளைஞர்கள் பின்னர் படுகொலை செய்ததற்கும் முக்கிய காரணமாகவிருந்தது அன்று நிகழ்ந்த தமிழர்கள் மீதான வன்முறையும், அழிவும்தாம்.

மேலும் படிக்க ...

சிறுகதை; பிரியாவும் ஜேம்சும் - தேவகி கருணாகரன், சிட்னி, அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- தேவகி கருணாகரன், சிட்னி, அவுஸ்திரேலியா -
அரசியல்
10 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தேவகி கருணாகரனின் 'பிரியாவும் ஜேம்சும்' என்னும் இச்சிறுகதை மாறிவரும் உலகின் மாற்றத்தின் விளைவொன்றைப்பற்றிப் பேசுகிறது. அம்மாற்றம் என்ன என்பது பற்றி அறிய இச்சிறுகதையை முழுமையாக வாசியுங்கள். இக்கதையின் கூறு பொருளும், எழுத்து நடையும், பாத்திரப்படைப்பும் இதனை நல்லதொரு முக்கியமான சிறுகதையாக இதனை மாற்றியுள்ளன. இச்சிறுகதையில் வரும் குழந்தை  கீர்த்தி நெஞ்சைத்தொடுகின்றாள். முடிவில் அவளில்  ஏற்படும் மாற்றம் முக்கியமானது. அவ்வகையில் அவளொரு குறியீடு. மாறாத உணர்வுகள், கருதுகோள்களுடன் மாறுவதற்குச் சிரமப்படும் சமுதாயமொன்றைப் பிரதிநிதிப்படுத்தும் குறியீடு அவள். - பதிவுகள்.காம் -


அவுஸ்திரேலியாவின் நியுவ் சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கிராவின் புறநகரின் ’புனித அந்தோனியார்’ ஆரம்பப்பள்ளிக்குள் நுழைந்த பிரியா, தன் மகள் கீர்த்தியின் முதலாம் வகுப்பை அடைந்ததும்,  “வாடா குஞ்சு, வீட்டைப் போகலாம்,” எனக் கீர்த்தியை அன்போடு தூக்கிக் கொஞ்சிய பிரியாவை உற்று நோக்கி புதிதாக பார்ப்பது போல் பார்த்தாள் கீர்த்தி. திரும்பி நன்சிக்கு பக்கத்தில் நின்ற அவளது தாயாரையும் பார்த்தாள். ”இன்றைக்கு என்ன செய்தீங்கள்? கைவேலை செய்தீங்களா?”  எனக் கேட்டபடி நன்சியைத் தூக்கிக் கொண்டுபோன அவளது தாயையும். பிரியாவையும், மாறி மாறிப் பார்த்தாள். அவளது சின்ன மூளைக்கு எதுவுமே புரியாது குழம்பியது. அந்தச் சின்ன மூளைக்கு எதோ புரிகிற மாதிரி இருந்தது ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது.

    வீட்டுக்கு வந்ததும் குளிக்கும் தொட்டியில் பதமான சூட்டுக்கு வெந்நீரை, நிரப்பி கீர்த்தியைக் குளிப்பாட்டி, அவளுக்குப் பிடித்த `பணானாஸ் இன் பிஜாமாஸ்` பிரிண்ட் போட்ட, பிஜாமாவைப் போட்டு விட்டு,  ”எங்கள் கீர்த்தி இளவரசி நல்ல வாசனையாக இருக்கிறாள்,” எனக் கீர்த்தியை முகர்ந்தபடி சொன்ன பிரியாவை., கீர்த்தி கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். பிரியா கிச்சனுக்கு போகவும், அறையிலிருந்த விளையாட்டுப் பொருட்களில் கீர்த்தியின் கவனம் லயித்துப் போக, முற்பள்ளியில் அவளது சின்ன மூளையில் எழுந்த சந்தேகம், கேள்வி எல்லாமே மறைந்து போய்விட்டது,

    ”கீர்த்திக் குட்டி, டினர் ரெடி!” எனப் பிரியா கிச்சனிலிருந்து அழைக்கவும், வாசற் கதவைத் திறந்து கொண்டு அவளது ஜேம்ஸ் டடி வரவும் சரியாகவிருந்தது. அவரைக் கண்டதும் கீர்த்தி ஓடிச்சென்று ஜேம்ஸ் மேல் தாவி அவர் கைகளுக்குள் தஞ்சமானாள். தந்தையைக் கொஞ்சியவளின் முகத்தில் ஒரே சந்தோசம். ஏனோ அவளுக்கு ஜேம்சோடு இருப்பதில் ஒரு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும்.

மேலும் படிக்க ...

இசையும் அரசியலும் - இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடன் ஒரு நேர்காணல்! - நேர்காணலைக் கண்டவர் - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
நேர்காணல்
09 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

                   - இசைக்கலைஞர் மொஹமெட் இக்பால் -

-  இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடனான (Mohammed Iqbal) இந் நேர்காணல்  ‘பதிவுகள்’ இணைய இதழுக்காக எழுத்தாளரும், சமூக,அரசியல் செயற்பாட்டாளருமான ஜோதிகுமாரினால்  நடாத்தப்பட்டது. மொஹமெட்  இக்பால் அவர்கள், இலங்கையின் அதிமுக்கிய இசை வல்லுநர்களில் ஒருவர்.  தனது பல்கலைக்கழக நாட்களில் விக்டர் ஹாரா (Victor Hara) இசைக்குழு என்ற இசைக்குழுவை நடத்தியவர். இன்றுவரை இதே இசைக்குழு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. ‘கிட்டார்’ இசைகருவியை இசைப்பதிலும், பாடுவதிலும் வல்லுநராக திகழும் திரு. மொஹமெட் இக்பாலின் பங்களிப்பு, இசை உலகில் குறிப்பிடத்தக்கது. இது போன்றே இந்நாட்டின் அரசியலிலும் இவரது இசையின் அதிர்வுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.  -


கேள்வி: இதுவரை எத்தனை பாடல்களுக்கு இசையமைத்துள்ளீர்கள்?

பதில்: கிட்டத்தட்ட 40 பாடல்கள். 100 இசை கச்சேரிகள் அளவில் நிகழ்த்தியுள்ளேன். இதில் நான் வீதிகளிலும், தொழிலாளர்கள் மத்தியிலும், தொழிற்சாலைகளிலும், சிறு குழுவினரிடையேயும் நடாத்தும் நிகழ்ச்சிகள் கணக்கில் அடங்காதவை ஆகும். இது தவிர சில வருடங்களில் Guitar Festival யும் நடத்தியுள்ளேன். இவைகள் அனைத்தும் மிகுந்த பணத் தேவையை உள்ளடக்குவதாய் உள்ளன. இதனால் இவற்றின் எல்லைப்பாடுகளும் புரிந்துகொள்ளத் தக்கவையே.

கேள்வி: உங்கள் பாடல்களில் முக்கியமான இரண்டை எமது வாசகர்களுக்காக தெரிவு செய்வீர்கள் என்றால் அவை எவை எவையாக இருக்கக் கூடும்?

பதில்: ‘மொனரவில’ என்ற பாடலையும் ‘மினிசா’ என்ற பாடலையும் நான் குறிப்பிடலாம்.

கேள்வி: ‘மொனரவில’ பாடல் எதைப் பற்றியது? அதன் பின்னணி என்ன?

பதில்: 1817இல், ‘ஊவா வெல்லஸ்ஸ’ இடத்தில் நடந்த மாபெரும் போராட்டமே, இலங்கையில் நடந்த, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான, முதலாவது போராட்டம் எனலாம். இதற்கு தலைமை தாங்கியவரே ‘மொனரவில கெப்படிபொல’ எனும் வீரர். இப்போராட்டத்தின் பிறகு கிட்டத்தட்ட 40 ஆயிரம் மக்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொன்று குவித்தனர். அவரைப் பற்றிய பாடலே இது.

மேலும் படிக்க ...

லயனல் ரிச்சியின் 'ஹலோ' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
08 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

83 கலவரத்தைத் தொடர்ந்து முதல் முதலாக அந்நிய நாடொன்றில், அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் மாநகரில் அகதியாக அலைந்து கொண்டிருந்தபோது பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த பாடகர்கள் நால்வர். அதனால் அப்பாடகர்கள் பற்றிய நினைவுகள் எழும்போதெல்லாம் எனக்கு அமெரிக்க மண்ணில் அகதியாக அலைந்து திரிந்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து விடும். லயனல் ரிச்சி, சிந்தி லோப்பர், பில்லி ஜோயெல், மைக்கல் ஜாக்சன் இவர்கள்தாம் அப்பாடகர்கள். மைக்கல் ஜாக்சனின் 'திரில்ல'ரும் வெளியாகியிருந்த காலம். கறுப்பினப் பதின்ம வயதுச் சிறுவர்கள் ஆங்காங்கே நடைபாதைகளில் கசட் பிளேயரில் மைக்கல் ஜான்சனின் பாடல்களை ஒலிக்கவிட்டு உடம்மை வளைத்து, முறுக்கி, வெட்டி 'பிரேக் டான்ஸ்' ஆடுவார்கள்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (18) : தளைகள்! தளைகள்! தளைகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
07 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம்  (18) : தளைகள்! தளைகள்! தளைகள்!

"கண்ணம்மா, எத்தனை எத்தனை தளைகள்.  சுற்றியெங்கு பார்த்தாலும் தளைகள். உள்ளே தளைகள். வெளியேயும் தளைகள்."

என்ற என்னைப்பார்த்து ஒரு வித வியப்புடன் கேட்டாள் மனோரஞ்சிதம் "என்ன கண்ணா, தளைகளா? எந்தத் தளைகளைச் சொல்லுறாய்?"

"பொதுவாகக் கூறினேன் கண்ணம்மா, நாம் வாழும் சமுதாயத்தில் நிலவும் தளைகள்தாம் எத்தனை? எத்தனை?"

"கண்ணா நீ சொல்வதும் சரிதான். சமுதாயக் கட்டுப்பாடுகள், வர்க்கங்களின் பிரிவுகளால் பலம் வாய்ந்த வர்க்கங்களினால் செலுத்தப்படும் ஆதிக்கத் தளைகள், பால் ரீதியான கட்டுப்பாட்டுத் தளைகள், தீண்டாமைத் தளைகள், இன, மத, மொழி, தேசரீதியிலான கட்டுப்பாட்டுத் தளைகள், ..இத்தளைககளால் பிணைக்கப்பட்ட கைதிகள் நாங்கள் கண்ணா"

"கண்ணம்மா, இவையெல்லாம் புறத்தில் இருக்கும் தளைகள்.  இதேபோல் இவற்றின் தாக்கங்கள், மற்றும் மானுடப் படைப்பின் தன்மையால் அகத்தில் உருவான  தளைகளாலும் பிணைக்கப்பட்டு இருக்கிறோம். இல்லையா கண்ணம்மா?  இவ்வகையான தளைகள்  அனைத்திலுமிருந்து  விடுபடுவதன் மூலம்தான் மானுடருக்கு முழுமையான விடுதலை கிடைக்கும்.  ஒன்று புற விடுதலை. அடுத்தது அக விடுதலை. இல்லையா கண்ணம்மா?"

மேலும் படிக்க ...

எழுத்தாளரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளருமான ஜெயக்குமாரன் மகாதேவனின் (ஜெயன் தேவா) இறுதிக்கிரியை பற்றிய தகவல்!

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
07 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் மறைந்த எழுத்தாளரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளருமான ஜெயக்குமாரன் மகாதேவனின் (ஜெயன் தேவா) இறுதிக்கரியைகள் எதிர்வரும் 11.01.2023  அன்று லிவர்பூலில் நடைபெறவுள்ளது.

 

ஜனவரி 01 – எழுத்தாளர் சந்திரனுக்கு 60 வயது! மணிவிழா நாயகன் ஆவூரான் சந்திரன்! கலை , இலக்கிய, தன்னார்வத் தொண்டர்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
06 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 -  எழுத்தாளர் 'ஆவூரான்' சந்திரன் -

வட இலங்கையில் சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர், அவ்வூரின் மற்றும் ஒரு பெயரையே தனது புனைபெயராக்கியும்கொண்டார். அவர்தான்  'ஆவூரான்' சந்திரன்  நெடுந்தீவு பல விடயங்களில் புகழ்பெற்றது. உலகத் தமிழராய்ச்சிக்கு வித்திட்ட அருட்திரு. தணிநாயகம் அடிகளார் பிறந்த மண்.  அத்துடன் பல கலை, இலக்கியவாதிகளும் கல்விமான்களும் சமூகப்பணியாளர்களும் தோன்றிய பிரதேசம். இங்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி சண்முகம் – பொன்னம்மா தம்பதியருக்கு ஏழாவது பிள்ளையாக பிறந்திருக்கும் சந்திரன், இலக்கியப் பிரவேசம் செய்தபோது, ஊரின்மீதிருந்த அளவு கடந்த நேசத்தினால், உள்ளுருக்கு மட்டுமன்றி வெளியூருக்கெல்லாம் பசுவின் பாலை வழங்கிய தீவின் மற்றும் ஒரு பெயரையே புனைபெயராக்கிக் கொண்டவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னரும், நெடுந்தீவையும் அங்கு வாழும் மக்களையும் மறந்துவிடாமல், தன்னால் முடிந்த உதவிகளையும் அம்மக்களுக்கு – குறிப்பாக மாணவர் சமூகத்திற்கு வழங்கி வரும் ஒரு தன்னார்வத் தொண்டர். சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு படைப்பாளியின் பிரதான நோக்கமாகவிருக்கும். அந்த நோக்கத்துடனேயே எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதல் அயர்ச்சியின்றி இயங்கி வருகின்றார். அதனால் எமது நெஞ்சத்துக்கும் நெருக்கமானார்.

மேலும் படிக்க ...

கொழும்பில் நாடகக் கலைஞர் பாலேந்திராவின் நூல் வெளியீடு! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
06 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக  தமிழ் நாடகக் கலை வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் நாடகக் கலைஞர் க. பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள் எனும் புதிய நூலின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 07 ஆம் திகதி ( 07-01-2023 ) சனிக்கிழமை மாலை 4-30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் நடைபெறும்.

ஈழத்து நவீன தமிழ் நாடக உலகில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கிவருபவரும், தற்போது இங்கிலாந்தில் வசிப்பவருமான கலைஞரும் நாடக இயக்குநருமான   க. பாலேந்திரா எழுதி கொழும்பு குமரன் இல்லம் பதிப்பகத்தினால் வெளியாகியிருக்கும் பாலேந்திராவின் அரங்கக்கட்டுரைகள் நூலில், அவர் ஏற்கனவே எழுதி ஊடகங்களில் வெளியான பல  ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் : தீவுக்கு ஓர் பயணம் (6) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
05 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஆறு -  அடுத்த நாள்

 " முதல் நாளைப் போல அதிகம் ஓடாமல் கிட்ட இருக்கிற சிறிய டவுண் பக்கம் போவோம் " என்றாள் பூமலர் . அவர்கள் சென்ற இடம் வூத்வில்  .  விவசாயப் பண்ணைகளிற்கு மையமாக இப்படி ஒரு  சந்தைகடை  ( ஃபாம் மார்க்கட்) , மற்றும்  வேறு சில கடைகளும் சேர்ந்த   தொகுதிகள் அங்காங்கே இருக்கின்றன . " நான் இந்த கடையிலே வந்து நல்ல காய்கறிகளை வாங்கிறேன்  " என்றாள்  பூமலர் . அந்த மார்க்கட் கடையில் வீட்டிற்கு வேண்டிய  சகலப் பொருட்களும்  நிறைந்த  பெரிய கடையாக இருக்கிறது . எல்லாம் மனித தயாரிப்புடைய பழமைச் சாயல் . அவற்றை ரசனையோடு பார்த்தார்கள் லொப்ஸ்டர் இடுக்கிகள்  தொங்கின்றன . நண்டு போன்ற (ஓடு) கோதுகளை உடைத்து சாப்பிடுவதற்கு உபயோகிக்கப்படுகிறது . இடுக்கிகளையும் வைக்கிறார்கள் . இங்கே , உணவகங்களில் லொப்ஸ்டர் பேகர்  சன்விச்கள் கூட  விற்கப் படுவதாக கேள்வி .

    பூமலர் சமைக்கிறதுக்கு  வாங்கி விட்டு  , ஐஸ்கிரீமையும்  வாங்கினார்கள் . பக்கத்தில் பூங்கா போல இருந்த இளைப்பாறும்  இடத்தில்  ஆடு  ,மாடு  , பறவைகளை  கம்பிக் கூண்டில் வைத்திருக்கிறார்கள் .  அவற்றிற்கு  போட உணவையும் மெசினில் டொலரைப் போட்டு எடுத்து சாப்பிட போடலாம் . வங்கிகள்  ,  மற்றும் ரொரொன்ரோவில் இருக்கிற மாதிரியான ஒரு கடையையும் கண்ணில்  காணவில்லை . எங்கையும் ஓரிரண்டு இருக்கலாம் . ஐரோப்பியர்கள் உணவை ரசித்து சாப்பிடுறவர்கள்  .  உணவகங்கள் வழியே இருந்து சாப்பிடுறவர்கள் இல்லை . குறைந்த வாழ்க்கைச் செலவு .  சிக்கனம் உள்ளவர்கள் .  சேவைப்பிரிவினரே கடையே தவம் என அலைபவர்கள்  .  இங்கே ஒரு கிராமியமே முழுதாய்  படர்ந்திருந்தது . வியாபாரம் இருந்தால் தானே கடைகள் பூக்கும் . தவிர , மக்கள் தொகையும் கூடுதலாக இருக்க வேண்டும் . இங்கே இரண்டும் இல்லை .

மேலும் படிக்க ...

எழுத்தாளர்கள் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா, சிவகாமியின் 'சிந்துவின் தைப்பொங்கல்' பற்றிய என் எண்ணப்பதிவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர்கள்  ஶ்ரீரஞ்சனி  விஜேந்திரா , சிவகாமி (தாயும் மகளுமாக ) இணைந்து எழுதிய, புகலிடத் தமிழ்க் குழந்தைகள்  இலக்கியத்துக்கு, உலகத் தமிழ்க் குழந்தைகள்  இலக்கியத்துக்கு வளம் சேர்க்குமொரு படைப்பாக வெளியாகியுள்ளது 'சிந்துவின் தைப்பொங்கல்'. முதலில்  இந்நூல் ஏன் நல்லதொரு சிறுவர் நூல்  என எனக்குத் தென்படுவதன் காரணத்தைக் கூறி விடுகின்றேன்.  சித்திரக்கதையாக வெளியாகியுள்ள இந்நூலில் குழந்தைகள் உள்ளங்களைக் கொள்ளைக்கொள்ளும் அனைத்து விடயங்களும் உள்ளன. குழந்தைகளை மிகவும் கவரும் மூன்று விடயங்கள்.  கதை, சித்திரம் , பாவிக்கப்பட்டுள்ள நிறங்கள்.  இம்மூன்றும் இந்நூலில் ஒன்றுக்கொன்று சளைக்காமல் அமைந்துள்ளன என்பதே இந்நூலின் முக்கிய சிறப்பு.

கதை

கதை சிறப்பாகப் பின்னப்பட்டுள்ளது. கதையில் தனது தாய், தகப்பனுடன் 'டொராண்டோ'வில் வசிக்கும் சிந்து என்னும் சிறுமி யாழ்ப்பாணம் சென்று தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றார். இந்தக் கதை குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள கதை. உலகின் எங்கும் வாழும் தமிழ்க்குழந்தைகளும் பொங்கல் நிகழ்வைப் பற்றிய காரணங்களை, விளக்கங்களை அறிந்துகொள்ளும் வகையில் , அவர்களுக்குப் புரியும் எளிமை கலந்த சரளமான இனிய நடையில் எழுதப்பட்டுள்ள கதை. 

இக்கதை தமிழிலும், ஆங்கிலத்திலும் கூறப்பட்டுள்ளதும் ஆரோக்கியமான விளைவினைத் தருமொரு விடயமாகவே தென்படுகின்றது. புகலிடத் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பொங்கல் பற்றிய விளக்கங்களுடன்  , அவர்களுடைய தாய், தந்தையரின் பிறந்த மண்ணின் சூழலையும் வெளிப்படுத்துகின்றது. சேவல் கூவலுடன் விடியும் காலை, கிணற்றுத் தண்ணீரை வாளி மூலம் அள்ளும் வழக்கம், தை மாதக் காலநிலை, அரிசிக்கோலம் , கும்பம் அமைக்கும் முறை, மண் பானையில் பொங்கல், வெடி கொளுத்துதல் , கதிரவனுக்குப் பொங்கலிட்டு வணங்குதலெனப் பல விடயங்களை இச்சித்திரைக்கதை நூல் சிறப்பாகவே வெளிப்படுத்துகின்றது.

மேலும் படிக்க ...

கார்க்கியின் இறுதிக் காலத்து நாவல்: ஆர்ட்டமோனோவ்- (மூன்று தலைமுறைகள்) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
03 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கார்க்கி தனது நாவலான ‘ஆர்ட்டமோனோவை’, 1900லேயே, தன் எண்ணத்தில் கரு கொண்டு விட்டதாக கருதப்படுகின்றது.  1901-1902 காலப்பகுதியில் டால்ஸ்டாயை சந்திக்கும் கார்க்கி, அவரிடம் பின்வருமாறு தான் உத்தேசித்திருக்கும் நாவலை பற்றி கூறியதாக எழுதுகின்றார்:

“அவரிடம், நானறிந்த, வர்த்தக குடும்பமொன்றின் மூன்று தலைமுறைகளின் கதையை, கதையாக கூறினேன். அக்குடும்பத்தின் கதையில், இடம்பெறும் உளவியல் சீரழிவும் சிதைவும், எப்படி, இடைவிடாது தன் இயங்கு விதிகளுக்கேற்ப இயங்குகின்றது என்பதனையும், எப்படி ஏனைய விதிகளும் இயங்குகின்றன என்பதனையும் கூறினேன். எனது சட்டை கையை பற்றி இழுத்த அவர் கூறினார்: “ஆ… அனைத்தும் உண்மை!... நான் தனிப்பட்ட முறையில் ஏற்கனவே அறிந்திருக்கும் ஒன்று இது. துலாவில் (வுரடய) இரண்டு அப்படியான குடும்பங்கள் உண்டு. நான் அறிந்திருக்கின்றேன். இது எழுதப்பட்டே ஆக வேண்டும். நீங்கள் இதனை ஒரு பெரிய நாவலாக ஆனால் சுருக்கமாக எழுத வேண்டும். புரிகின்றதா. நிச்சயமாக…”.

1904 அளவில், நாவலின் வடிவம் கார்க்கியின் மனதில் மெது மெதுவாக வடிவம் பெற தொடங்குகிறது.  ஆனால் 1908-1910 இல் கார்க்கியை சந்திக்கும் லெனின், கார்க்கியிடம் கூறுகின்றார்:

“உங்களது அனுபவங்களை, தொடர்ந்தும் பிய்த்து, பிய்த்து சிறு கதைகளாக கொடுப்பது தவறு. இவற்றையெல்லாம் நீங்கள் ஒரு நூலில் அடக்கி ஒரு நாவலாக வார்த்தெடுக்கும் தருணம் இது”.

மேலும் படிக்க ...

முகநூல் குறிப்புகள்: திசைமாறி ஓடாத இலக்கிய நதி - பரணீதரன் என்ற அசாதாரண இலக்கியன் பற்றிய சிறு குறிப்புகள் - சிவ சேகரன் - -

விவரங்கள்
- சிவ சேகரன் -
முகநூல் குறிப்புகள்
02 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -


ஈழத்து இலக்கிய பரப்பில் நின்று வென்று வாழ்வது எப்போதும் சாத்தியமில்லை என்பதில் மாற்று கருத்தில்லாதவன் நான். எவ்வளவு எழுதியும் இயங்கியும் நின்றாலும் ஒரு எழுத்தை செயலை கொண்டாடவும், சமூகத்திடமும் அடுத்த தலைமுறையிடமும் கொண்டோடவும் மனமில்லாத மானிடர் வாழ்கின்ற இலக்கிய உலகம் ஈழத்துக்கு உரிய தனிக்குணம்.

இலக்கியத்தையும் அதனுடனான செயற்பாடுகளையும் கோட்பாட்டு குண்டுச் சட்டிகளுக்குள்ளும் மெட்டுக்குடி மனோபாவத்துடனும் ஒதுக்கி வைக்கும் ஒரு கூட்டம் இருக்கும் வரை ஈழத்து இலக்கியம் என்றும் உச்சமாக பேசப்படப் போவதில்லை. இத்தகைய அபத்தங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் பேசினால் என்ன? கொண்டாடினால் என்ன? என்ற முடிவோடுதான் இன்று இளையவரும் மூத்தவரும் எழுதியும் இயங்கியும் வருகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

திட்டமிட்ட இருட்டடிப்புகளும் ஒதுக்குதல்களும் மலிந்தும் பதிந்தும் போன இங்கு அவற்றையெல்லாம் சட்டை செய்யாமல் தன் வழியில் தனி வழியில் ஓடிக்கொண்டே இருக்கிறார் பரணீதரன் என்ற இலக்கிய மானுடன்.  முன்கோபி; மரியாதை தெரியாதவன் என்றெல்லாம் அவரை பற்றி என்னிடமும் அவரின் நண்பர்களிடமும் கோள் சொன்னவர்கள் உளர்;அதை அவரும் அறிவார். ஆனால் அவரை முன்கோபியாகவும் மரியாதை இன்றி பேசவும் வைத்தவர்கள் எம்மைப்போன்றவர்கள். அவரின் கருணையால் நூல்களையும் வெளியீடுகளையும் கண்டவர்கள்; இலவசமாக நூல்களையும் இதழ்களையும் பெற்றவர்கள் மனச்சாட்சி அற்று போகும் போது அவர் தன்னிலை இழக்கிறார். அவரும் மனிதன் தானே?

மேலும் படிக்க ...

ஆய்வு: கம்பராமாயணத்தில் மீன்கள் - முனைவர் க. மங்கையர்க்கரசி. உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்- II), மீனம்பாக்கம், சென்னை. -

விவரங்கள்
- முனைவர் க. மங்கையர்க்கரசி. உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்- II), மீனம்பாக்கம், சென்னை. -
ஆய்வு
02 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

மீன்களை நன்னீரில் வாழ்பவை என்றும், கடல் நீரில் வாழ்பவை என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கெண்டை மீன், கெழுத்திமீன், நெத்திலி மீன், வஞ்ஜ்ரமீன், விலாங்குமீன், செண்ணாங்குனிமீன்,மோவல் மீன், சங்கரா மீன், கிழங்கா மீன், பாறை மீன், விரால்மீன், மத்தி மீன், சால மீன், சீலா மீன் என்று பல வகையான மீன்கள் காணப்படுகின்றன. கம்ப ராமாயணத்தில் கெண்டைமீன்,பனைமீன், கயல்மீன், வாளைமீன், விரால்மீன், இறால் மீன், சேல்மீன், திமிங்கிலம், திமிங்கிலம் ஆகிய மீன்கள் குறித்தும், மீன்களின் தன்மை, இயல்பு குறித்தும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.

உலகின் உயிர்களுக்கு அன்பை விளைவிக்கும் கடவுளான மன்மதனின் கொடி ‘மீன்கொடி’. மூவேந்தர்களில் பாண்டியர்களின் கொடி மீன்கொடி ஆகும்.

மீன்கள் முட்டையிட்டு தம் பார்வையாலேயே குஞ்சு பொறிக்கும் இயல்புடையன.

1.கெண்டைமீன்

தேரையானது தெங்கின் இளம் பாளையை நாரையென்று நடுங்குவதாகவும், கெண்டைமீன் கூரிய நுனியையுடைய ஆம்பல் கொடியை சாரைப்பாம்பு என்று நினைத்துப் பயந்ததாகவும் கம்பர் குறிப்பிடுகின்றார்.

" தேரை வன் தலைத் தெங்கு இளம் பாளையை
  நாரை என்று இளங் கெண்டை நடுங்குவ
  தாரை வன் தலைத் தண் இள ஆம்பலைச்
  சேரை என்று புலம்புவ தேரையே”
  (ஆறுசெல் படலம் 927)

உலாவியற் படலத்தில் வெட்டப்பட்டதால், மேலும் தழைக்க முடியாத கரும்பை வில்லாகப் பெற்றுள்ள மன்மதன் செலுத்திய அம்புகள் பாய்ந்தமையால் ஏற்பட்ட புண்கள் நீங்கப் பெறாத நூலிழையும் இடையை செல்ல முடியாமல் நெருங்கிய இளமையான முலைகளை உடைய ஒருத்தி, காதணியில் மோதிப் பிரகாசிக்கும் கெண்டைமீனைப் போன்ற கண்கள், மேகத்தைப் போல நீர்த்திளிகளைச் சிந்த, சோர்வடைந்து, மேகத்தில் பொருந்தாமல் தேகத்தில் பொருந்திய மின்னலைப் போன்ற நுண்ணிடை துவள்வது போலத் துவண்டு நின்றாள்.

மேலும் படிக்க ...

எண்ணிம நூலகமான 'நூலக'த்துக்கு ஆதரவளிப்பீர்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூலகம் அறக்கட்டளை தமிழ் நூல்களை, சுவடிகளை ஆவணப்படுத்தும் அரியதொரு சேவையினைச் செய்து வருகின்றது. உதாரணத்துக்கு என் சொந்த அனுபவத்தையே எடுத்துக்கொண்டால்.. நான் மாணவனாக ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலரில் எழுதத்தொடங்கிய என் ஆரம்ப  காலப் படைப்புகளிலிருந்து, இளைஞனாக அதன் வாரமலரில் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள் வரை பலவற்றை என்னால் மீளப்பெற முடிந்ததற்குக் காரணம்  எண்ணிம நூலகமான  'நூலக'மே.

அத்துடன் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் பல்வகைப்பட்ட நூல்களை (புனைவுகள், அபுனைவுகள் என) , தமிழில் வெளியான பல்வகைச் சஞ்சிகைகள், பத்திரிகைகளையெல்லாம் மீண்டும் வாசிக்கச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது நூலகமே.

எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்கள் பலவற்றைச் சேமித்து மீள அவற்றைப் பெற உதவும் நூலகம் அமைப்பு  கலை, இலக்கிய, அரசியல், வரலாற்று நூல்களை , சஞ்சிகைகள், பத்திரிகைகளைச் சேகரித்து வைத்திருக்கும் அரியதோர் ஆவணச்சுரங்கம். இது பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும். இதன் வளர்ச்சிக்கு அனைவரும் தம்மால் முடிந்த அளவில், வடிவிலான  பங்களிப்பை நல்கலாம்.

மேலும் படிக்க ...

இலக்கியங்களில் மூன்றாம்பாலினத்தவா் பதிவுகள் - முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி ( தன்னாட்சி ), சிவகாசி. -

விவரங்கள்
- முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி ( தன்னாட்சி ), சிவகாசி. -
ஆய்வு
01 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இறைவன் எழுதிய மானுடம் என்ற புத்தகத்தில் ஏற்பட்ட சில இலக்கணப் பிழைகள் திருநங்கைகள். ஆண்பால், பெண்பால் என்ற இரண்டு பாலினத்தவரையும் தாண்டி தற்காலத்தில் மூன்றாம்பாலினத்தவா் என்ற குரலை அதிகமாகக் கேட்க இயலுகின்றது. பிறப்பால் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்து மாற்றுப்பாலினத்தவரின் உணா்வுகளை மிகுதியாகப் பெற்றவா்களை மூன்றாம் பாலினத்தவா் என்று குறிப்பிடுகின்றனா். ஆனால் மானுடவியலாளா் மாறுபட்ட உணர்வுகளைக் கொண்டவா் என்பதனை ஏற்பது இல்லை. ஏனெனில் உணா்வுகள் குறிப்பிட்ட சமுதாயத்தாரால் கட்டமைக்கப்பட்டு அம்மக்கள் அச்சமுதாயத்தால் வார்க்கப்படுகின்றனரே அன்றி பிறப்பால் அமையும் உணா்வுகள் என்பது வேறு என்பது மானுடவியலாளா் கருத்து.  இம்மூன்றாம் பாலினத்தவர் குறித்த கருத்துகளை தற்காலத்தில் மட்டும் இல்லாமல் தொல்காப்பியா் காலம் முதற்கொண்டே காணமுடிகிறது. இலக்கியங்கள் இவா்கள் பற்றிய குறிப்புகளை நோ்மறையாகவும் எதிர்மறையாகவும் பதிவு செய்துள்ளன அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திருநங்கைகள்

தம்பால் நிலையில் இருந்து உடல்மற்றும் உளநிலையில் திரிபடைபவர்களே திருநங்கைகள் ஆவர். இவர்களில் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறுபவர்களும் உண்டு. பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுபவர்களும் உண்டு. திருநங்கை என்றசொல் இவ்விருவருக்கும் வழங்கப்பட்டுள்ள பொதுப்பெயர் ஆகும். இந்தஆய்வுக்கட்டுரையில் திருநங்கைகள் என்ற சொல்லாட்சியே பயன்படுத்தப்பட உள்ளது.

திருநங்கைகள் வேறுபெயர்கள்

எதிர்பாலினத்தவர் உணர்வுகளைப் பெற்று இருப்பவர்களைக் குறிக்க அரவாணிகள், அலிகள், திருநங்கைகள் என்ற பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. “ வேதஇலக்கியங்கள், திருத்தியபிராக்ரிதி, சாண்டா, கலிபா, பாண்டா, காமி என்ற பெயர்களாலும், கிறித்துவமதத்தின் வேதநூலான பைபிள் அண்ணகர் என்ற சொல்லினாலும் திருநங்கையைக் குறிப்பிடுகின்றது. மனுஸ்மிருதி திருநங்கையை நிபூசகம் என்ற பெயரில் குறிப்பிடுகின்றது”1    என்று குறிப்பிடுவா்.

மேலும் படிக்க ...

புகலிடத்தில் புதியதொரு கலை, இலக்கிய இணைய இதழ் - அபத்தம்!

விவரங்கள்
- வ.ந.கி -
நூல் அறிமுகம்
01 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு , சிறந்த வடிவமைப்பில் 'அபத்தங்கள்' என்னும் கலை, இலக்கிய இணைய இதழ்  வெளியாகியுள்ளது.

 ஜோர்ஜ்..குருஷேவ், க.கலாமோகன், கற்சுறா, மாலினி, ஜி.மலர்நேசன், மொனிக்கா.ஜி, பூங்கோதை , நோயல்  நடேசன், சந்துஷ், எஸ்.ஃபாயிசா அலி, எம்.ஆர்.ஸ்டாலின், வ.ந.கிரிதரன் ஆகியோரின் படைப்புகளை உள்ளடக்கி முதல் இதழ் '"கிறுக்கர்களின் கிறுக்கர்கள்' என்னும் அட்டைப்பட அறிமுகத்துடன் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க ...

இன் ஆண்டே வருக! இன்பம் எங்கும் தருக! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
31 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அனைவருக்கும் 'பதிவுக'ளின்
இனிய  புத்தாண்டு வாழ்த்துகள்!


வாயுக் குமிழியென விண்ணில்
விரையுமோரற்பக் கோளொன்றில்
வாழுமொரு இருப்பில் கழிகிறதெம்
வாழ்க்கை.
கிரகத்தின் சுழற்சிகேற்பக்
கழியும் காலமும் சார்பானதே.
சார்பினில் சார்ந்திருக்கும்
வாழ்வில் வந்து பிறந்ததோராண்டு.
வந்த ஆண்டே! வருக! வருக!
வருக! வருக!  நீ வாழி!
இன்று புதிதாய்ப் பிறந்தாய்!
இன் ஆண்டே இங்கு நீ வருக! வருக!
இன்பம் எங்கும் தருக! தருக!
இருப்பிடம் பேணி
இனியும் வாழ்ந்திட
இன்று சூளுரைப்போம்!
என்றும் கடைப்பிடிப்போம்.
இன் ஆண்டே !
இங்கு நீ வருக! வருக!
இன்பம் எங்கும் தருக! தருக!
இன் வாசகரே!
இன்பம் நீர் அடைக! அடைக!

கிடைக்கப்பெற்றோம் - காலமும் மனிதர்களும்: எல்.சாந்திகுமார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நூல் அறிமுகம்
31 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளராகவும், சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும்  விளங்கிய அமரர் எல்.சாந்திகுமார் பற்றிய நூலிது.  நந்தலாலா பதிப்பகத்தின் வெளியீடாக , சிதம்பரம் ராதாகிருஷ்ணனின் நிதியுதவியுடன் வெளிவந்துள்ளது. இலக்கியம், சமூகம், அரசியல், வரலாறு என்னும் தளங்களில் செயற்பட்ட சாந்திகுமாரின் தத்துவார்த்த பார்வை மிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகளையும், அவரைப்பற்றிய பல்வேறு ஆளுமைகளின் மதிப்பீடுகளையும் உள்ளடக்கியதாக தொகுதி அமைந்துள்ளது.   

மேலும் படிக்க ...

கவிதை: பிறக்கும் வருடம் சிறக்க மனத்தால் இறையை வேண்டிடுவோம்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -
கவிதை
31 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பிறக்கும் வருடம் சிறக்க
   மனத்தால் இறையை வேண்டிடுவோம்.
            அடக்கும் ஆணவம் அகல
அகத்தால்  இறையை வேண்டிடுவோம்.

         தொடக்கும் காரியம் துலங்க
துதித்தே இறையை வேண்டிடுவோம்.
          நலமும் வளமும் பெருக
நாளும் இறையை நாடிடுவோம்.

      உற்றார் உறவின் இணக்கம்
உயர்வாய் இருக்க வேண்டிடுவோம்.
         கற்றார் பெருக நாட்டில்
கருதி இறையை வேண்டிடுவோம்.

மேலும் படிக்க ...

மூத்த எழுத்தாளர், பாரதி இயல் ஆய்வாளர் தொ. மு. சி. ரகுநாதன் நூற்றாண்டையொட்டி ஒரு நினைவுப்பதிவு! டிசம்பர் 31 நினைவுதினம்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
30 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

பெரும்பாலான எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களை எனது எழுத்துலக பிரவேசத்தின் பின்னர்தான் நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றேன். இந்த சந்திப்புகளுக்கு தற்போது அரைநூற்றாண்டு காலமாகிறது. மேலதிக தகவல் நான் 1972 இல்தான் எழுத்து துறைக்குள் வந்தேன். அதற்கு முன்னர் இரண்டு தமிழக  பிரபல எழுத்தாளர்களை முதல் முதலில் எனது ஐந்து வயதிலும்,  பத்துவயதிலும்தான் பார்த்திருக்கின்றேன். அவர்கள்தான் இலக்கிய சகோதரர்கள் தொ.மு. பாஸ்கரத் தொண்டமான். தொ.மு. சிதம்பர ரகுநாதன். மூத்தவர் தமிழ்நாடு பாளையங்கோட்டையில் மாவட்ட ஆட்சித் தலைவராகவிருந்த ஐ. ஏ. எஸ். அதிகாரி. கல்கி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் இரசிகமணி டி. கே. சி. ஆகியோரின் நெருங்கிய நண்பர். இவரது பெயரில் திருநெல்வேலியில் ஒரு வீதியும் இருக்கிறது.  இந்த வீதியில் எமது உறவினர்கள் வசிக்கிறார்கள். அத்துடன் ஆனந்தவிகடன், கல்கி முதலான இதழ்களில் இந்திய திருத்தலங்கள் பற்றிய தொடர்களை எழுதியவர்.

இவர் இலங்கை வந்த சமயத்தில் காரைநகர் சிவன்கோயிலுக்கு ஈழத்து சிதம்பரம் என்ற பெயரையும் சூட்டினார். காங்கிரஸ் கட்சியிலிருந்த காந்தீயவாதி. இவரது தம்பிதான்  தொ.மு. சிதம்பர ரகுநாதன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பில் 1956 ஆம் ஆண்டு நாடெங்கும் நடந்த பாரதி விழாக்களில் கலந்துகொண்ட எழுத்தாளர், பேச்சாளர்.  முதலில் காங்கிரஸ் தொண்டராகவிருந்தவர். பின்னர் இடதுசாரிச் சிந்தனையாளராக மாறியதுடன், சோவியத் இலக்கிய மேதை மாக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவலையும் தமிழுக்கு மொழிபெயர்த்தார். இதனை பெரும்பாலான முற்போக்கு எழுத்தாளர்கள் படித்துவிட்டே தங்கள் இலக்கியப் பயணத்தை தொடர்ந்திருப்பார்கள்.

மேலும் படிக்க ...

தமிழில் முதன் முதலில் மருத்துவம் போதித்த மேதையின் 200ஆவது ஆண்டு நினைவு (1822 – 2022) - நவஜோதி ஜோகரரட்னம், லண்டன். -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரரட்னம், லண்டன். -
நவஜோதி ஜோகரட்னம்
30 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

  

மனித சமுதாயத்திற்குத் தொண்டுசெய்யும் குணசீலர்கள் அந்த லட்சியத்துடனேயே வாழ்ந்து விடுகின்றார்கள். அவர்கள் காலத்தால் அழிந்து போவதில்லை. காலத்தின் கோரத்தால் ஏலம் போகாது என்றென்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில் வைத்தியர் சமுல்.பி. கிறீன் அவர்கள் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் ஆவார்.

   அமெரிக்காவில் ‘கிறின் ஹில்’ என்னும் இடத்தில் 1822ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதி உவில்லியம் ஈ.கிறின் தம்பதிகளுக்குப் புத்திரனாக சமுல் பிறந்தார். தனது பதினொராவது வயதில் தாயை இழந்தார். பத்துச் சகோதரர்களுடன் பிறந்த இவர் பலவித இன்னல்களையும் சமாளித்து உடலுழைப்பால் சம்பாதிக்கப் பழகிக் கொண்டார். விடாமுயற்சியும் சிக்கன முறைகளும் அவரது அன்றாட வாழ்வில் அவரது அருமையான அனுபவங்களாகின. பதின்ம வயதில் குமுறி வரும் உணர்ச்சிகளுக்கு அணைபோட்டு ஆக்க வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் வைத்தியர் கிறீன்.

   தனது பத்தொன்பதாவது வயதில் நியூயோர்க்கிலிருந்த வண. டாக்டர்; வர்கீஸ் அவர்களிடம் கடமை ஆற்றத் தொடங்கினார். சாதாரண எழுது வினைஞராகவே பணியாற்றத் தொடங்கிய சமுல் கிறீன் அவர்கள் தனது ஓய்வு நேரங்களைப் படிப்பதிலும்,  வாசிப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டேயிருந்தவர். வைத்தியத் துறையில் ஆர்வம் அதிகமாக அவரிடத்தில் மேலோங்கியிருந்தமையினால் வைத்தியக் கல்வியை மேற்கொண்டு சிறந்த வைத்தியராகத் தேர்ச்சி பெற்றுத் திகழ்ந்தார்.  

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம் - 'நதியே நீராழி அதையே சேர்தல் நாம் சேர்ந்தோம்' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
30 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எம்ஜிஆரின் திரையுலக வெற்றிக்கு ஆரம்பத்தில் அவரும் , வி.என்.ஜானகியும் நடித்த திரைப்படங்கள் உதவின. 'மோகினி', நாம்' , 'மருத நாட்டு இளவரசி' (!950)  போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். உண்மையில் எம்ஜிஆருடன் இணைந்து தொடர்ந்து நடித்த கதாநாயகிகளில் முதற் கதாநாயகி வி.என்.ஜானகி. திரையில் இணைந்தவர்கள் பின்னர் வாழ்விலும் இணைந்தார்கள்.  

வி.என்.ஜானகியே தமிழகத்தின்  முதற் பெண் முதல்வர். கூடவே முதல்வரான முதலாவது நடிகையும் கூட. அவ்வை  சண்முகம் சாலையிருந்த  தனது வீட்டை அ.தி.மு.க.வுக்குக் கொடுத்தார். அதுவே இன்று அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமாகவுள்ளது. தனது சொத்துகள் பலவற்றை கல்விக்காக வழங்கியவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

திருப்பூர் சக்தி விருது 2023

விவரங்கள்
- தகவல் - சுப்ரபாரதிமணியன் -
நிகழ்வுகள்
30 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

'இயற்கையை வணங்கி வாழ்ந்த சமத்துவ தமிழ்த் தொன்மை'! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-லண்டன். -

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-லண்டன். -
சுற்றுச் சூழல்
29 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'இன்றைய சுற்று சூழல் அழிவுகளுக்குக் காரணம்,இயற்கையைத் தனது சுயநல மேம்பாட்டுக்காகத் துவம்சம் செய்தழிக்கும் மனித இனத்தின் செயற்பாடுகளே' என்று பல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.அதில் முக்கியமானவர் பிரித்தானியாவைச் சேர்ந்த திரு.டேவிட் அட்டம்பரோ. இயற்கைசார் ஆய்வாளர். இவர் உலகம் தெரிந்த பிரபலமான  சுற்றாடல் சூழ்நிலைஅறிஞராகும். இவர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக,மனித வாழ்வக்கு இன்றியமையாத இயற்கையின சக்திகள் பற்றி பல தரப்பட்ட ஆய்வுகளைச் செய்திருக்கிறார்.

இக்கட்டுரையில் இன்றைய இயற்கை மாசுபடுதலையும், அன்றைய தமிழரின் இயற்கையை மதித்து வாழ்ந்த வாழ்வியலையும் சுருக்கமாகச் சொல்ல முற்பட்டிருக்கிறேன். இதை எழுத என்னைத் தூண்டிய பேராசியர் மா.சிதம்பரம் அவர்களுக்கும்,தமிழரின் சங்க கால இலக்கியப் பொக்கிசங்கள் பற்றிய தகவல்களைத் தந்துதவிய நண்பர்.பத்மநாப ஐயர் அவர்களுக்கும் எனது மிகவும் பணிவான நன்றி.

'இயற்கையை அழித்தால் மனித இனம் துயர்படும்'என்ற தத்துவக் கோட்பாட்டை எங்கள் தமிழர் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்குப் பல ஆவணங்கள் உள்ளன.பிரபஞ்சத்தையும்,அதன் செயற்பாடுகளையும் மனித இன மேம்பாடு குறித்த அறிவியற் கருத்துக்களுடன் தமிழ்த் தகமை தொல்காப்பியர் மூவாயிரம் வருடங்களுக்கு முன் இயற்கையும் மனித இனமும் பற்றிய அற்புத கருத்துக்களை எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறார்.

,'நிலம், தீ,  நீர், ஆகாயம். வளி' போன்ற ஐம்பெரும் சக்திகளும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றன எனபதை 'நிலம் தீ நீர் வளி விசும்பெரு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்'(பொருள்635) என்பதைப் படித்தாற் புரிந்து கொள்ளலாம். இந்த மாபெரு சக்திகளில்; ஒன்று மாசுபட்டாலும் மிகுதியாகவிருக்கும் அனைத்தும் செயலிழக்கும் என்பது யதார்த்தம். அதுதான் சூழ்நிலை மாசுபடுதலின் அடிப்படைக் கருத்து

சுற்றாடல் சூழ்நிலையின் பாதிப்பு என்னெவென்று மனித இனத்தையே அழித்தொழிக்கும் என்பதைத் தற்போது நடந்துகொண்டிருக்கும் கோவிட்-19 கொடுமையின் தாக்கம் சொல்கிறது. மனிதன் இயற்கையின் ஒரு படைப்பே அவன் தன்னைச் சுற்றியிருக்கும்~'சூழலையழித்தால்' என்ன பேராழிவுகள் வரும் என்பதை இன்று எங்கள் கண்களுக்கு முன்னால் தொடரும், பேரழிவுகளிகளான,பெருவெள்ளம், சூறாவளி. பூமியதிர்ச்சி, நிலச்சரிவு, கொரணா கொடிய வியாதி என்று பல அழிவுகளைப் புரிதலால் தெளிவாக உணரலாம்.  இயற்கைசார்ந்து வாழ்ந்த தமிழர்கள்,இந்தியாவின் நாகரீக வளர்ச்சியில் முன்னணியிலிருந்தவர்கள். இயற்கையின் மாபெரு சக்திகளையுணர்ந்து இயற்கையுடன் வாழப் பழகியவர்கள். தங்கள் வணக்க முறை தொடங்கி, வாழ்வியலின் அங்கங்களான கலை. தொழில்,பொருளாதாரம் அத்தனையையும் இயற்கையுடன் பிணைத்தவர்கள்.  தாங்கள் வாழ்ந்த பூமியை ஐந்திணையாகப் பிரித்து அதனுள் மனித அகத்தையும் புறத்தையும் கண்டவர்கள். குறிஞ்சி (மலைப்பகுதி,பாதுகாப்பு,), முல்லை(காடு,தேடல், மிருகங்களுடான உறவுகள்), மருதம் (ஆற்றுப் படுக்கைகள், வயல்வெளி, குடியிருப்பு, மொழி, கலை வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி) நெய்தல் (கடற்கரை சார்ந்த வாழ்வு நிலை, கடல் கடந்த வணிகம்), பாலை (மக்களற்ற வரண்ட பிரதேசம்) எனப் பிரித்து இந்த அகண்ட உலகத்தின் பல பரிமாணங்களைக் காட்டியவர்கள்.

தொழிற் நுட்ப விருத்தியற்ற கால கட்டமான 1850ம் ஆண்டில் உலக வெப்பநிலை பூச்சியமாக இருந்தது.  2020ல் ஒரு பாகை சென்டிகிறேட்டைத் தொடடிருக்கிறது.வெப்பநிலை காரணமாகக் கடல மட்டம் உயர்கிறது.இது தொடர்வதால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் கடற்பகுதி சார்ந்த குடியிருப்புகளைக் கடல் கொண்டு விடும்.உதாரணமாக வேளைச்சேரி மணிப்பாக்கம் போன்ற பகுதிகளின் நிலை மிக ஆபத்தாகவிருக்கும்.அத்துடன் தமிழ் நாட்டில் மழைவீழ்ச்சி 10 மடங்கு அதிகரிக்கும் அந்த மழை இன்றைய நிலையைவிட 60 விகிதம் கூடிய மழைநீரால் வெள்ளப் பெருக்குகள் வரும்.கிட்டத் தட்ட 38 தமிழ் மானிலங்கள் பாதிக்கப்படும்.

மேலும் படிக்க ...

நெடுங்கதை: ஓக்காடு --- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. - -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
சிறுகதை
28 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1 

அன்றும் அவ்வாறே நடந்தது. மிச்சிக்கு இது பழகிப்போயிருந்தது. “அவ்வே.. அவ்வே.. அய்யோ… அய்யோ…” என்று ‘மேல்கேரியில்’ எழுந்த பேரிறைச்சல் இன்று சற்று மிகுந்திருந்தது. அது அப்படித்தான். முதலில் மிகுந்திருப்பதாகத் தோன்றி, போக போக அதன் வீரியம் குறைந்துகொண்டே போகும். பெண்பூமிக்கு ஊற்றிய நீரைப்போல.

கார்த்திகை மாதத்துக் குளிர் இறங்கிக் கொண்டிருந்தது. முகத்தை இறுக்கி மூடியிருந்த ஆங்காங்கே ஒட்டுப்போட்ட கம்பளியைக் கழுத்துவரை இறக்கினாள் அவள். மெல்ல மெல்ல மங்கிப்போயிருந்த அந்த இறைச்சலைக் காதுகொடுத்து ஓர்ந்தாள்.


    “ஏய்… வெளியே வாடா… பொட்டெப் பயலே…
கொறெ பிரசவத்தலே பொறந்தவனே… ஆம்புளெயா இருந்தா வெளியேவாடா பாக்கலாம்…
    பொட்டெ மாதிரி வீட்டுக்குள்ளே புகுந்து கதவ சாத்திருக்கே…
    டேய் மைரா… வெளியே வாடா…
    நீ இப்போ வரலே…”

    “அய்யோ… அய்யோ.. ஏய் கெல்லண்ணா அவர புடிங்க…
    மாதண்ணா, உனக்கு வேறெ பொலப்பே இல்லையா?
    உங்கக் குடும்பத் தகராற காலையிலே வச்சிக்கோங்க…
    இந்த நடு இராத்திரியிலே… அதுவு அமாவாசே நாள்ளே…
    உங்களுக்கெல்லா மனசாட்சியே இல்லையா…
    கொழந்தங்க தூங்கறாங்க… தூக்கத்திலே அஞ்சி ஏங்குறாங்க வேறே…
    கையிலே இவ்ளோ பெரிய கல்ல எடுத்துகிட்டு.. ஆ.. ஆ..
    தப்பித்தவறி எங்கமேலே பட்டா என்ன ஆகுறது…
    ஏய் மாதண்ணா.. இங்கே பாரு…
    மொதல இங்கிருந்து கௌம்பு…
    அம்மாவாசே ஆனாலே உங்க பஜனெய தாங்க முடியலே…”

வழக்கம்போல தொண்டைத்தண்ணிர் காய கத்தினாள் குனிக்கி.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. சிறுகதை: ஆலகாலம் – கே.எஸ்.சுதாகர் -
  2. தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்! - வ.ந.கிரிதரன் -
  3. சமூக, அரசியல் செயற்பாட்டாளர் மகாதேவன் ஜெயக்குமரனுடனோர் உரையாடல்! - வ.ந.கிரிதரன் -
  4. மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவாக... - ஊர்க்குருவி -
  5. அண்மையில் பார்த்த யு டியூப் காணொளிகள் இரண்டு! - ஊர்க்குருவி -
  6. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதுகள் – 2022 - தகவல்: முருகபூபதி -
  7. கிராமப்புற மருத்துவம் - முனைவர்.அ.ஸ்ரீதேவி , உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.105 -
  8. கவிதை: பயணங்கள் முடிவதில்லை! - ஷர்மிலா கவிநிலா (மன்னார்) -
  9. வாழ்த்துகிறேன்: இளஞ்சிற்பி தனஞ்சன் குமார்! - வ.ந.கிரிதரன் -
  10. கடுப்பூட்டும் கட்டுரைகள் - அருண்மொழிவர்மனின் 'தாயகக்கனவுகள்' நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும் - வாசன் -
  11. அஞ்சலிக் குறிப்பு: அமைதியான சமூக செயற்பாட்டாளன் மகாதேவன் ஜெயக்குமரன் மறைந்தார்! - முருகபூபதி -
  12. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ஜெயன் மஹாதேவன் (ஜெயன் தேவா) மறைவு! - வ.ந.கிரிதரன் -
  13. மாறும் உலக ஒழுங்கும், தமிழ் கேள்வியும் (2 ,3 & 4) : - ஜோதிகுமார் -
  14. முகநூற் குறிப்புகள் : நானும் எழுத வந்தேன்.. - எஸ்.எல்.எம்.ஹனிபா -
பக்கம் 69 / 115
  • முதல்
  • முந்தைய
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • அடுத்த
  • கடைசி