ஹிதுமதெ ஜீவிதெ என்றழைக்கப்பட்ட படுகாகஹே டொன் சுமதிபாலா! - வ.ந.கி -
அண்மையில் இம்மனிதனைப்பற்றிய செய்திக்குறிப்பொன்றை வாசித்தேன். இவனது வாழ்க்கை என் கவனத்தை ஈர்த்தது. நமது தமிழ்ப்பட நாயகர்கள் பலர் திரைப்படங்களில் செய்ததைத்தான் இவன் தன் வாழ்க்கையில் செய்திருந்தான். அதனால் இவன் தன் வாழ்வின் 43 வருடங்களைச் சிறையில் கழித்திருந்தான். பின்னர் விடுதலையான இவன் நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தான். அது பற்றிய செய்தியினை ஜூலை 17, 2022 வெளியான டெய்லி நியூஸ் (இலங்கை) வெளியிட்டிருந்தது.
இவன் களுத்துறை மாவட்டத்தில் பிறந்தான். இவனது பெயர் படுகாகஹே டொன் சுமதிபாலா. ஆனால் இவன் 'ஹிதுமதெ ஜீவிதெ' (Hitumate Jeevithe) என்றே அறியப்பட்டிருந்தான். இவனுக்கு ஒரே யொரு சகோதரி. அழகுமிக்க அச்சகோதரி 1972 புது வருட தினத்தில் நடைபெற்ற அழகுராணிப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாள். ஆனால் அவனது சகோதரி அழகு ராணிப் போட்டியில் வெற்றி பெற்றபின் வீடு திரும்பவில்லை. அவளுக்கு என்ன நடந்தது? களுத்துறைக் காவல்துறை அதிகாரி ஒருவன் இவனது சகோதரியைக் காரில் கடத்தி, ஹொட்டலொன்றுக்குக் கொண்டு சென்று பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய பின் கொலை செய்திருக்கின்றான். இதனை அறிந்த ஹிதுமதெ ஜீவிதெ அந்தக் காவல் துறை அதிகாரியைக் கொன்றிருக்கின்றான். அதற்காக அவனுக்குத் தூக்குத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருக்கின்றார். சிறையிலிருந்தபோது இவன் ஐந்து தடவைகள் தப்பிச் சென்றிருக்கின்றான். தனது சகோதரியின் மரணத்துடன் தொடர்புள்ளவர்களாகக் கருதப்பட்ட மேலும் ஐவரைக் கொலை செய்திருக்கின்றான்.
1978இல் இவனது மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மரண தண்டனையை இலங்கை அரசு ஒழித்ததே அதற்குக் காரணம். பின்னர் பல வருடங்கள் சிறையிலிருந்த இவன் 2018இல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றான். விடுதலையானதிலிருந்து இவன் குளியாப்பிட்டியிலிருக்கும் பெளத்த ஆலயமொன்றில் தங்கி வாழ்ந்திருக்கின்றான்.





இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் ஒருவர் முனியப்பதாசன். இவர் பற்றி எழுதியவர்கள் இவரது சிறுகதைகள் பற்றியே குறிப்பிட்டுள்ளார்கள். யாருமே இவர் தொடர்கதை எதுவும் எழுதியதாகக் குறிப்பிட்டதில்லை. ஆனால் இவர் தொடர்கதையொன்றும் எழுதியுள்ளார். அது கடல் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட தொடர்கதை. அது ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளியான தொடர்கதை. அதன் பெயர் - காற்றே நீ கேட்டிலையோ? தொடர்கதை முழுமையடையவில்லை. நான்கு அத்தியாயங்களையே என் தேடலில் காண முடிந்தது. இருந்தாலும் இது முக்கியமானதோர் அவதானிப்பு. இதுவரையில் யாருமே முனியப்பதாசனின் இத்தொடர்கதை பற்றிக் கூறாததால் இப்பதிவு முக்கியத்துவம் மிக்கது. ஆவணச்சிறப்பும் மிக்கது. இத்தொடர்கதை ஈழநாடு பத்திரிகையின் 6.10.1966 பதிப்பில் ஆரம்பமாகி , ,28.10.1966 பதிப்பு வரையில் , மொத்தம் நான்கு அத்தியாயங்கள் வெளியாகியுள்ளது. 
இலக்கியம் என்பது மனிதனைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் வெளியாகும் வெறும் சொல் மட்டும் இல்லை. மனித வாழ்வு எத்தனை அளவெல்லாம் விரிவடைய முடியுமோ அதனை விளக்கிக் காட்டும் மெய்யுரை. அழகான மனோநிலைகள். அரிதரிதான உணர்ச்சிகள், மகத்தான கனவுகள், ஆழ்ந்தகன்ற சித்தாந்தம், அறிவரிய இலட்சியம் போன்றவைகளை உள்ளடக்கிய அமுதசுரபியே இலக்கியம். இலக்கியத்தைப் படைக்க விரும்பும் படைப்பாளிகள் சமூகத்தில் காணலாகும் ஏற்றத்தாழ்வுகள், குறைநிறைகள், வாழ்க்கைப் போக்குகள் ஆகிய பலவற்றையும் கண்டு அவற்றைத் தமது சொந்தப்பட்டறிவோடு இணைத்துக் கூறுவர். இவ்வகையில், மிகச் சிறந்து விளங்கியவர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். இவர் எழுதிய சிறுகதைகளில் பெண்களின் அவல நிலைகளை எடுத்துக்காட்டுகிறார். இவர் பொருளாதாரத்தின் பங்களிப்புதான் பெண்ணுரிமையின் முதல் படிக்கட்டு. எந்தெந்தச்சமூகங்களில் பெண்கள் உழைப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ அந்தச் சமூகங்களின் பொருாதாரம் விரைவாக வளரும். சமூக நீதியின் முதல் விதை அப்போதுதான் முளைக்கும் என்று சொல்லுகின்றார். இவர் தமது சிறுகதை இலக்கியங்களில் காலந்தோறும் உழைக்கும் பெண்களை படம் பிடித்து காட்டுவதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமான் பற்றிய குறிப்புகளைத் தொல்காப்பியம் சங்கஇலக்கியம் போன்ற பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் காணமுடிகின்றன. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரேயே முருகவழிபாடு இருந்தமையைத் திறனாய்வாளர்கள் சுட்டுகின்றனர். ”சேயோன் மேய மைவரை உலகமும்”(தொல்.பொருள்.அகத்.நூ-5) எனத் தொல்காப்பியம் மலை சார்ந்த பகுதியான குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளாக முருகனைச் சுட்டுகிறது. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாகப் போற்றப்பட்டு வழிபடப்பட்டு மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த முருகக்கடவுள் பற்றிய செய்திகளைச் சங்க இலக்கியங்கள் முழுவதும் காணமுடிகின்றன.






உழைத்துமே உயர்ந்திடு வோமே! 
அதிகாரம் என்ன செய்யும்?
அண்மைக்காலமாக , காலை விடியும்போது இன்று என்ன செய்தி வரப்போகிறதோ? என்ற யோசனையுடன்தான் துயில் எழுகின்றேன். இந்த யோசனை கொவிட் பெருந்தொற்று பரவிய காலத்திலிருந்து தொடருகின்றது. அடுத்தடுத்து எமது கலை, இலக்கிய குடும்பத்திலிருந்து பலரும் விடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இயல்பாகவே மரண பயமும் வருகின்றது.


' ஒரே பயிர்ச் செடியில் , ஆண் பூக்கள் பூத்து , பெண் பூக்களும் பூக்கின்றன ' என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும் ? . சிறிமாவின் காலத்தில் , அதிசயமாக இலங்கையில் கல்வி முறையை மாற்றி இருக்கிறார்கள் . அதில் , விவசாயப் பாடமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது . அப்பாடத்திட்டத்தை இன்னும் சீர் படுத்தி இருக்க வேண்டும் . அதிலேயும் இந்த எளிய கருத்துக்கள் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படவில்லை . அசேதன பசளைப் பாவிப்பு இருந்தளவுக்கு சேதன பாவிப்பும் சொல்லிக் கொடுக்கப் படவில்லை . அது , சீனக் கல்வி முறை . ஒருவேளை அங்கே இருந்த புத்தகத்தையே அப்படியே ......தமிழ்படுத்தி , நடைப்படுத்திஇருப்பார்களோ ? . 
அவுஸ்திரேலியச் சூழலையும், இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் மையப்படுத்தி மெல்பனில் வதியும் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தியின் தெரிவிலிருந்து வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பே ‘தைலம்’ நூல். யூகலிப்டஸ் மரங்கள் அவுஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படும் மரமாகவும், இந்நாட்டுக்கே பிரத்தியேகமான குவாலா கரடிகளின் வாழ்விடமாகவும் காணப்படுகின்றது. அந்த மரங்களில் இருந்து சாரமாகப் பெறப்படும் தைலத்தைப் போன்று இங்குள்ள மக்களின் வாழ்க்கைச் சாராம்சத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தொகுக்கப்பட்ட சிறுகதைகளுக்கு தைலம் என்று பெயரிடப்பட்டமை சாலப் பொருத்தமாகவே காணப்படுகின்றது.


