பதிவுகள் முகப்பு

ஆய்வு: இலக்கண அமைப்புமுறைக் கோட்பாட்டில் நன்னூல்- வினையியல் - முனைவர் ரா.பிரேம்குமார், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை , ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவானைக்கோவில்-5 -

விவரங்கள்
- முனைவர் ரா.பிரேம்குமார், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை , ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவானைக்கோவில்-5 -
ஆய்வு
28 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முகப்பு:

ஒலிகள் தொடர்ந்து பொருளை உணர்த்தும் அமைப்பை எடுத்துக்காட்டுவது மொழியின் இலக்கணமாகும், மொழியின் இயல்பை விவரிப்பதே இலக்கணம் என்பர். மொழி என்பது ஒலி மற்றும்  வரிவடிவத்தைச் சார்ந்த்து. வரிவடிவம் அவ்வப்போது மாற்றம் அடையலாம். புது வரிவடிவங்களும் எளிதில் இடம்பெற்றுவிடலாம் இவ்வகையான மாற்றங்களை காலப்போக்கில் ஏடுகளில் பதிந்து மொழியின் தன்மை சிதையாமல் காப்பதே இலக்கணத்தின் நோக்கம் எனலாம். இவ்வளப்பரிய செயல்களை தம்முள் கொண்டிருக்கும் இலக்கணம் தன்னை தாமே எவ்வாறு கட்டமைத்துக் கொள்ளவேண்டும் என்ற வரையறையும் இலக்கணத்திற்கு உண்டு. அவற்றினைக் கோட்பாடுகளாக இலக்கணிகள் தம் படைப்பினுள் வைத்து இலக்கணம் அமைத்திருப்பர். அவ்வாறு அமையப்பெற்றது இவ்விலக்கண அமைப்புமுறைக் கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டினுள் நன்னூலில் இடம்பெற்றுள்ள வினையியல் எவ்வாறு ஆக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கும் முகமாக இக்கட்டுரை அமையப்பெறுகிறது.

கோட்பாடு-பொருள் விளக்கம்

கோட்பாடு என்ற சொல்லுக்குக் கொள்கை, நிலைமை, கொண்டிருக்கும் தன்மை, அனுசரிப்பு என்று கழகத் தமிழ் அகராதி பொருள் விளக்கம் தருகிறது (கழகத் தமிழ் அகராதி, ப.406). மேலும் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கோட்பாடு எனும் சொல்லுக்கு “ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்றுக்களின் தொகுப்பு (கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, 381). இதன்வழிக் கோட்பாடு என்பது அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்ட கூற்றுகளின் தொகுப்பு என்ற கருத்தாக்கம் பெறப்படுகிறது.

மேலும் படிக்க ...

இரட்டை ஆத்துமாக்கள்! - அழகர்சாமி சக்திவேல் -

விவரங்கள்
- அழகர்சாமி சக்திவேல் -
சமூகம்
28 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று, கிறித்துவம் நமக்கு போதிக்கிறது. இங்கே, பரிசுத்த ஆவி என்பது, இறைத்தன்மை கொண்ட, ஒற்றை ஆத்துமாவைக் குறிக்கிறது. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றுதான் என்று, இந்துமதத்தின் அத்வைதம், நமக்கு போதிக்கிறது. இந்துமதத்தின் இன்னொரு நிலையான, த்வைதம், பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு என்று நமக்கு போதிக்கிறது. ஆக, இந்து மதம் சொல்லும் மனிதனின் ஜீவாத்மாவும், ஒரு ஒற்றை ஆத்துமாவையே குறிக்கிறது. மனிதனின் படைப்பைக் களிமண்ணில் துவக்கிய இறைவன், பின்னர், அவனது சந்ததிகளை, நீரின் சத்திலிருந்து உருவாக்கி, பின்னர் அவனைச் சீரமைத்து, தனது உயிரை அவனிடம் ஊதினான் என்று, இசுலாம் நமக்கு போதிக்கிறது. இங்கே, இசுலாம் சொல்லும் உயிர் என்ற வார்த்தை, ஆத்துமாவைக் குறிக்கிறது. ஆக, இந்த மதத்தில் சொல்லப்படும் ஆத்துமாவும், ஒற்றை ஆத்துமாவையே குறிக்கிறது. இப்படி, இன்று உலகில், பெரு விருட்சமாய் வளர்ந்து நிற்கும் மதங்கள், ஆத்துமாவைப் பற்றி, இரண்டு விசயங்களை, நமக்குப் பொதுவாய்ச் சொல்லுகின்றன.

1.       ஒரு மனிதனுக்கு ஒரு ஆத்துமா இருக்கிறது.

2.       ஆத்துமா என்பது, மனிதனுக்கு மட்டுமே இருக்கிறது. (சில மதங்கள், உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆத்துமா இருப்பது போலப் பேசினாலும், ஆறறிவிற்குக் கீழே உள்ள உயிர்களின் ஆத்துமாக்கள் குறித்து, அவை அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.)

அப்படியென்றால், இந்தக் கட்டுரை சொல்லப்போகும் இரட்டை ஆத்துமாக்கள் யார்? சற்று விரிவாக இங்கே பார்ப்போம். அதற்கு முன்னர், நான் கண்ட மற்றும் படித்த சில காட்சிகளையும், அதன் மூலம், எனது சிந்தனையில் எழுந்த சில கேள்விகளையும், உங்கள் பார்வைக்கு, முதலில் வைக்கிறேன்.

மேலும் படிக்க ...

பேரவையின் இலக்கியக்குழு வழங்கும் சிறுகதைக்கலை - அடிப்படைகளும் புரிதல்களும் - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) -

விவரங்கள்
- வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) -
நிகழ்வுகள்
28 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேரவையின் இலக்கியக்குழு வழங்கும் சிறுகதைக்கலை - அடிப்படைகளும் புரிதல்களும்

 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழு, புதிய அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களைத் தொடர்ந்து உருவாக்கும் முயற்சியில் சிறுகதை பயிற்சிப் பட்டறையை இந்த ஆண்டு தொடங்கவுள்ளது.

இதில் எழுத்தாளர் திரு லக்ஷ்மி சரவணக்குமார் அவர்கள் கலந்துகொண்டு புதிய எழுத்தாளர்களுக்கு சிறுகதைகள் குறித்த அடிப்படைகளையும், எளிமையாக கதைகளைத் தேர்வு செய்து எழுதுவதையும், கதைகளுக்கான மொழி மற்றும் எளிய பயிற்சிகளையும் சொல்லிக் கொடுக்கவுள்ளார்.

மேலும் படிக்க ...

ஆசிரியர் சோமசேகரசுந்தரம் மறைவு!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
27 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியர் சோமசேகரசுந்தரம் விசுவலிங்கம் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.
 
சோமசேகரசுந்தரம் மாஸ்டரின் மாணவர்களில் ஒருவனாகக் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்பில் எங்கள் வகுப்பு ஆசிரியராகவும், பிரயோக கணித ஆசிரியராகவும் இவரிருந்தார். இவர் மாணவர் எவரையும் கண்டித்து நான் பார்த்ததில்லை. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர் மாணவர்களுடன் மிகுந்த நட்புடன், அன்புடன் பழகுவார். எங்கள் காலத்தில் இவ்விதம் மாணவர்களுடன் மிகுந்த நட்புடன், அன்புடன் பழகிய ஒரே ஆசிரியர் இவராகத்தானிருக்கும். சில சமயங்களில் தன் உணர்வுகளையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வார். இவரை நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது இவரது இந்த ஆளுமைதான்.
மேலும் படிக்க ...

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (12) - காலவெளிக் கூம்புக்குள் ஒரு கும்மாளம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
25 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் 12 - காலவெளிக் கூம்புக்குள்  ஒரு கும்மாளம்!

"கண்ணம்மா நீ ஓர் அலையடி"

"கண்ணா நான் அலையா?"

"கண்ணம்மா நீ ஒரு துகளடி"

"நான் துகளா கண்ணா?"

'கண்ணம்மா நீ ஓர் அலை. நீ ஒரு துகள். அலை-துகள் நீ கண்ணம்மா."

"கண்ணா, ஓரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான். நான், நீ, நாம் காணும் இந்த வான், இந்த கடல், இப்பிரபஞ்சம் எல்லாமே அலை-துகள்தான். சக்தி-பொருள்தான். இல்லையா கண்ணா?"

"கண்ணம்மா, சரியாச் சொன்னாய். நீ சரியாகவே இருப்பைப் புரிந்து வைத்திருக்கிறாயடி."

"உண்மைதான் கண்ணா. உன்னுடன் சேர்ந்து என் கவனமும் அறிவியலின் பக்கம் திரும்பி விட்டது. "

"பெரிய இப்பெருவெளிப்பிரபஞ்சமும் சரி, நுண்ணிய குவாண்ட உலகும் சரி கண்ணா பொருள்-சக்தியின் பிரதிபலிப்புத்தான். சக்தியின் நடனம்தான்  நாம் காணும் இந்தபொருட் பிரபஞ்சம் கண்ணா."

"சக்தியின் நடனம். அற்புதமான சிந்தனை கண்ணம்மா. அடிப்படைத்துகளின் நடனமே இந்தப்பொருட்  பிரபஞ்சம் கண்ணம்மா."

"கண்ணா, உண்மையில் காட்சிகளை உள்ளடக்கியதொரு திரைச்சித்திரமே இப்பிரபஞ்சம். இல்லையா கண்ணா?"

இவ்விதம் கூறிய மனோரஞ்சிதத்தைக் காதல் பொங்க நோக்கினேன்.

"நாம் வாழும் இப்பிரபஞ்சம் உண்மையில் திரைப்படமொன்றின் ஃபிலில் சுருள்போன்றதுதான் கண்ணம்மா."

"ஃபிலிம் சுருள் பல சட்டங்களை உள்ளடக்கியதுதான். அதைப்போல்தானே இப்பிரபஞ்சமும் காட்சிகளைக் கொண்டது கண்ணா?"

"கண்ணம்மா, மிக எளிமையாக, இலகுவாகக் காட்சிகளால் ஆனது இப்பிரபஞ்சம் என்று கூறிவிட்டாய். ஆனால் அதன் பின்னால் நவீன அறிவியலின் அற்புதமானதொரு கோட்பாடுள்ளது கண்ணம்மா."

"காட்சிகளுக்குப் பின் கோட்பாடா? அது என்ன கண்ணா?"

மேலும் படிக்க ...

ஊமைகளின் உலகம்..! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
சிறுகதை
24 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அந்தப் பச்சிளம் உதடுகள் மார்பில் பட்டபோது தாய்மையின் பூரிப்பில் அவள் மெய்மறந்து போனாள். குழந்தையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக்கொண்டாலும் தாய்மையின் அந்த இதமான உணர்வின் வெளிப்பாட்டை அதிக நேரம் அவளால் அனுபவிக்க முடியவில்லை. பூப்போன்ற சின்னஞ் சிறிய அந்த உதடுகளின் தேடலில் அங்கே சுரப்பதற்கு எதுவுமில்லை என்று தெரிந்த போது குழந்தையின் ‘வீல்’ என்ற அந்த அலறல் சத்தம்தான் அவளது செவிகளில் முட்டி மோதி நின்றது.

வெறுமையின் தாக்கம் ஏற்படுத்திய குழந்தையின் ஆக்ரோசத்தவிப்பை அவளால் அப்போதுதான் முழுமையாக உணரமுடிந்தது. அதுவே அவளது உணர்வுகளின் பிரவாகமாய் ஒருகணம் அவளை உடைந்து போகவும் வைத்தது. அடுத்த கணமே அந்த உணர்வின் தாக்கம் ஏற்படுத்திய இயலாமையின் வெளிப்பாடாய் அந்தத் தாய் மனசு ஓவென்று விம்மி வெடித்தது. பொட்டென்று மார்பில் விழுந்து வழிந்த கண்ணீர் துளிகள் முகம் புதைத்து அழுத குழந்தையின் உதட்டில் படிந்த போது வாய்விட்டு வெளியே சொல்லத் தெரியாத அந்தப் பிஞ்சின் அலறல் கூட ஒரு கணம் தேங்கி நின்றது.

‘அம்மா ஊட்டிய அமுதம் உப்புக் கரித்தது ஏன்?’ என்று அந்தக் குழந்தைக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. குழந்தையைச் சமாதானம் செய்ய வாய் திறந்து ‘ஆராரோ’ சொல்லித் தாலாட்டுப் பாடக்கூட முடியாத சூழ்நிலைக் கைதியாய் அவள் மாறியிருந்தாள். வாய்திறந்தால் வெளியே உதிர்வது தமிழாக இருந்ததால்தான் அவள் இந்த மண்ணில் இப்படியான அவலநிலைக்குத் தள்ளப்பட்டாள் என்பது அவளுக்குத் தெரியும். ஆனாலும் அது பற்றிச் சிந்திக்க இதுவல்ல நேரம் என்பதால் அது பற்றிய கவலைகளை தற்காலிகமாக அவள் ஒரு புறம் தள்ளி வைத்திருந்தாள்.

பசி கண்ணை இருட்டிக் காதை அடைத்தது. இப்படியான பசிக்கொடுமையை அவள் ஒரு போதும் அனுபவித்ததில்லை. கொடுமையிலும் கொடுமை பசிக்கொடுமை அதுவும் குழந்தைகள் பரிதவிப்பதைப் பார்த்தபோது தூக்கம் கெட்ட இரவாய் எப்போது விடியும் என்ற எதிர்பார்ப்புடையதாய் அந்த இரவு அவளுக்கு அமைந்திருந்தது. கடைசிக் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அவளது கணவன் தொலைந்து போயிருந்தான். உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதுகூடத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் நாடு இருந்தது. அதனால் குழந்தைகளின் பசியைப் போக்க யாரிடமாவது கையேந்த வேண்டிய நிலைக்கு அவள் தள்ளப்பட்டிருந்தாள். அகதியாய் சொந்த மண்ணிலே புலம் பெயர்ந்து இங்கே வந்தபோது, படித்திருந்தும் வயிற்றுப் பிழைப்புக்காக அரிசி ஆலை ஒன்றில் கூலி வேலைதான் அவள் செய்தாள்.

மேலும் படிக்க ...

லண்டனில் ஆனந்தலயாவின் கலை அஞ்சலி! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
நவஜோதி ஜோகரட்னம்
24 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

   

லண்டனில் மிருதங்க இசையின் தனிப் பெரும் ஆசானாகத் திகழ்ந்த ஸ்ரீ கந்தையா ஆனந்த நடேசன் அவர்கள் கொரோனாவின் ஆரம்பத்தாக்குதலில் மறைந்த செய்தி துரதிஷ்டமானதாகும். குறிப்பாக அவரிடம் மிருதங்கக் கலையைப் பயின்று இன்றும் அக்கலையை ஆர்வத்தோடு முன்னெடுத்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் குமுறல்கள் மனதை உருக்கும் செய்தியாகும். இவ்விதம் அவரிடம் மிருதங்ககலையைப் பயின்ற இளம் கலைஞர்கள் அவரது 2ஆவது வருட நினைவை கலை வடிவங்களாக்கி பல்வேறு தடங்கல்களின் பின்னர் வெளிப்படுத்தியிருந்தார்கள்.  

கடந்த வாரம் லண்டன் ‘ஹரோ ஆட் சென்ரறில்’ ஸ்ரீ ஆனந்தநடேசன் அவர்களிடம்     மிருதங்கக்கலை பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து கலை நிகழ்வை நடாத்தியமை தமது குருவின் மீதுள்ள அன்பை நினைவிருத்தி விளம்பி நின்றது. ஸ்ரீ ஆனந்தநடேசன் அவர்கள் மிருதங்கக்கலை மாத்திரமன்றி கஞ்சிரா, கடம், முகர்சிங்,  தபேலா, தவில் போன்ற தாள வாத்தியங்களிலும் தேர்ச்சி பெற்றவராவார். இத்தகைய கலைகளை தமது மாணவச்செல்வங்களுக்கும் பயிற்றுவித்திருக்கிறார் என்பதை இவருக்கான அஞ்சலியின்போது கலை ரசிகர்களால் அவதானிக்க முடிந்தது.

ஸ்ரீ ஆனந்த நடேசன் அவர்களின் அன்பு மகள் சௌமியா அவர்களின் முன்னெடுப்பில் நடாத்தப்பட்ட இசைக்குழுவில் மகள் சௌமியாவின் பாடலுக்கு,  அவரின் தந்தையின் மாணவர்கள் தத்தமது கலைவடிவங்களினூடாக அஞ்சலித்து அசத்தியிருந்தமை நெஞ்சை உருக்கியதொன்றாக அமைந்திருந்தது. ஸ்ரீ ஆனந்தநடேசன் அவர்களால்  மிருதங்க அரங்கேற்றம் கண்டுகொண்ட இளம்கலைஞர்கள் இணைந்து இசைக்கருவிகளை நேர்த்தியாகவும்,  இணக்கமுடனும் வாசித்து செவிக்கினிய இசையை அமைத்திருந்தமை மிகப் பாராட்டுக்குரிய விடயமாகும். இந்தவேளையில் எமது மகன் அகஸ்ரி யோகரட்னத்தின்; மிருதங்க அரங்கேற்றத்தை அவனின் பதினாறாவது வயதில் ஸ்ரீ ஆனந்தநடேசனின் அவர்களின் பதினாறாவது அரங்கேற்றத்தில் அமைந்து மிகச் சிறப்பாக லண்டனில் இடம்பெற்றதை இங்கு நன்றியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு யாழ். சிறையில் அடைபட்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் எச். எம். பி. மொஹிதீன் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
24 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஊடாக பல முற்போக்கு எழுத்தாளர்களை அறிந்துகொண்டேன். அத்துடன் தமிழக முற்போக்கு இலக்கிய இதழ்கள் சரஸ்வதி, தாமரை முதலானவற்றில் எழுதிய படைப்பாளிகள் பற்றியும் தெரிந்துகொண்டேன். அவர்களில் ஒருவரான எச். எம். பி. மொஹிதீன் பற்றி ஜீவா சொன்ன செய்திகள் வியப்பூட்டுவதாக இருந்தது. இவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கத்தவர் எனவும், 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த கிளர்ச்சியையடுத்து  கைதாகி சிறைவைக்கப்பட்டிருந்தார் எனவும் ஜீவா சொன்னார். யாழ்ப்பாணம் சிறையில் அக்காலப்பகுதியிலிருந்தவர்களில் ஒருவர்தான் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான ரோகண விஜேவீரா.  மற்றவர் எழுத்தாளர் எச். எம். பி. மொஹிதீன்.  ரோகண விஜேவீரா, தென்னிலங்கையில்  சிங்கள இளைஞர்களை எழுச்சிகொள்ளச்செய்து ஆயுதக்கிளர்ச்சியை மேற்கொண்டமைக்காக கைதானவர். ஆனால், மொஹிதீன் எழுத்தாயுதம் ஏந்தியமையால் கைதானவர் என்பதை தெரிந்துகொண்டேன்.  வட கொரியாவின் கிம் இல் சுங் எழுதிய சில புத்தகங்களை மொஹிதீனும்  அவர் மூலமாக அவரது நண்பர்கள் சிலரும் மொழிபெயர்த்தனர்.  1971 ஏப்ரில் கிளர்ச்சிக்கு  வடகொரியாவின் சித்தாந்தங்களும் காரணமாக இருக்கலாம் என அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசின் புலனாய்வுப்பிரிவு தீர்மானித்ததன் விளைவுதான் எச். எம். பி. மொஹிதீனின் சிறைவாசம்.

மேலும் படிக்க ...

தொடர்நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (11) : இயற்கை பற்றிய கண்ணம்மாவுடனான உரையாடலொன்று - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
23 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் பதினொன்று -  இயற்கை பற்றிய கண்ணம்மாவுடனான உரையாடலொன்று.

"கண்ணம்மா, இயற்கை எவ்வளவு அழகானது. படைப்புத்திறன் மிக்கது."  என்றேன்.  

அதற்கு அவள் இவ்விதம் பதிலிறுத்தாள்:

"கண்ணா, நீ கூறுவது மிகவும் சரியான கூற்று. உண்மையில் நானும் இவ்விதம் அடிக்கடி எண்ணுவதுண்டு. உண்மையில் இயற்கையின் அழகு, நேர்த்தி, படைப்புத்திறன் என்னை எப்பொழுதும் பிரமிக்க வைப்பவை. இவை பற்றி அறிய, புரிய என் இருப்பு முழுவதையும் அர்ப்பணித்தாலும் நான் மகிழ்வேன் கண்ணா."

"கண்ணம்மா, உண்மையில் இயற்கையின் படைப்புத்திறனே என்னைப் பெரிதும் வியக்க வைக்கின்றது."

"கண்ணா, வெளியில் விரிந்திருக்கும் இப்பிரமாண்டமான பிரபஞ்சம் மட்டுமல்ல, கண்ணுக்கே புலப்படாத குவாண்டம் உலகிலும்தான் எவ்வளவு நேர்த்தியாக எல்லாமே படைக்கப்பட்டுள்ளன.  உள்ளும் , வெளியும் காணும் அனைத்திலுமே படைப்புத்திறன் வெளிப்பட்டு என்னை வியக்க வைக்கின்றது."

அருகிலமர்ந்து என் தோளுடன் சாய்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் மனோரஞ்சிதத்தை, என் கண்ணம்மாவை, ஒரு கணம் நோக்குகின்றேன். பொட்டும் , இரட்டைப்பின்னலுமாக பதின்ம வயதுப்பிராயத்தில் காட்சி தந்ததுபோலவே இன்றுமிருக்கின்றாள். நான் அவளையே வைத்த கண் வாங்காது உற்றுப்பார்க்கவே அப்பார்வையின் வீச்சு தாங்காமல் ஒரு கணம் வெட்கம் கவிழ முகம் தாழ்த்தினாள். மறுகணமே தன்னைச் சுதாரித்துகொண்டாள்.  அத்துடன் கேட்டாள்:

"என்ன பார்க்கிறாய் கண்ணா?"

"இல்லை, இந்த அழகு, இந்தச் சிரிப்பு, இந்தக் குறும்பு இவையெல்லாம் உண்மையா? இங்கு நான் படைப்புத்திறனை , இயற்கையின் படைப்புத்திறனை வியக்கின்றேன் கண்ணம்மா.  கண்ணம்மா, நான் இயற்கையை, இந்தப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கித்தான் கூறுகின்றேனடி, அனைத்தையும் படைத்ததாகக் காண்கின்றேன். நாம் எம் புலன்களைக் கொண்டு இயற்கையை நூறு வீதம் அறிய முடியாது. இல்லையா? அதுவரை , அவ்விதமானதொரு அறியும் நிலை வரும்வரை , இயற்கையே  என் கடவுள்.  நாம் அனைவரும் இயற்கை அன்னையின் குழந்தைகள். இதுதான் என் நிலைப்பாடு."

மேலும் படிக்க ...

ஆய்வு: வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' , 'குடிவரவாளன்' நாவல்கள் - ஒரு நோக்கு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் –

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் –
ரஞ்ஜனி சுப்ரமணியம்
22 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் ரஞ்ஜனி  சுப்ரமணியம் சிறந்த கலை,இலக்கியத்திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். அவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மற்றும் 'குடிவரவாளன்' நாவல்களைப்பற்றி எழுதிய திறனாய்வுக் கட்டுரை இது. -


ஒரு அகதியின் வாழ்வும் உணர்வுகளும் அவனாக வாழ்ந்தாலன்றி புரிந்து கொள்வது சிரமமானது. கடந்த சில  தசாப்தங்களில் முன்னேற்றமடைந்த மேற்கு நாடுகளில் தஞ்சம் கோரிய  எம்மவர்களின் பயண மற்றும் வாழ்வியல் அவலங்கள், தாயகத்தில் இருக்கும் உறவுகளால் சரியான விதத்தில் மனம் கொள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான பதில் இன்றளவும் 'இல்லை'  என்பதாகவே அமையும். இத்தகைய   ஒரு சூழ்நிலையில் தனது புலம்பெயர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தரமான  படைப்பாளி  தன்னிலை ஆறுதலை மட்டுமல்ல, தனது அனுபவப் பதிவுகளின் மூலம் அகதி வாழ்வின் கொடூரமான மறுபக்கத்தை வாசகருக்காகவும் வரலாற்றுக்காகவும் விட்டுச் செல்கிறான்.  வ.ந. கிரிதரன் அவர்களின் அமெரிக்கா (முதற்பதிப்பு 1996  இரண்டாம் பதிப்பு 2019), குடிவரவாளன் ( 2015) ஆகிய இரு நாவல்களும் இவ்விடயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இவ்விரு நாவல்களின் ஆசிரியரான வ.ந.கிரிதரன்  அவர்களது  எழுத்தின் இயல்புகளை, படைப்புகளினூடாக வெளிப்படும் பொதுப்பண்புகளால்   இனங்காண முடியும். தாய் மண்ணின் சாயம் போகாத நினைவுகளுடன் வாழ்பவர் ; வரலாற்றை ஆராய்ந்து அறிபவர் ; கவித்துவமான சிந்தனைகளைஉடைய இயற்கையின் ரசனையாளர்; வாழ்வியலை  தத்துவரீதியாகவும் பிரபஞ்ச சார்புத் தன்மையுடன் அர்த்தப்படுத்துபவர் ;  சஞ்சலமுற்ற நேரங்களில் பாரதியின் கவிதைகளால் புத்துயிர் பெறுபவர் ; தன்னிமிர்வும் பன்முக வியாபகமும் கொண்ட சிந்தனையாளர் ; வித்தியாசமான நடையுடன் கூடிய எழுத்தாளர்.இவரது எழுத்தின் போக்கினை உணர்ந்து நாவலுக்குள் உள்நுளையும் ஒருவரால் அதிக ரசனையும் புரிதலும் கொள்ள முடியும் என்பது உண்மை.

கனடாவிற்கான தன் பயணப் பாதையில் இடைமாறலுக்காக, சட்டபூர்வமாக  அமெரிக்காவின் பொஸ்டன் விமான நிலையத்திற்கு வரும் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால்  அகதி அந்தஸ்து கோர வேண்டிய  நிலைக்குத் தள்ளப்படுகிறான். இச்சந்தர்ப்பத்தில், ஜனநாயகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் உலகின் மாபெரும் வல்லரசொன்றின் கருணையற்ற இருண்ட  பக்கங்களையும் மனோரீதியான சித்திர வதைகளையும் விலாவாரியாக வெளிச்சமிட்டுக் காட்டுவதே  படைப்பாளியின் நோக்கம். அதில் பெருவெற்றியும் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க ...

பவளவிழா நாயகன் மாவை நித்தியானந்தன் கலை இலக்கியத்தில் மாவை நித்தியானந்தனின் வகிபாகம்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
21 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                               -  மாவை நித்தியானந்தன் -

- கலைஞரும் மெல்பன் பாரதி பள்ளியின் நிறுவனரும்,  சமூகச்செயற்பாட்டாளரும் தன்னார்வத் தொண்டருமான மாவை நித்தியானந்தனின் பவளவிழா நேற்றைய தினம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பன் ஸ்பிரிங்வேல் மாநகர மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை மெல்பன் பாரதி பள்ளி பெற்றோர் – ஆசிரியர்கள் இணைந்து  கொண்டாடினர். மாவை நித்தியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ஆவணப்படத் தொகுப்பு காட்சியும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் மாவை நித்தியின்  சிறப்பியல்புகளை கூறும் நித்தியம் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. இம்மலரில் இடம்பெற்ற எழுத்தாளர் முருகபூபதியின் ஆக்கம். -


மனிதர்களின் கலை, இலக்கிய ஆர்வம் இயல்பிலேயே ஊற்றெடுப்பது.  அந்த ஊற்றை நேர்த்தியாக சமூகத்திற்கு பயன்படும் விதத்தில்  நதியாக்குவதில்தான்  அவர்களின் ஆளுமைப்பண்பு வெளிப்படுகிறது. அத்தகைய வற்றாத ஓடும் நதிதான் எங்கள் மாவை நித்தியானந்தன்.  தனது ஆரம்ப  பாடசாலைக் காலத்திலிருந்தும் யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வாழ்க்கை முதல், கொழும்பு கட்டுப்பெத்தை பல்கலைக்கழக வளாகத்தின் தொழில் சார் பயிற்சிக் காலத்திலும் தன்னிடம் சுரந்துகொண்டிருந்த கலை, இலக்கிய தாகத்தை சமூகத்தை நோக்கி பயன்படுத்தியவர்தான் எழுத்தாளரும் நாடகக் கலைஞரும்,  சமூகச் செயற்பாட்டாளருமான மாவை நித்தியானந்தன். இவரை கடந்த ஐம்பது வருடகாலமாக அவதானித்து வருகின்றேன். 1970 காலப்பகுதியில் மாவை நித்தி, மேற்சொன்ன கட்டுப்பெத்தை பல்கலைக் கழகத்தில் மேற்கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தவேளையில் அங்கு நீண்ட காலம் இயங்கி வந்த தமிழ்ச்சங்கம் வருடாந்தம் நடத்தி வந்த கலைவிழாவில்தான் முதல் முதலில் சந்தித்தேன். அந்தச்சங்கம் நுட்பம் என்ற சிறந்த கலை, இலக்கிய, விஞ்ஞான ஆய்வு மலரையும் வெளியிட்டு வந்தது. அதிலும் மாவை நித்தியின் ஆக்கங்கள் வெளிவந்தன.

நித்தி,  தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி என  பரவலாக அறியப்பட்ட அம்பிகைபாகரின் மாணாக்கர்.  பாட நேரங்களையடுத்து வரும் இடைவேளையின்போது,   தான் எழுதிய கவிதைகளை அம்பி மாஸ்டருக்கு காண்பித்து, அவரது செம்மைப்படுத்தலின் பின்னர் இதழ்களுக்கு அனுப்பினார்.  அதனால், அம்பி மாஸ்டரின் அபிமானத்திற்குரிய மாணவராகவும் பின்னாளில் நல்ல நண்பராகவும் திகழ்ந்தார்.

மேலும் படிக்க ...

ஆய்வு: குந்தவையின் எழுத்து வல்லபம் - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
ஆய்வு
21 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிமுகம்

   கிராமத்தின் மிக முதிர்ந்த வயதுடைய பெரியவர்களைக் காணும்போதெல்லாம் அவர்களுடைய அன்றைய உணவுப் பழக்கவழக்கங்களும் உளவடுவற்ற வாழ்வியல் அம்சங்களும் ஆரோக்கியமான வாழ்க்கையைக்  கொடுத்திருக்கின்றன என்று எண்ணத்தோன்றுகிறது. அது உண்மைதான் போலும். ஒரு தலைமுறை, ஓடித் திரிந்து வளர்கின்ற பருவத்தில் யுத்தமும் சேர்ந்து வளர்ந்ததால் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இச்சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாமல் குந்தவையின் கதைகள் நினைவுக்கு வருகின்றன.

   தமிழ்ச் சமூகத்தின் சிதைந்துபோன வாழ்வையும் உளநெருக்குவாரங்களையும் குந்தவையின் அதிகமான கதைகள் பதிவு செய்திருக்கின்றன. “தமிழ்ச் சமூகத்தை ஆட்டிப் படைக்கும் அவலங்கள், அவசரங்கள், விசனங்கள், விக்கினங்கள், துக்கங்கள், துயரங்கள் ஆகியவற்றிலிருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொள்ளாமல் அதில் வாழும் ஒரு உயிர்ப்புள்ள சாட்சியாக கதைகளை நகர்த்துகின்றார். ஈழத்தின் சமகால அவலங்களை, அவற்றின் குறியீடுகளை அல்ல. அவற்றின் பல்வகைத்தான கொடூர அழிபாடுகளை அவர் கதைகள் பதிவு செய்கின்றன. உலகப் போர்களுக்குப் பின்னர், போர்க்கால அவலங்களும், அழிவுகளும் இடப்பெயர்வுகளும் இந்தக் கதைகளிலேதான் மிகுந்த அவதானிப்புடன் சித்திரிக்கப்பட்டுள்ளன.” (யோகம் இருக்கிறது, முன்னீடு) என்று எஸ்.பொ கூறுவதில் மிகையில்லையென்பதை குந்தவையின் சிறுகதைகளை ஒருசேரப் படிப்பவர்கள் உணர்ந்து கொள்ளமுடியும்.

   குந்தவை தனது 22ஆவது வயதில் ‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்ற முதற்சிறுகதையை ஆனந்தவிகடனில் (1963) எழுதினார். இம் முத்திரைக்கதையுடனே எழுத்துலகத்திற்கு அறிமுகமானார். கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், கலைமகள் என்று இவரின் வாசிப்புப் பழக்கம் தொடர்ந்திருக்கிறது. குந்தவை என்ற புனைபெயரைப் பூண்டதற்கு பொன்னியின் செல்வன்தான் காரணம் எனக் கூறும்போது, “வரலாற்றில் எப்படியோ தெரியாது. ஆனால் கல்கி;  சோழச் சக்கரவர்த்தி, முதன் மந்திரி எல்லோரும் ஆலோசனைக்கு அணுகும் ஒரு ஆளுமை நிறைந்த அதேநேரம் அமைதியான பாத்திரமாகக் ‘குந்தவை’யைப்  படைத்துள்ளனர். விகடனுக்கு என ஒரு கதை எழுதிவிட்டு புனைபெயரைத் தேடிய பொழுது இப்பெயரே என் முதல் தெரிவாயிற்று” (2007, கலைமுகம் நேர்காணல்) என்று தன் புனைபெயருக்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் படிக்க ...

தொடர் : தீவுக்கு ஒரு பயணம் (3 & 4) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
20 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் மூன்று  - இவாஞ்ஜிலின் கடற்கரை!

காலையில் குளித்து விட்டு  , நேற்றைய  ,  மிஞ்சிய  கோழிக்கறி  இருந்தது . அதை அவனுக்கு  பாணுடன் சாப்பிடக் கொடுத்து விட்டு  , முட்டையையைப் பொரித்து  சன்விச் செய்து சாப்பிடுகிறார்கள் . பூமலருக்கு சுமி பிறந்ததிலிருந்து நீரழிவு ஏற்பட்டிருக்கிறது . மாத்திரைகளை எடுப்பவள் . " கிழமையிலொரு தடவை இன்சுலின் வேறு  ஏற்றிக் கொள்கிறேன்  " என்கிறாள் . குட்டித் தங்கச்சியாக இருந்தவளை காலம் எப்படி மாற்றி விட்டிருக்கிறது . உதயனுக்கும் ( அண்ணர் ) ,  பானுவுக்கும் ( அக்கா ) ..கூட .. நீரழிவு   இருக்கிறது . அவனுக்கும் , குணவதிக்கு... இன்னம் தொந்தரவு கொடுக்கவில்லை .  வழக்கம் போல கராஜிலிருந்து காரை  சிரமப்பட்டு  எடுக்க .  இட பக்கக் கண்ணாடியை  மடக்கி விடுகிறான் .  சுலபமாக வெளியே வர பூமலர் வீட்டைப் பூட்டி விட்டு வருகிறாள் .  ஒரு தடவை, வீதியில்  குறுகலான லேன் என்ற உணர்வில்  கரைக்கு  இறக்கி விட   .    தடபுடல் என ...சத்தம் , அவனையும் குலுக்க  .  ஏன் ஓரங்களை ... சீர்படுத்தாது விடுகிறார்கள்  "  என ஒரேயடியாய் பற்றிக் கொண்டு வருகிறது  .  பார்த்து ஓடு " என்கிறாள் பூமலர் .  ரொரொன்ரோவில் இந்த குலுக்கல்  இராது . ' வரி குறைப்பு ' .... என்றால் அதற்கேற்ப கஸ்டமும் கொடுக்கிறது .  போக்குவரத்து அமைச்சராக ஒரு தேடல் உள்ள  பொறியிலாளர் ...தெரிவாக வேண்டும் . இல்லாதது   சீரழிவாகவே கிடக்கிறது .

"  உன்னைச் சொல்லிக் குற்றமில்லை  , என்னைச் சொல்லிக் குற்றமில்லை  , காலம் செய்த கோலமடி  , கடவுள் செய்த குற்றமடி ...!  " . பாட வேண்டியது தான் . வேற என்ன செய்வது ? . பின்னுக்கு .. போற காட்சிகளை  ஜெயந்தி  பார்த்து வந்தாள் .  அவளுக்கு ' தீவை நிறையப் பிடித்திருக்கிறது  ! ' . முன்னால் பூமலர் இருந்தாள் .  பூமலர் " இப்ப நாம் போறது  இவாஞ்ஜிலின்  கடற்கரை " என்றவள் . " இவள் , நம்ம  ஆச்சி வீட்டுப் பிள்ளைப் போல ...ஒரு ஏழை பிரெஞ்சுப் பெண் .  இவள் சிலையுடன் ஒரு அகாடியர் பார்க் கூட  இங்கே எங்கையோ கிட்டத்தில் இருக்கிறது . இவளைப்பற்றி ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறது . நாடகம் , சினிமாவாக எடுக்காமல் விட்டிருக்க மாட்டார்கள் . அமைதியாக வாழ்ந்தவளில்லை . அவளுடைய   ஆவி ... இங்கே , பழைய ரயில் பாதையில் எல்லாம் அலைகிறது என்று  சொல்கிறார்கள் . நம்மைப் போல ...ஒரு பழி வாங்கும் பெண் ... " என்று   அடுக்கடுக்காய் கூறி விட்டு  சிரிக்கிறாள் . நாங்க நினைக்கிறோம் . குடியுரிமை பறிக்கிற அதிசயம்  நம் நாட்டில் மட்டும் தான் நடக்கிறது என்று  நினைக்கிறோம் . பதினெட்டாம் நூற்றாண்டுகளில்...  (1700 களில்) இங்கே இருந்த பிரெஞ்சுஅகாடியர்களை ,  யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல , ...ஆனால் நாட்டை விட்டே ஆங்கிலேயர் துரத்தி விட்டிருக்கிறார்கள் . அடிப்படையில்   பயம் தான் காரணம் . எந்த உதவியும் செய்யாது உர்ரென இருந்திருக்கிறார்கள் .  பிரெஞ்சுக்காரர்கள்   மனச்சுமையுடன் அத்திலாந்திக் கடலில் மிதந்த போது அவர்களில்  ஆயிரம் பேர்கள் வரையில் ...கடலில் மாண்டும் போய் விட்டிருக்கிறார்கள் .

மேலும் படிக்க ...

மரபுரிமை அழிப்பின் தொடர் வரலாறு – கங்கா சத்திரத்தின் கதை = இ. மயூரநாதன் (கட்டடக்கலைஞர்) -

விவரங்கள்
= இ. மயூரநாதன் (கட்டடக்கலைஞர்) -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
18 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                  - கங்கா சத்திரம் -

பழம் பெருமைகளைச் சொல்லி மார்தட்டிக் கொள்வதில் யாழ்ப்பாணத்தவராகிய நாம் வல்லுனர்கள். லெமூரியாக் கண்டத்தில் தொடங்கி, சிந்துவெளியூடாக உலகின் நாகரிகம் வளர்ந்த இடங்களை அலசி எல்லாமே எங்களுடையதுதான் என்று பெருமை பேசிக்கொள்ளும் பலர் நம் மத்தியில் உள்ளனர். பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகின்றது. உள்ளூரில் எங்களுடைய வரலாறு, நம் முன்னோருடைய வாழ்வியல், பண்பாடு போன்றவற்றை வெளிப்படுத்தும் சின்னங்களைப் பார்க்கவேண்டும் என்று நமது பிள்ளைகள் கேட்டால், அவர்களுக்குக் காட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் நாம் எவற்றை விட்டுவைக்கப் போகிறோம் என்று முதலில் சிந்திக்க வேண்டும்.

சிறப்பம்சங்கள் பொருந்திய நமது மரபுரிமைச் சின்னங்கள் ஏராளமானவை அழிந்துவிட்டன. அவற்றை நாமே அழியவிட்டோம் அல்லது அழித்துவிட்டோம். இவ்வாறான மரபுரிமைச் சின்னங்கள் அழிவதையும் அவற்றை அழிப்பதையும் தடுத்து அவற்றை முறையாகப் பேணிக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய பொறுப்பும் ஓரளவு அதிகாரமும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உண்டு. ஆனால், உள்ளூராட்சி மன்றங்களே இவ்வாறான அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

அண்மையில் வேறு தேவைக்காகப் பத்திரிகை ஒன்றின் 1980 ஆம் ஆண்டு வெளியான பழைய பிரதிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு செய்தி கண்ணில் பட்டது. அக்காலத்து யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் மணிக்கூட்டுக் கோபுரம் ஒரு அடிமைச் சின்னம் என்றும் அதை அகற்றவேண்டும் என விரும்புவதாகவும், வேறு சிலர், அதை இடித்துவிட்டுத் திராவிடச் சிற்பக்கலை அம்சம் பொருந்திய புதிய மணிக்கூட்டுக் கோபுரம் அமைக்கவேண்டும் என விரும்புவதாகவும் அச்செய்தி கூறியது. இது உண்மையாக இருந்தால், அது அதிர்ச்சி தரக்கூடிய ஒரு விடயம். 100 வருடப் பழமை கொண்டதாக இருந்த ஒரு மரபுரிமைச் சின்னத்தை உடைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்படுகிறது? நம்மிற் சிலருக்கு உள்ளுணர்வாகவே இந்த எண்ணம் ஏற்படுகிறதோ எனச் சிந்திக்கவேண்டியுள்ளது. எப்படியோ மணிக்கூட்டுக் கோபுரம் தப்பிவிட்டது. எல்லா மரபுரிமைக் கட்டடங்களுக்கும் இந்த அதிர்ஷ்டம் வாய்ப்பதில்லை. காங்கேசந்துறை வீதி, ஆஸ்பத்திரி வீதிச் சந்தியை முன்னர் சத்திரத்துச் சந்தி என அழைப்பர். இன்றும் சிலர் இந்தப் பெயரைப் பயன்படுத்துவது உண்டு. இந்தப் பெயருக்குக் காரணமான சத்திரம் இச்சந்தியின் வடகிழக்கு மூலையில் இருந்தது.  கங்கா சத்திரம் என அழைக்கப்பட்ட இச்சத்திரத்துக்குக் கிழக்கே பெரியகடைச் சந்தைக் கட்டடங்கள் இருந்தன. யாழ்ப்பாண நகரத்தில் முதல் தேனீர்க்கடையைத் தொடங்கி நடத்திய வல்லிபுரம் என்பவர் 1905 ஆம் ஆண்டில் இச்சத்திரத்தைக் கட்டிப் பொதுப் பயன்பாட்டுக்கு வழங்கினார். நகரத்துக்கும், பெரியகடைச் சந்தைக்கும் வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வசதிகளுடன் இந்தச் சத்திரம் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க ...

பருத்தித்துறையில் 'எங்கட புத்தகங்கள்' கண்காட்சி; விற்பனை!

விவரங்கள்
- தகவல் - க.பரணீதரன் -
நிகழ்வுகள்
17 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'எங்கட புத்தகங்கள்'  புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நடந்திட வாழ்த்துகள்.  கலை, இலக்கிய ஆர்வலர்களே! கண்காட்சியில் விற்பனையாகும் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வாங்கி ஆதரியுங்கள். எதிர்காலத்தில் மேலும் பல  நூல்கள் வெளியாகும் வாய்ப்புகள் இதனால் அதிகரிக்கும்.


யாழ்ப்பாணத்தின் அழிந்துபோன சுவரோவியங்கள் - இ.மயூரநாதன் (கட்டடக்கலைஞர்) -

விவரங்கள்
- இ.மயூரநாதன் (கட்டடக்கலைஞர்) -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
16 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாணத்து நியமங்களின்படி பழையன என்று சொல்லத்தக்க சில சுவரோவியங்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை காணப்பட்டன. இவை பெரும்பாலும் பிரித்தானியர் காலத்தின் பிற்பகுதிக்கு உரியனவே. இன்று இவற்றுட் பல அவை வரையப்பட்டிருந்த கட்டிடங்களுடன் அழிந்துவிட்டன. யாழ்நகரப் பகுதியில் இரண்டு இடங்களில் இருந்த ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று யாழ்ப்பாணம் வங்கசாலை வீதியில் (Bankshall) இருந்த கிட்டங்கிக் கட்டிடத் தொகுதி. மற்றது காங்கேசந்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதிச் சந்தியின் வடகிழக்கு மூலையில் அமைந்திருந்த கங்கா சத்திரம். இச்சத்திரத்தாலேயே இச்சந்தி முன்னர் “சத்திரத்துச் சந்தி” என அழைக்கப்பட்டது. இவ்விரு இடங்களிலும் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுவரோவியங்கள் காணப்பட்டன. கிட்டங்கிக் கட்டிடங்கள் போர்க் காலத்தில் அழிந்தன. சத்திரமோ அதற்கு முன்பே 1980களின் முற்பகுதியில் இடித்து அழிக்கப்பட்டது. இக்கட்டிடங்கள் இல்லாமல் போவதற்கு முன்பு அங்கிருந்த ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது நான் எடுத்த படங்கள் போர்க் காலத்தில் தொலைந்துவிட்டன. இங்குள்ள படங்கள் க. சிவபாலன், அ. சந்திரகாசன் ஆகியோர் மொரட்டுவைப் பல்கலைக்கழக, B.Sc. (BE) இறுதியாண்டுப் பரீட்சைக்குச் சமர்ப்பித்த, பதிப்பிக்கப்படாத கட்டுரைகளில் இருந்து பெறப்பட்டவை. படங்களின் படப்பிரதிகளே (Photocopy) கிடைத்ததால், படங்கள் தெளிவாக இல்லை.

கிட்டங்கிக் கட்டிடங்களில் பல வகையான ஓவியங்கள் இருந்தன. சில பிந்திய காலத்துக்கு உரியவை. இவை பெரும்பாலும் இலக்குமி, சரஸ்வதி போன்ற கடவுள் உருவங்கள். வாயில் கதவுகளுக்கு மேல் வரையப்பட்டிருந்தன. இக்கிட்டங்கிகள் பிற்காலத்தில் செட்டி வணிகர்களின் உடைமைகளாக இருந்தபோது இவ்வோவியங்கள் வரையப்பட்டிருக்கலாம். இங்கிருந்த இரண்டு ஓவியங்கள் வேறுபட்டவை. இவை ஐரோப்பிய அதிகாரிகள் இருவர் குதிரையில் செல்ல, அவர்களின் நாய்களும், சேவகர்களும் பின்தொடர்ந்து செல்வதைக் காட்டுகின்றன. இதுபோன்ற காட்சிகள் ஓவியமாக வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் முன் சுவரிலும், சிற்பமாக உள்ளே விமானத்திலும் இருந்தது குறித்து முன்னைய இடுகையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். கிட்டங்கிகளில் இருந்த மேற்குறிப்பிட்ட ஓவியங்களைப் பற்றி “யாழ்ப்பாணத்துப் பிற்காலச் சுவரோவியங்கள்” என்ற அவரது நூலில் ஆ. தம்பித்துரை விபரமாக எழுதியுள்ளார். இந்த ஓவியங்களைத் தாவடியைச் சேர்ந்த ஓவியர் துரைச்சாமி என்பவர் வரைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க ...

கானம் கேட்போமா: 'பொன்னி நதி பாக்கணுமே பொழுதுக்குள்ள' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
16 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வரும் 'பொன்னி நதி பாக்கணுமே' பாடல் திரைப்படத்தில் முழுமையாகக் காட்டப்படவில்லை. எதற்காகக் காட்டவில்லை? காட்டாதது முட்டாள்தனமான முடிவு. முழுமையாகக் காட்டியிருக்க வேண்டுமென்பது என் கருத்து.
இக்காணொளியில் பாடலை முழுமையாகப் பார்க்கலாம். கேட்கலாம். பாருங்கள். கேளுங்கள்.
 
படம் - பொன்னியின் செல்வன் 1
இசை - ஏ.ஆர்.ரகுமான்
பாடலாசிரியர் - இளங்கோ கிருஷ்ணன்.
பாடியவர்கள் - ஏ.ஆ.ரகுமான், ஏ.ஆர்.ரெய்கானா, பம்பா பாக்யா
 
https://www.youtube.com/watch?v=14nAMb8bYSk
மேலும் படிக்க ...

தொடர்நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (10) - ஏ! அதிமானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
15 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் பத்து -  ஏ! அதிமானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?

எதிரே விரிந்து கிடக்கின்றது கட்டடக்காடு. எங்கு நோக்கினும் கட்டடங்கள்! கட்டடங்கள்! கட்டடங்கள்! கனல் உமிழ்ந்திடும் பரப்புகள் சிரித்துக்கொண்டிருக்கின்றன.  ஒரு காலத்தில் என் பிரியத்துக்குகந்த இடங்களாக விளங்கிய இடங்களிலெல்லாம் புதிதாகக் கட்டட விருட்சங்கள் வளர்ந்து, உயர்ந்து நிற்கின்றன. ஒரு காலத்தில் பசுமை பூத்துக்கொழித்த ஆதிமானுட சமுதாயத்தில் இவ்வுலகு எப்படியிருந்திருக்குமென்று எண்ணம் சென்றது.

"என்ன கண்ணா யோசனை?"

எதிரில் அதே மந்தகாசப் புன்னகையுடன் நிற்பவள் என் மனோரஞ்சிதமேதான். என் கண்ணம்மாவேதான்.

"எதிரே விரிந்து கிடக்கும் கட்டடக்காட்டைப் பற்றிச் சிந்தித்தேன். வேரொன்றுமில்லை கண்ணம்மா!"

"கட்டடக்காடு. அற்புதமானதொரு படிமம். இப்படிமம் எனக்கு மானுடவியலாளர் டெஸ்ட்மன் மொறிஸ் நினைவை ஏற்படுத்துகிறது கண்ணா."

"உண்மைதான் கண்ணம்மா, நானும் அவரைப்பற்றிக் கேட்டிருக்கின்றேன். அவரது ''Human zoo ('மனித மிருகக்காட்சிசாலை') வாசித்திருக்கின்றேன். அதிலவர் Concrete Jungle ('காங்ரீட் காடு' ) என்ற சொல்லைப்  பாவித்திருக்கின்றார். அதுவே நான் முதன் முதலில் அறிந்த கட்டடக்காடு என்னும் பொருள்தரும் சொல். என்றாலும் உன்னை நினைத்தால் எனக்குச் சில வேளைகளில்  பிரமிப்புத்தான் ஏற்படுகின்றது. நீயும் என்னைப்போல் கண்டதையெல்லாம் வாசித்துத் தொலைக்கின்றாய். அதுதான் எனக்கு உன்னில் மிகவும் பிடித்த விடயமடி."

"அப்போ, இந்த முறுவல், உடம்பு இவற்றிலெல்லாம் உனக்குப் பிடிப்பேயில்லையா கண்ணா?" இவ்விதம் பொய்க்கோபத்துடன் கேட்டுவிட்டு நகைத்தாள் மனோரஞ்சிதம்.

"கண்ணம்மா, உன் உடலழகு வேறு. உளத்தினழகு வேறு. ஆனால்.."

"ஆனால் .. என்ன கண்ணா?"

'கண்ணம்மா, உடலழகு நிலையற்றது. ஆனால் உளத்தினழகோ இருக்கும் வரையில் நிரந்தரமானது."

"உண்மைதான் கண்ணா, சரியாகத்தான் சொன்னாய். "

"உடலழகு  பற்றிய மயக்கம் ஒரு காலகட்டம் வரைக்கும்தான். ஆனால் உளத்தினழகோ அதனை மீறியது. இருப்புக்கு அர்த்தம் , நிறைவு தருவதே இந்த உள்ளத்தினழகுதான் கண்ணம்மா. உனக்கு அந்த அழகு தேவைக்கு அதிகமாகவே உண்டடி."

மேலும் படிக்க ...

குவிகம் சிறுகதைப்போட்டி அறிவித்தல்! - தகவல் - பிரபா ராஜன் அறக்கட்டளை & குவிகம் -

விவரங்கள்
- தகவல் - பிரபா ராஜன் அறக்கட்டளை & குவிகம் -
நிகழ்வுகள்
14 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 
பிரபா ராஜன் அறக்கட்டளை & குவிகம் <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

லெனின் மதிவானம் எழுதிய திறனாய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு - 'ஊற்றுக்களும், ஓட்டங்களும்'

விவரங்கள்
Administrator
நூல் அறிமுகம்
14 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அமரர் லெனின் மதிவானம் எழுதிய
திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு -
'ஊற்றுக்களும், ஓட்டங்களும்'
https://noolaham.net/project/136/13588/13588.pdf

அஞ்சலி. எழுத்தாளர் லெனின் மதிவானம் மறைவு! - பதிவுகள்.காம் -

விவரங்கள்
- பதிவுகள்.காம்
இலக்கியம்
13 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் , கல்விமான், மார்க்சியவாதி என அறியப்பட்ட லெனின் மதிவானம் மலையகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர். அவரின் மறைவுச் செய்தி அதிர்ச்சி தருமொன்று. 2013, 2014 ஆண்டுகளில் பதிவுளில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களைப் பதிவுகளின் நிகழ்வுகள் பகுதிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அதன் பின்னர் அவரைப் பெரிதும் பொதுவெளியில் காணவில்லை. ஏன் ஒதுங்கிப்போனார் என்பதை இப்பொழுதுதான் அறிய முடிகின்றது.  உடல் நிலை சீரற்றுப் போன காரணத்தினாலேயே அவர் ஒதுங்கி விட்டார் என்பதை வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இழப்பால் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள்,  நண்பர்கள் , கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவர்தம் துயரில் பதிவுகளும் இணைந்து கொள்கின்றது.

இத்தருணத்தில் அவர் பதிவுகள் இணைய இதழில் எழுதிய  ஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நினைவு ஒரு முன்னோட்டம்! ' , 'பிரேம்ஜி வகுத்த தனிப்பாதை! ' ஆகிய கட்டுரைகளை மிள்பிரசுரம் செய்வதுடன், அவர் பதிவுகள் இணைய இதழின் நிகழ்வுகள்  பகுதிக்கு அனுப்பிய தகவல்கள் சிலவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம்.


ஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நினைவு ஒரு முன்னோட்டம்!      - லெனின் மதிவானம் -    
    
செப்டம்பர் பதினான்காம் திகதி ஸி.வி வேலுப்பிள்ளை நூற்றாண்டாகும். அவர் மலையக இலக்கியத்தின் தலைமகனாக விளங்கியவர். அவரது நூற்றாண்டை எதிர்நோக்கியிருக்கின்ற இவ்வேளையிலே அவர் பொறுத்த காத்திரமான ஆய்வுகள், மதிப்பீடுகள், விவரணங்கள், செய்திகள், நினைவுக் குறிப்புகள் என்பன வெளிவரவில்லையாயினும் சில குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் பிரசுரமாகியிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கவையாகும். அவ்வாறு குறிப்பிடத்தக்கவற்றுள் பெரும்பாலானவை முற்போக்கு மார்க்ஸியர்களால் எழுதப்பட்டவையாகும். இர.சிவலிங்கம், மு.நித்தியானந்தன், சாரல் நாடன், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, ஓ.ஏ. இராமையா, லெனின் மதிவானம், சுப்பையா இராஜசேகர், மல்லியப்புசந்தி திலகர் முதலானோரின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் சாரல் நாடனின் 'சி.வி. சில சிந்தனைகள' என்ற நூலே ஸி.வி பற்றிய தேடலுக்கு காத்திரமான அடித்தளத்தை வழங்கியது. இவ்வெழுத்துக்களிடையே தத்துவார்த்த வேறுபாடுகள் இருப்பினும் ஸி.வி.யின் ஆளுமை பண்முகப்பாட்டை வெவ்வேறு விதங்களில் வெளிக்கொணர்பவையாக அமைந்திருக்கின்றன.

மேலும் படிக்க ...

ஆய்வு: தாலாட்டுப் பாடல்களில் தொழில்கள்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி - 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை - 42 -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி - 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை - 42 -
ஆய்வு
13 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

கிராம மக்கள் உழைப்பே உயர்வு தரும் என்ற கொள்கை உடையவர்கள். உழைக்கும் கைகளில் உண்மையான இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை உடையவர்கள். நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைப்பவர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் உழவுத் தொழில் செய்கின்றனர். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உழைக்க வேண்டியதாயிற்று. கிராமப்புற மக்கள் வாழ்க்கை அமைப்பிற்கேற்றவாறு இவர்களில் தொழில்கள் அமைந்திருந்தன. இவர்கள் பாடிய தாலாட்டுப் பாடல்களில் அமைந்துள்ள தொழில்கள் சிலவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

முத்துக் குவித்தல்

கடலும் கடல் சார்ந்த பகுதியாகிய நெய்தல் நிலத்தில் முத்துக் குவித்தல் நடைபெறுகிறது. கடலில் முத்து விளைகின்றது என்பதை மக்கள் அறிந்திருந்தனர்.

 கடலில் வெளஞ்சமுத்து
தூத்துக்குடி முத்து
பாண்டிக்குழி முத்து  

என முத்து விளையும் இடங்களைத் தாலாட்டில் பாடியுள்ளனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தது. ஒரு மாவட்டத்திற்குள் நடைபெறும் முத்து எடுத்தல் தொழிலை இவர்கள் அறிவதற்கு வாய்ப்பு இருந்தது எனலாம்.

மேலும் படிக்க ...

திரையில் மலர்ந்த தீந்தமிழ்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கலை
13 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

              - பராசக்தி திரைப்படத்தில் நடிகர் திலகம் -

இலக்கியமும்.  இலக்கணமும் இங்கிதமாய் கொண்டமொழி எங்கள் இன்தமிழ் மொழி.அந்த மொழி இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழைப் பெற்று நிற்கின்ற மொழி.வரலாறு படைத்த மொழி.பேச்சு மொழியா யும் எழுத்து மொழியாயும் ஏற்றமுற்று இருக்கும் மொழி.சங்கம் வளர்த்த  மொழி. சன்மார்க்கம் சொன்ன மொழி.அறத்தை உரைத்த மொழி அன்பைப் பொழிந்த மொழி.என்றுமே இளமையாய் இருக்கும் மொழி. அதுதான் தீந்தமிழ் மொழி. சிறப்பான மொழி. மண்ணில் நல்லவண்ணம் வாழவைக்கும் மொழி.அந்த மொழி பட்டி தொட்டியெங்கும் பரவிட வைப்பதற்கு வாய்த்த ஒரு ஊடகம்தான் வெள்ளித்திரை, வெள்ளி த்திரையில் எங்கள் தமிழ் எழிலுடன் கொஞ்சி உலாவந்த பாங்கினை பார்ப்பது பரவசமாய் அமையும் அல்லவா ? பார்ப்போமா ! நீங்கள் ஆயத்தமா ? வாருங்கள் பார்ப்போம் ! திரையில் மலர்ந்த தீந்தமிழை !

  திரையில் காட்சிகளைப் பார்ப்பதும் , காட்சிக்கு ஏற்ற வசனங்களைக் கேட்பதும் , அந்தக் காட்சிகளுக்கு ஏற்றதான பாடல்களை இசையுடன் கேட்பதும் எல்லோருக்குமே பிடித்தமாய் இருக்குமல்லவா ? இந்த விருப் பம்தான் திரைத்துறையை வளரும் நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது எனலாம்.

நாடகங்களில் வசனம் வந்தது,பாட்டும் வந்தது. ஆரம்பகாலங்களில் வந்த திரைப்படங்கள் நாடகப் பாணி யிலே வந்தன, காரணம் ஆரம்ப நிலை எனலாம். ஆனால் காலம் மாற கருத்துகளும் மாற காட்சிகளும் மாறின. மாறிய மாற்றங்களுக்கெல்லாம் திரையும் இடங் கொடுக்கவேண்டியது அவசியமாய் அமைந்தது.

மேலும் படிக்க ...

இசைக்குயில் பி.சுசீலாவின் பிறந்ததினம் இன்று! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
13 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- நவம்பர் 13 பி.சுசீலாவின்  பிறந்ததினம்! -

கலைஞர்கள் அவர்கள் எத்துறைகளைச் சேர்ந்தவர்களாகவிருந்தாலும் (எழுத்தாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் எனக் கலைஞர்கள் எவராகவிருந்தாலும்) மானுடர்களாகிய எம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவர்கள். எம் இன்ப துன்பங்களில் அவர்கள் கலந்து நிறைந்து நிற்பவர்கள். அவ்வகையில் எம் வாழ்வில் பின்னிப் பிணைந்த கலைஞர்களிலொருவர் பாடகி பி.சுசீலா.  அவரது பிறந்ததினம் இன்று.  யார் சொன்னது இலக்கம் 13 நல்ல இலக்கம் அல்ல என்று. எங்கள் இன்ப துன்பங்களில் கலந்திருக்கும்  அவரை இவ்வுலகுக்குத் தந்த அதிருஷ்டம் மிக்க இலக்கம் அல்லவா.

மேலும் படிக்க ...

என் வாசிப்பனுவப்படிக்கட்டுகளில் அகிலனின் படைப்புகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு வருட நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  என் வாசிப்பனுவத்தில் எழுத்தாளர் அகிலனின் படைப்புகளுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. அகிலனின் புகழ்பெற்ற படைப்புகள் பல கல்கியில் வெளியானபோது அவற்றை நான் அறிந்திருக்கவில்லை. 'வேங்கையின் மைந்தன்', 'கயல்விழி' வெளியானபோது நான் தவழ்ந்துகொண்டிருந்தேன்.  எனக்கு மிகவும் பிடித்த 'பாவை விளக்கு' கல்கியில் தொடராக வெளியானபோது நான் இவ்வுலகில் அவதரித்திருக்கவில்லை. நான் 'பொன்னியின் செல்வன்'  உட்பட வாசிப்பை ஆரம்பித்திருந்த காலகட்டத்தில் ஆனந்தவிகடனில் ஓவியர் கோபுலுவின் ஓவியங்களுடன் 'சித்திரப்பாவை' தொடராக வெளியாகிக்கொண்டிருந்தது. கலைமகளில் 'எங்கே போகின்றோம்' நாவலும் அக்காலகட்டத்தில்தான் தொடராக வெளிவந்தது. ஆனால் அவை என்னைப் பெரிதும் கவரவில்லை.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. முதல் சந்திப்பு - மணிவிழாக் காணும் சிவராசா கருணாகரன் - முருகபூபதி -
  2. முருகபூபதியின் கதைத் தொகுப்பின் கதை : புலம்பெயர் வாழ்வியல் அனுபவத்தோடு ஈழ அரசியலையும் பேசும் கதைகள் ! - கானா பிரபா -
  3. கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா - குரு அரவிந்தன் -
  4. குறிஞ்சி நிலத் தலைவன் தெளிவத்தை ஜோசப் நினைவாக..
  5. ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ சிறுகதைத் தொகுப்புக்காக, எம்.ரிஷான் ஷெரீபுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’
  6. அஞ்சலி: பால்ய பருவத்து நண்பர் மெளலி! - வ.ந.கிரிதரன் -
  7. தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (9) - மின்காந்தமணி என்னுமென் சகி! - வ.ந.கிரிதரன் -
  8. தொடர்ந்தும் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதி எழுத்தாளர் விவேகானந்தனூர் சதீஸ்! - வ.ந.கிரிதரன் -
  9. தேவகாந்தனின் ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல்! (பகுதி இரண்டு) - ஈழக்கவி -
  10. ஆய்வு: புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் இதழியற் செயற்பாடுகள்! - கலாநிதி சு. குணேஸ்வரன் -
  11. ஆய்வு: காதலர் கொஞ்சுமொழியில் பாலீற்று மாற்றம்! - முனைவர் ச.முத்துச்செல்வம், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை - 09. -
  12. எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'தாகம்' நாவல் மற்றும் அவர் பற்றிய சிந்தனைகள் ! - வ.ந.கிரிதரன் -
  13. எழுத்தாளர் தேவகாந்தனின் இதழியற் பங்களிப்பு மற்றும் 'இலக்கு' சிற்றிதழ் பற்றிய சுருக்கமானதொரு குறிப்பு! - வ.ந.கிரிதரன் -
  14. 'கலைச்செல்வி' சஞ்சிகையும் அதன் இலக்கியப் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 72 / 115
  • முதல்
  • முந்தைய
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • 75
  • 76
  • அடுத்த
  • கடைசி