துப்பாக்கிக்கு மூளை இல்லை (போருக்கும் வன்முறைக்கும் எதிரான கவிதைகள்! - தங்கம் -
இத்தொகுப்புக்குச் சொந்தக்காரர் ஈழத்து எழுத்துப்பரப்பில் கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக, மொழியிலாளராக நன்கறியப்பட்ட ஓய்வுநிலை தமிழ் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள். இத்தொகுப்பு 2022 இல் காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட தமிழ்மொழியைப் பேசும், எழுதும் பலருக்கு நுஃமான் அவர்களின் படைப்புக்கள் பரீட்சயமானவை. இதுவரை இவற்றைப் படிப்பதற்கான வாய்ப்புக்கிடைக்காதவர்கள் அவருடைய கவிதைகள், கட்டுரைத்தொகுப்பு, மொழிபெயர்ப்புக்கவிதைகள் மற்றும் தமிழ் இலக்கணம் சார்ந்த நூல்களையும் எண்ணிமவடிவில் நூலகத்தில் வாசிக்கலாம்.
கவிதைகளுக்குள் செல்லுமுன்
2022 ஆண்டு மார்கழியில் இத்தொகுப்பை காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் வெளியிட்டுள்ளது. மார்கழி 22 ஆம் ஆண்டு தாளில் அச்சிடப்பட்ட புத்தகம் மாசி மாதத்தில் அமசன் கின்டெல் மூலம் கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி, இந்த மகிழ்ச்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒருபக்கம் புத்தகங்கள் இலகுவில் வாசகர்களை சென்றடையும் அதேவேளை அமசன் கின்டெலுக்கு புத்தகங்கள் செல்வதால் வேலை வாய்ப்பை இழக்கும் தொழிலாளர்கள், குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படும் தொழிலாளர்கள் என துன்பங்களைக் கொண்டதாகவும் இது அமைந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.





ஒரு துறையில் பிரபலமாக இருப்பவர்கள் அதன் மூலம் மட்டுமே இன்னொரு துறையில் எளிதாகப் பெயர்பெற்றுவிடுவது வழக்கமாக நடக்கும் ஒன்று. திரைப்படத்துறையினர் இலக்கியவுலகிலும் அரசியல்வெளியிலும் தனியிடம் பிடித்துவிடுவதை இதற்கு உதாரணங்காட்டலாம். அன்றும் இன்றும் இலக்கியவுலகைச் சேர்ந்தவர்கள் திரைப்படத்துறையில் பெயர் பெற்றிருப்பதும், பெற முயற்சிப்பதும் வழக்கமாக இருந்துவருகிறது.
இராமாயணத்தில் இராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்ததாகச் சொன்னபோது பக்தர்கள் கதிகலங்கிப் போனார்கள், இந்தக்கதை பழைய வரலாற்றில் இடம் பெற்றிருந்ததால் அந்த சம்பவம் முக்கியம் பெற்றிருந்தது. ஆனால் அதைவிட அதிக காலம் அதாவது 33 வருடங்கள் வடஇலங்கைத் தமிழ் மக்கள் அஞ்ஞாத வாசம் இருந்ததைக் கேள்விப்பட்ட போது யூரியூப் தொலைக்காட்சி நண்பரான தணூரன் என்பவர் கண்கள் கலங்கி நின்றதைக் காணமுடிந்தது.

வாடாத மல்லிகையாய் வாணி அம்மா

நான் காலையில் கண்விழித்தேன் _
“உக்ரைன்-ரஷ்ய அரசியல் யுத்தமானது, மாறிவரும் ஒரு உலக ஒழுங்கினை, வெளிப்படுத்துவதில் ஓர் சீரிய சமிக்ஞையை தரவே செய்கின்றது” என்பது இன்றைய பரவலான அபிப்ராயமாக இருக்கின்றது. நலிவடைந்து போயுள்ள தன் பொருளாதாரத்தினை, முட்டுக்கொடுத்து, முன்தள்ளி, அதனை ‘இன்றைய’ சீன அல்லது ரஷ்ய பொருளியல் பூதங்களோடு, (இயல்பான சந்தை பொருளாதார) விதிகளுக்கு ஏற்ப, மல்லுக்கட்ட செய்ய முடியாத ஒரு நிலையில், ஒரு கொவிட் பெருந்தொற்று அல்லது ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பொருளாதார தடை அல்லது இவை இரண்டினூடும் கிடைக்கப்பெற்ற, உலகின் உற்பத்தி அல்லது வினியோக பாதைகளை தடம்புரள செய்து, அதற்கூடாக ஒரு இயல்பான போட்டி நிலையை திட்டமிட்டு இல்லாதொழித்து, அதற்கூடே தன் கோடீஸ்வரர்களை காப்பாற்றி கொள்ளலாம் என்ற திட்டமும் பெரிதளவில் கை கொடுக்காமல் போன நிலையில், ஓர் உக்ரைனிய-ரஷ்ய யுத்தம், புதிதாய் ஓர் பெர்லின் சுவரை மீள கட்டமைத்து கொள்ள, வசதியையும் வாய்ப்பையும் தருவதாகவே உள்ளது என்பதன் அடிப்படையிலேயே, இப்பத்தியில், (பதிவுகளில்) நாம் இதுவரை எழுத துணிந்திருந்தோம். 







இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்...? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவானார் ....? என்பதற்கெல்லாம் வரலாறுகள் இருக்கின்றன. தற்காலக்குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் இந்தியாவில் பிறந்து - வாழ்ந்து - மறைந்தார் என்று சொல்லிக்காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போர்களையும் மௌனத்துடன் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் நடத்தி நேற்று வரையில் இந்தப் போர்களை எதற்காகவும் தொடரலாம் என்ற முன்னுதாரணத்தையும் விதைத்துவிட்டுச் சென்றிருப்பவருக்கு 02-10-2023 ஆம் திகதி 153 ஆவது பிறந்த தினம். 1869 ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி பிறந்த காந்தி எந்தத்தேசத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடினாரோ... அதே தேசத்தின் குடிமகன் ஒருவனால் 1948 இல் ஜனவரி 30 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
