பதிவுகள் முகப்பு

(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள்! (5): விடுதலை நகர் - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
04 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -


இந்த நான்கைந்து வருடங்களில் குறிக்கத்தக்க மாற்றத்தை, கண்டிருந்தது விடுதலை நகர். தெளிவான ஒரு காலை நேரத்தில் அவ் ஊரை நான் சென்றடைந்திருந்தேன். வானம் அற்புதமான நீல நிறத்தில் தெளிவாக இருக்க, கீழே தோட்டங்கள் தந்த பச்சை நிறம்… மேலும், காற்று மென்மையாக வீசி புத்துணர்ச்சியை தந்த ஓர் நளினமான காலை அது. பாதையின் ஒரு புறம், அன்று போலவே, இப்போதும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை, தோட்டங்கள், தோட்டங்கள், தோட்டங்கள். கொத்தி கிளறப்பட்டு, கற்கள் அகற்றப்பட்டு, பண்படுத்தப்பட்டு, மிருதுவாக்கப்பட்ட செம்மஞ்சள் கலந்த சிவப்பு மண், எண்ணற்ற பாத்திகளாக, நீண்ட வரிசையில், பயிரிடப்பட்ட பகுதிகளாக, பச்சை பசேலென்று, கரட்டாலும், பீன்ஸ்ஸாலும், பயறு வகைகளாலும், அழகு பூண்டு, ரம்மியமான தோட்டங்களாக காட்சி தந்தது. மனித உழைப்பு, இப்புல்லுக்காட்டை, இப்படி ஓர் சௌந்தர்யமாய்; மாற்றியிருந்தது.

“வெறும் கோரப் புல்லா மண்டிக் கெடந்த எடம்” என்று விரியும் தோட்டங்களை காட்டுவார் அண்ணாமலை.

தோட்டங்களின் குறுக்காக, இப்போது வாகனங்களும் செல்ல, ஆங்காங்கு பாதைகள் வெட்டப்பட்டிருந்தன. சில இடங்களில் ட்ரக்டர்களும் நின்றிருந்தன. தோட்ட பரப்பில், சில வீடுகளும் கூட புதிதாய் முளைத்திருந்தன. அவற்றின் முன்னால் சில வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. ஐந்தாறு வருடங்களின் முன் இவை இங்கே காணப்படாத ஒன்று.

பிரதான பஸ் பாதையில் இருந்து, விடுதலை நகரின் குடியிருப்புகளுக்காய் செல்லும் மண் பாதையில் இருந்து பார்க்கும் போது, அத்தோட்டங்களின் ஒன்றின் நடுவே மிக அகலமான குழி ஒன்றை தோண்டி கொண்டிருந்தார்கள் ஆட்கள் கூடி. இரண்டு மூன்று கிணற்றின் சுற்றளவைக் கொண்ட, மிக பிரமாண்டமான குழி அது. குழியை சுற்றி, குழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மென்மையான மண் சுற்றிவர ஓர் சிறு குன்றுப்போல் குவிக்கப்பட்டிருந்தது குவியலாய். பெரிய ஒரு குழாயும் குழியில் இருந்து வெளியே புறப்பட்டு வந்திருந்தது.

மேலும் படிக்க ...

கனடா மகாஜனா பழைய மாணவர்களின் பாராட்டுவிழாவும், இரவு விருந்துபசாரமும்!  - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
30 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மிக நீண்ட நாட்களின் பின் கனடா மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் ‘கலேஸ்நைட்’ இரவு விருந்துபசாரம் நவெம்பர் மாதம் 14 ஆம் திகதி 2021, மாடி கிறாஸ் பாங்குவிட் மண்டபத்தில் நடந்தேறியது. இந்த விருந்துபசாரத்தில் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க ...

பூமிக்கு அருகே வரும் நிரெஸ் விண்கல்லால் பாதிப்பு ஏற்படுமா? - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
அறிவியல்
30 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிவியல் உலகில் விண்கற்கள் பற்றி சிறிதளவாவது நாம் அறிந்திருப்பது நல்லதென நினைக்கின்றேன். 4660 என்ற இலக்கத்தைக் கொண்ட நிரெஸ் விண்கல் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டு பூமிக்கு அருகே சுமார் 3.9 மில்லியன் கிலோ மீட்டர் அருகே வருகின்றது. சூரியனைச் சுற்றி வரும் இந்த விண்கல், 2060 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இதைவிட இன்னும் அருகே, 1.2 மில்லியன் கிலோ மீட்டர் அருகே வரவிருக்கின்றது. சூரியக்குடும்பத்தில் சூரியனைச் சுற்றிவரும், இந்த விண்கல்லால் உடனடிப் பாதிப்பு இல்லாவிட்டாலும், பூமிக்கு ஆபத்தான விண்கற்களின் பட்டியலில் இதுவும் இடம் பெற்றிருக்கின்றது. இதனுடைய திசை காலப்போக்கில் மாற்றமடையவும் வாய்ப்புண்டு. 1982 டிபி என்பது இதன் முன்னைய பெயராகும். 1082 அடி நீளமானது, அதாவது பாரிஸ் கோபுரத்தைவிட சற்று உயரமானது. 2 கிலோ மீட்டர் குறுக்களவைக் கொண்டது. 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி எலியநோர் கெலின் என்ற அமெரிக்க பெண் வானியலாளரால் கண்டு பிடிக்கப்பட்டது. இவர் பூமிக்கு மிகஅருகே வரும் விண்கற்களை இனங்காணும் நாசாவின் திட்டத்தில் பணியாற்றியதால், இவருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது. இந்த விண்கல் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சுமார் 1.82 வருடம் எடுக்கின்றது.

மேலும் படிக்க ...

ஓவியர் (அமரர்) கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை வாழ்வும் பணிகளும் - காணொளி மெய்நிகரில் வெளியீடு! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
30 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியா மெல்பனில் 1998 ஆம் ஆண்டு மறைந்த பிரபல ஓவியர் கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை அவர்களின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் காணொளி வெளியீடு எதிர்வரும் 05 ஆம் திகதி ( 05-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மெய்நிகரில் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்படவிருக்கிறது. அவுஸ்திரேலியா கன்பராவில் இயங்கும் தமிழ்க்களஞ்சியம் ( Tamil Trove ) அமைப்பினால் காலமும் கணங்களும் தொடரின் முதல் அங்கமாக இந்த ஆவணக்காணொளி வெளியீடு அமைகின்றது.

மேலும் படிக்க ...

நம்மவர் பேசுகிறார்!

விவரங்கள்
- தகவல்: நடேசன் -
நிகழ்வுகள்
30 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கத்யானா அமரசிங்ஹவின் ‘தரணி’ (நாவல்) பற்றி.. ‘மொழிபெயர்ப்பானது கருத்தைப்போலவே படைப்பாளியின் அடையாளத்தையும் தவற விட்டுவிடக் கூடாது’   - தேவகாந்தன் -

விவரங்கள்
Administrator
நூல் அறிமுகம்
30 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கத்யானா அமரசிங்ஹவின் மூன்றாவது சிங்கள நாவலான ‘தரணி’, எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக சென்றவாண்டு (2020) வெளிவந்திருக்கிறது.

சாருலதா அபயசேகர தேவரதந்திரியின் ‘Stories’ போன்ற வலு வீச்சானவை இலங்கை ஆங்கில நாவலுலகில் படைப்பாகிக்கொண்டிருக்கும் தருணத்தில், தமிழ் மொழிபெயர்ப்பில் வந்துள்ள சிங்கள மொழி நாவலான ‘தரணி’ ஒரு வாசகனின் வாசிப்பார்வத்தை இயல்பாகவே கிளர்த்துவதாகும். எனது பிரவேசமும் அத்தகைய ஆர்வம் காரணமாகவே ஏற்பட்டது.

‘தரணி’யை விமர்சிப்பதில் ஒரு சிக்கலான நிலைமையை இயல்பாகவே எதிர்கொள்ள நேரும். மொழிபெயர்ப்புபற்றி பல்வேறு வகையானதும் புதிது புதிதானதுமான கருத்துக்கள் கூறப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கான கவிதைப் பெயர்ப்பு கவிஞனுக்கான ஒரு துரோகமென்றுகூட சொல்லப்பட்டுள்ளது. நாவல்கள் பொறுத்தவரை மொழிபெயர்ப்பு, தழுவல் என்கிற பிரச்னைகளைத் தாண்டி அவ்வாறான கடுமையான கருத்துக்கள் பகரப்படவில்லையெனினும், ஒரு விஷயத்தை இங்கே அச்சொட்டாகப் பதிந்துகொண்டு மேலே செல்வது சிலாக்கியமானது.

ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ஒரு நாவல் மொழிபெயர்க்கப்படுகையில், உதாரணமாக ‘தரணி’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதை எடுத்துக்கொள்கையில், மூலமொழியன்றி பெயர்ப்பு மொழிமட்டும் அறிந்த வாசகன் ஒருவன் முற்றுமுழுதாக மொழிபெயர்ப்பாளனையே சார்ந்திருக்கவேண்டியவன் ஆகின்றான். கத்யானாவின் கதையை ரிஷான் ஷெரீப் சரியாகவே மொழிபெயர்த்திருக்கக் கூடும். ஆனால் அதன் சொல்லாட்சி, நடை ஆதியன சரியாக வெளிப்படுதல் நாவல் மொழிபெயர்ப்பில் முக்கியமான அம்சம். கத்யானா அமரசிங்ஹவின் ‘தரணி’ நாவலை எம்.ரிஷான் ஷெரீபின் கண்களூடாகவே தரிசிக்க வாசகன் விதிக்கப்பட்டிருக்கிறான். சொல்லாட்சி, நடை, கட்டுமானமாகிய இத்தகு விஷயங்களின் பூரண விபரமும் தெளிவுமின்றி ‘தரணி’யை அதை அதுவாகவே விமர்சித்துவிட முடியாது.

மேலும் படிக்க ...

மறைந்துபோயுள்ள பல விடயங்களை படம்பிடித்துக் காட்டும் ‘கடவுளின் நாற்காலி’ நாவல்! - த. நரேஸ் நியூட்டன் -

விவரங்கள்
- த. நரேஸ் நியூட்டன் -
நூல் அறிமுகம்
29 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிமுகம்
அண்மையில் எனது நண்பர் ஒருவர் மூலமாக ஒரு புத்தகம் கிடைத்தது. அனேகமாக இந்த காலம் முழுக்க முழுக்க அனேகமானவர்கள் இணையத் தளத்திலேயே முகம் புதைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நானும் விதிவிலக்கல்ல எனது நேரத்திலும் குறிப்பிட்ட பகுதி இணையத்திற்குள் தான் முடங்கிப்போய்விடுகிறது. இதற்கு இந்த கொரோனா நோய்த்தொற்று இன்னமும் உரமூட்டிவிட்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். இப்படியான சந்தர்ப்பத்தில்தான் அந்த நண்பர் எனக்கு இந்த நூலை அளித்திருந்தார். இணையத்தோடு வாசிப்பு பழக்கம் ஒன்றிப்போய்விட்டதால் புத்தகத்தை பெறும்போது எனது நூலகத்திற்கு மற்றொரு நூல்கிடைக்கிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும் அதனை படித்து முடிக்க எவ்வளவு நாளாகும் என்ற யோசனை மற்றொருபுறம் என்னை குழப்பியது. காரணம் அது ஒரு நாவல் அதேவேளை 198 பக்கங்களையுடைய பெரிய புத்தகம். தற்போது எல்லாமே கைக்கடக்கமாக பழகிப்போய்விட்டதால் அதனுடைய பக்க எண்ணிக்கை சற்று சஞ்சலத்தை உண்டுபண்ணியது. மேலும் ஒரு விடயம் யாதெனில் அந்த நாவலை எழுதியவர் ஒரு புதிய எழுத்தாளர் அதே வேளை இந்த நாவல் அவரது முதலாவது நாவல் என்ற விடயம் மேலும் அதனை படிப்பதில் தயக்கத்தை உண்டுபண்ணியது. அந்த நூலை படித்து முடித்ததும் உடனடியாகவே இந்த கட்டுரையை எழுததொடங்கிவிட்டேன். அந்த நாவலை படிக்கும்போது என்னுள் ஏற்பட்ட உளக்கிளர்ச்சியே என்னை இந்த ஆய்வை எழுதத் தூண்டிற்று.

நூல் ஆசிரியர்
‘கடவுளின் நாற்காலி’ என்ற இந்த நாவலின் படைப்பாளர் அதியமான் கார்த்திக் அவர்கள். நான் பல கதாசிரியர்களின் படைப்புக்களை படித்திருக்கிறேன் அவர்களுக்குள் இவரது பெயரை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இவர் ஏற்கனவே மிகப்பிரபலமாக இருக்கும் எழுத்தாளர் சமூகத்துள் அண்மையில் நுழைந்த ஒரு புதிய படைப்பாளியாகவே என்னால் பார்க்கமுடிகிறது. இவரது தந்தை பெயர் ரத்தினம். கார்த்திக் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் வனவியல் பட்டம் பெற்றவர். விவசாயத்தில் அதிக நாட்டமுள்ளவர் என்பது இவரைப்பற்றிய தேடலின் மூலம் என்னால் அறியமுடிந்தவிடயம். இவருடய சொந்த இடம் தர்மபுரி மாவட்டத்தின் கடத்தூர் என்ற ஊர். இவரது பணியின் காரணமாக இந்தியாவிலும் ஆபிரிக்க நாடுகளிலும் மாறி மாறி வசித்து வருகிறார். இவர் ஆபிரிக்காவின் 25ற்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம்செய்து வருபவர். அதனாலோ என்னவோ தனது பயணங்களின் போது இவர் பெற்ற அனுபவங்களையெல்லாம் ஒவ்வொரு பகுதியாக உருவாக்கி தனது முதலாவது படைப்பாக ‘நாடோடியின் கடிதங்கள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இவரது இரண்டாவது படைப்பாகவும் அதேவேளை முதலாவது நாவலாகவும் ‘கடவுளின் நாற்காலி’ என்ற இந்த நாவலை எழுதி வெளியிட்டிருக்கின்றார். ‘கடவுளின் நாற்காலி’ எனும் இந்த நாவல் மிக அண்மையில் 2021 புரட்டாதி மாதத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இவற்றைவிட மேலதிகமாக இவரைப்பற்றி அஙிந்துகொள்வதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை.

மேலும் படிக்க ...

‘ஹார்வார்ட்' பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையும், மொழி வளர்ப்பும்’ தமிழ் வளர்ச்சிக்கான இன்னொரு வடிவத்திலான முயற்சியே! - த. நரேஸ் நியூட்டன் -

விவரங்கள்
- த. நரேஸ் நியூட்டன் -
சமூகம்
28 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் பதிவுகள் இணையத்தளத்தில், 'கூவாமல் கூவும் கோகிலம்' என்ற தலைப்பில், 'குயில்' என்ற பெயரில் எழுதியுள்ள படைப்பாளர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப்பதிவு எனக்கு சற்று ஆச்சரியத்தை தந்தது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் தமிழ் ஆர்வலராகவும் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். அதனால் தனது மனதில் பட்டதை பதிவு செய்திருக்கிறார். அந்தப்பதிவின் தலைப்பு ‘ஹார்வார்ட் பல்கலைக்களகத் தமிழ் இருக்கையும், மொழி வளர்ப்பும்’ என்பதாகும். இந்தப்பதிவின்மூலம் எனக்குள் எழுந்த கேள்வி இவர் பிறநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழுக்கான இருக்கைகள் அவசியமற்றது என சொல்லவருகிறாரா என்பது தான்.

இந்தப் பதிவைப்பார்க்கும்போது எனக்கு மகாகவி பாரதியாரின் “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற கவி வரிகள்தான் நினைவிற்கு வருகிறது. மகாகவி மட்டுமல்ல இன்னும் பலர் தமிழை உலகம் பூராகவும் கொண்டு செல்லவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். அதை பல்வேறு வழிகளில் கொண்டு சேர்த்துமிருகிறார்கள். தமிழ் மக்களின் தாயகங்களைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்ளில் தமிழின் இருப்பு என்பதையும் தாண்டி தமிழ் மொழி மூலமான தனியான பல்கலைக்கழகங்களே இருக்கின்றன. அவை தமிழ் மொழியின் வளர்ச்சியில் மிகச்சிறப்பான பங்களிப்பை எப்போதும் தொடர்ச்சியாக மேற்கொண்டே வருகின்றன. இவை எப்போதும் இதே போன்று இயங்கிக்கொண்டே இருக்கக்கூடிய பலம் பெற்றவை. அவற்றின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அவை சார்ந்திருக்கும் அரசுகள் முன்னுரிமையளித்து தங்கள் பங்களிப்பை வழங்கிவருவதோடு கொடையாளர்களும் தங்கள் பங்களிப்பை செய்துகொண்டுதான் இருக்கின்றன.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: 'காதலெனும் வடிவம் கண்டேன்' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
28 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
மிகவும் எளிமையான, மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் சொற்களைக் கொண்டு காதல் வயப்படும் ஒரு பெண்ணின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் இப்பாமாலையைக் கோத்திருக்கின்றார் கவிஞர் கண்ணதாசன். மெல்லிசை மன்னர்களின் இன்னிசை, பி.சுசீலாவின் குரலும், ஈ.வி.சரோஜாவின் நடன அசைவுகளுடன் கூடிய நடிப்பும் இப்பாடலின் ஏனைய சிறப்பம்சங்கள். பாடலைக் கேட்டு மகிழ: 
https://www.youtube.com/watch?v=5A9sX_rStpA
மேலும் படிக்க ...

வெந்து தணிய மறுக்கும் சாதியும் புதிய தலைமுறையின் மீறலும் 'பெத்தவன்' நெடுங் கதையை முன்வைத்து... -முனைவர் ம இராமச்சந்திரன் -

விவரங்கள்
-முனைவர் ம இராமச்சந்திரன்
இலக்கியம்
28 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கடந்த பதினைந்து ஆண்டுகளாக நண்பர்கள் பேச்சின் ஊடாக எனது நினைவில் பதிந்து விட்ட எழுத்தாளர் இமயம். 1990களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாகப் பண்பாட்டுத் தளத்தில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் சமூகம் சந்தித்தது. மேற்கத்தியத் தொடர்பால் பல புதிய இயக்கப் போக்குகளும் புதிய சிந்தனை வெளிப்பாடுகளும் தமிழ் இலக்கியத்திற்கு வந்து சேர்ந்தன. சமூகத்தின் முதற் பொருளாகப் பேசப்பட்ட பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம் அமைப்பியல், போன்ற சொல்லாடல்கள் மேடையேறி பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தின. இந்தப் பேச்சுப் போக்கில் வந்தடைந்தவர் இமையம். கோவேறு கழுதைகள், ஆறுமுகம் போன்ற நாவல்களின் மூலமாகப் புதிய எதார்த்த சூழலை இலக்கியத்திற்குக் கொண்டு வந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருந்தார். அன்றிலிருந்து பின்தொடரும் ஒருவனாக ஆகிப்போனேன். செடல் படித்துவிட்டுக் கதைகளின் ஊற்று மூலம் குறித்த தேடலின் முடிவுக்கு வந்திருந்தேன். புத்தகத் தயாரிப்பில் எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தி வரும் கிரியா பதிப்பகம் இமையத்தின் அனைத்துப் படைப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருவதையும் கவனிக்கத் தவறியது இல்லை.

ஒரு படைப்பாளியின் படைப்பு ஊக்கம் அவனது கனிந்த இதயத்தில் இருக்கிறது. தான் காணும் மனிதனையும் அவனது வாழ்க்கைச் சிக்கல்களையும் அவனாக உணர்ந்து விழும் கண்ணீரிலும் உயிர்ப்பிலும் ஒரு படைப்பாளி உயிர் பெறுகிறான். இமையத்தின் படைப்புகளில் பயணிக்கும்போது மனிதம் நசுக்கப்படும் ஒவ்வொரு தருணத்திலும் இமையத்தின் ஒரு துளி கண்ணீர் எனது இதயத்தை நினைப்பதைக் காணுகிறேன். தாயின் கருவறையில் மௌனித்து இருக்கின்ற குழந்தையின் உச்ச உணர்வுக்குச் சென்று விடுகிறேன். கண்கள், காதுகள், மனம் செயல்பட மறுத்து நிற்கின்றன அன்றாட வாழ்க்கைச் சூழலில் என்னை இணைத்துக் கொள்ள சில நாட்களை மௌனமாகக் கடந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. சமூகத்தின் ஒரு கண்ணியில் இருந்து விடுபட்டு விடவும் கூடாது அதே வேளையில் அதற்குப் பலியாகவும் கூடாது என்ற எண்ணம் தோன்றாமல் இருப்பதில்லை. பெத்தவனும் இதே பாதிப்பை ஏற்படுத்தியது.

பெத்தவன் நாவலாகவும் வடிவம் பெறாமல் சிறுகதை வடிவத்தையும் மீறி தன்னைக் கட்டமைத்துக் கொண்ட பனுவல். ஒரு அமர்வில் படித்து முடித்து விட்டாலும் எழுந்திருக்க மனமில்லாமல் சுமையோடு ஒவ்வொரு அப்பாவும் தன் மகளைப் பற்றி என்னும் எண்ணம் மேலோங்கி நிற்கிறது.

மேலும் படிக்க ...

ஞானத்தமிழ் மன்றம்: பாடலும் தேடலும் கவியரங்கம் -5

விவரங்கள்
- தகவல்: கவிஞர் வே.இராசலிங்கம் -
நிகழ்வுகள்
28 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

எழுத்தாளர் எஸ்.பொ. நினைவாக ஒரு குறிப்பு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் நினைவு தினம். அவரை நினைவு கூர்வோம். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கியத்தில் எஸ்.பொ அவர்களுக்கு நிலையானதோரிடமுண்டு. அவரது இலக்கியப்பங்களிப்பு யாரும் அறிந்ததே. அதே சமயம் அவர் முக்கியமானதொரு பதிப்பாசிரியராகவும் இருந்திருக்கின்றார் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.

புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் முதலாவது சிறந்த சிறுகதைத்தொகுப்பு 'பனியும் பனையும்'. அவரும், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும் தொகுத்த தொகுப்பு. உலகின் பல்வேறு நாடுகளிலும் புகலிடம் நாடிப்புகுந்த தமிழ் எழுத்தாளர்களின் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் சிறந்ததொரு தொகுப்பு. அதற்காகப் புலம்பெயர் தமிழ் இலக்கிய உலகு அவருக்கு எப்பொழுதும் நன்றியுடனிருக்கும். அதனை அவரது மித்ர பதிப்பகமே வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் இளையவர்களை ஆதரிக்கும் இந்தப்பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவர் நினைத்திருந்தால் தன் படைப்புகளை வெளியிடுவதுடன் நின்றிருக்கலாம்., ஆனால் பல்வேறு நாடுகளிலிருந்தும் படைப்புகளைச் சேகரித்து இவ்விதமொரு சிறந்த தொகுப்பை வெளியிட்டிருக்கத்தேவையில்லை. ஆனால் அவர் இவ்விதம் செயற்பட்டது புகலிடத்தில் இலக்கிய முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ஒருவகையில் உத்வேகம் ஊட்டியதென்றே கூறலாம்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் குறிப்புகள் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
26 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று நவம்பர் 26 ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம்!

இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. யாழ்ப்பாணம் நல்லூரில் 1932 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி பிறந்தார். அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மறைந்தார். இன்று அவரது நினைவு தினம் !

எஸ்.பொ. குறித்த நினைவுகளை இங்கு நனவிடை தோய்தலாக பதிவுசெய்கின்றேன். நனவிடை தோய்தல் என்ற சொற்பதத்தையும் அவர்தான் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். எஸ்.பொ. அவர்களை 1972 ஆம் ஆண்டு, எனது இலக்கியப்பிரவேச தொடக்க காலத்தில்தான் முதல் முதலில் கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில் ரெயின்போ அச்சகத்தில் சந்தித்தேன். அதன்பிறகு கொழும்பில் பல இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன். எஸ்.பொ. மஹாகவி உருத்திரமூர்த்தி, இரசிகமணி கனக செந்திநாதன் , கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை உட்பட பல இலக்கியவாதிகள் எமது நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடத்திய தமிழ் விழாவிற்கு வருகை தந்த காலப்பகுதியில் எனக்கு எட்டு வயதுப்பராயம்.

அந்த வயதிலேயே அவரது நகைச்சுவையான பேச்சை கேட்டுள்ளேன். மீண்டும் அவரைச்சந்தித்து பேசும்போது எனது வயது 21. அதன்பின்னர் கொழும்பு -07 இல் அமைந்திருந்த கல்வி வெளியீட்டுத்திணைக்களத்திலும் விவேகானந்தா வித்தியாலயத்திலும் அடிக்கடி சந்தித்து உரையாடியிருக்கின்றேன். அவர் இந்த வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.

எஸ்.பொ. 1980 களில் நைஜீரியாவுக்கு தொழில் நிமித்தம் புறப்பட்ட வேளையில் கொழும்பு - ஜம்பட்டா வீதியில் மலையக நாடகக் கலைஞரும் அவள் ஒரு ஜீவநதி திரைப்படத்தின் தயாரிப்பாளரும் வசனகர்த்தாவுமான மாத்தளை கார்த்திகேசுவின் இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக நடந்த பிரிவுபசார நிகழ்வில் உரையாற்றினேன்.

மீண்டும் அவரை சில வருடங்களின் பின்னர் 1985 இல் ஒரு விஜயதசமி நாளில் வீரகேசரியில் நடந்த வைபவத்தின்பொழுது என்னைச்சந்திக்க வந்த எஸ்.பொ.வின் ஆபிரிக்க அனுபவங்கள் பற்றிய நேர்காணலை எழுதி வெளியிட்டேன். 1987 இல் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் - 1989 இல் எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் நூலின் வெளியீட்டு விழாவை ( 25 ஜூன் 1989 ) மெல்பனில் நடத்தியபொழுது சிட்னியில் மூத்த புதல்வர் டொக்டர் அநுராவிடம் அவர் வந்திருப்பது அறிந்து, அவரை பிரதம பேச்சாளராக அழைத்தேன். அன்றைய நிகழ்வே அவர் அவுஸ்திரேலியாவில் முதல் முதலில் தோன்றிய இலக்கிய பொது நிகழ்வு.

மேலும் படிக்க ...

இன்று நவம்பர் 26 ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம்! எழுத்துலக எழுச்சி எஸ்.பொ ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் , மெல்பேண், அவுஸ்திரேலியா -
இலக்கியம்
26 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று நவம்பர் 26 ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம்! 

 எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து - சிறுகதை, நாவல் விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை, மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கி றோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு. அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சன மேயாகும்.எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார். இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப் பிரசாதமாகவே இருந்தார்கள். அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை. ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார். இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. ஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும் இவரின் துணிவுக்கு ஒரு கார ணமாகவும் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர் எதிர்த்தால் துவண்டுவிடுவார்கள்.ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார்.இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன. இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படா நிலையும் காணப்பட்டது.ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார்.

மேலும் படிக்க ...

நேர்காணல் பகுதி மூன்று: ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -

விவரங்கள்
- நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
25 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கேள்வி: சென்றமுறை உங்களை கவர்ந்த உலக ஓவியர்களின் வரிசையில் பலரையும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதில் முதலாவதாக இடம் பிடித்திருந்தவர் ஜோன் கொன்ஸ்டபில். அவரைப் பற்றி வாதிப்பதற்கு முன் இரண்டு கேள்விகள் உண்டு. முதலாவதாக, நீங்கள் குறிப்பிட்ட, ஓவியர்களின் பெரும்பாலான ஓவியங்கள் ரவிவர்மா காலத்து ஓவியங்களில் இருந்து வித்தியாசப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, வான்கோவின் ஓவியம் மிக மிக வித்தியாசப்பட்டு காணப்படுகின்றது. இவற்றை ரசிப்பதற்கு அல்லது இவற்றின் உள்ளார்ந்த மதிப்பை சரியாக போற்றுவதற்கு தனியான ஒரு கற்கை – அல்லது பயிற்சி, தேவையானது என்று கருதுகின்றீர்களா?

பதில்: இல்லை. ஆனால், சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல சிறந்த ஓவியங்களைப் பார்த்து, பார்த்து பரீட்சயம் அடைய அடைய அவற்றால் நீங்கள் பாதிக்கப்படுவது நிச்சயமானதாகின்றது. பொதுவில் சாதாரண புகைப்படங்கள் போன்றே, ஓவியங்களையும் காண பழக்கப்பட்டுவிட்ட நாங்கள் இவற்றை மேலும் ஆழமாக பார்க்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. மேலைத்தேய ஓவிய காட்சி கூடங்களில் எல்லாம் ஒவ்வொரு ஓவியத்திலிருந்தும் கிட்டத்தட்ட ஒரு முப்பது அடி தள்ளி இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்கள் இவ்இருக்கைகளில் அமர்ந்து குறித்த ஓவியங்களை ஓர் அரைமணி நேரம் செலவழித்து பார்க்கின்றார்கள். அவ்வோவியத்தின் மரங்கள், பூமி, புற்றரை, ஆறுகள், மலர்கள் இவை அனைத்துமே பார்வையாளர்களோடு பேசுகின்றன. ஏதேதோ கூறுகின்றன.

இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. உதாரணமாக, பகல் வேளைகளில் ஒரு மலையை அல்லது ஒரு மரத்தை நீங்கள் காணுகின்றீர்கள். மலை தெளிவாக தெரிகின்றது. ஆனால் அதே மலையை அல்லது மரத்தை, மாலையின், இருட்டும் வேளையில் ஒரு கருக்கலில் காணுகின்றீர்கள். அதன் ஓரங்கள் தெளிவுற அமைவதில்லை. இருந்தும், ஒரு கவிதையை போன்ற ஒரு உணர்வு அங்கே தோற்றம் கொடுக்க முற்படுகின்றது. அதனை பார்க்கும் பார்வையாளனின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் எல்லாம் ஊற்றெடுக்கின்றன. அக்கருக்கல் கூறும் கவிதை என்ன? இதைத்தான் வான்கோ போன்ற ஓவியர்கள் தத்தமது ஓவியங்களில் முன்னிறுத்த முனைந்தனர். தனது ஓவியங்களை அவர்கள் பேச வைத்தார்கள். பாட வைத்தார்கள் - கவிதைகளாய் உருவாக்க முயற்சித்தனர். அதில் வெற்றியும் பெற்றனர்.

மேலும் படிக்க ...

காத்யானா அமரசிங்ஹவின் 'தரணி'! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
24 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காத்யான அமரசிங்ஹவின் 'தரணி' நாவலுக்குச் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான கொடகே சாகித்திய விருது (2020)! வாழ்த்துகள்!

- எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில், பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாகத் தமிழில் வெளியான எழுத்தாளர் கத்யானா அமரசிங்ஹ அவர்களின் சிங்கள நாவலான 'தரணி' நாவலுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான 23 ஆவது கொடஹே தேசிய சாகித்திய விருது சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நாவலுக்காகக் கிடைத்துள்ளது. எழுத்தாளருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் எனது வாழ்த்துகள்.  நூலை வாங்க: பூபாலசிங்கம் புத்தகசாலை இல. 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11. மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். -  இந்நாவலுக்கு நான் எழுதிய  அணிந்துரையினை இங்கு உங்கள் வாசிப்புக்காகத் தருகின்றேன். - வ.ந.கிரிதரன் -


அண்மையில் நான் வாசித்த புனைகதை 'தரணி'. இதுவொரு சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர் இவர். அத்துடன் ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இலங்கையின் சமகால சமூக, அரசியற் பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவர். அவற்றை இன, மத, மொழி ரீதியாக அணுகாமல், மானுடப்பிரச்சினைகளாக அணுகுமொருவர். இதனை இவர் எழுதி அண்மையில் வெளிவந்த 'தரணி' நாவலிலும் காணலாம். இந்நாவல் இலங்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நாவலைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப். இவரும் இலக்கியத்தின் பல்வகைப்பிரிவுகளில் , மொழிபெயர்ப்பு உட்பட, காத்திரமான பங்களிப்பைச் செய்து வருபவர். ஏற்கனவே பல நூல்களை, ஆக்கங்களைச் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றார். இந்நாவலின் மொழிபெயர்ப்பும் இவரது மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைக்கப்பெற்ற சிறந்த படைப்புகளிலொன்றாக அமைந்துள்ளதென்பதை வாசிக்கும் எவரும் உணர்ந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க ...

கவிதை: என்னுயிர்!  - நா. சுகுமார் M.A., M.Ed., உதவிப் பேராசிரியர், ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்.

விவரங்கள்
- நா. சுகுமார் M.A., M.Ed., உதவிப் பேராசிரியர், ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்.
கவிதை
24 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவள் ஓர் உயிர்!
அவளே எனதுயிர்!
எங்கு இருக்கிறாள்?
எங்கும் இருக்கிறாளா?
இல்லை என்னுள் இருக்கிறாளா?
அவளால் நான் இருக்கிறேன்
என அறிந்த அவள் மனம்,
அவளுள் நான் இருக்கிறேன் என்பதை அறிய
மறுப்பதேனோ?
பிரிந்து சென்றாள், ஆனால்
நினைவுகளைப் பிரிக்க மறந்தாள்! எங்கோ கேட்கிறது அவள் குரல்,
என்னுள் கேட்கிறது ஓர் அழுகுரல்,
அது மனதின் குரலோ
இல்லை என் மனக்குமுறலோ!
ஏன் இந்த மாற்றம்?
எதனால் இந்தத் தடுமாற்றம்? – என்னவளே!

மேலும் படிக்க ...

தோழர் குட்டியின் (சஞ்சீவ்ராஜ்) மறைவு. - ராகுல் சந்திரா -

விவரங்கள்
- ராகுல் சந்திரா -
அரசியல்
24 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
தோழர் குட்டி ‘தீப்பொறி’, ‘தமிழீழ மக்கள் கட்சி’, மற்றும் ‘மே 18 இயக்கம்’ போன்ற அமைப்புகளுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டவர். அமைப்பின் ஒவ்வொரு முன்னெடுப்புகளிலும் தீவிரமாக தன்னை வெளிப்படுத்தியவர். அமைப்பிற்காக லண்டனில் மாத்திரமன்றி, ஏனைய ஐரோப்பிய தலைநகரங்களிலும் பணியாற்றியவர்.
 
எம்மால் வெளியிடப்பட்ட ‘உயிர்ப்பு’ சஞ்சிகையை அச்சிட்டு வெளியிடுவதில் முக்கிய பங்காற்றியவர். ‘வியூகம்’ சஞ்சிகை வெளிவந்தபோது அதன் வெளியீட்டு விழாக்களை லண்டனின் ஒழுங்கமைத்தவர். அண்மையில் நான் தொகுத்து வெளியிட்ட ஈழப்போராட்டம் தொடர்பான மூன்று நூல்கள் வெளியானபோது அவற்றை லண்டனில் மாத்திரமன்றி, பாரிஸ், சூரிச் நகரங்களிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்தவர். பாரிஸ் கூட்டத்தில் கலந்துகொண்டது மட்டுமன்றி கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களிலும் தீவிரமாக ஈடுபட்டவர்.
 
தீவிரமான அரசியல் பிரக்ஞையும், அர்ப்பணிப்பும் உள்ள தோழர் குட்டியின் இழப்பானது தோழர்களைப் பொறுத்தவரையில் ஈடுசெய்ய முடியாத பெரிய இழப்பாகும்.
 
குடும்பத்தினரான மனைவி, மற்றும் மூன்று சிறுவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வழிதெரியாமல் தவிக்கிறோம். அவர்களது துயரை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.
மேலும் படிக்க ...

தொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது (10) - நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -

விவரங்கள்
- நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -
நாவல்
23 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் பத்து

உள்ளத்துள்ளே நிறைவான மகிழ்ச்சிமழை பொழிந்ததனால், இரவு முழுவதும் வெளியே பொழிந்து ஓய்ந்த மழைகூட பெரிதாகத் தெரியவில்லை.

வீட்டின் முன்புறத்து மதிலோடு நின்ற முருங்கை மரமானது, முழுமனத்தோடு வாரிவழங்கி விதைத்த இலைகளும், பூக்களும் முற்றத்தில் “மார்டன் ஆர்ட்” கோலமாகக் கண்களைப் பறித்தன.

பக்கத்துவீட்டு மாடித் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த “மரிக்கொழுந்து”ச் செடிகளிலிருந்து வந்த வாசனை, சுவாசத்தைத் திக்குமுக்காடவைத்துத் திணறடித்தது.

அதிகாலைப் பூஜை “திருவனந்த” லுக்கான அழைப்பு மணி ஓசையிலே, மதுரை மாநகரையே உலுக்கியெடுத்தாங்க மீனாட்சி அம்மா.

அதைத் தொடர்ந்து எங்கள் வீட்டிலும், அதாவது எனது புகுந்தவீட்டிலும் அனைவரும் பரபரப்பானோம்.

ஆமாம் : சொல்ல மறந்துவிட்டேன். இப்போது மதுரையில், என்னவரின் வீட்டிலிருக்கின்றேன்.

திருநெல்வேலியிலிருந்து…… அதுதான் நானிருந்த ஊரான வீரவநல்லூரிலிருந்து இங்கு வந்துள்ளோம்.

நேற்று திருமணம் முடிந்து, மதிய உணவு உண்ட கையோடு என்னையும் மதுரைக்குப் புறப்படும்படி அத்தை சொல்லிட்டாங்க.

எல்லாமே சினிமாவில் நடப்பதுபோல, காட்சிகள் அனைத்துமே அடுத்தடுத்து மாறிக்கொண்டிருந்தன.

பிரிய மனமின்றிப் புறப்பட்டேன்.

நான் கிளம்பும்போது, அம்மாவின் கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரானது, பிரிவின் வலியா, அல்லது ஆனந்தக் கண்ணீரா என்பதை என்னால் அடையாளப்படுத்த முடியவில்லை.

மேலும் படிக்க ...

(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள்! (4): ஜாம கோடாங்கி - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
23 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்!  - பதிவுகள்.காம் -


ஜாம கோடாங்கி

எங்க தாத்தாவுட்டு அப்பா பேரு ஊத்தங்கொட்டான் புள்ள. எங்க தாத்தா பேரு நாராயணன் புள்ள. எங்க அப்பா ஆரோக்கியசாமி. அவர, ரம்பகார ஆறுமுகம்ன்னுதான் எல்லாருக்கும் தெரியும். நான் சேவியர். கல்லொடைக்கிற சேவியர்னா யாருக்கும் தெரியும்”

“எங்க அண்ணா வீட்டுக்கு வராட்டி எங்க அம்மா வருத்தப்படும். எங்க தம்பி வீட்டுக்கு வராட்டியும் அப்படித்தான். அதே யோசனையோட அம்மா அடுப்படியிலேயே ஒக்காந்திருப்பாங்க. நான் வீட்டுக்கு வராட்டி கவலையே வராது எங்க அம்மாவுக்கு…”

“அவென் சிங்ககுட்டி… எப்படியானலும் எந்த ஜாமமானாலும் வந்து கதவெ தட்டுவான். என் சம்சாரத்துக்கு கூட என் அம்மா சொல்றது அதேதான். போய் படு புள்ள. அவென் ஒரு ஜாம கோடாங்கி. நடு சாமத்துல வந்து கதவ தட்டுவான்னு…”

இந்த ஜாம கோடாங்கியையும் எக்குத்தப்பாய்த்தான் கொடைக்கானல் குளக்கரையில் சந்தித்தேன்.

குளம் மாறிவிட்டிருந்ததா என்பது சரியாக பிடிபடவில்லை. ஆனால் நகரை ஒட்டிய பகுதியில் முன்பு போலில்லாமல், சற்றே கலங்கலாய் காணப்பட்டது. ஆனால் நடந்து செல்ல செல்ல – குளத்தின் களங்கல் தெளியத்தொடங்கி, நீல வானத்தின், கீழ், ஓரங்களில் நீல அல்லிகளுடன் வழமைபோல் தனது அழகை பாதுகாத்து நின்றது. இருந்தும் கரையை ஒட்டிய பிரதேசம் முன்போலன்றி, புல்லும் புதருமாய் நிறைந்திருந்தது. ஒரு வேளை அடுத்த முறை திருத்தி இருப்பார்கள்.

குளக்கரையின் மருங்கே, பாதையை ஒட்டி போடப்பட்டிருந்த அதே ஒடுங்கிய காங்கிரிட் திட்டின் மீது தன் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தவன், தொழிலுக்கு நேரமாகிவிட்டதை அறிந்து அவசர அவசரமாக எழுந்து, பின்னால் ஒட்டியிருந்த தூசி துரும்புகளை தன் வல கரத்தால் தட்டி விட்டுக்கொண்டு, தன் நண்பனுடன் வேகமாக நடக்க தொடங்கினான், குளக்கரையின் நடைபாதையில்.

மேலும் படிக்க ...

குறுநாவல்: தாயுமானவர் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
சிறுகதை
23 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கீரிமலைக் கடற்கரை சுனாமி வந்து போனது போல அமைதியாக இருந்தது. அலைகளின் ஆர்ப்பரிப்பைத்தவிர, அங்கே மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கவில்லை. எங்கிருந்தோ பறந்து வந்த மீன் கொத்திப் பறவை ஒன்று சட்டென்று தண்ணீரில் மூழ்கி எதையோ கொத்திச் சென்றது. சுதந்திரமாய்ச் சிறகடித்து வானத்தில் பறக்கும் கடற்கொக்குகளைக் கூட இன்று  காணக் கிடைக்கவில்லை. அஸ்தி கரைப்பதற்காக கீரிமலைக் கடலில் தலை மூழ்கி எழுந்தபோது இதுவரை அடக்கிவைத்த எனது துயரம் தன்னிச்சையாகப் பீறிட்டு வெடித்தது. கிரிகைகள் செய்யும்போது துயரத்தை வெளிக்காட்டக் கூடாது என்பதால் கிரிகைகள் செய்த சமயாச்சாரியின் முன்னால் இதுவரை அடக்கி வைத்த துயரம் தண்ணீரில் ஒவ்வொரு முறையும் தலைமூழ்கி எழுந்தபோது என்னையறியாமலே வெடித்துச் சிதறியது. ஆற்றாமையின் வெளிப்பாடாய் இருக்கலாம், ஏனோ வடதிசையைப் பார்த்து ஓவென்று அழவேண்டும் போலவும் இருந்தது. என் கண்ணீரைப் பாக்குநீரணை தனதாக்கிக் கொண்டபோது, ஆர்ப்பரித்த ஓயாத அலைகளின் ஆரவாரத்தில் என் அழுகைச் சத்தமும் அதற்குள் அடங்கிப் போயிற்று.

இப்படித்தான் ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் மரண ஓலங்கள்கூட வடதிசையில் கடல் கடந்து சற்றுத் தொலையில் இருந்த உடன் பிறப்புக்களுக்குக் கேட்காமல் அரசியல் அலைகளால் அமுக்கப்பட்டிருக்குமோ என்று நினைக்கத் தோன்றியது. நினைவுகள் கரித்தது போல, வாயெல்லாம் உப்புக் கரித்தது. கரித்தது என் கண்ணீரா அல்லது வங்கக் கடல் நீரா என்பதைக்கூட தெரிந்து கொள்ள முடியாத அவலநிலையில் நானிருந்தேன்.

இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே இராணுவ நடமாட்டம் இருந்தது மட்டுமல்ல, பலர் சாதாரண உடையிலும் நடமாடினர். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அவர்களால் கவனிக்கப்படலாம் என்பதால் என் துயரை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். கவனமாக இருந்தேன் எனபதைவிட கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தேன். நான் பிறந்து வளர்ந்த மண்ணுக்கு என்ன நடந்தது? ஏதோ ஒருவித பயங்கர அமைதி அங்கே நிலவுவதை என் உள்ளுணர்வு எடுத்துச் சொன்னது. இதே கடற்கரையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிற் தீர்த்தத் திருவிழாவின்போது நண்பர்கள், உறவுகள் புடைசூழ எவ்வளவு கலகலப்பாய் மகிழ்ச்சியோடு நீராடியிருக்கிறோம். கடற்கரை ஓரத்தில் இருந்த நன்னீர்க் கேணி என்பதால் கீரிமலைக் கேணி பிரசித்தி பெற்றிருந்தது. தென்னிந்தியாவில் இருந்து வந்த சோழ இளவரசியான  மாருதப்புரவீகவல்லி இந்தக் கேணியில் நீராடித்தான் தனது குதிரை முகம் போன்ற தனது முகத்தை அழகான முகமாக மாற்றியதாக வைதீகக் கதைகள் உண்டு. இளவரசியின் விருப்பப்படியே தென்னிந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட காங்கேயன் சிலை, அருகே இருந்த இந்தக் கடற்கரைத் துறைமுகத்தில் இறங்கியதால் அத்துறை காங்கேயன் துறையாயிற்று.  குதிரை முகம் அழகிய முகமாய் மாறியதால் மா- விட்டபுரம் என்ற பெயரும் எங்கள் ஊருக்கு அமைந்ததாக பாரம்பரியக் கதைகள் உண்டு.

மேலும் படிக்க ...

சிறுகதை: மனிதம் - கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
- கே.எஸ்.சுதாகர் -
சிறுகதை
23 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வெளியே காற்று அனலாக வீசிக்கொண்டிருந்தது. புழுதியை வாரி இறைத்துவிட்டு, பெருவெளியெங்கும் ஓடி வீதிக்கு விரைந்தது. வேப்பமரமொன்று தலை சாய்த்துவிட்டு எழும்பி நிற்கின்றது. கண்டி – யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நேரம் மதியம் தாண்டி இரண்டை எட்டிப்பிடிக்கிறது.

“இன்னும் எவ்வளவோ வேலைகள் செய்யவேண்டியிருக்கு. உப்பிடியே படுத்திருந்தால்?” மனைவி வயிற்றைப் பிடித்துக்கொண்டு எட்டிப் பார்த்தாள்.

இன்னும் பத்து நாட்களில் நியூசிலாந்து நாட்டுக்குப் புறப்படவேண்டும். இந்தப் புலம்பெயர்வு விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. என்னுடைய நண்பர்களில் பலர் முன்னதாகவே, இலங்கையை விட்டுப் புறப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் சிதறுண்டு போய்விட்டார்கள். இருந்து பார்த்துவிட்டு, நாட்டு நிலைமைகள் மிகவும் மோசமடையவே நானும் புறப்படுவதற்கு ஆயத்தமானேன். இதுவரை சொந்தநாட்டுக்குள்ளேயே நான்கு இடங்கள் இடம்பெயர்ந்துவிட்டேன். வடபகுதிக்குள் இரண்டு இடங்கள், பின்னர் தலைநகரம் கொழும்பு, இப்போது வன்னி. 1990 ஆம் ஆண்டு முதன்முதலாக இடப்பெயர்ந்த போது வீடுவாசல் சொத்துக்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்தேன். அதன் பிறகு உயிரைக் கையில் பிடித்தபடி மாறி மாறி ஓட்டம்.

நியூசிலாந்து போவதற்கான எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டுவிட்டன. மனைவி ஏழுமாதக் கர்ப்பிணி. முதலாவது பிரசவம். இனியும் தாமதித்தால் அவரை விமானத்தில் ஏற்றமாட்டார்கள். வன்னியில் வேலை செய்வதால், அங்கு இருந்துகொண்டு பிரயாணம் தொடர்பாக எதையும் செய்துகொள்ள முடியாது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பின்னடைவையே தரும்.

வீட்டு முகப்பில் சைக்கிள் பெல் சத்தம் கேட்கின்றது. மனைவி ஜன்னலிற்குள்ளால் எட்டிப் பார்த்துவிட்டு, “உங்களுடன் வேலை செய்யும் யோகன்” என்றார். பாயைச் சுருட்டிக் கரையில் வைத்துவிட்டு வெளியே வருகின்றேன்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு (2009 - 9 & 2009 -10) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
20 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் 2009 - 9

கொழும்பிலிருந்தும் புதுடெல்லியிலிருந்தும் நியூயோர்க்கிலிருந்தும் திட்டமிடப்பட்ட யுத்தம் வன்னியில் நடந்ததெனில், யுத்த நிலைமைகள் வந்து குவியும் செய்திக் களமாக வவுனியா ஆகியிருந்தது. சர்வதேச மனித உரிமை இயக்கத்தினரும், சர்வதேச உள்ஊர் ஊடகவியலாளரும், தொண்டு நிறுவன அதிகாரிகளும் அங்கே குவிந்துபோயிருந்தனர். பல ஊடகவியலாளர் அரசாங்க தடையை மீறியும் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த குறுகிய எல்லையின் விளிம்பை அடைந்திருந்தனர்.

பெரும்பாலும் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டிருந்தது. முடிவும் தெரிந்துவிட்டது. அது பிரகடனப்படுத்தப்படுவதற்கான நேரம்தான் இனி வரவிருந்தது.

ஆனாலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கேயென்ற கேள்வி பெரும்பாலானவர் மனங்களில் ஒலித்துக்கொண்டிருந்தது. சிலர்மட்டும் பொட்டம்மானோடு அவர் தொப்பிகல காட்டுக்குள் தப்பிவிட்டாரென நம்பிக்கொண்டிருந்தார்கள்.

ராணுவத்தின் குண்டு வீச்சுக்களையும், சில விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகளையும் தப்பிய தமிழ் மக்கள் சிலர் வனங்களுக்குள்ளிருந்து வெளியேறி வவுனியாவை வந்தடைந்துகொண்டிருந்தார்கள். அவர்களிடம் தவல்களும் கதைகளும் இருந்தன. அவை அவர்களிடத்தில் மட்டுமே இருக்கப் பணிக்கப்பட்டன.

வனம் தன் மௌனமுடைத்து அழுகையையும், ஓலத்தையும், ஒப்பாரியையும் வெளியிட்டுக்கொண்டிருந்தது. ஒரு காலத்தில் வனத்தின் ரகசியம் அதன் அடர்த்தியாய், பாதைகளற்ற இறுக்கங்களாய், கானாறுகளின் பாய்ச்சல் வேகங்களாய், மிருகங்களின் அபாயங்களாய் இருந்தது. அப்போது மனிதச் சுவடுகள் பதிந்து பதிந்து தடம் விழுந்திருந்ததில் அதன் ரகசியத்தின் கூறுகள் பல அழிந்திருந்தன. ஆனால் அந்தத் தடங்களில் விதைக்கப்பெற்றிருந்த மிதிவெடிகள் இன்னும் மீதமாய் இருந்தன. அவை முளைத்து தளிர்க்காவிட்டாலும், உயிர்கொண்டிருந்தன. பிறர் உயிர் வௌவும் திறன்கொண்டவையாயும் இருந்தன. அது இன்னொரு இரகசியமாய் வனத்துள் இருந்தது. அதிலிருந்து மீண்ட சிலர் கரைசேர்ந்ததும் குலுங்கி அழுதனர். கூடவந்த உறவுகளை அவை காவுகொண்ட கதையைச் சொல்லி கதறிப் புலம்பினர்.

மேலும் படிக்க ...

மேகலை கதா நூல் அறிமுகமும் உரையாடலும்!

விவரங்கள்
- தகவல்: தேவகாந்தன் -
நிகழ்வுகள்
18 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள்! (3): சவுக்கு மரங்கள் - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
17 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்!  - பதிவுகள்.காம் -


சவுக்கு மரங்கள்

கொடைக்கானல் நகரின் பள்ளத்தாக்குகளில் இருந்து, மேலெழும் குன்றுகள் வழியாக, மேலேறி, இப்போது பார்வைக்கு மிக சிறியதாய் தோற்றம் தரும், கையளவிலான ஏரியும் பார்வையை விட்டகல, பூம்பாறை பாதை சடுதியாக கீழிறங்க தொடங்கும். பாதையின் இரு மருங்கிலும் அடர்ந்திருக்கும் சவுக்கு மரங்கள் பஸ் ஏதோ ஒரு சோலைக்குள் செல்வது போன்ற பரவச நிலையை உண்டு பண்ணும்.

சவுக்கு மரங்களோ, சூரிய ஒளியை மண்ணில் விழாதவாறு காப்பதற்கு திடசங்கற்பம் பூண்டவை போன்று, தமது கிளைகளாலும் வாதுகளாலும் ஒன்றையொன்று நெருக்கமாக பிண்ணி பிணைந்து விழும் சூரிய கதிர்களை தடுத்து, அம் முயற்சியின் வெற்றி களிப்பில், தலையை மெல்ல மெல்ல ஆட்டி, வீசும் காற்றில் புன்னகைப்பன – தத்தமது வெளிர் நிற மஞ்சள் மலர்களோடு.

சூரிய ஒளி படாததாலோ என்னவோ, அடர்ந்திருக்கும் அந்த குட்டை குட்டை மரங்களின் கீழ் காணப்படும் தரையும், அந்நிழலுக்கே ஏற்ற ஓர் கரிய நிறத்தில், கீழே கிடக்கும் சவுக்குகளின் உதிர்ந்த ஒடுங்கிய சவுக்கு இலைகளுடன், கரிய மெத்தை கிடப்பது போன்ற உணர்வினை பார்ப்பவர்க்கு தோற்றுவிக்கும்.

காலை நீட்டி “அப்பாடா” என்று இந்த கரிய கரிய மொரமொரப்பான மெத்தைகளில் படுத்து, வீசும், இந்த அருமையான சில்லிட்ட காற்றை உள்ளிழுத்து கிடந்தால் எவ்வளவு சுகமாயிருக்கும் என்பது போன்ற யோசனைகள் எல்லாம் மேலெழ, பஸ்ஸோ விரைந்து விரைந்து அந்த ஒடுங்கிய பாதையில், சவுக்கு மரங்களின் கிளைகள் சில சமயங்களில் பஸ் ஜன்னல்களை பலமாக தேய்த்து உரசி பெரும் சப்தம் எழுப்ப – படி படியாய் கீழ் இறங்கி சென்றுக்கொண்டிருக்கும், வளைந்து வளைந்து.
ஒரு வளைவில், ஒடித்து திரும்பும் போது, மலையடிவாரம் சார்ந்த ஓர் குன்றின் சரிவில் கிட்டத்தட்ட ஓர் வெட்டவெளி பொட்டலில் என்று கூட சொல்லலாம், அமைந்து கிடந்தது பூம்பாறை என்னும் அந்த மிக சிறிய நகரம். பெட்டி விடுகள். சிறிய சிறிய பெட்டி கடைகள். ஒரு கோயில், அதில் அலறும் ஒரு ஒலிப்பெருக்கி – போக, பஸ் நிறுத்தம் அப்படி இப்படி என்று ஏதும் இங்கு இருப்பதாக இல்லை. தேனீரோ சாப்பாடோ இந்த சிறிய பெட்டி கடைகளே தஞ்சம்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. மறு யுகம் வெளியீடான 'வாழ்வின் பின் நோக்கிய பயணமிது' பற்றிய குறிப்புகள்.. - வ.ந.கிரிதரன் -
  2. கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தின் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் முனைவர் பட்டம் மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் கவனத்துக்கு.. - தகவல்: முனைவர் கோ.சுனில்ஜோகி -
  3. விதை குழுமத்தின் அறிதலும் பகிர்தலும் 09 - தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் நிகழ்வுக்கான அழைப்பு!
  4. (பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள் (2): அட்டுவம்பட்டி - பிளம்ஸ் மரம் - ஜோதிகுமார் -
  5. கவிதை: நான் பெண் என்பதால், நான் படிக்க வேண்டும்! - மூலம்: கமலா பாசின் | தமிழில்: முனைவர் பாரதி ஹரிசங்கர்
  6. முகநூற் குறிப்புகள்: கவிதை - வாழிய சென்னை! - வ.ஐ.ச.ஜெயபாலன் -
  7. தொடர்நாவல் : கலிங்கு (2009 - 8) - தேவகாந்தன் -
  8. தொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது…..!(9) - நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -
  9. பயணக் கட்டுரைகள்: என் கொடைகானல் மனிதர்கள்! (1) பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும்! -  ஜோதிகுமார் -
  10. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: “வேற்றுக்கிரக மனிதர்கள்” (அறிவியல் தொடர் - 4)
  11. இலக்கிய வெளி: தேவகாந்தனின் நான்கு நூல்கள் விமர்சன அரங்கு!
  12. மெய்நிகரில் மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா ! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வு !! இம்மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பம் ! - முருகபூபதி -
  13. தேடியெடுத்த கதையும் கவிதையும்: 'பல்லி தந்த பாடம்' & 'விழித்தெழும் புது யுகம்' - வ.ந.கிரிதரன் -
  14. இலக்கியவெளி சஞ்சிகை நடத்தும் "கவிதை உரையாடல் -1" - தகவல்: அகில் -
பக்கம் 85 / 104
  • முதல்
  • முந்தைய
  • 80
  • 81
  • 82
  • 83
  • 84
  • 85
  • 86
  • 87
  • 88
  • 89
  • அடுத்த
  • கடைசி