பதிவுகள் முகப்பு

ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
08 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 ‘இந்துசமுத்திரத்தில் ஒரு முத்து’ என்று எப்படிக் கடற்பயணிகள் இலங்கைத்தீவை வர்ணித்தார்களோ அதேபோலத்தான் சுற்றுலாப் பயணிகள் ‘பசுபிக்சமுத்திரத்தின் பரடைஸ்’ என்று இந்தத் தீவுகளை அழைக்கிறார்கள். இந்த ஹவாய் தீவுகள் எரிமலைக் குளம்புகளால் உருவானவை என்பதை நீங்கள் நம்பமறுக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. சுமார் 2000 மைல்கள் சுற்றாடலில் எந்த நிலப்பரப்பும் இல்லாத ஹவாய் தீவுகள், அமெரிக்காவின் 50 வது மாகாணமாக ஆகஸ்ட் மாதம் 1959 ஆண்டு பிரகடனப் படுத்தப்பட்டது. சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக போலிநேஷன் (Polynesian) என்று சொல்லப்படுகின்ற குடும்ப அமைப்பு இங்கே முதலில் உருவானது. முக்கியமாக Samoa, Cook Islands, New Zealand, Easter Island, Hawaii, Tonga, Tuvalu, Wallis and Futuna, Fiji போன்ற இடங்களில் இருந்து கடலில் திசைமாறி வந்து, திரும்பிச் செல்ல வழியில்லாமல் குடியேறியவர்களே இங்குள்ள பழங்குடி மக்களாவார். இங்குள்ள தீவுகளில் சுமார் எட்டுத் தீவுகளே ஓரளவு பெரிய தீவுகளாக, மனிதர் வாழக்கூடியதாக இருக்கின்றன.

1778 ஆம் ஆண்டு ஐரோப்பியரான கப்டன் ஜேம்ஸ் குக் என்ற கடற்பயணிதான் முதன் முதலாக இத்தீவுகளில் கால்பதித்தார். புகழ்பெற்ற பேர்ள்ஹாபர் (Pearl Harbour), உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகள் (Valcano Park), தொலைநோக்கி மையம் (Mauna Kea Summit) இந்துக்கோயில், டோல் அன்னாசிப்பழத் தொழிற்சாலை போன்றவற்றைப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆவலை நிறைவேற்ற பாம்புகளே இல்லாத ஹவாய்க்குப் பயணமானேன். ஹவாயில் உள்ள விமான நிலையத்தை டானியல் கே. இனோஜி சர்வதேச விமான நிலையம் (Daniel K. Inouye International Airport) என்று அழைக்கிறார்கள். சுமார் 22 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இந்த விமானநிலையத்திற்கூடாக வருடாவருடம் பயணிக்கிறார்கள். விமானத்தை விட்டு வெளியே வந்ததும் ஹவாயின் பாரம்பரிய உடையணிந்த, கழுத்திலே பூமாலை அணிந்து, தலையிலே ஒற்றைப்பூ சூடியிருந்த இளம் பெண்கள் எங்களை வரவேற்றார்கள். காதில் விழுந்த முதல் வார்த்தை ‘அலோகா’ என்பதாகும். ‘அலோகா’ ((Aloha) என்றால் வணக்கம், சென்ற இடமெல்லாம் அலோகா சொன்ன போது, எனக்கு ‘அரோகரா’ என்பது போலக் கேட்டது. ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று அதைப்பற்றிப் பின்பு ஆராய்ந்து பார்த்த போது, எங்கள் பண்பாட்டிற்கும் அதற்கும் ஒருவித தொடர்பு இருப்பதை அறிய முடிந்தது.

மேலும் படிக்க ...

ஆய்வு: எஸ். பொன்னுத்துரை படைப்புகளில் காணலாகும் பண்பாட்டுக் கூறுகள்! - முனைவர் ப. பாரதி, உதவிப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேல்ராம்பட்டு, புதுச்சேரி -

விவரங்கள்
- முனைவர் ப. பாரதி, உதவிப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேல்ராம்பட்டு, புதுச்சேரி -
ஆய்வு
08 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 முன்னுரை
பண்பாடு என்பது பண்பட்ட மனதின் வெளிப்பாடேயாகும். சங்க கால மக்களின் வாழ்க்கை நிலையையும். பின்புலத்தையும் இது எடுத்து காட்டுவதாகவும் வருங்காலச் சந்ததியினருக்கு நல்ல நினைவுச் சின்னமாகவும் விளங்குகின்றது.

பண்பாட்டுக் கூறுகள்:
அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துக்களும், நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் பண்பாடாக அமைகின்றன.

'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்' (நச்சினார்க்கினியர் உரை, கலித் தொகை, கலி. 16)

என்னும் கலித்தொகை வரி பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம் என்னும் ஒழுக்கமும் பண்பாடு என்று கூறுகின்றது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், சமூகத்தினருக்கும் தனித்தனிப் பழக்கவழக்கங்கள் உண்டு. அவை பிற சமூகத்தினரிடமிருந்து தங்களை தனித்துக் காட்டுகின்ற அடையாளங்களாகும். அவ்வகையில் நவீன இலக்கியவாதியான இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ. என்று அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை இலங்கை தமிழ் மக்களின் நம்பிக்கையையும், பழக்க வழக்கங்களையும் மையமாக வைத்துத் தனது படைப்புகளில் விளையாட்டு, திருவிழா, மருத்துவம், உணவுப் பழக்கம் போன்றவற்றைப் படைத்துள்ளார்.

விளையாட்டுக்கள்
'விளையாட்டு என்பது வெளித்தூண்டுதலின்றி மனமகிழ்ச்சியூட்டும் வெயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். அவ்விளையாட்டு பொழுதுபோக்காக மட்டுமின்றி உடல்நலம்,மனநலம் பேணுவதாகவும் உள்ளது' என்று சு. சக்திவேல் நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் (ப. 246) குறிப்பிடுகின்றார்.

மேலும் படிக்க ...

அரசும் அதிகாரமும் - அறிதலும் பகிர்தலும் 8 நிகழ்வுக்கான அழைப்பு! - விதை குழுமம் -

விவரங்கள்
- விதை குழுமம் -
நிகழ்வுகள்
08 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், எமது முன்னைய நிகழ்வில் குறிப்பிட்டிருந்தது போல ஒக்ரோபர் மாதத்தில் விதை குழுமம் நான்கு இணையவழி நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றது. அவற்றின் முதலாவது நிகழ்வாக அரசும் அதிகாரமும் என்னும் தலைப்பில் “அறிதலும் பகிர்தலும் நிகழ்வின் 8வது நிகழ்வு இடம்பெறும்.

பௌதீகவியலில் சக்தி என்பது மிக அடிப்படையான எண்ணக்கருவாக இருப்பதைப் போன்று அரசியல் கல்வித்துறையில் அதிகாரம் (POWER) என்னும் எண்ணக்கரு அடிப்படையானதாக அமைந்துள்ளது என பெர்ட்டண்ட் ரஸ்ஸல் குறிப்பிட்டார். ரஸ்ஸலின் இக்கூற்றை மேற்கோள் காட்டும் ஜயதேவ உயன்கொட அவர்கள் 'அதிகாரம்' பற்றிய நவீனகால அரசியல் கோட்பாடுகளைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் தமது நூலின் 5 ஆம் இயலில் (POLITICS AND POLITICAL SCIENCE - A CONTEMPORARY INTRODUCTION) மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுவானவர்கள் ஆகியோரின் தேடலுக்கும் படிப்புக்கும் உரிய வழிகாட்டிக் குறிப்புக்களைத் தந்துள்ளார்.

நவீன கால அரசியல் கோட்பாட்டாளர்கள் அதிகாரத்தின் மூன்று பரிமாணங்களை விளக்கிக் கூறியுள்ளனர்.

ஆட்சியாளர்களால் ஆளப்படுபவர் மீது பிரயோகிக்கப்படும் அதிகாரம் இதனை 'POWER OVER' என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்குப் பணியமறுத்து ஆளப்படுவோர் எதிர்ப்பை தெரிவதற்கும் அதிகாரம் தேவைப்படுகிறது. இதனை 'எதிர்ப்பதற்கான அதிகாரம்' (POWER TO RESIST) எதிர்ப்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் இருந்துவரும் ஒடுக்குமுறை அமைப்புகளை மாற்றுவதற்கான (POWER TO CHANGE) அதிகாரமும் ஆளப்படுவோரால் பிரயோகிக்கப்படுகிறது. இது அதிகாரத்தின் மூன்றாவது பரிமாணம் ஆகும்.

மேற்குறித்த வகைப்பாடும், அதிகாரத்தின் 'POWER OVER' 'POWER TO' இருவேறு நோக்குமுறைகளும் அரசியல் கோட்பாட்டு ஆய்வுகளின் சுவாரசியம் மிக்க கூறுகளாகும்.

மேலும் படிக்க ...

பன்னாட்டுத் தமிழியற் கருத்தரங்கு அழைப்பிதழ்! தலைப்பு: “திருக்குறள் கூறும் அறம்”!

விவரங்கள்
- தகவல்: முனைவர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
08 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவம்: முருகபூபதியின் புதிய நூல் 'நடந்தாய் வாழி களனி கங்கை'!   - கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் -
கிறிஸ்டி நல்லரெத்தினம்
07 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

புதுமைப்பித்தனின் 'ஆற்றங்கரை பிள்ளையார்' படித்திருக்கிறீர்களா? அவர் ஒரு புதிய எழுத்து வடிவை இக்கதையில் அறிமுகப்படுத்தினார். ஒரு ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் சிலை. அச்சிலையைச் சுற்றி ஊழிக்காலம் முதல் நிகழ்காலம் வரை நடைபெறும் மாற்றங்களை சிறு சம்பவக்குறியீடுகள் மூலம் கோர்த்து கதை புனைந்திருப்பார். இந்து சமயத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வழிபாட்டு முறை மாற்றங்களை நாசுக்காக சொல்வதே அவர் நோக்கம். புதுமைப்பித்தனின் இக் கதையை படிக்கும் போது ஆவணப்படங்களில் இன்று கொட்டிக்கிடக்கும் ' நேரம் தப்பிய படப்பிடிப்பு' (Time-lapse photography) பார்த்த அனுபவம் கிட்டும்.
ஒரு காட்சி, கால நீரோட்டத்தில், எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை இந்த தொடர்காட்சிகள் சித்திரிக்கும். புதுமைப்பித்தனின் இந்த யுக்தி அவரின் எழுத்துப்புரட்சியின் ஒரு பரிமாணம்.

இலங்கையின் மூத்த நதி எனும் பெருமையை சூடிக்கொண்ட களனி கங்கையைச் சுற்றி பல ஆண்டுகளாக ஏற்பட்ட சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்களை ஒரு தொடர் காட்சி ஆவணப்படம் போல் படைத்து எம் கைகளில் " நடந்தாய் வாழி களனிகங்கை" எனும் நூலாக தவழவிட்டிருக்கிறார் எழுத்தாளர் முருகபூபதி. புதுமைப்பித்தன் கண்ட ஆற்றங்கரை பிள்ளையாரை களனி கங்கையில் காண்கிறார் ஈழத்தின் இந்த மூத்த எழுத்தாளர்.

களனி கங்கை அமைதியாக ஓடிக்கொண்டிருக்க, அதன் இரு மருங்கிலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஒரு உலகம் எப்படி மாற்றங்களுக்கு தன்னை அர்ப்பணித்து புதிய மனிதர்களையும் அவர்கள் படைப்புகளையும் காலச்சக்கரத்துடன் இணைத்தது என்பதே இந்நூலின் கரு.

பதினேழு அத்தியாயங்களிலும் எழுபத்தியெட்டு பக்கங்களிலும் பொதிந்துள்ள தகவல்கள்தான் எத்தனை!? ஒரு கலைக்களஞ்சியத்தை படித்த களைப்பு. எம் மனக்கல்லறையில் ஆழத்தோண்டி நீளப்புதைத்துவிட்ட நினைவுக்கோர்வைகளை மீளத்தோண்டியெடுத்து எம் கண்முன்னே படைக்கிறார் முருகபூபதி.

தொப்பிக்குள் இருந்து முயலெடுக்கும் மந்திரவாதியைப் போல் காலம் மறந்த எத்தனையோ மானுடர்களை எமக்கு மீள அறிமுகப்படுத்தி வியக்கவைக்கிறார். இவை சாதாரண காட்டு முயல்கள் அல்ல. அவை இலங்கை சரித்திரத்தையே மாற்றிப் போட்ட மகுடமணிந்த முயல்கள். அதே தொப்பிக்குள் இருந்து சில அரசியல் குள்ள நரிகளையும் எடுத்துப்போடும்போதுதான் நாம் வாயைப்பிளக்கிறோம்!

மேலும் படிக்க ...

ஓராயம் அமைப்பு: அனுபவப் பகிர்வு க. பாலேந்திரா & ஆனந்தராணி பாலேந்திரா!

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
03 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களின் 'ஓராயம்'அமைப்பு இணைய வழி நடாத்திய நாடகக் கலைஞர்களான பாலேந்திரா & ஆனந்தராணியுடனான கலந்துரையாடல்:  https://www.youtube.com/watch?v=inrsetfdoig

மேலும் படிக்க ...

இனிய நந்தவனம் - கனடா சிறப்பிதழ் வெளியீடு! - மணிமாலா - கனடா -

விவரங்கள்
- மணிமாலா - கனடா -
நிகழ்வுகள்
02 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற வெள்ளிக்கிழமை 2021-10-01 ஆம் திகதி தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்ட இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் ரொறன்ரோவில் உள்ள பைரவி மியூசிக் அக்கடமி கலையகத்தில் மாலை 7:00 மணியளவில் மிகவும் சிறப்பாக வெளியிடப்பெற்றது. கோவிட் -19 கட்டுப்பாடுகளுக்கமைய இருக்கை வசதிகள் போடப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். இரண்டு தடுப்பூசியும் பெற்றுக் கொண்டவர்களே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை கனடா உதயன் ஆசிரியரும், இனிய நந்தவனம் ஆலோசனைக்குழு உறுப்பினருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமானது. விழாத் தலைவர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் உரையைத் தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம் பெற்றன. எழுத்தாளர் திரு. வாகீசன், கவிதா செந்தில், கணபதி ரவீந்திரன் ஆகியோரின் உரைகள் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து சிந்தனைப் பூக்கள் எஸ். பத்மநாதன் நூல் பற்றிய ஆய்வுரை ஒன்றை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து இனிய நந்தவனம் கனடா மலர் வெளியிடப் பெற்றது. முதற் பிரதியை எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களிடம் இருந்து வர்த்தகப் பிரமுகரும், கனடா தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவருமான சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை வர்த்தகப் பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கனடா சிறப்பிதழில் சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள், நூல் ஆய்வுரை, நேர்காணல், உரையாடல், சேவைப்பாராட்டு, கனடிய தமிழர் வர்த்தக சம்மேளத்தின் தலைமையகக் கட்டிடத் திறப்புவிழா செய்தி போன்ற பல ஆக்கங்களும், தகவல்களும் இடம் பெற்றிருந்தன. செப்ரெம்பர் இதழில் கனடிய கவிஞர்களான கவிஞர் வி. கந்தவனம், கவிஞர் சிவா சின்னத்தம்பி, விருத்தக்கவி வித்தகர் தேசபாரதி வே. இராசலிங்கம், அருட்கவி ஞானகணேசன், கவிஞர் அனலை ஆ. இராசேந்திரம், கவிஞர். க. குமரகுரு, கவிஞர் அகணி சுரேஸ், கவிஞர் வ. ந. கிரிதரன், மட்டுவில் ஞானகுமாரன், சுதர்சன் மற்றும் குரு அரவிந்தனின் சிறுவர் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. அக்ரோபர் மாத சேவைச் சிறப்பிதழிலும் கவிஞர் திருமதி பவானி தர்மகுலசிங்கம், கவிஞர் மா. சித்திவினாயகம், கவிஞர் சி. சண்முகராஜா ஆகிய கனடியக் கவிஞர்களின் கவிதைகள் இடம் பெற்றிருந்தன.

மேலும் படிக்க ...

தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (15 - 20)! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஆய்வு
30 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி.  இத்தொடரின் இறுதிப்பகுதியிது. இத்தொடர் பற்றிய உங்கள் கருத்துக்ளை எழுதுங்கள். அவை பதிவுகளில் வெளியாகும். - பதிவுகள்.காம் -


15
பாரதி, தன் தேடல்களுக்கூடு, தன் வாழ்க்கை தரிசன பரப்பெல்லையை, நாளும் நொடியும், விஸ்தரித்து செல்வதை, அவனது வாழ்வும் வரிகளும் எமக்கு எடுத்துக் காட்டுவதாய் உள்ளன. இருந்தும் மஹாகவி, குறித்த ஓர் சித்தாந்த சார்பினை தேடிச் செல்லாதது அவரது பலம் என்ற வகையில் போற்றப்படுவதைப் பின்வரும் வரிகள் எதிரொலிக்கின்றன:

“மஹாகவிக்கு இத்தகைய இடர்பாடுகள் இல்லை. அவர் (முருகையன் போல்) ஒரு தத்துவத்தை மட்டும் தமக்குரியதாக வரித்து கொண்டவருமல்லர். எல்லாவற்றுள் இருந்தும் ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொண்டு மானுடம் பாடியவர் அவர்…” ப-320
மறுபுறம், கைலாசபதியின் கூற்று வருமாறு:

“சித்தாந்த சார்பொன்றினை தேடிச்செல்லும் ஆத்ம துடிப்பின் எல்லையிலேயே அவரது (முருகையனது) கவிதைகளில் பெரும்பாலானவை பிறக்கின்றன…”து குறித்து கருத்துகூறும் பேராசிரியர் பிரசாந்தன், “இத்தகைய ஒரு சித்தாந்த சார்பு, படைப்பாளியின் பிற சிறகுகளை வெட்டி விடக்கூடிய தன்மையுடையது… தத்துவ சார்பு (என்பது), அச்சித்தாந்த சார்பு குழுமத்துக்குள் முதன்மை வழங்குமே தவிர முழு இலக்கியப் பரப்புள்ளும் முதன்மையை வழங்காது. பதிலாக, கேள்விக்குள்ளாகும்…” என்பார்.

மேலும் படிக்க ...

பாரதி நினைவு நூற்றாண்டு இணையவழி தொடர் சொற்பொழிவு - 10!

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
29 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

https://meet.google.com/kyq-obwu-bdc

தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (11 - 14)! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஆய்வு
29 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


11

“இன்னவைதாம் கவியெழுத” ஏற்ற பொருள் என்று எண்ணாமல் இன்னல், ஏழ்மை, உயர்வு, என்பவற்றை பாடுங்கள் என்று மஹாகவி ஆரம்ப காலத்திலேயே விடுத்த அறிவிப்பு, கூடவே, இதற்கு முன்னதாக, “கேடுற்றவரிடையே கெட்டழியாது என்னிடமே எஞ்சி கிடக்கின்ற இன்தமிழ், இவ் என்பாக்கள், என்றைக்கொரு நாளோ எத்திசையும் வெல்லும்” என்று அறிவித்துள்ளது, எல்லாமே, கூறுமாப்போல், இவரது வாழ்க்கை தரிசனம் என்பது பாரதியை விஞ்சிய ஆழத்தைக் கொண்டது தானோ என்ற கேள்வியை எழுப்புவதாய் உள்ளது.

மஹாகவியின் வாழ்க்கை தரிசனம் பொறுத்த பேராசிரியர் நுஃமான் அவர்களின் கூற்றினைமீள ஒருமுறை நினைவு கூறலாம்:

“மஹாகவியின் படைப்பகளினூடு பிரதியாக்கப்படும் உள்ளடக்கத்தை மூன்று நிலைப்படுத்தி நோக்கலாம்,

1. ஆழமான மனிதாபிமானம்.
2. வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ வேண்டும் என்ற முனைப்பும்.
3. ஏற்றத்தாழ்வின் மீதும், போலி ஆசாரங்களின் மீதுமான அவரது எதிர்ப்பு. (ப-20)

மேலும் கூறுவார்:

“இருந்தும் இயக்க பூர்வமான நடவடிக்கைகளில் இருந்து அவர் தனித்தே நின்றார்…” ப - 202

இதே போன்று நா.சுப்ரமணியன் அவர்களும் பின்வருமாறு கூறுவார்:

“…மஹாகவி கோட்பாடு ரீதியான பொதுவுடைமை சிந்தனைக்குள் நிற்காமல் தனக்கென தனித்த சமூகப் பார்வையை வளர்த்து கொண்டார்” ப-85

எழுத்துக்களில், சமத்துவத்தையும், மானுடத்தையும் உள்ளடக்கல் என்பது, ஜெயமோகன் முதல் நூறு, ஆயிரக்கணக்கான எழுத்துக்களில், பொதுவில் இலகுவாயும் சகஜமாயும் காணக்கூடிய ஒன்றுதான் என்றாகி விட்டது.

மேலும் படிக்க ...

தமிழ் மொழிச் செயற்பாட்டகம்: என்.கே.ரகுநாதம்(ன்) - தகவல்: கற்சுறா-

விவரங்கள்
- தகவல்: கற்சுறா -
நிகழ்வுகள்
29 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்ணாமலை கனடா: சங்க இலக்கியம் - மீள் வாசிப்பு கருத்தரங்குத் தொடர் -5

விவரங்கள்
- தகவல்: முனைவர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
28 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 இத்தகவல் இறுதி நேரத்தில் எமக்குக் கிடைக்கப்பெற்றதால் உரிய நேரத்தில் வெளியாகவில்லை. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். நண்பர்களே! உங்கள் அறிவித்தல்களைக் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - பதிவுகள்.காம் -


விதைக்குழுமத்தின் ஏழாவது இணையவழி நிகழ்வு: அரசியல் விஞ்ஞானம்! - விதைக்குழுமம் -

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
28 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இத்தகவல்  இறுதி நேரத்தில் எமக்குக் கிடைக்கப்பெற்றதால் உரிய நேரத்தில் வெளியாகவில்லை. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். நண்பர்களே! உங்கள் அறிவித்தல்களைக் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - பதிவுகள்.காம் -


விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், எமது முன்னைய மடலில் தெரிவித்திருந்ததுபோல செப்ரம்பர் 2021 இல் விதை குழுமம் ஒருங்கிணைக்கும் இரண்டாவது இணையவழி நிகழ்வாக அரசியலும் அரசியல் விஞ்ஞானமும் என்கிற தலைப்பில் அறிதலும் பகிர்தலும் தொடரின் 7வது நிகழ்வு இடம்பெறும்.

அரசியலும் அரசியல் விஞ்ஞானமும்

‘அரசியலும் அரசியல் விஞ்ஞானமும் சமகால அறிமுகம்’ என்னும் நூல் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட POLITICS AND POLITICAL SCIENCE – A CONTEMPORARY INTRODUCTION என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்பாகும். மாலினி பாலமயூரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் அமைந்த இந்நூல் இலங்கை சமூக விஞ்ஞானிகள் சங்கத்தினால் (SSA) வெளியிடப்பட்டுள்ளது (2018). க.பொ.த (உயர்தரம்) வகுப்பில் அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழகங்களில் முதற்கலைத் தேர்வு (GAQ) வகுப்பில் கற்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டியாக அமையும் வகையில் எழுதப்பட்ட இந் நூல் அரசியல் விஞ்ஞானக் கற்கைத்துறை பற்றிய விரிந்தவொரு பார்வையை வழங்குகிறது.

அரசியல் பற்றிய கற்கை அணுகுமுறைகள் பல உள்ளன. அவற்றுள் அரசியல் தத்துவ அணுகுமுறை முதல் பின்நவீனத்துவ அணுகுமுறை வரையான எட்டு அணுகுமுறைகளைத் தேர்ந்து அவை பற்றிய விரிவான விளக்கங்களை நூலாசிரியர் தருகின்றார். ஒவ்வொரு அணுகுமுறை பற்றியும் விளக்கும் பொழுது, அவை ஒவ்வொன்றினதும்

மேலும் படிக்க ...

தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (8 -10)! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஆய்வு
28 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


8
மஹாகவியின் கவிதை வெளிபாட்டில் காணக்கிட்டுவதாய் கூறப்படும் புதிய முறைகளும், சொல்வார்ப்புகளும், உவமானங்களும், உருவகங்களும் முற்றாய் புதியன எனவும் அதற்குரிய காரணம் அவரது கவிதை உள்ளமானது ‘கட்டற்ற ஓர் தேடலை’ கொண்டிருந்ததே என்பார் சண்முகம் சிவலிங்கம்.ப-49

‘கட்டற்ற தேடல்’ என்ற இச்சொற்பிரயோகம் சற்றே ஆபத்தானது. அல்லது அளந்து பிரயோகிக்கப்பட வேண்டியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

சண்முகம் சிவலிங்கம் வரையறை செய்தாற்போலவே, மஹாகவி யாழ்பாணத்து கிராமமொன்றின் சாதாரண மத்திய தர வர்க்கத்தில் பிறந்து, பெரும்பகுதி காலமும் கொழும்பில் உத்தியோகம் பார்த்து,ஈற்றில் அரசாங்க நிர்வாக சேவையாளராகவும் தேறியுள்ளார். சுருக்கமாகக் கூறினால், ‘எமக்குத் தொழில் கவிதை’ என்பது போல் இல்லாமல், இவர்க்கு தொழில் அரச உத்தியோகம், நிர்வாக சேவை என்பன இருந்துள்ளன என்பது தெளிவு. இருந்தும், கூடவே, இதனுடன் சேர்ந்தாற் போல் கலை இலக்கிய ஆக்கங்களிலும் முழுமூச்சுடன் ஈடுபடுபட்டவர் என்றாகின்றது.

நிர்வாக பரீட்சையினை ஒருவர் தன் வாழ்வில் எழுதக் கூடாது என்பதுமில்லை, எழுதுவதால் குறைவடைய போகின்றார் என்பதும் இல்லை. இருந்தும், பிரச்சினை தருவது ‘கட்டற்ற தேடல்’ என்ற சொற் பிரயோகமே. வேறுவார்த்தையில் கூறுவதானால், இப்பின்னணியில் நோக்குமிடத்து, மஹாகவியின் ‘கட்டற்ற தேடல்’ என்பது தன்மீது தானே விதித்துக்கொண்ட அநேக எல்லைப்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கும் ஒரு வகையான கட்டற்ற தேடல்தான் என்பது தெளிவு.

மேலும் படிக்க ...

தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்! - (மாலினி அரவிந்தன் – பீல்பிரதேச கல்விச்சபை, கனடா) -

விவரங்கள்
- (மாலினி அரவிந்தன் – பீல்பிரதேச கல்விச்சபை, கனடா) -
இலக்கியம்
28 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தமிழ்நாட்டில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் நடத்திய 11 ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு, ‘தற்கால இலக்கியங்களில் காலத்தின் சுவடுகள்’ என்ற பன்னாட்டு ஆய்வு நூல் - 2020 இல் இடம் பெற்ற கட்டுரை. -


சிறுகதை என்பதை மையக்கருவினைக் கொண்ட, திருப்பங்கள் உடைய அனுபவங்களை, நல்ல நடையில் சுருக்கமாக சொல்லும் உரைநடை இலக்கிய புனைவென்று எடுத்துக் கொள்ளலாம். வாசகரின் மனதில் சிறிய தாக்கத்தையாவது ஏற்படுத்தினால் அது நல்ல சிறுகதைக்கு அடையாளமாகும். புதினம் என்ற இலக்கிய வடிவத்தை எடுத்துப் பார்த்தால் உரைநடையில் அமைந்த நீண்டபுனைகதை என்று சொல்லலாம். அனேகமான புனைவுகளில் தளத்தையும், காலத்தையும் ஓரளவு அறிந்து கொள்ள முடியும்.

முன்பெல்லாம் வெளிநாட்டுக் கதைகளைத் தமிழில் மொழி மாற்றம் செய்தால்தான் அனேகமான வாசகர்களால் வாசிக்க முடியும். ஆனால் தற்போது அந்த நிலை மாறி, அதுபோன்ற தரமான கதைகளைத் தங்கள் அனுபவம் மூலம் தமிழில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களே தருவதற்குத் தொடங்கி விட்டார்கள். இதனால் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்னும் இலக்கியத்தை தமிழ் உலகுக்குத் தந்தார்கள். தற்கால இலக்கியத்தில் காலத்தின் சுவடுகளை எடுத்துக் காட்டுவதற்காக, தீவிரவாசகி என்ற வகையில் இங்கே எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள், புதினங்களில் இருந்து காலத்தின் சுவடுகளைக் காட்டும் சில சிறுகதைகளையும், புதினங்களையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

தமிழ் இலக்கிய உலகிற்கு யுத்த காலச் சூழலில் எழுந்த கதைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குரு அரவிந்தனின் புனைவுகள் பல பிரபல ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்தியா நாட்டுக்குத் தெற்கே அமைந்துள்ள இலங்கைத் தீவில் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் ஏற்பட்ட இனவொழிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக ஈழத்தமிழர்கள் பலர் தங்கள் பாரம்பரிய மண்ணான வடக்குக், கிழக்குப் பிரதேசங்களை விட்டுப் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். அப்படிப் புலம் பெயர்தவர்களில் எழுத்தாளர் குரு அரவிந்தனும் ஒருவராவார். போர்ச் சூழலில் அவர் தாய் மண்ணில் வாழ்ந்த காலத்தையும், கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்த பின், 2009 ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் ஓய்ந்தபின் நடந்த சில சம்பவங்களையும் தனது அனுபவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு புனைவுகள் மூலம் பதிவு செய்திருக்கின்றார். தமிழகத்தில் இருந்து வெளிவரும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகும் விகடன், கல்கி, குமுதம், கலைமகள், கணையாழி, இனிய நந்தவனம், யுகமாயினி மற்றும் இலங்கை, கனடா போன்ற நாடுகளில் இருந்து வெளிவரும் இதழ்களில் வெளிவந்த இவரது ஆக்கங்கள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைத் தனக்கென உருவாக்கிய இவரது சிறுகதைகள், நாவல்கள் சிலவற்றையும் எடுத்துப் பார்ப்போம்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: இசைக்கலைமணி வர்ண இராமேஸ்வரன்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
28 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இசைக்கலைஞர் இனிய நண்பர் வர்ண இராமேஸ்வரன் அவர்களின் மறைவு (செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி 2021) எமக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. எம்முடன் நன்கு பழகிய சில நண்பர்களை, உறவுகளை கொரோனா பேரிடர் காலத்தில் காலன் எம்மிடம் இருந்து திடீரெனப் பிரித்துவிட்டது மட்டுமல்ல, கடந்த சில காலமாக, உறவினர்களின், நண்பர்களின் இறுதிச் சடங்குகளில்கூட பங்குபற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

மகாஜனக்கல்லூரி பழைய மாணவரான, இசைக் குடும்பத்தில் பிறந்த இவரை எங்கள் பழைய மாணவர் சங்க நிகழ்ச்சிகளில் அடிகடி சந்தித்திருக்கின்றேன். இதைவிடக் கலைவிழாக்களிலும், பல அரகேற்ற நிகழ்ச்சிகளிலும் பலமுறை சந்தித்தித்து உரையாடியிருக்கின்றேன். ஆரம்ப கல்வியை ஞானோதய வித்தியாசாலையிலும், உயர் கல்வியை மகாஜனக் கல்லூரியிலும் கற்றவர். மிகவும் அன்பாகப் பழக்ககூடிய நல்ல நண்பர். கனடாவில் உள்ள வர்ணம் இசைக்கல்லூரி அதிபரான இவர், படித்த கல்லூரிக்குத் தன்னால் இயன்ற அளவு உதவ வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தந்தைதான் அளவெட்டியைச் சேர்ந்த கலாபூசணம் வர்ணகுலசிங்கம் அவர்கள். தாயாரின் பெயர் மகேஸ்வரி. இராமேஸ்வரன் பண்ணிசையில் மட்டுமல்ல, மிருதங்கம், ஆர்மோனியம் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதிலும் கைதேர்ந்தவர். இவர் யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் இராமநாதன் நுண்கலைப்பிரிவில் இசைபயின்று ‘இசைக்கலைமணி’ என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து விரிவுரையாளராகவும் அங்கு பணியாற்றினார்.

தாயக நினைவுகளை மீட்கும் ‘தாயகக் கனவுடன் சாவினைத்தழுவிய சந்தனப் பேழைகளே, இங்கே கூவிடும் எங்கள் குரல் மொழி கேட்கிறதா?’ போன்ற பல பாடல்களை இவர் பாடியதன் மூலம் தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்தபின் இங்கே ஒரு இசைக்கல்லூரியை ஆரம்பித்து, அதன் மூலம் தமிழ் இசைத்துறையில் பல இளம் தலைமுறையினரை உருவாக்கி இருந்தார்.

மேலும் படிக்க ...

ஜீவநதி வெளியீடாக வெளிவந்துவிட்டது வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' (சிறுகதைத்தொகுதி) !

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
27 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜீவநதி பதிப்பகத்தின் 194ஆவது வெளியீடாக எனது சிறுகதைத்தொகுப்பான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' வெளியாகியுள்ளது. இது பற்றிய ஜீவநதி பதிப்பகத்தின் அறிவிப்பை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். ஜீவநதி பதிப்பகம் முன்னர் அறிவித்திருந்தபடி நூல் வெளியாகியுள்ளது. அதற்காகப் பதிப்பக உரிமையாளர் பரணீதரனுக்கும், நூலைக் குறித்த தினத்தில் வெளியிட உதவிய அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நன்றி.

மேலும் படிக்க ...

'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) என்னும் கட்டுரையினை 'சிலோன் டுடே' (Cedylon Today) பத்திரிகையில் அமா ஹெச். வன்னியராச்சி ( Ama H. Vanniarachchy) எழுதியிருக்க்கின்றார். நல்லதொரு கட்டுரை. தற்போதுள்ள சூழலில் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.

இக்கட்டுரை சிங்களக் கவிஞை சந்திரசிறி சுதுசிங்கவின் (Sandarasee Sudusinghe ) புதிதாக வெளியான கவிதைத்தொகுதியான 'எரிந்த சிறகுகள்' ('ஹினி வான்டு பியாபத்' - Gini Wandu Piyapath) பற்றியது.

இக்கட்டுரை இக்கவிதைத் தொகுதியை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.

இக்கவிதைகள் இலங்கையில் இன்னும் நீறு பூத்த நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் இனப்பிரச்சினை, பதவிக்காக இனவாதத்தைத் தேசபக்தி என்னும் போர்வையில் பேசும் அரசியல்வாதிகள், யாழ் நூலக எரிப்பு , தீண்டாமை மற்றும் வரதட்சணைச் சமூகக்கொடுமைகள் போன்றவற்றை மிகவும் கடுமையாக விமர்சிக்கின்றது என்பதை இக்கட்டுரைவாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.

பதவிக்காக தேசபக்தி என்னும் போர்வையில் இனவாதம் பேசும் ஆட்சிக்கட்டிலிருக்கும் அரசியல்வாதிகளை 'ஆளும் நரிகள்' என்று கவிஞை வர்ணிக்கின்றார் என்பதையும், அந்நரிகளே சொர்க்கத்தீவின் சீரழிவுக்குக் காரணமென மேலும் அவர் குற்றஞ் சாட்டுகின்றார் என்பதையும் மேற்படி கட்டுரை வெளிப்படுத்துகின்றது.

மேலும் படிக்க ...

மெய்நிகர் அரங்கு: மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தமிழ்!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அஞ்சலிக்குறிப்பு: பாரதி சொற்பயிற்சி மன்றம் நடத்தியவர் பாரதி நினைவு நூற்றாண்டில் மறைவு ! கொழும்பு சிலம்புச்செல்வர் ம. பொ. சி. மன்றத்தின் நிறுவனர் த. மணி விடைபெற்றார். - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஏற்கனவே “ சமகாலம் அஞ்சலிக்குறிப்புகள் எழுதும் காலம் “ என்று ஒரு பதிவில் எழுதியிருந்தேன். இந்தக்கொரோனோ காலத்தில் இந்தத் துயர்பகிரும் காலமும் இணைந்துவருகிறது. கொழும்பில் ஆறு தசாப்தங்களுக்கு முன்பே பாரதி சொற்பயிற்சி மன்றம், மற்றும் இலங்கை ம. பொ. சி. மன்றம் முதலானவற்றை உருவாக்கி தமிழ்ப்பணியாற்றிவந்த தமிழ் மொழி, கலை இலக்கிய உணர்வாளர் , சொற்பொழிவாளர் த. மணி அவர்கள் அண்மையில் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தபோது, அவர் பற்றிய பல பசுமையான நினைவுகள் மனதில் சஞ்சரிக்கத் தொடங்கின.

மேலும் படிக்க ...

தொடர்கதை: ஒரு கல் - கரைந்தபோது (7) - ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை வீரவநல்லூர் -

விவரங்கள்
- ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை வீரவநல்லூர் -
நாவல்
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 அத்தியாயம் 7

பொழுது விடிந்தபோது, மனதுக்குள் இனம்புரியாத பரபரப்பு. நேற்று முழுவதும், வாற்சப் வீடியோ காலில் பார்த்துப்,பேசிப்,பழகிய போதிலும் இன்று நேரிலே சந்திக்கப்போகின்ற அனுபவம், புதிதானதுதானே.

ஏற்கனவே பேசிவைத்தபடி, அம்மாவும் நானும் அக்காளிடம் அதிகாலையிலேயே விவரத்தைக் கூறியபோது, அக்கா உண்மையிலேயே அதிர்ந்துபோனதை அவளின் முகத்திலே கண்டுகொண்டேன்.

ஆனாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் போலி மகிழ்ச்சியை வைத்துக்கொண்டு, புன்னகைத்தாள்.

அந்தப் புன்னகைக்குள்ளே பொதிந்து கிடக்கும் வேக்காடு, “இதை எப்படியாவது கெடுத்துவிட வேண்டுமே….” என்றே கொதிக்கும் என்பது எனக்குத் தெரியும். அத்துடன் அந்தக் கொதிப்பு எந்தக் கணமும் சீறி வெடிக்கலாம் என்னும் எதிபார்ப்பு எனக்குள் கலக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.

“சந்தோசமான சமாச்சாரந்தான்…. ஆனா, இது எப்பிடி ஏற்பாடாயிச்சு….? நானும் சம்மந்தப் படல்ல….. என் வீட்டுக்காரரும் பஜார் பக்கம் போறதே அத்தி பூத்த மாதிரி…. ஏம்மா உனக்கு கோயிலையும் வீட்டையும் விட்டால் யாரையுமே தெரியாதே…. அப்புறம் எப்பிடி இது சாத்தியப் பட்டிச்சு…..”

இந்த ஏற்பாட்டுக்கான அடிப்படைச் சூத்ரதாரி யார் என்பதைத் தெரிந்து, அவரைச் சுட்டெரித்துவிடவேண்டும் என்று உள்ளுக்குள்ளே அவள் துடிப்பது எனக்குப் புரியாமல் இல்லை.

அம்மா பதில் சொன்னாங்க.

“நீ சொல்றது நெசந்தாம்மா….தக்க சமயத்தில ஒதவிபண்ண யாருமே இல்லைண்ணாலும், தெய்வத்தோட ஒதவியும், உங்கப்பா ஆத்மாவோட ஆசீர்வாதமும் இருக்கிறப்போ, அந்த ரெண்டுமே ஒரு கலியாணத் தரகரை பெரிய கோயில்ல வெச்சே அறிமுகப்படுத்தி, என்னய பேசவெச்சு சாத்தியப் படுத்திச்சுங்க….”

“சரிதாம்மா…. மாப்பிளை என்னவேலை…. அவுங்க குடும்பம் எப்பிடி…..?”

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு (2009 -6) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


2009 - 6

விடிந்திருந்த பொழுதும் விடியாததாக, மாசி மாதத்தின் ஊசிப் பனி குத்துகிற ஒரு அதிகாலைவேளையில் படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வேலைகளில் மும்முரமாயிருந்த செம்பவளம் உணர்ந்துகொண்டிருந்தாள். கிழக்குத் திசைக் களர் நிலத்திலிருந்து சூரியன் பனித் திரையைக் கிழித்து பிரகாசமாய்க் காலித்துக்கொண்டிருந்தும் அந்தளவான ஒரு மனமூட்டம் அவளிலிருந்தது. ஏனென்று அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. முன்னனுபவமற்ற ஒரு மந்த உணர்வு.

வித்தியா எழுந்து குளிக்க கிணற்றடி சென்றபோது கூடத்துள் அப்பா இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டாள். மீண்டும் மஹாபாரதத்துள் அப்பாவின் வாசிப்பு சென்றிருந்தது. இரவு வாசித்த தடித்த அந்தப் புத்தகம் மேசையில் கிடந்தது. வாசித்துவிட்டு எத்தனை மணிக்கு தூங்கினாரோ? அவள் குளித்து வந்து அறைக்குள் வேலைக்கு வெளிக்கிட்டுக்கொண்டு இருந்தாள்.

அவளிடத்திலும் கலகலப்பான மனநிலையில்லை. வீட்டில் அம்மா கலகலப்பாயில்லாவிட்டால் எல்லாவற்றிலுமே அதன் தாக்கம் தெரியும். ஆனால் அதுவேதான் அப்போது அவளில் பிரதிபலித்துக்கொண்டு இருந்ததெனச் சொல்லமுடியவில்லை. உலகளாவிய தமிழரிடத்தில் அப்போது கொதித்துப் பொங்கிக்கொண்டிருந்த ஏக்கத்தின் கையறுநிலைபோலும் அது இருக்கவில்லை. எழுபத்தைந்து சதுர கிமீக்குள் அடங்கிவிட்ட போரின் இறுதி நோக்கிய நகர்வு எழுதக்கூடிய தோல்வியின் நடுக்கமும் இல்லை அது. அவையல்லாத இன்னும் ஏதோவொன்று.

வித்தியா சமையலறை போய் கருப்பட்டித் தேநீர் குடித்தாள். காலைத் தேநீர் எப்பொழுதும் அங்கே அப்பாவுக்காக கருப்பட்டியோடுதான். செம்பவளம் அவசரமாய் தேநீரோடு கணவரை அணுகினாள். அன்றைக்காவது தெண்டித்து அவரை ஆஸ்பத்திரி செல்லவைத்துவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டாள். கடந்த ஒரு வாரமாக கையுழையுதென்று அமுக்கி அமுக்கிப் பிடித்துக்கொண்டு திரிந்தவர், இரண்டு மூன்று நாட்களாக நெஞ்சைத் தடவிக்கொண்டு அல்லல்படுகிறார். ‘நெஞ்சுக்க என்ன செய்யிது?’ எனக் கேட்டு செம்பவளம் முகத்தில் ஏக்கம் விரிக்க, ‘அதொண்டுமில்லை. வாய்வாயிருக்கும். இந்தளவு நாளும் கையில நிண்டது இப்ப நெஞ்சுக்குள்ள இறங்கியிட்டுதுபோல’ என்றிருந்தார். ‘ரா ராவாய் அவளையே யோசிச்சுக்கொண்டு கிடந்தா? சண்டை முடிய நிஷா வருவாள்தான. நாங்களேன் அதையிதை யோசிச்சு அந்தரப்படவேணும்?’ என்று நெஞ்சை அவர் அழுத்தித் தேய்க்கிறவேளையிலெல்லாம் அவளும் சொல்லிக்கொண்டிருந்தாள். ‘அது வாய்வா இருந்தா இருக்கட்டும், எதுக்கும் நீங்கள் நாளைக்கு ஆஸ்பத்திரியில ஒருக்கா காட்டியிட்டு வந்திடுங்கோ’ என்று முதல்நாள் படுக்கப் போகிறபோது சொல்லியிருந்தாள். ‘ஓ’மென்று அவரும் தலையசைத்தார். ‘வித்யா வெளிக்கிடேக்க நீங்களும் கூடிக்கொண்டு போங்கோ’ என படுத்த பின் அவள் சொன்னதற்கும் ‘சரி’ என்றிருந்தார். ஆனால் இன்னும் எழும்பவில்லை. அவள் தேநீரை மேசையில் வைத்தபடி, “வித்யா வெளிக்கிட்டிட்டாள், எழும்புங்கோ’ என்றாள்.

மேலும் படிக்க ...

தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (4-7)! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஆய்வு
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


4
இலக்கிய வரலாற்றில் யதார்த்த நெறியின் முக்கியத்துவம் குறித்து ஏங்கெல்சாலும், கைலாசபதியாலும், கார்க்கியாலும், லெனினாலும் அவ்வவ் காலப்பகுதிகளில் தொட்டுக்காட்டப்பட்டே வந்துள்ளது. கற்பனாலங்காரத்திற்கும் (Romanticism),  இயற்பண்பு வாதத்திற்கும் (Naturalism) யதார்த்த வாதத்திற்கும் (Realism) இடையே உள்ள வித்தியாச வேறுபாடுகள் மேற்படி அறிஞர்களால் தெளிவுற படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

டால்ஸ்டாய் பொறுத்த லெனினின் கூற்று வருமாறு:

“மொத்தமாகவும் சில்லறையாகவும் காணக்கிட்டும் சகல முகத்திரைகளையும் பிய்த்தெறியும் நிதானமிக்க யதார்த்த வாதம் அவரது…”
“டால்ஸ்டாயின் எழுத்துக்களைக் கற்பதற்க்கூடு, ரஷ்ய தொழிலாளி வர்க்கமானது, தன் எதிரிகள் பொறுத்த அறிவை மேலும் அதிகமாகக் கூட்டிக் கொள்ளும்…” ப-31 63

இதனை கார்க்கி பின்வருமாறு தெளிவுப்படுத்துவார்:

“எழுத்தாளன் என்பவன் அனைத்தையுமே அறிந்து வைத்திருக்கும் கடமை பூண்டுள்ளான் - வாழ்க்கை எனும் பெருநதியின் பிரதான சுழிப்புகளையும், கூடவே, அதன் அற்ப ஓட்டங்களையும், அன்றாட வாழ்வின் அனைத்து முரண்களையும் அதன் வீறுகளையும், எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும், செழுமைகளையும் அதன் கீழ்மைகளையும், அதன் உண்மைகளையும் பொய்மைகளையும் அவன் அறிந்தே வைத்திருக்க வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளவனாகின்றான்…” 

“கூடவே, குறித்த ஓர் நெறிமுறையானது, அஃது அவனது தனிப்பட்ட பார்வையில் எவ்வளவுதான் அற்பமாயும் முக்கியத்துவம் இழந்தும் போயிருப்பினும், அது அழிபடும் ஒரு பழைய உலகத்து சிராய்பு துண்டங்களா (Fragments) அல்லது ஒரு புதிய உலகை நிர்மாணிக்க வந்திருக்கும் புதிய முளைகளின் கூறுகளா என்பதனையும் சேர்த்தே அவன் தெரிந்து வைத்திருக்கும் கடமை பூண்டுள்ளான்” 

மேலும் படிக்க ...

இசைக்கலைஞர் வர்ணவர்ணகுலசிங்கம் ராமேஸ்வரன் மறைவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
Administrator
கலை
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வர்ணம் இசைக்கல்லூரியின் இயக்குநரும் இசைக்கலைஞருமான வர்ணகுலசிங்கம் ராமேஸ்வரன் கோவிட் காரணமாக மறைந்த செய்தியினை முகநூல் மூலம் அறிந்தேன். துயருற்றேன். இவரை நான் சந்தித்ததில்லை. ஆனால் இவரது இசை நிகழ்ச்சிகளை யு டியூப் காணொளிகள் மூலம் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன். தனது இசைக்கல்லூரி மூலம் இளங்கலைஞர்களை உருவாக்கி வந்துள்ளதை அறிந்திருக்கின்றேன். சந்திக்காமலேயே எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவரது தோற்றம் ஊடகங்கள் வாயிலாக நினைவில் பதிந்துள்ளது. இவர் என் முகநூல் நண்பர்களிலொருவர்.

மேலும் படிக்க ...

சிறுவர் மனங்களை வென்ற செந்தமிழறிஞர் த. துரைசிங்கம்..! - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -

விவரங்கள்
- பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -
கவிதை
24 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

வண்ண மொழி பேசும் வாடாமலர்கள்
சிங்காரப் பாட்டிசைக்கும் சுந்தர மழலைகள்
சிரித்தே மகிழ்ந்திட சின்னச்சின்னப் பாடல்கள்
சித்திரமாய்ப் புனைந் தெடுத்த அழகுதமிழ்க்
கவிஞனே உன் பணிக்கு எம்வணக்கம்..!

துள்ளி வரும் புள்ளி மானை
தோகை விரிக்கும் கோல மயிலை
இன்னிசை பாடும் இளங் குயிலை
எழிலாய் மிதந்திடும் உதய நிலவை
மெல்லத் தழுவிடும் இளந் தென்றலை
பாடும் கவிஞர் கூட்டத்தின் நடுவே
பாடிடத் தேடினாய் குழந்தை மனங்களை..
ஞானக்கவியே.. உன் பணிக்கு எம்வணக்கம்..!

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (1 - 3)! - ஜோதிகுமார் -
  2. ME TOO இயக்கச் செயற்பாட்டாளர்களுக்கும் சக படைப்பாளிகளுக்கும்…. - லதா ராமகிருஷ்ணன் -
  3. கனடா தேர்தல் முடிவுகள் - 2021: லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. - குரு அரவிந்தன் -
  4. ஆய்வு: பாரதியார் கவிதைகளில் மனித உயிர் நேயம்! - - முனைவர் பெ.கி. கோவிந்தராஜ் -
  5. முனைவர் தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் அனுபவமும்' - வ.ந.கிரிதரன் -
  6. வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' - வ.ந.கி -
  7. பேராசிரியர் அ.ராமசாமியின் புலம்பெயர் தமிழர்தம் எழுத்துகள் பற்றிய கூற்றுகள் பற்றிச் சில கருத்துகள்! - வ.ந.கிரிதரன் -
  8. என்னுரை! - வ.ந.கிரிதரன் -
  9. “ஒரு நாள் அவர்கள் எங்களைப் போல வேதங்ளை ஆக்கிக்கொள்வார்கள்” - சமூக இலக்கியப் போராளி நந்தினி சேவியர்! - செல்லத்துரை சுதர்சன் -
  10. பைந்தமிழ்ச்சாரல் வழங்கும் விமர்சன அரங்கு! - தகவல்: முருகபூபதி -
  11. அஞ்சலி: எழுத்தாளர் நந்தினி சேவியர் மறைவு! - வ.ந.கிரிதரன் -
  12. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: கண்கவர் கலக்சிகள் - பேசுபவர்: திரு.சிவ.ஞானநாயகன்
  13. 'ஜீவநதி' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ளது வ.ந.கிரிதரனின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் சிறுகதைத் தொகுப்பு!
  14. மட்டக்களப்பு 'கதிரவன்' வீதி நாடக அனுபவப் பகிர்வு! - தகவல்: எஸ்.ரி.குமரன் -
பக்கம் 99 / 115
  • முதல்
  • முந்தைய
  • 94
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • அடுத்த
  • கடைசி