பதிவுகள் முகப்பு

சிறுகதை: புண்ணியத்தை தேடி .... - இணுவை சக்திதாசன் டென்மார்க் -

விவரங்கள்
- இணுவை சக்திதாசன் டென்மார்க் -
சிறுகதை
09 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டெலிபோன்மணி விடாமல் அடித்துக்கொண்டு இருந்தது.  நல்ல தூக்கக் கலகத்தில் இருந்த சகுந்தலா, திடுக்கிட்டு எழுந்து டெலிபோனை தூக்கினாள் . அது யாழ்ப்பாணத்தில் இருந்து வாசுகி " நான்தான் அக்கா" என்றாள் .

"என்ன இந்த நேரத்தில என்று"  மணிக்கூட்டை பார்க்காமலே சகுந்தலா கேட்க , " என்னக்கா  !   இஞ்ச  இப்ப ஒன்பது மணியாப் போச்சுது  உங்க  இன்னமும்  விடியேல்லையோ ? "என்றாள்.

அப்பதான்  சகுந்தலா 'லைற்'றை போட்டு நேரத்தைப் பார்த்தாள்  அதிகாலை ஐந்து மணியை அது காட்டியது .

டென்மார்க்கில் கோடை காலங்களில்  இரவெல்லாம் பகலாகவும் பகலெல்லாம் இரவு போலவும் இருக்கும். கோடை காலங்களில் இரவு ஒன்பது பத்து மணிக்கே சூரியன் வானில்  தெரியும். பனி காலங்களில்  விடிந்தாலும்  இராவகத் தான்  இருக்கும் .  

அப்படி ஒரு பனிக்காலம் தான் டென்மாக்கில் இப்போ ....  

வேலை வெட்டிக்கு போகாததினால் இரவிரவா  நாடகத் தொடரும் ...  பேஸ்புக்கு மாக ...  மேஞ்சு போட்டு  படுக்க சமமாகிப்  போகும்.  பேந்து  விடிய விடிய படுத்துக் கிடப்பாள் சகுந்தலா . இப்ப அவள்  வேலை இல்லாமல் வீட்டோடு தான் . டென்மாக்கில் வீட்டோடு இருந்தாலும் அரசாங்கம் பணம் கொடுக்கும்.  அவள் வந்து கொஞ்சக்காலமாக  வேலை செய்தவள். செய்து கொண்டிருக்கேக்க நாரியை பிடிச்சுப் போட்டுது என்று,  ஒரு நாள் வேலைத் தளத்தில  விழுந்தவள்  தான்  எழும்பவேயில்லை. மனைவியை அம்புலன்சில ...   ஹோல்பேக் வைத்தியசாலைக்கு கொண்டுபோவதாக அறிவித்தல் வர துடிச்சுப் போன கணவன் சிவசாமி அலறியடித்துக் கொண்டு வைத்தியசாலைக்கு போனபோது, அரை மயக்கமாக கிடந்த  சகுந்தலா   கணவனின் குரல் கேட்டவுடன்  கடைக் கண்ணை திறந்து  கண்ணடித்தாள்.  அப்போதான் சிவசாமிக்கு நிம்மதியாக இருந்தது .

மேலும் படிக்க ...

ஆய்வு: பழங்குடி மொழிகளில் பால்பகுப்பு! - முனைவர் செ. துரைமுருகன் -

விவரங்கள்
- முனைவர் செ. துரைமுருகன் , தமிழ் உதவிப் பேராசிரியர் , குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி . கொயம்புத்தூர் – 49 , தமிழ்நாடு. -
ஆய்வு
09 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?பால் எனும் சொல் தமிழில் பிரிவு எனப் பொருள்படும். இதனை ஆங்கிலத்தில் Gender என்பர். இத்தகைய பால் எனும் அடிப்படையில் பிரிவாகக் கொண்டு ஆண்பால், பெண்பால் எனப் பகுப்பர். இத்தகைய பாகுபாடானது உலக மொழிகள் பலவற்றிலும் உள்ளது. ஆனால், உலக மொழிகளில் காணப்படும் பால் பகுப்பினை எடுத்து நோக்கின் “இயற்கைப் பால் பகுப்பு, இலக்கண பால் பகுப்பு என இரண்டு வகையாகப் பகுக்கலாம். இயற்கைப் பால் பகுப்பு என்பது உலகில் காணப்படும் மனிதர்களையும், விலங்கு, இடம், மரம், ஆறு போன்ற பிறவற்றையும் அடிப்படையாகக் கொண்டது ஆகும். இலக்கணப் பால் பகுப்பு ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பானது. இலத்தீன் மொழியில் நட்சத்திரங்களைப் பெண் பாலாகப் பகுப்பர்” . அதுபோலவே இந்தி மொழியில் உயிரில் பொருட்களையும் ஆண்பால், பெண்பால் எனப் பகுப்பர். இலக்கணப் பால் பகுப்புக்கு முக்கியக் காரணம் மொழியின் அமைப்பேயாகும்.

இதனடிப்படையில் தமிழில் உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர்பால் எனப் பகுக்கின்றனர். “தமிழ் மொழியில் உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர் பால் என மூன்றாகப் பகுப்பதற்கு காரணம் தமிழ் மொழியில் காணப்படும் பதிலீடு பெயர்களேயாகும். அவன், அவள், அவர் என்ற மூன்று பதிலீடு பெயர்களை உயர்திணை கொண்டிருப்பதால்தான் இது மூன்று பால்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. உயர்திணையில் ஒருமையில் ஆண், பெண் வேறுபாடு உள்ளதேயன்றிப் பன்மையில் இவ்வேறுபாடு இல்லை. இதனால்தான் பலர்பால் எனப் பிரித்தனரேயன்றி ஆண்பால் பன்மை என்றோ, பெண்பால் பன்மை என்றோ பிரித்திலர் எனத் தமிழில் இலக்கணப் பகுப்பாக, உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால் என்று பிரிக்கக் காரணம் அறியலாம்.

மேலும் படிக்க ...

கோ.நாதனின் 'அரவம் புணர்ந்த அடவி' - சு.கருணாநிதி -

விவரங்கள்
- சு.கருணாநிதி -
நூல் அறிமுகம்
09 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவீனகவிதைகளில் பயணித்துக்கொண்டிருக்கும் கவிஞர்.கோ.நாதனின் மூன்றாவது கவிதைத்தொகுப்பாக வெளிவந்திருக்கிறது 'அரவம் புணர்ந்த அடவி'. பிரான்சை வதிவிடமாகக்கொண்ட கவிஞரின் இத்தொகுப்பு கோமகன் அவர்களை ஆசிரியராகக்கொண்டு பாரிசிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் மாதாந்த கலைஇலக்கிய இணையசஞ்சிகையான நடு வின் வெளியீடு. இலங்கை, தமிழக, அய்ரோப்பிய இணைய அச்சு ஊடகங்களில் தீவிரமாக கவிதை, விமர்சனம் என எழுத்தியக்கத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நாதனின் இத்தொகுப்பு நவீனகவிதை வரவுகளில் கவனிப்பிற்குட்படும் தொகுப்பாக அமைந்திருக்கின்றது.

மேலும் படிக்க ...

ஜெயகாந்தன் ( 1934 – 2015 ) ஏப்ரில் 08 நினைவுதினம்! நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்! சத்யஜித்ரேயின் சாருலதாவுடன் போட்டியிட்ட ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
08 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்நாட்டிலிருந்து சினிமாவுக்காகவே வெளியான பொம்மை இதழில் பலவருடங்களுக்கு முன்னர் அதன் கேள்வி - பதில் பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

கேள்வி: தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்த ஜெயகாந்தன் ஏன் இப்பொழுது அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டார் ?

பதில்: தமிழ் சினிமா எதிர்பார்ப்பதுபோல் ஜெயகாந்தன் இல்லை. ஜெயகாந்தன் எதிர்பார்ப்பதுபோல் தமிழ் சினிமா இல்லை.

இந்தத்தகவலை உயிர்மை இதழின் நூறாவது இதழில் (டிசம்பர் 2011) திரையுலக விமர்சகர் தியோடர் பாஸ்கரனின் பின்வரும் கருத்துடன் ஒப்பிட்டும் பார்க்கலாம். அவர் சொல்கிறார்:

“ எழுத்தாளர்களை நல்ல முறையில் ஒரு சினிமா பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் இயக்குநர்களுக்கு ஆழமான இலக்கியப்பரிச்சயம் தேவை. எழுத்தாளர்களுக்கும் சினிமாவின் தனி இயல்புகள் சாத்தியக்கூறுகள் - இவை பற்றிய ஒரு பிரக்ஞை வேண்டும். அதுமட்டுமல்ல திரையும் எழுத்தும் தத்தம் இயல்புகளில் மிகவும் வேறுபட்ட ஊடகங்கள் என்பதையும் உணர்ந்திருக்கவேண்டும். வங்காள - மலையாள சினிமாக்களில் இத்தகைய புரிதல் இருபுறமும் இருப்பதைக்காணலாம். அங்கிருந்து வரும் பன்னாட்டுப்புகழ்பெறும் திரைப்படங்களில் பெருவாரியானவை ஒரு இலக்கியப்படைப்பையே சார்ந்திருப்பதைக்கவனிக்கலாம். “

ஐந்தாம் தரம் வரையே பள்ளிப்படிப்பைக் கண்டிருந்த தண்டபாணி முருகேசன் என்ற சிறுவன் தமிழகத்தில் கடலூரில் 1934 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 24 ஆம் திகதி பிறந்து, இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, சென்னைவந்து, கம்யூனிஸ்ட் தோழர்களின் அரவணைப்பில் வளர்ந்து, கட்சிப்பிரசுரங்கள் விநியோகிப்பது முதலான தொண்டூழியம் முதல் பல்வேறு சிறு சிறு தொழில்களும் பார்த்து, அச்சுக்கூடத் தொழிலாளியாகி, செய்திப்பத்திரிகை, படைப்பு இலக்கியம் படித்துக்கொண்டே, ஒப்புநோக்காளனாகவும் (Proof Reader) தன்னை வளர்த்துக்கொண்டு, ஜெயகாந்தன் என்ற எழுத்தாளனாக அறிமுகமாகி, இலக்கிய உலகில் அங்கீகாரத்தையும் பெற்று பேராளுமையாக உருவாகியவர். இந்திய சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது, ராஜா ராஜசோழன் விருது உட்பட பல இலக்கியம் சார்ந்த விருதுகள் பெற்றவர். ஜெயகாந்தன் 2015 ஆம் ஆண்டு ஏப்ரில் 08 ஆம் திகதி சென்னையில் மறைந்தார். இந்தப்பதிவு ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் என்ற தொனிப்பொருளில் அமைகிறது.

மேலும் படிக்க ...

'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds) காலாண்டிணைய இதழும், எனது கவிதைகளிரண்டும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
-வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆஸ்திரியாவைத்  தளமாகக்கொண்டு வெளியாகும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கான 'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds)  என்னும் இணைய இதழின் வசந்தம் 2021 இதழில் எனது இரு கவிதைகளும், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் வெளியாகியுள்ளன. அவற்றின் விபரங்கள் வருமாறு:

1. கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம் - வ.ந.கிரிதரன் - (A WALK THROUGH CORONA-WRAPPED NIGHT) - ஆங்கில மொழிபெயர்ப்பு -முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் (Dr.K.S.Subramanian ).-
2. கவிதை: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை - வ.ந.கிரிதரன் - (LIBERATED BIRD OF THE SECLUDED EMPIRE)- ஆங்கில மொழிபெயர்ப்பு - முனைவர் ஆர்.தாரணி (Dr.R.Dharani) -

மேலும் படிக்க ...

தொடர் : பயிற்சிமுகாம் (1) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
07 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார். \ பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-


அத்தியாயம் ஒன்று: பயிற்சி முகாமில்..

இரண்டரை, மூன்று ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பனைமரங்களுடன் ,வடலியும் புதர்களையும் கொண்ட காடு பத்தியக் காணி.நெருக்கமான பனை மரங்களையே தூண்களாக்கி  தென்னோலைக்கிடுகினால் கூரையும்,கதவுகளும் ,தட்டிகைகளுமாக வாடி போல அமைக்கப்பட்ட நீளக்கொட்டில். இது தான் பயிற்சி எடுப்பவர்களின் தங்குமடம்.கூரையில் பச்சைப் பனை ஓலைகளும் பரப்பி இருக்கிறார்கள்.மேலே இருந்து பார்ப்பவர்கள் கண்டறிய முடியாமல் இருப்பதற்கான‌  மறைப்பு. இந்த முறை பயிற்சி எடுக்க வந்தவர்களில் பதினான்கு,பதினைந்து பேர்கள் , அராலி அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மிகுதியானவர்கள் ,பொன்னாலை, றாத்தலடி, சுளிபுரம், நிற்சாமம்,ஆனைக்கோட்டை ,சங்கானை...என பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள். மொத்தம் நாற்பது பேர்களாவது இருப்பார்கள். பயிற்சி அளிக்கிற சிவா ஆசிரியர் அவர்களோடு  தங்கப் போகிறவர்.  பயிற்சிகளிற்கு  உதவியாக‌ சங்கானை அமைப்புப் தோழர்கள் வர இருக்கிறார்கள். ஆனால், அங்கே அவர்களோடு  தங்கப் போகிறவர்கள் இல்லை.

             " தோழர் சின்ன நேசன், உங்களுக்கு சிலதைச் சொல்லுவார்" என்று அவரைக் காட்டி விட்டு  ஆசிரியர் சிரித்தார். "ஹா! ஹா!" என்று சிரித்து விட்டு கொட்டிலின் கிழக்குக் கோடிக்கு பெடியளை அழைத்துச் சென்றார். அடுப்பங்கரை எனத் தெரிந்தது. "இதை முதலில் நீங்கள் சுத்தப்படுத்த வேண்டும்" என்றார். முதலில் பயிற்சி முடித்தவர்கள் கரிகளுடன் அப்படியே விட்டுச் சென்றிருந்தனர். ஓர் ஈர்க்கில் விளக்குமாறையும், சிறிய‌ சாக்குத் துண்டை ஒன்றையும் கொடுத்தார். குப்பையை கூட்டி அள்ளுவதற்கு ஏதுவாக சவல் போன்ற சிறிய கைபிடியுடனான பிளாஸ்டிக் துண்டு. தோழர்கள் ஐந்து நிமிசத்தில் சுத்தப்படுத்தி விட அதை வெளியில் கொண்டு போய்க் கொட்ட கிட்டத்தில் இருந்த ஓலைத் தட்டியையும் தூக்கித் திறந்தார். "அடுப்பை சிலசமயம் இப்படி சுத்தப்படுத்தி விட்டு சமைக்க வேண்டும் " என்றார். தொடர்ந்து" இண்டைக்கு இரவு  உங்களுக்கு ஓசிச் சாப்பாடு வரும். நாளையிலிருந்து தான் நீங்கள் தான் சமைத்து சாப்பிடப் போறீர்கள். காலையிலே பாணும் சம்பலும் அடிக்கடி கொண்டு வருவோம். சிலவேளை பட்டினி கிடக்கவும் நேரிடலாம்"  என்று சிரித்தார்.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானங்கள்: "நான் காற்று வாங்கப் போனேன்! ஒரு கவிதை வாங்கி வந்தேன்!" - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
06 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இளைஞனொருவன் தன் நெஞ்சுக்கினியவளை நினைத்துப்  பாடுவதாக அமைந்துள்ள பாடலின் வரிகள் அனைத்தையுமே நெஞ்சில் நிலைத்து நிற்க வைக்கும் வகையில் எழுதியுள்ளார் கவிஞர் வாலி. முதலிரண்டு வரிகள் போதும் இப்பாடலை நிலைத்து நிற்க வைப்பதற்கு. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் "காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்." இவ்வரிகளைக் கேட்கையில் இயற்கையின் அழகில் மெய்ம்மறந்தபடி , காற்று வாங்கப் போகையில் ஏற்படும் அமைதி கலந்த இனிமை எம்மை வருடிச் செல்லும்.

முதன் முதலில் இப்பாடலைக் கேட்ட பால்யப் பருவத்தில் அடுத்து வரும் வரிகளை உணரும் பக்குவமில்லை. ஆனால் இவ்வரிகளைக் கேட்ட உடனேயே பிடித்து விட்டது. அத்துடன் வாத்தியாரின் வசீகரமும், டி.எம்.எஸ்ஸின் இளங்குரலின் இனிமையும் அத்தருணத்திலேயே நெஞ்சின் ஆழத்தில் சென்று குடியேறி விட்டன. இன்று வரையில் அவை நிலைத்து நிற்கின்றன.

பதின்ம வயதுகளில், உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்குள்ளாகியிருந்த தருணங்களில் அடுத்து வரும் வரிகளில் பொதிந்து கிடந்த உணர்வுகளை விளங்கி, இரசிக்க முடிந்தது. மானுட வாழ்வின் வளர்ச்சிப்படிகளில் காதல் உணர்வுகள் முக்கியமானவை. மானுட வாழ்வின் வேறொரு பக்கத்தை அவை உணர்த்தி வைப்பவை. சங்கத்தமிழ் இலக்கியங்கள் இவ்விடயத்தில் முதலிடத்திலிருப்பவை. காதலர்களின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இலக்கியப்படைப்புகள் அவை. அவனோ அவனது காதலுக்குரிவள் பற்றிய நினைவுகளில் மூழ்கிக்கிடக்கின்றான். அவனால் அவளை மறக்க முடியவில்லை.

மேலும் படிக்க ...

ஜீவநதியின் 150ஆவது இதழ் : 'ஈழத்து நாவற் சிறப்பிதழ்"

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நிகழ்வுகள்
06 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜீவநதியின் 150ஆவது இதழ் : 'ஈழத்து நாவற் சிறப்பிதழ்"
எழுத்தாளர் க.பரணீதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் ஜீவநதி சஞ்சிகையின் 150ஆவது இதழ் (மார்ச் 2021) 'ஈழத்து நாவல்  விமர்சனச் சிறப்பித'ழாக வெளியாகியுள்ளது. ஆசிரியர் க.பரணீதரனின் கடுமுழைப்பில் வெளியாகியுள்ள சிறப்பிதழ் சிறப்பாக வெளியாகியுள்ளது. வாழ்த்துகள். மேற்படி சிறப்பிதழில் எழுத்தாளர் முருகபூபதி எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றி எழுதியுள்ள விமர்சனமும் வெளியாகியுள்ளது. கட்டுரையை முழுமையாக ஜீவநதியின் 150ஆவது இதழில் வாசிக்கலாம். ஜீவநதி 150 ஆவது இதழை வாங்க  'ஜீவநதி' ஆசிரியர்  க.பரணீதரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் படிக்க ...

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

விவரங்கள்
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)
கவிதை
06 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் கதை, கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இதழியல்  என இலக்கியத்தின் பல்துறைகளிலும் பங்களித்து வருபவர். அத்துடன் நூல்களைத் தனது பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டும் வருபவர். இவர் எழுத்தாளர் மட்டுமல்லர், சமூகச் செயற்பாட்டாளரும் கூட.


‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)

1. கவிதையின் விதிப்பயன்

நீங்கள் மர்மம் என்றால் அது மர்மம்;
அதுவே இன்னொருவர் சொன்னால்
அதர்மம்.
மர்மமெனக்கோருணர்வென்றால்,
மனநிலையென்றால்
உங்களுக்கு அது கத்தி கபடா கொலை
துப்புத்துலக்கலாக
இருக்கக்கூடாதா என்ன?
உயிரின் ஊற்றுக்கண் ஆகப்பெரிய
மர்மமென்றால்
பர்மா நீரல்ல நிலமென்கிறீர்கள்!
கவிதையின் சர்வமும் நானே என்று
எத்தனை தன்னடக்கத்தோடு
கர்வங்கொள்கிறீர்கள்!
அதைக் கண்டு மலைத்துயர்ந்த
என் இருபுருவங்களும்
இன்னமும் இறங்கி இயல்புநிலைக்குத்
திரும்பியபாடில்லை.
கர்மம் கர்மம் _

மேலும் படிக்க ...

கவிதை: தேர்தல்! தெரிதல்! தெளிதல்! - பூர்ணிமா கனகா -

விவரங்கள்
- பூர்ணிமா கனகா -
கவிதை
04 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிதை: தேர்தல்! தெரிதல்! தெளிதல்! - பூர்ணிமா கனகா -

தேசமே! நேசமே! மக்களின் சுவாசமே!

தேர்தல், மக்களின் தெரிதல்!
கண்ணெனப் போற்றுங்கள்
தேசத்தை!
கடமையெனக் காட்டுங்கள்
நேசத்தை!
தவறறிந்துக் களையெடுங்கள்
வேஷத்தை!
தேசமே தாயென வழங்குங்கள்
பாசத்தை!
தவற விடாதீர்கள் வாக்கு எனும்
பொக்கிஷத்தை!

மேலும் படிக்க ...

ஆய்வு: இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் நகரம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
ஆய்வு
04 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்க்கவிதைகள் சங்ககாலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு விடயங்களைப்பற்றி விபரித்திருக்கின்றன. சங்காலக்கவிதைகள் , காப்பியங்கள் பல அக்காலகட்டத்து நகர்களைப்பற்றிய  தகவல்கள் பலவற்றைத்தருகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம் அக்காலகட்டத்தில் புகழ்மிக்க கோநகர்களாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம், மதுரை மற்றும் வஞ்சி பற்றி, அந்நகர்களில்  வாழ்ந்த மக்கள் பற்றி, அவர்கள் ஆற்றிய பல்வேறு தொழில்கள் பற்றியெல்லாம் விரிவாகவே தகவல்களைத்தருகின்றது. அக்கால நகரங்களின் நகர வடிவமைப்பு பற்றி, வாழ்ந்த மக்கள்  புரிந்த தொழில்கள் பற்றி, நடைபெற்ற விழாக்கள் பற்றி, பிற நாடுகளுடன் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் பற்றி.. என்று பல்வேறு வகைப்பட்ட தகவல்களை அவற்றின் மூலம்  அறிந்துகொள்ளலாம். இதனைப்போல் அண்மைக்கால இலங்கைத்  தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளில் நகரம் கூறு பொருளாக அமைந்துள்ளதா என்று சிறிது சிந்தனையையோட்டியதன் விளைவுதான்  இக்கட்டுரை. இதுவொரு விரிவான ஆய்வல்ல. எதிர்காலத்தில் மேலும் பல படைப்புகளை ஆராய்ந்து  காலத்துக்குக்காலம் விரிவுபடுததப்படுத்தக்கூடியதொரு ஆரம்பக்கட்டுரையே.

இக்கட்டுரைக்காக ஆராய்ந்த  கவிஞர்களின் கவிதைகள் நகரங்களைப்பற்றி விபரிக்கையில் அங்கு வாழ்ந்த பல்வகைப்பட்ட மக்களைப்பற்றி, சமூக வாழ்க்கை முறைபற்றி, நகரங்கள் சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பு பற்றி,  நகரங்களில் நிலவிய சமூக வாழ்வின் இயல்பினால் மனிதர்களின் உளவியலில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி, அங்கு நிலவிய வர்க்கங்கள் மானுட வாழ்விலேற்படுத்தும் பாதிப்புகள் பற்றி,  நகரச்சூழல் ஏற்படுத்தும் உடல் உபாதைகள் பற்றி, மானுட சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நகரத்தில் ஏற்படுத்திய போர்ப்பாதிப்புகளைப்பற்றி.... எனப்பல்வேறு விடயங்களை  வெளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றை எடுத்துக்கொண்ட படைப்புகளினூடு இனங்காணுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

மேலும் படிக்க ...

கவிதை: சகுனம் - அருணா நாராயணன் -

விவரங்கள்
- அருணா நாராயணன் -
கவிதை
03 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சனி மூலைப் பல்லி இன்று கூடுதலாய்க் கத்தியது.
அர்த்த சாமக் குடுக்குடுப்பைக்காரரும்
நல்லதாய் எதுவும் உளறவில்லை.
விசுவாசமான தெரு நாயும் விடாமல்
ஊளையிட்டுக் கொண்டே இருந்தது.
ஊடே தொலைக்காட்சி
மாறி மாறி அலறியது...
ஏப்ரல் ஆறு... ஏப்ரல் ஆறு என்று.

மேலும் படிக்க ...

சிறுகதை ஒன்றே வேறே - ஸ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஸ்ரீரஞ்சனி -
சிறுகதை
03 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சருகுகள் சரசரத்திருந்த தரையை நிர்மலமற்ற வெண்மையாக்குவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டதுபோலத் தொடர்ந்து பனி கொட்டிக்கொண்டிருந்தது.

உண்மையிலேயே இப்படிப் பனியில் நனைந்திருந்தால், “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது, இங்கு சொல்லாத இடம்கூடக் குளிர்கின்றது,” எனச் சந்தோஷமாக அரவிந்தசாமியும் மதுபாலாவும் ஆடிப்பாடியிருக்க முடியுமா? இந்தப் பனிக்குளிரை அனுபவித்திருந்தால் அந்த வரிகளை கவிஞர் வைரமுத்து நினைத்துக்கூடப் பார்த்திருப்பாரா என அவள் நினைத்துக்கொண்டாள்.

கையுறைகளை ஊடறுத்து நரம்புகளைச் சீண்டிய அந்தக் குளிரில் அவளின் விரல்கள் ஜில்லிட்டன. கைகளை ஜக்கற் பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டு நடக்கலாமென்றாலும் முடியவில்லை, குவிந்திருந்த பனிக்குள் புதைந்துகொண்டிருந்த காலடிகளை மேலெடுப்பதற்குப் பெரிதாகப் பிரயத்தனம் வேறு செய்யவேண்டியிருந்தது. விழுந்துபோய்விடுவேனோ என்ற பயம் அவளைப் பற்றிக்கொண்டது. ஜக்கற்றுக்குள் கைகளை வைப்பதும் எடுப்பதுமாக, பார்த்துப் பார்த்து அடி மேல் அடி வைத்து அவள் மெதுவாக நடந்தாள்.

எதிர்திசையில் வேகமாக வீசிக்கொண்டிருந்த காற்று, அவளின் முகத்திலும் பனியை வீசி அழகுபார்த்தது. பார்வைப்புலத்தை மங்கலாக்கிக் கொண்டிருந்த நீர்த்திவலைகளுடன் போராடிக்கொண்டிருந்தவளைக் கடந்துசென்ற பெரிய வான் ஒன்று குவிந்திருந்த பனியை அவளின்மீதும் வீசியிறைத்து அகன்றது.

வாகனத்தரிப்பிடத்திலிருந்து ஒஷாவோ ஆஸ்பத்திரியின் அந்தப் புற்றுநோய்ப் பிரிவை அடைவதற்கிடையில் அவளுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. மூக்கால் தண்ணீர் ஓடியது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

மேலும் படிக்க ...

கனடாக் கலைச் சபையில் (Canada Council for the Arts) இணையுங்கள்! பயன் பெறுங்கள்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
-ஊர்க்குருவி -
கலை
01 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலைஞர்களே! நீங்கள் எழுத்தாளராகவிருக்கலாம். கலைக்குழுவாக இருக்கலாம். கலை அமைப்பாகவிருக்கலாம். கனடாக் கலைச் சபையில் இணைவதன் மூலம் அச்சபை வழங்கும் பல்வேறு நிதிகளைப்பெற முடியும்.

மேலும் படிக்க ...

படைப்பிலக்கியம் - 1 அரசியல் - அழகியல்

விவரங்கள்
- தகவல்: கறுப்பி சுமதி -
நிகழ்வுகள்
31 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தொடர் நாவல்: கலிங்கு (2006 - 8) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
29 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் 8!

அவர் ஒரு கொடுங்கோலராக இருந்தார். சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபடி எல்லாப் பிள்ளைகளையும் அந்தக் கோல் மூலமாகவே கட்டுப்பாட்டிலும், பயத்திலும் வைத்திருந்தார். உக்கு பண்டாரவுக்கு அந்த இயலாத உடம்பில் தொங்கிக்கொண்டிருந்த மெலிந்த கைகளினால் எவ்வாறு இலக்கு வைத்து ஓடிக்கொண்டிருக்கிறவர்ளை கோலினால் தாக்கமுடிகிறதென்ற ஒரு வினா எப்போதும் இருந்துகொண்டிருந்தது.

அந்தச் சுற்றாடலிலுள்ள குழந்தைகள் விளையாடக் கூடுமிடம் அந்த வீட்டு முற்றமாக இருந்தது. அவர் தவிர வீட்டில் வேறு யாருமில்லையென்பதுடன், மறைவதற்கு அடி பருத்த பெரிய பெரிய கித்துள் மரங்களும், கூடலாய் வளர்ந்த கட்டையான ஈரப்பலா மரங்களும்கொண்ட விசாலமான வளவும் கொண்டிருந்தது. அந்த கொடுங்கோலுக்குப் பயந்துதான் முனசிங்க மாமாவின் மகன் சரத்சந்ர மொட்டையடிக்க தன்னை ஒப்புக்கொடுத்து மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு புத்த சங்கத்திலே சேர்ந்து போனான். குசுமவதிகூட ஒருபோது அந்தக் கொடுங்கோலினால் விளாசல் பெற்றிருக்கிறாள். ‘வா, குசும இவ்விடம்’ என்று உறுக்கியதற்கு நெளித்துக்கொண்டு அப்பால் ஓடி குசுமவதி தவிர்ந்துகொண்டாள்.  ‘உங்களையெல்லாம் நல்லாய் உதைக்கவேணுமடி. உங்களால்தான் பிக்கு ஆகவேண்டிய பையன்களெல்லாம் பித்துப்பிடித்து அலைந்துகொண்டிருக்கிறான்கள். என் கையிலே அகப்படு, அப்போ பார்த்துக்கொள்கிறேன்’ என்று மஹாபத்திர தாத்தா திட்டினார்.  

அன்று மாலைக்குள்ளேயே குசும அவரிடம் வசமாக மாட்டிக்கொண்டாள். தூங்குவதுபோலத்தான் கண்ணை மூடி, கழுத்தைச் சரித்து தாத்தா சாய்மனையில் படுத்திருந்தார். கூடத்துக்குள் நீரருந்த திண்ணையிலேறி படபடப்புச் சத்தமுமின்றி ஒரு பறவைபோல காற்றைக் கிழித்துக்கொண்டு குசும ஓடிப் போனாள். ஆனாலும் தாத்தா தூங்குவதாக நினைத்ததால் போதுமான வேகத்தை அவள் அதில் பிரயோகித்திருக்கவில்லை. வாசலை அவள் நெருங்க காத்திருந்த தாத்தா திடீரென கண்விழித்து பட்டென கொடுங்கோலை எடுத்து வீசினார். சளாரென்ற சத்தத்துடன் முதுகில் விளாசல் இறங்கிய குசும வீரிட்டுக் கத்தினாள். அபூர்வமாய்க் காட்டும் அந்தச் சிரிப்புடன் கொடுங்கோலை மறுபடி அருகே வைத்துக்கொண்டு சாய்மனையில் சாய்ந்தார் தாத்தா. ஒரு நிமிடம் துள்ளி, ஒரு நிமிடம் நெளிந்து முதுகைத் தடவியபடி அழுது அடங்கிய குசும வெளியேறும்போது, ‘நீ கெட்ட தாத்தா. அனோமா மாமியோட உன்னை உரிஞ்சானாய்க் கண்டன்’ எனக் கத்திவிட்டு ஓடிப்போனாள். அதைக் கேட்டு தாத்தா கடகடவெனச் சிரித்தார். பின் தனது தலையை நிமிர்த்தி மீசையை முறுக்கினார். அவரது கண்கள் சிவந்திருந்தன. முடியில்லாத ராஜா ஶ்ரீராஜசிங்கன்போல அப்போது அவர் உக்கு பண்டாரவுக்குத் தோன்றினார். குசும அதன் பிறகு அந்த வீட்டுக்கு விளையாட எந்த நாளும் வந்ததில்லை.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: மனோ சின்னத்துரையின் கொரோனா வீட்டுக்கதைகள் ! மற்றும் ஒரு பரிமாணத்தை நோக்கிச்செல்லும் படைப்பிலக்கியம் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
29 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னொரு காலத்தில் மாத – வார இதழ்களில்தான் சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. முன்னொரு காலம் என்றால், பழந்தமிழ் இலக்கியம் அறிமுகமான அந்தக்காலம் அல்ல. குறிப்பிட்ட முன்னொரு காலத்தில் இலங்கையில் இலக்கியத்துறையில் மறுமலர்ச்சிக்கால இலக்கியம் , மண்வாசனை இலக்கியம், முற்போக்கு இலக்கியம், பிரதேச மொழி வழக்கு இலக்கியம், தலித் இலக்கியம், போர்க்கால இலக்கியம், இடப்பெயர்வு இலக்கியம் என்று சிலவகை இலக்கியப்படைப்புகளை இலங்கையில் மாத இதழ்கள் தாங்கி வெளிவந்தன. தமிழ்ப்பத்திரிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிட்ட வார இதழ்களும் இலக்கியப்படைப்புகளுக்கு போதியளவு களம் வழங்கின. காலம் மாறியது. இலங்கையில் இனநெருக்கடி உச்சம் பெற்றதனால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கியவாதிகள், புகலிடத்திலிருந்து இதழ்களை வெளியிட்டு வந்ததுடன் புகலிட இலக்கியத்தையும் பேசுபொருளாக்கினர். மாறிக்கொண்டிருப்பது காலம். சமகாலத்தில், முகநூலின் வருகையையடுத்து பலரும் அதிலும் எழுதி உடனுக்குடன் எதிர்வினைகளையும் வரவாக்கிக்கொள்கின்றனர். நவீன தொழில் நுட்பத்தின் தீவிர பாய்ச்சலினால், வரப்பிரசாதமான இணைய இதழ்களும், முகநூல்களும் இலக்கியம் பேசிவருகின்றன. எவரும் தத்தமக்கென வலைப்பூவை வைத்துக்கொண்டும் தங்கள் அன்றாட பதிவுகளை அதில் ஏற்றமுடிகிறது.

மேலும் படிக்க ...

“ஆயுள் உள்ளவரை இந்தக்குயில் கூவிக்கொண்டே இருக்கும் என்று கூறி உங்களிடமிருந்து விடைபெறுபவர் இராஜேஸ்வரி சண்முகம்” - எஸ்.கே.ராஜென் -

விவரங்கள்
- எஸ்.கே.ராஜென் -
கலை
28 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எம் பேரன்புக்குரிய வானொலிக் கலைஞர்களிலொருவர் அமரர் இராஜேஸ்வரி சண்முகம். அவரது காலகட்டத்தில் அவரது குரலுக்கு அடிமையாக நாமனைவருமிருந்தோம்.  அவருடன் பணியாற்றிய சக வானொலிக் கலைஞரும் ,ஊடகவியலாளருமான எஸ்.கே.ராஜென் அவர்கள் அவரைப்பற்றிய நினைவுகளைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றார். அத்துடன் இராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் அரிய புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். அவருக்கு எம் நன்றி. - பதிவுகள்.காம் -


தமிழ் கலைகளில் வானொலிக்கலை என்பதும்ஓர் அங்கமாகியது. வானொலித்தமிழ் எனும்வடிவம் தோற்றம் பெற்றது. இவற்றுக்கு வழிவகுத்தது இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு.   இலங்கை வானொலித்தமிழ் தனித்துவம்நிலைநாட்டிய அந்தநாள்கள் மனமகிழ்வுக்குரியவை. இலங்கையிலும்தமிழகத்திலும் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும்பலநாடுகளில் இருந்தும் ‘வானொலித்தமிழ்’ என்ற கருத்து கல்வியாளர்களால் முன்வைக்கப்பட்டது. அப்படி ஒரு பொற்காலம்இருந்தது, அப்பொழுது இலங்கைத்தமிழ்ஒலிபரப்பாளர்கள் பெருமைப்படுத்தப்பட்டார்கள். இப்பொழுது யாவும் சென்னை வியாபாரத்தமிழால் செழுமை குன்றிப்போயுள்ளன. மூத்த ஒலிபரப்பாளர்களின் ஆளுமைமிக்க அனுபவங்கள் பேணப்படாது புறக்கணிக்கப்படுகின்றன. இப்படிப்பல்வேறு விடயங்கள் இன்றைய வானொலி ஒலிபரப்புக்கள் தரம்குன்றிப்போவதற்குக் காரணிகளாய் அமைந்துள்ளன. இவற்றுக்கு மத்தியிலும் வாழ்வின் பெரும் பகுதியை இலங்கை வானொலி தமிழ்ஒலிபரப்பில் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்த, அரும் பெரும் அறிவிப்பாளர்கள் எமதுமனங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களில் ஒருவரை இந்தப்பகுதியில்பதிவிடுவது மனதுக்கு மகிழ்வு தருகிறது. இலங்கை வானொலி என்றதும் எமதுமனங்களில் எழுந்து வரும்  அறிவிப்பாளர்கள்வரிசையில் உயர்ந்து நிற்பவர் வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள். மயில் ஆடினால் அழகு, குயில் கூவினால் இனிமை, இராஜேஸ்வரி சண்முகம்அவர்கள் அறிவிப்பு நிகழ்த்தினால் இனிமையோ இனிமை. இலங்கைத் தமிழ்ப் பெண்களுள் கலை ஆளுமைகளில் சிறந்து விளங்கினார்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் - 02-04-2021

விவரங்கள்
தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
27 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வு: யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்க வடிவங்கள்! - ராகவன் -

விவரங்கள்
- ராகவன், லண்டன் -
ஆய்வு
27 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சமூக வளர்ச்சி பற்றி சிந்திப்பவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் சாதியம் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது. சாதியம் சமூகத்தின் மொழி, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு, நடைமுறை போன்ற அனைத்து தளங்களிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றதென்பதை அவதானித்தல் அதற்கெதிரான செயல்பாடுகளை பல்வேறு தளங்களில் முன்னெடுத்தல் அவசியமானதொன் று. இக்கட்டுரை யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்கம் பற்றிய ஒரு அறிமுகம்.

தென்னாசிய சமூகங்களில் சாதியத்தின் இருத்தல் பற்றிய பல்வேறு ஆய்வுகள் வந்திருக்கின்றன. சாதியத்தில் இருத்தலை இவ்வாய்வுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. சாதியம் பண்டைய சமூகத்தின் எச்சசொச்சம். அது நிலப்பிரபுத்துவத்தின் வடிவம். நவீன சமூக பொருளாதார வளர்ச்சி சாதியத்தை இறுதியில் இல்லாமல் ஆக்கிவிடும் என்ற பார்வை இன்று கேள்விக்குறியாக எமக்கு முன் நிற்கிறது. அகதிகளாக அனைத்தையும் இழந்து வந்தவர்கள் கூட சாதியத்தை மட்டும் விடாமல் தூக்கிகொண்டு வருவது ஏன்? அல்லது நாடு கடந்து ஐரோப்பா அமெரிக்காவென்று வந்தவர்கள் சாதியை மட்டும் விடாமல் இருப்பது ஏன்? ஒரு புதிய சமூக பொருளாதார அரசியல் சூழலில் வாழ்பவர்கள் கூட சாதியத்தை கைவிடாமல் இருப்பதன் பின்னணி என்ன?

ஆனந்த் டெல்டும்ப்டே என்ற அறிஞர் கூறுகிறார், ’’1853இல் புகையிரத சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது சாதியத்தை உடைக்க போக்குவரத்து நவீனமயமாக்கல் உந்துசக்தியாகுமென்று மார்க்ஸ் எழுதினார். ஆனால் உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய புகையிரத சேவையை கொண்டுள்ள இந்தியாவில் சாதி அழியவில்லை. மாறாக சாதியானது நவீன வடிவங்களுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து (adaptive) வருகிறது.’’

சாதியமானது நவீன மயமாக்கல், முதலாளித்துவ உலக மயமாதல் போன்ற அனைத்து வளர்ச்சிப் போக்குகளுடாக தன்னை தகவமைத்து புதிய வடிவங்களை எடுக்கிறது. சாதியம் ஒருபுறம் மாறுகிறது. மறு புறம் சாதியம் திரும்பவும் தளைக்கிறது. புதிய அவதாரங்களை எடுக்கிறது. சாதியத்தின் சமூக இருப்பை அங்கீகரிக்காமல் அதன் நேரடி-மறைமுக ஆதிக்கத்தை உணராமல் ஒரு சமூக விடுதலை அல்லது குறைந்த பட்ச ஜனநாயக வாழ்வு சாத்தியமில்லை.

மேலும் படிக்க ...

கவிதை: ஒப்பிட்டுப் பாராமால் உளமகிழ்ந்து வாழ்ந்திடுவோம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா -
கவிதை
25 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

           ஒப்பிட்டுப் பார்த்து  உளமுடைந்து போகாதீர்
            கிட்டிய வாழ்வினைத் கிழித்துவிட எண்ணாதீர்
            பேராசை அலையில் சிக்குண்டு மாளாதீர்
            பெற்றதை மனமிருத்தி பெருமகிழ்வு எய்திடுவீர்   !

மேலும் படிக்க ...

தமிழ்மொழிச் செயற்பாட்டகம்: மஹாகவி உருத்திரமூர்த்தி - பெளசர்-

விவரங்கள்
- தகவல்: பெளசர் -
அரசியல்
25 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிதை: பச்சைமயில் அம்மானை -- தீவகம் வே.இராசலிங்கம் -

விவரங்கள்
- ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -
கவிதை
25 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பைந்தமிழும் செந்தமிழும்
பாரிலங்கும் என்றபின்னும்
அந்தமிலாத் தென்றலுமே
ஆடிவரும் அம்மானை
அந்தமிலாத் தென்றலொடும்
ஆடிவரும் ஓசையிலே
சொந்தமெனப் பாடிடுவோர்
செப்பிடுமோர் அம்மானை !

மேலும் படிக்க ...

கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்! - சந்திரா நல்லையா -

விவரங்கள்
- சந்திரா நல்லையா -
அரசியல்
25 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Antonio GramsciAntonio Gramsci தென் இத்தாலியின் ஸார்டினியாவை சேர்ந்தவர். நெப்போலியனின் பிரெஞ்சு பேரரசு தகர்ந்த பின் சுதந்திரமடைந்த ஸார்டினியா 1861 ல் ஐக்கிய இத்தாலியின் பகுதியாக சேர்க்கப்பட்டது. ஐரோப்பிய பிற்போக்கின் குறியீடாக, மூர்க்கத்தனமான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பெயர்போன நிலப்பிரபுத்துவ முறையையும் ஒடுக்குமுறை யந்திரங்களையும் கொண்டிருந்த அரசின் கீழ் இருந்தது. பிரான்ஸ்கோ கிராம்ஷி, ஜியுஸெப்பினா மார்ஸியாஸ் இணையருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவரே அந்தோனிய கிராம்ஷி ஆவர்.1897 ல் நடந்த இத்தாலிய நாடாளுமன்ற தேர்தலின் போது பிரான்ஸ்கோ கிராம்ஷி ஊழல் செய்த ஒருவரை எதிர்த்து போட்டியிட்ட இளம் வேட்பாளரை ஆதரித்த காரணத்தால், கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்தார் என்ற பொய்யான வழக்கு தொடரப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏழு குழந்தைகளுடன் அந்தோனிய கிராம்ஷியின் தாயார் மிகவும் மோசமான வறுமையில் இரவுபகல் ஓய்வொழிச்சலின்றி உறக்கமின்றி ஆடைகள் தைத்து விற்று பணம் ஈட்டுகிறார். கிராம்ஷி சிறையில் இருக்கும்போது தாயார் பற்றி கீழ்க்கண்டவாறு நினைவு கூறுகிறார்.

“ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அம்மா செய்ததை எல்லாம் நம்மால் செய்ய முடியுமா? அத்தகைய ஒரு பேரழிவை எதிர்த்து தன்னந்தனியாக நின்றிருக்க முடியுமா? அல்லது குழந்தைகளை அதிலிருந்து காப்பாற்றியிருக்க முடியுமா? அம்மாவின் வாழ்க்கை நமக்கு பெரிய பாடம். கடந்துவர முடியாதவையாக என்று மாபெரும் நெஞ்சுரம் கொண்ட மனிதர்களுக்கு கூட தோன்றிய இன்னல்களை கடந்து வருவதில் மனோ உறுதி எவ்வளவு முக்கியமானது என்பதை அப்பாடம் எமக்கு காட்டியது. ….நமக்காக தன் வாழ்நாள் முழுதும் உழைத்தார். நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்கள் செய்தார்.”

கிராம்ஷியின் முதுகு இயற்கையிலேயே கூனலாக இருந்தமையால் அவரது வளர்ச்சி குறுகிக் காணப்பட்டது. பள்ளியில் மிகச்சிறந்த மாணவர். வீட்டின் வறுமை காரணமாக பதினொரு வயதில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். அந்த அனுபவத்தை கிராம்சி பின்னர் இவ்வாறு எழுதுகிறார். “ என்னைவிட கனமான புத்தகங்களை சுமந்து செல்வதுதான் எனக்குள்ள வேலை. யாருக்கும் தெரியாமல் பல இரவுகள் நான் அழுததுண்டு. என் உடம்பு அப்படி வலிக்கும்.”1904 இல் தந்தை தண்டனைக்காலம் முடிந்து வீட்டிற்கு வருகிறார். குடும்பத்தில் ஓரளவு அமைதி நிலவுகிறது. கிராம்சி தமது படிப்பை மீண்டும் தொடர்கிறார்.

மேலும் படிக்க ...

தாயகம் ஆசிரியர் ஜோர்ஜ் குருஷேவின் மூன்று மின்னூல்களின் அறிமுகமும் கலந்துரையாடலும்!

விவரங்கள்
- முகநூல் -
அரசியல்
25 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மற்ற கட்டுரைகள் ...

  1. காலத்தால் அழியாத கானங்கள்: "ஒரு நாள் யாரோ? என்ன பாடல் சொல்லித் தந்தாரோ? - ஊர்க்குருவி -
  2. காலமும் கணங்களும்: அக்னி வேள்வியில் வந்துதித்த கவிஞர் ஈழவாணன் நினைவுகள்! - முருகபூபதி -
  3. மு.தளையசிங்கத்தின் 'தியாக' மரணம்! - மு.நித்தியானந்தன் -
  4. எதிர்வினை: 'குறிஞ்சித்தேன் நாவலில் படகா் இன மக்களின் வாழ்வியல் நெறிகள்! '
  5. குறிஞ்சித்தேன் நாவலில் படகா் இன மக்களின் வாழ்வியல் நெறிகள்! - வெ. வளா்மதி, பகுதி நேர முனைவா் பட்ட ஆய்வாளா் -
  6. சைவமும் பாவை வழிபாடும்! - முனைவர் சி.சங்கீதா -
  7. பணிப் பெண்களுக்கெதிரான வன்முறைகள்! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம் -
  8. கவிதை: சுனாமியின் மகள்! - வ.ஐ.ச.ஜெயபாலன் -
  9. மு.புஷ்பராஜன்: குருநகரின் முகவரி! - மு.நித்தியானந்தன் -
  10. சாதியத்தின் இயல்பாக்கமும் டொமினிக் ஜீவாவின் ‘அச்சமும்’ - ராகவன், லண்டன் -
  11. 'தாய் மொழிக் மொழிக் கல்வியும் இளம் தலைமுறையினரின் மன வளர்ச்சியும்'! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
  12. உண்மையை உரைப்பேன்! - நந்தினி சேவியர் -
  13. வ.ந.கிரிதரனின் 'கணவன்' (Husband Short Story by V.N.Giritharan Summary)
  14. ரொறன்ரோ தமிழ்ச் சங்க இணைய வெளிக் கலந்துரையாடல்: மணிமேகலையும் மஹாவம்சமும்!
பக்கம் 100 / 104
  • முதல்
  • முந்தைய
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • அடுத்த
  • கடைசி