பதிவுகள் முகப்பு

நூல் மதிப்புரை: எதிர்ப்புக் குரல்களை முன்னிறுத்தும் ஈழத் தமிழ் நாடகங்கள்! - அம்ஷன் குமார் -

விவரங்கள்
- அம்ஷன் குமார் -
நூல் அறிமுகம்
05 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை ஈழத் தமிழ் நாடக இலக்கியத்திற்கு தொடர்ந்து தனது பங்கினை ஆற்றிவருகிறது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்த்துறை பேராசிரியரான சுவாமி விபுலானந்த அடிகள் ஒரு நாடக ஆசிரியரும் ஆவார்.' மதங்க சூளாமணி' என்கிற நாடக இலக்கண நூலை எழுதிய முன்னோடி இவர். மகாகவி பாரதி பற்றிய முதல் ஆய்வினையும் நடத்தியவர் என்பது நாம் அறிந்த செய்தி. பின்னர் வந்த தமிழ்த் துறை தலைவர்களான பேராசிரியர்கள் கணபதிப் பிள்ளை, வித்தியானந்தன், தில்லைநாதன், துரை மனோகரன், தற்போதைய தமிழ்த்துறை தலைவர் பிரசாந்தன் வரை அனைவரும் நாடக ஆசிரியர்கள் . சிங்கள நாடக முன்னெடுப்புகளும் பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்விப் புலத்தால் பெரிதும் அரவணைக்கப்பட்ட ஒன்று . இத்தகைய பாரம்பரிய பின்புலத்துடன் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஈழத்தமிழ் நாடக இலக்கியத்தை மையப் பொருளாக்கி ஐந்தாவது தமிழியல் மாநாட்டை கொரோனா பெருந்தொற்றின் போது 2020 ஆம் ஆண்டில் நடத்தியது. இதற்கான கட்டுரைகள் துறைசார்ந்தவர்களிடமிருந்து பெறப்பட்டன.தமிழ்நாட்டு நாடகத்திற்கும் ஈழத் தமிழ் நாடகத்திற்கு இடையேயான பிணைப்பினை நினைவு கூறும் வகையில் தமிழகத்து நாடகச் செயற்பாட்டாளர்களான வெளி ரங்கராஜன், பிரஸன்னா ராமஸ்வாமி, பிரளயன் கி.பார்த்திபராஜா, ஆர். ராஜு ஆகியோர் ஜூம் வாயிலாக அரங்கத் தலைமை உரையை அழைப்பின் பேரில் நிகழ்த்தினர். நாடக ஆர்வலனாக நானும் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினேன். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட கலாநிதி செல்லத்துரை சுதர்சன் ,திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அவை அனைத்தையும் ஹஈழத்தில் தமிழ்நாடக இலக்கியம்’ என்கிற நூலாக தொகுத்துள்ளனர்.

ஈழ நாடக அரங்கினதும் கல்விப்புலத்தினதுமான முக்கிய அடையாளமாக விளங்கும் பேராசிரியர் சி.மௌனகுரு இம்மாநாட்டின் துவக்க உரையை நிகழ்த்தியுள்ளார். ஈழ நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டு நாடகம் பற்றியும் அவர் வரலாற்றுப் பார்வையுடன் சுருக்கமாகவும் செறிவுடனும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். நாடகம் பிரதானமாக ஆற்றுகை வடிவம் என்றாலும் அது இலக்கியப் பிரதியாகவும் பெற்றுள்ள முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். தொடர்ந்த இலக்கியப் பாரம்பரியம் நம்மிடையே இருந்தபோதிலும் நாடகம் பற்றிய நல்லெண்ணங்கள் வளராததன் காரணமாகவே அதன் வரலாறும் பிரதிகளும் தொலைந்து போனதை குறிப்பிடுகிறார். செவ்விலக்கியங்கள் நாடகப் பிரதிகளை தம்முள் கொண்டுள்ளன என்பதை தெரிவிக்கும் அவர் நாடகமாகவே இலக்கிய கர்த்தாக்கள் அவற்றை எழுத முன்வராதது பற்றிய தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார். “ அது கம்பராமாயணம் அன்று. அது ஓர் கம்ப நாடகமே. கம்பன் நாடகம் எழுதியிருப்பின் தமிழருக்கு காளிதாசன் போல ஒரு நாடக ஆசிரியன் கிடைத்திருப்பான்” என்கிறார். கூத்துப் பனுவல்களாக பள்ளு, குறவஞ்சி நூல்கள் 16, 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே நம்மை தொடர்வன என்பதைக் கூறிவிட்டு பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் நவீன தமிழ் நாடக இலக்கியத்தின் தோற்றுவாய் என்று குறிப்பிடுகிறார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, சுவாமி விபுலானந்தர் ஆகியோரைத் தொடர்ந்து சீர்திருத்த கருத்துகளை உள்ளடக்கிய வசனங்கள் புனைகதை எழுத்தாளர்கள் எழுதிய நாடகங்கள், இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் ராமானுஜம், நா.முத்துசாமி, மு.ராமசாமி, இன்குலாப் ஆகியோர் நாடகப் பிரக்ஞையுடன் எழுதிய நாடகங்கள் ஆகியவற்றையும் நாடக இலக்கியத்தின் தொடர்ச்சியாகக் கருதுகிறார். இப்போக்குகளுக்கு இணையாக ஈழத்தமிழ் நாடக இலக்கியங்களின் வளர்ச்சி பற்றியும் எழுதியுள்ளார். பேச்சோசை நாடகங்கள், கவிதை நாடகங்கள், அபத்த வாத நாடகங்கள், சிறார் நாடகங்கள், பெண்ணிய நாடகங்கள் என்று பலதரப்பட்ட போக்குகளையும் இதில் அறிமுகம் செய்கிறார். மேலைத் தேய மரபுகளின் வழிவந்த சிந்தனைகளின்பாற்பட்டவற்றை நாம் கண்மூடித்தனமாக அணுகாது விமர்சனப் பார்வையுடன் நமக்கானவற்றை அடைய வேண்டும் என்கிற அறிவுறுத்தலுடன் தனது கட்டுரையை முடிக்கிறார் மௌனகுரு.

மேலும் படிக்க ...

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஏற்பாட்டில் நடந்த ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு! - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -

விவரங்கள்
- கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
நிகழ்வுகள்
05 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

2021இல் பதினொரு மணிநேரம் இணைய வழியில் சிறப்புற நிகழ்ந்த பேராதனைத் தமிழ்த்துறையின் 5ஆவது சர்வதேசத் தமிழியல் மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி நூல் குறித்து இந்தியத் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான அம்ஷன் குமார் எழுதிய கட்டுரை 'எதிர்ப்புக் குரல்களை முன்னிறுத்தும் ஈழத் தமிழ் நாடகங்கள்'

(பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஏற்பாடு செய்த ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு 2021 டிசம்பர் 15 ஆம் திகதியன்று இணையவழியூடாக, காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டினை நேரடியாக நடத்தத் திட்டமிட்டிருந்த போதும் அது இயலாமல் போனது. உலகளாவிய ரீதியில் பரவிய கொரோனாப் பெருந்தொற்றினால் இலங்கையும் அடிக்கடி பொதுமுடக்கங்களை எதிர்கொண்டு இயல்புவாழ்க்கை பாதிப்புற்ற நிலையில், இம்மாநாட்டினை இணையவழியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

”ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம்” என்பதைப் பிரதான தொனிப்பொருளாகக் கொண்டமைந்தது ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டு. ஆய்வுக்கட்டுரைகள் பொதுவெளியில் கோரப்பட்ட போது, ஒழுங்கமைப்புக் குழுவினருக்குக் கிடைத்த ஆய்வுக்கட்டுரைகள் புலமையாளர் குழுவினால் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு தரத்தின் அடிப்படையில் 29 கட்டுரைகள் மட்டுமே ஏற்கப்பட்டன. மாநாட்டில் அவற்றை அளிக்கை செய்வதற்கான அனுமதி ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது.

திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்த, மாநாட்டினைத் ஆரம்பித்து வைத்த தமிழ்த்துறையின் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையுரையை ஆற்றினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் எம். டி. லமாவன்ச மற்றும் கலைப்பீடத்தின் பீடாதிபதியான கலாநிதி ஈ. எம். பி. சி. எஸ். ஏக்கநாயக்க ஆகியோர் முறையே பிரதம அதிதி, சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு உரையாற்றியதோடு, தமிழ்த்துறையின் இச்சிறப்பான முன்னெடுப்பினை வாழ்த்தி மகிழ்ந்தனர். அத்தொடக்க நிகழ்வில் இடம்பெற்ற ஆதார சுருதி உரையினைப் பேராசிரியர் சி. மௌனகுரு நிகழ்த்தியிருந்தார். தொடக்க நிகழ்வில் நிறைவாக மாநாட்டின் இணை ஒருங்கிணைப்பாளரான கலாநிதி செல்லத்துரை சுதர்சன் நன்றியுரையை நிகழ்த்தினார்.

மேலும் படிக்க ...

பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (11) - ஜப்பானிய மதுக்கள் - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
04 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



நாங்கள் யப்பான் போகும் போது எனது மகன் கேட்ட விடயம் ‘’ யமசாகி 12 வருடங்கள் (Yamazaki 12 Year Old Single Malt Japanese Whisky)’’ வரும்போது வாங்கி வரும்படிகேட்டான். விலையைப் பார்த்துவிட்டு ‘’ இது அதிகமானது’’ என்றபோது ‘’ யப்பானில் மலிவாக கிடைக்கும்’ என்றான்.

அதைப்பற்றி அறிவதற்கு கூகிளில் பார்த்தபோது மற்றைய புகழ்பெற்ற ஜப்பானிய மதுக்கள் எல்லாம் அரிசியிலிருந்து வடிக்கப்படுவன. ஆனால், இது மட்டும் பார்லியிலிருந்து வடிக்கப்பட்டு, செப்பு கொள்கலத்தில் வைத்து ஆவியாக்கப்பட்டு, மீண்டும் வரும் அல்ககோலில் மலையிலிருந்து வரும் நீர் கலக்கப்படுகிறது . இந்த முறையை ஸ்கொட்லாந்தின் வெளியே யப்பானியரால் மட்டுமே கையாண்டு தயாரிக்கப்பட்டது. அத்துடன் இந்த விஸ்கியில் மலையிலிருந்தவரும் நீருடன் சில பழங்களின் வாசனை சேர்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஸ்கொட்லாந்தில் விஸ்கியை பற்றியும் அயர்லாந்தில் பியரைப் பற்றியும் அறிந்ததுடன், அவர்கள் தயாரிப்பதை சென்றும் பார்த்தேன். எனது முதுநிலைப் படிப்பில் (Applied biotechnology) இதை ஒரு பாடமாகச் செய்ததால் என்னை அறியாது அல்ககோல் தயாரிப்பில் ஒரு கவர்ச்சி உள்ளது.

மனித வரலாற்றின் ஆரம்பத்தில் வலி நீக்கும் நிவாரணியாகப் உலக மக்களால் பாவிக்கப்பட்டது பியரே (நாம் கள் பாவித்தோம்). ஓபியம் எனப்படும் அபின் பாவனைக்கு வரும்வரையில் சாதாரண மக்களுக்கு பியரே கிடைத்தது . 7000 வருடங்கள் முன்பு சீனாவில் பியரை வடித்த கலங்களையும் மற்றும் வடித்த பொருட்களை ஒரு கிராமத்தில் கண்டுபிடித்தார்கள் .

மேலும் படிக்க ...

தொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) -- வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகள்: 

1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன்
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். 
3.  கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. கணையாழி டிசம்பர் 2000: 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. கணையாழி மே 2012: ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- 
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7.  கணையாழி செப்டம்பர் 2017:  கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயிஓன் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -
9. கணையாழி மார்ச் 2020: விநாயக முருகனின் 'ராஜிவ்காந்தி சாலை'
10. கணையாழி ஏப்ரில் 2020: 'பிரமிளின் "காலவெளி": கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
11. கணையாழி மே 2020: 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற் காதல் பற்றி..'
12. கணையாழி ஜனவரி 2022: பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!

* கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு நூலில் எனது ' அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்' &  'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் ' ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க ...

சிறுகதை: அவனது தம்பி இன்னும் கீழே இறங்கவில்லை -தேவகாந்தன்-

விவரங்கள்
-தேவகாந்தன்-
சிறுகதை
02 ஆகஸ்ட் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

*ஓவியம் - AI

அவன் அதை எதிர்பார்க்கவில்லை. அவளது தொண்டைக் குழியிலிருந்து விடுபட்ட சொற்களில் அவன் சிதறிப்போனான். அவை நுழைந்து சென்ற செவிவழியெங்கும் பொசுங்குண்டதுபோல் இன்னும் எரி செய்துகொண்டிருந்தன. அம்மாவா சொன்னாள்? அத்தகைய வார்த்தைகள் அவளுக்கும் தெரிந்திருந்தனவா? அவனால் நம்பமுடியவில்லை. ஆனால் அது நடந்துதானிருந்தது. அவனுக்கே நடந்திருந்ததில் அவன் அய்மிச்சப்பட அதில் ஏதுமில்லை.

அவனுக்குள் நீண்டகாலமாக ஒரு ஆசை இருந்திருந்தது. நியாயமான ஆசைதான். அதை வெளியிட ஒரு சமயம் வாய்த்தபோது அவன் தயக்கம் காட்டவில்லை; அல்லது வார்த்தைகளே அவனுள்ளிருந்து படீரென வெடித்துக் கிளம்பிவிட்டன.

அது இரவுச் சாட்டின் பின்னான நேரம். அநேகமாக, விஷயங்கள் கரடுமுரடாக வந்து விழுந்தாலும், கனதிகொண்டு உறைந்திருப்பதில்லை அந்த நேரத்தில். தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருக்கும் செய்தி, சினிமா, கார்ட்டூன், சீரியலென எதுவும் அதைத் சடுதியாகவே அய்தாக்கிவிடுகிறது.

நடந்தது இதுதான்.

கூடத்துள் அம்மா, அவனது வளர்ப்புத் தந்தை தோமா, குண்டுத் தம்பி மிஷேல், தாத்தா எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள். அவரவர் காரியங்களில் கருத்தூன்றி அனைவரும். ஜுன் கடைசியிலிருந்து பள்ளிகளுக்கு விடுமுறையென ஒரு விளம்பரத்தைக் கண்டு ஞாபகமாகும் கணநாதன், குதூகலத்தில் கிரீச்சிடுகிறான். ‘என்ன, அவ்வளவு சந்தோஷம்!’ என்றபடி அவனைப் பார்த்து சிரிக்கிறார் தோமா. ‘மிஷேலுக்கு இந்தமுறை மொன்றியலுக்குப் போகிற திட்டமிருக்கிறது. உனக்கு ஸ்கார்பரோதான். உன் ஆங்கில வகுப்பு கட்டாயம். அது முடிய நேரமிருக்குமென்றால், பக்கத்தில்தானே இருக்கிறது மிலிகன் பார்க், போய் ஏலுமானவரை சுற்றிக்கொண்டே இரு.’

அவர் வேடிக்கையாகத்தான் அதைச் சொல்லியிருக்க முடியும். ஆனாலும் கணநாதன் மனம் தாங்குப்பட்டுப் போனான். பெறா மகன் – வளர்ப்புத் தந்தை ஆகிய உறவுகளுக்கிடையில் எப்போதாகிலும் ஒரு விரிசலின் கணம் சம்பவிக்கக்கூடுமோ?

மேலும் படிக்க ...

சண்முகதாசனின் நினைவாக...(2) - எல். ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல். ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
31 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



6

ஆனால், இவை அனைத்தும், கிட்டத்தட்ட, நேற்றைய அரசியலாகின்றது. அதாவது, இவை அனைத்தும் ஒரு முனை உலக ஒழுங்கின், ஆதிக்கத்தை நிலைநாட்டும் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகவே இருந்துள்ளன. இன்றோ, நிலைமை வேறுபட்டுள்ளது. அமெரிக்கா, தானே ஏற்படுத்திய கடந்த கால ஒப்பந்தங்களில் இருந்தும் அமைப்புகளில் இருந்தும், தனது சர்வதேசிய போலிஸ்காரன் என்ற கடப்பாட்டில் இருந்து வாபஸ் வாங்கியும் வெளிக்கிளம்பி ஒதுங்கிக் கொள்ளும்  சூழ்நிலையானது, இன்றைய உலகில், உருவாகி விட்டது.

உதாரணமாக, 2021இல், தனது முழு மூச்சில் ஏற்படுத்திய கால சுவாத்தியம் தொடர்பிலான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி கொள்வதாக 20.01.2025 இல் ட்ரம்ப் கைச்சாத்திடும் சூழ்நிலை தோன்றி விட்டது. (நான்கு வருடங்களில்).

இதனைப் போன்றே, அல்லது இதனை ஒத்ததாய், உலக வர்த்தக சந்தைக்கு (WTO) தான் வழங்க வேண்டிய பொருளாதார கடப்பாடுகளைத் தாமதித்து வழங்க போவதாகவும் இதேபோல் ஐக்கிய நாடுகளின் பல அமைப்புகளில் இருந்து விடைபெற்று கொள்வதாகவும் (UNESCO போன்றவை) அல்லது அவற்றின் பல அமைப்புகளுக்கு கொடுபட வேண்டிய நிதியைக் குறைத்தும் தாமதப்படுத்தியும் வழங்குவதாகவும் அல்லது UNHRC போன்ற மனித உரிமைகள் ஸ்தாபனத்தில் இருந்து 03.02.2025 முதல் முற்றாக விலகியும் தனது புதிய அரசியலை இன்று அமெரிக்கா கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

வேறு வார்த்தையில் கூறுவதானால், அமெரிக்கா தனது அரசியல் முகத்தையும் மீள வடிவமைக்க வேண்டிய தேவையை இந்த மாறிய உலகானது ‘உருவாக்கி’ உள்ளது எனலாம். இனியும் சர்வதேச போலிஸ்காரன் என்ற முகத்துடன் வலம் வராமல் புதிய அரசியல் முகத்தைத் தரிக்க அமெரிக்கா இன்று நிர்பந்திக்கப்பட்டுப் போகின்றது.

மேலும் படிக்க ...

ஏர் என்னும் சொல் அமைந்த திருக்குறள்கள் - முனைவர் புட்பா கிறிட்டி -

விவரங்கள்
- முனைவர் புட்பா கிறிட்டி -
ஆய்வு
31 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஏர் என்றால் கலப்பை. இது ஒரு உழவுக்கருவி. வயலில், மண்ணை உழுது, பதப்படுத்தி, விதைப்பின் முன்பும், நடவின் முன்பும் மண்ணைத் தளர்வாக்கி, கீழ் மேலாகக் கிளறப் பயன்படும் கருவி ஆகும். ஏர் மரத்தால், அல்லது இரும்பால் செய்து, அதில் கூரிய அலகைப் பூட்டி, மண்ணைக் கிட்ட பயன்பட்டது. ஏர் மாந்தரின் வரலாற்றைப் புரட்சிகரமாக மாற்றிய வேளாங்கருவி ஆகும். முதலில் மாந்தர் ஏரை இழுத்தனர். பின்னர் ஏர் மாடுகள், குதிரைகள் பூட்டி உழுதனர். இன்று இதற்கென இழுபொறி இயந்திரங்கள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.

ஏர் என்ற சொல், பள்ளு என்னும் தமிழ் சொல்லில் இருந்து பிறந்துள்ளது. பள்ளு என்றால், உழவு. உழவன் இப்பூமியில் ஏறி உழுவதால், பள்ளம் தோன்டுவதால், அது ஏர் எனப்பட்டது.

ஏரின் அடிப்படை உறுப்புகள்.

1. நுகம் அல்லது கிடைவிட்டம்.

2. ஏர்க்கால்

3. குத்து நிலைக் கட்டுப்படுத்தி,

4. துளறு.

5. உளி (முன் கொழு)

6. கலப்பை அல்லது கொழு

7. பரம்பு அல்லது வார்பலகை.

1975ஆம் ஆண்டின் இத்தாலி நாட்டில், நாணயத்தில் இத்தாலிய லிரா நாணயத்தில் கொழுவின் இலச்சினை படம் பொறிக்கப் பட்டுள்ளது.

கலப்பை = ஏரினுழார் உழவர் (குறள். 14)

உழவு ஏரினுநன்றா லெருவிடுதல். (குறள் 1038)

அழகு = கடனறிவார் முன்னின்றிரப்புமோ ரேஎ ருடைத்டு (குறள். 1053)

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். (குறள் . 14)

மேலும் படிக்க ...

நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு - தேடல் ) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
30 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG]

அத்தியாயம் ஒன்று - தழுவல் பற்றிய தர்க்கமொன்று!

இருண்டிருக்கின்றது. வீட்டின் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு மேலே விரிந்து கிடக்கும் விண்ணைப் பார்த்தவாறிருக்கின்றேன். இத்தனை வருடங்களில் எத்தனை தடவைகள் இவ்விதம் பார்த்திருப்பேன். ஒரு முறையேனும் அலுக்காத, சலிப்படைய வைக்காத  ஒன்றென்று இருக்குமென்றால் , என்னைப்பொறுத்தவரையில் அது இதுதான். இவ்விதம் விரிந்து கிடக்கும் பேரண்டத்தை பார்த்தபடி, சிந்தனையில் ஆழ்ந்தபடி , மெய்ம்மறந்து இருப்பதைப்போல் வேறோர் இன்பம்  எதுவும் இல்லையென்பேன். வழக்கம்போல் சிந்தனை நதி பெருவெள்ளமாகச் சீறிப்பாய்கின்றது. எதற்காக? எதற்காக? எதற்காக? அர்த்தமென்ன? ஏன்? ஏன்? ஏன்?  இதற்கு, இந்த வினாவுக்கு ஒருபோதுமே விடை கிடைக்கப்போவதில்லை. விடை கிடைக்காத வினா என்பது தெரிந்துதானிருக்கின்றது. இருந்தாலும் வினாக்கள் எழாமல் இருப்பதில்லை.  சிந்தித்தலென்னும் செயல் இருக்கும் வரையில் , அதற்கு ஒருபோதுமே முடிவில்லை. 

கோடி,கோடிக் கணக்கில் கொட்டிக் கிடக்கும் , என்ணற்ற சுடர்களில் மனது மூழ்கிப்போய்க் கிடக்கின்றது. அத்தனையும் சுடர்களா? அவற்றில் கோடிக்கணக்கில் சுடர்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்களும் இருக்கலாம். இருக்கும். ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான, பில்லியன் கணக்கான ஒளியாண்டுத் தொலைவுகள் பிரமிக்க வைக்கின்றன. ஏன்! எதற்காக? ஏன்? 

இவ்விதமான  சமயங்களில் எனக்குத் துணையாக ,மனோரஞ்சிதமும் வந்து விடுவாள். வந்தாள். வந்தவள் என்னுடன் நெருக்கியபடி, அருகில் தோளணைத்தாள். விண்ணைப்பார்த்தாள். விண்ணில் கொட்டிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தாள். அப்பொழுது  அவள் 'ஷாம்பு' போட்டு, முழுகி வந்திருந்தாள். ஷாம்பு மணம் நாசியில் மெல்ல நுழைந்தது. என் கன்னத்தை ஒரு முறை செல்லமாகத்  தட்டினாள்.  அவளை ஒரு கணம் உற்று நோக்கினேன். இவள் மட்டும் துணையாக இல்லையென்றால்.. அவளற்ற இருப்பை ஒரு கணம் மனம் எண்ணிப்பார்த்தது. என் எண்ண ஓட்டத்தை அவள் புரிந்து கொண்டாள் என்பதை உணர்ந்தேன். சில விடயங்களை உள்ளுணர்வு மூலம் உணர முடிகின்றது. உள்ளுணர்வு மூலம் இவ்விதம் உணர முடிவதற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்க முடியுமென்று இன்னுமொரு கிளை பிரித்துச் சிந்தனை நதி ஓடியது.'கண்ணா!" என்றாள்.

பதிலுக்கு நான் " கண்ணம்மா" என்றேன்.

மேலும் படிக்க ...

சண்முகதாசனின் நினைவாக...(1) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
30 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



அண்மையில், பேராசிரியர் மௌனகுருவின் தலைமையில், சண்முகதாசனின் நினைவு சொற்பொழிவு ஒன்று பேராசிரியர் அகிலன் கதிர்காமரால் நிகழ்த்தப்பட்டது. இதன்போது, மூலதனக் குவியல்களுடன் உலகு அடைந்திருக்கக்கூடிய மாற்றங்களை அவர் கோடிட்டிருந்தார்.

ஒல்லாந்தர் காலம் தொட்டு, ஆங்கிலேயர், அமெரிக்கர் என உலகை ஆண்ட ஆதிக்கச் சக்திகள், மாறி மாறி வந்த ஒரு முதலாளித்துவ கட்டமைப்பில், எவ்விதம் முன்னோக்கி நகர்ந்தனர் என்பது உரையின் சாரமானது. சுருக்கமாகக் கூறுவதெனில், மூலதனக் குவியல் என்பது, காலத்துக்குக் காலம் நாடுக்களிடைக் கைமாறுவதும் நகர்வதுமாகவே இருக்கின்றது என்பதும், இதற்கமைய அந்தந்த நாடுகள் உலக ஆதிக்கத்தைக் கைப்பற்றுதல் நடைமுறையாகின்றது என்பதுமே உரையானது.

வேறு வார்த்தையில் கூறுவதென்றால், உலகின் ஒருமுனை ஒழுங்கானது (Uni Polar World Order) எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதனை உரையானது தேட முயற்சித்தது எனலாம்.

2

மூலதனக் குவியலானது, ராணுவ வளர்ச்சியினையும் தொழில்நுட்பத்தையும் தனக்குச் சாதகமாக உருவாக்கிக் கொண்டே தனது ஆதிக்கத்தைக் கட்டமைத்து நிலைநாட்டி கொள்கின்றது.

இவற்றுக்கு இடையிலான நெருக்கமானது, மிக கவனமாகப் பரிசீலிக்கத்தக்கது. ஒருவேளை இம்மூன்றுமே ஒன்று சேர்ந்தாற் போல் வளர்வதாயும் இருக்கக் கூடும்.

மேலும் படிக்க ...

வெளிவந்து விட்டது எழுத்தாளர் எல். ஜோதிகுமாரின் '23ம் வயதில் பாரதி'

விவரங்கள்
- குருவி -
நிகழ்வுகள்
30 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'பதிவுகள்' இணைய  இதழில் தொடராக வெளியான , எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் '23ம் வயதில் பாரதி' தற்போது நூலாக வெளியாகியுள்ளது. 

பதிப்பகம் - ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் | 23ம் வயதில் பாரதி | விலை: ரூபா 300 | நூலை வாங்க  

மேலும் படிக்க ...

நடிகரும், எழுத்தாளரும், பேச்சாளருமான தமிழ் அரசியல்வாதி 'சொல்லின் செல்வர்' செ.இராசதுரை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
30 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானதோர் ஆளுமை மட்டக்களப்பு மாநகர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக , முப்பத்து மூன்று வருடங்களிருந்த 'சொல்லின் செல்வர்' என்றழைக்கப்படும்  செல்லையா இராசதுரை அவர்கள். அவரது தொண்ணூற்றியெட்டாவது பிறந்தநாள் (ஜூலை 26)  அண்மையில் கொண்டாடப்பட்டது. அதனையொட்டிப் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் மனத்தைத் தொடும் முகநூற் பதிவொன்றினை அண்மையிலிட்டிருந்தார்.அதற்கான இணைப்பு 

மேலும் படிக்க ...

வீரகேசரி, தினகரன் & மித்திரன் நிறுவனங்களின் கவனத்துக்கு.....

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
29 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று நூலகம் தளத்தில் ஈழநாடு , சுதந்திரன், உதயன் போன்ற பத்திரிகைகளின் பழைய பிரதிகள் பலவற்றைப் பார்க்க முடிகின்றது. ஆனால் வீரகேசரி, சிந்தாமணி, தினபதி, தினகரன், ராதா, செய்தி, மித்திரன் போன்ற பத்திரிகைகளின் பிரதிகள் பலவற்றைக் காண முடிவதில்லை. இப்பத்திரிகைகளில் வெளியான ஆக்கங்களைத் தேடுவது சிரமமாகவுள்ளது. 

மேலும் படிக்க ...

கோவை சொல் முகம் சந்திப்பு பற்றி... - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
29 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கோவை சொல் முகம் சந்திப்பு   6/7/25 கோவை விஷ்ணுபுரம் பதிப்பகம் சிற்றரங்கில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் பற்றிய நான்கு அமர்வுகள், நாவல்கள் பற்றிய நான்கு அமர்வுகள், நடைபெற்றன.சிறப்பான ஆய்வுகள். விகரம், பூபதி, சுஷில்குமார், சுதா சீனிவாசன்,நவீன், அருணா, , உமா பாலாஜி, நரேன்   ஆகியோர் உரையாற்றினர். நுணுக்கமான இளைஞர்களின் பார்வைகள் . பெண்களின் பார்வையில் மீட்சி தேடும் விடுதலை என்று அமைந்தது.

மேலும் படிக்க ...

சிறுகதை: கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
சிறுகதை
28 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


ஓவியம் - AI

கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ் இசையை நேசிக்கிறாள். ‘இது மனித குலத்தின் ஆன்மாவின் ஒலி’ என்கிறாள். அவளின் அறை காலியாக உள்ளது அவளுடைய பயணப் பை அங்கு இல்லை. அவளை இழந்த உணர்வு அவளின் வளர்ப்புத் தாயான ஸாராவுக்கு ஏற்படுகிறது.

நான்கு மொழிகள் பேசக்கூடியவள் கிளியோ.பியானோவில் அழகான பல இராக இசைகளை வாசிக்கக்கூடியவள்.சமையல் அல்லது தோட்டத்து வேலைகள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போதும் மனம் கவரும் ஏதோ ஒரு இசையைக் கேட்கும் கலாரசிகையான புத்திசாலித்தனமான கிளியோ இன்று அவளின் பல தரப்பட்ட பொருட்களால அலங்கரிப்பட்ட அறையில் இல்லை. வீட்டை விட்டு காணாமல் போனாளா அல்லது வாழ்க்கையிலிருந்து காணாமல் போனாளா?

கிளியோவைத் தத்தெடுத்து வளர்த்த ‘அம்மா’ ஸாரா பல யோசனைகளுடன் கிளியோவின் படுக்கைக்கு அருகில் ஒரு மரக்கட்டை போல விறைப்பாக நிற்கிறாள். ஸாராவால் நகர முடியவில்லை. பய உணர்வு அவளைச் சூழ்ந்திருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. வெளியில் இலையுதிர்காலக் காற்று பலமாகவும் கோபமாகவும் இருக்கிறது. குடிபோதையில் இருக்கும் குண்டன் பலவீனமான பாதிக்கப்பட்டவரைத் தாக்குவதைப் போல அது கண்ணாடி ஜன்னலைத் தாக்குகிறது. சூரியன் வெளிச்சம் குறைந்து பரிதாபமாக இருக்கிறான். கிளியோவின் மறைவில் சூரியனும் மகிழ்ச்சியடையவில்லை போலும்.

மேலும் படிக்க ...

நியூசிலாந்து சந்திரனின் (ஜோர்ஜ் அருளானந்தம்) ‘புலம் பெயர்ந்தவனின்; கனவுகள்’ என்ற சிறுகதை குறித்து... - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
நவஜோதி ஜோகரட்னம்
26 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

-  புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழர்களின் , அவர்கள்தம் அடுத்தடுத்த தலைமுறையினரின் வாழ்க்கை ,இவை எவ்விதம் புகலிடச் சூழலில் நிலவும் சமூக, பொருளாதார, அரசியற் சூழலின் தாக்கங்களுக்கு உள்ளாகின்றன, அவை எவ்விதமான பாதிப்புகளை முதலாவது தலைமுறையினருக்கு ஏற்படுத்துகின்றன என்பதை இக்கதை ஆராய்வதை நவஜோதி யோகரட்னத்தின் இந்தக் குறிப்பிலிருந்து உணர முடிகின்றது. இழந்த மண்ணின் சமூகக் கட்டமைப்புகளை, அபிலாசைகளைச் சுமந்து வந்து புதிய இடங்களில் நட்ட , முதலாவது தலைமுறையினரின் மன உணர்வுகளை மேற்படி கதை விபரிப்பதையும் உணர முடிகின்றது. - பதிவுகள்.காம் -


நல்ல புத்தகம் ஒன்று வாசகனின் கையில் வந்துவிட்டால் அடுத்த நிமிடமே அதற்கொரு உயிர் வந்துவிடும். எல்லாக் காலகட்டத்திலும், புறக்கணிப்புக்கள் மத்தியிலும் கதைகள்தான் எம்மோடு பேசக் காத்திருக்கின்றன. புத்தகங்கள்தான் அத்தகைய அந்தரங்கமான விடயங்களையும் நினைவுகளினூடாக எமக்குப் பரிசளிக்கின்றன. கதைகளுக்கு இதயம் இருக்கிறது என்று நம்புகின்றேன்.

தத்துவப் புத்தகங்களை படிக்கும்போது என்னுள் ஓசையை எழுப்பாது சத்தமில்லாமல் படித்து சத்தமில்லாமலே போய்விடுகின்றன. ஆனால் கதைப்புத்தகங்கள் என்னுள் துணிச்சலுடன் ஒரு கலகக் குரலாகித் தொனிக்கிறது.  பொதுவாக எல்லாப் படைப்பாளிகளும் தனது காலகட்டத்தில் செல்லாத காசாகவும் பல காலங்களுக்குப் பிறகு அவர்கள் அரிய பொக்கிஷங்களாகவும் மாறிவிடுகின்றார்கள். இத்தகைய பல படைப்பாளிகள் வெளிச்சம் காட்டுவதை நான் அவதானித்து வந்திருக்கிறேன். வாழ்க்கை பற்றிய பாடத்தை இத்தகைய படைப்பாளிகளால்தான் காட்ட முடிகின்றது. படிப்பது கதையை அல்ல நிஜவாழ்வின்; மாற்றங்கள் பற்றிய தெளிவை நம்முள் உணர்த்துகிறது.

அந்த வகையில் சற்று வித்தியாசமாக ‘புலம் பெயர்ந்தவனின் கனவுகள்;’ என்ற ஜோர்ஜின் சிறுகதை என்னுள் பேசியது.

ஊருக்கும் நாட்டிற்கும் பெரும் சேவையாற்றிய பெரும் மனிதரை இழந்து நிற்கின்றோம். மேடையில் இரங்கலுரை வழங்கிய ஒருவர் தழுதழுத்த குரலில் உரையாற்றிக் கொண்டிருந்தார் என்று ஜோhஜ் கதையை ஆரம்பிக்கின்றார். எனக்குத் தவன் என்பவரை முப்பத்தைந்து வருடங்களாகத் தெரியும். தவன் இலங்கையின் வடக்குப் பகுதியல் இருந்து எமது நாட்டிற்குப் புலம் பெயர்ந்து வந்தவன். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரினால் உயிருக்குப் பயந்து இலங்கையைவிட்டு வெளியேறியதாக அடிக்கடி கூறிக்கொள்வான். தவன் தனது மனைவியுடனும் இரண்டு  பிள்ளைகளுடனும் எமது நாடான நியூசிலாந்திற்குக்; குடியேறியிருந்தான். அந்த நேரத்தில் இலங்கையிலிருந்து வருகை தந்தோர் பெரும்பாலாக வைத்தியர்களும், பொறியியலாளர்களும் ஆக இருந்தனர். அவர்களுக்குக் கூடத் தகுந்த வேலை வாய்ப்புகள் எமது நாட்டில் வந்தவுடன் கிடைக்கவில்லை. இதனால் அதிகமானோர் ‘பீசாகட்’, ‘பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் வேலை செய்தனர்.

மேலும் படிக்க ...

நடிகர் திலகத்தின் நினைவாக... ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
25 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் ஆரம்பத்திலிருந்தே வாத்தியாரின் இரசிகன். ஆனாலும்  நடிகர் திலகத்தின் படங்களைப்  பார்ப்பதை என்னால் தவிர்க்க முடிந்ததில்லை. காரணம் அவரது நடிப்பு.   அவரது நடிப்பு மிகை நடிப்பென்றால் அதற்குக் காரணம் அக்காலகட்டத்தின் தேவையாக அது இருந்ததுதான். அதனால்தான் அவர் அப்படி நடித்தார். திரைப்படங்கள் என்பவை கலைக்காக மட்டும் எடுக்கப்படுவதில்லை. வர்த்தகமே அதன் முக்கிய  அம்சம்.  பெரும்பான்மையான இரசிகர்கள் விரும்பியது வசனங்களையும்,  வசனங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுடன் கூடிய நடிப்பையும்தாம்  நடிகர் திலகம் சிறந்த நடிகர் அதனால் அவரால் அக்கால இரசிகர்கள் விரும்பியதைத் தன் நடிப்பால் கொடுக்க  முடிந்தது.   அக்காலகட்டத்தில் என் அம்மா, அப்பாவுக்கு மிகவும் பிடித்த  திரைப்பட ஜோடி சிவாஜி _ பத்மினிதான்.

மேலும் படிக்க ...

கவிச்சக்கரவர்த்தியும், கவியரசரும்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
25 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்"

இப்பாடல் கம்பரின் கம்பராமாயணத்தில் வரும் பாடல். இராமனின் கால் பட்டு சாபம் நீங்குகின்றாள் அகலிகை. இதை விசுவாமித்திரர் விபரிப்பதாகக் கம்பர் இப்பாடலை எழுதியிருப்பார்.  இப்பாடலில் வண்ணம் என்னும் சொல் எத்தனை அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது?

கம்பரின் கவித்துவத்தை வெளிப்படுத்தும் கவிதையிது. கருமை வண்ணமுடைய தாடகையுடனான போரில் , அதாவது 'மை வண்ணத்து அரக்கி போரில்' மழை தரும் கார்மேக வண்ணமுடைய இராமனின் வில்லை இயக்கும் கை வண்ணம் கண்டேன். இங்கு கல்லை மிதித்து அகலிகையின் சாபத்தை நீக்கிய இராமனின் கால் வண்ணம் கண்டேன் என்கின்றார் விசுவாமித்திரர் கூற்றாகக் கம்பர்.  

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - “தமிழியல் ஆய்வுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் பங்களிப்பு”

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
24 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

83 ஜூலை இனப்படுகொலை நினைவுகள். . - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
23 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

              - ஓவியர் புகழேந்தியின் ஓவியம். -

          

83 ஜூலை இனப்படுகொலை  இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு  திருப்புமுனை. இலங்கையை  26 வருடங்கள் சமூக யுத்ததில் மூழ்கிப்போக வழி வகுத்த இனப்படுகொலையது.  போர் நாட்டுக்கு மிகப்பெரிய அழிவைத்தந்தது. இரு பக்கத்திலும் படையினர், விடுதலைப்போராளிகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். பொதுமக்கள் இலட்சக்கணக்கில் உயிரிழந்தனர்.  இலங்கைத் தமிழர் பிரச்சினையை உபகண்ட, சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றியது ஜூலை 83 படுகொலைகளே.  இதனை மறந்து விட்டால் மீண்டும் நாட்டில் இன்னுமொரு 'ஜூலை இனப்படுகொலை'  ஏற்படும் நிலை ஏற்படலாம். மீண்டும் நாடு யுத்தத்துக்குள் மூழ்கி விடலாம். 

அந்நிலை மீண்டும் ஏற்படக் கூடாதென்றால் நாட்டில் சகல இன மக்களும் சகல உரிமைகளுடனும் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்தின மக்களும் எவ்வித அச்சமுமற்று, அன்புடன், இணைந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் சந்தேகங்களும் , அச்சமும் ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்பட  வேண்டும். 

ஆம்! 83 ஜூலை இனப்படுகொலையை நாம் மீண்டும் மீண்டும் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்வோம். மீண்டுமொரு 83 ஜூலை இனப்படுகொலை போன்றதொரு நிகழ்வு  நிகழாதிருப்பதற்காக, புரியப்பட்ட   அநீதிக்கு நீதி கிடைப்பதற்காக, மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம்.

இங்கு கடந்த ஆண்டுகளில் நான் எழுதிய 83 ஜூலை இனப்படுகொலை பற்றிய முகநூல்  நினைவுக்குறிப்புகளிலிருந்து சில குறிப்புகளை (சில எதிர்வினைகளையும்)   இணைத்திருக்கின்றேன்.  இவற்றில் நினைவு கூரப்படுபவையெல்லாம் ,  ஜூலை 83 பற்றி நினைக்கும்போதெல்லாம் என் நினைவில் தோன்றுபவை. உங்கள் நினைவுகளிலும்தாம்.

மேலும் படிக்க ...

மறதி நோய் (Alzheimer's disease) - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சமூகம்
23 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

மனித சமூகத்தை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக மறதி நோயும் மாறிவருவதை நாங்கள் பார்க்கின்றோம். மனிதரின் ஆயுள் காலத்தை மருத்துவத் துறையின் முன்னேற்றம் அதிகரித்திருப்பதால், இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் அளவும் அதிகரித்திருக்கின்றது என்றும் நாங்கள் பொருள்கொள்ளலாம். அதேவேளையில் ஒருவரின் வாழ்க்கைமுறையும் இதற்குப் பங்களிக்கிறது என்பதும் விஞ்ஞானம் கூறும் ஓர் உண்மையாகும். மறதி நோயை விளங்கிக்கொள்வது, அதன் அறிகுறிகளை விரைவில் இனம்காண்பதற்கும், அவற்றைக் கையாள்வதற்குத் தேவையான உதவிகளைப் பெற்று, வாழ்க்கைத் தரத்தை ஓரளவாவது பேணிக்கொள்வதற்கும் உதவிசெய்யும்.

மனித மூளையைப் பாதிக்கும் பல்வேறு வகையான ஒழுங்கீனங்களின் (dementia) மிகப் பொதுவான ஒரு ஒழுங்கீனமாக அல்சைமர் நோய் (Alzheimer's disease) காணப்படுகிறது. (Alzheimer’s Association, 2024). இந்த நோய் யாருக்கும், எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும்கூட, 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடமே இது அதிகமாகக் காணப்படுகிறது.

மூளையிலுள்ள புரதங்களான beta-amyloid மற்றும் tauஇல் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள், plaques மற்றும் tangles (புரதக்கட்டிகள், இறந்த நரம்புகளின் சுருக்கங்கள்) உருவாகக் காரணமாகின்றன என்றும், அவை நரம்புக் கலங்களையும், அவற்றின் இணைப்புக்களையும் சேதப்படுத்துவதால் மூளையின் செயற்பாடு பாதிக்கப்படுகின்றது என்றும் ஜேர்மன் மருத்துவரான Alois Alzheimerதான் முதன்முதலாக அல்சைமர் நோய் பற்றி விபரித்திருந்தார் (Alzheimer’s Association, 2024).

மேலும் படிக்க ...

மலேசியத் தமிழ்க் கவிதைகளின் மொழிநடை - முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -

விவரங்கள்
- முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -
ஆய்வு
23 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஒன்று மலேசியா. மலேசியாவில் உள்ள தமிழர்கள் தங்கள் தாய்த்திருநாட்டையும் மொழியையும் வளர்க்க தமிழ் அமைப்புகளை நிறுவியும், தங்களது எண்ணங்களை ஊடகங்களின் துணைகொண்டும் வெளியிட்டு வருகின்றனர். மலேசியாவில் சிறுகதை, கவிதை, புதினம் ஆகிய தளங்களில் தங்களது முத்திரையைப் பதித்தவர்கள் பலர். மலேசியத் தமிழ்க் கவிதைகள் ஆரம்ப காலத்தில் அவர்களது துன்பங்களைத் தாங்கியதாகவும், பின்னர் சமூக வெளிப்பாடுகளின் கூடாரமாகவும் மிளிர்ந்தன.

மலேசிய தமிழ்க் கவிஞர்கள்

கா.பெருமாள், ஐ.உலகநாதன், தீப்பொறி பொன்னுசாமி, சீனி நைனாமுகமது, ப.மு. அன்வர், கரு.வேலுச்சாமி, மா.இராமகிருஷ்ணன், செ.மு.ஜெயகோபி ஆகிய ஏராளமான தமிழ்க் கவிஞர்களை மலேசிய இலக்கிய உலகம் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. மலேசிய தமிழ்க் கவிதைகளின் மொழிநடையை ஆய்வு செய்தால் அவற்றின் பன்முகத்தன்மைகள் தெரியவரும்.

உவமைகள்

மலேசிய தமிழ்க் கவிதைகள் சிறந்த உட்பொருளைக் கொண்டே சமைக்கப் பட்டுள்ளன. நல்ல பொருள்நயமும், உவமை நலமும் அவற்றின் அழகுக்குச் சான்று. கா.பெருமாள் என்ற கவிஞரின் கதிரும் கடலும் கவிதையில் மேகத்தைப் பெண்ணாக உவமிக்கின்றார்.

மேலும் படிக்க ...

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
22 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற 13-7-2025 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ரொறன்ரோவில் உள்ள பைரவி நுண்கலைக் கூடத்தில்  வெளியிட்டு வைக்கப்பெற்றது. தேனீர் சிற்றுண்டியைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி தமிழ்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன செல்வி சோலை இராச்குரார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப் பெற்றன. அதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.

மேலும் படிக்க ...

போகர் ஏழாயிரத்தில் சிவன்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
ஆய்வு
22 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

வாய்மொழி வழியாகத் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் காலமாற்றத்திற்கு ஏற்ப சங்க இலக்கியம், அற இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பியம், சிற்றிலக்கியம், சித்தர் இலக்கியம், நவீன இலக்கியம் என புதிய செய்திகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டு திகழ்கின்றது. இதனைத் தொல்காப்பியர்,

"உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்
வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே" (நூ. 1162)

பொருளியல் எனும் நூற்பா மூலம் விளக்குகின்றார். அவ்வகையில் சித்தர்களில் குறிப்பிடத்தக்கவரான போகரின் சப்தகாண்டம் என்னும் நூலில் இடம்பெறும் சைவசமயக் கடவுளான சிவபெருமான் பற்றிய புராணச் செய்திகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

போகர் வரலாறு

கடவுள் மனிதனைப் படைத்தார் எனும் ஆத்திகவாதியானாலும், மனிதன் கடவுளைப் படைத்தான் எனும் நாத்திகவாதியானாலும் அவர்களின் அறிவுக்கு எட்டாத பரம்பொருள் ஒன்று உண்டு என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அது இயற்கை சக்தியாகவோ அல்லது இறை சக்தியாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப பெயர் வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால் பரம்பொருள் ஒன்றுதான். இதனைக் கண்டுணர்ந்தவர்கள் சித்தர்கள். அந்தச் சித்தர்களில் குறிப்பிடத்தக்கவர் போகர் ஆவார்.

பதினெண் சித்தர்களில் ஒருவர் போகர். இவரின் முழுப்பெயர் போகநாதன். இவர் தன்னைப் போகநாதன், கைலாச போதரிசி எனக் கூறிக் கொள்கிறார். இவரின் குருநாதன் காலாங்கி நாதர். போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தர் ஆவார்.

மேலும் படிக்க ...

பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (10) - ஜென் தங்கக் கோவில்( Kinkaku-ji( Zen Golden -Pavilion) in Kyoto) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
22 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜென் தங்கக் கோவில் எனது கோயாட்டாவில் உள்ள மூன்றடுக்கு கட்டிடம் யூனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் அந்த ஜென் கோவில் 1399ல் கட்டப்பட்டது. அதில் இரண்டு அடுக்குகள் தங்கத்தால் ஆனவை . தூரத்தில் இருந்து பார்த்தபோது ஏற்கனவே நான் பார்த்த அமிர்தசரஸ் பொற்கோவிலை நினைவு படுத்தியது. இங்கும் கட்டிடத்தின் முன்பகுதியில் பெரிய தடாகம் உள்ளதால் சூரிய ஒளியில், கட்டிடத்தின் நிழல் அழகான பிம்பமாக நீரில் தெரியும். இந்த கோவிலின் கூரையின் உச்சத்தில் தங்கத்தாலான கருடன் ஒளிர்ந்தபடியே பறந்துகொண்டிருந்தது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து இமாலயத்தை கடந்து சென்ற பௌத்தம், சீனாவில் விரிவடைந்து மகாஜான பௌத்தம் ஆகி , அதிலிருந்து பூத்தது இந்த ஜென் பிரிவு. இந்த பௌத்த கோவில் ஜென் பிரிவுக்கானது.

நமது மகாவிஷ்ணுவின் கருடன் எப்படி கொயாட்டோவின் தங்கக் கோவிலின் கூரையில் பறந்து வந்துள்ளார் என்ற கேள்வியுடன் அந்த இடத்தை சுற்றி வந்தேன். ஒவ்வொரு திசையில் பார்க்கும்போது அந்த மாலை நேரத்து வெயிலில் கட்டிடத்தின் அழகு கண்களை நிறைத்தது.

இந்த கோவில் அமிடா புத்தருடன் கருணைக்கான பெண் தெய்வத்திற்கு உரியது . இந்த கட்டிடத்தின் உள்ளே செல்ல நாங்கள் அனுமதிக்கப்படவில்லை : காரணம் 1950 இல் அங்கிருந்து புத்த குருவாகப் பயிற்சிபெற்ற மாணவர் ஒருவரால் இந்த ஜென் தங்கக் கோவில் முற்றாக எரிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்ட கட்டிடமே நாம் இப்பொழுது பார்ப்பது.

ஏற்கனவே கூறியபடி இந்த அழகிய ஜென் புத்த கோவிலில் மாணவராக இருந்த இளம் பிக்கு ஏன் எரித்தார் என்ற கேள்விக்குப் பைத்தியகாரன் எனப் பதில் கிடைக்கிறது .

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் பழமொழி! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,-

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,-
ஆய்வு
21 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

பழமொழிகள் அச்சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக்கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும், தெளிவுடனும், சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன. சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதற்காக கம்பர் தம் இராமாயணத்தில் தேவைப்படும் இடங்களில் பழமொழிகளை பயன்படுத்தியுள்ளதை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.

தொல்காப்பியத்தில் பழமொழி

தமிழில் பழமொழி இலக்கியத்திற்கு முதன் முதலாக வரையறை தந்தவர் தொல்காப்பியரே.

“பாட்டு உரை நூல் வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லொடு அவ்வேழ்”
(தொல்காப்பியம்- செய் 78)

நுண்மை விளங்கவும், சுருக்கம் விளங்கவும், ஒளியுடைமை விளங்கவும், மென்மை விளங்கவும், இன்னோரன்ன விளங்கித் தோன்றிக் கருதிய பொருளைக் காரணத்தொடு முடித்துக் கூறுதல் முதுமொழி என்று கூறுவர்.

“நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப”
(தொல்காப்பியம்-செய் 175)

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (9): - 9)ஷின்டோ ஆலயம்( Fushimi Inari Shrine) கொயாட்டா! - நடேசன் -
  2. இரு கவிதைகள் - சி.ரஞ்சிதா , இலங்கை -
  3. ஸ்கார்பரோவில் எழுத்தாளர் இளங்கோவின் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' நூல் வெளியீடு! - வ.ந.கி -
  4. பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (8): - யப்பானிய நிஞ்ஜாசா, முராய் வீரர்கள்! - நடேசன் -
  5. மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! (5) - ஜோதிகுமார் -
  6. கனடா பீல் பிரதேச குடும்ப மன்றத்தின் 16 வது ஆண்டு விழா! - சுலோச்சனா அருண் -
  7. கூகி வா தியாங்கோ - வாழ்வும் மரணமும்! - வாசன் -
  8. காலம் நுஃமான் சிறப்பிதழ் “நுண்மாண் நுழைபுல நுஃமான்” - ஈழக்கவி -
  9. முருகபூபதி அவர்களின்; பிறந்த தினம் பதின்மூன்று யூலை! வாழ்த்துகிறேன்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
  10. லெட்சுமணன் முருகபூபதி : ஒரு பன்முக ஆளுமை! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
  11. மறக்க முடியாத எழுத்துலக ஆளுமைகளில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -
  12. எழுத்தாளர் இளங்கோவின் (டி.செ.தமிழன்) சிறுகதைத்தொகுப்பு வெளியீடு - 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்'
  13. பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (7) - யப்பானிய தேயிலை - நடேசன் -
  14. கொழும்பு நகரில் அமரர் பாலசுப்பிரமணியம் நினைவுச் சிறுகதை[ப்போட்டிப் பரிசளிப்பு நிகழ்வு!
பக்கம் 11 / 119
  • முதல்
  • முந்தைய
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • அடுத்த
  • கடைசி