பதிவுகள் முகப்பு

மு.தளையசிங்கத்தினை தெரிந்து கொள்ள...... 14ம் திகதிய உரையாடலுக்கான தொகுப்பு- 03 - பெளசர் -

விவரங்கள்
- பெளசர் -
நிகழ்வுகள்
13 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ தமிழ் மொழிச் செயற்பாட்டகம் சார்பில் இலண்டனில் நடைபெறவுள்ள எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய மீள்வாசிப்பு பற்றிய நிகழ்வு  பற்றிய , பதிவுகள் இணைய இதழில் வெளியான, எழுத்தாளர் பெளசரின் அறிவிப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இலங்கையின் தமிழ் இலக்கியச் சூழலைப் பல்வேறு பிரிவுகளாகக் கோட்பாடுகள் வாயிலாக, காலகட்டம் வாயிலாகப் பிரித்தாலும், அவற்றை மேலும் பல உப பிரிவுகளாகப் பிரித்தாலும், அவற்றில் மூன்று காலகட்டங்கள் முக்கியமானவை: முற்போக்கு, நற்போக்கு மற்றும் பிரபஞ்ச யதார்த்தவாதம்.  இம்மூன்றின் மூலவர்களாக நான் அ.ந.கந்தசாமி, எஸ்.பொன்னுத்துரை மற்றும் மு.தளையசிங்கம் ஆகியவர்களையே  குறிப்பிடுவேன்.

மு.த மகத்தான ஆளுமை என்பதில் சந்தேகமில்லை. என்னைப்பொறுத்தவரையில் அவர் தனது நூலான 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் பாவித்துள்ள சொற்பதங்களில் (தாழ்த்தப்பட்ட சமூகங்களின் இலக்கியம் பற்றிய கருத்துகள்) உடன்பாடில்லையென்றாலும் நிஜவாழ்வில் அவர் அவ்விதமான சொற்பதங்களுக்கேற்ப வாழவில்லையென்பதையும் அறிந்து மதிக்கின்றேன். அச்சொற்பதங்களைப்பாவிக்காமல் அவர் சிறப்பாக அந்நூலிலுள்ள கட்டுரைகளை எழுதியிருந்தால், அந்நூல் முக்கியமான இடத்திலிருந்திருக்கும். இவ்விதம் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கும் நிலையில் இருந்திருக்காது.

இவரும் தனது குறுகிய வாழ்வில் மறைந்து விட்டார். தனது சமூக,அரசியற் செயற்பாடுகளுக்கேற்ப வாழ்ந்ததாலேயே அவரும் மரணத்தைத்தழுவியதாகவும் அறியப்படுகின்றது.

அவரைப்பற்றி அறிய முயற்சி செய்பவர்கள் கூடுதலாக மு.பொ.வின் பிரபஞ்ச யதார்த்தவாதம் என்றால் என்ன? அது கூறும் தத்துவம் என்ன? என்பவற்றில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். உண்மையில் மார்க்சியமும், மதங்களும் மனிதர்களின் அனைத்துப்பிரச்சினைகளுக்குமான விடுதலைக்குத்தான் தமது கோட்பாடுகளுக்கேற்ப வாதங்களை முன் வைக்கின்றன. பிரபஞ்ச யதார்த்தவாதம் என்பது மு.பொ.  மார்கசியத்தை உள்வாங்கி, அதனைத் தனது பார்வையில் மேலும் தர்க்கங்களுக்கு உள்ளாக்கி, இன்னுமொரு தத்துவத்தை முன் வைக்கின்றார். அது சரியா தவறா என்பதற்கப்பால் , அந்த அவரது தர்க்கச்சிறப்புள்ள சிந்தனைதான் முக்கியமானது. மு.த.வை அறிந்துகொள்வதற்கு அவரது பிரபஞ்ச யதார்த்தவாதக் கோட்பாடுகளை அவர் எவ்விதம் மார்க்சியத்திலிருந்து வந்தடைந்தார் என்பதைப்புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அவரது அக்கோட்பாடு பற்றிய கட்டுரைகளிலேயே முக்கிய  கவனம் செலுத்த வேண்டும். அதன் பின்பே அவரது படைப்புகளில் கவனத்தைக் குவிக்க வேண்டும். இதுவே எனது பார்வை.

ஒரு மனிதரின்  பங்களிப்பினையும்  பாத்திரத்தினையும் மதிப்பிட , அவரது   திறந்த வாழ்வையும்   மரணத்தினையும் விட- உங்களுக்கு வேறு சாட்சியங்கள் ஏதும் வேண்டுமா? - வ.ந.கிரிதரன் -


மு.தளையசிங்கத்தினை தெரிந்து கொள்ள......  14ம் திகதிய உரையாடலுக்கான தொகுப்பு- 03 - பெளசர் -

ஒரு மனிதரின்  பங்களிப்பினையும்  பாத்திரத்தினையும் மதிப்பிட , அவரது   திறந்த வாழ்வையும்   மரணத்தினையும் விட- உங்களுக்கு வேறு சாட்சியங்கள் ஏதும் வேண்டுமா?  

மேலும் படிக்க ...

' கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: மற்றும் சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.' ('Women in leadership: Achieving an equal future in a covid-19 world') - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
சமூகம்
11 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- - சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8) திண்டுக்கல் காந்திக்ராம் பெண்கள் இன்ஸ்டியூட் மாணவிகளுக்கு 8.3.2021ல் ஆற்றிய சொற்பொழிவின் சாரலிலான விளக்கமான கட்டுரை. -


முன்னுரை:

'Women in leadership: Achieving an equal future in a covid-19 world' கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.' என்ற தலைப்பு எனது கட்டுரையின்; பொருளாக எடுக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் அகில உலக மாதர் தினவிழா பங்குனி எட்டாம் திகதி தொடங்குகிறது.இவ்வருட மாதர் தினவைபவங்கள்,'கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.' இந்தக் கருத்துப் பொருள் சார்ந்த தலைப்பை ஐக்கிய நாடுகள்நாடுகள் அறிவித்திருக்கிறது. இன்று பொதுவாழ்வு,உத்தியோகத்துறைறை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் பெண்களும், இனி,எதிர்வரும் காலத்தில் உலகின் பல பணிகளிலும் தங்களைப் பிணைத்துக் கொண்டு சாதனை படைக்கவிருக்கும்; இளம் பெண் தலைமுறையினரும், ஆண்களுக்குச் சமமானமுறையில் பல துறைகளிலு'சமத்துவம்' பெறபேண்டும் என்று.ஐ.நா.சபை அழுத்திச் சொல்கிறது. மிகவும் கொடுமையான கோவிட-19 கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள்,ஒட்டுமொத்த உலகின், பாதுகாப்பு,கல்வி,சுதந்திரம்,பொருளாதார வளர்ச்சி என்பன, சீருடன் வளர ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இந்தக் கொடிய வைரசு எடுத்துக்காட்டியிருக்கிறது. உலகத்தில் பல்வித வேறுபாடுகளால் மக்கள் தங்களைத் தாங்களே பிரித்துக் கொண்டு, முரண்பட்டுக்கொண்டு பல பிரச்சினைகளையுண்டாக்கிப் பிரிந்து வாழும் அத்தனை மனிதர்களும்,இயற்கையின் பார்வையில் ஒன்றுதான் என்பதை இந்தக் கொடிய  கோவிட் 19 வைரஸ்,.சாதி.மத,இன,நிற பேதமின்றித் தாக்கியழித்துக் கொண்டிருப்பதிலிருந்த எங்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டுரையில்:

1.அகில உலக மாதர் தின வரலாறு,
2.கோவிட் கால கட்டத்திலும் மனித மேன்மைக்கும் உயர்வுக்கும் பாடுபடுவதாக உலக ஊடகங்களால் அங்கிகரிக்கப்பட்ட பெண் ஆளுமைகள்,
3. முக்கியமாக இந்திய நாட்டைச்சேர்ந்த அல்லது இந்திய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் சாதனையாளர்கள்ஒரு சிலரைப் பற்றிக் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
4.அத்துடன், இனறைய கால கட்டத்தில் தோற்று நோய் தடுப்பூசியான வக்ஸின் தயாரிப்பில் பெண்கள் சாதனை பற்றிய குறிப்புகள்.
5.கடைசியாக இன்றைய இளம் தலைமுறை தங்களையும் மேம்படுத்தி, தங்களைப் போன்ற ஒடுக்கப் பட்ட,அடக்கப் பட்ட,வசசதியற்ற பெண்களை மேம்படுத்த உதவுவது எதிர்காலம் முன்னேற மிகவும் அத்தியாவசியம் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் - “ அந்நியர்கள் “ என்ற நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு!

விவரங்கள்
- தகவல்: சுப்ரபாரதிமணியன் -
இலக்கியம்
11 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “ அந்நியர்கள் “ என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்  திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக  கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா  ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர் ( 044 28270 937 )

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம்: இணைய வெளி உரை நிகழ்வு - பரதக்கலை (தோற்றம் , தொடர்ச்சி & வளர்ச்சி)

விவரங்கள்
தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
10 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வு: சிலம்பு சுட்டும் குறிஞ்சி மக்களின் வாழ்க்கை - முனைவர் மூ.சிந்து -

விவரங்கள்
- முனைவர் மூ.சிந்து எம்.ஏ.,பி.எட்.,எம்ஃபில்.,பிஎச்.டி.,(யுஜிசி.செட்.,நெட்.), உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்-641048. -
ஆய்வு
10 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச்சுருக்கம்
மக்களால் ஒருங்கிணைந்து உருவாக்குவது சமூகமாகும். அத்தகைய மனிதனுடைய ஒவ்வொரு சிறப்பும் மனிதனின் சிறப்பாகவே கருதப்படுகிறது. தாம் வாழும் நிலத்தின் தன்மையைப் பொறுத்து மக்கள் பிரிக்கப்பட்டனர் என்பதையும், குறிஞ்சி நிலமான மலையும், மலை சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் சிறப்பையும், அவர்களுக்குள் உள்ள பல வகையானப் பிரிவுகளையும், நிலத்தின் தன்மையையும், நிலத்தில் வழிபடும் தெய்வமாக விளங்கும் முருகனின் சிறப்பும், வழிபாட்டு முறைகளையும் எடுத்துக் கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.

முன்னுரை
மக்கள் ஒருங்கிணைந்து உருவாக்கும் சமூகத்தில் மக்களின் சிறப்பே நாட்டின் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. மனிதன் நன்மை, தீமையைப் பகுத்து அவற்றின் வழி செயல்படும் திறனாலேயே உயர்திணையாகச் சுட்டப்பட்டான். “மக்கள் தாமே ஆறறிவுயிரே” என்னும் தொல்காப்பிய வரிகள் மூலம் மனிதன் ஆறறிவுடைய சிறப்பிற்குரிய திறமானது புலப்படுகிறது.

நோக்கம்
மக்களின் சிறப்பு நாட்டின் சிறப்பாகக் கருத அம்மக்கள் வாழும் நிலங்களுக்கு ஏற்ப பகுக்கப்பட்டனர். மலையும் மலை சார்ந்த பகுதியில் வேட்டையாடுதலைத் தொழிலாக் கொண்டு வாழும் குறவர்களின் வாழ்க்கையையும், அந்நிலத்திற்குரிய சிறப்புகளையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மேலும் படிக்க ...

ஈழத்து மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனுக்கு இன்று 93 ஆவது பிறந்த தினம்! முற்போக்கு இலக்கிய உலகில் சிறந்த மனிதநேயவாதி! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
09 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும் கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையை இன்று நகர்ந்துள்ளார். உரும்பராய் கிராமத்தில் செல்லையா – இராசம்மா தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாகப்பிறந்த கணேசலிங்கன், தனது ஆரம்பக்கல்வியை உரும்பராயில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையிலும் அதனையடுத்து சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாம் தரம் வரையிலும் கற்றபின்னர், யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் மேற்கல்வியை தொடர்ந்தார். கணேசலிங்கன் அன்று கற்ற பரமேஸ்வராக்கல்லூரிதான் பின்னாளில் 1974 இல் யாழ். பல்கலைக்கழக வளாகமாக உருமாறியது. இந்தப்பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்தபோது, கணேசலிங்கனின் நாவல்களும் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் பல சிறுகதைகள் , கட்டுரை – விமர்சன நூல்கள் – சிறுவர் இலக்கியம் – பயண இலக்கியம் என நூறுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்குத்தந்துள்ள கணேசலிங்கனின் தற்போதைய வயதிலிருந்து கணக்குப்பார்த்தாலும் வருடத்துக்கு ஒரு புத்தகம் என பிறந்தது முதல் இன்று வரையில் அதிகம் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார் இந்த அமைதியும் தன்னடக்கமும் மிக்க சாதனையாளர் என்ற முடிவுக்கு வரமுடியும். மூத்த தமிழ் அறிஞர் மு.வரதராசனும் (மு.வ) இவரது நெருங்கிய நண்பர். மு.வ. மறைந்தபின்பு அவரது நினைவாகவும் ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அச்சிலே வெளிவந்த இத்தனை நூல்களும் எத்தனை ஆயிரம் பக்கங்களைக்கொண்டவை என்ற ஆராய்ச்சியில் நாம் ஈடுபடத்தேவையில்லை.

செவ்வானம் நாவல் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளியானது. குறிப்பிட்ட நீண்ட முன்னுரையே பின்னாளில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற விரிவான நூலாகியது. இந்நூல்குறித்து விமர்சகர் வெங்கட்சாமிநாதன் மாக்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற சிறு நூலை எதிர்வினையாக எழுதினார். 1973 இல் பூரணி காலாண்டிதழ் இதனை மறுபிரசுரம் செய்தது. பேராசிரியர் நுஃமான் இதற்கு எதிர்வினையாக நீண்ட கட்டுரைத்தொடரை மல்லிகையில் எழுதினார். அதற்கு மு.பொன்னம்பலம் மல்லிகையிலேயே எதிர்வினை எழுதினார். இவ்வாறு ஆரோக்கியமான விமர்சன கருத்துப்பரிமாறல்களுக்கு வழிகோலிய மூலவர் செவ்வானம் படைத்த கணேசலிங்கன் என்பது இலக்கிய உலகின் பழையசெய்திதான். எனினும் இப்படியும் எமது தமிழ் இலக்கியப்பரப்பில் நிகழ்ந்திருக்கிறது என்ற தகவலையும் இச்சந்தர்ப்பத்தில், புதிதாக எழுதவந்துள்ள இளம் ஆக்க இலக்கிய வாதிகளுக்கும் இளம் விமர்சகர்களுக்கும் தெரிவிக்கின்றேன்.

மேலும் படிக்க ...

புகலிடத் தமிழ் சினிமா – ஒரு தொடர்ச்சியற்ற பயணத்தில் - ‘புகலிடத் தமிழ் சினிமா’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! - வாசன் -

விவரங்கள்
- வாசன் -
நூல் அறிமுகம்
09 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சில வாரங்களுக்கு முன்பு வி.சபேசனின் ‘துணை’ குறும்படம் குறித்து ஒரு சிறு குறிப்பொன்றினை இத்தளத்தில் பதிவிட்டிருந்தேன். அதன்போது சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளிவந்திருந்த அருந்ததியின் ‘முகம்’ குறித்தும் ஜீவனின் ‘எச்சில் போர்வைகள்’ குறித்தும் சில குறிப்புக்களைத் தொட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. அப்போதுதான் எனக்கு இந்த நூல் ஞாபகம் வந்தது. இயக்குனர் அருந்ததியும், யமுனா ராஜேந்திரனும் தொகுத்தளித்த ‘புகலிடத் தமிழ் சினிமா’ என்ற இந்த நூலானது இன்றைய சூழ்நிலையிலும் ஒரு முக்கியமான நூலாக எனக்குப்பட்டது. முக்கியமாக அன்று இந்நூலில் கட்டுரையாளர்கள் வெளிப்படுத்திய புகலிட தமிழ் சினிமாவானது எதிர்நோக்கிய அதே சிக்கல்களையும் சவால்களையும் இன்றைய சமகாலத்திலும் எதிர்நோக்குவதினால் இந்நூல் குறித்து சில கருத்துக்களை பகிர்வதும் அவசியம் என நினைக்கிறேன்.

பாரிஸிலிருந்து முகம் பதிப்பகத்தினரால் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதற்கு பின் ‘முகம்’ பதிப்பகத்தினர் ஏதேனும் நூல் வெளியிட்டிருக்கின்றனரா என்ற தகவல் என்னிடம் இல்லை. வெளிவரவில்லையென்றே நினைகின்றேன். அதேபோல் இதுபோன்றதொரு சினிமா குறித்ததொரு நூல் வெளிவந்ததா என்ற கேள்விக்கும் இல்லை என்ற கசப்பான பதிலே விடையாகக் கிடைக்கின்றது.

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனும் இயக்குனர் அருந்ததியும் தொகுத்தளித்த இந்நூலில் மு.புஷ்பராஜன்,அருந்ததி, ஜீவன், அபிநயன், சுவிஸ் ரஞ்சி, கதிர்காமநாதன், அழகு குணசீலன், புவனன், எஸ்.பி.ஜெகாதரன், யமுனா ராஜேந்திரன் ஆகியோர் பல கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

பதிப்புரையில் இயக்குனர் அருந்ததி “சினிமாவின் சாத்தியப்பாடுகள் அதிகம். ஆயினும் இப்புலம்பெயர் சூழலில் ஒரு சினிமாவை உருவாகுவதற்கான சாத்தியபாடுகள் மிக குறைவானவை. எனவே அதன் காரணங்கள் பற்றியும் அதன் கடந்து போதல் பற்றியும் இந்நூல் பேசுகின்றது” என்று பதிவு செய்கிறார். அவர் இதனைக் கூறி இப்போது 20 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் எமது நிலைமையில் எந்தவித மாற்றமுமில்லை. அந்தக் குறைந்தளவு சாத்தியப்பாடுகளை வைத்துக்கொண்டுதான் நாம் இன்னமும் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க ...

மேனாட்டுப்பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை பற்றி... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று செம்மொழியான தமிழ் தொடர்ந்து வாழ்கின்றதென்றால் காரணம் என்ன? நான் குறிப்பிடும் தமிழ் காப்பியங்களில், இலக்கியத்திலுள்ள தமிழ். பிறமொழிச்சொற்களை உள்வாங்கி ,வளமுடன் திகழும் தமிழ். இந்தத்தமிழ் இன்றும் நிலைத்து நிற்கின்றதென்றால் காரணம்..

தமிழகத்திலும், இலங்கையிலும் வாழும் தமிழர்களால்தாம். இவர்களில் அதிகப்பங்களிப்பு வழங்கியவர்கள் என்ற பெருமையைத்  தமிழகத்தமிழர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். இந்நாடுகளில் வாழ்ந்த, வாழும் தமிழர்கள்தாம் பிறநாடுகளில் குடியேறி அங்கும் தமிழுக்குப் பங்காற்றுகின்றார்கள்.

அண்மைக்காலமாக மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்நாடுகளில் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்காகச் செயலாற்றி வருகின்றார்கள். முக்கிய காரணங்களில் ஒன்று உலகளாவியரீதியில் தமிழுக்கான அங்கீகாரம் இதன் மூலம் கிடைக்கும் என்பதுதான். தமிழகப்பிரபலங்கள் தொடக்கம் தமிழக அரசு வரைக்கும் நிதியுதவியை அளித்து வருகின்றார்கள். மொழி வளர்ச்சிக்கு இத்தகைய உதவிகள் அவசியமே. ஆனால் தற்போதுள்ள சூழலில் இதற்கான முக்கியத்துவமென்ன?தேவையென்ன?

தமிழை இதுவரை காலமும் பேணிப்பாதுகாத்து வந்த தமிழர்கள் வாழும் தமிழகம், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை உள்ளது . அங்குள்ள பல்கலைக்கழகங்கள் போதிய நிதியுதவியின்றி மொழி ஆராய்ச்சிகளில் அதிக அளவில் ஈடுபடுவதற்கு முடியாமல் சிரமப்படுகின்றன. தமிழ் மொழியை வளர்ப்பவர்கள் தமிழில் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதும் பேராசிரியர்கள் மட்டுமல்லர். கவிதை, சிறுகதை, நாடகம், நாவல்,  மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் எழுதி மொழிக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களும்தாம்.

மேலும் படிக்க ...

கவிதை: சவாலைத் தெரிவு செய்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
கவிதை
07 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்!

       ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
        நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
        நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
        செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்’
        என்ற பாரதியாரின் வரிகளை முன்வைத்து

மேலும் படிக்க ...

பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் ... அவுஸ்திரேலியா
இலக்கியம்
07 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம்!

" மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்."   ' மண்மகிழப் பெண் பெண்மகிழ வேண்டும் . பெண்ணைத் தெய்வம் என்கிறோம். மண்ணை  பூமித்தாய் என்கிறோம். ஓடிவரும் நதிகளுக் கெல்லாம் பெண்ணின் பெயரையே சூட்டி நிற்கிறோம்.பிறந்த நாட்டைத் தாய் நாடு என்கிறோம்.  பேசும் மொழியைத் தாய் மொழி என்கிறோம். பெண்ணின் பெயரைப் பெரிதும் மதித்து இவற்றை யெல்லாம் செய்கின்ற சமூகமானது பெண்மையை எப்படிப் பார்க் கிறது ? அந்தப் பெண்மைக்கு எந்தளவு உயர்வினைக் கொடுக்கிறது ? அந்தப் பெண்மையின் நிலைதான் என்ன ? இவையெல்லாம் கேள்விகளாய் எழுந்து நிற்கின்றன !

  உடல் அளவில் உறுதி மிக்கவனாக ஆண் விளங்கினாலும் மன வளவில் உறுதி மிக்கவளாகப் பெண்ணே விளங்குகிறாள். இதனா ல்த்தான் ' ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் ' என்று சொல்லப்படுகிறது. அவள் - தாயாக, தாரமாக , சகோதரமாக, மகளாக, தோழியாகக் கூட அமைந்து விடலாம். வீட்டின் அமைதியும் , ஆனந்தமும் வெளியில் வியாபித்து சமூகத்தையே சாந்திக்கு ஆட்படுத்தும் ஆற்றல் நிச்சயம் பெண் மையின் கைகளிலேதான் தங்கியிருக்கிறது. அந்த அளவுக்கு பெண்மை என்பது வாழ்க்கையின் பெரு வெளிச்சம் எனலாம். அந்தப் பெரு வெளிச்சத்தை அளித்து நிற்கும் பெண்ணை பெண்மையைப் போற்றும் தினமாகத்தான் " சர்வதேச மகளிர் தினம் " முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது எனலாம்.

  பெண்களைப் பற்றிப் பெருமையாய் பேசும் சமூகத்தில் பெண்களின் ஆரம்ப கால நிலைமைகள் எப்படி அமைந்திருந்தன ? பெண்களுக்கு இந்தச் சமூகம் குறிப்பாக ஆணினம் எந்தளவுக்கு சுதந்திரத்தை வழங்கி வந்திருக்கிறது ? இவையெல்லாம் வரலாறாகி நீண்டு நிற்கிறது என்பதுதான் இதற்குப் பொருத்தமான விடை எனலாம்.

மேலும் படிக்க ...

மாலு : புலம்பெயர்தல் எனினும் துவக்கத்திலேயே தீர்ந்துவிடும் லட்சியம்! - பேராசிரியர் .பாலகிருஷ்ணன் -

விவரங்கள்
- பேராசிரியர் .பாலகிருஷ்ணன் -
நூல் அறிமுகம்
07 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - "மாலு மற்றும் 1098 (Notch,  1098 ) சுப்ரபாரதிமணீயனின்  இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு கோவையில் அன்று கோவை பீளமேடு கிளஸ்டர்  மீடியா கல்லூரியில் நடைபெற்றது. மாலு மற்றும் 1098 என்ற திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் Notch,  1098 என்ற பெயர்களில்  மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன Notch நாவலை கோவையைச் சார்ந்த பேரா .பாலகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார் 1098 நாவலை மதுரையைச் சார்ந்த பேராசிரியர் வின்செண்ட் மொழிபெயர்த்துள்ளார் இவற்றை டெல்லியைச் சார்ந்த Authours press பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விசாரணை திரைப்படத்தின் மூல கதையாசிரியர் சந்திரகுமார் , பாரதியார் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் செல்வராஜ்,, ஆவணப்பட இயக்குனர் மயன்,  மொழிபெயர்ப்பாளர் கோவிந்த சாமி உட்பட பலர் நூல்களின் வெளியீட்டில் கலந்து கொண்டார்கள் .  பேரா பாலகிருஷ்ணன் மறைந்த கவிஞர் வேனில் கிருஷ்ணமூர்த்தி மறைவை ஒட்டி அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாலு - Notch நாவல்  மொழிபெயர்ப்பு அனுபவத்தை விவரித்தார் . 1098 நாவலின் மையமான பெண்மைய சிந்தனை மையம் பற்றியும் மொழிபெயர்ப்பு சிறப்பு பற்றியும் விவரித்தார் . சுப்ரபாரதிமணியன் இந்த இரு நாவல்களின் படைப்பு அனுபவங்களை விவரித்தார். பீளமேடு கிளஸ்டர்  மீடியா கல்லூரி நிர்வாகிகள் அரவிந்தன் , திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்  . ஜாப்பர் நன்றியுரை வழங்கினார். மேற்படி நிகழ்வில் மாலு நாவலை Notch என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமிது." - சுப்ரபாரதிமணியன் - ]


             குற்றங்கள் அனைத்தும் தண்டனைக்குரியன என அனைத்து நாடுகளிலும் சட்டம் உள்ளபோதும் அதிகபட்ச தண்டனையான தூக்கு அல்லது மரணம் விளைவிக்கும் தண்டனை எல்லா நாடுகளிலும் கிடையாது .அது அழிக்கப்பட்டு விட்டது .ஆனாலும் சில நாடுகள் சிங்கப்பூர் மலேசியா போன்றவை அதனை இன்னும் நடைமுறைப் படுத்துகின்றன. ஐநா மனித உரிமை ஆணையம் பலமுறை அவற்றை கண்டுபிடித்து கண்டித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு சிங்கப்பூர் அரசு 29 வயது இளைஞர் ஒருவரை ,தமிழர் இலங்கையைச் சேர்ந்தவர் குறிப்பிட்ட அளவைவிட மிகவும் குறைந்த அளவு சற்று கூடுதலான போதைப் பொருள் வைத்திருந்தார் என்று தூக்கிலிட்டு விட்டது வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நடந்தது அப்பீல் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. இந்நாடுகளில் தூக்கிலிடப்படும் குற்றவாளிகளில் கணிசமானோர் போதைப்பொருள் குற்றத்திற்காக தண்டிக்கப்படுவார்கள் .போதைப் பொருளைப் பயன்படுத்துதல், விற்பனை செய்தல், மேலும் கடத்துதல் என்பன மிகுந்த குற்றச் செயல்களாக இங்கே பாவிக்கப்படுகின்றன .மற்ற நாடுகளில் இதற்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடையாது. பிரிட்டிஷ் வணிகர்கள் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் அடிமை வணிகத்தை நிறுத்தி விட்டபின் போதைப்பொருள் விற்பனையை பரவலாக மேற்கொண்டிருந்தனர் என்பது எட்வர்டு கலியாணோ என்பவர் கூறுகிறார் .இந்தியாவை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆண்டபோது அதனை இன்னும் தனது ஆளுமையை பரப்பும் இலக்குகளை ஒட்டி ஒரு ராணுவத் தளமாக -ஒரு நிர்வாக முறைமைத் தளமாகவே கையாண்டனர் என்று அமிதாவ் கோஷிம் குறிப்பிடுகிறார். இந்தியாவில் இருந்து ஹாங்காங் -சீனா போன்ற நாடுகளுக்கு கடந்து செல்வதற்காக அவர்கள் உருவாக்கிய போதை இலக்குதான் ‘சில்க் ரூட்’ எனப்படும் பட்டுப்பாதை .இந்தியாவின் உயர் கிழக்கில் அமைந்த பர்மா போன்ற நாடுகளையும் வெட்டி செல்லும் பாதை -என்றும் எட்வர்டு கலியாணோ என்பவர் கூறுகிறார். தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாக எடுத்துச்செல்லப்பட்டு இரண்டாம் உலகப் போரில் லட்சக்கணக்கில் ஜப்பானிய வீரர்கள் மேலேறிச் செல்வதற்கான ‘குவாய்’ நதியின் மீது கட்டப்பட்ட மிக நீண்ட பாலத்தை உருவாக்குவதற்கான கடினமான ஈவு இரக்கமற்ற பணியிலும் அமர்த்தப்பட்டனர் என்பது வரலாறு .மாலு நாவலின் களம் இவை அல்ல .எனினும் காலம் கடந்த -மேலான நூற்றாண்டிலிருந்து இன்றுவரை இப்பகுதிகளில் விரியும் துயர் நிறைந்த காட்சியில் தனது பெருமூச்சு கலந்து நிறைகிறது. தமிழர்கள் அடிமைகளாக. உடலுழைப்பை கொடுத்தவர்கள் மற்றும் பொய்யான போதைப்பொருள் கடத்தல் உள்ளதாக தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டவர்களும் கூட.

மேலும் படிக்க ...

கவிதையும் திரைப்படப் பாடல்களும் அன்றும் இன்றும் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
07 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் ஒரு புலவனோ, கவிஞனோ அல்ல என்பதை முதலில் சொல்லிவிட்டே இந்த பதிவுக்குள் வருகின்றேன்! செய்யுள்களை ரசிப்பதற்கு புலவனாகவோ, கவிதைகளைப் பற்றிப் பேசுவதற்கு கவிஞனாகவோ நாம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை! கவிதையை நயத்தல் உணர்வுபூர்வமான அறிவுபூர்வமான விடயம். ஒரு காலத்தில் இலக்கியம் கவிதை வடிவிலும் காவிய முறைமையிலும் தோன்றியது. கால மாற்றங்கள் மரபுக்கவிதையிலிருந்து வசன கவிதைக்கு வந்து, பின்னர் புதுக்கவிதை வடிவம் பெற்று, தற்காலத்தில் கவிதை என்ற ஒற்றைப்பரிமாண வடிவத்தில் அழைக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டு முதல் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்த்திரைப்படங்களில் எவ்வாறு கவிதை செல்வாக்கு செலுத்தியது என்பதையும் நாம் பார்க்கமுடியும்.

1944 ஆம் ஆண்டில் வெளிவந்த தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற பாடல்களை எழுதிய பாபநாசம் சிவன் அவர்களும் கவிஞர்தான். இவருக்கு முந்திய மகாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில், தமிழ்த்திரைப்படங்கள் இல்லை. ஆனால், பாரதியின் கவிதைகள் பல திரையிசைப்பாடல்களாகிவிட்டன. பாரதி சிறந்த சந்தக்கவிஞர். அவரது கவிதை வரிகளில் ஓசை நயமும் பொருள் பொதிந்த எளிமையான சொற்களும் இழையோடும். சாதாரண மக்களும் புரிந்துகொள்ளத்தக்க கருத்துக்கள் செறிந்திருக்கும். அதனால் ரசிகர்கள் அவரது கவிதைகள் திரைப்பட பாடல்களாக மாறியவேளையில் அவற்றில் லயித்து நெருங்கிவிட்டார்கள். இசையமைப்பாளர்கள் பலர் அவரது ஒரே பாடலுக்கு வெவ்வேறு இசைக்கோர்வைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். பி.ஆர். பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஒலித்த அனைத்துப்பாடல்களும் பாரதியாரின் கவிதைகள்தான். இதற்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன்.

மேலும் படிக்க ...

மறக்க முடியாத சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள் (சுந்தர்)! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தின்  நினைவு தினம் மார்ச் 3 -

இலங்கைத்  தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை என்றால் முதலில் நினைவுக்கு வருவது சிரித்திரன் சஞ்சிகைதான். சிரித்து இரன் என்னும் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறப்பான பெயர் மட்டுமல்ல சஞ்சிகையின் நோக்கத்தையும் சிறப்பாகவே வெளிப்படுத்தும் பெயர். யாழ் மாவட்டக் கரவெட்டியைச் சேர்ந்த சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் (சுந்தர்) இந்தியாவுக்குக் கட்டடக்கலை கற்கச் சென்று சிறந்த கேலிச் சித்திரக்காரர்களிலொருவராகத் திரும்பி வந்தார். இந்தியாவில் 'பிளிட்ஸ்', 'கொஞ்ச்' சஞ்சிகைகளில் இவரது கேலிச்சித்திரங்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் பிரபல கேலிச்சித்திரக் கலைஞர்களாக விளங்கிய ஆர்.கே.லக்‌ஷ்மண், போல் தாக்கரே ஆகியோருடன் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

இலங்கை திரும்பிக் கட்டடத்திணைக்களத்தில் படவரைஞராகப் பணியாற்றியவரைத் தினகரனில் கேலிச்சித்திரங்கள் வரைய அழைத்தவர் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள்.  அப்பொழுது இவர் தினகரனில் சுந்தர் என்னும் பெயரில் வரைந்த 'சவாரித்தம்பர்' என்னும் தொடர் கேலிச்சித்திரங்களை மறக்கவே முடியாது. அவரது ஊரான கரவெட்டியில் வாழ்ந்த, அவருக்கு அறிமுகமான ஒருவரை ஆதர்சனமாகக்கொண்டே அவர் அப்பாத்திரத்தை  உருவாக்கியதாக ஊடகக்கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். அத்தொடரில் வரும் சின்னக்குட்டி, பாறி மாமி பாத்திரங்களும் கரவேட்டியில் வாழ்ந்தவர்கள் என்றும் அக்கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். பின்னர் அவர் 1963இல் சிரித்திரன் சஞ்சிகையை கொழும்பில் ஆரம்பித்ததும், அதன் பின் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்டதும் யாவரும் அறிந்ததே.

மேலும் படிக்க ...

கீழடி அகழாய்வு : பதிப்பும் பதிப்புச் சிக்கலும் - முனைவர் ம இராமச்சந்திரன் -

விவரங்கள்
- முனைவர் ம இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ் ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
07 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 முனைவர் ம இராமச்சந்திரன் -மதுரை மாவட்டம் வைகை ஆற்றின் கரையிலிருந்து வடக்கே 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கீழடி. மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவைச் சேர்ந்தவர்கள் 2014 தொடங்கி 2017 வரையில் மூன்று கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டனர். பலவகை  அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவை திராவிடப் பண்பாட்டை மேலும் செழுமைப்படுத்துவதாக இருந்தமையால் இவ்வாய்வு மேலும் தொடர பலத் தடைகள் உருவாக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை இதைக் கையில் எடுத்து 2017 இல் தனது நான்காவது கட்ட ஆய்வை மேற்கொண்டது. அதேபோல 2018 இல் ஐந்தாம் கட்ட ஆய்வும் செம்மையாகச் செய்து முடிக்கப்பட்டது.

கீழடி அகழாய்வில் 5000 திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை சங்க கால மக்களின் வாழ்வில் பண்பாட்டை வெளிக்கொணர்வதாக இருக்கின்றன. அவை செங்கற் கட்டுமானங்கள், சுடுமண் உறைக் கிணறுகள், கூரை ஓடுகள், அணிகலன்கள், இரும்புக் கருவி பாகங்கள், வட்டச் சில்லுகள், சுடுமண் காதணிகள், கண்ணாடி, செம்பு பொருட்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், மட்பாண்ட ஓடுகள், ரெளலட்டட் மட்பாண்டங்கள், அரட்டைன் ஓடுகள், தமிழி என்றழைக்கப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட மட்கல துண்டுகள், கீறல்கள், குறியீடுகள், வடிவங்கள் போன்றவையாகும்.

இவற்றின் மூலம் தமிழ்நாட்டின் தொடக்க வரலாற்றுக் காலக் கணிப்பில் பல மாற்றங்களும் புதிய அவதானிப்புகளும் ஏற்பட்டுள்ளன. கீழடியில் சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாய்வு முடிவுகள் கீழடி மக்கள் பண்பாட்டின் காலம் கி.மு 6 முதல் கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் நகரமயமாதல் ஏற்படவில்லை என்ற கருத்தை மறுக்கும் விதமாகக்  கீழடிச் சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும்  தமிழ் பிராமி எழுத்து வடிவத்தின் காலம் கி.மு.5 என்ற காலக்கணிப்பு கீழடி மூலம் கி.மு.6 என்று மாற்றமடைந்துள்ளது.

மேலும் படிக்க ...

திருப்பூர் சக்தி விருது 2021 விழா - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
நிகழ்வுகள்
07 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திருப்பூர் சக்தி விருது 2021 விழா

7/3/2021 , மதியம் 4-7 மணி , காமாட்சியம்மன் கல்யாண மண்டபம், ( பழைய பேருந்து நிலையம் பின்புறம் ) திருப்பூர்

திருப்பூர் சக்தி விருது 2021 ( 17ம் ஆண்டில்) : இவ்வாண்டு விருது பெறுவோர் : எழுத்தாளர்கள் , கல்வியாளர்கள், பிற துறையினர்

படைப்பிலக்கியம்:
புதிய மாதவி , மும்பாய்.,ராஜலட்சுமி பாண்டிச்சேரி,
கிருத்திகா பொள்ளாச்சி, தேவகி ராமலிங்கம், சென்னை.
பொற்கொடி சென்னை, வான்மதி சென்னை.,
பிரபாவதி சுகுமார் கோவை,அம்பிகாவர்ஷினி மதுரை , பா.தென்றல் காரைக்குடி, ஜெயஸ்ரீ கோவை
 ஜெயா வேணுகோபால் தர்மபுரி, மங்கை கோவை,
,உமாராணி விழுப்புரம், பவித்ரா நந்தகுமார்,
 ஆரணி இரா.பிரபா பாண்டி, கமலம் சுப்ரமணியம் , கொடுவாய், அறச்செல்வி கோவை , சரஸ்வதி சண்முகம் திருப்பூர்

மேலும் படிக்க ...

சுதந்திரன் பற்றிய ஞானம் சஞ்சிகைக் கட்டுரையும், அ.ந.கந்தசாமி பற்றிய தவிர்ப்பும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மார்ச் மாத ஞானம் சஞ்சிகையில் நூலகர் என்.செல்வராஜா 'ஈழத்து இதழியலில் சுதந்திரனின் வழித்தடம்! விரிவான ஆய்வுக்கான சில குறிப்புகள்' என்றொரு கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரையினைப் படித்துப் பார்த்தபோது எனக்கு உண்மையில் அதிர்ச்சியாகவிருந்தது.  1949 - 1952 காலகட்டத்தில்  சுதந்திரனின் ஆசிரியப்பீடத்திலிருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் பெயரை அங்கு நான் காணவில்லை.  ஏன் இந்தத்தவிர்ப்பு? நூலகர் செல்வராஜாதான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.. அ.ந.க.வின் சுதந்திரன் பத்திரிகைக்கான பங்களிப்புப் பற்றிய பல குறிப்புகளை முகநூலிலும் , பதிவுகள் இணைய இதழிலும் பதிவு செய்துள்ளேன். சுதந்திரனில் அவர் எழுதிய படைப்புகள் பற்றிய விபரங்களையும் பதிவு செய்துள்ளேன். கவீந்திரன், கலையரசன், பண்டிதர் திருமலைராயர், அ.ந.கந்தசாமி ஆகிய பெயர்களில் அ.ந.க.வின் படைப்புகள் சுதந்திரனில் அவர் ஆசிரியராகவிருந்த காலகட்டத்தில் வெளியாகியுள்ளன. அதன் பின்னரே அ.ந.க இலங்கைத் தகவற்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பத்தாண்டுகள் (1953 -1963) பணிபுரிந்தார்.அக்காலகட்டத்தில் அவர் தகவற் திணைக்களத்தின் தமிழ்ச் சஞ்சிகையான ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஆசிரிய பீடத்திலிருந்தார்.

அ.ந.க.வின் சுதந்திரனுக்கான பங்களிப்பு பற்றி மேலும் குறிப்பிடுவதற்கு முன்னர் சிலவற்றைச் சுட்டிக்காட்டுகின்றேன். எழுத்தாளர் என்.கே.ரகுநாதனின் நேர்காணலொன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதனை எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா தனது வலைப்பதிவில் பதிவு செய்துள்ளார். அதில் என்.கே.ரகுநாதன் கேள்வியொன்றுக்குப் பின்வருமாறு பதிலளித்திருப்பார்:

" கேள்வி: உங்களின் இலக்கியப் பயணம் எப்படி  ஆரம்பமானது?

என்.கே.ரகுநாதன்: சிறுவயதில் இருந்தே எனக்கு நன்றாக வாசிக்கும் பழக்கம் இருந்தது. எங்கள் ஊரவரான யாழ்ப்பாணக் கவிராயர் எனப்படும் கவிஞர் பசுபதிக்கும் எனக்கும் இடையில் நல்லதொரு நட்பும் இருந்தது. இவையும் நான் எழுதிய கதைகள் எல்லாவற்றையும் உடன் பிரசுரம் செய்த சுதந்திரன் பத்திரிகையின்  ஆசிரியர் அ.ந. கந்தசாமியும் என் இலக்கியப் பயணத்தில் முக்கிய பங்கு வகித்தனர் எனலாம்.  அதை விட 1951 ம் ஆண்டு எனது 20 வயதில் எழிலன் என்ற புனைபெயரில் நான் எழுதிய முந்திவிட்டாள் என்ற கதை இந்தியாவில் அந்த நேரம் வெளிவந்த பொன்னி என்ற சஞ்சிகையில் அட்டைப் படத்துடன் பிரசுரமாகி மிகுந்த ஊக்கம் தந்தது."

மேலும் படிக்க ...

ஆய்வு: குறுந்தொகையில் வண்ணங்கள் - முனைவர் கோ. சுகன்யா -

விவரங்கள்
- முனைவர் கோ. சுகன்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் – 641004 -
ஆய்வு
04 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை :

ஒலியமைப்பினைச் சார்ந்து வரக்கூடிய செய்யுளுறுப்புகளில் ஒன்று வண்ணம் என்பதாகும். பேராசிரியர் இதனை சந்த வேறுபாடு என்று குறிப்பிடுவார். தொல்காப்பியர் வரையறுத்துள்ள செய்யுளுறுப்புகளில் இருபத்தாறாவது உறுப்பாக வண்ணம் உரைக்கப்பட்டுள்ளது. இவ்வண்ணத்தின் வகைகளாக இருபது வகைகளைக் குறிப்பிடுகிறார். உலக வழக்கில் சிந்துப்பாடல்களிலும், நாடகப் பாடல்களிலும் இலக்கியத்தில் சந்த விருத்தங்களிலும் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப்பாடல்களிலும், நூற்றுக்கணக்கான வண்ணங்கள் பயின்று வருகின்றன. உலக வழக்கு செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்குகளிலும் காணப்பெரும் வண்ணங்கள் எழுத்து, சொல், தொடைநலன் என்பவற்றால் அமைவன. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வண்ணத்தியல்பு என்னும் நூலினை எழுதியுள்ளார். அவ்வகையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் பயின்று வரும் வண்ணங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஒலிக்கோலம் :
பழைய மரபு நெறியில் ஒலிக்கோலத்தை ‘வண்ணம்’ என்றனர். ஒரேஓர் ஒலி அல்லது அதற்கினமான ஒலிகள் ஓரடியிலோ, அல்லது பாடல் முழுவதிலுமோ பயின்று வருவதினையே வண்ணம் என்று கூறியுள்ளனர். வல்லொலி எழுத்துக்கள், மெல்லொலி எழுத்துக்கள் ஆகியவற்றைப் புலவர் ஏதேனும் ஒரு காரணத்தோடு திட்டமிட்டே அமைத்திருக்கிறார். இந்த ஓசைநயமே படிப்போர்க்கு இன்பத்தை விளைவிக்கும் வண்ணமாகும். தொல்காப்பியரின் வண்ணம் பற்றிய கருத்துக்கள் இத்தகையதே. சங்க இலக்கியப்பாடல்கள் வாய்மொழியாக வழங்கப் பெற்றவை. அதனால்தான் தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்களுக்கு சங்கப் பாடல்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் கூற முடியாமல் இடர்ப்படுகின்றனர்.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 370 : கம்பரும், பாரதியும் & வடமொழியும் பற்றி..... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
04 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியும், வடமொழியும்!

" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!"

இங்குள்ள 'நாமமது தமிழரெனக் கொண்டிங்கு' என்னும் தொடரில் வரும் 'நாமம்' வடசொல்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
03 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் - முருகபூபதி -அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் செயற்படுத்தப்படவுள்ள இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டு அமையவுள்ளது.

1. கடந்த 2019, 2020 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழி பெயர்ப்பு ஆகிய ஐந்துவகை தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

2. ஒவ்வொரு வகையிலும் சிறந்ததாகத் தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கு தலா 50 ஆயிரம் இலங்கை ரூபா பரிசாக வழங்கப்படும்.

3. நூலாசிரியரின் முழுப்பெயர், வயது, முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை அடங்கிய சுயவிபரக் குறிப்பொன்றினையும் நூலுடன் இணைத்தனுப்புதல்வேண்டும்.

மேலும் படிக்க ...

மானுட விடுதலைக்கவி கண்ணதாசன்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
-ஊர்க்குருவி -
கலை
01 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மானுட விடுதலைக்கவி கண்ணதாசன்! - ஊர்க்குருவி -

கவிஞர் கண்ணதாசனின் சிறந்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். எவ்விதம் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' உலக மக்களை விளித்துப்பாடப்பட்டதோ அவ்விதமே இப்பாடலையும் எடுக்கலாம். திரைப்படக்கதைக்குப் பொருந்தும் வகையில் வரிகள் இருந்தாலும், இப்பாடல் இவ்வுலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் அமைந்துள்ளது. இனி பாடலின் முக்கிய  வரிகளைப் பார்ப்போம்.

"அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்"

மேலும் படிக்க ...

'ரொறன்ரோ' தமிழ்ச் சங்க இணைய வெளிக்கலந்துரையாடல்: நூல்களைப் பேசுவோம் - நயினை மான்மியம்!

விவரங்கள்
தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
01 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூல் அறிமுகம்: யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis)‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ (Talking to My Daughter: A Brief History of Capitalism ) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
01 மார்ச் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவஜோதி யோகரட்னம் ‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ என்ற கிரேக்க இடதுசாரிப் பொருளியலாளார் யானிஸ்  வருஃபாகிஸ் அவர்களது நூல் குறித்து பேச உள்ளேன். இதனை எஸ்.வி. ராஜதுரை தமிழில் மிகச் செழுமையாக மொழிபெயர்த்து க்ரியா வெளியீடாக 2020 இல் வெளிந்துள்ளமை மிகப் பாராட்டுக்குரியதாகும். 203 பக்கங்களை அடக்கியுள்ள இந்நூல் மிக நேர்த்தியாக,  அடிக்குறிப்புகளோடு அச்சிட்டிருப்பது வாசகனை வாசிப்பில் ஆவல்கொள்ளச் செய்கிறது.  பொருளாதாரம் பற்றிய புத்தகம் என்ற தலைப்பைப் பார்த்தபோது சிரத்தை எடுத்துப் படிக்க முடியாத வகையில் மிகவும் கடினமாக இருக்குமோ அல்லது சலிப்பைத் தரக்கூடியவிதமாக இருக்குமோ என்று எண்ணினேன். பொருளாதாரத்துறை சார்ந்த வல்லுநர்கள்தான் அதனை வாசித்து விளங்குவார்கள் என்றும் சிந்தனையைக் குழப்பிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்புத்தகத்தை வாசித்தபோது சாதாரண நடைமுறை விஷயங்களிலிருந்து மிக உன்னதமான விஷயங்கள்வரை எல்லாவற்றையும் பொருளாதார முடிவுகள்தான் தீர்மானிக்கின்றன என்றும், வாழ்க்கைச் சம்பவங்களோடும்,  கலைச் சொற்களோடும் யானிஸ் அவர்கள் மகள் ஸீனியாவுக்கு அளிக்கும் விளக்கம் அற்புதமானது. மகளுக்கு பொருளாதாரம் பற்றி விளக்குவதுபோல் சுவையாக விவரிப்பது விநோதமான முயற்சியாகவும் எனக்குத் தென்பட்டது.  

           கோவிட் -19 தொற்று உலக நாடுகள் எல்லாவற்றிலும் பேசிச்கொண்டிருக்கும் இந்த வேளையில்,  நாம் இதனைப் பேசுவது பொருத்தமா என்று எண்ணும்போது உலக மக்கள் முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள் என்ற சில அறிஞர்களின் கருத்தும் இந்நூலில் எனக்குக் கிடைத்தது. இதுவரை அனுபவித்து வந்த வசதிகளில் பெரும்பாலானவை வரலாறாக மாறப்போவதையும் காணப்போகிறோம் என்ற ஒரு கருத்தும் உண்டு. கொரோனா நோய்த் தொற்று எப்படி மனித வாழ்க்கையின் ஒரு பகுதியோ அதே போலத்தான் புத்தகக் வெளியீட்டுச் செயற்பாடுகள் இன்னொரு பகுதி என்று கூறியவர் க்ரியா ராம் அவர்கள். அவர் கோரோனா தாக்கத்தால் மறைந்தாலும்,  அவரையும் இவ்வேளை என் மனதில் நினைந்து அஞ்சலித்து இதனை விதைக்கிறேன். உண்மையில் இலக்கியப் படைப்புக்கள்,  கவிதைகள்,  அறிவியல் புனைகதைத் திரைப்படங்கள் போன்றன இல்லாவிட்டால்; நிகழ்காலத்தைப் புரிந்து கொள்வது கடினம்.

மேலும் படிக்க ...

சிறுவர் கதை: அரசாளும் தகுதி யாருக்கு? - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுவர் இலக்கியம்
28 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுபதுகளில் , எனது மாணவப்பருவத்தில், பதின்ம வயதினில் எழுதிய குழந்தைகளுக்கான சிறுகதை. இச்சிறுகதை சிரித்திரன் சஞ்சிகை வெளியிட்ட 'கண்மணி' சிறுவர் சஞ்சிகையில் வெளியானது. 'கண்மணி' சஞ்சிகை ஓரிரு இதழ்களுடன் நின்று போனது துரதிருஷ்டமானது. - வ.ந.கி -



மேலும் படிக்க ...

கல்வியியலாளர் பேராசிரியர் ப. சந்திரசேகரம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்று! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் பற்றி அண்மையில்தான் சரியாக அறிந்துகொண்டேன். பேராசிரியர்கள் கைலாசபதி, கா,சிவத்தம்பி, மெளனகுரு, பாலசுந்தரம், நா.சுப்பிரமணியன், சபா.ஜெயராசா, எம்.ஏ. நுஃமான் போன்றோரை அறிந்த அளவுக்கு இவரை நாம் பெரிதாக அறிந்திருக்கவில்லை.  பல்கலைக்கழக மட்டத்தில் அறிந்திருந்த அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் இவரை அதிகமாக அறிந்திருக்கவில்லையென்றே கருதுகின்றேன். இதற்கு  முக்கிய காரணங்கள் இவருடன் பழகிய சக பேராசிரியர்கள் போதுமான அளவில் ஊடகங்களில் இவரைப்பற்றி அதிகம் எழுதாததும், இவரது படைப்புகளைத் தாங்கிய நூல்கள் அதிக அள்வில் வெளிவராததும் என்று  கருத வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மண்டூரைச் சேர்ந்த பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் கல்வியியற் துறையில் முக்கியமான பங்களிப்பு செய்தவர். இவருடன் கூட சபா ஜெயராசா அவர்களும் நினைவுக்கு வருகின்றார். இவரது படைப்புகளைப் பார்க்கும்போது இவர் மேலைத்தேய, கீழைத்தேயக் கல்வித்தத்துவங்களை உள்வாங்கித் அவற்றிலிருந்து தான் உருவாக்கிய எண்ணங்களைத் தன் மாணவர்களுக்குப் போதித்த,  எழுதிய ஒருவராக இனங்காண்பேன்.  இவரது சிந்தனைப்போக்கைப் பேராசிரியர் மெளனகுரு அவர்கள் 'சந்திரசேகரனிஸம் என்பார்.

இவரது படைப்புகளைப் பார்க்கும்போது இவர் மேலைத்தேய, கீழைத்தேயக் கல்வித்தத்துவங்களை உள்வாங்கி, அவற்றிலிருந்து தான் உருவாக்கிய எண்ணங்களைத் தன் மாணவர்களுக்குப் போதித்த, எழுதிய ஒருவராக இனங்காண்பேன். இவரது சிந்தனைப்போக்கைப் பேராசிரியர் மெளனகுரு அவர்கள் 'சந்திரசேகரனிஸம் என்பார். இவரைப்பற்றிய பேராசிரியர் சி.மெளனகுருவின் கட்டுரையைப் படிக்கையில் இவர் மார்க்சியக்கோட்பாடான பொதுவுடமைத்தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரென்பதை அறிய முடிகின்றது. அதேசமயம் இவரது கட்டுரைகளைப் படிக்கையில் இவர் முற்று முழுதாகப் பொருள்முதல்வாதச் சிந்தனையில் மூழ்கிய மார்க்சியவாதியாகவும் தெரியவில்லை.  ஆன்மாவே அனைத்துக்கும் அடிப்படை என்னும் கருத்துமுதல்வாதச் சிந்தனை மிக்க ஒருவராகவே இவரை அறிய முடிகின்றது. இவ்விடயத்தில் இவரை நான் 'காண்பது சக்தியாம். இக்காட்சி நித்தியமாம்' என்று பொருளையும் ,சக்தியையும் ஒன்றாகக் காணும்  மகாகவி பாரதியாருடன் வைத்து இனங்காண்பேன். உண்மையில் நவீன அறிவியலும் அதைத்தானே (பொருளும் சக்தியும் ஒன்று) எடுத்துக்காட்டுகின்றது. சக்தியையும் பொருளையும் ஒன்றாகக் காணும் ஆதிசங்கரரின் கோட்பாடுகளையொட்டிய அத்துவைதவாதியாகவும் இனங்காண்பேன். கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய இரு தத்துவப்போக்குகளையும் உள்வாங்கிய , இரண்டுக்குமிடையில் ஒருவித சமரசத்தைக்கண்ட கல்வியியற் சிந்தனையாளராக இவரை நான் காண்பேன்.

மேலும் படிக்க ...

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு & கவிதைப்பட்டறை 2021 - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
அரசியல்
27 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சுப்ரபாரதிமணீயனின்  இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு கோவையில் வெள்ளி அன்று கோவை பீளமேடு கிளஸ்டர்  மீடியா கல்லூரியில் நடைபெற்றது. மாலு மற்றும் 1098 என்ற திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் Notch,  1098 என்ற பெயர்களில்  மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன Notch நாவலை கோவையைச் சார்ந்த பேரா .பாலகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார்.

1098 நாவலை மதுரையைச் சார்ந்த பேராசிரியர் வின்செண்ட் மொழிபெயர்த்துள்ளார் இவற்றை டெல்லியைச் சார்ந்த Authours press பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

விசாரணை திரைப்படத்தின் மூல கதையாசிரியர் சந்திரகுமார் , பாரதியார் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் செல்வராஜ்,, ஆவணப்பட இயக்குனர் மயன்,  மொழிபெயர்ப்பாளர் கோவிந்த சாமி உட்பட பலர் நூல்களின் வெளியீட்டில் கலந்து
கொண்டார்கள் .  பேரா பாலகிருஷ்ணன் மறைந்த கவிஞர் வேனில் கிருஷ்ணமூர்த்தி மறைவை ஒட்டி அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாலு - Notch நாவல்  மொழிபெயர்ப்பு அனுபவத்தை விவரித்தார் . 1098 நாவலின் மையமான பெண்மைய சிந்தனை மையம் பற்றியும் மொழிபெயர்ப்பு சிறப்பு பற்றியும் விவரித்தார் . சுப்ரபாரதிமணியன் இந்த இரு நாவல்களின் படைப்பு அனுபவங்களை விவரித்தார்.

பீளமேடு கிளஸ்டர்  மீடியா கல்லூரி நிர்வாகிகள் அரவிந்தன் , திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்  . ஜாப்பர் நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. அஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )! ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது ! - முருகபூபதி -
  2. அவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு - முருகபூபதி -
  3. சிறுகதை : அவரும் நானும் ஒரு படகுப் பயணிகள்! - கடல்புத்திரன் -
  4. தர்க்கம் செய்வோம் வாருங்கள்: தனித்தமிழ் பற்றி முகநூலில் ஒரு தர்க்கம்! - வ.ந.கிரிதரன் -
  5. ‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் பற்றி.. முருகபூபதி -
  6. MEDIA ADVISORY: Citizenship ceremony to mark Black History Month
  7. ‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
  8. நீண்டதொரு மதிப்பீட்டுக்கான தொடக்க அறிவித்தல்! மீள்வாசிப்புகளும் பதிவுகளும் ... - பெளசர் -
  9. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அமரர் சண்முகலிங்கம் நினைவாக..! - வ.ந.கி -
  10. மண்ணின் மகள்! - வ.ந.கி -
  11. கே.எஸ். சிவகுமாரன்: ஈழத்து இலக்கியத்தின் தனிப்பெரும் விருட்சம் - மு. நித்தியானந்தன் -
  12. காலத்தால் அழியாத கானங்கள்: "தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ" - ஊர்க்குருவி -
  13. சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்!
  14. வாசிப்பும், யோசிப்பும் 369: ஷோபாசக்தியின் பொக்ஸ்: 'நிலவே நீ சாட்சி!' - வ.ந.கிரிதரன் -
பக்கம் 102 / 104
  • முதல்
  • முந்தைய
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • அடுத்த
  • கடைசி