பதிவுகள் முகப்பு

தேவகாந்தனின் 'இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியம்' - ஒரு வரலாற்றுத் திறனாய்வுநிலை நோக்கு குறித்த ஓர் அறிமுகம் - கலாநிதி மைதிலி தயாநிதி -

விவரங்கள்
- கலாநிதி மைதிலி தயாநிதி -
நூல் அறிமுகம்
08 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சில்லையூர் செல்வராசனின் ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி (1967), க. கைலாசபதியின் தமிழ்நாவல் இலக்கியம் (1968), நா. சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் (1978) போன்ற தமிழ்நாவல் வரலாற்று நூல்வரிசையிலே 1895 முதல் 2020 வரையிலான காலத்தில் எழுந்த நாவல்களை அவை எழுந்த காலப் பின்னணியில் வைத்து நோக்குவதும், கூரிய விமர்சனப் பார்வையை முன்வைப்பதுமான தேவகாந்தனின் இலங்கைத் தமிழ் நாவல்இலக்கியம் - ஒரு வரலாற்றுத் திறனாய்வுநிலை நோக்கு என்ற நூல் (காலச்சுவடு பதிப்பகம், 2021) தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளது.

இந்நூலின் முகப்பை அசன்பேயுடைய கதை (1885) மோகனாங்கி (1895)) எனும் தமிழ் நாவல்களின் பழைய மங்கித் தேய்ந்து போன அட்டைகள் அலங்கரிக்கின்றன. இலங்கையில் நாவல் எனும் இலக்கிய வகை தோன்றிய குறிப்பிட்டதொரு வரலாற்றுக்காலகட்டத்தை இவ் அட்டை பிரதிபலிக்கும் அதேசமயம் கால மாற்றத்தையும், தமிழ் நாவல் வரலாற்றின் தொடர்ச்சியையும் குறிப்பால் உணர்த்துகிறது. அத்துடன், இந்நூல்களின் அட்டைகளை நூலின் முன்னட்டையில் பதித்தமைக்கு வேறு முக்கிய காரணங்களும் உள. சுந்தரராஜனும், சிவபாதசுந்தரமும் எழுதிய தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூல் சித்திலெப்பை மரைக்காயரின் அசன்பேயுடைய கதை இலங்கையைக் களனாகக் கொண்டிராத காரணத்தால் இலங்கைத் தமிழ் நாவல் அல்ல என்று கூறுகிறது. ஆனால், களத்தை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும் இக்கருத்தை தேவகாந்தன் , சல்மான் ருஷ்டியின் மிட்நைட் சில்ட்ரன் (1981), சியாம் செல்வதுரையின் ஃபணிபோய் (1994) போன்ற நாவல்கள் முறையே இந்தியா, இலங்கை எனும் நாடுகளைக் களங்களாகக் கொண்டிருப்பினும், பிரிட்டிஷ், கனேடிய நாவல்களாகவே கொள்ளப்படுமாற்றைச் சுட்டிக்காட்டி, அசன்பேயுடைய கதை இலங்கைத் தமிழ்நாவலே என நிலைநாட்டுகின்றார்.

மோகனாங்கியும் பல்கலைக்கழகம் சார்ந்த புலமையாளரின் கவனத்தை ஆரம்பத்தில் பெறாதிருந்து, பின்னர், உயர்கல்வி நிறுவனங்களுக்கு வெளியே இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாகவே தமிழிலே எழுந்த முதல் வரலாற்று நாவல் என்ற தகுதிப்பாட்டை எய்தியது. அது குறித்த வரலாற்றையும் தேவகாந்தன் பதிவிட்டுள்ளார். நூலாசிரியர் தன் கவனத்தைக் குவித்து மிகுந்த அக்கறையுடன் எழுதிய பகுதிகள் இவையாதலால், இவ்விருநாவல்களுக்கும் இந்நூலில் விசேட இடம் உண்டு. அம்முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் இந்நூல்கள் முன்னட்டையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன எனலாம்.

மேலும் படிக்க ...

கல்வி, மருத்துவத்தில் உதவி நாடும் அனைவருக்கும் உதவும் 'அபயம்'! மருத்துவர் கந்தப்பிள்ளை பார்த்திபனின் சிறப்பான சமுதாயப் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

      -  மருத்துவர் கந்தப்பிள்ளை பார்த்திபன் -

மே 4, 2024 அன்று 'டொரோண்டோ'வில் நடந்த யாழ் இந்துக் கல்லூரியின் கனடாச் சங்கத்தின் வருடாந்த இராப்போசன நிகழ்வான 'உண்டாட்டு'வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டவர் மருத்துவர் கந்தப்பிள்ளை பார்த்திபன்.  இவர் யாழ்  இந்துக்கல்லூரியில் பணிபுரிந்த அமரர் கந்தப்பிள்ளை மாஸ்டரின் மகன். எனது பால்யப் பருவத்து நண்பர்களில் ஒருவரான கந்தப்பிள்ளை அநபாயனின் இளைய சகோதரர்.

எழுபதுகளில் நண்பர் அநபாயனைச் சந்திக்கக் குளப்பிட்டிக்குச் செல்கையில் காற்சட்டையுடன் இவரைப் பார்த்திருக்கின்றேன். அதற்குப் பின்னர் இந்நிகழ்வில்தான் பார்த்தேன்.  இவரைப்பற்றிய குறிப்பில் இவர் தன் துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளைச் செய்திருப்பதை அறிய முடிந்தது.  சுவாசம் பற்றிய மருத்துவத் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்.  மார்பு மருத்துவராக 24 ஆண்டுகள் சேவையாற்றிய இவர் 18 ஆண்டுகள் மருத்துவ இயக்குநர் மற்றும் தலைமை மருத்துவராகப் பணியாற்றியிருக்கின்றார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நோயாளிகளைப் பராமரிப்புக்கான உள்ளக வழிகாட்டல்களை உருவாக்கப் பங்களித்திருக்கின்றார்.  லூடன் - டன்ஸ்டபிள் போதனா வைத்தியசாலையில் University College Londonன் மாணவர்களின் கற்கைக்கான  உப பீடாதிபதியாகவும் ஆறாண்டுகள் பணியாற்றியிருக்கின்றார்.  

மேலும் படிக்க ...

சந்தியாப்பிள்ளை மாஸ்டர் என்னும் இளைஞர்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இங்குள்ள அவரது புகைப்படம் 'இகுருவி ஐயா' அவரது தளத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களிலொன்று. நன்றியுடன் பாவித்துக்கொள்கின்றேன்.

சந்தியாப்பிள்ளை மாஸ்டரைப்பற்றி நினைத்தால் எனக்கு முதலில் தோன்றுவது அவரது திடகாத்திரமான உடம்பும், மீசையும், சிரித்த முகமும்தாம்.  அவருடன் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தால் சில கேள்விகள் கேட்கவேண்டுமென்று நினைப்பதுண்டு. அதற்குக் காரணம் அவரது வயதும், தோற்றமும்தாம். எண்பத்தைந்து வயது, ஆனால் தோற்றமோ நாற்பதுகளின் நடுப்பகுதிதான். எப்படி இவரால் இவ்விதமிருக்க, தோன்ற முடிகின்றது என்று வியப்பதுண்டு. அதனால்தான் அவரைச் சந்திக்கையில்  அவ்விதம் சில கேள்விகள் கேட்கவேண்டுமென்று நினைப்பதுண்டு.

இன்று அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது இளமையின் இரகசியம் பற்றிச் சில கேள்விகள் கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில்கள் பலருக்கும் உதவக்கூடும் என்பதால் அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

கடைசி இலை - ஆங்கிலத்தில்: ஒ.ஹென்றி தமிழில்: அகணி சுரேஷ் -

விவரங்கள்
- ஆங்கிலத்தில்: ஒ.ஹென்றி தமிழில்: அகணி சுரேஷ் -
சிறுகதை
07 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அமெரிக்க எழுத்தாளர் ஒ ஹென்றியின் (O. Henry) “The last Leaf” என்னும் சிறுகதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் எழுத்தாளர் அகணி சுரேஷ். -

வாசிங்டன் சதுக்கத்தின் மேற்கே நகரின் ஒரு சிறிய பகுதியில் தெருக்கள் காட்டுத்தனமாகப் போயுள்ளன. அவை வெவ்வேறு திசைகளில் திரும்புகின்றன. அவை "இடங்கள்" என்று அழைக்கப்படும் சிறிய துண்டுகளாக உடைக்கப்படுகின்றன. ஒரு தெரு ஒன்று அல்லது இரண்டு முறை குறுக்கறுத்துச் செல்கிறது. ஓர் ஓவியர் இந்த தெருவில் சாத்தியமான மற்றும் மதிப்புமிக்க ஒன்றைக் கண்டுபிடித்தார். ஓர் ஓவியரிடம் அவர் பணம் செலுத்தாத சில ஓவியப் பொருட்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவரிடம் பணம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஒரு மனிதன் பணம் எடுக்க வந்தான் என்று வைத்துக்கொள்வோம். அந்த மனிதன் அந்தத் தெருவில் நடந்து, ஒரு சதமும் பெறாமல் திடீரென்று திரும்பி வருவதைச் சந்திக்கலாம்! நகரின் இந்தப் பகுதி கிரீன்விச் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. பழைய கிரீன்விச் கிராமத்திற்கு ஓவியர்கள் விரைவில் வந்தனர். இங்கு அவர்கள் விரும்பும் அறைகள், நல்ல வெளிச்சம் மற்றும் குறைந்த செலவில் கிடைத்தன. சூ மற்றும் ஜான்சி மூன்று தளங்களைக் கொண்ட ஒரு கட்டிடத்தின் உச்சியில் வசித்து வந்தனர். இந்த இளம் பெண்களில் ஒருவர் மைனேவிலிருந்து வந்தவர், மற்றவர் கலிபோர்னியாவிலிருந்து வந்தவர். அவர்கள் எட்டாவது தெருவில் உள்ள ஒரு உணவகத்தில் சந்தித்தனர். அவர்கள் ஒரே மாதிரியான கலை, ஒரே மாதிரியான உணவு மற்றும் ஒரே மாதிரியான ஆடைகளை விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் அங்கு கண்டுபிடித்தனர். எனவே ஒன்றாக வாழவும் வேலை செய்யவும் முடிவு செய்தனர்.

மேலும் படிக்க ...

கனடா, ரொறன்ரோவில் நூல் வெளியீட்டு விழா. - சுலோச்சனா அருண். -

விவரங்கள்
- சுலோச்சனா அருண். -
நிகழ்வுகள்
07 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் சென்ற சனிக்கிழமை ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தமிழகக் கவிஞர் மு. முருகேஸ் அவர்களால் தொகுக்கப் பெற்ற ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ என்ற நூலும், எழுத்தாளர் குரு அரவிந்தனின் ‘சாக்லட் பெண்ணும் பண்ணைவீடும்,’ ‘யாதுமாகி நின்றவள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும், மாலினி அரவிந்தனை இணையாசிரியராகக் கொண்ட ‘தமிழ் ஆரம் - 2024’ சிறுவர்களுக்கான சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப் பெற்றன. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெற்றோர், ஆசிரியர், மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் படிக்க ...

அளவெட்டியின் நாடகர்: சிறுநண்டு மணல் மீது படமொன்று கீறும்! - இரவி அருணாசலம் -

விவரங்கள்
- இரவி அருணாசலம் -
இலக்கியம்
07 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முதற்குறிப்பு: அளவெட்டி, வீரகத்திக்கும் தெய்வானைக்கும் ஏழு பிள்ளைகள். அவர்களுக்கு முதற்பிள்ளை பெண்! தம்பதியினரின் நிறைவுக் குழந்தையும் புதல்வியே ஆனாள்! இடையில் ஐவர், ஆண்பிள்ளைகள். 'பஞ்ச பாண்டவர்' என்று ஊரில்  அவர்களைச் சொன்னார்கள். நாகமுத்து என்னும் முதற்பிள்ளையின் இளைய மகனாக வந்துதித்தவர் பெயர்: அருணாசலம். இளைய மகளான விசாலாட்சியின் மூத்த மைந்தன், வாமதேவன். அருணாசலமும் வாமதேவனும் ஒன்றுவிட்ட அண்ணன், தம்பி. அருணாசலத்துக்கு இரண்டு பிள்ளைகள்: மூத்தவள் பெண்.(சியாமளா) அடுத்து ஆண்.(இரவி) அவ்வாறே வாமதேவனுக்கும். மூத்தவள் தமிழினி என்றானவள். வலவன், இளையவன். அஃதோர் ஒற்றுமை. ஆலமரத்துக்கும் அப்பாலான பெரிய மரம், வீரகத்தி குடும்பம். அக்குடும்பத்தினர் முழுமையாக வாழ்ந்த இடம்: அளவெட்டி வடக்கில் இலகடி என்னும் குறிச்சி. இனித் தொடருங்கள்.    
   
வாமதேவுச் சித்தப்பா என்றால் எனக்கு இரண்டு விசயங்கள் நினைவுக்கு வருகின்றன. 1964, 65ஆம் ஆண்டுகளில் நாங்கள் அளவெட்டி, இலகடியில் வசிக்கிறோம். எனக்கு நாலைந்து வயது. வாமதேவுச் சித்தப்பா வீட்டையும் எங்களது வீட்டையும் ஒரே வேலியே பிரிக்கிறது. அவர்களும் நாங்களும் புழங்குகின்ற பொதுக்கிணறு நாம்பிரான் கோயிலடியில். சித்தப்பா கொழும்பிலோ எங்கேயோ வேலை. விடுமுறைக்கு வீடு வந்தால் காலையிலேயே பொதுக்கிணற்றில் குளித்துவிடுவார். அதற்குமுதல் குளிப்பதற்காக அவர் செய்கின்ற சடங்கு பெரிது. அதிலொன்று பல்லுத் தேய்த்தல்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 38 - “தொ. மு. சி. ரகுநாதனின் பன்முக ஆளுமை” - தகவல்: அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
03 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம் : நாதஸ்வர வாசிப்பின் நுட்பமுறைமைகளும் வழக்கங்களும்’ - தகவல்: முனைவர் கெளசல்யா சுப்ரமணியன் -

விவரங்கள்
’ - தகவல்: முனைவர் கெளசல்யா சுப்ரமணியன் -
நிகழ்வுகள்
03 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சாரங்காவின் கடலினை வரைபவள்: ரசனைக் குறிப்பு - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
நூல் அறிமுகம்
02 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

    

சாரங்கா என்ற குணாளினியை எனக்கு  நீண்ட காலமாகவே எழுத்து மூலமாகவே எனக்குத் தெரியும்! திரு. ஞானசேகரன் அவர்களுடைய ’ஞானம்’ சஞ்சிகையில் இவரும் கவிதை சிறுகதை எழுதுவார்;;. நானும் எழுதுவேன். ‘ஏன் பெண்ணென்று’ என்ற ஞானம் விருது பெற்ற சிறுகதைத் தொகுதியை எனக்கு அனுப்பியிருந்தார் (2004). அதன் பின்னர் லண்டனில் சாவகச்சேரி ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு நான் மேடை அறிவிப்பாளராக சென்ற வேளைதான் 2005 – 2006 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். அவரைக் குழந்தையுடன் சந்திக்க நேர்ந்தது. அது ஒரு மகிழ்வான அனுபவம் ஆனால் அன்றுகூட நேரடியாகப் பேசமுடியவில்லை. அதன் பின்னர் அவரை எனது ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சியில் நேர்காணலை மேற்கொண்டபோது மிக அனுபவச்செறிவோடு செய்திருந்தார்.

     இன்று இந்த கடலினை வரைபவள் என்ற கவிதைத் தொகுதியை பார்க்கும்போது மகிழ்ச்சியைத் தருகின்றது. 37 கவிதைகளை அடக்கி 116 பக்கங்களில் ஜீவநதி வெளியீடாக 2022 ஆம் வெளிவந்திருக்கிறது. கவிதைகள் இப்போ பரவலாக எல்லோராலும் எழுதப்படுகின்றது. வரவேற்பான விடயம். கவிதைகளை விரும்பிப் படிப்பேன். நல்ல கவிதைகள் என்னைத் தொடர்ந்து வரும். மனோபாவத்திற்கேற்ப ஏற்ப அதனை வாசிப்பது. அது ஒரு மாயம் என்றுதான் சொல்லுவேன். இயற்கைச் சுவையோடு, அனுபவங்களோடு, மனித உணர்ச்சிகளை காட்சிப்படுத்துவது அல்லது வெளிப்படுத்துவது கவிதை. கவிதை காலத்தைப் பின்னோக்கிச் செலுத்துகிறது. திரும்பத் திரும்பச் சந்திக்கும்போது நாம் வயதை இழந்துவிடுகிறோம். ஞாபகங்களை சேகரிக்கின்ற  அதனைக் காப்பாற்றுகின்ற ஒரு பெட்டியாகப் கவிதைகளைப் பார்க்க முடிகின்றது. ஆனால் பெண்களின் பெயர்கள் வயதாவதில்லை. அது போன்றுதான் கவிதைகளைப் பார்க்கின்றேன். இன்றும் பாரதியார் கவிதை பேசப்ப:டுகின்றதுதானே! 

மேலும் படிக்க ...

மரண அறிவித்தல்: காசித்தம்பி கந்தவனம் பேரம்பலம் - தகவல்: பேரா சவுந்தரநாதன் -

விவரங்கள்
- தகவல்: பேரா சவுந்தரநாதன் -
மரண அறிவித்தல்கள்
02 மே 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- மட்டுவிலைப் பிறப்பிடமாகவும் ,சாவகச்சேரி, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட காசித்தம்பி கந்தவனம் பேரம்பலம்  (இளைப்பாறிய கிராமசேவை அலுவலர், சாவகச்சேரி) அவர்கள் சித்திரை 20, 2024 , செவ்வாய்க்கிழமை மிஸிஸிசாகா, ஒண்டாரியோ, கனடாவில் காலமானார். - 

மேலும் படிக்க ...

மணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா - ஜெயஸ்ரீ ஷங்கர்-

விவரங்கள்
- ஜெயஸ்ரீ ஷங்கர்-
இலக்கியம்
30 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'மணிக்கொடி' தந்த ஜோதிர்லதா கிரிஜா!

- கடந்த 18.04-2024 அன்று மறைந்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவின் முக்கியமான நாவல் 'மணிக்கொடி'.  இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து கல்கியின்  'அலை ஓசை' , ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' ஆகியவை ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவ்வரிசையில் வெளியான இன்னுமொரு நாவல்தான் ஜோதிர்லதா கிரிஜாவின் 'மணிக்கொடி'.  ர.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் 'கல்கி' சஞ்சிகையின் வெள்ளிவிழா நாவல் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்ற நாவல்.  ஜோதிர்லதா கிரிஜாவின் 'மணிக்கொடி' கல்கியின் பொன்விழா நாவல் போட்டியில் முதற் பரிசு பெற்ற நாவல். 'தனது பெரியப்பாவின் இந்திய சுதந்திரம் அடைந்த தினம் வரையிலான நாட்குறிப்புகளை அடிப்படையாக வைத்து' எழுதியதாக அவரே குறிப்பிட்டிருக்கின்றார். மரணப்படுக்கையில் கிடந்தபோது  அப்பெரியப்பா அக்குறிப்புகளை நாவலாக்கும்படி வேண்டியதாகவும்,அதனால் இந்நாவலை எழுதியதாகவும்' மேலும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

என் வாசிப்பனுவத்தில் நான் வாசித்த சஞ்சிகைகளில் அடிக்கடி இவரது படைப்புகள் வெளியாகிக்கொண்டிருந்தன.  அதன் மூலம் எனக்கு இவரைப்பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆரவாரமற்று தொடர்ச்சியாகச் சளைக்காமல் எழுதிக்கொண்டிருந்தவர். அண்மைக்காலமாக இவர் திண்ணை இணைய இதழில் அதிகமாக எழுதிக்கொண்டிருந்தார். இவரது நாவல்கள் பல வெளியாகியிருந்தன. தமிழ்ப்பெண் எழுத்தாளர்களில் தவிர்க்கப்பட முடியாதவர் இவர்.

இந்நாவல் பற்றியும், இதன் உருவாக்கம் பற்றியும் எழுத்தாளர் ஜெயஶ்ரீ ஷங்கர் எழுதிய  'மணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா' என்னும் 'திண்ணை' இணைய இதழில் பெப்ருவரி 10, 2014 வெளியான இக்கட்டுரை எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா பற்றிய சுருக்கமான அறிமுகக் குறிப்பினையும் உள்ளடகியுள்ளது. அவர் நினைவாக இக்கட்டுரையை மீள்பிரசுரமாக வெளியிடுகின்றோம். - வ.ந.கி,  பதிவுகள்.காம் -

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் - தமிழியல் ஆய்வும், உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகளும்!

விவரங்கள்
-தகவல்;பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
29 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தெளிவாகப் பார்க்கப் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -

கனடாவில் எழுத்தாளர் தேவகாந்தனின் நூல்கள் வெளியீடு - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
நிகழ்வுகள்
29 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


நேற்று ஸ்கார்பரோவில்  எழுத்தாளர் தேவகாந்தனின் 'இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியம்', 'சகுனியின் சிரம்' ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

முனைவர் மைதிலி தயாநிதி, எழுத்தாளர் அருண்மொழிவர்மன், எழுத்தாளர் த.அகிலன் நூல்களைப்பற்றிய தமதுரைகளை ஆற்றினர். நிகழ்வுக்குத் தலைமையேற்று நெறிப்படுத்தியவர் எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரன். பேச்சாளர்கள் தமதுரைகளை நூல்கள் பற்றிய குறை நிறைகளுடன் சுட்டிக்காட்டி ஆற்றினர். முதற் பிரதியினைக் 'காலம்' செல்வம் பெற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க ...

வடக்கு, தெற்கு அரசியல் மற்றும் ரஷ்ய-உக்ரைன் போர் பற்றியோர் அலசல்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
29 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வடக்கின் அரசியல்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், இரு வேலைத்திட்டங்கள், தமிழ் அரசியலின், தீவிர கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன:

    ஓன்று பகிஷ்கரிப்பு.

    இரண்டாவது, பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது.

‘பகிஷ்கரிப்பு–பொதுவேட்பாளர்’ என்ற இரண்டு கோட்பாடுகளுமே மொத்தத்தில் ஒன்றுதான் என்பதும், இவை பொதுவில் புலம்பெயர் அரசியலின் தீவிரமுகத்தால், வலுவாக ஊக்குவிக்கப்பட்டு வருவன என்பதும் வெளிப்படை.

மறுபுறம், இவை இரண்டுமே வட-கிழக்கு மக்களால் நிராகரிக்கப்படவதாகவே இருக்கும் என்பதும், இது அண்மையில் இடம்பெற்ற விமானப்படை கண்காட்சி அல்லது ஹரகரனின் இசைநிகழ்ச்சி என்பனவும் எதிரொலிக்கும் விடயங்களாகும், என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

இருந்தும இவ் அரசியல் முரண்களின் தாக்கம் ஏதோ ஒரு வகையில் தமிழரசு கட்சிக்குள்ளும் ஊடுருவத் தவறவில்லை எனக் கூறலாம்.

மேலும் படிக்க ...

அம்பியெனும் தமிழ்த்தும்பி அவ்வுலகம் சென்றது ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் .... அவுஸ்திரேலியா -
இலக்கியம்
28 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குழந்தை இலக்கியம் என்பது ஆணிவேரை ஒத்ததாகும்.எழுதுவதற்கு மிகவும் சிரமாமன இலக்கியம் எது என்றால் அது " குழந்தை இலக்கியமே " குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டால்த்தான் அது சாத்தியமாகும்.குழந்தைகளின் இலக்கியம் இலக்கிய வகைகளிலே மிகவும் முக்கியமானதாகும். சிறிய வயதிலே படிக்கும் பழக்கம் இருந்தால்த்தான் பெரியவர்கள் ஆன பின்பும் படிப்பார்கள். பெரியவர்களின் இலக்கியத்துக்குக் கூட அடித்தளம் "குழந்தை இலக்கியம் " என்பதுதான் மனமிருத்த வேண்டிய உண்மையெனலாம். அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதில் குறிப்பிட்ட படைப்பாளர்களேஈடுபடுகிறார்கள்.குழந்தைகளுக்கான படைப்புக்களை படைப்பதை ஒரு முக்கிய பணியாக நினைத்தே அவர்கள் தங்களது படைப்புக்களை படைக்கின்றார்கள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் பற்றி எழுதவோ அல்லது பேசவோ தொடங்குவதாய் இருந்தால் அம்பி என்னும் அம்பிகைபாகரை உச்சரிக்காமல் தொடங்கவே இயலாது. அந்த அளவுக்கு அவுஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தனக்கென ஒரு தனியான இடத்தினை அவர் ஏற்படுத்தி வைத்துள்ளர்.அம்பி தாய்மொழிப் பற்று மிக்கவர்.சமூக அக்கறை கொண்டவர்.அடுத்த  தலை முறை யினரான குழந்தைகளை மனமிருத்தினார். அதனால் அவரின் குழந்தைகள் பற்றிய சிந்தனை சிறப் பினைப் பெற்றது எனலாம்.

மேலும் படிக்க ...

கவிஞர் அம்பி விடைபெற்றார்! குழந்தை இலக்கியத்திற்கு வளமூட்டிய கவிஞர்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
28 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்புக்கோர் அம்பி என அனைவராலும் விதந்து சொல்லப்பட்ட கவிஞர் அம்பி அவர்கள் நேற்று  ( 27  ஆம் திகதி ) இரவு அவுஸ்திரேலியா சிட்னியில் தமது 95 ஆவது வயதில் மறைந்துவிட்டார். தன்னைப்பற்றிய  பசுமையான நினைவுகளை எமக்குத் தந்துவிட்டு,  விடைபெற்றிருக்கும்  கவிஞர் அம்பி அவர்கள் இலங்கையில்  வடபுலத்தில் நாவற்குழியில் 17-02-1929 ஆம் திகதி  பிறந்தார்.

தனது ஆரம்பக் கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரியோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர்,  விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார்.  கொழும்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றிய அம்பி, 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று  அதன்பின்னர் 1992 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.

இளம் பராயத்திலிருந்தே கவிதை, கவிதை நாடகம்,  சிறுகதை, கட்டுரை, விமர்சனம்,  ஆய்வு முதலான துறைகளில் அவர் அளப்பரிய பணிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் தமிழ்கூறும் நல்லுலகில் கவிஞர் என்றே அறியப்பட்டவர்.

ஏறினால் கட்டில் இறங்கினால் சக்கர நாற்காலி.  இதுவே அவரது பல வருட வாழ்க்கையாகியிருந்தபோதிலும்,   தனது முதிய வயதிலும்  மெய்நிகர் அரங்குகளில் தோன்றி கருத்துரைத்தார். அம்பி  எமது   அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின்  ஸ்தாபக  உறுப்பினர்.  அத்துடன் இச்சங்கத்தின் மதிப்பார்ந்த காப்பாளராகவும் இருந்தவர்.

மேலும் படிக்க ...

குழந்தைக் கவிஞர் அம்பி இன்று சிட்னியில் இயற்கை எய்தினார்! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்கினேஸ்வரா -
இலக்கியம்
28 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்து சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் கவிஞர் அம்பியின் காத்திரமான படைப்புகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரின் மறைவின் பின்னரும், அவருடைய படைப்புக்கள் குழந்தைகளின் நாக்கினில் தவழும். தமிழ் கூறும் நல்லுலகால் ஈழத்தின் தேசிய விநாயகம் என்றும் குழந்தை கவிஞன் என போற்றப்படும் கவிஞர் அம்பி எனப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகன் அவர்கள் தனது 94 வயதில் இன்று (28/4/24)இயற்கை எய்தினார்.

யாழ் பரியோவான் மாணவன் கவிஞர் அம்பி :

சிறுவர் இலக்கிய படைப்புக்களை தாயகத்தில் மாத்திரமின்றி புலம்பெயர் மண்ணிலும் படைத்த ஈழத்தைச் சேர்ந்த அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்கள் சிறுவர் இலக்கிய வரலாற்றில் காத்திரமான பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.

எளிமையும் தமிழின் அழகும் ஒருங்கே கூடியமையும் அவர் பாடல்கள் பல குழந்தைகளின் நாவில் இன்றும் தவழ்கின்றன. தமிழ் மொழி வளர்ப்பு, கவிதை என்று பல தளங்களில் சாதனைகள் செய்தவர் கவிஞர் அம்பி.

இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் அம்பி இலங்கையில் வடக்கே நாவற்குழி சொந்த ஊராகும். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரி. யோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றி உள்ளார்.

மேலும் படிக்க ...

“ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்”: உலக அரசியலை புரிய வைக்கும் நூல்! - தீபச்செல்வன் -

விவரங்கள்
- தீபச்செல்வன் -
நூல் அறிமுகம்
27 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத் தமிழர்கள் தம்மை பாலஸ்தீன மக்களுக்கு ஒப்பானவர்களாக கருதிக்கொள்ளுகின்ற ஒரு நிலை இருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவானதொரு போக்கு ஈழத்தில் நெடுங்காலம் நிலவுகிறது. அதேவேளை தமக்கென்று ஒரு நாடற்ற நிலையில் இஸ்ரேலை உருவாக்கிய இஸ்ரேலியர்களிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உண்டென்ற பார்வையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.

இந்த சிக்கலான அரசியலை புரிந்துகொள்ள ஜீவநதி பதிப்பகத்தின் 351 ஆவது வெளியீடாக ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய 'ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகி உள்ளது.

உலக அரசியல் சார்ந்த விடயங்களை நாம் அதிகமும் கற்றுக்கொள்வது இன்றைய உலக அரசியலின் போக்கை புரிந்து கொள்ளவும் 'ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் உதவும் என இந்நூலின் முன்னுரையில் எழுத்தாளர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க ...

நினைவு கூர்தல்: 'தேடகம்' சிவம்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
27 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'தேடகம் சிவம்' 'நெல்லியடி சிவம்' என்றறியப்பட்ட சமூக, அரசியற் செயற்பாட்டாளர் கணேசமூர்த்தி சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் ஏப்ரில் 27.  இவரது மறைவு எதிர்பாராதது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் ஏற்படுத்திய பாதிப்புகளும் இவரது மறைவுக்கு ஒரு காரணம் என்று அறிகின்றேன்.

'தேடகம்' அமைப்பினை நிறுவியவர்களில் ஒருவர். அதன் சஞ்சிகையான 'தேடல்' சஞ்சிகையின் ஆசிரியராகவுமிருந்தவர். மாற்றுக்கருத்துகளின் அவசியத்தை நன்குணர்ந்து செயற்பட்டவர். இலங்கையில் இருந்த காலத்திலேயே சமூக, அரசியற் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.  மார்க்சியவாதியான இவர் சீனசார்புக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்டவர். தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்.

மேலும் படிக்க ...

கனடாவில் வெளியான முதலாவது நாவல் , கவிதைத்தொகுப்புகள் பற்றி... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் 'டொராண்டோ'வில் ஊடறு மற்றும் தேடகம் ஏற்பாட்டில் நடைபெற்ற  மலையகா நிகழ்வினை நெறிப்படுத்திய எழுத்தாளர் பா.அ.ஜயகரன் சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான சுதா குமாரசாமியைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது  1988இல் வெளியான அவரது கவிதைத்தொகுப்பான 'முடிவில் ஓர் ஆரம்பம்' பற்றிக்குறிப்பிட்டார். அவ்விதம் குறிப்பிடுகையில் 'கனடாவில் வெளியான முதலாவது கவிதைத்தொகுப்பாக இருக்குமென்று தான் நினைப்பதாக' அவர் குறிப்பிட்டிருந்தார்.

கனடாவில் வெளியான முதலாவது  தனிக்கவிதைத்தொகுப்பாக அது இருக்கக் கூடும்.  சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்' தொகுப்பிலுள்ள கவிதைகளின் எண்ணிக்கை 15.   

கவிதைகளையும் உள்ளடக்கி வெளியான முதலாவது தொகுப்பென்றால் அது ஜனவரி 4, 1987இல் வெளியான எனது தொகுப்பான 'மண்ணின் குரல்' நூலே. அது கட்டுரைகள், சிறு நாவலான மண்ணின் குரல் மற்றும் கவிதைகள் உள்ளடக்கி வெளியான தொகுப்பு.  அது எனது எட்டுக் கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளது.  அவை:

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி : வவுனியா – கம்பகா மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
26 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி : வவுனியா – கம்பகா மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையுடன் புலமைப்பரிசில் உதவியை பெற்றுவரும் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு இவ்வாண்டும் வழங்கப்பட்டது.

கடந்த வாரங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாகவும், அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு , அங்கிருக்கும் மாணவர் கல்வி நிறுவகத்தின் ஊடாகவும், மலையகத்தில் - நுவரேலியா மாவட்டத்தில் மலைய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாகவும் இவ்வாண்டின் முற்பகுதிக்கான நிதியுதவிகள் இந்தப்பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வதியும் தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க ...

ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்' - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் 'கிழவனும் கடலும்' (The Old Man and The Sea) உலக இலக்கியத்தில் முக்கியமான நாவல். இது ஒரு விரிந்து பரந்த நாவலல்ல. சிறியதொரு நாவல். இந்நாவல் ஹெமிங்வேயிற்கு புலியட்சர் பரிசைப் பெற்றுத்தந்தது. நோபல் பரிசினையும் பெற்றுத்தந்தது. ரொபின்சன் குரூசோ, மோபி டிக் போன்று கடலுடன் சம்பந்தப்பட்ட நாவல் மட்டுமல்ல , அவற்றைபோல் மானுட இருப்பின் குறியீடாக விளங்குமொரு நாவல்.

இந்நாவலில் வரும் சண்டியாகோக் கிழவன் மறக்க முடியாத பாத்திரம். இந்நாவல் முதுமையைப்பற்றிப் பேசுகிறது. நட்பைப் பற்றிப் பேசுகிறது. பாசத்தைப் பற்றிப் பேசுகிறது. சக உயிர்களைப்பற்றிப் பேசுகிறது.  உயிர்களின் விடா முயற்சி பற்றிப் பேசுகிறது. இயற்கையைப்பற்றிப் பேசுகிறது. மானுட இருப்பு பற்றிப் பேசுகிறது. ஹெமிங்வேயின் நடை சிறப்பு மிக்கது.ம் தனித்துவமானது. வாசகர்களைக் கட்டிப்போட்டு விடுவது.

மேலும் படிக்க ...

வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளம் தந்த வான் பாய்தல் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
24 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                     = பட்டாணிச்சுப் புளியங்குளம்  -

மாரியில் மழை பெய்து பட்டாணிச்சுப்புளியங்குளம் நிறைந்து வழிகையில் வான் பாயுமொலி இரவின் இருளை, அமைதியைத் துளைத்துக்கொண்டு கேட்கும். குருமண்காட்டுப்பகுதி ஒற்றையடிப்பாதையுடன் கூடியதொரு பகுதி. சில வீடுகள் , நெசவு சாலை, பண்ணையுடன் கூடிய இயற்கை வளம் மலிந்த பகுதி. அப்பகுதியில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. படுக்கையில் படுத்திருந்தபடி வான் பாயும் ஒலி கேட்டுக்கொண்டிருப்பேன். விடிந்ததும் ஊரவர்கள் வான் பாயும் குளத்தைப் பார்க்கச் சென்று விடுவார்கள். நானும் சென்று பார்ப்பேன். வான் பாயுமிடத்தில் இரவெல்லாம் வெங்கணாந்திப்பாம்புகள் காத்திருந்து அவ்வழியால் சென்று விடும் விரால் மீன்களைப் பிடிக்குமாம் என்பார்கள். ஊரவர்கள் சிலரும் விரால்களைப் பிடிப்பார்கள். என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த குளம் பட்டாணிச்சுப்புளியங்குளம். இக்குளம் நிறைந்து வான் பாயும் காட்சியும் அத்தகையதே.

சிலப்பதிகாரத்தில் வரும் 'உழவரோதை மதகோதை உடைநீரோதை தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்தார்ப்ப' என்னும் வரிகளைக் கேட்கும் ,நினைக்கும் சமயங்களிலெல்லாம் கூடவே வான் பாயும் பட்டாணிச்சுப்புளியங்குளமும் நினைவுக்கு வந்துவிடும்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் ஸ்ரீபதியின் 'பறவையாடிப் பழகு' - சிறுகதையில் பெண் நிலைப்பாடு - முனைவர். கு. செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர். மகளிர்கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
- முனைவர். கு. செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர். மகளிர்கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
24 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச்சுருக்கம்

ஒரு சமூகமுன்னேற்றத்தின் வழிகாட்டியாக விளங்குவது பெண்நிலைப்பாடாகும். பொறுமையின் அடையாளமாகத் திகழும் பெண்கள். அமைதியான குணத்துடன், உணர்ச்சிகரமான சவால்களைச் சமாளிக்கும் ஆற்றல் மற்றும் கடினமான சூழ்நிலையை நம்பிக்கையுடன் கையாளும் திறன் போன்ற தன்மைகளை இயல்பாகப் பெற்றிருப்பதால் பெண்மையைப் போற்றுகின்றோம். அதோடு இல்லறம் நடத்துவதற்கு ஏற்றவளாகப் பெண்ணை உருவாக்கி வருகின்றோம். பலபாத்திரங்களாகப் பரிமாணிக்கும் பெண்ணினத்தை மதிப்புடன் பேணுவது நம் தலையாய கடமையாகும்.

முன்னுரை

மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்பார் கவிமணி. இந்த உலகில் கருவைத் தாங்கி, கல்லறை வரை உறவோடு உறவைப் பின்னிப்பிணைத்து இயக்கும் ஆற்றல் பெண்மைக்கு உரியதாகும். பஞ்சபூதங்களில் மாற்றங்கள் நிகழ்ந்தால்கூட, நற்சமூகத்தை வழிநடத்தும் சக்தி பெண் தான். அவளின் சாதனை அளப்பரியது. இத்தகு புனிதத்தன்மை வாய்ந்த பெண்ணின் நிலையை, “பறவையாடிப்பழகு” என்ற ஸ்ரீபதியின் சிறுகதை வழி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் படிக்க ...

ஈழமங்கை மு.நவகீதாவின் 'பேரிகை'' பற்றி... - அகணி சுரேஸ், கனடா -

விவரங்கள்
- அகணி சுரேஸ், கனடா -
நூல் அறிமுகம்
24 ஏப்ரல் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உலக நூல் நாளில் ஒரு நூலினைப் படித்திட வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற ஏதுவாக அமைந்தது 'பேரிகை' என்ற நூல்.  ஈழமங்கை மு.நவகீதா இன் முதலாவது படைப்பாக 'பேரிகை' என்ற நூல் ஏப்ரல் 20, 2024 சனிக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய 'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அன்றைய நாளில் வெளியிடப்பட்ட 15 நூல்களில் இந்த நூலும் இடம்பெற்றது. ஈழப் பெண்களின் வரலாற்றுப் பதிவாக உருவான சின்னஞ் சிறிய நூலாக 'பேரிகை' என்ற நூல் இருந்தது.  வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளராக, மேடை நிகழ்ச்சிகளில் சிறப்பாக நெறியாளுகை செய்பவராக மட்டுமே அறிமுகமான நவகீதா இப்பொழுது நூலாசிரியராக அறிமுகமாயுள்ளார்.  நூலில் காணப்படும் 'என்னுரை' மூலம் அவரது கல்விப் பின்புலம், தாய்மண்ணுடன் ஒன்றிய அவரின் மனவுணர்வு பற்றியெல்லாம் அறியும் வாய்ப்பையும் பேரிகை என்ற நூல் அறியத்தந்தது.

சிலநாட்களுக்குள் உருவாகிய நூலாக இருந்தாலும், அளவில் சிறிய நூலாக இருந்தாலும் சிறப்பான நூலாக நூலாசிரியர் எழுதியுள்ளார். வீரமிகு ஈழமங்கைகள் சிலரின் விபரங்களை அழகான, எளிமையான நடையில் தேடலுடன், நுண்ணிய பார்வையும் மேலிடத் தந்துள்ளார் நவகீதா.

நாங்கள் அனைவரும் அரிய பணிகளைச் செய்தால் புதிய எழுத்தாளர்களை உருவாக்கலாம் என்ற செய்தியை 'பேரிகை' சுட்டி நிற்கிறது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. மறக்க முடியாத ஆளுமையாளர் சத்தியமூர்த்தி மாஸ்டர். - வ.ந.கி -
  2. வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் சர்வதேச புத்தக நாள் ! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -
  3. மருதூர்க்கொத்தன் நினைவுகள்! ஏப்ரில் 19 அவரது நினைவு தினம் ! கண்டியில் இம்மாதம் நினைவுகளின் தேரோட்டம் நூல் வெளியீடு! - முருகபூபதி -
  4. உலகப் புத்தக நாள் - வ.ந.கிரிதரன் -
  5. எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  6. தேவகாந்தனின் 'சகுனியின் சிரம்', 'இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியம்' நூல்களின் வெளியீடு!
  7. இலக்கியவெளியின் “சட்டநாதன் புனைவுகள் : உரையாடல்” - இலக்கியவெளி -
  8. எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!
  9. சிறுகதை : தப்பிப்பிழை ! - கடல்புத்திரனஂ -
  10. இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 37 : “நூல்களைப் பேசுவோம்”
  11. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - “வைணவத் தமிழிலக்கியம்”
  12. கனடாவில் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை - குரு அரவிந்தன் -
  13. ரொறன்ரோவில் நூல்களின் சங்கமம் - குரு அரவிந்தன் -
  14. தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (5) - வ.ந.கிரிதரன்-
பக்கம் 25 / 104
  • முதல்
  • முந்தைய
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • அடுத்த
  • கடைசி