பதிவுகள் முகப்பு

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 33: மலையக ஆளுமைகள் இருவர்: தெளிவத்தை ஜோசப், லெனின் மதிவானம் - நினைவுமீட்டலும் உரையாடலும்

விவரங்கள்
- தகவல்:அகில் -
நிகழ்வுகள்
25 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ஒரு சந்திப்பு: எழுத்தாளர் மு.மேத்தாவுடன் , 'ஓவியா பதிப்பக' உரிமையாளர் வதிலைப்பிரபா! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
24 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் மு.மேத்தாவுடன் 'ஓவியா பதிப்பக' உரிமையாளர் எழுத்தாளர் வதிலைப்பிரபா -

ஓவியா பதிப்பக உரிமையாளரும், 'மகாகவி' சஞ்சிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருமான திரு.வதிலைப்பிரபா அவர்கள் கவிஞர் மு.மேத்தா அவர்களைச் சந்தித்து 'மகாகவி' சஞ்சிகை, ம. சேரனின்  "மூனு கோடு நோட்டு" (சென்ரியு கவிதைகள்) மற்றும் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவலான 'நவீன விக்கிரமாதித்தன்' ஆகியவற்றைக் கொடுத்தது பற்றிய தகவலினை அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றி.  அக்காட்சிக்கான புகைப்படத்தினையும் அனுப்பியிருந்தார். அதனையே இங்கு காண்கின்றீர்கள்.

மேலும் படிக்க ...

'நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்' வண்ணத்தில்.. - ஊர்க்குருவி - -

விவரங்கள்
- ஊர்க்குருவி - -
கலை
24 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இப்பாடலின் வரிகளைச் சிறப்பாகப் பாடி சமூக ஊடகங்களில் அனைவரையும் மகிழ்ச்சியிலாழ்த்தினார். அவருக்காக அவர் இரசித்து, மகிழ்ந்து பாடிய இப்பாடலின் முழு வடிவத்தையும் வண்ணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.அறுபதுகள், எழுபதுகளில் கண்ணன்,  அருணா இசைக்குழுப் பாடகர்கள் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளில் பாடிய பாடல்களிலொன்று  இந்தப்பாடல். வேதாவின் இசையில், டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலில், ஜெய்சங்கர் & எல்.விஜயலட்சுமி நடிப்பில் அனைவரையும் கவர்ந்த இப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தின்  'இரு வல்லவர்கள்'.

அக்காலகட்டம் அழகான ஜெய்சங்கர் 'ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்க'ராகக் கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்த காலம். இவரும் , விஜயலட்சுமியும் அதிக படங்களில் இணைந்து நடித்த காலகட்டம். - https://www.youtube.com/watch?v=BD8qYBBEf9o

மேலும் படிக்க ...

கனடா வரலாற்றில் தமிழர் படகுகள் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
23 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற சனிக்கிழமை 16 ஆம் திகதி ஸ்காபரோவில் உள்ள ஸ்காபரே சிவிக் சென்றர் மண்டபத்தில் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட ‘கனடா வரலாற்றில் தமிழர் படகுகள்’ என்ற நூல் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நூலில் புகைப்படங்களுடன் தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

மங்களவிளக்கேற்றல், கனடியதேசிய பண், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து ச. சாந்தினியின் வரவேற்புரை இடம் பெற்றது. அடுத்து தேவா சபாபதியின் வரவேற்புரையும், தொடர்ந்து கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் அகணி சுரேஸின் தலைமையுரையும் இடம் பெற்றன. அவர் தனது உரையில் இந்த நூலை வெளிக்கொண்டு வந்தவர்களையும், நிதி உதவி செய்தவர்களையும் பாராட்டி, கனடியத் தமிழர்பற்றி அடுத்த தலைமுறையினர் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆவணம் இது என்பதையும் குறிப்பிட்டார்.

வெளியீட்டுரை நிகழ்த்திய செல்வி ருக்ஸா சிவானந்தம் மற்றும் ஆய்வுரை நிகழ்த்திய திரு. பொன்னையா விவேகானந்தன் ஆகியோர் நூலின் உள்ளடக்கத்தில் உள்ள கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றினார்கள். செல்வி ருக்ஸா சிவானந்தம் விழாவில் பங்குபற்றிய புதிய தலைமுறையினருக்காக ஆங்கிலத்திலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பொன்னையா விவேகானந்தன் ஒரு குறும்படக் கதைபோலப் படகில் நடந்த சில சம்பவங்களைத் தமிழில் எடுத்துச் சொன்னார்.

மேலும் படிக்க ...

அமரர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) நினைவாக... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நண்பர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) மறைந்து ஆண்டு ஒன்று கடந்து விட்டது. ஜெயனை எனக்குப் பதிவுகள் இணைய இதழே அறிமுகம் செய்து வைத்தது. பின்னர் முகநூலில் நண்பராக அறிமுகமானார்.

அடிக்கடி அலைபேசியில் உரையாடா விட்டாலும் அவ்வப்போது உரையாடுவதுண்டு. நோயின் தாக்கத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட உரையாடுகையில் அது பற்றிக் குறைபட்டுக் கதைக்க மாட்டார். சமூக, அரசியல் விடயங்கள் பற்றியே உரையாடுவார்.  

அவரது தனிப்பட்ட வாழ்க்கை, கடந்த காலம் பற்றியெல்லாம் என்னுடன் அவர் உரையாடியதில்லை. ஆனால் அவர் விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் தலைவியாகச் செயற்பட்ட தமிழினியின் இறுதிக்காலத்தில் அவரைத் திருமணம் செய்ததுடன் அவரது இலக்கிய முயற்சிகளுக்கு மிகுந்த ஆதரவாகச் செயற்பட்டார்.  அதனை அவரது வாழ்க்கையின் முக்கியமான , ஆரோக்கியமான விடயமாக நான் உணர்கின்றேன்.

மேலும் படிக்க ...

விலங்கு மருத்துவர் நடேசன் எழுத்தாளரான கதை ! வாழ்க்கைப்பயணத்தில் கனவுகளை நனவாக்கியவருக்கு இம்மாதம் 69 வயது ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
22 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை வடபுலத்தில் ஐந்து தீவுகள் சங்கமமாகும் இந்து சமுத்திரக்கரையோரத்தில் ஒரு காலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியளவு வாழ்ந்த மக்களின் பூர்வீகம் எழுவைதீவு கிராமம். பனையும் தென்னையும் பயன்தரு மரங்களும் மட்டுமல்ல ஆர்ப்பரிக்கும் கடலின் உணவுகளும்தான் அந்தக்கிராம மக்களுக்கு வாழ்வளித்தன. ஒருகாலத்தில் தீப்பெட்டிக்கும் எண்ணெய்க்கும் உப்புக்கும் மாத்திரம் கடைகளை நாடிச்சென்ற அந்தச்சிற்றூர் மக்களுக்கும் கனவுகள் இருந்தன. மின்சார வசதியில்லாத அக்கிராமத்து மக்களுக்கு தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கனவுகளும் அக்கறையும் இருந்தன.

எழுவைதீவு கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பிறந்து, படிப்படியாக கல்வியில் உயர்ந்து, தான் பிறந்த ஊருக்குப்பெருமை சேர்த்தவர்தான் விலங்கு மருத்துவர் நடேசன்.

ஒருவரது வாழ்வு கனவுகளுடன்தான் ஆரம்பிக்கின்றது. இளமைக்காலக்கனவுகள் , வளரும் பருவத்தில் நனவாவது குறிப்பிட்ட பலருக்கு மாத்திரமே சாத்தியம்! மருத்துவமனை வசதியே இல்லாதிருந்த எழுவைதீவு மக்கள் ஒரு காலத்தில் படகில் சென்றுதான் அயலூர் மருத்துவமனைகளில்தான் சிகிச்சைபெற்று வந்தனர்.

மேலும் படிக்க ...

நூல் வெளியீட்டு விழா: சேர் பொன்னம்பலம் இராமநாதனின் வாழ்வு! - தகவல்: இளஞ்சேய் -

விவரங்கள்
- தகவல்: இளஞ்சேய் -
நிகழ்வுகள்
22 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* விளம்பரத்தைத் தெளிவாகப் பார்ப்பதற்கு அதற்குமேல் ஒரு தடவை அழுத்துங்கள்.

இடம்: 'சங்கரப்பிள்ளை மண்டபம்',
கொழும்பு தமிழ்ச் சங்கம்,
வெள்ளவத்தை, இலங்கை
காலம்: டிசம்பர் 24, 2023 மாலை 5 மணி

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் அசதியாடல்! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை -

விவரங்கள்
- முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை -
ஆய்வு
20 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று அசதியாடல் ஆகும். அசதியாடல் குறித்துப் பல்வேறு இலக்கியங்களில் காணப்பட்டாலும் பக்தி இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. சிலம்பில் இளங்கோவடிகளும், பெரியபுராணத்தில் சேக்கிழாரும், மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், திருவானைக்கா அகிலாண்டநாயகி மாலை ஆகிய நூல்களிலும் அசதியாடல் குறித்துப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.கம்பரும் தம் இராமாயணத்தில் அசதியாடல் குறித்துப் பாடியுள்ளார் என்பது குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.

அசதியாடல்

அசதியாடல் என்பது தனித்தும், ஓரிருவரைத் துணையாகச் சேர்த்துக் கொண்டும் விளையாடும் விளையாட்டாகும். அசதியாடல் என்பது பரிகசித்தல், வேடிக்கை வார்த்தைக் கூறுதல், சிரித்துப் பேசுதல் என்று தமிழ் அகராதி பொருள் தருகிறது. உடன்பாடாக உரைப்பதுபோல் எதிர்மறைப் பொருள் பேசுவதே அசதியாடல் என்பதாகும்.அவ்வாறு எதிர்மறைப் பொருள்கள் வெளிப்படுவதேப் பாடலை அமைப்பது கவிஞரின் திறமையாகும்.

சிலம்பில் அசதியாடல்

இராமன் வனம் சென்று போது உயர்திணை, அஃறிணை உயிர்கள் எல்லாம் அழுதன. இதை வைத்துக் கொண்டு இளங்கோவடிகள் ஆய்ச்சியர் குரவையில்

‘மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்
தாலிய சேவடி சேப்பத் தம்பியொரடும் கான் போந்து
(ஆய்ச்சியர் குரவை- படர்க்கைப் பரவல் 1 )

இராமா காலில் கல்லும், முள்ளும் குத்த கானகம் செல்கிறாயா, மகாபலிச்சக்கரவர்த்தி மூன்று அடி நிலம் எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, நீ ஒழுங்காக உன் பிஞ்சு விரல்களால் மூன்று அடி நிலத்தை எடுத்துக் கொண்டிருக்கவேண்டும். அதைவிட்டு விட்டு அவன் தலைமேல் கால் வைத்து விளையாடினாய். இப்போது அனுபவி என்பது போல் பாடுகிறார்.

மேலும் படிக்க ...

சிறுகதை : உப்பிட்டவரை... - கடல்புத்திரனஂ -

விவரங்கள்
- கடல்புத்திரனஂ -
சிறுகதை
19 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாளும் நலம் பாட​ ஆசை ! ஆனால் , தறஂபோதைய​.... தாயகத் தலைவரினஂ பேச்சுகள் ....சலிப்பையே தருகினஂறன .  அழகிய​ தீவு , கலிங்கத்துப்பரணியினஂ போர்க்காட்சிகளையே விரும்பி நிறஂகினஂறது . முனஂனைய​  தலைவரை   (மாமனாரிடம்) விட​  இவரிடம்  பார்ப்பது , எதிர்பார்த்தது ,​  தவறு தானஂ . இவர் ,  ' இஸ்ரேலினஂ வழியே  சரி ' எனஂற நோக்கில் " ஐ .நா .அவை , இஸ்ரேலுக்கு ஒரு நோக்கு  , எமக்கு இனஂனொரு நோக்கை ...வைத்திருப்பது தவறு" எனஂகிறார் . நம் நாட்டிலும் நடந்த​ " கொத்துக் கொலைகளை"  எவ்வளவு இலகுவாக​  கடந்து போய் விட்டிருக்கிறார் , போய் விடச் சொல்கிறார் .  போர்க்குறஂற விசாரணைகளே அவசியமறஂறவை எனஂகிறார் . உக்ரேனுக்கு , இஸ்ரேலுக்கு , நம்நாட்டுக்கு ....' வெளி நாட்டவர்களே ஆயுதங்களை எல்லாம் வழங்கியவர்கள் '  எனஂற முறையில் சரி தானஂ . ஒனஂறைக் கவனித்தீர்களா , ஐ .நாஅவை ,  ஆயுதங்களைப் பறஂறி எப்பவும்  ஒனஂறுமே ...சொல்வதில்லை . நம்நாடும் ஒரு பாலைத் தராத​ கறவை  மாடு தானஂ . அங்கே , பேசப்படுகிற ​ இரட்டைப் பிரதேசக் கொள்கை இங்கேயும் ஏறஂபுடையது எனஂபதை கண்டுக்கிறதில்லை . உலகம் உண்மையிலே​ நியாயம் பேச​ முனஂ  வர​ வேண்டும் . நாடுகளில்  ,  இன வாதங்கள் அனைத்துமே சிறைக்குள் அடைத்துப் பூட்டப் பட​ வேண்டியவை . பெரிய​  நப்பாசை தானஂ .

சட்டங்களும் , கட்டளைகளுமே கடி நாய்களாகவே​ வலம் வருகினஂறன . வர​ வைக்கினஂறன .ஏனஂ தானஂ இந்த​ உணர்வோ ! .  ​விடுதலைக்கு சிறிது மூச்சு விடுறதுக்காக​ மாலைதீவில் ஒரு தீவைப் பெறும் சிந்தனை சரியானதெனஂறே படுகிறது . அதறஂகாக​​ஒரு தீவை விலை கொடுத்து வாங்கிறதும்   கூட  தவ​றில்லை . கண் எதிரே, நிலம் அபகரிக்கப்படுகிறது.  களவாடப்படுகிறது . கள்ளர் கூட்டமாக​  உலகம்  கிடக்கிறது . அவறஂறை எப்படி தடுத்து நிறுத்துவது ? கலிங்கத்துப்பரணியில் வரும் பேய்கள் ,  நிணங்களை புசிக்கினஂறன. ரத்தங்களைக் குடிக்கினஂறன . எம்மை தயார் படுத்துவதறஂகு தானஂ இந்த​ காப்பியம் எழுதப் பட்டிருக்கிறதோ !  யூதமக்களினஂ இனப்படுகொலை (Holocaust) நிகழஂவுகளைப் பார்த்து கலக்கம் அடைந்தோம் . இனஂறு  நிகழும் இனப்படுகொலைகள் அதனஂ மாதிரிகள் தாம் . இந்த​ தரித்திரத்தையும் சரித்திரம் எழுதப் போகிறது  . மனித​ உயிர்கள் தொழிறஂசாலையில் தயாரிக்கப்படுகிற பண்டங்களாகி விட்டன . நினைத்த​ போது வைத்துக் கொள்வதும் , தேவையறஂற மாத்திரத்திலே அழித்து விடுவதும் என  நாகரிகக் காட்டுமிராண்டித்தனமும் தலை விரித்தாடுகிறது .

மேலும் படிக்க ...

முனைவர் செ. இராஜேஸ்வரியின் எம்ஜிஆர் பற்றிய நூல்கள்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
19 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இவர் ஒரு மொழிபெயர்ப்பியலில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியை. இவர் முனைவர் செ.இராஜேஸ்வரி. மொழிபெயர்ப்பு, இதழியல், ஆய்வு, கற்பித்தல் எனப் பன்முக ஆளுமை மிக்க இவர் எம்ஜிஆரின் சினிமா, அரசியல் பற்றிய் ஆய்வுகளில் நாட்டம் மிக்கவர்.

எம்ஜிஆர் பற்றி விகடனில் தொடர் எழுதியவர். கனடாவிலிருந்து வெளிவரும் எழுத்தாளர் அகிலின் 'தமிழ் ஆதர்ஸ்.காம்' இணையத்தளத்தில் எழுதி வருபவர்.

இவரது நோக்கம் குறைந்தது 100 நூல்களையாவது எம்ஜிஆர் பற்றி எழுத வேண்டுமென்பது. இதுவரை பதினைந்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மதுரையிலிருந்து சந்திரோதயம் என்னும் பதிப்பகம் வெளியிட்டு வருகின்றது. இவரது எம்ஜிஆர் பற்றிய நூல்கள் இணையக் காப்பகத்தில் (Archive.org) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -

விவரங்கள்
- மனோ சின்னத்துரை -
சிறுகதை
19 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கொஞ்ச நாட்களாக அம்மாவில் சில மாறுதல்களை அவதானிக்கத் தொடங்கினேன். அந்த அவதானிப்பு என்னையும் மீறி வளர்ந்துகொண்டே போனது. அம்மா இப்போ இடையிடையே தன்பாட்டில் சிரிக்கிறார். தனது அலங்காரங்களில் அதிக அக்கறை செலுத்துகிறார். முன்பெல்லாம் நான் நினைவூட்டி நெருக்கும்போதுதான் தலைக்கு சாயம் தீட்டுவார். இப்போது மாதம் இரண்டு தடவை, சிலவேளைகளில் மூன்றுதடவையும் கூட நடக்கிறது. தொலைபேசி சத்தம் கேட்டால் அம்மா பரபரப்பாக ஓடுகிறார். கையில் என்ன வேலையாக இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுகிறார். இரண்டு தடவைகள், சமைத்துக் கொண்டிருக்கும்போதும் இப்படி நடந்தது. சட்டி அடிப்பிடித்தது மட்டுமல்ல வீடெல்லாம் பெரும் புகை. பெரும் ஆபத்தில்கூட முடிந்திருக்கலாம்.

'அய்யய்யோ..ஏன் பிள்ளை நீ கொஞ்சம் பாத்திருக்கலாமல்லே...'

நான் என்னத்தைப் பாக்கிறது. நான் அம்மாவையே பார்த்துக்கொண்டு நின்றேன். அம்மா தன் உதட்டுக்குள் ஒரு புன்னகையோடு கறிச்சட்டடியை சரியை செய்யும் வேலையில் மூழ்கியிருந்தார். இந்த அமளியிலும் கூட அம்மாவின் மூளை எங்கெங்கோ அலைந்து திரிந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது.

மேலும் படிக்க ...

ஆவணச்சிறப்பு மிக்க முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை) - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட  முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை) முக்கியமானதோர் ஆவணம். இந்நூலில் 6298 நூலாக வெளிவந்த நாவல்களின் பெயர்ப்பட்டியலைத் தொகுத்திருக்கின்றார் முனைவர் வே.சீதாலட்சுமி.

இந்நூலில் எனக்குத்தெரிந்த ஒரு  சில நாவல்களின் பெயர்களைத் தவிர நான் தேடிக்கொண்டிருக்கும் நாவல்கள் பலவற்றின் பெயர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சையைத் தந்தது.

உமாசந்திரனின் 'முழுநிலா', மாயாவியின் மொழிபெயர்ப்பில் வெளியான 'இளமைக்கனவு' (புகழ்பெற்ற அமெரிக்க நாவலான The Yearling' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. நாவலாசிரியர்  Marjorie Kinnan Rawlings), கல்பனாவின் 'யுகசந்தி', மாயாவியின் 'மூடுபனி' , ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்'  போன்றவகை நான் தேடிக்கொண்டிருக்கும் நாவல்களில் அடங்குவன.

அக்காலகட்டத்தில் பல நாவல்களை எழுதியவர் எழுத்தாளர் பி.எம்.கண்ணன். இவரை இன்று தமிழ் இலக்கிய உலகு மறந்தேவிட்டதெனலாம். இவரது வெளியான நூல்களையெல்லாம் இத்தொகுப்பின் பட்டியலில் காணமுடிகின்றது.  இவ்வாவண நூலை வாசிக்க

மேலும் படிக்க ...

ஐம்பதுகளில் வெளியான வீரகேசரி பிரசுர நாவல் 'கே.வி.எஸ்.வாஸின் (ரஜனி) 'குந்தளப்பிரேமா' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
17 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'வீரகேசரி பிரசுர நாவல்கள் ஒரு பொது மதிப்பீடு' என்னும் அநுபந்தம் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்களால்  நா.சுப்பிரமணியம் என்னும் பெயரில்  எழுதப்பட்டது. அப்பொழுது அவர் எம்.ஏ பட்டதாரி. யாழ்  பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டம். வீரகேசரி ஐம்பதாவது நூற்பிரசுர விழாவில் அநுபந்தமாக வெளியிடப்பட்ட பிரசுரமிது. இப்பிரசுரத்தில் வீரகேசரி பிரசுரங்கள்  பற்றிப் பின்வருமாறு  குறிப்பிடப்பட்டிருந்தது:

"1972ஆம் ஆண்டில் தொடங்கிய வீரகேசரி பிரசுர முயற்சி ஆரம்பத்தில் ஆண்டொன்றுக்குச் சுமார் ஆறு பிரசுரங்களாகத் தொடங்கி, அதிகரித்து வந்து இப்பொழுது மூன்றாண்டுகளாக ஆண்டு ஒன்றுக்குப் பத்து நாவல்கள் என்ற அளவில் விரிவடைந்துள்ளது."

இவ்விதமே நானும் வீரகேசரி பிரசுரங்களும்  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, உள்ளூர் உற்பத்திக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருந்த சூழ்நிலை காரணமாக உருவாகின என்றே எண்ணியிருந்தேன். ஆனால் உண்மையில் அச்சூழலைப் பயன்படுத்தி வீரகேசரி பிரசுரங்கள்  அதிக அளவில் வெளிவந்திருந்தாலும் வீரகேசரி பிரசுரமாக 1951இலேயே நாவலொன்று வெளியாகியிருந்ததை அறிய முடிகின்றது. அதனை எழுதியவர் எழுத்தாளர் கே.வி.எஸ்.வாஸ் (கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார்). நாவலின் பெயர் - குந்தளப்பிரேமா.

மேலும் படிக்க ...

நாடுகளின் பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகள் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தாக்கம்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
16 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் Igla-s என்ற ஏவுகணையை வழங்கவும்,  அதனை இந்தியாவிலேயே தயாரிக்கும் உரிமத்தை வழங்கவும், இந்தியாஇ ரஷ்யாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இந்த செய்தியானது  இந்தியா நகர்த்தும் வெளிநாட்டு அணுகுமுறையின் இன்றைய நிலைமை குறித்து எடுத்து இயம்புவதாகவுள்ளது (அதாவது ரஷ்யாவை ஒதுக்கி வைத்து, உலக வர்த்தகங்களில் இருந்து அதனை புறந்தள்ளி மேற்கின் பொருளியல் தடை அல்லது பொருளியல் சாசனம் அல்லது ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக விடுக்கப்பட்ட சர்வதேச நீதிமன்ற கைது ஆணைகள் யாவற்றையும், இச்செய்தி புறந்தள்ளுவதாய் உள்ளது.) போதாதற்கு இவ் ஒப்பந்தம் குறித்து இவ்விரு நாடுகளுக்கிடையேயும் பேச்சு வார்த்தை ஒன்று இது தொடர்பில் ஆரம்பமாகிவிட்டது என்ற செய்தியும்  ஒரு வருடத்திற்கு முன்னரேயே 2022இல் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும், இந்தியாவானது 2022இல் இவ் ஏவுகணையை தனது அவசர ஆயுத கொள்வனவுகளில் ஒன்றாக வாங்கி தன் ஆயுத படைகளுக்கு விநியோகித்திருந்ததென்ற உண்மை ஒருபுறம் இருக்க, அதே வேளை குறிப்பிட்ட ஏவுகணையை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான பேச்சு வார்த்தையினையும் அது அன்றே முடுக்கியிருந்தது. இந்த செய்தியும் இவ்விரு நாடுகளுக்கிடையேயும் நிலவும், (மேற்கின் தடைகளைத்தாண்டிய) இரகசிய அந்தரங்க உறவு முறையை காட்டுவதாய் உள்ளது.  ஆனால் இதை விட முக்கிய செய்தியானது இதே காலப்பகுதியில், பாகிஸ்தானானது அமெரிக்காவின் இரு பிரத்தியேக கம்பனிகளுடன் (Northrop - Gruman & Global Military)  364 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தது என்ற செய்தியாகும்.

மேலும் படிக்க ...

ராசமணியும் பள்ளிக்கூடமும் - முனைவர் பெ.இசக்கிராஜா , உதவிப்பேராசிரியர் -

விவரங்கள்
- முனைவர் பெ.இசக்கிராஜா , உதவிப்பேராசிரியர் -
சிறுகதை
16 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலங்காலமாக ஆரம்பநிலை பள்ளியின் சுவர்கள் பாசிக் கரைபடிந்த சுவர்களோடு காட்சியளித்தன. மேற்கூரை ஒழுகும் வண்ணமாக உடைந்த ஓடுகளாய் சொருகியிருந்தன. பள்ளியின் வலது புறம் ஆசிரியர்களுக்கென்று.. ஒரே ஒரு கழிவறை மட்டும் அதுவும் நிரந்தப் பூசனம் பூத்ததாய் நிராகரிக்கப்பட்டிருந்தது. கழிவறையை ஒட்டி உயரமாக வளர்ந்து நின்ற ஒற்றை புளியமரம். புளியமரத்திற்கென்று தனி வரலாறும் உண்டு.. புளிய மரத்தின் கதையைக் கேட்கும் போதெல்லாம் ராசமணி தான் ஞாபகத்திற்கு வருவதுண்டு.

சக ஆசிரியர்களுக்கும் அவரிடம் படித்த மாணவர்களுக்கும் ஊர்காரர்களும் அவ்வப்போது இக்கதையை வாயில் போட்டு மெல்வதுண்டு. குப்பை மேடாகக் கிடந்த பள்ளியை சீரமைக்கத் தொடங்கிய காலம் என்பது, ராசமணி பள்ளிக்கு ஆசிரியராக பொறுப்பேற்று வந்த நாள் தான் பள்ளிக்கு விடிவுகாலம் ஆரம்பித்தன என்பது தான் அன்றைய அவ்வூரின் வரலாறு. கிழக்கு எப்போது விடியும் என்பதே உழைக்கும் வர்க்கத்தின் குறியீடு. ஆனால் மனிதப்பிணத்தைப் புதைக்கும் இடுகாட்டைத் தாண்டித்தான் அவ்வூரின் ஒரு நுழைவாயில்.  வழிநெடுக புன்னை மரங்கள் வரிசையாக நடப்பட்டிருக்கும் ராஜபாட்டை தான் அவ்வூரின் கிழக்கு எல்லை. மேற்கின் எல்லையாக சுந்தரநாச்சியம்மன் கோயில் இருக்கும். வடக்கேயும் தெற்கேயும் கழனிகளும் தோப்புகளுமே எல்லைகளாக விரிவடைந்திருக்கும்.

எங்கும் பச்சை வண்ணம் வாழ் சுழற்றியபடியே இருந்தது. தெற்கு தேயாமலும் வடக்கு வாடாமலும் பார்ப்பதற்கே குளிர்ச்சியாகவும் ரசிப்பதாகவும் இருந்தது. வயகாட்டுக்குச் செல்லவும் நாற்று நடவ, தண்ணீர் பாய்ச்ச என எல்லாவற்றிற்கும் நாச்சியாத்தாளை வழிபட்டு பிள்ளையார் சுழி யிட்டுச் செல்வது தான் வழக்கம். முப்போகமும் செழித்து வளர நாச்சியாத்தா எப்போதும் குறை வைத்ததில்லை அவ்வூருக்கு ஆகவே நாச்சியம்மாளை போற்றும் விதமாக பெண்பிள்ளைகளுக்கு பெரும்பாலும் சுந்தரநாச்சியார், வள்ளி, வீரநாச்சி, வீராத்தாள் என பெயர் சூட்டுவது வழக்கமாகவே தொன்று தொட்டு வருகின்றது.

மேலும் படிக்க ...

கடவுளின் பசி - முனைவர் பெ.இசக்கிராஜா, உதவிப் பேராசிரியர் -

விவரங்கள்
- முனைவர் பெ.இசக்கிராஜா, உதவிப் பேராசிரியர் -
கவிதை
16 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அடிநாதக் குழலே..!
நிரம்பி வழிந்தோடும்
இப்புவியின் அழகில் தான்
எத்தனை எத்தனை விந்தைகள்!

உள்ளுக்குள் உக்கி
தனிமையின் விரகதாபமாய் விரதமிருந்து
எங்கெங்கோ தாவுகின்ற எண்ணங்களில்
இடறி தவறிப் பிழைத்து
எப்போதும் நினை மறவாத சிந்தையில்
நீயே…

மேலும் படிக்க ...

ஒலியும் மொழியும் குழந்தைகள் இசையும்..! - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி – பிரான்ஸ்) -

விவரங்கள்
- பத்மா இளங்கோவன் (பத்மபாரதி – பிரான்ஸ்) -
சிறுவர் இலக்கியம்
16 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒலி எந்த உயிரினத்தையும் ஒரு கணம் திசைதிரும்ப வைக்கும். தொட்டிலில் அழும் குழந்தை, திடீரென ஒரு வேற்று ஒலியைக் கேட்டதும், தன் அழுகையைச் சட்டென நிறுத்திவிடுகிறது. எங்கோ ஒரு மூலையில் தானியங்களைக் கொறித்துக்கொண்டிருக்கும் ஒரு முயல்க்குட்டி சற்றே தொலைவில் ஏதோ ஒரு சத்தம் கேட்டதும் அது கொறிப்பதை நிறுத்தித் தன் காதுகளை மேலே உயர்த்திச் சு10ழ்நிலையை அவதானிக்கிறது. உலகிலுள்ள உயிர் வர்க்கங்கள் யாவுமே ஒலி அலைகளையும் ஒலிக் குறிப்புகளையும் வைத்தே தம்மையும் தம் இனத்தையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்கின்றன.

மனிதன் தன் நாவினால் எழுப்பும் ஒலியின் சிறு சிறு அசைவுகளே வெவ்வேறு வடிவெடுப்பதைக் காண்கிறோம். இந்த ஒலி அசைவுகளே நாளடைவில் ஒலிக்குறிப்புகளாக மாறி மொழிகளாக உருவெடுத்திருக்கலாம். உதாரணமாக - அ.. ஆ.., உ.. ஊ.., ஒ.. ஓ.., தா.. தீ.., போ.. வா.., சி.. சு10.., அம்.. ஆம்.., ஓடு.., பாடு...  என ஓர் எழுத்து ஈரெழுத்துச் சொற்களாக மொழி மெல்ல மெல்லப் பரிணமித்திருக்கலாம்.

இவ்வாறு மொழி தோன்றி வளரும்போது மனிதன் தன் உணர்வுப் பரிமாற்றங்களை உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தி தனதுதேவைகளைப் பூர்த்திசெய்யக் கற்றுக்கொண்டான். காலப்போக்கில் தன் உணர்வுகளை இசையாகப் பாடியும் ஆடியும் மகிழ்ந்தான். சரி கம பத நி என்னும் ஏழு சுரங்களுக்குள் எத்தனை இராகம் என்பதுபோல எழுத்துக்களின் ஒலியளவு கூடிக் குறையும்போது வௌ;வேறு இசை வடிவங்கள் அழகிய இராகங்கள் பிறக்கின்றன என்பது பேரதிசயமே.

மேலும் படிக்க ...

கணினித் தமிழ் வளர்ச்சியில் சிக்கல்களும், தீர்வுகளும்! - பி.ஆர்.இலட்சுமி.,(முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்) -

விவரங்கள்
- பி.ஆர்.இலட்சுமி.,(முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்), -
ஆய்வு
15 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-*  இக்கட்டுரையை எழுதியவர்: -  பி.ஆர்.இலட்சுமி , (முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்), பி.லிட்.,எம்.ஏ , (தமிழ்,மொழியியல், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்புத்துறை ) எம்ஃபில் , பிஎச்.டி.,டிசிஎஃப்இ , புலவர் , பிஜிடிசிஏ , வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை-117. -


ஆய்வுச் சுருக்கம்

கணினி உருவானபோது தமிழ்க் கணினிக்கான ஏற்பாடுகளும் 1980களில் தொடங்கப்பட்டு வந்துள்ளன. முதன்முதலில் தமிழை இணையத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த நா.கோவிந்தசாமி.1995 அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு.பாலாபிள்ளை மடலாடுதலின் வழி இணையத் தமிழ் வளரும் என்ற நோக்கில் தமிழ்.நெட் என்ற இணையத் தளத்தை உருவாக்கினார். தமிழர்கள் மொழிப் புலமைக்காக இணையத்தில் தமக்குத் தெரிந்த செய்திகளைத் திரட்டி எழுதி வருகின்றனர்.(வலைப்பூக்கள்)

காரணம் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ,இந்தியா என கூகுள் பிரித்து வைத்து இணையத்தில் கொணர்ந்துள்ளது. இதனால், தமிழ் மக்களை வேறுபடுத்திப் பார்க்கும் வழக்கம் மிகுந்துள்ளது. பழமை மிகுந்த தமிழ்நாடு குமரிக்கண்டத்திலிருந்து அழிந்து உயிர்த்தெழுந்த நாடு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இருப்பினும் ஒவ்வொரு நாட்டினரிடையேயும் அவர்கள் பேசி வரும் தமிழ்தான் பழமையானது என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இதனால் சிக்கல்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதற்கான தீர்வுகள் இக்கட்டுரையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

எனது படைப்புகளும் அவை பற்றிய ஆய்வுகளும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
14 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது படைப்புகள் பற்றி வெளியான ஆய்வுகள் பற்றி நானறிந்த தகவல்கள் இவை. தமிழகம் , இலங்கையில பட்டப்படிப்பு மாணவர்களால், பேராசிரியர்களால் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்கள் கீழேயுள்ளன. இவர்கள் அனைவருமே என் படைப்புகளூடு என்னைக் கண்டடைந்தவர்கள். நான் நேரில் அறிந்தவர்கள் அல்லர். படைப்புகள் தம் வாசகர்களைக் கண்டடையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை மிக்கவன் நான். அவ்விதமான படைப்புகளே நின்று பிடிக்கும் என்பதிலும் நம்பிக்கை மிக்கவன் நான்.
 
நம்மவர்களில் ஒரு குறைபாடு. நாடறிந்தவர்களாகத் தாம் கருதும் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் தம் படைப்புகளைப் பற்றி அல்லது ஏனையவரின் படைப்புகளைப் பற்றிக் கூறவேண்டும். அவ்விதம் கூறினாலே அவை தரமானவை என்றொரு கருத்தோட்டமும் கொண்டவர்களாக அவர்கள் இருப்பதையே இவ்விதமான உளவியற் போக்கு எடுத்துக்காட்டுகின்றது. இது தவறான நிலைப்பாடு. அண்மையில் நடந்த எனது நூல்கள் பற்றிய நிகழ்வில் கூட தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தனது உரையில் 'எனது புகலிட அனுபவக் கதைகள் முக்கியமானவை. அவை பற்றிப் பலரும் எழுதுவதில்லை. அவர்களுக்குத் தான் கூறுவது என் கதைகளைப்பற்றி எழுதுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கூற்றுக்கான காரணமும் மேற்படி உளவியற் போக்கே. உண்மையில் எனது படைப்புகள் பற்றி , குறிப்பாகப் புகலிடப் படைப்புகள் பற்றி நிறையவே ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆனால் அவர் கருதும் 'இலக்கிய மேதை'களின் எழுத்துகளில் அவை பற்றிக் காணவில்லையென்பதால் ஏற்பட்ட ஜயகரனது ஆதங்கமே அது.

மேலும் படிக்க ...

வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலர்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
இலக்கியம்
14 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலர். புதுமைக்கு வித்திட்ட  புரட்சிக்கவி.விடுதலைக்குக் கீதம் இசைத் திட்ட வீரக்கவி.இருப்பதில் இன்பத்தைப் பெருக்கிப் பார்த்திட்ட ஏற்றமிகு கவி.பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்திட்ட பாரத்தின் பண் பாடும் கவி. அஞ்சாத சிங்கமாய் ஆர்ப்பரித்து நின்ற அழகு தமிழ்க் கவி. அந்தக் கவிதான் எங்கள் முண்டாசு கட்டி முறுக்கு மீசையுடன் எடுப்பாய் திகழ்ந்து  - பாரதி என்று  பட்டொளி வீசி நின்ற  கவிக் குயிலாகும். பாரதி என்றதுமே அதில் ஓர் அதிர்வு உருவாகிறதல்லவா ! பாரதி என்றதுமே அதில் ஒரு புது உற்சாகம் பீறிட்டு வருகிறதல்லவா ! பாரதி என்றதும் தளர்வு அகன்று நிமிர்வு எழுகிறதல்லவா ! அந்தளவுக்கு  " பாரதி " என்பது ஒரு மந்திரமாய் தமிழுலகில் நிலைத்து நிற்கிறது என்பதை மனத்திருத்துவது அவசியமாகும்.

 எதையெடுத்தாலும் பாரதிக்கு முன் - பாரதிக்குப் பின் என்று பார்ப்பதுதான் உகந்ததாய் இருக்கும் என்று பலரும் கருதுகிறார்கள். சிந்தனை, செயற்பாடு, இலட்சியம் , கருத்துக்கள், கவிதை, எழுத்து நடை , என்னும் வகையில் பார்ப்பது பொருத்தமாய் இருக்கும்.பாரதிக்கு முன்னர் தமிழும் , இலக்கியமும், சமுதாயமும் , அமைந்த விதம் வேறாகவே இருந்தது. அதுதான் காலத்தின் நிலை. காலத்தின் தேவையினைக் கருதியே இலக்கியங்கள் எழுகின்றன. இதனால்த்தான் இலக்கியத்தைக் காலத்தின் கண்ணாடி என்று பார்க்கின்ற னர்.அந்தவகையில் பாரதிக்கு முன்னர் காணப்பட்ட இலக்கியப் போக்கிலிருந்து பாரதி மாறுபடுகிறாரா அல்லது வேறுபடுகிறாரா என்னும் வகையில் சிந்திப்பது பொருத்தமாய் இருக்கும் அல்லவா!

மேலும் படிக்க ...

கனடா இலக்கியவெளி வெளியிட்ட 'மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்' - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
14 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 03-12-2023 அன்று மாலை நான்கு மணியளவில் அகில் சாம்பசிவம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட இலக்கியவெளி இதழ் குழுவினர் வெளியிட்ட ‘மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்’ வெளியீட்டு விழா ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக் கலாமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் மீரா கனி விமலநாதன், தமிழக எழுத்தாளர் முனைவர் கரு முத்தய்யா, எழுத்தாளர் திரு. த. சிவபாலு ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து திரு.த. சிவபாலு அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது.

இந்த நிகழ்வுக்குப் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். தலைவர் உரையைத் தொடர்ந்து பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் அடிகளாரின் சிறப்புரை இடம் பெற்றது. கலாநிதி பால. சிவகடாட்சம், கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ், கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா எழுத்தாளர் இணையத் தலைவர் கவிஞர் அகணி சுரேஸ், சட்டத்தரணி திரு. சண், ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு. க. சண்முகலிங்கம், பாஸ்டர் எஸ். ஜெயானந்தசோதி, முனைவர் கரு முத்தய்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும் படிக்க ...

பிடித்த பக்கங்கள் (1) - ஆதவன் கதிரேசர்பிள்ளை -

விவரங்கள்
- ஆதவன் கதிரேசர்பிள்ளை -
ஆதவன் கதிரேசர்பிள்ளை
14 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூலொன்றின் பக்கத்தை மட்டுமே படித்து விட்டு, அந்நூலை மதிப்பிடுமளவிற்குற்றான் வாசக இவ்வுலகு இருக்கிறதெனும் யதார்த்தத்தைப் புரிந்தவன் நான்.
என்றாலும்..
நானெழுதும் இத் தொடர் இரசனை சம்மந்தமானது.
பிடித்த பக்கங்கள்.
யாருக்கு..?
எனக்குத்தான்.
நயம். நயத்தல்.
இதுவே இத் தொடரின் இலக்கு.
யாம் பெற்ற இன்பம் பெறுக .
வேறொன்றில.
படியுங்கள்.
இரசியுங்கள்.
அவ்வளவுதான்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “கம்பனைப் புரிந்துகொள்ளுதல்” - தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
14 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting |  Meeting ID: 847 7725 7162 |  Passcode: 554268

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு: கலை, இலக்கிய, மனித உரிமை ஆர்வலர் தன்னார்வத் தொண்டர் லயனல் போப்பகே ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
13 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                    - லயனல் போப்பகே -

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த சிங்கள இளைஞர்களின் ஆயுதக்கிளர்ச்சியை மறந்திருக்கமாட்டீர்கள். பல்கலைக்கழக மாணவர்களும், படித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் அவதியுற்ற ஏழை – மத்தியதர இளைஞர்களும் தென்பகுதியில் முன்னெடுத்த அந்தப் போராட்டம் குறுகிய காலத்தில் அரசின் தீவிர அடக்குமுறையினால் முறியடிக்கப்பட்டது. அப்போது கைதானவர்கள்தான் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, டி. ஐ. ஜி. தர்மசேகர, விக்டர் ஐவன், உபதிஸ்ஸ கமநாயக்க முதலான இளைஞர்கள். இவர்களில் ரோகண விஜேவீரா, ரஷ்யாவில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு திரும்பியிருந்தவர். லயனல் போப்பகே பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தில் படித்தவர்.

இந்தப்பெயர்களை, அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – என். எம். பெரேரா – பீட்டர்கெனமன் ஆகியோரின் ( ஶ்ரீல. சுதந்திரக்கட்சி – சமசமாஜக்கட்சி – கம்யூனிஸ்ட் கட்சி ) கூட்டரசாங்கத்தின் காலத்தில் நீதியரசர் அலஸ் தலைமையில் நடந்த குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது வெளியான செய்திகளிலிருந்து அறிந்திருந்தேன்.

தோழர் பாலாதம்பு குறிப்பிட்ட அரசியல் கைதிகளுக்காக வாதிட்டார். எனினும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நீண்ட காலம் சிறையிலிருந்தனர். கிளர்ச்சி நடந்தபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலரது சடலங்கள் மாணிக்க கங்கையிலும், களனி கங்கையிலும் மிதந்தன.

மேலும் படிக்க ...

காதலர்தம் உணர்வுகளின் வெளிப்பாடு Ye Zulf Kaisi Hai - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
12 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அனில்தாவனும் ஜெயாபாதுரியும் நடித்த இத்திரைப்படப்பாடல்ச் Ye Zulf Kaisi Hai , எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. காரணம் மொழியல்ல. நடிப்பு. காதல்கொண்ட உள்ளங்களின்  உணர்வுகளை, செயல்களை மிகச்சிறப்பாகத் தம் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அனில்தாவனும், ஜெயாபாதுரியும். அடுத்த வீட்டு பெண்ணைப்போல் தோற்றமளிக்கும் எளிமையான தோற்றம் மிக்க ஜெயாபாதுரி சிறந்த நடிகைகளில் ஒருவர். பாத்திர உளவியலை உள் வாங்கி , உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தி நடிப்பதில் வல்லவர். காதலர்களின் உளவியலைத் தம் நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கும் இப்பாடல் என்னை மட்டுமல்ல கேட்பவர் அனைவரையும் கவர்வதில் வியப்புண்டோ?  - https://www.youtube.com/watch?v=uVFd3T6Kcdo

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கனடாவில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் நூல்கள் - குரு அரவிந்தன் -
  2. அறிஞர். அ.ந. கந்தசாமி - அந்தனி ஜீவா -
  3. மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியாரின் பிறந்ததினம் டிசம்பர் 11) - வ.ந.கிரிதரன் -
  4. (மீள்பிரசுரம்) இமாலயப் பிரகடனம்: ஒரு பார்வை - சிவதாசன் -
  5. பாலஸ்தீனத் தாய் - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
  6. கரிகாற் சோழன் விருதுகள் பெற்ற இலங்கை – அவுஸ்திரேலியா எழுத்தாளர்கள் - முருகபூபதி -
  7. அஞ்சலி: ரிவாட் அலாரீர் (Refaat Alareer) -ஊர்க்குருவி -
  8. 'டைம்' சஞ்சிகையின் நூற்றிலொருவர் எம்.சஞ்சயன்! - வ.ந.கி -
  9. அண்மையில் வெளியான வ.ந.கிரிதரனின் நூல்களைப் பற்றியதொரு சிறு குறிப்பு! - பரம்சோதி தயாநிதி -
  10. நேர்த்திக் கடன் ( சிறுகதை ) - எஸ்.அகஸ்தியர்-
  11. 'சிந்தனைக் களம்: 'திருவாசகத்தில் மகளிர் ஆடல், பாடல்'
  12. அஞ்சலிக்குறிப்பு: நெடும்பயணத்தில், பாதி வழியில் விடைபெற்ற பேராசிரியர் செ. யோகராசா! - முருகபூபதி -
  13. (முகநூல் பதிவு) மிக மிகத் துயரமான செய்தி பேராசிரியர் யோகாராசா காலமானார் - பேராசிரியர் சி.மெளனகுரு -
  14. அஞ்சலி: 'ஆய்வுத் தேடல்' மிக்க பேராசிரியர் செ.யோகராசா மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 33 / 104
  • முதல்
  • முந்தைய
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • அடுத்த
  • கடைசி