பதிவுகள் முகப்பு

கனடாவில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் நூல்கள் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
12 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில் கோடைகாலம் வந்தால் நூல் வெளியீட்டு விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதுண்டு. அணிந்துரை அல்லது வாழ்த்துரை எழுதவோ அல்லது வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றவோ சில எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களைக் கொண்டு வந்து தருவதுண்டு. அப்படி என்னிடம் சமீபத்தில் கிடைத்த அந்த நூல்களை எப்படியாவது ஆவணப் படுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. எனக்குக் கிடைத்த நூல்களை மட்டும், சர்வதேச ஆர்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலும், மற்றும் அடுத்த தலைமுறையினருக்குப் பயன்படும் என்பதாலும் இங்கு ஆவணப்படுத்துகின்றேன்.

எழுத்தாளர் அகில் சாம்பசிவம் தொகுத்து வெளியிட்ட ‘இலக்கியவெளி’ சிறப்புமலர் 3-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் ‘ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்’ (கவிதைத்தொகுப்பு), ‘நவீன விக்கிரமாதித்தன்’ (நாவல்), வ.ந. கிரிதரன் கட்டுரைகள் ஆகியன 19-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. இதே தினத்தில் கலாநிதி சண்முகம் வெற்றிவேல் எழுதிய ‘இலக்கியத்தில் உளவியல்’ ‘தமிழர் பண்பாட்டு அடையாளச் சிக்கல்கள்’ ஆகிய நூல்கள் ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றன.

திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் ‘ஒற்றை வானமும் ஒரு பறவையும்’ (கவிதைத் தொகுப்பு ) ‘பொன்வண்டு’ (சிறுகதைத் தொகுப்பு) ஆகியன கனடியத் தமிழ் வானொலியால் 12-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. கனடா தமிழ் கவிஞர் கழகத்தின் கவிச்சரம் இதழ் 5-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. ஒலி,ஒளி ஊடகர் பி. விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூல் அறிமுகவிழா 4-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் நடைபெற்றது. எழுத்தாளர் சம்பந்தனின் ‘விழியும் துளியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு 14-10-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. உரையாளர் பொன்னையா விவேகானந்தனின் ‘தமிழ்மொழிக் கல்வி,’ ‘தமிழ்ப்பண்பாடு,’ ‘நாடகங்கள்,’ ‘பெயர்வுத் தமிழ்ச்சமூகம் - இருப்பும் இடர்களும்’ ஆகிய நூல்கள் 8-10-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றது.

மேலும் படிக்க ...

அறிஞர். அ.ந. கந்தசாமி - அந்தனி ஜீவா -

விவரங்கள்
- அந்தனி ஜீவா -
இலக்கியம்
12 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                        -  அ.ந.கந்தசாமியின் இளமைத்தோற்றம் -

- எழுத்தாளர் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் இக்கட்டுரை பூபாலசிங்கம் பதிப்பகம் வெளியிட்ட  அவரது  ' இவர்கள் வித்தியாசமானவர்கள்' நூலிலிருந்து மீள்பிரசுரமாகின்றது.  அ.ந.க பற்றி இவர் எழுதி தினகரன் பத்திரிகையில் தொடராக வெளியான 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடர், 'அ.ந.க ஒரு சகாப்தம்' நூல், அவ்வப்போது மல்லிகை சஞ்சிகையில் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.   அந்தனி ஜீவா அவர்களின் இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது. மலையகத்தமிழ் மக்கள் பற்றி, அவர்கள்தம் கலை, இலக்கியப் பங்களிப்புகள் பற்றி அவரது எழுத்துகள் , வெளியிட்ட நூல்கள், 'கொழுந்து சஞ்சிகை' ஆகியவை முக்கியமானவை. தற்போது சிறிது உடல்நலம் குன்றி இருப்பதாக அறிகின்றோம். விரைவில் அவர்  பூரண நலத்துடன் மீண்டு வந்து மீண்டும் முன்னரைப்போல் செயலாற்றுவார் என்று எதிர்பார்ப்போம். வேண்டிக்கொள்வோம். - பதிவுகள்.காம் -


கொழும்பில் என்னை ஓர் இளைஞர் தேடி வந்தார். “கலாநிதி சபா" ஜெயராசா உங்களிடம் அனுப்பினார். இலக்கிய முன்னோடி அ.ந. கந்தசாமியைப் பற்றிய குறிப்புகளைத் தந்துதவ வேண்டும், அ.ந. கந்தசாமியைப் பற்றிய பல்கலைக்கழக ஆய்வுக்கு குறிப்புகள் தேவை என்றார். அந்தப் பல்கலைக் கழக மாணவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் வார மஞ்சரியில் சில வாரங்கள் தொடராக எழுதிய அறிஞர் அ.ந. கந்தசாமியைப் பற்றிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்ற கட்டுரையையும், மற்றும் அ.ந.க.வை பற்றி எழுதிய மற்றும் குறிப்புகளையும் கொடுத்து அனுப்பினேன்.

நினைவு நாள்
அதற்குச் சில தினங்களுக்கு பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிஞர் அ.ந. கந்தசாமியின் நெருக்கமான நண்பரான தான் தோன்றிக் கவிராயர் திரு.சில்லையூர் செல்வராசன் அவர்களைச் சந்தித்தேன். பெப்ரவரி மாதம் அ.ந.க.வின் நினைவு நாள் வருகிறது என நினைவூட்டினேன்.

மேலும் படிக்க ...

மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியாரின் பிறந்ததினம் டிசம்பர் 11) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- மகாகவி பாரதியார் என்னை மிகவும் கவர்ந்த தமிழ் எழுத்தாளர்களில் முதலிடத்தில் இருப்பவர். அவரது பிறந்ததினம்  டிசம்பர் 11. அதனையொட்டி ஏற்கனவே அவ்வப்போது  நான் எழுதிய பதிவுகள் சிலவற்றைத் தொகுத்திங்கே தருகின்றேன். -

1. மகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியாரின் பிறந்ததினம் டிசம்பர் 11)

என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த இலக்கியவாதியென்றால் முதலில் நான் கருதுவது மகாகவி பாரதியாரைத்தான். முரண்பாடுகளற்ற மனிதர்கள் யாருளர். பாரதியிடமும் முரண்பாடுகளுள்ளனதாம். ஆனால் அவை அவரது அறிவுத் தாகமெடுத்த உள்ளத்தின் கேள்விகளின் பரிணாம வரலாற்றின் விளைவுகள்.  குறுகிய கால வாழ்வினுள் அவர் மானுட வாழ்வின் அனைத்து விடயங்களைப்பற்றியும் சிந்தித்தார். கேள்விகளையெழுப்பினார். அவற்றுக்குரிய விடைகளைத் தன் ஞானத்துக்கேற்ப அறிய முயற்சி செய்தார். இவற்றைத்தாம் அவரது எழுத்துகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

பாரதியாரின் எழுத்துகளிலிருந்து நான் அறிந்த , இரசித்த, எனையிழந்த முக்கிய விடயங்களாகப்பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. மானுட வாழ்க்கையைப்பற்றிய, மானுட இருப்பு பற்றிய சிந்தனைகள்.
2. மானுட வாழ்வின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் பிரச்சினைகள் பற்றிய அவற்றுக்கான தீர்வுகள் பற்றிய சிந்தனைகள்.
3. மானுட  இருப்பு பற்றிய, மானுட சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பற்றிய கோட்பாடுகள் பற்றிய சிந்தனைகள்.
4. இயற்கை பற்றிய , பூவுலகின் ஏனைய உயிர்கள் பற்றிய சிந்தனைகள்.
5. தமிழ் மொழி , தமிழ் இனம் பற்றிய , சக மானுடர் பற்றிய சிந்தனைகள்.
6. மானுட உணர்வுகள் பற்றிய காதல், இயற்கையை இரசித்தல் போன்ற சிந்தனைகள்
7. மானுட ஆளுமைகள் பற்றிய சிந்தனைகள்.
8. மானுட வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு நடைபோடுதல் பற்றிய சிந்தனைகள்
9. பிரபஞ்சம் பற்றிய அவரது சிந்தனைகள்

இவற்றை முக்கியமானவையாக கூறுவேன்.

மேலும் படிக்க ...

(மீள்பிரசுரம்) இமாலயப் பிரகடனம்: ஒரு பார்வை - சிவதாசன் -

விவரங்கள்
- சிவதாசன் -
அரசியல்
12 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான்கு நாட்களுக்கு முன் அதிரடியாக ஒரு செய்தி மின்னஞ்சல் பெட்டிக்குள் விழுந்திருந்தது. வாசிப்பதற்கு முன்னரே படங்கள் உள்ளடக்கத்தின் பெரும்பாகத்தை வெளிப்படுத்தி விட்டன. தலைப்பு அசத்தலாக இருந்தாலும் தலைக் கதிரையில் இருந்தவரைக் கண்டதும் சப்பென்று போய்விட்டது. ஆனாலும் முயற்சிகளின் நோக்கம் நல்லதாயின் அவை ஆராயப்பட வேண்டும் என்பதில் சம்மதம் உண்டென்ற படியால் உள்ளே சென்றேன்.

அது என்னவோ உலகத்தின் பல பிரகடனங்கள் இமாலய ‘உச்சி’ முகர்ந்துதான் செய்யப்படவேண்டுமென்ற விதியோ தெரியாது. ‘இமாலயப் பிரகடனம்’ என்ற பெயருடன் வந்தவற்றில் இது முதலும் கடைசியுமல்ல. திம்பு வும் பிரகடனப் பிரசித்தி பெற்றதுதான். இவற்றில் எப்பிரகடனமாவது வெற்றி பெற்றுள்ளவையா என்பதை அறிய சாத்திரி ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார்.

அறிக்கை உலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டு கனடிய தமிழர் பேரவையினால் அஞ்சல் செய்யப்பட்டிருந்தது. அறிக்கை நீட்டி விசாலித்து எழுதப்பட்டிருந்தது. அதில் ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை. அதன் சாராம்சம் இதுதான்.

உலகத் தமிழர் பேரவையும் சிறந்த இலங்கைக்கான சங்கங்கள் (Sangha for Better Sri Lanka) என்ற அமைப்பும் கூட்டாக எடுத்த முயற்சியின் பலனாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு உரையாடல் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்தது என்றும் அதன் பலனாக ஏப்ரல் 2023 அன்று நேபாளத்திலிருக்கும் நாகர்கோட் என்னுமிடத்தில் இரு தரப்புகளும் சந்தித்திருந்தார்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன் பலனாக உருவாகியதே ‘இமாலயப் பிரகடனம்’. இவ்வேளையில் ஜூலை -ஆகஸ்ட் 1985 இல் பூட்டானில் இருந்து வெளியிடப்பட்ட ‘திம்பு பிரகடனம்’ உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். அது பற்றிப் பின்னே பார்க்கலாம்.

மேலும் படிக்க ...

பாலஸ்தீனத் தாய் - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
கவிதை
11 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

  

   பத்து மாதம் சுமந்தேன் - உன்;
   மழலை மொழியில் துவண்டேன்
   கூவிக்கொண்டு வந்த குண்டை
   ஊதுகுழல் என்று நீ
   குதூகலித்தே கை தட்ட
   குறிபார்த்துக் கொன்றதோ என் செல்வமே
   உன்னை...

   ஐயோ!
   என் உயிரே!
   ரத்தக் கறை படிந்த உன்னை
   சுட்டியணைத்து அழகு பார்க்கிறதே வெள்ளைத்துணி
   குவிந்திருக்கும் குழந்தைச் செல்வங்களுள் - நீ என்
   அழகுத் தேவதை அம்மா! - இங்கே உன்
   சலனமற்ற உடலைத் தாலாட்டிவிட்டு
   தனிமையில் நான்
   எப்படி என் இடிமனை செல்வேன்?

மேலும் படிக்க ...

கரிகாற் சோழன் விருதுகள் பெற்ற இலங்கை – அவுஸ்திரேலியா எழுத்தாளர்கள் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
11 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையில் , சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கை வாயிலாக வழங்கப்படும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச்சேர்ந்த இலக்கியப்படைப்பாளிகளுக்கான கரிகாற்சோழன் விருதுகள் வழங்கும் விழா கடந்த 05 ஆம் திகதி நடைபெற்றது.

இம்முறை இந்த விருதுகள் இலங்கையரான , தற்போது அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் – விலங்கு மருத்துவர் நொயல் நடேசன் எழுதிய பண்ணையில் ஒரு மிருகம் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை எழுத்தாளர் சிவஆரூரன் எழுதியுள்ள ஆதுரசாலை என்ற நாவலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழும் தங்கப்பதக்கமும் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: ரிவாட் அலாரீர் (Refaat Alareer) -ஊர்க்குருவி -

விவரங்கள்
-ஊர்க்குருவி -
முகநூல் குறிப்புகள்
10 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
பாலஸ்தீனக் கவிஞரும், காசாவிலுள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ரிவாட் அலாரீர் (Refaat Alareer) கடந்த புதன் இஸ்ரேல் காசா மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இஸ்ரேலின் பலத்த குண்டுத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் கவிஞர் ரிவாட் அலாரீர் காசாவை விட்டு நீங்காமல் அங்கேயே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த இரங்கல்.
மேலும் படிக்க ...

'டைம்' சஞ்சிகையின் நூற்றிலொருவர் எம்.சஞ்சயன்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
சுற்றுச் சூழல்
10 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முனவைர் எம்.சஞ்சயன் (M. Sanjayan) 'சர்வதேசப் பேணுப்படுதல்' (Conservation International) என்னும் அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி. அமெரிக்காவில் வசிப்பவர்.  'பேணப்படுதல்' துறையில் அறிவியல் அறிஞரான இவர் எழுத்தாளரும் கூட. தொலைக்காட்சிகளில் இத்துறையில் செயற்படும் இவர் இயற்கையைப் பேணுவதன் மூலம் மானுடரின் வாழ்வை வளப்படுத்த வேண்டுமென்று செயற்படுபவர். இவரது கட்டுரைகள்  Science, Nature & Conservation Biology போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.  இவரது இயற்கையைப் பேணுதல் பற்றிய செயற்பாடுகளுக்காகவும், எழுத்துகளுக்காகவும் சர்வதேச ஊடகங்கள் பலவற்றின் கவனத்தை ஈர்த்திருப்பவர். 'சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல்' துறையில் . கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஓர் இலங்கைத் தமிழர்.  

மேலும் படிக்க ...

அண்மையில் வெளியான வ.ந.கிரிதரனின் நூல்களைப் பற்றியதொரு சிறு குறிப்பு! - பரம்சோதி தயாநிதி -

விவரங்கள்
- பரம்சோதி தயாநிதி -
இலக்கியம்
08 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

  - அண்மையில் வெளியான வ.ந.கிரிதரனின் நூல்களைப் பற்றிய தன் எண்ணங்களை அனுப்பி வைத்துள்ளார் கலை, இலக்கிய ஆர்வலரும், பொறியியலாளருமான  பரம்சோதி  தயாநிதி. -


நான் இலக்கியம் வாசிப்பது குறைவு. கிரிதரனின் புத்தக வெளியீட்டில் வாங்கிய புத்தகங்களின் பகுதிகளை சென்ற இரவுதான் வாசிக்க முடிந்தது. எனது மனதில் எழுந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் ”ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்” என்னும் புத்தகத்தில் உள்ள 9 கவிதைகளை வாசித்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கிரிதரனுக்குள்ளே இருக்கும் கவிஞனைக்கண்டேன். பலர் கவிதை என்ற பெயரில் எவையெல்லாமோ எழுதும்போது இக் கவிதைகள் தரம் மிகுந்தவையாகக் காணப்பட்டன.

எனினும் வாசித்த இரு கவிதைகள் எனக்கு விளங்கவில்லை. “குதிரைத் திருடர்களே …… “ என்ற கவிதையில் குதிரைகள் என்பது எதன் அடையாளம் (symbol) என்பது விளங்கவில்லை. ”ஆனை பார்த்தவர்” என்ற கவிதை குழப்பத்தை ஏற்படுத்தியது. “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்பதைத் தான் இக் கவிதையில் குழப்பமாகக் கூறுகிறாரா என்று சந்தேகம் வந்தது.

”நவீன விக்கிரமாதித்தனில்” எனும் நாவலின் முதல் இரு அத்தியாயங்களை மட்டுந்தான் இதுவரை வாசித்தேன். வித்தியாசமான முறையில் கதை செல்கிறது. விக்கிரமாதித்தனின் ஒரு கற்பனையா “மனோரஞ்சிதம்” என்ற சந்தேகம் ஏனோ வந்தது. முழுமையாகப் படிக்காமல் ”சந்தேகப்படுகிறேன்” என்று எழுதுவது சரியா என்று தெரியவில்லை.

விக்கிரமாதித்தன் மகா கவிஞரை ”இவர் மகா கவிஞரல்ல, மகா புலவர்” என்பது சுவாரஸ்யமாக இருந்தது. அதைப்பற்றிச் சிறிது சிந்தித்தபோது ”கவிஞர், புலவர் என்று இருமையாகப் பார்ப்பது சரியா ? இவர்கள் எல்லோருமே ஒரு “தொடர்ச்சி” யின் (continuum) இடையில் இருப்பவர்களல்லவா?” என்று தோன்றியது. ”கதை தானே அதில் உள்ள விக்கிரமாதித்தன் கதாபாத்திரம் அப்படி நினைத்தது” என்று என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டேன்.

மேலும் படிக்க ...

நேர்த்திக் கடன் ( சிறுகதை ) - எஸ்.அகஸ்தியர்-

விவரங்கள்
- எஸ்.அகஸ்தியர்-
சிறுகதை
08 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அவரது நினைவாக இச்சிறுகதை பிரசுரமாகின்றது. இதனை அனுப்பியுதவிய அவரது புதல்வி நவஜோதி யோகரட்னம் அவர்களுக்கு நன்றி. - பதிவுகள்.காம் -


‘உவள் ஒரு சரியான திடுமலிக் குமரி, சோக்கான வெள்ளைப் பொட்டை. அறுவாள் நல்ல சட்டையாப் போட்டுக்கொண்டு ஒதுக்கமா நில்லாம, இந்த நடுச்சந்தியில் இளிச்சுப் பிடிச்சுக்கொண்டு என்ன கண்டறியாத விடுப்புப் பாக்குது....!’

‘போச்சுடா, ஆரோ அவசரமாக வாறான். வாறவனும் இளவட்டம் தான்....?’

‘உவள் ஒரு நாய்ப் பிறவி, சிரிச்சமணீயம் அவனைத் தேடியல்லோ போறாள்? படு தோறை....’

‘சனியன் இளிக்கிற விறுத்தத்தைப்பார். மூதேவி, போற வாறவங்களுக்கெல்லாம் வாயத் துறந்து காட்டுதே?’

மரியாம்பிள்ளை அண்ணர் மனுசனாய் நிற்கவில்லை, அவர் நெஞ்சு கெந்தகித்தது.

அப்போது.....

‘அய்யா துரோய், ஏதாச்சும் தாங்கையா’ என்ற குரல் கேட்கவே, அண்ணர் திரும்பிப் பார்த்தார்.

துரை அசட்டையாகச் சட்டைப் பைக்குள் கையை விட்டுத் துழாவி, சில சில்லரைகளை எடுத்து அவள் ஏந்திய குவளைக்குள் எறிந்து விட்டு நடந்தார்.

‘அச்சாத் தொரை, நீங்க நல்லாயிருக்கோணும் துரை’

‘சிச்சீ இவளின்ர தொழில் இதுதானா?’

இதுவரை தொண்டைக் குழியில் ஊனம் வழிய ‘அவவைப் பார்த்த மரியாம்பிள்ளை அண்ணை கண்ணில் இவ இப்படி ஏந்தி ‘வாங்கும்’ காட்சி மிளகாய்ப்பொடி தூவிற்று.

மரியாம்பிள்ளை அண்ணருக்கு இது முகத்தில் ‘பளார்’ அடி, ‘சடா’ ரென்று அங்கிருந்து விலகினார். இருப்பினும் அண்ணனுக்கு எந்த ஒரு வேலையும் நேர் சீராக ஓடவில்லை. அனலாக உந்திய அவர் மேனியில் இப்போது சோர்வு தட்டிற்று. அதனால் ‘ஹாவ்டே லீவ்’போட்டு விட்டு மத்தியானத்தோடு ‘போடிங்’கிற்குத் திருப்பினார்.

மரியாம்பிள்ளை அண்ணன் அசல் யாழ்ப்பாணி. வலு கடுவலான மத விஸ்வாசி. கொழும்பிலே துறைமுகக் கப்பல்களில் வேலை, சீவியம் ‘போடிங்’கில் தான். ஆள் தனிக்கட்டையல்ல, பெண் கொள்ளாத இளந்தாரியுமல்ல. கலியாணம் செய்து பதினைந்து பதினாறு வருஷம் அரை டசினுக்கு மேல் பெத்துப் பெருக்கி விட்டார். பெரிய குடும்பஸ்தர். பொடி பொட்டைகளாக மொத்தம் ஆறுக்கு அண்ணன் அப்பன். இந்த ஆறும் போக அவவுக்கு வயிறு அழித்தது’ மூன்று உருப்படியாகப் பார்த்தால் கணக்கு ஒன்பதாகிறது. அவவுமோ வருஷக் கொத்தி. இந்தக் கோசும் அவ பெறு மாதம். ‘ஏழு மாசத்தில் ஆறு கடக்கப்படாது’ என்று நாலு பத்துத் தெரிந்தவர்கள் எழுதியிருந்தார்கள். என்றாலும், அண்ணர் கடைசிவரை வைத்திருந்து விட்டுப் போன கிழமைதான் பெறுவுக்காக அவவை யாழ்ப்பாணத்தில் விட்டு வந்து ஆறியிருக்கிறார்.

வந்து கால் ஆறவில்லை, அதற்கிடையில் இந்தக் கூத்து. அது அந்தப் போடிங்கின் சாக்குக் கட்டுவால் வந்த சூடோ, அவரோடு இருந்த தங்கராசா மாஸ்டரின் பழக்க வழக்கத்தால் ஏற்பட்ட தோஷமோ சொல்ல முடியாது. தங்கராசா மாஸ்டர் பள்ளிக்கூடச் சட்டம்பியல்ல, அவருக்கு இவர் ‘மாஸ்டர்’ அவ்வளவுதான்.

மேலும் படிக்க ...

'சிந்தனைக் களம்: 'திருவாசகத்தில் மகளிர் ஆடல், பாடல்'

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
08 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

Join Zoom Meeting  | Meeting ID: 833 5062 2591 | Passcode: 605384]

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: நெடும்பயணத்தில், பாதி வழியில் விடைபெற்ற பேராசிரியர் செ. யோகராசா! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
07 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கண்டியிலிருந்து கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை என்னைத்தொடர்புகொண்ட எழுத்தாளர் நொயல் நடேசன், எங்கள் இலக்கிய நண்பர் பேராசிரியர் செ. யோகராசா மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார். உடனே கொழும்பிலிருக்கும் பேராசிரியை சித்திரலேகா மௌனகுருவை தொடர்புகொண்டு அந்தச்செய்தியை ஆழ்ந்த கவலையுடன் உறுதிப்படுத்தினேன். இரண்டு நாட்களுக்கு முன்னர், மகரகமக மருத்துவமனைக்குச்சென்று அவரைப் பார்த்ததாகவும், கவலைக்கிடமான நிலையில் அவர் இருந்ததாகவும் சித்திரலேகா சொன்னார்.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப் பயணத்தில் இணைந்து வந்திருக்கும் எமது அருமை நண்பர் செ. யோகராசாவின் அருமைத் துணைவியார் விஜயதிலகிக்கும் ஏகபுதல்வி சுவஸ்திகாவுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் துயரத்திலும் பங்கெடுத்து இந்த அஞ்சலிக்குறிப்பினை எழுதுகின்றேன்.

இலங்கையில் வடமராட்சி பிரதேசம் பல இலக்கிய ஆளுமைகளையும் கல்விமான்களையும் பெற்றெடுத்த மண். 1949 ஆம் ஆண்டு, கரணவாய் கிராமத்தில் செல்லையா – இலட்சுமி தம்பதியரின் செல்வப்புதல்வனாக பிறந்திருக்கும் யோகராசா, தனது ஆரம்பக்கல்வியை கரணவாய் வித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்தவர்.

மேலும் படிக்க ...

(முகநூல் பதிவு) மிக மிகத் துயரமான செய்தி பேராசிரியர் யோகாராசா காலமானார் - பேராசிரியர் சி.மெளனகுரு -

விவரங்கள்
- பேராசிரியர் சி.மெளனகுரு -
இலக்கியம்
07 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கருணை யோகன் என அழைக்கப்படும் பேராசிரியர் செ.யோகராஜா  இன்று மதியம் காலமானார். கேன்சர் நோய் என அறிய ப்பட்டு அவர் மகரம ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப் பட்டார். சென்ற மாதம் நான் மட்டக் களப்பு  சென்றபோது வீடு தேடி வந்து பல மணி நேரம் உரையாடிச் சென்றார். நோயாளியைப் போல தோற்றமளித்த.  அவரைப் பார்த்து 'உடனடியாக வைத்தியரிடம் செல்லுங்கள்" என்று கூறினேன்.
வழக்கம் போல சிரித்துக் கொண்டார்

மூன்று நாட்களுக்கு முன்னர் தான் நானும் சித்ரலேகாவும் அவரை. மகாறகம வைத்திய சாலையில்சென்று பார்த்து வந்தோம். மக்களோடு மக்களாக ஒரு கட்டிலிலேயே படுத்துக் கிடந்தார். அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவர் தலையைத் தடவிக் கையைப் பிடித்து ஆறுதல் கூறினேன். அவர் உடம்பில் சேர்லைன் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். என்னை கண்டதும்படபட படவென்று பேசத் தொடங்கினார்.  நான் அவரை கையமர்த்தி  "நீங்கள் பேசாமல் இருங்கள் நான் பேசுகிறேன்"  என்றேன். "வருத்தம் பற்றிப் பேசாமல் வேறு ஏதும் பேசுங்கள்"  என்றார். நோயின் தீவிரத்தை அவர் அறிந்திருந்தார். போலத் தெரிகிறது.

மேலும் படிக்க ...

அஞ்சலி: 'ஆய்வுத் தேடல்' மிக்க பேராசிரியர் செ.யோகராசா மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் மறைந்துவிட்டதாக முகநூல் மூலம் அறிந்தேன். மிகவும் துயர் தரும் செய்தி. நான் மதிக்கும் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் இவர். இவரது இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் முக்கியத்துவம் மிக்கவை.

இவரை நான் சந்தித்ததில்லை. இவரது படைப்புகளூடு மட்டுமே அறிந்திருக்கின்றேன். எனது 'அமெரிக்கா' நாவல் தனிப்பதிப்பாக, இலங்கையில் 'மகுடம்' பதிப்பாக வெளியானபோது அதற்கு சிறப்பானதோர் அணிந்துரையினை எழுதியிருந்தார். அதனை எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன்.

இவரைப்போன்ற ஆய்வுத்தேடல் மிக்க பேராசிரியர்களை மிகவும் அரிதாகவே காணமுடியும் சூழலில் இவரது மறைவு எதிர்பாராதது. இவர் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் 'பதிவுகள்' சார்பிலும், தனிப்பட்டரீதியிலும் ஆழ்ந்த இரங்கல்.

அகவை எண்பது காணும் சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
07 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'சிந்தனைப்பூக்கள்' பத்மநாதன் என்று தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட உரையாளர், எழுத்தாளர் திரு. எஸ். பத்மநாதன் அவர்கள் இவ்வருடம் டிசெம்பர் மாதம் முத்து விழாக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் உள்ள உரும்பிராய் என்ற ஊரில் பிறந்தார். ஆரம்ப கல்வியை உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்திலும், அதைத் தொடர்ந்து உரும்பிராய் இந்துக் கல்லூரி, ஸ்கந்தவரோதயா கல்லூரி, பேராதனை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.  பேராதனை பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புப் பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டமும் பெற்றவர். கனடாவில் ரொறன்ரோ வர்த்தகக் கல்லூரியில் 1993 ஆம் ஆண்டு ‘பிரயாணமும் உல்லாசப் பயணமும்’ என்னும் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார்.

இலங்கையின் மலையகத்தில் உள்ள பதுளை, நுவரெலியா, பண்டாரவளை மாவட்டங்களில் சமூகக்கல்வி பாடசேவைக்கால ஆலோசகராகவும், பாடவிதான அபிவிருத்தி சபையில் நூலாக்கக் குழுவிலும், ஒஸ்மானியா கல்லூரியில் ஆசிரியராகவும், கோப்பாய் அரசினர் பயிற்சிக் கல்லூரியில் சமூகக் கல்வி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவியல் அரங்கக் குழுவுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இலங்கையில் இருந்து வெளிவரும் மல்லிகை, வீரகேசரி, தினபதி, ஈழநாடு, தினக்குரல் ஆகிய ஊடகங்களில் கல்வி, புவியியல் சம்பந்தமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க ...

சென்னை வெள்ளம்: இயல்பு நிலை விரைவில் திரும்பட்டும்!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்னை மாநகர் மீண்டும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. மனிதரின் சூழல் விரோத நடவடிக்கைகளால் உலகக் காலநிலை பெரிதும் மாறுதலடைந்துகொண்டு வருவதன் விளைவுதான் இத்தகைய காலநிலைச்சீர்கேடுகள்.

இவ்விதமான காலநிலைச் சீர்குலைவுகள் ஏற்படுகையில் அதிலிருந்து தப்பும் வழியில் மனிதர் தாம் வசிக்கும் நகரங்களை வைத்திருக்க வேண்டும். அமைக்க வேண்டும்.

ஒரு காலத்தில் குகைகளில் வாழ்ந்த மனிதர் காலநிலையிலையிருந்து தப்புவதற்காக, பாதுகாப்புக்காக நகரங்களை, இருப்பிடங்களை அமைத்தனர். இன்றைய மனிதர் தாம் ஏற்படுத்திய காலநிலைச் சீர்குலைவுகளிலிருந்து தப்புவதற்காக மீண்டும் தம் நகர் அமைப்பு, இருப்பிட அமைப்பு போன்றவற்றை அமைப்பதில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க ...

The Prime Minister, Justin Trudeau's statement on the National Day of Remembrance and Action on Violence Against Women:

விவரங்கள்
- PMO Media Relations -
அரசியல்
06 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Statement by the Prime Minister on the National Day of Remembrance and Action on Violence Against Women

December 6, 2023, Ottawa, Ontario

The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on the National Day of Remembrance and Action on Violence Against Women:

“On this National Day of Remembrance and Action on Violence against Women, we remember the 14 young women who were senselessly murdered and the 13 others who were injured at the École Polytechnique de Montréal. Today, we pay tribute to their lives that were tragically cut short simply because they were women, and we reaffirm our commitment to eliminate gender-based violence.

“As we remember the victims of this hateful, cowardly act, we are also reminded that, for many women, girls, and gender-diverse people in Canada and around the world, the violent misogyny that led to this tragedy still exists. The risk of violence is even higher for Indigenous women and girls, racialized women, women living in rural and remote areas, people in 2SLGBTQI+ communities, and women with disabilities. That is why we have and continue to strengthen our laws and ensure supports for victims and survivors of gender-based violence.

மேலும் படிக்க ...

சிலுவை : சுப்ரபாரதிமணியன் நாவல் அறிமுகம் - சி. ஆர். ரவீந்திரன் -

விவரங்கள்
- சி. ஆர். ரவீந்திரன் -
நூல் அறிமுகம்
06 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

300 ஆண்டுகால  கொங்கு பகுதியின் சரித்திரமாகவும்   நாவல் அனுபவமாகவும் இந்த  நாவல் விளங்குகிறது. நெசவுத்தொழிலின் ஒரு  குறியீட்டுக்களமாக அமைந்த   சுப்ரபாரதிமணியன் புதிய நாவல் சிலுவை .

மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளாக இருப்பவை உணவு , உடை,  உறைவிடம் . இவைகளின் பின்னணியில் மனித உழைப்பு தவிர்க்க முடியாத படி இருக்கிறது. அதுதான் சமுதாயம் என்ற ஒரு அமைப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது. .உழைப்பு சக்தியின் தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஒருங்கிணைந்து வரலாற்றை மனிதர்கள் வடிவமைக்கிறார்கள் .அந்த வரலாற்றின் உள்ளீடாக அமைந்துள்ள நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வாழ்க்கையில் வளர்ச்சியை புரிந்து கொண்டு அதை மதிப்பீடு செய்கிறோம்.

இந்த வகையான ஒரு புரிதலையும் அறிதலையும் உணவு பூர்வமாக உள்வாங்கிக் கொண்டு இந்த நாவலில்  கொங்கு பகுதியை முன் நிறுத்தி சுப்ரபாரதிமணியன் வடிவமைத்திருக்கிறார். அதை வாசிப்பின் வாயிலாக உணர்ந்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க ...

புதுவை 75 : நித்தமும் கவிதை பூக்கும் நிலவு - செ. சுதர்சன் -

விவரங்கள்
- செ. சுதர்சன் -
கவிதை
04 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ ஈழத்துக் கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு (வரதலிங்கம் இரத்தினதுரை)  தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதோரிடமுண்டு.  கவிதை, திறனாய்வு என அவரது இலக்கியப் பங்களிப்பு இருந்துள்ளது. அவரது எழுத்துப் பங்களிப்புக்கான காலகட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். வர்க்க விடுதலைப்போராட்டக் காலகட்டம். தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டம். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்துகளால், மார்க்சியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வரதபாக்கியான் என்னும் பெயரில்  கவிதைகள் படைத்தவர் புதுவை. பின்னர் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்.

முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணாமல் போனவர்களில் இவருமொருவர்.  முக்கியமான எழுத்தாளர் ஒருவர் சரணடைந்திருக்கின்றார்.  இந்நிலையில்  அவரைப்பற்றி  2012இல் திவயின சிங்களப் பத்திரிகை புதுவை இரத்தினதுரை  இலங்கை இராணுவத்தின் காவலிலுள்ளதாகச் செய்தி வெளியிட்டதாக   விக்கிபீடியாக் குறிப்பு கூறுகின்றது.  இது தவிர இதுவரை அவர் பற்றிய மேலதிகத் தகவல்கள் எவையுமில்லை - பதிவுகள்.காம் -]

அள்ளிடும் வாஞ்சை; அன்பை
ஆள்வதில் அரசு; நெஞ்சைத்
துள்ளவே வைக்கும் பாக்கள்
தூவிய நாக்கு; சின்னக்
கள்ளியில் கூட நேசம்;
கண்களில் கனவுத் தேசம்;
புள்ளி நீ எங்கே? எங்கள்
புதுவையே எழுபத்தைந்தா..!?

நிலமெலாம் திரிந்து பாட்டின்
நீளமாய் விரிந்தாய்; வீரர்
பலமெனப் படர்ந்து மண்ணின்
பாஷையாய் மலர்ந்தாய்; என்றும்
வலம்வரு காற்றில் குந்தி
வரிகளில் வாதை சொன்னாய்;
கலமெனப் பேனா ஏந்தி
களப்பணி வரித்து நின்றாய்!

விடுதலைப் பானை பொங்க...
வீறுகொள் அடுப்பை மூட்டும்
சுடுதணல் கவிகள் தந்தாய்!
சூழுமோர் பகையை உந்தன்
விடுகவி கொல்லும் என்றாய்!
விரிகதிர்ப் பொலிவை மண்ணில்
நடுமொளி வெல்லும் என்றாய்!
நாவிலே நாடு கொண்டாய்!

மேலும் படிக்க ...

புரிந்துணர்வைப் போதிக்கும் படைப்பு : சிவ ஆரூரனின் ஊமை மோகம் - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
கலாநிதி சு.குணேஸ்வரன் பக்கம்
04 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிமுகம்

சிவ ஆரூரன் சிறைக்குள்ளிருந்து இலக்கியம் படைத்தவர். தனது சிறைக்காலத்தை வாசிப்பு எழுத்து என மாற்றி நம்பிக்கையை விதைத்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என பல்துறைகளிலும் ஈடுபட்டு வருபவர். சமூக இயங்கியலை வெளிப்படுத்தும் பல நாவல்களைத் தந்தவர். சிறந்த நாவலுக்கான விருதுகளை மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பெற்றவர். ஜீவநதி வெளியீடாக 2022 இல் வெளிவந்த ‘ஊமை மோகம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

சிவ ஆரூரனின் வெளிவந்த ஏனைய நாவல்களில் இருந்து உள்ளடக்கத்தில் வேறுபட்டது ஊமை மோகம். பலரும் எழுதத் தயங்குகின்ற ஆண்பெண் உறவுநிலையில் ஏற்படுகின்ற சிக்கல்களை இந்நாவல் பேசுகிறது. தமிழ்ச்சூழலில் இவ்வகை எழுத்துக்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்நாவலின் உருவாக்கம் பற்றி ஆசிரியர் குறிப்பிடும்போது

“ஆண்பெண் உறவின் அதிருப்தி குறித்தும் புரிந்துணர்வு இன்மை குறித்தும் பலர் பேசியதை நான் செவிமடுத்த பிறகு அவற்றை என் மனவானில் உலவவிட்டவேளை என் மனம் உளைந்தது. என் நூலறிவின் துணை கொண்டு என் மனஉளைவிற்கு ஒரு கலைப்பெறுமதியைக் கொடுக்க முனைந்துள்ளேன். ஒழுக்க நெறியுடன் வாழநினைக்கும் யாழ் மண்ணின் கீழ்மத்தியதரக் குடும்பம் ஒன்றின் வாழ்வுக் கோலத்தையும் அதில் இழையோடிக் கிடக்கும் அபாக்கியமான ஊமை மோகத்தையும் இந்நாவல் பேசுகின்றது.” (தந்துரை, சிவ. ஆரூரன்) என்று குறிப்பிடுகின்றார்.

மேலும் படிக்க ...

ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலில் ஒரு காட்சி! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவல் 'ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்!'. அதில் வரும் ஹென்றி மறக்க முடியாத மனிதன். மகத்தான மனிதன்.  விகடனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்' தொடராக வெளிவந்த காலத்திலேயே விரும்பி வாசித்திருக்கின்றேன். அதனால் இவ்வோவியமொரு காலக்கப்பல். என்னை என் பால்ய பருவத்திற்கே காவிச்செல்லும் காலக்கப்பல்.

ஜெயகாந்தனின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இதுதான். இதில்வரும் ஹென்றி பாத்திரம் தி.ஜானகிராமனின் 'மோகமுள்' பாபு, யமுனா' போல் மனத்தை ஈர்த்த பாத்திரம். நாவலில் தகப்பனின் கிராமத்துக்கு வரும் ஹென்றியின் அனுபவங்கள் மறக்க முடியாதவை. தந்தையுடன் 'பப்பா என்றழைத்து நடத்தும் உரையாடல்களை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை.

அவ்வுரையாடல்களை வாசிக்கையில் என் பால்ய காலத்தில் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அப்பாவின் சாறத்தில் படுத்திருந்தபடி , அண்ணாந்து விண்ணைப்பார்த்தபடி  ,  எதிரே விரிந்திருக்கும் விண்ணில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களைப்பற்றி, கோடிழுக்கும் எரிநட்சத்திரங்களைப் பற்றி, அவ்வப்போது விரையும் செயற்கைக்கோள்களைப் பற்றி உரையாடிய தருணங்களை என் மனம் அசை மீட்டிப் பார்க்கும்.  ஒரு நாவலின் வெற்றி இது போன்ற வாசக அனுபவங்களில்தாம் உள்ளது.

மேலும் படிக்க ...

மருதூர்க் கொத்தனின் "அதிமதுரம்" குறுநாவல் நூல்வெளியீட்டு விழா! - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
நிகழ்வுகள்
02 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் மற்றும் மலையக கலை கலாசாரச் சங்கம் இணைந்து நடத்தும் கலாநிதி செ. சுதர்சன், சிரேஷ்ட  ஊடவியலாளர் இக்பால் அலி ஆகியோர் பதிப்பில் முதற்பதிப்பாக வெளிவரும் மருதூர்க் கொத்தனின் "அதிமதுரம்" குறுநாவல் வெளியீட்டு விழா கண்டி டி.எஸ். சேனநாயக வீதியில் (கண்டி அசோகா வித்தியாலத்திற்கு  முன்னால்) அமைந்துள்ள செல்லத்துரை ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை  2.-12-2023 , பி.ப. 3.00 மணிக்கு,மலையகக் கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: 'கூற்று' பெண்களின் குரல் 25 வருடங்கள்! மனம்விட்டுப்பேசும் 'வெளிகள்' பெண்கள் மத்தியில் உருவாகவேண்டும்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
01 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                   - பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு -

கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் நான் இலங்கையில் நின்றபோது, கொழும்பில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களைச் சந்தித்தேன்.

இவருடனான சகோதர வாஞ்சையான உறவு எனக்கு 1970 களிலேயே தொடங்கிவிட்டது. பின்னாளில் எனது இலக்கிய நட்பு வட்டத்தில் இணைந்த பலரதும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், பேராசிரியையாகவும் திகழ்ந்த சித்திரலேகா பற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் தினத்தின்போது நான் வெளியிட்ட யாதுமாகி ( 28 பெண் ஆளுமைகள் பற்றியது ) நூலிலும் எழுதியிருக்கின்றேன்.

பல்கலைக்கழக பேராசிரியையாக மாத்திரம் இயங்காமல், இலக்கியவாதியாகவும், பெண்கள் தொடர்பான விழிப்புணர் நடவடிக்கைகளில் தன்னார்வத் தொண்டராகவும் விளங்கியிருக்கும் சித்திரலேகா, சில நூல்கள், மலர்களின் தொகுப்பாசிரியருமாவார்.

பல வருடங்களுக்கு முன்னர் இவர் தொகுத்து வெளியிட்ட சொல்லாத சேதிகள் கவிதை நூல் இன்றளவும் பேசப்படுகிறது.

இம்முறை இவரை நான் சந்தித்தபோது கூற்று என்ற ஆவணத்தொகுப்பு நூலை எனக்கு படிக்கத்தந்தார். 261 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இத்தொகுப்பினைப் பற்றிய அறிமுகத்தை எழுதுவதற்கு காலதாமதமாகிவிட்டது. நான் தொடர்ச்சியான பயணங்களில் இருந்தமையால், இந்தத் தாமதம் நிகழ்ந்தது.

மேலும் படிக்க ...

கனடாவில் 'மாவீரர் தினம்' - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
01 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விடுதலைப்புலிகளின் மாவீரருக்கான  அகவணக்க நிகழ்ச்சி கனடாவில் பல இடங்களிலும் சென்ற வாரம் இடம் பெற்றது. குறிப்பாக ‘மார்க்கம் பெயகிறவுண்ட்ஸ்’ திடலில் திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலைவரை ‘தமிழர் நினைவெவெழுச்சி நாள்’ . தமிழர்கள் பலர்  இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். குறிப்பாக இங்கு பிறந்து வளர்ந்த இளம் தலைமுறையினர் பலர் மிக ஆர்வத்தோடு இந்த நிகழ்வுகளில் இம்முறை கலந்து கொண்டது, எமது வரலாற்றை அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. முக்கிய பிரமுகர்களின் உரையைத் தொடர்ந்து இளந்தலைமுறையினர் பலர் அகவணக்கப் பாடல்களுக்கு நடனமாடியதையும், அகவணக்கப் பாடல்களை உணர்வு பூர்வமாகப் பாடிச் சபையோரைக் கண்கலங்க வைத்ததையும் என்னால் அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் சுயநலம் கருதாத இந்தப் பிள்ளைகளின் பெற்றோருக்கும், நடன, சங்கீத ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.

ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக் சென்ரரில் சென்ற சனிக்கிழமை நடைபெற்ற மாவீரருக்கான அகவணக்க நிகழ்வு ஒன்றிக்கு என்னை உரையாற்ற அழைத்திருந்தனர். மாவீரருக்கான ஒரு பாடல் வெளியிடுவதாகவும், அந்தப்பாடலைக் கேட்டு அதைப் பற்றியும் எனது மதிப்புரையை வழங்கும்படியும் கேட்டிருந்தனர். எனவே அந்த நிகழ்வில் கலந்து கொள்ள நான் அங்கு சென்றிருந்தேன்.

மேலும் படிக்க ...

மக்கள் எழுத்தாளன் இன்குலாப் நினைவாக... ( இது ஒரு மீள்பதிவு) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று டிசம்பர் 1 எழுத்தாளர் இன்குலாப் (எஸ். கே. எஸ். சாகுல் அமீது)  அவர்களின் நினைவு தினம். அவரது நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான  'ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்' என்னும் கவிதையையும், அவர் பற்றிய சிறு குறிப்பினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

'சமயம் கடந்து மானுடம் கூடும்,
சுவரில்லாத சமவெளி தோறும்,
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்;
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்'

என்று பாடிய மக்கள் கவிஞன்.  அவன் தன் மானுட நேயம் மிக்க எழுத்துகளோடு என்றும் வாழ்வான்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழி வழங்கும் எழுத்தாளர் அரங்கம் 16
  2. சர்வதேச ஆண்கள் தினம் - 2023ம் ஆண்டின் கருப்பொருள்: ஆண் தற்கொலையை பூஜ்ஜியமாக்குதல்! - சிவம் வேலாயுதம் -
  3. தற்கொலை வீதம் தமிழ் சமூகத்தில் அதிகரிப்பதற்கான காரணிகள் ! ? தீர்வுகள் எம்மிடமே இருக்கின்றன! - முருகபூபதி -
  4. சிறுகதை: முப்பது ஆண்டுகள் பிந்தி பெய்த மழை! - தேவகாந்தன் -
  5. நீர் நாடி வெடிக்கும் ஒரு புரட்சி! - ம.ஆச்சின் -
  6. கார்த்திகைக் குறிப்புகள் - செ.சுதர்சன் -
  7. நாலடியார் கூறும் நிலையாமை - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, (சுழற்சி 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
  8. படித்தோம் சொல்கிறோம்: திரௌபதையின் மரணவாக்குமூலம் கதையாகும் விந்தை ! ( அமரர் சை. பீர் முகம்மதுவின் பயஸ்கோப்காரனும் வான்கோழிகளும் !! - முருகபூபதி -
  9. முதலாவது சந்திப்பு 50: உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் ‘ பதிவுகள் ‘ கிரிதரன் ! - முருகபூபதி -
  10. உலகறிந்த கலைஞராக, எழுத்தாளராகக் கோவிலூர் செல்வராஜன் திகழ்கிறார்..! - அசலகேசரி -
  11. கனடா எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா! - குரு அரவிந்தன் -
  12. டொமினிக் ஜீவாவின் கதைக்களம்! - முனைவர் கி. ராம்கணேஷ், உதவிப்பேராசிரியர் - தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி - 642 107 -
  13. 'சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?' - முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் (பாரதிசந்திரன்) , திருநின்றவூர் -
  14. வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலை முன் வைத்து.... - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -
பக்கம் 34 / 104
  • முதல்
  • முந்தைய
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • அடுத்த
  • கடைசி