பதிவுகள் முகப்பு

படித்தோம் சொல்கின்றோம்: அருந்ததியின் ஆண்பால் உலகு நாவல்! ஆணாதிக்கத்தினால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் உண்மைக் கதை ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
14 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவிலிருந்து இயங்கிவரும் வசந்தம் தமிழ் உளவளத்துணை நிலையம் மெய்நிகர் வழியாக நடத்திவரும் தொடர் கருத்தரங்கில், கனடாவில் குடும்ப வன்முறை பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவேளையில்தான், பிரான்ஸில் வதியும் எழுத்தாளர் நாடகக் கலைஞர் அருந்ததி எழுதிய ஆண்பால் உலகு நாவலையும் படித்து முடித்திருந்தேன். மெய்நிகர் கருத்தரங்கும், இந்த நாவலும் குடும்ப வன்முறை பற்றியே பேசியிருந்தமையால், அதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன? என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. குடும்ப வன்முறையினால் (Domestic Violence) பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். அதற்கு ஆணாதிக்கம் மாத்திரம் காரணமில்லை. பெண்களின் அறியாமையும் மிக முக்கிய காரணம்.

கனடாவிலிருந்து இலக்கிய சகோதரி பார்வதி கந்தசாமி நடத்திய குடும்ப வன்முறை தொடர்பான கருத்தரங்கிலிருந்தும், அருந்ததி எழுதிய ஆண்பால் உலகு நாவலிலிருந்தும் பெண்களின் அறியாமையை ஆண்களின் உலகம் எவ்வாறு தனக்கு சாதகமாக்கிக்கொண்டு தப்பித்துக்கொள்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

அருந்ததியின் இயற்பெயர் அருளானந்தராஜா இரத்தினம். யாழ்ப்பாணம் நாவாந்துறையில் ஒரு மத்தியதரக்குடும்பத்தில் பிறந்திருக்கும் இவர், அளவையியல் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கும் நாடகக் கலைஞர், நாடக பிரதியாளர், இயக்குநர். 1984 இல் பிரான்ஸுக்கு புலம்பெயர்ந்து சென்றபின்னரும் தனது உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வருபவர். பிரான்ஸிலும் நாடகங்கள் எழுதி இயக்கி தயாரித்து மேடையேற்றியவர். சமாதானத்தின் பகைவர்கள், இரண்டாவது பிறப்பு, கடல் முதலான கவிதைத் தொகுப்புகளை வரவாக்கியிருக்கும் அருந்ததி, முகம் என்ற திரைப்படத்தையும் ( 1996 ) எழுதி இயக்கியிருப்பவர். ஆண்பால் உலகு அருந்ததியின் முதல் நாவல். 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு கருப்புப்பிரதிகள் பதிப்பகத்தினால் வெளியாகியது. இந்நாவல் முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

இசைக்குயில் பி.சுசீலா! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
14 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவம்பர் 13 பி.சுசீலாவின் பிறந்ததினம்! அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

'இசைக்குயில்', 'கான கோகிலா', 'மெல்லிசை அரசி' & 'கான சரஸ்வதி' என்று அழைக்கப்படும் பி.சுசீலா (புலப்பாக்க சுசீலா)  தமிழ், தெலுங்கு, கன்னடம், ,மலையாளம், இந்தி, சிங்களம் & சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் 25,000 பாடல்களுக்கு மேல் பாடியவர். இந்திய மத்திய அரசின் பத்மவிபூஷன் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற இவர் ஐந்து தடவைகள் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர். இவர் டி.எம்.எஸ் அவர்களுடன் இணைந்து சுமார் 1000 பாடல்களைப் பாடியுள்ளதாக விக்கிபீடியா கூறுகிறது.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு

விவரங்கள்
- தகவல்:அகில் -
நிகழ்வுகள்
13 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

கனடா ‘கிராமத்து வதனம்’ முன்னெடுத்த நவராத்திரி விழா - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
13 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக் கிழமை 5-11-2023 கனடா எத்தோபிக்கோ நகரத்தில் இயங்கும் ‘கிராமத்துவதனம் ஒன்ராறியோ தமிழ் பெண்கள் பண்பாட்டு மையம்’ என்ற தமிழ் குடும்ப அமைப்பினரால் அல்பியன் வீதியில் உள்ள திஸ்ரில் நகர மண்டபத்தில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்து இப்பகுதியில் வசிக்கும் தமிழ் பெற்றோர்களும், கனடாவில் பிறந்து வளர்ந்த அவர்களின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து இந்த விழாவில் மிகவும் ஆர்வத்தோடு பங்கு பற்றியிருந்தார்கள்.

மங்கள விளக்கேற்றலுடன் சுமார் 4:00 மணியளவில் விழா நிகழ்ச்சிகள்  ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து அர்ச்சயா மோகன்குமார், அப்சரா சயந்தன் ஆகியோரால் சகலகலாவல்லி மாலை பாடப்பொற்று, நவராத்திரி பூசை சிறப்பாக இடம் பெற்றது. தொடர்ந்து அர்ச்சயா மோகன்குமார், அக்சிதா பிரபாகரன், அதிஸா பிரபாகரன், அஸ்மிதா மாலரவன் ஆகியோரால் கனடா தேசியப்பண், தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பெற்றது.

அகவணக்கத்தை அடுத்து வரவேற்புரை சிந்துஜா சங்கர் அவர்களால் நிகழ்த்தப்பெற்றது. வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து தலைவரும் ஒருங்கமைப்பாளருமான திருமதி கமலவதனா சுந்தரலிங்கம் அவர்களின் உரை இடம் பெற்றது. பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ரொறன்ரோ கல்விச்சபை ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான குரு அரவிந்தன் ‘பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோரின் முக்கிய கடமைகள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “சங்க இலக்கியத்தில் நடுகல் வழிபாடு” - ரொறன்ரோ தமிழ் சங்கம் -

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ் சங்கம் -
நிகழ்வுகள்
13 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் , நிர்மலா சீதாராமனின் இலங்கை விஜயம் , 200ம் ஆண்டின் செல்திசை? - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
12 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


I

அண்மையில் வெளிவந்த, பதிவாளர் நாயகத்தின், சுற்று நிரூபத்தின்படி இந்திய வம்சாவளி தமிழர்கள், இனி இலங்கை தமிழர்கள் என அழைக்கப்படலாம். சுற்று நிருபத்தின் தலைப்பே பின்வருமாறு கூறுவதாய் உளது:  “இனத்தினை குறிப்பிடும் பொழுது இந்தியத்தமிழ்… என்பதனை இலங்கைத்தமிழ்… என பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள்…”

சுற்று நிருபத்தின் முதலாவது ஷரத்து விடயத்தினை மேலும் தெளிவாக்குகிறது: “முன்னைய பரம்பரை இரண்டு, (தகப்பன் மற்றும் பாட்டன்), இலங்கையில் பிறந்திருந்தால், தமிழ் மற்றும் சோனகர்கள், இலங்கை தமிழர் அல்லது இலங்கை சோனகர் என அடையாளம் காணப்படல் வேண்டும்.” என்பதாகும்.

“காணப்படுதல் வேண்டும்” என்ற வார்த்தை பிரயோகம் எமது கவனத்தை ஈர்ப்பதாகும். இக் குறித்த சுற்று நிரூபமானது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முயற்சியால் மீளப்பெறப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்ட ஊடக அறிக்கையில் உண்மையிருப்பதாக தெரியவில்லை (அறிக்கை விபரம் :வீரகேசரி 25.10.2023).

ஏனெனில் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு (அதாவது செந்தில் தொண்டமானுக்கு) பதிவாளர் நாயகத்தால் அனுப்பப்பட்டிருக்கும் கடித்தில், அப்படியே அந்த சுற்று நிரூபம் வாபஸ் பெற்றுள்ளது குறித்து எந்தவொரு கூற்றும் இருப்பதாக இல்லை (25.10.2023). மேலும் இக்கடித பரிமாற்றங்கள், “ஒரே தினத்தில்” நடந்தேறியுள்ளமை, தனியாக குறிப்பிடக்கூடியது (ஏதோ சொல்லி வைத்தாற் போல்). இதே போன்று சுற்றறிக்கை தொடர்பான முதலாவது செய்தி வெளியுலகிற்கு, சுரேஷ் வடிவேலின் அறிக்கைக்கூடாகவே, வெளிவந்தது அநேக சந்தேகங்களை கிளப்பியதாய் இருந்ததும் குறிப்பிடத்தக்கதே.

மேலும் படிக்க ...

நிலத்தினில் தீபாவளி நிறைவினைத் தரட்டும் !

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
11 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உல்லாசம் பொங்க உள்ளம் மகிழ்ந்திட
உறவுகள் கூட உணர்ச்சி பொங்கிட
ஒளியில் இல்லம் மூழ்கிச் சிறந்திட
வருகின்ற நாளே மனமுறை தீபாவளி

பட்டாசு மத்தாப்பு கைகளை நிறைக்க
பாங்குடன் சிறியவர் பெரியவர் மகிழ
வெடித்திடும் போதும் விரிந்திடும் போதும்
வேதனை துன்பம் காணாமல் போகுமே

சமயமும் சேரும் சமூகமும் சேரும்
சாத்திரம் சடங்கு சேர்ந்துமே நிற்கும்
இல்லமும் இணையும் இன்பமும் இணையும்
நல்லதை உணர்த்திடும் நம்தீபா வளியும்

மணமக்கள் வாழ்வில் மகிழ்வினை ஊட்ட
மாமனார் வீட்டை நாடியே நிற்க
விருந்துகள் நடக்க வெகுமதி கிடைக்க
நலந்திகள் தீபாவளி நல்வழி சமைக்கும்

மேலும் படிக்க ...

ஒலி, ஒளி ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரனின் 'நினைவு நல்லது' சுய அனுபவத் தொகுப்பு நூல் பற்றி... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் கனடாவில் வெளியான ஒலி, ஒளி ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரனின் 'நினைவு நல்லது' நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். நிகழ்வு வழமையான நூல் வெளியீடுகளைப் போலற்று அவரைப் பற்றி அறிந்தவர்களின் வாழ்த்துரைகளையே பிரதான அம்சமாகக் கொண்டு விளங்கியது.  நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட 'நினைவு நூல்' பெரிய அளவில்  932 பக்கங்களைக் கொண்ட விரிந்த நூல்.

நூலின் முக்கிய  அம்சங்களாக விக்னேஸ்வரனின் அவரைப்பற்றிய  அறிமுகம்,  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வர்த்தக சேவை அனுபவங்கள், இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாகினித் தமிழ்ப்பிரிவு அனுபவங்கள், கனடாப் புகலிட வாழ்வனுபங்கள், மற்றும் கனடாவிலிருந்து இயங்கும் 'டிவிஐ' தொலைக்காட்சி, 'சிஎம்ஆர் ' வானொலி அனுபவங்கள் ஆகியவற்றைக்குறிப்பிடலாம். இந்நூல் உடனடியாக எழுதப்பட்ட நூலல்ல. நீண்ட காலமாகத் 'தாய் வீடு' பத்திரிகையில் மாதாமாதம் எழுதப்பட்டுத் தொடராக வெளியாகி நூலுருப்பெற்ற நூல்.  இதனால் அவருக்கு ஒவ்வோர் அத்தியாயத்தையும் ஆற அமர்ந்து , சிந்தித்து, விபரங்களைத் திரட்டி எழுதுவதற்குச் சாத்தியமிருந்தது. இருந்தாலும் அவர் இலங்கை வானொலியில் சேர்ந்த 1970 தொடக்கம் கனடாவில் 'டிவிஐ' தொலைக்காட்சியில் பணியாற்றிய 2010  வரையிலுமான  நாற்பது வருட நிகழ்வுகளை நினைவில் வைத்திருந்து  அவற்றை விரிந்த அத்தியாயங்களாக எழுதுவதென்பது அவ்வளவு இலகுவானதொன்றல்ல.  

சிலருக்கு 'புகைப்பட நினைவாற்றல்' (Photographic Memory) இருக்கும் என்பார்கள். கடந்த காலச் சம்பவங்களை மிகவும் துல்லியமாக ஒரு புகைப்படம் எவ்விதம் ஒரு காலகட்ட வடிவத்தைக் காட்டுகின்றதோ அதுபோல் காட்டும் நினைவாற்றல்  கொண்டவர்களை இவ்விதமான 'புகைப்பட நினைவாற்றல்' மிக்கவர்கள் என்போம்.  இவ்வித நினைவாற்றல் உள்ளவர்களை Eidetic Memory உள்ளவர்கள் என்றும் அழைப்பார்கள். இந்நூலில் விபரிக்கப்பட்டிருக்கும் விக்னேஸ்வரனின் வாழ்க்கை அனுபவங்களை வாசிக்கையில் இவரும் இத்தகைய நினைவாற்றல் உள்ளவர் என்பதை அறிய முடிகின்றது.

மேலும் படிக்க ...

இலக்கிய சிருஷ்டிப்பு குறித்து மூன்று நாள் பயிற்சிப் பட்டறை! - தகவல்: மேமன்கவி -

விவரங்கள்
- தகவல்: மேமன்கவி -
நிகழ்வுகள்
11 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாடளாவிய ரீதியில் புதிய எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை எழுத்தாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மூன்று நாள் எழுத்துப் பயிற்சிப் பட்டறையை நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்களின் பங்குபற்றுதலுடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிங்கள / தமிழ் இலக்கிய ஆக்கத்தில் ஈடுபடும் புதிய படைப்பாளிகளின் திறமைகளை மெருகேற்றுவதன் மூலம் இலக்கியத்துறையின் வளர்ச்சியினூடாகப் பண்பட்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

நடைபெறும் திகதிகள்: 28, 29 மற்றும் 30 நவம்பர் 2023
இடம்: பொது நூலக மண்டபம், கொழும்பு. (விஹார மகாதேவி
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பங்கேற்புடன்

மேலும் படிக்க ...

ஈராக்கிய இரவுகள் - டுன்யா மிக்கைல் | தமிழில்: க. நவம்

விவரங்கள்
- டுன்யா மிக்கைல் | தமிழில்: க. நவம் -
கவிதை
11 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈராக்கில்
ஓர் ஆயிரத்தொரு இரவுகளுக்குப் பின்னர்
யாரோ ஒருவர் பிறிதொருவருடன் பேசுவார்.

சந்தைகள் திறக்கும்
வழக்கமான வாடிக்கையாளர்களுக்காக.

பிஞ்சுப் பாதங்கள் கிச்சுக்கிச்சு மூட்டும்
ரிக்கிரிஸ் நகரின் இராட்சத பாதங்களில்.

கடற் பறவைகள் தம் இறக்கைகளை விரிக்கும்
அவற்றை எவரும் சுட்டு வீழ்த்தமாட்டார்கள்.

பெண்கள் வீதிகளில் நடந்து செல்வர்
அச்சத்தில் பின் திரும்பிப் பாராமல்.

ஆண்கள் தம் உண்மைப் பெயர்களைச் சொல்வர்
தமது வாழ்வை ஆபத்தில் தள்ளாமல்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் அ.இரவியின் 'கொற்றவை பற்றிக் கூறினேன்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அ.இரவியின் 'கொற்றவை பற்றிக்கூறினேன்'  பெருநாவலை வாசித்தேன்.  ஆகுதி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள நாவல். எழுத்தாளர் அ.இரவியின் கடந்தகாலப் படைப்புகளூடு அவரது மண் வாசனை மிக்க , வாசகர்களை ஈர்க்கும் எழுத்து நடை பற்றி அறிந்திருந்தேன்; புரிந்திருந்தேன். அப்புரிதலுடன் இந்நாவலை வாசிக்கத்தொடங்கினேன்.  பொதுவாக எனக்கு எழுத்தாளர்களின் சுய சரிதைப் பாதிப்புள்ள நாவல்கள் , அதுவும் பெரு நாவல்களென்றால் மிகவும் பிடிக்கும். என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவல்கள் பலவற்றில் அவரது சொந்த வாழ்வின் பாதிப்புகளிருக்கும், ஃபியதோர் தத்யயேவ்ஸ்கியின்   நாவல்களிலெல்லாம் அவரது சொந்த வாழ்வின் அனுபவப் பாதிப்புகள் நிறையவே இருக்கும். டால்ஸ்டாயின் நாவல்களும் இத்தகையவையே. தமிழ் எழுத்தாளர் அகிலனின் 'பாவை விளக்கு' நாவல் அவரது சொந்த வாழ்வு அனுபவங்களை உள்ளடக்கிய நாவலென்று அவரே கூறியுள்ளதை வாசித்திருக்கின்றேன்.

இவ்விதமான சொந்த வாழ்வின் அனுபவங்களின் பாதிப்புகளை உள்ளடக்கிய நாவல்கள் ஒருவகை. இன்னுமொரு வகையோ எழுத்தாளர்களின் சுயசரிதை அனுபவங்களையே பிரதானமாகக் கொண்டு சிறிது படைப்பாற்றல் மிளிரும் கற்பனையையும் தூவிப் படைக்கப்படும் நாவல்கள்.  இதில் இரவியின் 'கொற்றவை பற்றிக் கூறினேன்' நாவலை இரண்டாவது வகை நாவலாக நான் கருதுவேன்.  என் 'அமெரிக்கா', 'குடிவரவாளன்' இத்தகைய வகை நாவல்களே. இவ்வகை நாவல்கள் எனக்குப் பிடிப்பதற்கு முக்கிய காரணங்களிலொன்று, என் சொந்த எழுத்தனுபவத்திலிருந்து  கூறினால், எழுத்தாளர்கள் தாம் அடைந்த அனுபவங்களை, அவை விளைவித்த எண்ணங்களைத்  தாராளமாக , அனுபவபூர்வமாக, உணர்வு  பூர்வமாக, மனதொன்றி எழுத முடியும் மட்டுமல்ல, அவ்வகை எழுத்துகளுக்கு அவர்களே முதல் வாசகர்களாகவும் இருந்து விட முடியும் தன்மையால்தான். என் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் என் நாவல்கள் பலவற்றை நானே மீண்டும் , மீண்டும் விரும்பி வாசிப்பதுண்டு. அவ்வேளைகளிலெல்லாம் என் மனம் அக்காலகட்டங்களுக்கே சிறகடித்துச் சென்று விடும். உள்ளத்தில் இன்பத்தைப் பெருவெள்ளமெனப் பாய வைக்கும். எனவே இவ்வகையான நாவல்கள் வாசகர்களுக்காக எழுதப்படும் அதே சமயம் அவற்றை எழுதும் எழுத்தாளர்களுக்காகவும் எழுதப்படுகின்றன என்பது என் எண்ணம். எவ்விதம் எம் ஒருகாலப்புகைப்படங்கள் எமக்குக் அக்காலகட்டப் பிரதிபலிப்புகளாக இருக்கின்றனவோ அவ்விதமே இவ்வகையான நாவல்களும் ஒரு கால அனுபவ, உணர்வுப் பிரதிபலிப்புகளாக இருந்து விடுகின்றன.

மேலும் படிக்க ...

சங்க இலக்கியத்தில் பாலைத்திணை மரங்கள் - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -
ஆய்வு
08 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

பண்டைய தமிழர் விலங்கியல், தாவரவியல் பற்றிய புலமை பெற்றிருந்தனர். ஓரறிவு முதலான உயிர்களைக் குறித்த செய்திகள் தொல்காப்பியம் தொடங்கி சங்ககாலம், சங்க மருவிய இலக்கியங்கள் ஆகியவற்றில் காணக்கிடக்கின்றன. அவை நேரடியாகவும் மறைமுகமாகவும் அடைமொழியாகவும், உவமைகள் வாயிலாகவும் கூறப்படுகின்றன. குறிப்பாக உயிரினங்களோடு இயைந்த தமிழர் தம் வாழ்வியல் தொடர்பையும் உயிரினங்கள் பற்றிய வாழ்வியல் பதிவுகளையும் சங்க இலக்கியம் விரிவாக விளக்கிக் காட்டியுள்ளது. அவற்றில் மரங்களின் வகைகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பாலை நிலம்

காதலால் கூடிக் கலந்த இருவரது பிரிவு ஒழுக்கத்தினைக் குறிப்பது பாலைத்திணையாகும். இவை அகத்திணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கோடைக்காலத்தில் எங்கும் வெப்பம் பொறுக்கமுடியாத நண்பகலில் மரங்களெல்லாம் காய்ந்து கரிந்து நிற்கும் வெஞ்சுரம் மழையே இல்லாத கொடிய நிலம் என்று பாலை நிலம் பற்றிக் குறிப்பிடுவர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை என்ற நான்கு திணைக்கும் நிலம் வகுத்த தொல்காப்பியர் பாலை என்றோர் நிலம் வகுக்கவில்லை.இதனை,

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் (தொல்.பொருள்.5)

எனும் சூத்திரம் வழி தெரிந்து கொள்ளமுடிகிறது.

மேலும் படிக்க ...

மக்சிம் கார்க்கியின் 'இன்னும் சில கங்குகள்' நாவலுக்கான முன்னுரை! - எல்.ஜோதிகுமார் (இலங்கை) & நிழல்வண்ணன் ( இந்தியா) -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் (இலங்கை) & நிழல்வண்ணன் ( இந்தியா) -
நூல் அறிமுகம்
08 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- மக்சிம் கார்க்கியின் இறுதி நாவலான கிளிம் சாம்கினின் வாழ்க்கை 2000 பக்கங்களைக் கொண்ட , நான்கு பாகப் பெரு நாவல். அதன் மூன்றாம் பாகமே தற்போது நிழல்வண்ணன் (இந்தியா), எல்.ஜோதிகுமார் (இலங்கை)  மொழிபெயர்ப்பில் வெளியான 'இன்னும் சில கங்குகள்' . சவுத விஷன் புக்ஸ் (தமிழநாடு), நந்தலாலா (இலங்கை) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்ட நாவல். -


I

இந்நூல், மக்சிம் கார்க்கி யின் அனைத்து நூல்களிலும் இருந்து வித்தியாசம் பெற்றது. இவ்வித்தியாச நூலை பின் வருமாறு வரையறுத்துக் கொள்கின்றார் கார்க்கி : ''இந்நூல் என் வாழ்நாள் சவால்... என் வாழ்நாள் சாதனை ”.

நான்கு தொகுதிகளாய் (கிட்டத்தட்ட 2000 பக்கங்களாய்,) விரியும் இந்நூலின் இறுதி தொகுதியை கார்க்கி எழுதிக்கொண்டிருக்கும் போது, மரணித்தார். “இப்போதுள்ள என் ஒரே பயம் - இந்நான்காம் தொகுதியை நான் நிறைவு செய்யும் முன்னமே மரணம் என்னை தழுவி விடுமோ” என்பதேயாகும். கார்க்கி பயந்தது நிறைவேறியது. இருந்தும், தொகுதி நான்கின், அரைவாசிக்கும் மேலான பகுதியை, அவரே நிறைவு செய்யக் கூடியதாக இருந்தது. மிகுதி அரைவாசியை, அவரது குறிப்புகளையும் வரைவுகளையும் ஆதாரமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர் குழுவினர் அதனை நிறைவு செய்தனர்.

உலக நடப்புகளில், இது போன்ற நிகழ்வுகள் ஏற்கெனவே நடந்தேறிய ஒன்றுதான். பெரும் கலைஞர்களின் தவிர்க்க முடியாமைகளை உலகம் இவ்வாறுதான் கையாண்டு வந்தது. இருந்தும், அந்த மகா புருடனுக்கும், ஒரு எழுத்தாளர் குழுவுக்கும் இடையே காணப்படும் வித்தியாசங்கள் அனந்தம்.

இந்நூலின் விடயதானம் எனப்படுவது, கார்க்கி யின் சிந்தனையில் ஒரு 40 வருட காலம், இடைவிடாது, தொடர்ச்சியாய் ஓடி புடம் போடப்பட்ட ஒன்று என்றால் அது மிகையாகாது. இதற்கான தடயங்களை, கார்க்கி யிலேயே, பல்வேறு சந்தர்ப்பங்களில், வெளிப்படுத்தப்பட்டு இருந்தாலும் இந்நூலிலேயே அவை தீர்க்கமாகவும், படிவுற்றும், பொறிக்கப்பட்டும் உள்ளன.

மனுக்குலத்தின் ஒரு மிகப் பெரிய சுமையை அல்லது கடமையைத் தன் தோளில் சுமக்க முன்வருவது ஒருவரது இதயத்தின் உறுதியையும் நாகரிகத்தையும் மாத்திரம் அல்ல-மாறாக குறித்த தோள்களின் திராணியையும் பொறுத்ததாகின்றது. இவையிரண்டும் ஒரு பார்வையில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததுதான். பாரதி, தன் பாஞ்சாலி சபதத்தை எழுதத் துணிந்த போது, தன் எழுதுகோலை அவன் நோக்கிய விதம் -இறைவன் வியாசரை அழைத்து அவருக்கு 60 வயது முடிந்தாகி விட்டது, இனி அவன் ஒரு மகா பாரதத்தை ஆரம்பிக்கலாம் எனும் ஐதிகங்கள் போன்றே - கார்க்கி யும் இந்நூல்“என் இறுதி சவால்” என்று தேர்ந்து கொள்கின்றான்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி: எழுத்தாளர் அ.யேசுராசாவுடனான நேர்காணல்! - இலக்கியவெளி சஞ்சிகை -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
08 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கியவெள் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நிகழ்ந்த எழுத்தாளர் அ. யேசுராசாவுடனான நேர்காணலுக்கான காணொளி. நேர்காணலைக் கண்டவர்கள் எழுத்தாளர்கள்  கலாநிதி சு.குணேஸ்வரன் & எஸ்.ரமேஷ்.

https://youtu.be/inRhsmjh74Q

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தேசியம் வழங்கும் பெருமயம் - 'எண்ணம் இடும் மேடை'

விவரங்கள்
- தகவல்; இலங்காதாஸ் பத்மநாதன் -
நிகழ்வுகள்
07 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சட்டத்தரணி சுவஸ்திகாவின் விடுதலைப்புலிகள் பற்றிய கூற்றும், யாழ் பல்கலைக்கழகத்தின் மறுப்பும்! - ஊருலாத்தி -

விவரங்கள்
- ஊருலாத்தி -
அரசியல்
07 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின் பெண் சட்டத்தரணிகளில் ஒருவரான  சுவஸ்திகா அருள்லிங்கம் விடுதலைப்புலிகளைப் பாஸிஸ்டுகள் என்று கூறியதற்காக , நீதித்துறை பற்றி  அவர் ஆற்றவிருந்த உரையினை யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழர் அரசியலில் இருக்கும் சகல முன்னாள் ஆயுத அமைப்புகளும் விடுதலைப்புலிகளுடன் முரண்பாடுகள் நிலவிய காலகட்டத்தில் விடுதலைப்புலிகளைப் பாசிஸ்டுகள் என்றே கூறி வந்தனர். பதிலுக்கு விடுதலைப்புலிகளும் எதிரான அமைப்புகளைத் துரோகிகள், ஒட்டுக்குழுக்கள் என்றே கூறி வந்தனர்.

விடுதலைப்புலிகளைப் பாஸிஸ்டுகள் என்று விமர்சித்ததற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களில் பலர் சட்டத்தரணி  சுவஸ்திகா அருள்லிங்கத்தை  எதிர்க்கலாம். அதற்குப்பதிலாக மாணவர்கள் மாற்றுக் கருத்தினை முன் வைக்கலாம், அது அவர்களது உரிமை. ஆனால் அதற்காக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி உரையினைத் தடுத்திருப்பது சரியான செயலா? என்னைப்பொறுத்தவரையில் பல்கலைக்கழகம் பல்வேறு அரசியல் கோட்பாடுகள் பற்றியும் மாணவர்கள் கற்குமொரு கல்விக்கூடம். மார்க்சியம், சோசலிசம், நாசிசம், சியோனிசம், ஃபாசிசம் ,, என்று பல்வேறு வகையான அரசியல் கருத்து நிலைகள் உள்ளதை நாம் அறிவோம். இவற்றைப்பற்றிக் கற்கும்போது காய்தல் உவத்தலற்றுக் கற்கும் இருப்பிடமாக இயங்கவேண்டியது பல்கலைக்கழகமொன்றின் கடமையாகும். பல்வேறு  வகையான அரசியல் கோட்பாடுகளையும் கற்று, அறிந்து அவற்றின் அடிப்படையில் அரசியல் அமைப்புகளை, விடுதலை அமைப்புகளை விமர்சனங்களுக்கு உள்ளாக்க வேண்டும். அவ்விமர்சனங்களின் அடிப்படையில் முடிவுகளுக்கு வர வேண்டும்.

மேலும் படிக்க ...

பயனுள்ள மீள் பிரசுரம்: கண்ணோட்டம் பாசிசம் என்றால் என்ன? எம்.என்.ராய் எழுதிய ‘பாசிசம்’ நூலை முன்வைத்து.. - பிரளயன் -

விவரங்கள்
- பிரளயன் -
நூல் அறிமுகம்
07 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மைக்காலமாக சமூக அரசியலாளர்களால் மட்டுமல்ல ஊடகத்துறையினர் உட்பட பல தரப்பினராலும் ‘பாசிசம்’ என்கிற சொல் பயன்படுத்தப் படுவதை நாம் அறிவோம். அதுவும் பி.ஜே.பி முன்னெடுக்கிற அரசியல் செயற்பாடுகளை அடையாளப்படுத்தவும் இனம் காட்டவும் பாசிசம் என்கிற சொல்லை பலர் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். உண்மையில் ‘பாசிசம்’ என்றால் என்ன?

பாசிசம்என்பதன் மூலச்சொல் இலத்தீனிலிருந்து பெறப்பட்டது. கீரை வாங்கும்போது ஒரு கத்தை கீரை என்று கேட்டு வாங்குவோமில்லையா, அந்த ‘கத்தை’ என்ற சொல்லின் பொருள்தான் பாசிசம் என்பதற்கும். ‘கட்டு’ , ‘கற்றை’ , ‘கத்தை’ அல்லது ‘மூட்டை’ [Bundle] என ‘பாசிசம்’ எனும் இச்சொல்லுக்குப் பொருள்கொள்ள லாமென விக்கிபீடியா சொல்கிறது. தனித்துள்ள ஒரு குச்சியை எளிதாக உடைத்துவிடலாம். அதே நேரத்தில் அவை ஒரு கட்டாக கட்டப்பட்டிருந்தால் குச்சிகளை எளிதில் உடைத்துவிடமுடியாதல்லவா அந்தப் புரிதலிலே இப்பெயர் சுவீகரித்துக் கொள்ளப்பட்டது. பலதும் சேர்ந்த ஓர் கூட்டமைப்பு என்ற பெயரிலும் இதனைப் புரிந்துகொள்ளலாம்.

இந்த ஒரு புரிதலில்தான் இத்தாலியில் தான் ஆரம்பித்த அரசியல் அமைப்புகளுக்கு புரட்சிகர நடவடிக்கைகளுக்கான கற்றை [Fasces of Revolutionary Action] போருக்கான இத்தாலியக் கற்றை [Italian Fasces of Combat] என்று தொடக்கத்தில் பெயர்வைத்த பெனிட்டோ முசோலினி சிலவருடங்களுக்குப்பிறகு தேசிய கற்றைக் கட்சி [National Fascist Party] என்று ஆரம்பித்து 1922 இல் இத்தாலியின் பிரதமராகவே ஆகிவிடுகிறார். முதல் உலகப்போருக்கு பின் இத்தாலியில் தேசிய கற்றைக் கட்சி [National Fascist Party] யினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக அரசியல் ‘சிந்தனைப்போக்கினையே’ வரலாற்றாளர்கள் பாசிசம் என இனம் காண்கிறார்கள்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிய ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
06 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 
அகவயமான வாசிப்பினை வேண்டுவதே இலக்கியம். எனினும் புற உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப அமைப்பாலும் உட்பொருளாலும் மாற்றம் காண்பது தவிர்க்க முடியாதது. மனிதகுலமே கூர்ப்பின் வழி இன்றிருக்கும் வடிவில் வந்திருக்கும் போது, இலக்கிய வடிவங்களும் அதன் இலக்கணங்களும் மாறக்கூடாது எனக் கூறமுடியுமா?

'இலக்கியம் ஒரு யானை . நம்நாட்டு இலக்கியவாதிகள் தமக்குள் குழுக்களாகப் பிரிந்து தாம் சொல்வதுதான் சரியென, யானை பார்த்த அந்தகர் போல வாதிட்டுக் கொண்டு இருக்கின்றனர்' என்கிறது நாவலில் வரும் உரையாடல் ஒன்று. உண்மை. எல்லைகள் அற்றதே இலக்கியம்.

'இலக்கியம் சமுதாய பயன் கொண்டதாக அமைய வேண்டிய அதேசமயம் அது எழுத்தின் கலைத்துவத்தை சிதைத்து விடவும் கூடாது' எனும் கருத்தும் நாவலில் கூறப்பட்டுள்ளது.

 இந்தப் படைப்பின் ஆசிரியர் ஆரம்பத்திலேயே கூறிவிட்டார் இது நாவல் தான் என. ஆம்.நாவல்தான். இதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் சுதந்திரம்.இந்த நாவல் அறிவும் அழகும் இணைந்த புதியதோர் வடிவம் எனக் கொள்ளலாம். இங்கும் காலம், களம், கதைமாந்தர், மையக்கருத்து அனைத்தும் உண்டு.இங்கு கூறப்பட்டிருக்கும் விடயங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கும் வழமைக்கு மாறான அழகியல் ரசனைக்கும் உரியவை என்பதிலும் சந்தேகம் ஏதும் இல்லை.

மேலும் படிக்க ...

இலக்கியவாதி மல்லியப்பு திலகர், அரசியல்வாதியாகி, மீண்டும் இலக்கியவாதியான கதை ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
06 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"சங்ககாலத்திலிருந்து  புலவர்கள்,  கவிஞர்கள்,  எழுத்தாளர்கள்  அரசியல்   பேசி வந்தவர்கள்தான்.   அவர்கள் அரசியல்வாதியாகவில்லையென்றாலும்,   சங்க காலப்புலவர்கள்   மன்னர்களை  புகழ்ந்து  பாடியே   வாழ்க்கையை   ஓட்டினர். விதிவிலக்காக"மன்னவனும்   நீயோ   வளநாடும்  உனதோ..." என்று தமது   தர்மாவேசத்தை   கொட்டிவிட்டு அரசவையை விட்டுப்புறப்பட்டவர்தான்  கவிச்சக்கரவர்த்தி கம்பர்.  

வள்ளுவரும்    இளங்கோவும்  அவருக்குப் பின்னர்  வந்த  பாரதியும் அரசியல், அறம்  பற்றியெல்லாம்  எழுதினார்கள். நவீனகாலத்து  எழுத்தாளர்கள் அரசியல்  பேசியதுடன்  எழுதினார்கள், அரசியல்வாதிகளாக  தேர்தல்களிலும்  தோன்றினார்கள்.    அரசியல் தலைவர்களை   நம்பி   அவர்கள்  பின்னாலும்  சென்றார்கள். " எனத்தொடங்கிய பதிவென்றை சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுத நேர்ந்தது. காரணம் இல்லாமல் காரியம் இல்லையல்லவா..?

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நானறிந்த சில இலக்கியப்படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போட்டியிட்டனர். மலையகத்தில் வீரகேசரி  முன்னாள்   ஆசிரியர்  தேவராஜ்,   சக்தி தொலைக்காட்சி ‘ மின்னல்  நிகழ்ச்சி ‘ ரங்கா, மற்றும்   இலக்கியவாதி  மல்லியப்பு சந்தி  திலகர்  என  அழைக்கப்படும் மயில்வாகனம் திலகராஜன், ஆகியோரும்  யாழ்ப்பாணத்தில்  வல்வை  அனந்தராஜ் என்ற  எழுத்தாளரும்  போட்டியிட்டனர்.  அனந்தராஜ் ஆசிரியராகவும் பின்னர்  நகரசபையில் மேயராகவும்  அங்கம் வகித்தவர். முன்னாள்  உதயன்,  சுடரொளி  பத்திரிகைகளின்  சிரேஷ்ட ஊடகவியலாளர்  வித்தியாதரன்,  ஊடகவியலாளர்  யதீந்திரா,  கவிஞர் அதாவுல்லா,  எழுத்தாளர்கள்  செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் ,  அந்தனி ஜீவா ஆகியோரும் தேர்தல்களில் போட்டியிட்டனர்.  ஆனால்,  மல்லியப்பு சந்தி  திலகரைத்தவிர  மற்றவர்கள்  தோல்வியுற்றனர்.

மேலும் படிக்க ...

வித்துவான் வேந்தனாரின் புகழ்பெற்ற குழந்தைப்பாடல் 'காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா'

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று, நவம்பர் 5,  வித்துவான் வேந்தனாரின் பிறந்தநாள்.  ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் வேந்தனாரின் சிறுவர் இலக்கியத்திற்கான பங்களிப்பு மகத்தானது. சோமசுந்தரப் புலவரைத் தொடர்ந்து இவரது பல சிறுவர் கவிதைகள் தமிழ்ப் பாடநூல்களில் சேர்க்கப்பட்டன. வேந்தனாரின் புகழ்பெற்ற குழந்தைப் பாடலான ‘அம்மாவின் அன்பு’ என்னும் தலைப்பில் வெளியான ‘காலைத் தூக்கிக் கண்ணிலொற்றி.. ‘  நவாலி சோமசுந்தரப்புலவரின் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை' என்னும் குழந்தைகளுக்கான பாடல் போல் தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்குமொரு சிறந்த பாடல். ‘அம்மாவின் அன்பு’.

மேலும் படிக்க ...

ஆண்களின் குரல் 360 ( Voice of Men 360) நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்: 2023க்கான கருப்பொருள்: ஆண் தற்கொலையை இல்லாதொழித்தல்! - ஆண்களின் குரல் 360 -

விவரங்கள்
- ஆண்களின் குரல் 360 -
நிகழ்வுகள்
05 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்பான தமிழ் உறவுகளே, உலக அளவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச ஆண்கள் தினமான Nov 19, இந்த வருடம் எதிர்வரும் Nov 19, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று, மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை (இலங்கை நேரப்படி) – காலை 7.30 – 8.30 மணி வரை (கனடா நேரப்படி) சர்வதேச ஆண்கள் தினம் – இலங்கை (International Men’s Day – Sri Lanka) மற்றும் ஆண்களின் குரல் 360 அமைப்பும் இணைந்து முன்னெடுக்க இருக்கும் இணையவழி கலந்துரையாடலில் இணைந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

2023க்கான கருப்பொருள்: ஆண் தற்கொலையை இல்லாதொழித்தல்

இந்தக் கருப்பொருளில் அல்லது பொதுவாக ஆண்கள் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிப் பேச விரும்பினால் தயவுசெய்து எங்களுடன் Nov 10, 2023ம் திகதிக்கு முன் தொடர்புகொள்ளவும்.

பின்குறிப்பு: இலங்கையிலுள்ள சமூக அமைப்புக்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ-சுகாதார தளங்கள், ஊடக அமைப்புக்கள் மற்றும் இதர அமைப்புக்களில் பணிபுரிபவர்களை நாம் குறிப்பாக எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க ...

தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலையம்) அமைப்பின் சமூக, அரசியல், கலை இலக்கியப்பங்களிப்புகள் பற்றிய சுருக்கமான அறிமுகப் பதிவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாத் தமிழ்க் கலை, இலக்கிய உலகில் , சமூக,அரசியற் செயற்பாடுகளில் ஓர் அமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் இதுவரை இவ்வமைப்பு பற்றிய ,விரிவான , பூரணமானதோர் ஆய்வெதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்காக இவ்வமைப்புக்கு விருதுகள் எவையும் கொடுக்கப்பட்டதாகவும்  தெரியவில்லை. இருந்தாலும் இவ்வமைப்பு, எவ்விதப் பயன்களையும் கருதாமல் , இன்னும் இயங்கிக்கொண்டுதானுள்ளது. காலத்துக்குக் காலம் இவ்வமைப்புடன் இணைந்து இயங்கியவர்கள் பலர் ஒதுங்கி விட்டாலும், இன்னும் சிலர் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டுதானுள்ளார்கள்.  இவ்வமைப்பு பற்றிய விரிவான ஆய்வில் இதுவரை இவ்வமைப்புடன் இணைந்து  இயங்கியவர்கள் பற்றிய விபரங்களும் ஆவணப்படுத்தப்படுவது அவசியம். இப்பொழுது இந்த அமைப்பு எதுவென்னும் கேள்வி உங்கள் உள்ளங்களில் எழும்பத்தொடங்கியிருக்கும். இந்த அமைப்பு தேடகம் என்று அறியப்பட்ட தமிழர் வகைதுறை வளநிலையம்.

தேடகம் அமைப்பின் இதுவரை காலப் பல்வகைப் பங்களிப்புகளையும் நோக்கினால் பின்வரும் வகைகளில் அவற்றைப் பிரித்துப்பார்க்கலாம்:

1. நூலகப் பங்களிப்பு.
2. சமூக, அரசியற் செயற்பாட்டுப் பங்களிப்பு.
3. நாடகத்துறைப் பங்களிப்பு.
4. பதிப்புத்துறைப் பங்களிப்பு.
5. சஞ்சிகைப் பங்களிப்பு.
6. பல்வகை இலக்கிய நிகழ்வுகளை (நூல் வெளியீடு உட்பட) ஏற்பாடு செய்து நடத்தும் பங்களிப்பு.

1. நூலகம்

எண்பதுகளில், தொண்ணூறுகளில் பார்ளிமெண்ட் & வெலஸ்லி பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த தேடகம் அமைப்பினரின் நூலகம்  கனடாத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நூலகம்.  அங்கு தமிழப்பத்திரிகைகள், சஞ்சிகைகளை வாசிப்பதற்காகவும், நூல்களை இரவல் பெறுவதற்காகவும் சென்றவர் பலர். தேடகம் நூலக எரிக்கப்பட்டதானது கனடாத் தமிழர் மத்தியில் ஒரு கரும்புள்ளியாக எப்போதுமிருக்கும்.

மேலும் படிக்க ...

சிலுவையாய் சுமக்கும் அனுபவங்கள் - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
03 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- சுப்ரபாரதிமணியனின் ' சிலுவை ' நாவல்  300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர,  கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின்  நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது.  சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று  தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல்  சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்.  'சிலுவை'  நாவல் சுப்ரபாரதிமணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும்,  நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது. நியூ செஞ்சுரி புக்ஸ் ஹவுஸ் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.  -


( ஈரோடு புத்தக கண்காட்சியில் நடைபெற்ற புத்தக நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் 25 நூல்கள் வெளியிட்டு விழாவில் சிலுவை வெளியிட்ட போது பேசியது.)

என்  'சிலுவை'  நாவல், என் நாவல்களின் பட்டியலில் இருபத்தைந்தாவது என்றும் புத்தகங்களின் எண்ணிக்கையில் நூறாவது என்றும் எதேச்சையாக அமைந்திருக்கிறது. பத்து ஆண்டுகளின் கனவுகளாக இருந்து இப்போது இந்த நாவல் வெளியாகி இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கிற மற்ற நூல்கள் பல ஆய்வுகள், ஆராய்ச்சிகள் என்ற ரீதியில் அமைந்திருக்கின்றன. இந்த ஆய்வுகள் பொதுமக்களிடம் செயல் சென்று சேர வேண்டும் என்று ஸ்டாலின் குணசேகர் அவர்களும் ஓடைத்துரையரசன் அவர்களும். சொன்னார்கள்

பொதுவாக இத்தகைய ஆய்வுகள் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் என்று இருப்பதாகும். இது பொது மக்களிடம் சென்று சேர வேண்டும் என்ற ஆசைப்படுவது வினோதமாக தான் இருக்கிறது. ஆனால் எல்லா படைப்புகளும் இதுபோல் பொதுமக்களிடம் சென்று தான் அடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக கூட இருக்கிறது.

மேலும் படிக்க ...

ஒலி, ஒளி ஊடகர் பி.விக்னேஸ்வரனின் 'நினைவு நல்லது' நூல் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: பி.விக்னேஸ்வரன் -
நிகழ்வுகள்
03 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விழி 156 : 'ஆண்களின் குரல் 360 கலந்துரையாடல்!' - தகவல்: சிவம் வேலாயுதம் -

விவரங்கள்
- தகவல்: சிவம் வேலாயுதம் -
நிகழ்வுகள்
03 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கம்பராமாயணத்தின் பாவிகம் - அறம் வெல்லும்! பாவம் தோற்கும்! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
  2. பெற்றோராக நாங்கள் ... - ஶ்ரீரஞ்சனி -
  3. கவிஞர் கந்தவனத்துக்கு அகவை தொண்ணூறு! - வ.ந.கிரிதரன் -
  4. ஒரு பலஸ்தீனக் குரல் - எம். ஏ. நுஃமான் -
  5. ஒளிப் பரிசு - செ.சுதர்சன் -
  6. 'இலக்கியவெளி'யின் ஏற்பாட்டில் நடந்த எழுத்தாளார் ஐ.சாந்தனுடனான உரையாடல் பற்றிய சில எண்ணங்கள்.. . - வ.ந.கிரிதரன் -
  7. பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும் . நூல் அறிமுகம்! - எஸ் . இஸட் . ஜெயசிங் முன்னாள் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர். ), திருநெல்வேலி. தமிழ் நாடு . இந்தியா. -
  8. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ - 2023 - குரு அரவிந்தன் -
  9. சங்க இலக்கியங்களில் சிறுதானியங்கள் - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -
  10. அறிமுகம்: ஆண்களின் குரல் 360! இலாப நோக்கற்று இயங்கும் ஆண்களுக்கான அமைப்பும் ஒரு 'நேர்-உரையாடற் காணொளியும்' - வ.ந.கிரிதரன் -
  11. நாவல் வாசிப்பு அனுபவம்: மகாலிங்கம் பத்மநாபனின் ' அது ஒரு அழகிய நிலாக்காலம்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  12. குறிப்பேடு: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்! - திக்குவல்லை கமால் -
  13. அஞ்சலிக்குறிப்பு: வீரகேசரி முன்னாள் விளம்பர – விநியோகப்பிரிவு முகாமையாளர் து. சிவப்பிரகாசம் கனடாவில் மறைந்தார்! - முருகபூபதி -
  14. எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியனின் புலனாய்வுக் கற்பனை! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 36 / 104
  • முதல்
  • முந்தைய
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • அடுத்த
  • கடைசி