இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2010 இதழ் 121  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
தொடர் கட்டுரை: உளவியல்!

மன அழுத்த மேலாண்மை – 6 :  மன அழுத்தத்தைப் வெல்லும் வழிமுறைகள்! மாற்றங்களுக்கு மனதை பழக்குதல்

- டாக்டர். B. செல்வராஜ் Ph.D.
(முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -

டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை)நமது உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஓர் முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் சிம்பதடிக் நரம்பு மண்டலம் மற்றும் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறதுஉங்களுக்கு வேலை இருக்கும்போதே பிறர் பல வேலைகளை உங்களுக்கு கொடுக்கலாம். அந்த வேலைகளையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டியிருக்கும்.  குரங்குகளை மேலாண்மை செய்வது மிகவும் கடினம். அதற்கு நீங்கள் எப்போதும் தீனி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குரங்குகளை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அவைகள் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். உங்கள் மேஜை மீது ஏறிக் கொள்ளும். எல்லா பொருட்களையும் இழுத்துப் போட்டு உங்கள் அறையை அலங்கோலப் படுத்தி உங்களையும் உண்டு இல்லை என்றாக்கிவிடும். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் இத்தகைய பண்புகளை கொண்டதுதான். சரியான முறையில் உங்கள் வேலைகளை கட்டுப்படுத்தாவிட்டால் நேரமின்றி மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும். 

சிறந்த முறையில் நேரத்தை எப்படி நிர்வகிப்பது? அதற்கு வேலை என்னும் குரங்குகளை சரியாக கையாள பழகிக் கொள்ள வேண்டும். 

நீங்கள் வளர்க்கும் எல்லா குரங்குகளையும் எப்போதும் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் குரங்குகளுக்கு சரியான தீனி போட்டு அவைகளை வளர்க்க வேண்டும். உங்கள் பணிகளுக்கு இடையே குரங்குகளை விளையாட விடக்கூடாது. தனியறையில் குரங்குகளை உங்களால் விட்டுச் செல்ல முடியாது. விட்டுச் சென்றால் அவ்வளவுதான். அந்த அறை அத்தோடு உபயோகப்படுத்த முடியாததாகி விடும். எனவே நீங்கள் எங்காவது வெளியே சென்றாலும் உங்கள் குரங்குகளை கட்டி இழுத்துக் கொண்டுதான் போயாக வேண்டும். கூடுமானவரை குறைந்த அளவு குரங்குகளையே வளர்க்க வேண்டும். அதிக பட்சமாக ஒரு மனிதனால் மூன்று குரங்குகளை மட்டுமே ஒரு நேரத்தில் சமாளிக்க இயலும். அதற்கு மேல் போனால் குரங்குகள் உங்கள் மீது ஏறிக்கொள்ளும். பின்னர் குரங்குகளின் எடை தாங்காமல் நீங்கள் அவதிப்படுவீர்கள் இதைப்போல உங்களால் ஒரு சேர அதிகபட்சமாக மூன்று வேலைகளை மட்டுமே செய்ய முடியும். அதற்கு மேலான வேலைகளை நீங்கள் எடுத்துக்கொண்டால் வேலைபளு தாங்காமல் மிதமிஞ்சிய களைப்பு, ஆர்வமின்மை, முதுகுவலி, தலைவலி, மனக்குழப்பம் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும். 

பிறர் உங்களிடம் விட்டுச் செல்ல குரங்குகளை அழைத்து வருவார்கள். அவைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களால் எல்லாவற்றையும் வைத்து கட்டி தீனி போட்டு சமாளிக்க முடியாது. எனவே முடிந்த வரை அடுத்தவர் குரங்கை அவருடனேயே திருப்பி அனுப்பி வைக்கப் பாருங்கள். அதற்கு அவர் குரங்கை அழைத்து வரும் போதே ஏதாவது தீனி போட்டு திருப்பி அனுப்பிவிட வேண்டும். இதைப் போலத்தான் அடுத்தவர் கொண்டு வரும் வேலையை அவருடனேயே அனுப்பி வைப்பதும். 

ஆரம்பத்தில் பார்த்ததுபோல சிறிய குரங்குகளை சமாளித்து விடலாம். சற்று பெரிய குரங்குகளை கொஞ்சம் கஷ்டப்பட்டு சமாளிக்கலாம். கொரில்லாக்களை சமாளிப்பது இயலாது. எனவே முடிந்தவரை பெரிய குரங்குகளை அளவாக வளர்க்க வேண்டும். 

குரங்குகளை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள் மன அழுத்தத்தை தவிருங்கள்.

********** 

பிரச்ச்சனைகளை பிரித்துப் பார்த்தல் 

நீங்கள் சமாளிக்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கும் போது உங்களுக்கு என்ன நடக்கும்?  

ஒரு இரயிலில் எத்தனை பேர் பயணம் செய்ய வருகிறார்களோ அத்தனை பேரையும் கூட்டமாக ஏற்றிச் செல்ல முடியாது. மக்கள் கூட்டம் நெரிசலில் சிக்கி திணறி விடக்கூடாது என்பதற்காகவ்ம், அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவும் தனித்தனி பெட்டிகள் அமைத்து இருக்கை ஒதுக்கி பயணிகளை ஏற்றிச் செல்கிறார்கள்.  

ஏராளமான மனப்பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கும் போது அவைகள் அனைத்தையும் ஒரு சேர மனதில் வைத்துக்கொண்டு பிரச்சனைகளை நீங்கள் அணுகக்கூடாது. அதற்கு பதிலாக ஒரு பிரச்சனைக்கும் மற்றோர் பிரச்சனைக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

படிக்கும் மாணவர்கள் பலர் பாலியல் ஆர்வம் மிகுதியால் படிப்பார்வம் குறைந்து மனக் குழப்பத்தில் தவிப்பது வாடிக்கையான விஷயம். குடும்ப கடமைகளை சமாளிக்க அரும்பாடு படும் ஆண்கள் பாலியலில் ஆர்வமே இல்லாமல் இருப்பது தற்போது மிக சகஜமான விஷயம். இவர்களால் பிரச்சனைகளை பிரித்துப்பார்க்க இயலாமல் போனதாலேயே இந்நிலை ஏற்படுகிறது. குடும்ப கடமைகளை நிறைவேற்ற வேண்டி மிக கஷ்டப்படுவது இயற்கை. அதனால் மன உளைச்சளுக்கு ஆளாகி அடுத்த விஷயத்தில் ஆர்வமில்லாமல் இருக்கக் கூடாது. 

படிப்பார்வத்தையும் பாலியல் ஆர்வத்தையும் பிரித்துப் பார்க்க இயலாவிட்டால் இரண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி குறைந்த மதிப்பெண் பெற நேரிடும். ஒரு பிரச்சனையில் இன்னொன்று தீர்க்கப்படாமல் போய் இரண்டும் சேர்ந்து மூன்றாவது பிரச்சனையை தீர்க்க முடியாமல் போய் என இவ்வாறு மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போகும். 

எனவே மன அழுத்தம் குறைவாக இருக்க பிரச்சனைகளை பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். பிரச்சனைகளை தொடர்பு படுத்தி காணக்கூடாது. மனம் சரியில்லாததால்தான் சாப்பிடவில்லை, சாப்பிடாததால் தான் வேலைக்குச் செல்லவில்லை என எல்லாவற்றையும் தொடர்பு படுத்தி சங்கிலி போல் பிரச்சனைகளை ஆக்கக் கூடாது. 

******** 

நினைத்ததை சொல்லும் திறன் 

உங்கள் வீட்டு தொலைபேசியில் பக்கத்து வீட்டுக்காரர் அடிக்கடி போன் செய்கிறார். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் உங்கள் தொலைபேசியை பயன்படுத்த அவர் அனுமதி கேட்கிறார். “வேண்டாம்என்ற சொல்ல உங்களுக்கு விருப்பம். ஆனால் எப்படி வேண்டாம் என்று சொல்வது? அப்படி வேண்டாம் என்று சொன்னால் தவறாக நினைத்துக் கொள்வாரோ? என எண்ணி நீங்கள் “சரிஎன்று சொல்லி விடுகிறீர்கள். இச்சமயத்தில் உங்களுக்கு எத்தகைய மனப்பதட்டமும் மன அழுத்தமும் ஏற்படுகிறது என எண்ணிப் பாருங்கள். 

இதைப்போன்று உங்கள் தேவையொன்றை எப்படி கேட்பது? கேட்டால் தவறாக எண்ணிக் கொள்வார்களோ? என நினைத்து நீங்கள் கேட்காமல் விட்டிருப்பீர்கள். பின்னர் கேட்காமல் போய்விட்டோமே! கேட்டிருந்திருக்கலாம் என எண்ணி வருந்திக் கொண்டே இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. 

மேற்கண்ட இரண்டு சூழ்நிலையில் நீங்கள் என்ன நினைத்தீர்களோ அதை செய்திருந்தால் மிகக் குறைவான மன அழுத்தமே ஏற்பட்டிருக்கும். அவ்வாறு செய்யாமல் போனதாலேயே அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. 

“ஆம்என்று சொல்ல நினைத்து சங்கடப்பட்டு பின் “இல்லைஎன்று சொல்லக்கூடாது. இல்லை என்று சொல்ல வேண்டிய சூழ்நிலையில் சங்கடப்பட்டுக் கொண்டு “ஆம் என்று சொல்லக்கூடாது. அவ்வாறு மன உறுதியில்லாமல் ஊசலாடும் நிலையில் இருந்தால் உங்களுக்கு மன அழுத்தமே மிஞ்சும். 

சொல்ல வேண்டிய விஷயங்களை மன உறுதியோடு சொல்வதும், கேட்க நினைக்கும் விஷயங்களை மன உறுதியோடு கேட்பதும் உங்கள் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவும். அதே சமயத்தில் பிறருடன் நல்லுறவும் நிலவ வாய்ப்பு ஏற்படுகிறது. 

மற்றவர் தேவைகளை விட உங்கள் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உங்கள் உரிமை. 

எப்போதும் அடுத்தவரை திருப்திபடுத்திக் கொண்டே இருப்பது இயலாத காரியமாகும். 

எனவே இன்று முதல் இல்லை என்று சொல்லுங்கள் நண்பர்களே! இல்லை என்று சொல்லுங்கள். 

********

நின்று நுகர்ந்து 

உங்கள் வாழ்க்கை இனிமையானது என நினைத்து அதை அனுபவிக்க நேரம் ஒதுக்கினால் உண்மையிலேயே வாழ்க்கை இனிமையானது தான். 

உங்கள் வாழ்க்கை ஒரு போராட்டம் என நீங்கள் நினைத்தால் அது போராட்டம் தான். நீங்கள் ஒரு வேலை முடிந்தவுடன் கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் உடனே அடுத்த வேலையை தேடி ஓட ஆரம்பித்து விடுவீர்கள். ஓட்டப்பந்தயம் போல் ஓடிக்கொண்டே இருக்கும் இவ்வாழ்க்கை ஓட்டத்தில் இனிமை இருக்காது. 

உங்கள் மகன், மகளின் நடவடிக்கைகளை பார்த்து அனுபவித்து ஆனந்தப்படுவது, உங்கள் வீட்டின் அழகை இரசிப்பது, அதிகாலைத் தெருவை அதிசயத்துடன் பார்த்தனுபவிப்பது, மாலைப் பொழுதின் மயக்கத்தை அனுப்விப்பது, வின்மீன்களையும் நிலவையும் இரசிப்பது போன்ற பலவற்றையும் நீங்கள் மறந்து பல வருடங்களாகியிருக்கும். 

ஒன்றை திரும்பத் திரும்ப பார்த்து கொண்டே இருந்தால் அது உங்களுக்கு பழக்கப்பட்டுவிடும். பின்னர் எவ்வித ஈடுபாடும் இன்றி பழக்கத்தின் காரணமாகவே ஒன்றைப் பார்ப்போம். இதுபோன்று பல விஷயங்களை நாம் செய்து கொண்டிருப்பதாலேயே மன அழுத்தம் ஏற்பட்டு துன்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். 

இவ்வாறு இல்லாமல் எல்லாவற்றையும் முழு மனதோடு அனுபவித்து ஆனந்தப்பட வழி உள்ளது.  

ஒரே மாதிரியாக செய்துவரும் காரியங்களை சற்றி மாற்றி செய்து பாருங்கள். உதாரணமாக உங்கள் அலுவலகத்திற்கு எப்போதும் ஒரே பாதையில் செல்வதைத் தவிர்த்து விட்டு அவ்வப்போது வேறு புதிய வழிகளில் சென்று பாருங்கள். சற்று தூரம் அதிகமானாலும் புதிய விழிப்புணர்வை அதிகரித்து உங்களை ஆனந்தப்பட வைக்கும். 

முப்பது நாற்பது வருடங்களுக்கு ஒரே மாதிரியான காரியங்களை செய்து வாழ்க்கையையே அலுப்படைய செய்து விட்ட திறமை கொண்ட பலர் ஏன் செய்கிறோம்? எதற்குச் செய்கிறோம்? என்ற உணர்வே இல்லாமல் காரியம் செய்வதை நிறுத்த வேண்டும்.  ஒவ்வொரு செயல்களுக்கும் நேரம் ஒதுக்கி அதை அனுபவித்து ஆனந்தத்துடன்  செய்து முடிக்க வேண்டும். அப்போது மன அழுத்தம் வெகுவாக குறைந்து மனம் இலகுவாகும். 

******** 

மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் ஆளுமை 

ஒருநாள் தலைவலி வந்தாலே அத்துடன் வாழ்க்கையே முடிந்து போனது போல் மனம் உடைந்து போய் விடுபவர்கள் சாதாரண வகையினர். “இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் என்று டாக்டர் கூறிய பின்பும் பிழைத்துக் கொள்பவர்கள் அசாதாரன வகையினர். 

இதைப் போல சிறிய அளவு மன அழுத்தம் ஏற்பட்டால் கூட அதை சமாளிக்க இயலாமல் மனம் துவண்டு விடுபவர்கள் பலர் உள்ளனர். அதே சமயத்தில் மலையளவு மன அழுத்தம் ஏற்பட்டாலும் மனம் துவண்டு விடாமல் அதைச் சமாளித்து விட்டு அடுத்த வேலையை ஆரம்பிப்பவர்களும் இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரிந்த யாராவது அப்படிப் பட்டவராக இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்களின் மனம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். 

சமீபகாலத்தில் செய்யப்பட்ட மனோதத்துவ ஆராய்ச்சிகள் ஒரு சிலர் மட்டும் ஏன் எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் அதை சமாளித்து விடுகிறார்கள்? எப்போதும், எந்த சூழ்நிலையிலும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளன. ஒரு சிலர் மட்டும் மன அழுத்தத்தினால் பாதிப்படையாத வகையில் ஆளுமைக் கூறுகளை கொண்டுள்ளனர். அத்தகைய ஆளுமையின் மூன்று முக்கிய கூறுகள் பின்வருமாறு: 

மண் குழைத்து விளையாடும் குழந்தைகள் தன் விளையாடுக்கு அர்த்தம் எதுவும் இல்லாவிட்டாலும் கூட எவ்வளவு ஈடுபாட்டோடு விளையாடுகின்றன? அந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் ஒரு காரியத்தை செய்யும் ஆளுமைகூறு மன அழுத்தம் இல்லாமல் நம்மைப் பாதுகாக்கிறது. 

நடக்காத ஒன்றையும் நான் நினைத்தால் நடத்திக் காட்டுவேன் என்ற நம்பிக்கையும் மன அழுத்தம் ஏற்படாமல் நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது. 

இறுதியாக எந்த வேலையைச் செய்தாலும் அதை சவாலாக எடுத்துக் கொண்டு முடிக்கும் மனப்பான்மை நாம் மன அழுத்தம் இல்லாமல் இருக்க உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்த்தில் ஓர் சிறிய வேலையைக்கூட சவாலாக கருதி அதை முடித்துவிடும் பழக்கம் கொண்டவராக இருப்பின் உங்கள் ஆளுமை மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் ஆளுமை எனலாம். 

செய்யும் வேலையில் ஈடுபாடு, காரியங்களைக் கட்டுப்படுத்தும் நம்பிக்கை மற்றும் சவாலாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை ஆகிய கூறுகளைக் கொண்ட ஒருவரின் ஆளுமையை (பர்சனாலிடி) கடின ஆளுமை (Hardy Personality) என்று மனோதத்துவ நிபுணர்கள் அழைக்கிறார்கள். இவ்வகை ஆளுமை கொண்டவர்கள் மன அழுத்தம் தங்களை தாக்க விடுவதில்லை. 

*************** 

தகவல் தொடர்பு திறன் 

வயது வரும் வரையில் தான் மகன் தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கிறான். பருவ வயதை அடைந்த மகன் தன் அப்பாவிடம் அதிகமாக வைத்துக் கொள்வதில்லை. எது தேவையோ அதை மட்டும் கேட்டு ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்கிறான். தந்தை கேட்கும் கேள்விகளுக்கு தலையாட்டி பதில் தந்துவிட்டு சென்று விடுகிறான். 

பல அப்பாக்கள் இதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்துடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். தோழனைப் போல் நடத்துகிறேன். ஆனால் என் மகன் என்னிடம் எதுவுமே கேட்பதில்லை, பேசுவதில்லை. எது வேண்டும் என்றாலும் அம்மாவிடம் சொல்லி கேட்டுக் கொள்கிறான் என்று மனம் நொந்து போய்விடுகிறார்கள். 

இப்பிரச்சனைக்கு மிக முக்கியமாக காரணம் சரியான முறையில் தகவலை பரிமாற்றிக் கொள்வது எப்படி என்பதை தந்தை மகனுக்கு கற்றுக் கொடுக்காதது தான். ஒவ்வொருவரிடமும் எப்படி தகவல் தொடர்பு பரிமாறிக்கொள்ள வேண்டும். உறவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு கலை. தந்தை இதை அறிந்திருந்தால் தான் மகனுக்கு கற்றுக் கொடுக்க முடியும். 

கணவன் மனைவி இடையேயும் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடி ஒன்று இருந்து கொண்டு இருவரையும் தன் மனதில் உள்ளவைகளை பரிமாறிக் கொள்ளவிடாமல் பிரச்சனைகள் பெரிதாகிக் கொண்டே போகும். முதலாளி-தொழிலாளி, நண்பர்கள் இடையேயும் இதுபோன்ற பிரச்சனை இருந்து அதிக மன அழுத்தத்தினால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். 

சரியான முறையில் தன் மன எண்ணங்களை அடுத்தவர்களுக்கு தெரிவிப்பது எப்படி எனபதை அறிந்து அதைப் பின்பற்றினால் மன அழுத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். 

பல சமயங்களில் என்ன சொல்ல வேண்டும் என்று தெரியாமல் ஒன்றைச் சொல்லிவிட்டு பின்னர் அதனால் உறவில் விரிசலும் மன அழுத்தமும் ஏற்பட்டு பலர் அல்லல்படுவதை காண்கிறோம். பிறரிடம் என்னென்ன விஷயங்களை சொல்ல வேண்டும், என்னென்ன விஷயங்களை சொலக்கூடாது என்பவற்றையும், சொல்ல வேண்டிய விஷயத்தை எப்படி நயமுடன் சொல்ல வேண்டும் எனப்தையும் யோசித்து அவற்றைப் பின்பற்றினால் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பாகவே குறைந்து விடும். 

நம்மைச் சுற்றியுள்ள சிலர் தகவல் தொடர்பில் கெட்டிக்காரராக இருப்பார்கள். எவ்விஷயத்தையும் நயமாகப் பேசி நல்லபேர் வாங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை ஓர் குறிப்பிட்ட காலத்திற்கு கூர்ந்து கவனித்து வாருங்கள். எப்படி பிறரிடம் பேசுகிறார்கள். என்னென்ன விஷயங்களைப் பேசுகிறாகள், எப்படி பிறருடன் நட்பை பராமரித்து வருவதோடு பலப்படுத்தியும் கொள்கிறார்கள் என்பதையெல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அவரைப் பார்த்து கற்றுக்கொண்டதை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தினால் தகவல் தொடர்பு கலையில் வல்லவராக மாறிவிடலாம். நல்ல முறையில் தகவல்களை பரிமாறி வந்தாலே மன அழுத்தம் ஏற்படுவது குறையும்.

saireader@gmail.com

கடந்தவை
மன அழுத்த மேலாண்மை – 1 - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி,கோவை) - ..உள்ளே
மன அழுத்த மேலாண்மை – 2 :  மன அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் ....  டாக்டர். B. செல்வராஜ் ..உள்ளே  ம்ன அழுத்த மேலாண்மை – 3 :  உடல்-மன தொடர்பும்,  நோய் எதிர்ப்பு சக்தியும் ....உள்ளே மன அழுத்த மேலாண்மை – 4 :  குடும்பம் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஓர் காரணி....உள்ளே


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்