மரிக்கார் ராமதாஸ்பட்டி  தொட்டி  எங்கும்  ஒலித்த "  அடி   என்னடி  ராக்கம்மா  பல்லாக்கு நெளிப்பு "  பாடல்  இடம்பெற்ற  பட்டிக்காடா  பட்டணமா  படமும்  அவ்வாறே  அன்றைய  ரசிகர்களிடம்  நல்ல  வரவேற்பு  பெற்றது. 1972  இல்  வெளிவந்த   இந்தப்படத்தில்  இன்றைய  முதல்வர் ஜெயலலிதாவுடன்  சிவாஜி   நடித்தார்.   அடங்காத  மனைவிக்கும் செல்வச்செருக்கு  மிக்க  மாமியாருக்கும்  சவால்விடும்  நாயகன்,  தனது   முறைப்பெண்ணை  அழைத்து  பாடும்  இந்தப்பாடல் அந்நாளைய    குத்துப்பாட்டு  ரசிகர்களுக்கு  விருந்து  படைத்தது. விமர்சன    ரீதியாகப்பார்த்தால்  அந்தப்படமும்  பாடலும் பெண்ணடிமைத்தனத்தையே   சித்திரித்தது. மக்களிடம்   பிரபல்யம்  பெற்றதால்,   இலங்கையில்  சிங்கள சினிமாவுக்கும்  வந்தது.   இன்னிசை   இரவுகளில்  இடம்பெற்றது.    அதே இசையில்  ஒரு  பாடலை   எழுதிப்பாடிய   இலங்கைக்கலைஞர் ராமதாஸ்   தமிழ்நாட்டில்  மறைந்தார்.

" அடி  என்னடி  சித்தி  பீபீ "  என்று  தொடங்கும்  அந்தப்பாடலின் சொந்தக்காரர்   ராமதாஸ்,  இலங்கையில்  புகழ்பூத்த  கலைஞராவார். மரைக்கார்   ராமதாஸ்  என  அழைக்கப்பட்ட  இவர்  பிறப்பால் பிராமணர். ஆனால்,  அவர்  புகழடைந்தது  மரைக்கார்  என்ற இஸ்லாமியப்பெயரினால்.   சென்னையில்  மறைந்துவிட்டார்  என்ற  தகவலை  சிட்னி தாயகம்   வானொலி  ஊடகவியலாளர்  நண்பர்  எழில்வேந்தன் சொல்லித்தான்   தெரிந்துகொண்டேன்.   கடந்த  சில  வருடங்களாக உடல்நலக்குறைவுடன்   இருந்ததாகவும்  அறிந்தேன்.

1970    காலப்பகுதியில்  இலங்கை  வானொலி  நாடகங்களிலும்  மேடை  நாடகங்களிலும்  தோன்றி  அசத்தியிருக்கும்  ராமதாஸ்,   குத்துவிளக்கு உட்பட   தமிழ்,   சிங்களப் படங்களிலும்  நடித்தவர்.   பாலச்சந்தரின்  தொலைக்காட்சி   நாடகத்திலும்  இடம்பெற்றவர். கோமாளிகள்   கும்மாளம்   நகைச்சுவைத்  தொடர்  நாடகத்தைக் கேட்பதற்காகவே    தமிழ்  நேயர்கள்  நேரம்  ஒதுக்கிவைத்த  காலம் இருந்தது.   அதற்குக்  கிடைத்த  அமோக  வரவேற்பினால்  அதனைத் திரைப்படமாக்குவதற்கும்    ராமதாஸ்  தீர்மானித்தார். வானொலி  நாடகத்தில்  பங்கேற்ற  அப்புக்குட்டி  ராஜகோபால்,   உபாலி   செல்வசேகரன்,   அய்யர்  அப்துல்ஹமீட்  ஆகியோருடன் மரைக்கார்   ராமதாஸ்  வயிறு  குலுங்க  சிரிக்கவைத்த  தொடர்நாடகம்    கோமாளிகள் கும்மாளம். நான்குவிதமான   மொழி  உச்சரிப்பில்  இந்தப்பாத்திரங்கள் பேசியதனாலும்    இந்நாடகத்திற்கு  தனி  வரவேற்பு  நீடித்தது. திரைப்படத்தை    தயாரிக்க  முன்வந்தவர்  முஹம்மட்  என்ற  வர்த்தகர். திரைப்படத்திற்காக   ஒரு  காதல்  கதையையும்   இணைத்து , காதலர்களை   ஒன்றுசேர்ப்பதற்கு  உதவும்  குடும்ப  நண்பர்களாக மரைக்காரும்   அப்புக்குட்டியும்  அய்யரும்  உபாலியும்  வருவார்கள். இந்தப் பாத்திரங்களுக்குரிய   வசனங்களை  ராமதாஸே  எழுதினார். காதலர்களாக    சில்லையூர்  செல்வராசன் -  கமலினி  நடித்தார்கள். நீர்கொழும்பு - கொழும்பு   வீதியில்  வத்தளையில்  அமைந்த ஆடம்பரமான   மாளிகையின்   சொந்தக்காரராக  ஜவாஹர்  நடித்தார். அதற்கு    கோமாளிகை  என்றும்  பெயர்சூட்டினார்  ராமதாஸ்.

கோமாளிகள்   கும்மாளம்  வானொலி  நாடகம்  ஒலிபரப்பான காலத்திலேயே   வி.எஸ். துரைராஜாவின்  குத்துவிளக்கு  வெளியானது. இந்தப்படத்தை  -- நீர்கொழும்பில்  நான்  கற்ற  ஆரம்பப்பாடசாலை விஜயரத்தினம்   மகா  வித்தியாலயத்தில்  விஞ்ஞான  ஆய்வுகூடம் அமைப்பதற்காக   எமது  பழைய  மாணவர்  மன்றம் முன்வந்தவேளையில்   அதற்காக  நிதியுதவிக் காட்சிக்கு காண்பித்தோம். அப்படத்தில்    நடித்த  கலைஞர்களையும்  அழைத்து   இடைவேளையில் பாராட்டினோம்.    அதற்கான  அழைப்பிதழுடன்  ராமதாஸை  அவர் கொழும்பு   யூனியன்  பிளேஸில்   பணியாற்றிய  கொலோனியல் மோட்டர்ஸ்    நிறுவனத்திற்கு  சென்றிருந்தேன்.   அன்றுதான்  அவருடன்    பேசுவதற்கு  சந்தர்ப்பம்    கிடைத்தது.  எமது  அழைப்பை ஏற்று    நீர்கொழுப்புக்கு  வந்தார்.

அன்று    முதல்  நண்பர்களாகப் பழகினோம்.   எமது  பாடசாலைக்கு இதுபோன்ற   நிதியுதவிக்காட்சிகளுக்கு  தம்மால்  முடிந்தவரையில் உதவுவதற்கும்    தாம்  தயாராக  இருப்பதாகச்சொன்னார்.   அவ்வாறே மீண்டும்   எமது  பாடசாலை  அபிவிருத்திக்காக  நடத்தப்பட்ட  ரிதம்  76  என்ற   கலை  நிகழ்ச்சிக்கு  தமது  கோமாளிகள்  குழுவினரையும் அழைத்துவந்து   ரசிகர்களை  மகிழ்ச்சியில்  ஆழ்த்தினார். ராமதாஸ் , கொழும்பில்  அங்கம்  வகித்த  நாடக  மன்றத்தின் காப்பாளராக   விளங்கிய  மருத்துவர்  ஜெயமோகன்,  அச்சமயம் நீர்கொழும்பு    பெரியாஸ்பத்திரியில்  பணியாற்றியதுடன்,  எமது பாடசாலை    அபிவிருத்திச்சங்கத்தின்  செயலாளராகவும் இருந்தமையால்    ராமதாஸ_டன்  மேலும்   சில  சிங்கள கலைஞர்களையும்    வானொலிக்   கலைஞர்களையும்  அழைக்கமுடிந்தது. சிங்களத்    திரைப்பட  நடிகர்கள்  ரவீந்திர  ரந்தெனிய,   டோனி ரணசிங்க,    எடி  ஜயமான்ன,  சிரியாணி  அமரசேன  மற்றும் கே.எஸ்.ராஜா,    மரைக்கார்  ராமதாஸ்,  உபாலி  செல்வசேகரன், அப்புக்குட்டி   ராஜகோபால்  ஆகியோருடன்  கோமாளிகள் படத்தின் தயாரிப்பாளர்  மொஹமட்டும்  வருகை  தந்திருந்தார்.  அனைவரும் எதுவித   சலுகைகளோ   சன்மானங்களோ  பெறாமலேயே  வந்து ரசிகர்களை   மகிழ்வித்து,  எமது  பாடசாலையின்  அபிவிருத்திக்கு உதவினார்கள்.

ராமதாஸ்   அப்பொழுது  குடும்பத்தினருடன்  கொழும்பு  புறநகரில் பொல்ஹேன்கொடவில்    வசித்தார்.   இவருடைய   வீட்டுடன் இணைந்திருந்த  மற்றைய    வீட்டில்  எமது  முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தின்   செயலாளர்  பிரேம்ஜி  ஞானசுந்தரன்  அவர்களும்  தமது குடும்பத்தினருடன்   வசித்தார். அதனால்   ராமதாஸை  சந்திக்கும்  சந்தர்ப்பங்களும்  கிடைத்தன. அதன்   பலனால்  கோமாளிகள்  படம்  வெளியானபொழுது மல்லிகைக்கு   ஒரு  விளம்பரமும்  பெற்றுக்கொள்ள  முடிந்தது. விளம்பரம்   தந்து  உதவியவருக்கு  உபகாரமாக  அந்தப்படம்  பற்றிய எனது   ரசனைக்குறிப்புகளை   மல்லிகையில்  எழுதியிருக்கின்றேன். ராமதாஸ்   பழகுவதற்கு  இனிமையான  எளிமையான  மனிதர். இலங்கை   வானொலி  வர்த்தக  சேவையிலும்  தேசிய  சேவையிலும் பல   நாடங்களில்  நடித்திருக்கும்  அவர்,  எனது  சுமையின் பங்காளிகள்   சிறுகதையை  கே.எம். வாசகர்    வானொலி  நாடகமாக தயாரித்து   ஒலிபரப்பியபோது  பிரான்ஸிஸ்   பாத்திரமேற்று  நடித்தார். பிரதேச  பேச்சுமொழி  வழக்கில்   ஏற்கனவே  பேசி  நடித்து  தேர்ச்சி  பெற்றிருக்கும்  ராமதாஸ_க்கு,  நீர்கொழும்பு  பிரதேச கடற்றொழிலாளர்களின்  பேச்சுமொழியும்    இலகுவாக  வந்தது. \

ராமதாஸ், அப்துல் ஹமீட் 'கோமாளிகள்' திரைப்படத்தில்கோமாளிகள்   திரைப்படம்  இலங்கையில்  பல  பிரதேசங்களில் திரைக்கு   வந்தவேளையில்  எதிர்பாராத  விதமாக  அவருடனும்  இதர கலைஞர்களுடனும்   யாழ்தேவியில்  பயணமாகும்  சந்தர்ப்பம் கிடைத்தது.   அன்றுதான்  அவருடன்  கொழும்பு  கோட்டையிலிருந்து கிளிநொச்சிவரையில்   நீண்ட  பொழுதுகள்  உரையாடினேன். கிளிநொச்சியில்   அன்று  மாலை  பிரதான  மைதானத்தில் நடைபெறவிருந்த    கலைநிகழ்ச்சிக்கு  அவருடைய  தலைமையில் கோமாளிகள்   குழுவினருடன்  நடிகை  மணிமேகலையும் பொப்பிசைப்பாடகர்   ஏ.ஈ. மனோகரனும்  வந்தனர். யாழ்ப்பாணத்தில்   நடந்த  இலக்கிய  நிகழ்ச்சிக்காக  நானும்  நண்பர் மேமன்கவியும்   புறப்பட்டிருந்தோம்.   நாம்  ஆசனம்  பதிவுசெய்திருந்த பெட்டியிலேயே   இந்தக்கலைஞர்களும்  வந்தார்கள்.   அதில்  வந்த  இதர    பயணிகள்  மனோகரனை  பாடச்சொல்லி  அமர்க்களம் செய்துகொண்டிருந்தமையால்   அவரும்  பாடினார்,   ஆடினார். அந்த   அமளிக்கு  மத்தியிலும்  நானும்  ராமதாஸ_ம்,   மேமன்கவியும் இலக்கியம்,   நாடகம்,  திரைப்படம்  பற்றி  உரையாடினோம். அப்பொழுது   ராமதாஸ்  தம்பதியரின்  மகள்  நாகப்பிரியா  கையில் தவழும்  குழந்தை. தான்   செல்லும்  ஊர்களுக்கெல்லாம்  மனைவி  குழந்தையுடன்  வரும் ராமதாஸ்  வெறும்  கலைஞன்  மட்டுமல்ல   பொறுப்புள்ள  சிறந்த குடும்பத்தலைவன்.
யாழ்ப்பாணம்   வின்சர்  தியேட்டரில்  அப்பொழுது  அவருடைய கோமாளிகள்    திரைப்படம்  ஓடிக்கொண்டிருந்தது.  அதில்  ஒரு படச்சுருள்   சற்று  மங்கலாக  இருப்பதாக  தியேட்டர்  நிருவாகம் ராமதாஸ_க்கு   தெரிவித்திருந்தது.   தனது  வேலைப்பளுவுக்கு மத்தியில்   முதல்  நாளே  ஸ்ரூடியோவுக்கு  ஓடிச்சென்று   புதிய பிரிண்ட்   எடுத்துக்கொண்டு  குடும்பத்துடனும்  கலைஞர்களுடனும் அன்று   ரயிலேறினார்.  அதனை  யாழ்ப்பாணத்தில்  வின்சர் தியேட்டரில்    சேர்ப்பிப்பதற்காக  என்னிடம்  ஒப்படைத்தார். அந்தக்கலைக்குழுவினர்    கிளிநொச்சியில்   இறங்கினர்.

ராமதாஸ்  தந்த  கோமாளிகள்  திரைப்படத்தின்  குறிப்பிட்ட  புதிய பிரிண்ட்   படச்சுருளை  யாழ். வின்சரில்  அன்று  மதியமே சேர்ப்பித்தேன்.  ராமதாஸ்  -  கோமாளிகள்  திரைப்படம்  தந்த  வெற்றியைத்தொடர்ந்து ஏமாளிகள்   என்ற  திரைப்படத்திற்கும்  கதை  -  வசனம்   எழுதி தயாரித்தார்.   ஆனால்,  கோமாளிகளுக்கு  கிடைத்த  வரவேற்பு ஏமாளிகளுக்கு   கிட்டவில்லை.   கோமாளிகள்  ராமதாஸ்   குழுவினர்   ஏமாளிகள்  குழுவினராகிவிட்டனர்  என்றும்  விமர்சனங்கள்   வந்தன.

இலங்கையில்   தமிழ்த்திரைப்பட  முயற்சி  விஷப்பரீட்சைதான் என்பதை    அனுபவத்தில்  புரிந்துகொண்ட  மற்றும்  ஒரு  கலைஞர்தான் ராமதாஸ்.   எனினும்  தமக்கெல்லாம்  படம்  எடுக்கும்  எண்ணக்கருவை விதைத்தது    இலங்கையில்  முதலில்  வெளிவந்த  தோட்டக்காரி படம்தான்    என்றும்  அவர்  சொல்லியிருக்கிறார்.
இலங்கை   வானொலி,   நாடக  மேடைகள்,  திரைப்படங்கள், தொலைக்காட்சி   நாடகங்கள்   முதலானவற்றில்    தோன்றி   தனக்கென   தனி  முத்திரை  பதித்த  கலைஞன்,   தமிழில்  பல பேச்சுமொழி   வழக்கில்  பேசி  அசத்திய  கலைஞன்,   அந்திமகாலத்தில்    சென்னையில்  மௌனமே  மொழியாக  வாழ்ந்து மறைந்துவிட்டார்.

ராமதாஸ் குடும்பத்தவருடன்

தொலைக்காட்சியின்   வருகை  ராமதாஸ்   போன்ற  வானொலிக் கலைஞர்களின்  முகவரியை    தொலைத்துவிட்டது. திரையில்   தோன்றி  முகவரியை  தக்கவைத்துக்கொள்வதற்கும் வக்கற்ற   நிலைக்கு  இலங்கையில்  தமிழ்த்திரையுலகும் தமிழ்த்தொலைக்காட்சி  நாடகத்துறையும்   தத்தமது  முகவரிகளை தொலைத்துவிட்டன. அதற்கான   பின்னணிகள்   பற்றி   அதிகம்  சொல்லவேண்டிய  அவசியம்   இல்லை.   அயல்நாட்டின்  ஆக்கிரமிப்பில்  இலங்கையில் நலிவுற்ற   தமிழ்  கலைத்துறைகள்  இவை.ராமதாஸின்    குடும்பத்தினருக்கும்  அவருடன்  இணைந்து  பயணித்த கலையுலக   நண்பர்களுக்கும்  வெகுதொலைவிலிருந்து  எனது  ஆழ்ந்த அனுதாபங்களை   தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here