இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2006 இதழ் 80 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!
1983! மீண்டுமொருமுறை நினைவு கூர்வோம்!
 
ஓவியர் புகழேந்தியின் ஓவியம்...1983! ஈழத்தமிழர்களின் வரலாற்றில் திருப்பு முனையானதொரு வருடம். இலங்கையின் அரசியல் வரலாற்றிலும்தான். தமிழ் மக்கள் மேல் அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பலரின் நேரடிப் பங்களிப்பில் திட்டமிட்டுப் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வெலிக்கடைச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் சமூக விரோதக் கும்பல்களினால் ஈவுஇரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்கள், குழந்தைகளெனப் பாகுபாடின்றி எத்தனை எத்தனை படுகொலைகள். தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் உடமைகளையிழந்து ஏதிலிகளாகத் தம் சொந்தத் தாயகம் நோக்கி, உலகின் பல பாகங்களையும் நோக்கிப் ப்டையெடுத்தார்கள். பிராந்திய வல்லரசான இந்தியாவை நேரடியாகவே இலங்கைப் பிரச்சினையில் 1983 தலையிட வைத்தது.
 
இன்று 23 ஆண்டுகள் கழிந்து விட்டன. எவ்வளவு விரைவாகக் கழிந்நது விட்டன. இதற்கிடையில்தான் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். வேதனை மிக்க சம்பவங்கள். இன்று மீண்டும் அதே 1983ற்கே நிலைமை திரும்பியிருக்கிறதென்பதைத்தான் அண்மைய அப்பாவித் தமிழ் மக்கள்மீதான் தாக்குதல்கள், படுகொலைகளெல்லாம் புலப்படுத்துகின்றன. மீண்டும் நூற்றுக் கணக்கில் தமிழ் மக்கள் கைது செய்யப்படுகின்றார்கள். காணாமல் போகின்றார்கள். இதுவரையில் தன் கவனத்தைத் திருப்பாமலிருந்த இந்தியா மீண்டும் இலேசாகத் தன் கண்களை ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் திருப்ப ஆரம்பித்துள்ளது.
 
1983 கலவரக் காட்சி. அப்பாவித் தமிழ் மகனொருவனை நிர்வாணப்படுத்தி விட்டுப் படுகொலை செய்வதற்கு முன்னர் ஆடிப்பாடிடும் சமூகவிரோதிகள்...இன்று தமிழ் மக்களுக்குத் தேவை நிரந்தரத் தீர்வுடன் கூடியதொரு சமாதானம். தன்மானமிழக்காத சமாதானம். இவ்வளவு இழப்புகளுக்கும் பின்னால் ஒற்றையாட்சியில் வலிந்து திணிக்கப்படும் தீர்வுகளெதுவும் சமாதானத்தை ஏற்படுத்தப் போவதில்லை. தமிழ் மக்களின் பாரம்பர்யப் பிரதேசங்களை, தாயகப் பிரதேசங்களை அங்கீகரித்த, சுயாட்சியுடன் கூடிய , நிரந்தரமான தீர்வே தேவையானது. தமிழர்கள் தங்களது பொருளாதாரத்தைத் தாங்களே நிர்ணையிக்கக் கூடியதொரு வல்லமைமிக்க சக்தியாக இன்று உருவாகியிருக்கின்றார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், காணி இவையெல்லாம் தமிழ் மக்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் வகையிலான நிரந்தரமான , சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் உறுதி செய்யப்பட்ட தீர்வானது தற்போதுள்ள ஈழத்தின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான முக்கியமானதொரு ஆரம்பப் படிக்கட்டாகவிருக்கும். இந்தவருடமாவது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மீண்டுமொரு திருப்புனையினை, சுபீட்சம் மிக்க எதிர்காலத்துக்கான நம்பிக்கையினை ஊட்டக் கூடியதொரு திருப்புமுனையினை ஏற்படுத்துமொரு ஆண்டாகவிருக்கட்டும். 1983இனை மீண்டுமொருமுறை நினைவு கூர்வோம். அதன்மூலம் பெற்ற அனுபவங்களின் மூலம் ஈழத்தின் அனைத்து அரசியற் சக்திகளும் ஆக்கபூர்வமானதொரு எதிர்காலத்துக்கான சமாதான நகர்வுகளை நோக்கிய, நிரந்தரத் தீர்வினை நாடிய அரசியற்செயற்பாடுகளை மேலெடுக்கட்டும். தமிழ் மக்கள்மீதான படுகொலைகள் மூலம், பயமுறுத்தல்கள் மூலம் தமிழ் மக்களை அடிபணிய வைத்துவிடலாமென்று ஸ்ரீலங்கா அரசு தப்புக்கணக்குப் போடுவதன் மூலம் மீண்டும் இலங்கையில் தற்போடு ஆரம்பித்துள்ள இரத்தக்களரிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, சர்வதேச அனுசரணையுடன் குறிப்பாக பாரதத்தின் ஆக்கபூர்வமான பங்களிப்புடன் விடுதலைப் புலிகளுடன் சமாதான முன்னெடுப்புகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ்ப் பகுதிகளில் சகல விதமான வன்முறைகளும் நிறுத்தப்படும் வகையில் அனைத்து அரசியற் சக்திகளும் இதய சுத்தியுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும். குறைந்தது முயல்வதற்காவது இந்த நாளில் சங்கற்பம் எடுக்க வேண்டுமென்பதுதான் அனைவரினதும் அவா.
 
- நந்திவர்மன் -
 

© காப்புரிமை 2000-2005 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner