இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2007 இதழ் 94  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நலந்தனா? நலந்தானா?
மருத்துவர் வசந்தி தேவராசா சிறீஸ்கந்தராஜாவின் 'ஒட்சிசனெதிரிகள் மூலமாகப் புற்று நோய்த் தடுப்பு!
நலவியல் நூல் பரப்பில் புது வரவு!

- Dr.M.K.முருகானந்தன் M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர் -

Dr.M.K.முருகானந்தன் M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL) உங்கள் மூளை களைப்படைந்து சோர்வுற்றுவிட்டது. ஆயினும் நிறைவேற்றி முடிக்க வேண்டிய பணிகள் பல காத்திருக்கின்றன. ஒரு சிகரட் அடித்தால் சுறுசுறுப்பாகிவிடுவோம் என நினைக்கிறீர்கள். சுறுசுறுப்பு ஏற்படக் கூடும் என்பது உண்மைதான். ஆனால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பாரதூரமானவை.

சுவாசப்பை, குரள்வளை, தொண்டைக்குழி, உணவுக் குழாய், சிறுநீரகம், சிறுநீரகப்பை, மற்றும் கணையம் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியமானது புகைப்பதினால் மிகவும் அதிகரிக்கிறது.

ஆனால் மிகவும் சாதாரணமான, விலை மலிவுள்ள வல்லரை "மூளையானது களைப்படைந்து திறமையாகக் கவனிக் குவிப்புச் செய்ய முடியாது போகும் வேளைகளில் அதனைத் தளர்த்தி சுமுகமாக்கக் கூடியது" எனக் கூறுகிறார் டொக்டர் வசந்தி தேவராஜா சிறீஸ்கந்தராஜா.

இன்னும் பல மூலிகைகள் பற்றியும் மிக விபரமாகக் கூறியுள்ளார் 'ஒட்சிடனெதிரிகள் மூலமாகப் புற்றுநோய்த் தடுப்பு' என்ற தனது புதிய நூலில். நாம் வழமையாக உணவில் உபயோகிக்கும் மஞ்சள், திராட்சை, கோவா, உள்ளி, வெண்காயம், அதிமதுரம், இஞ்சி, உள்ளி,
வெண்காயம் போன்ற பல மூலிகைகள் பற்றியும், மருந்தாக மட்டும் அல்லது மருத்துவத்தில் பயன்படுத்தும் பட்டிப்பூ, பருத்தி, கற்றாளை, குங்கிலியம், போன்ற பல மூலிகைகள் பற்றியும் இந் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நூற்பரப்பில் அதுவும் முக்கியமாக மருத்துவம் மற்றும் நலவியல் சார்ந்த துறைகளைப் பொறுத்த வரையில் இந் நூலின் வரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஏனெனில் இந் நூலானது மருத்துவத்தின் ஒரு புதிய அலகை இலங்கையின் தமிழ் மருத்துவ நூல் வெளியீட்டுத் துறையில் அறிமுகப்படுத்துகிறது. இதனால் மருத்துவத் துறை சார்ந்த மாணவர்களுக்கும் (மருத்துவ, தாதிய, சுகாதார சேவைப் போதனாசிரியர்கள், ஆய்வு கூட பணியாளர்கள்), அத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஊசாத் துணை நூலாகும்.

ஈழத்து தமிழ் மருத்துவ நூல் வெளியீடு என்பது நீண்ட பாரம்பரியம் கொண்டது. அதில் மேலைத் தேய மருத்துவத் துறை சார்ந்த நூல்கள் டொக்டர் கிறீனின் காலத்திலிருந்து ஆரம்பிக்கின்றன. இந் நூல்கள் இரண்டு வகையானவை. மருத்துவர்களுக்கும், தாதியர்களுக்குமான பாடப் புத்தகங்களை டாக்டர் கிறீனும் பின்னர் பேராசிரியர் சின்னத்தம்பியும் எழுதி வெளியிட்டார்கள். இது முதல் வகை.

இரண்டாவது வகை பொதுமக்களை பயனாளர்களாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். இதற்கும் முன்னோடி டொக்டர் கிறீன்
அவர்கள்தான். அவர்களைத் தொடர்ந்து டொக்டர் இராசரத்தினம், பேராசிரியர் நந்தி, பேராசிரியர் சிவராஜா, டொக்டர்களான நாகநாதன்.
எம்.கே.முருகானந்தன், சுகுமார், பத்மலோஜினி, சீர்மாறன், சிவயோகன் போன்ற பலரும் நலவியல் துறை சார்ந்த நூல்களை
எழுதியுள்ளார்கள். இன்னும் பல பெயர்கள் எழுதும் அவசரத்தில் விடுபட்டிருக்கும் என்பது உண்மையே. திரு.கா.வைத்தீஸ்வரன்,
கோபாலமூர்த்தி, திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்ற சுகாதார ஆலோசகர்களும் நலவியல் இலக்கியத்திற்கு நிறையப்
பங்களித்துள்ளார்கள் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.

இலங்கையைப் பொறுத்த வரையில் அறிவியல் துறை சார்ந்த நூல்களின் வெளியிடப்படுவது மிகவும் குறைவாக இருந்த சூழலில் நலவியல் துறை மட்டும் விதிவிலக்கு எனலாம். ஆயினும் அத்துறையில் நூல் எழுதுவதும், வெளியிடப்படுவதும் போதுமானதாக இல்லை என்பதும் உண்மையே.

மருத்துவர் வசந்தி தேவராசா சிறீஸ்கந்தராஜாவின் 'ஒட்சிசனெதிரிகள் மூலமாகப் புற்று நோய்த் தடுப்பு!திருமதி திலகவதி தர்மராசாவின் இரண்டாம் ஆண்டு நினைவாக அன்னாரின் பெறாமகள் டாக்டர் வசந்தி தேவராஜா ஸ்ரீகாந்தராஜாவினால் ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்ட "ஒட்சிசனெதிரிகள் மூலமாகப் புற்றுநோய்த் தடுப்பு' என்ற நூல் இன்று (11.08.2007) கொழும்பில் வெளியாகிறது. அந்த நூல் பற்றிய ஆய்வே இது. இத்தகைய சூழலில் டாக்டர் வசந்தியின் நூல்கள் சற்று வித்தியாசமானவை. இவை மருத்துவத்தின் விசேட துறைகள் சார்ந்த ஆழமான நூல்களாகும். முன்னைய வெளியீடான முதுமை பற்றிய "முதியோரைப் பராமரிக்கும் அறிவியல்'' என்பது முதுமை பற்றிய ஒரு பூரணமான நூலாகும்.

இப்பொழுது வெளியாகும் "ஒட்சிசனெதிரிகள் மூலமாகப் புற்று நோய்த் தடுப்பு'' என்பது புற்றுநோய் பற்றியது. அதிலும் விசேடமாக
ஒட்சிசனெதிரிகள் (Antioxidents) மூலமாக புற்றுநோயை எதிர் கொள்வது பற்றியது. இது ஆய்வு நூல் அல்ல. ஆனால் அண்மைக்காலத்தில் செய்யப்பட்ட பல ஆய்வுகளின் விஞ்ஞான பூர்வமான தகவல்களை ஒன்று திரட்டி, அவற்றை வகைப்படுத்தி இயலுமானவரை இலகுவாக வாசிப்பதற்கு ஏற்ற முறையில் எழுதியுள்ளார்.

புற்று நோயானது மனிதர்களின் உடலையும் உள்ளத்தையும் மிகவும் பாதிக்கும் ஒரு நோயாகும். நோயாளருக்கும், அவரது
குடும்பத்தினருக்கு மட்டுமின்றி முழுச் சமூகத்திற்குமே பாதிப்பை ஏற்படுகிறது. எனவே நோய் வந்த பின் அதன் சிகிச்சைக்காக
அலைவதை விட அது வராமல் தடுப்பது மிகவும் பொருத்தமானதாகும். அதனைப் பற்றியே இந் நூல் பேசுகிறது என்பதால் எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டியது அவசியமாகும்.

இத்தகைய நூல்கள் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு மருத்துவர்கள் , தாதியர்கள், சுகாதாரப் போதனையாளர்கள்
ஆகியோருக்கு மிகவும் உபயோகமானவை.அவர்கள் துறை சார்ந்த நவீன தகவல்களுடன் தங்களை இற்றைப்படுத்த இவை
உதவுகின்றன.

அதே நேரத்தில் ஓரளவு விஞ்ஞானக் கல்வியறிவுள்ள எந்தப் பொதுமகனும் வாசிப்பதற்கு ஏற்ற முறையில் எழுதப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ள எவரும் படித்துப் பயன்படக் கூடிய நூலாகும்.

இந்நூல் ஆறு முக்கிய அத்தியாயங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.

(1) புற்றுநோயின் நிகழ்வு விகிதம்
(2) கலம் ஒன்றின் அடிப்படைக் கட்டமைப்பு
(3) புற்றுநோய்

(4) தாராள மூலவேர்களும் ஒட்சினெதிரிகளும்
(5) பொதுவான வகைப்பற்று நோய்கள்
(6) புற்றுநோய்க்கு எதிரான மற்றும் ஒட்சினெதிரிக் கீரைவகைகள்.

முதல் அத்தியாயத்தில் புற்றுநோயானது சமூகத்தில் எந்தளவு காணப்படுகின்றது? அவை எப்படியான புற்றுநோய்கள், பால் ரீதியாக
எப்படிப் பாதிக்கிறது, அவற்றிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் போன்ற பல பயனுள்ள தகவல்களை, மஹரகம,கண்டி, காலி ஆகிய புற்றுநோய் சிகிச்சை நிலையங்களின் பதிவுகளின் அடிப்படையில் தருகிறது.

அத்துடன் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் புற்றுநோயின் பரம்பல் எவ்வாறு உள்ளது என்பதையும் சொல்கிறது.

இரண்டாவது அத்தியாயம் ஒரு கலத்தின் அடிப்படைக் கட்டமைப்புப் பற்றியது. எந்த ஒரு உயிரினதும் அடிப்படைக் கூறான கலம் என்பது என்ன? அதன் கூறுகள் யாவை? அவை எப்படிப் பிரிகை அடைகின்றன போன்ற அடிப்படைத் தகவல்களை விவரிக்கிறது. தொடர்ந்து டி.என்.ஏ யிலுள்ள தனியொரு மரபணுவில் (Gene) ஏற்படுகின்ற குறைபாடே புற்றுநோய் வருவதற்கான முதற்படி என விளக்குகிறார்.
ஆயினும் இம்மாற்றங்கள் புற்றுநோயாக உருவெடுக்க 1 முதல் 30 வருடங்கள் எடுக்கலாம். இதன் நீட்சியாக வயது ஏறும்போது
புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதும் விளக்கப்படுகிறது.

மூன்றாவது அத்தியாயத்தில் புற்றுநோய் என்றால் என்ன? அதன் வகைகள் எவை? அவற்றின் ஆரம்ப அறிகுறிகளும், எச்சரிக்கை
அடையாளங்களும் எவை? சிகிச்சை முறைகள் போன்றவற்றைப் பேசுகின்றது. அத்துடன், பிழையான உணவு முறைகளும்,
உடற்பயிற்சியின்மை, மித மிஞ்சிய மதுபாவனை, பரம்பரை அம்சங்கள் போன்றவை எவ்வாறு புற்றுநோய்க்கு காரணமாகின்றன போன்ற முக்கிய விவரங்களும் சொல்லப்படுகின்றன.

நான்காவது அத்தியாயம், தாராள மூலவேர்களும் (Free Radicals)ஒட்சினெதிரிகளும் (Antioxidents) என பொதுமக்களுக்கு பரிச்சயமில்லாத விஞ்ஞானச் சொற்களைப் பயன் படுத்தியிருந்தாலும் அவர்களது நாளாந்த உணவு முறைக்கு உதவக் கூடிய பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. பல்வேறு தாவர உணவுகளில் உள்ள புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட ஒட்சிசனெதிரிகள் பற்றி விவரமாகக் கூறுகிறது.

ஐந்தாவது அத்தியாயம், பொதுவாக எமது சமூகம் எதிர் நோக்கும் பல்வேறு புற்றுநோய்களைப் பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு
புற்றுநோயும் ஏற்படுவதற்கான காரணிகள் எவை? அறிகுறிகள் எவை? நோயை எவ்வாறு நிர்ணயம் செய்வது போன்ற விடயங்களை விளக்குகிறது.

ஆறாவது அத்தியாயம்தான் இந்நூலின் தலைப்புச் சுட்டும் கருத்தின் விரிவாகும். கார்சினோஜின் எனப்படும் புற்றுநோய்களைத் தூண்டும் பொருட்களுக்கு எதிராக மூலிகை மற்றும் உணவு வகைகள் பற்றிப் பேசுகிறது.

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் கீரைவகைகள், இலைகள், பழங்கள், காய்கறிகள், ஆகியவற்றில் உள்ள மருத்துவ குணாம்சங்கள் பற்றியும் அவை புற்றுநோய்த் தடுப்பிலும், சிகிச்சை முறைகளிலும் எவ்வாறு உதவுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன போன்றவற்றை எடுத்துக் காட்டுகிறது. உதாரணமாக தேநீரில் உள்ள பொலிபெனோலிக் சேர்வை புற்றுநோயைத் தடுக்கும். இதேபோல வல்லாரை, மஞ்சள், பட்டிப்பூ, அதிமதுரம், கற்றாளை, நெல்லி, நிலவேம்பு, குங்கிலியம், கீழ்காய்நெல்லி, புளித்தோடை, பருத்தி, சோயா, உள்ளி, திராட்சை, பூக்கோவா போன்ற இன்னும் பல மூலிகைகளின் பயன்பாடுகள் பற்றியும் எடுத்தியம்புகின்றது.

திருமதி திலகவதி தர்மராசா நினைவாக வெளியிடப்படும். இந்நூலை வெளியிடுவதற்கு, நூலாசிரியரின் சிறிய தந்தையாராகிய க.மு. தர்மராசா உற்சாகமும் ஊக்கமும் அளித்துள்ளார். மறைந்த ஒருவரின் நினைவாக இத்தகைய ஒரு பயனுள்ள நூலை மிகுந்த
பொருட்செலவில் வெளியிட்டு அதன் வருவாயை கொழும்பு தமிழ்ச்சங்கம் போன்ற நிறுவனங்களுக்கு அளிப்பது மிகவும் சமூக அக்கறை கொண்ட செயலாகும் என்பதில் ஐயமில்லை.

இதேபோல தர்மராசா தனது மனைவியின் நினைவாக சென்ற வருடம் வெளியிட்ட "மூத்தோரைப் பராமரித்தல்' பற்றிய நூலின்
வெளியீட்டு விழா நிகழ்வுகள், நினைவுரைகள், பத்திரிகைக் கட்டுரைகள் யாவற்றையும் வண்ணப்படங்களுடனும் தனி நூலாக வெளியீட்டு பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கு ஊக்கம் அளித்தமையையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

'முதியோரைப் பராமரித்தல்' என்ற முன்னைய நூலும், இந்நூலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை
செம்மையான தமிழாக்கம் ஆகும். அரிய கலைச் சொற்களைத் தேடி எடுத்து தமிழாக்கம் செய்த பணி பாராட்டத்தக்கது.

ஆங்கிலத்தில் நூலாக்கம் செய்யப்பட்ட போது எடுத்த அதே கவனிப்பும், ஆழமும் கருத்தூன்றிய செயற்பாடும் தமிழாக்கத்திலும்
பேணப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியதாகும். இந்நூலை மொழிபெயர்த்தவரான எட்வேட் பீரிஸின் திறமையும் பாராட்டுக்குரிய ஒரு விடயமாகும்.

மூப்பியல் சான்றிதழ் பெற்ற வைத்திய கலாநிதி வசந்தி, இத்தகைய ஆழமும் விரிவும் கொண்ட நூலைத் தமிழில் தந்துள்ளமை தமிழ் நலவியல் எழுத்துத் துறைக்கும், நூல் வெளியீட்டுத்துறைக்கும் புதிய வீச்சையும், வேகத்தையும் கொடுத்துள்ளன. அவரது பணி தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு கிட்டவேண்டும் என அன்புடன் வேண்டுகின்றேன்.

நூலின் பெயர்:- ஒட்சிடனெதிரிகள் மூலமாகப் புற்று நோய்த் தடுப்பு
நூலாசிரியர்:- டொக்டர். வசந்தி தேவராசா சிறீஸ்கந்தராஜா (மூப்பியல் சான்றிதழ்) நூலின் ஆய்வுரை: டொக்டர் எம்.கே. முருகானந்தன்.


பழைய பயங்கரச் சம்பவத்தின் நினைவு மீளமீள தொல்லைப்படுத்துகிறதா?

பழைய பயங்கரச் சம்பவத்தின் நினைவு மீளமீள தொல்லைப்படுத்துகிறதா?

உங்கள் வாழ்வில் எப்பொழுதாவது மிகப் பயங்கரமானதும், உங்கள் மனத்தில் ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான சம்பவம்
எதையாவது எதிர் காண்டிருக்கிறீர்களா? நிச்சம் இருக்கும்! ஈழத் தமிழர்களது வாழ்வு சென்ற இருபது வருடங்களாக தினம் தினம்
இடர்பாடுகளுக்கு ஊடாகத் தான் நகர்கிறது. குண்டு வெடிப்பு, விமானத் தாக்குதல், எறிகணைவீச்சு, அந்நிய இராணுவத்தினது
அடாவடித்தனம், உடல் ரீதியான தாக்குதல், சிறையில் அடைபடல், பாலியல் பலாத்காரம் போன்ற ஏதாவது வன்முறை ஒன்றினால்
எங்களில் எவராவது ஒருவருக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருந்திருக்குமேயானால் அது அதிசயம்தான். உடல் ரீதியான பாதிப்பு ஏற்படாவிட்டால் கூட உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்களை எதிர் கொண்டிருப்பீர்கள். இவற்றில் சிலவாவது மரண பீதியை ஏற்படுத்தக் கூடிய பாரிய சம்பவங்களாக உங்களை உலுப்பியிருக்கும். அத்தகைய சம்பவங்களில் ஏதாவது ஒன்றாவது ஒன்று உங்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்து, அழுத்தமான வடுவை ஏற்படுத்தி உங்கள் தினசரி வாழ்க்கையையும், குடும்பத்தினருடனும்
சமூகத்தினதும் ஆன உறவாடலில் சிக்கலை ஏற்படுத்துகிறது எனில் நீங்கள் Post traumatic stress Disorder (PTSD) என்று சொல்லப்படும்
நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும்.

இது ஏதோ கேள்விப்படாத புதினமான நோய் என்று எண்ணிகிறீர்களா?. பெயர் புதிதாக இருக்கலாம், ஆனால் உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் திரும்பிப் பார்த்தால் எத்தனை பேர் இந்நோயால் பீடிக்கப்பட்டிருக்கக் கூடம் என்பதை இக்கட்டுரையை வாசித்து முடிந்த பின் நீங்கள் உணர்வீர்கள்.

எந்த ஒரு சமூகத்தையும் எடுத்துக் கொண்டாலும் அதில் 10 சதவிகிதத்தினர் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வுகள்
கூறுகின்றன. போர் வறுமை முதலியன அதிகம் பாதிக்காத அமெரிக்காவில் கூட வருடாவருடம் 5.2 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் அடக்குமுறையால் வெடித்த உள்நாட்டுப் போர் காரணமாக இழப்புகளும், துன்பங்களும், நெருக்கீடுகளும் மலிந்த ஈழத் தமிழ் மக்களிடையே இந்நோயின் தாக்கம் எவ்வளவு அதிகமாக இருக்கும்!

இந்நோய் உங்களுக்கோ நீங்கள் அறிந்த ஒருவருக்கோ இருக்கக் கூடும் எனக் கண்டுபிடிப்பது எப்படி? அதாவது இந்த நோயின் அறிகுறிகள் என்ன?

குறிப்பிட்ட அந்தப் பயங்கரச் சம்பவம் மீண்டும் முழுமையாக, நிஜமாகவே நடப்பது போன்ற உணர்வு எழுகின்றதா? அதுவும் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி அவ்வுணர்வு திடீரென ஏற்படுகின்றதா? எந் நேரமும் ஆபத்து சூழ்ந்து வரக்கூடும் என்ற பயமும் பாதுகாப்பற்ற உணர்வும் எழக் கூடும். இதனால் வெளிப்படையான தூண்டுதல் எதுவுமின்றியே எரிச்சல், கோபம், பதற்றம் போன்றவை தோன்றி உங்களைப் பாதிப்பதுடன் மற்றவர்கள் மனத்தையும் நோகச் செய்யலாம். முன்பு நடந்த அந்தச் சம்பவம் தொடர்பான பயங்கரக் கனவுகள் உங்களைத் தொல்லைப்படுத்துகிறதா? அல்லது அந்தத் திகிலூட்டும்
நிகழ்வு பற்றிய நினைவுகள் அடிக்கடி வந்து அல்லல்படுத்துகிறா? இதனால் அண்மையில் நடந்த சம்பவங்களை நினைவு படுத்த முடியாத ஞாபக மறதி ஏற்படக் கூடும். எந்த விடயத்திலும் முழுமையான அக்கறை எடுக்கவோ மனத்தை ஒருமுகப்படுத்தவோ முடியாதிருக்கும். நடந்த அந்தப் பயங்கரச் சம்பவம் பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தோன்றுகிறதா. நீங்களாக வலிந்து யோசிக்காவிட்டால் கூட உங்களை மீறி அவ்வெண்ணம் பீறிட்டு எழுகிறதா? அந்தச் சம்பவம் தொடர்பான நினைவுகளைக் கிளறுகிற இடங்களுக்குச் செல்வதையும், அது சம்பந்தமான உரையாடல்களையும் நீங்கள் தவிர்க்க முனைகிறீர்களா? எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏதாவது சம்பவம் திடீரென நடந்தால் கூட நீங்கள் பதற்றம் அடைந்து நிலை தடுமாறி விடுகிறீர்களா? உதாரணமாக கதவு அடிபடுகின்ற சத்தமோ, ஆகாய விமான அல்லது கார்ச் சத்தமோ உங்களைப் பதற்றப்படச் செய்கிறதா? சிறுசிறு சம்பவங்கள் கூட உங்களை உணர்ச்சி வசப்படுத்தி தன்நிலை இழக்கவைக்கிறதா?
மற்றவர்கள் மரணித்துவிட்டபோது நீங்கள் மாத்திரம் உயிர் தப்பிவிட்டோமே என்ற குற்றவுணர்வுக்கு ஆளாகின்றீர்களா?
மற்றவர்களில் நம்பிக்கை கொள்ளவோ, அவர்களிடத்தில் அக்கறை காட்டவோ, அவர்களுடன் உணர்வு பூர்வமாக நெருங்கிப்பழகவோ
முடியாதிருக்கிறதா? சமுதாயத்திலிருந்து ஒதுங்கவும் தனிமையை நாடவும் முனைகிறீர்களா? உங்களுக்கு நித்திரைக் குழப்பம் ஏதாவது இருக்கிறதா? தூக்கம் கண்களைத் தழுவ நீண்ட நேரம் எடுக்கிறதா, அல்லது அடிக்கடி குழம்புகிறதா அல்லது வேளை கெட்ட நேரத்தில் கண்விழித்து மீண்டும் தூக்கம் வராமல் தொல்லைப்படுகிறீர்களா? வாழ்வில் ஆர்வமும், அக்கறையும் குறைந்து செல்கிறதா? எதையும் அப்புறமாகச் செய்யலாம் எனத் தள்ளி வைக்கத் தோன்றுகிறதா?

இவற்றில் ஒரு சில அறிகுறிகளாவது உங்களுக்கு இருந்தால் நீங்கள் நெருக்கிட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என எண்ணலாம். நீங்களாக முடிவு எடுக்க வேண்டாம். உங்கள் வைத்தியருடன் கலந்தாலோசிப்பது முக்கியமானது.

மாறாக இவை எல்லாம் வெறும் மனப்பிரமைதானே? இவற்றை நோய் என்று எடுக்க வேண்டுமா என நீங்கள் எண்ணினால் மிகப் பெரிய தவறு செய்தவர் ஆகின்றீர்கள். உண்மையில் மனத்தில் ஏற்படுகின்ற அசெளகரியங்கள் உடல் நோய்களை விடப் பாரதூரமானவை. அவை நோயுற்றவரை மாத்திரமின்றி அவரது குடும்பத்தினரையும் சூழ இருப்பவர்களையும் கூடப் பாதிக்கிறது. தற்கொலை போன்ற ஆபத்தான முயற்சிகளுக்குக் கூட இட்டுச் செல்லக் கூடியவை.

இருந்தபோதும் இந்நோயைக் குணமாக்க மருந்துகளும் உளவளத் துணை உள்ளிட்ட சிகிச்சை முறைகளும் உள்ளன. அவற்றைப்
பயன்படுத்தி பூரண குணமடையலாம்.

மாறாகச் சிலர் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மதுவையோ, போதைப் பொருட்களையோ நாடி அவற்றிக்கு அடிமையாகும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுகிறது. வேறு சிலர் சுயவைத்தியத்தல் இறங்கி ஆபத்தான மருந்துகளை தாமே உட்கொண்டு அழிந்து போவதுண்டு.

நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோய் முதன் முதலில்; வியட்நாமில் போரிட்டு பயங்கர அனுபவங்களைப் பெற்ற அமெரிக்க போர் வீரர்களில்தான் இனங் காணப்பட்டது. இன்றும் கூட போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளவர்களையே அதிகம் பாதிக்கின்றது.

ஆனால் இது முழுமையாக போர் தொடர்பான நோய் அல்ல. வேறு பல நெருக்கீடுகளும் பயங்கர அனுபவங்களும் கூட இந்நோயைக்
கொண்டு வரலாம். ஒருவர் கற்பழிக்கப்பட்டிருந்தால் அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆழாக்கப்பட்டிருந்தால்
குடும்பத்தில் உள்ள ஒருவரினால் அடித்தோ துன்பப்படுத்தப்பட்டோ இருந்தால் கொலை, கொள்ளை, தீவைப்பு போன்ற ஏதாவது கொடூரமான குற்றச் செயலுக்கு ஆட்பட்டிருந்தால்
விமான விபத்து அல்லது வீதி வாகன விபத்துக்கு ஆளாகியிருந்தால் சூறாவளி, புயல், பயங்கரத் தீ விபத்து போன்ற ஏதாவது ஒன்றில் மாட்டுப்பட்டிருந்தால் நான் கொல்லப்படக் கூடும் இதிலிருந்து உயிர் தப்ப முடியாது என்பது போன்ற ஏதாவது ஒரு சம்பவத்தில் அகப்பட்டிருந்தால்

நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்படாவிட்டாலும் அத்தகைய சம்பவம் நடக்கும்போது அவ்விடத்தில் இருந்திருந்தாலும் கூட இந் நோய்
வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இந்நோய் எப்பொழுது வரும், யாருக்கு வரும்? எவருக்கும் வரலாம். எந்த வயதிலும் வரலாம், குழந்தைகளுக்குக் கூட வரலாம். ஆனால்
ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. சம்பவம் நடந்த பின் உடனடியாக ஆரம்பிக்கும்
என்றில்லை. பெரும்பாலும் மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கலாம். ஆனால் சிலருக்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே வருவதுண்டு. நோய் வந்தால்கூட பெரும்பாலும் ஆறுமாத காலத்திற்குள் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை ஊட்டும் விடயமாகும். ஒரு சிலரில் சிகிச்சையை நீண்ட காலத்திற்குத் தொடர வேண்டியிருப்பதுண்டு.

இந்நோய்க்கான சிகிச்சையைப் பொறுத்தவரையில் இந்நோய் பற்றிய பயங்கள் நீங்கித் தெளிவு ஏற்பட்டாலே பெருமளவு குணமாகிவிடும். பாதிப்பை ஏற்படுத்திய சம்பவமே இதற்குக் காரணம் எனத் தெளிவுறுவதும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் பெருமளவில் இருப்பதை அறிவதும், அவர்கள் காலகதியில் குணமாகி மற்றவர்கள் போல சந்தோசமாக வாழ்வதை உணர்வதும் நோயாளியின் மனத்தில் நம்பிக்கையை ஊட்டி விரைவில் குணமாக்க உதவும்.

இதைத் தவிர எமது சமூகத்தில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சமய, கலாசார ரீதியான பழக்கங்களும், நடைமுறைகளும் இந்நோயிலிருந்து விடுபடப் பெருமளவில் உதவி வருகின்றன. பகுத்தறிவு வாதம் பேசி அவற்றைக் கண்டிக்கவோ, பெறத் தயங்கவோ வேண்டியதில்லை. கோயில் செல்வதும், நேர்த்திக் கடன் வைப்பதும், மந்திரித்து நூல் கட்டுவதும், அபிஷேகம் செய்வதும் கூட நல்ல
பலனை அளிக்கக் கூடும். காய் வெட்டுதல், கழிப்புக் கழித்தல், பார்வை பார்த்தல், மருந்து விழுத்தல் போன்ற முறைகளை எமது
பாரம்பரிய வைத்தியர்கள் மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்தி பலரைக் குணமாக்குகிறார்கள் என்பதையும் குறிப்பட்டே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது மதரீதியான, தமக்கு நம்பிக்கையுள்ள பாரம்பரிய முறைகளை பெறுவதே இதிலிருந்து விடுபட சிறந்த வழியாகும்.

இதைத் தவிர தனது குடும்பத்தில் அல்லது சமூகத்தில் உள்ள, அனுபவசாலியான முதியவரை அணுகி அவருடன் தனது பயங்கர
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தனக்றே;பட்ட மனப் பாதிப்பைக் குறைத்துக் கொள்ள முடியும்.

வைத்திய முறையைப் பொறுத்தவரையில் மருந்துகளுக்கு மேலாக உளவளத் துணையாளருடன் மனம் விட்டுப் பேசுவது முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இது உள ஆலோசனையல்ல, உளவளத் துணையாளருடன் கலந்துரையாடுவதன் மூலம் தனக்கு ஏற்ற முறையைத் தானே சுயகண்டுபிடிப்புச் செய்யும் நம்பிக்கையான வழிமுறையாகும்.

மனத்தையும் உடலையும் தளரச் செய்யும் பயிற்சிகள் மூலம் மனஇறுக்கத்திலிருந்து விடுபடுவதும் கூட ஒரு வகைச் மருத்துவச் சிகிச்சை முறைதான். சுவாசப் பயிற்சி, சாந்தியாசனம், தியானம், மந்திரம் ஜெபித்தல் போன்ற வழிமுறைகள் நல்ல பலன் அளிக்கும்.

இத்தகைய எளிய வழிமுறைகள் மட்டுமே பெரும்பாலானவர்களைக் குணமாக்கப் போதுமானது. நித்திரையின்மை, கடுமையான மனச்சோர்வு, பயங்கரக் கனவுகள் போன்றவை ஒருவரைத் துன்பப்படுத்துமேயானால் சில மாத்திரைகளையும் சில காலத்திற்கு உபயோகிக்க நேரலாம்.

அடக்குமுறையால் வெடித்த உள்நாட்டுப் போர் காரணமாக இழப்புகளும், துன்பங்களும், நெருக்கீடுகளும் எமது மக்களை வதைக்கிறது. உயர் பண்பாடும், கலாசார மேன்மையும், கல்விச் சிறப்பும், அமைதியான வாழ்க்கை முறையும் கொண்ட எமது சமுதாயத்தின் கட்டுக்கோப்பு உடைந்து சிதிலமடைந்து வருகிறது. இடப்பெயர்வு தினசரிக் கடமைபோலாகியிருந்தது. இவற்றால் மேற் கூறிய நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோய் மாத்திரமின்றி மனப் பதகளிப்பு (Anxiety), மனச்சோர்வு (Depression) பீதிநோய் (Phobia) போன்ற வேறுபல உளம் சார்ந்த நோய்களுக்கும் எமது மக்கள் ஆளாகித் தவிக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


உங்களுக்கு நீரிழிவு வராமல் தடுங்கள்!
உங்களுக்கு நீரிழிவு வராமல் தடுங்கள்!

உங்கள் குடும்பத்தில் நீரிழிவு நோய் இருக்கிறதா ? அது உங்களுக்கும் வந்து தொல்லை கொடுக்கக் கூடும் எனப் பயப்படுகிறீர்களா? அதனை வராமல் தடுக்க முடியாதா என அங்கலாய்க்கிறீர்களா? நிச்சயம் முடியும். எல்லா விதமான நீரிழிவையும் தடுக்க முடியாவிட்டாலும் கூட Type 2 வகை நீரிழிவைத் தடுக்க முடியும். (Type 1, Type 2 ஆகிய நீரிழிவின் வகைகளைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு கட்டுரையின் இறுதிப் பகுதியைப் பாருங்கள்.)

நீரிழிவின் முன்நிலை!

நீரிழிவு வருவதற்கு முன் அது ஏற்படுவதற்கு ஏதுவான மாற்ற நிலையொன்று உங்கள் உடலில் ஏற்படும். அதனை நீரிழிவின் முன்நிலை (prediabetic stage) என்பார்கள். வுலிந 2 வகை நீரிழிவாளர்கள் பெரும்பாலும் இந்த நீரிழிவின் முன்நிலையைக் (prediabetic stage) கடந்தே உண்மையான நீரிழிவு நிலையை அடைவார்கள். Impaired glucose tolerance (IGT) impaired fasting glucose (IFG) ஆகிய இரு நிலைகளும் நீரிழிவின் முன்நிலைகள் என்று சொல்லப்படுகின்றன. நீரிழிவின் முன்நிலையில் உள்ளவர்களின் இரத்த குளுக்கோசின் அளவானது சாதாரணமானவர்களின் இரத்த குளுக்கோசின் அளவைவிடக் கூடியது, ஆனால் நீரிழிவு நோயாளர்களின் இரத்த குளுக்கோசின்
அளவைவிடக் குறைவானதாகும்.

நீரிழிவு நோயாளிகள் போலவே நீரிழிவின் முன் நிலையாளர்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் அதிகமாகும். எனவே வருமுன்னரே அணை போடுங்கள். நீங்கள் நீரிழிவின் முன்நிலையானவரா (prediabetic stage) என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் வைத்தியர் இரத்தப் பரிசோதனைகள் மூலம் இதனைக் கண்டறிந்து உங்களுக்குச் சொல்ல முடியும்.

உங்களுக்கு நீரிழிவின் முன்நிலை வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா?

உங்கள் எடை அதிகமானதாக இருந்தால் அல்லது அதீதமானதாக இருந்தால் உங்கள் பெற்றோர்கள் அல்லது சகோதர சகோதரிகள் நீரிழிவு நோயாளராக இருந்தால் நீங்கள் கருவுற்றிருக்கும்போது உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்திருந்தால் அல்லது உங்கள் குழந்தை பிறக்கும்போது 9 இறாத்தலுக்கு மேலான எடை இருந்திருந்தால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் (140/90) இருந்தால் உங்கள் இரத்தத்தில் நல்ல கொலஸ்ரோல் எனப்படும் HDL cholesterol level அளவு ஆணாக இருந்தால் 40அப ¢நச னடு க்குக்
குறைவாகவும் , பெண்ணாக இருந்தால் 50 mg per dL க்குக் குறைவாக இருந்தால், அல்லது ரைகிளிசரைட் அளவு (triglyceride level) 250
mg per dLக்கு அதிகமாக இருந்தால் உங்கள் இனம் ஆசிய, ஆபிரிக்க அல்லது லத்தீன் அமெரிக்கத்தைச் சார்ந்ததாக இருந்தால்.
உங்களுக்கு நீரிழிவின் முன்நிலை (prediabetic stage) வரக் கூடிய வாய்ப்பு அதிகமாகும். நீரிழிவின் முன்நிலை உள்ளவர்கள் உண்மையான நீரிழிவு நோயாளராக பின்பு மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். ஆனால் அவ்வாறு வராமல் தடுப்பது எப்படி?
நீரிழிவு வருவதைத் தடுங்கள்!

நீங்கள் நீரிழிவு நோயாளராக மாறாமல் தடுப்பதன் முதற்படி உங்கள் வாழ்க்கை முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள்தான். முதலாவதாக உங்கள் எடையைக் கவனியுங்கள். உங்கள் எடையானது உங்களது உயரத்திற்கு இருக்க வேண்டியதைவிட அதிகமானால் அதைக் குறையுங்கள். நீங்கள் அதிக எடையுள்ள வராயின் உங்கள் எடையில் 5 முதல் 7 சதவிகிதத்தையாவது குறைப்பது முக்கியமாகும். எடையைக் குறைப்பதால் உங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைப்பதுடன் உங்கள் இரத்த
அழுத்தத்தையும், இரத்தக் கொலஸ்டரோலின் அளவையும் குறைக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் உடல் உழைப்பை அதிகரிப்பதாகும். உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி நீங்கள் நீரிழிவு நோயாளராக மாறுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். உங்கள் வழமையான வேலைகளுக்கு மேலதிகமாக தினமும் 30 நிமிடங்களுக்கு குறையாது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். நடுத்தர அளவுள்ள உடற் பயிற்சி போதுமானது. வாரத்தில் குறைந்தது 5 நாட்களுக்காவது அவ்வாறான பயிற்சியில் ஈடுபட வேண்டும். நீங்கள் செய்யும் உடற் பயிற்சி உங்கள் வயதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதுதானா என்பதை உங்கள் வைத்தியருடன் கலந்தாலோசியுங்கள்.

மூன்றாவதாக நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டியது உங்கள் உணவு முறையாகும். உங்கள் உணவில் கூடியளவு காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் எந்த உணவிலும் பழங்களும் காய்கறிவகைகளும் குறைந்தது 25 சதவிகிதமாக இருக்க வேண்டும். தினமும் உங்கள் உணவில் சலட் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தவிடு நீக்காத அ¡¢சியையும், தவிடு நீக்காத அ¡¢சி மாவினால் செய்யப்பட்ட உணவுகளையும் இயலுமானவரை உபயோகியுங்கள். குரக்கன், ஆட்டாமா போன்றவையும் உகந்தது. பயறு இன உணவுகளும் மீனும் நல்லது. கோழியிறைச்சியும் ஏற்றதே. ஏனைய இறைச்சிகள் எனில் கொழுப்புப் பகுதி அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சீனியையும், தேன் மற்றும் சீனி சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிருங்கள் அல்லது கூடியளவு குறையுங்கள்.

உங்கள் தினசரி உணவின் மொத்தக் கலோரிப் பெறுமானத்தில் 30% குறைவான அளவே எண்ணெய் மற்றும் கொழுப்புப் பதார்த்தங்களில் இருந்து பெறப்பட வேண்டும். அதிலும் 10% ற்குக் குறைந்த அளவு மாத்திரம் நிரம்பிய கொழுப்புகளில் இருந்து பெறப்பட வேண்டும். உங்கள் தினசரி உணவின் மொத்தக் கலோரிப் பெறுமானத்தில் மாப்பொருள் 50- 60% தைக் கொடுக்க வேண்டும். அத்துடன் உங்கள் உணவில் தினசரி 20-40 கிராம் நார்ப்பொருள் சேரவேண்டியதும் முக்கியமானதாகும்.

நீரிழிவு வராமல் தடுக்க மருந்துகள் உதவுமா?!

நீங்கள் ஒரு நீரிழிவின் முன்நிலையாளர் எனில் உங்களுக்கு நீரிழிவு வராமல் தடுப்பதற்கு மருந்துகள் உதவுமா என்ற கேள்வி எழுகிறது. மருந்துகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவை உணவு முறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி போல சிறந்தவை அல்ல. எனவே வாழ்க்கை முறை மாற்றங்களில் முழு நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள். ஆயினும் இவற்றை அனுசரித்த பின்னும் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவில் மாற்றம் இல்லை எனில் அல்லது உங்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் எனில் வைத்தியர் உங்களுக்கு மருந்துகளும் தரக் கூடும். எனவே முழு மனத்துடன் செயற்படுங்கள். உங்களுக்கு நீரிழிவு வராமல் உங்களால் தடுக்க முடியும்.

நீரிழிவின் முன்நிலைகள் என்பன எவை?

நீரிழிவின் முன்நிலை பற்றி இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பேசினோம். அவை பற்றி மேலதிக விபரங்களை அறிய நீங்கள் விரும்பக் கூடும். அத்துடன் ஜபுவுஇ ஜகுபு ஆகிய இரண்டுமே நீரிழிவின் முன்நிலைகள் எனக் கட்டுரையின் ஆரம்பத்தில் கண்டோம். இவற்றை நாமே இனங்காண முடியுமா என நீங்கள் கேட்கக் கூடும். கீழ்க் கண்ட முறைகளில் இரத்தப் பரிசோதனை செய்து அதன் முடிவுகளைக் கொண்டு அறிய முடியும்.

Impaired glucose tolerance (IGT), ) Impaired fasting glucose (IFG) ஆகியன எங்கள் இரத்த குளுக்கோஸின் அளவைப் பொறுத்தது. வெறும்
வயிற்றில் (fasting) எடுக்கப்பட்ட இரத்த குளுக்கோஸை அளவு 6.1mmol/l க்குக் குறைவாகவும் ஆனால் 75gm குளுக்கோஸ் குடித்த
இரண்டு மணிநேரத்தின் பின் எடுக்கும் போது 6.7mmol/l அல்லது அதற்கு மேல் இருந்தால் அது Impaired glucose tolerance (IGT) என்று
சொல்லப்படும். இது நாளத்தில் எடுக்கப்படட இரத்தப் பரிசோதனையின் அளவுகளாகும். இதனையே குளுக்கோமீட்டரில் எடுத்தால் வெறும்
வயிற்றில் (fasting 6.1mmol/l க்குக் குறைவாகவும், 75gm குளுக்கோஸ் குடித்த இரண்டு மணிநேரத்தின் பின் எடுக்கும் போது 7.8 முதல்
11.1mmol/l ஆகவும் இருக்கவேண்டும்.

Impaired fasting glucose (IFG) என்பது நாள் இரத்தமாயின் வெறும் வயிற்றில் (fasting) எடுக்கும்போது 5.6 முதல் 6.1mmol/l ஆகவும்
இருக்கவேண்டும். இதனையே குளுக்கோமீட்டரில் எடுத்தால் வெறும் வயிற்றில் (fasting) 5.6 முதல் 6.1mmol/l ஆகவும், 75gm
குளுக்கோஸ் குடித்த இரண்டு மணிநேரத்தின் பின் எடுக்கும் போது 7.8 க்குக் குறைவாகவும் ஆகவும் இருக்கவேண்டும்.

நீரிழிவின் வகைகள்!

நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உண்டு.

Type- 1 : இது பொதுவாக குழந்தைகளையும், கட்டிளம் பருவத்தினரையும், இள வயதினரையும் தாக்குவது. இன்சுலின் சுரப்பது முற்றாக நின்று விடுவதாலும், உடற்கலங்களுக்குள் இன்சுலின் செல்ல முடியாததாலும் இது ஏற்படுகிறது. இவர்களுக்கு தினமும் இன்சுலின் ஊசி கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

Type- 2 :90% வீதமான நீரிழிவு நோயாளர் இந்த வகையையே சார்ந்தவர்கள். இங்கு இன்சுலின் ஓரளவு சுரந்தாலும் உடலால் அதனைச் சிறப்பான முறையில் பயன்படுத்த முடியாததால் உடற்கலங்களுக்கு போதிய இன்சுலின் கிடைப்பதில்லை. கவனமான முறையில் உணவுகளை உண்பதாலும், தினசரி உடற் பயிற்சி செய்வதாலும் இதனை ஆரம்ப நிலையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். அவ்வாறு கொண்டு வர முடியாத நிலையில் மாத்திரைகளையோ, இன்சுலின் ஊசியையோ பாவிக்க வேண்டி நேரிடும். சில வேளைகளில் மாத்திரைகளையும், இன்சுலின் ஊசியையும் சேர்த்துப் பாவிக்கவும் நேரிடலாம்.

Type- 2 :90% வீதமான நீரிழிவு நோயாளர் இந்த வகையையே சார்ந்தவர்கள். இங்கு இன்சுலின் ஓரளவு சுரந்தாலும் உடலால் அதனைச் சிறப்பான முறையில் பயன்படுத்த முடியாததால் உடற்கலங்களுக்கு போதிய இன்சுலின் கிடைப்பதில்லை. கவனமான முறையில் உணவுகளை உண்பதாலும், தினசரி உடற் பயிற்சி செய்வதாலும் இதனை ஆரம்ப நிலையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். அவ்வாறு கொண்டு வர முடியாத நிலையில் மாத்திரைகளையோ, இன்சுலின் ஊசியையோ பாவிக்க வேண்டி நேரிடும். சில வேளைகளில் மாத்திரைகளையும், இன்சுலின் ஊசியையும் சேர்த்துப் பாவிக்கவும் நேரிடலாம்.

நீ¡¢ழிவின் Type- 2 வகை பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களையே தாக்கி வந்தது. ஆனால் தவறான உணவு முறைகளாலும், உடற்பயிற்சி இல்லாததாலும், அதீத உடற் பருமனாலும் இப்பொழுது இள வயதினரையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. பள்ளிக்கூடப் பிள்ளைகள் கூட இன்று பாதிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எப்படி இருந்தபோதும் நீங்கள்
மனம் வைத்தால் நீரிழிவு வராமல் தடுக்க முடியும் என்பது நம்பிக்கை ஊட்டும் செய்தியல்லவா?

கொலஸ்டரோல் பிரச்சனையும்!  அதைக் கட்டுப்படுத்துவதும்!

உங்களுக்கு இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகம் என இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மாத்திரமல்ல இன்னும் பலர்
இந்தக் கொலஸ்டரோல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பரிதாபம் என்னவென்றால் மிகப் பெரும்பாலானவர்கள்  தமக்கு இப்பிரச்சனை இருப்பதை அறியாமல் இருப்பதுதான். இதற்குக் காரணம் இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் அதிகரித்த  நிலையானது எந்தவித அறிகுறிகளையோ பாதிப்புகளையோ உடனடியாக வெளிக் காட்டுவதில்லை. வைத்திய ஆலோசனையும் இரத்தப்
பரிசோதனையும் மாத்திரம்தான் இப்பிரச்சனை உங்களுக்கு இருப்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தும். ஆனால் நடுத்தர வயதிலும் முதுமையிலும் வரக்கூடிய சில ஆபத்தான நோய்களுக்கு இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் ஒரு அடிப்படைக் காரணமாகும்.

எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?

கொலஸ்டரோலும் ஏனைய கொழுப்புகளும் இரத்த நாடிகளின் சுவர்களில் படிந்து உடல் உறுப்புகளுக்கான இரத்த ஓட்டத்தை குறையச் செய்கின்றன. இதனால், பக்கவாதம், அஞ்சைனா, மாரடைப்பு முதலான இருதய நோய்கள்,சிறுநீரகநோய்கள்
போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.இத்தகைய ஆபத்தான நோய்கள் உங்களுக்கு வராமல் தடுக்கவே கொலஸ்டரோல் பற்றிய அறிவு எல்லோருக்கும் தேவைப்படுகிறது. அத்துடன் அதனைக் கட்டுப்படுத்துவதும் அவசியமாகிறது. இது வயதானவர்களுக்கான பிரச்சனை என எண்ண வேண்டாம்., நடுத்தர வயதினரையும் பாதிக்கும் விடயமாக இருக்கிறது. அது மட்டுமல்ல குழந்தைப் பருவத்திலேயே இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவது ஆரம்பித்து விடுவதால் எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டியதுடன் அதனைத் தடுக்கும் முயற்சியில் இளவயது முதலே ஈடுபட வேண்டிய முக்கியமான விடயமாகவும் உள்ளது.

கொலஸ்டரோல் என்பது என்ன?

கொலஸ்டரோல் என்பது என்ன?

இது எமது உடலிலுள்ள ஒரு கொழுப்புப் பொருள். இது உடலுக்குத் தேவையான பொருளும் கூட. உதாரணமாக, பால் சார்ந்த
ஹோர்மோன்களான ஈஸ்ரோஐன், புரொ¦ஐஸ்டரோன் ஆகியவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. கலங்களின் பகுதியாகவும் உள்ளது.
ஆனால் இரத்தத்தில் வழமைக்கு மேலான இதன் அதிகரிப்பு நோய்களுக்கு காரணமாகிறது. கொலஸ்டரோல் தவிர்ந்த வேறு
கொழுப்புக்களும் எமது உடலில் உள்ளன. கொலஸ்டரோல், ரைகிளிசரைட் (TG), பொஸ்போ லிப்பிட்ஸ் ஆகிய அனைத்துமே கொழுப்புக்கள் (Lipids) எனப்படுகின்றன. கொழுப்புக்கள் நீரில் கரைய முடியாதவை. எனவே அவற்றை உடலின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு எடுத்துச் செல்ல குருதியால் முடியாது. இதனால் இவை ஒரு வகைப்புரதத்துடன் இணைவதால் நீரில் கரையக் கூடியதாகின்றன. இவை லைப்போ புரதம் (Lipoproteins) எனப்படுகின்றன.

லைப்போபுரதத்தில் இருவகைகள் உள்ளன. அவையாவன,
உயர் அடர்த்தி லைப்போபுரதம் (HDL),
குறை அடர்த்தி லைப்போபுரதம்-(LDL).

எல்லாக் கொழுப்புகளுமே ஆபத்தனவையல்ல. HDL நல்ல கொலஸ்டரோல் எனப்படுகிறது. இது இரத்த நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்புகளைப் பற்றிப் பேசும் போது நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு அனைத்துமே முக்கியமானவைதான்.

எனவேதான் இப்பொழுது இரத்தத்தில் மாறுபட்ட கொழுப்பு அளவுகள் (Dyslipidaemia) என்றே பேசுகிறார்கள். இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் பற்றி (Hyperchoesteraemia) பற்றியும் இரத்தத்தில் அதிகரித்த கொழுப்பு (Hyperlipidaemia) அல்லது மட்டும் பேசுவது குறைவு என்றே சொல்லலாம்.

இரத்தத்தில் கொழுப்பு அதிகரித்திருப்பதை அறிவது எப்படி ?

இது அறிகுறிகளற்ற நோய். எனினும் சிலருக்கு உடலில் ஏற்படும் சில குணங்குறிகள் மூலம் வைத்தியர்கள் அவர்களது இரத்தத்தில்
கொழுப்பு அதிகரித்திருப்பதை உணரக்கூடும். வெளிர் மஞ்சள் நிறமான தடிப்புகள் (Lipid Deposits) சிலரின் தோலில் காணப்படக் கூடும். கண்களின் கீழ், முழங்கை, முழங்கால், தசைநார்கள் (Tendon) போன்ற இடங்களில் இத்தகைய மஞ்சள் நிறமான தோற்தடிப்புகள்
காணப்படலாம். சிலருக்கு ஈரல், மண்ணீரல் ஆகியன சற்று பருத்திருக்கக் கூடும்.

வேறு சிலருக்கு கருவிழியைச் சுற்றி வெண்ணிற வளையம் (Arcus Senilis) காணப்படலாம்.

ஆனால் பெரும்பாலனவர்களுக்கு இத்தகைய அறிகள் எதுவுமே இருப்பதில்லை. எனவே இரத்தப் பரிசோதனை செய்வதின் மூலமே கண்டுபிடிக்கலாம். 14 மணி நேரம் வெறும் வயிற்றில் இருந்து (Fasting)  இப்பரிசோதனையை செய்வது அவசியம்.
இரு வகை பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

1. Serum Cholesterol,
2. Lipid Profile

இதில் Lipid Profile என்பதே ஒருவருடைய குருதியல் உள்ள வெவ்வேறு கொழுப்புகளின் (HDL, LDL, TG) அளவுகளை தனித்தனியாகக் காட்டும் பரிசோதனையாகும்.

செய்யப்பட்ட ஒரு பரிசோதனை தெளிவான முடிவைக் கொடுக்காவிட்டால் 1 முதல் 8 வாரங்களில் மீண்டும் பரிசோதனை செய்து அவற்றின் சராசரியை முடிவாகக் கொள்ளலாம்.

உங்களுக்கு இரத்தப் பரிசோதனை அவசியமா?

40 வயதிற்கு மேறபட்ட எவரும் இப்பரிசோதனையைச் செய்வது விரும்பத்தக்கது. ஆயினும் கொழுப்பின் அளவு அதிகரித்து இருக்கக் கூடிய வாய்ப்புள்ளவர்களுக்கு இது மிக அவசியமாகும். பின்வருவோர் கட்டாயம் பரிசோதனைக்கு ஆளாவது அவசியம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளோர்
நீரிழிவு நோயாளிகள்
சிறு நீரக வழுவல் (Renal failure) உள்ளோர்
இருதய நாடி, அல்லது மூளை நாடி (Coranary artery diseases) நோயுள்ளோர்
தமது இரத்த உறவுகளில் இருதய நாடி, அல்லது மூளை நாடி (Coranary artery diseases) நோயுள்ளோர்
கொழுத்த உடல் வாகுடையோர் ( BMI >29)
புகைபிடிப்போர்

இரத்தத்தில் கொழுப்பு எந்தளவில் இருக்க வேண்டும்?

விருபத்தக்க அளவு எல்லைக்கோட்டுஅளவு நோயுற்ற அளவு
ரைகிளிசரைட் <150 150 - 350 >350
உயர் அடர்த்தி
லைப்போபுரதம் HDL >35 <35
குறை அடர்த்தி
லைப்போ புரதம்
நோயுற்றோரில் LDL <100 >100
குறை அடர்த்தி லைப்போ புரதம் சாதாரணமானவர்களில்
LDL <130 130-159 >160
LDL/HDL விகிதம் <4 >4
கொலஸ்டரோல்
Total Cholesterol
180-200 200-239 >240

LDL 130 க்குக் குறைவாகவும், HDL 40 க்கு அதிகமாகவும், TG 150 க்குக் குறைவாகவும் உள்ளவர்களுக்கு உடனடியாக வைத்தியம் செய்ய
வேண்டியதில்லை. ஜந்து வருடங்களின் பின் இரத்தப் பரிசோதனை செய்தால் போதும்.

LDL 131 - 160 ஆகவும், HDL 31 - 40 ஆகவும், TG 151 250 ஆகவும் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடுகளையும், வாழ்க்கை முறை
மாற்றங்களையும் கடைப் பிடிக்க வேண்டும். ஆயினும் இவர்களின் வயது 40க்கு அதிகமாக இருந்தால் அல்லது அடுத்த முன்று
பரிசேதனைகளின் பின்பும் இரத்த கொழுப்புகளில் குறைவு ஏற்படாவிட்டால், அல்லது இருதய நோயை உண்டுபண்ணும் காரணிகளில் இரண்டு இருந்தால் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

LDL 161 - 190 ஆகவும், HDL 25 - 30 ஆகவும், TG 251 350 ஆகவும் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடுகளையும், வாழ்க்கை முறை
மாற்றங்களையும் கடைப் பிடிக்க வேண்டும். ஆயினும் இவர்களின் வயது 35 க்கு அதிகமாக இருந்து உணவுக் கட்டுப்பாடுகளும்,
வாழ்க்கை முறை மாற்றங்களும் பலனைக் கொடுக்காவிட்டால் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

LDL 190 க்கு அதிகமாகவும், HDL 25 க்கு குறைவாகவும், TG 350 க்கு அதிகமாகவும் உள்ளவர்களுக்கு உடனடியாக மருந்துகள்
ஆரம்பிப்பதுடன் உணவுக் கட்டுப்பாடுகளையும், வாழ்க்கை முறை மாற்றங்களையும் கடைப் பிடிக்க வேண்டும்.

இரத்த கொலஸ்டரோல் அதிகரிப்புக்குக் காரணங்கள்.

உங்களது இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரித்திருப்பதற்கு அல்லது சாதாரண அளவில் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இரத்த கொலஸ்டரோலில் பல பிரிவுகள் இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். இவற்றில் முக்கியமானது LDL கொலஸ்டரோலாகும்.

LDL கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் அதன் காரணமாக இருதய நோய்கள் வருவதற்குமான காரணிகளை நாம் அறிந்திருப்பது அவசியம். அவற்றை அறிந்திருப்பதன் மூலம் எம்மால் மாற்றக் கூடிய காரணிகளை கட்டுப்படுத்தி, அதன் மூலம் LDL கொலஸ்டரோல் அதிகரிப்பதையும் அதன் காரணமாக இருதய நோய்கள் வருவதற்குமான வாய்ப்புகளை நாம் தவிர்த்துக் கொள்ளலாம்.

சில குடும்பங்களில் அக்குடும்ப அங்கத்தவர்கள் பலரும் கொலஸ்டரோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இதற்குக் காரணம் அவர்களது பொதுவான உணவுப் பழக்கங்களாக இருக்கக் கூடும். ஆயினும் கொலஸ்டரோல் அதிகரிப்பு என்பது பரம்பரை குணாதிசியமாக இருப்பதை பல ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இதேபோல வேறு சில குடும்பங்களில் இயற்கையாகவே கொலஸ்டரோல் அளவு குறைவாக இருக்கறது. எனவே உங்கள் குடும்பத்தில் வேறு சிலருக்கு ஏற்கனவே கொலஸ்டரோல் அதிகமாயிருந்தால் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும். உங்கள் குருதிக் கொலஸ்டரோலை அடிக்கடி பரிசோதித்துப் பார்ப்பதுடன் உணவுகளிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

அதீத எடையும் கொலஸ்டரோல் அதிகரிப்புடன் தொடர்புடைய காரணியாகும். அதேபோல இது இருதயநோய்களுக்கும் காணமாகிறது.

புகைத்தல் இரத்தத்தில் உள்ள கொலஸ்டரோல் அளவை அதிகரிப்பதுடன், இருதய நோய்கள் நீரிழிவு போன்ற வேறு பல நோய்களுக்கும் காரணமாகிறது.

அதீத மதுப் பாவனையும் இரத்தத்தில் உள்ள கொலஸ்டரோல் அளவை அதிகரிக்கிறது. அதாவது அருந்தும் மதுவில் எதனோலின்
(Ethanol) அளவு 30 மி.லி ருக்கு அதிகமாயின் அது இரத்தக் கொலஸ்டரோல் அளவை அதிகரிக்கும்.

சமனற்ற உணவும் (Imbalanced food) இரத்தக் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணமாகும். மாறாக சமச்சீரான
உணவு (Balanced food) கொலஸ்டரோல் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். முக்கியமாக அளவிற்கு அதிகமாக உண்பதும், அதிக கலோரிப் பெறுமானம் கொண்ட மாப் பொருட்களையும், கொழுப்புப் பொருட்களையும் உணவில் அதிகளவில் சேர்ப்பதும் கொலஸ்டரோல் அதிகரிப்பிற்குக் காரணமாகின்றன3

உணவில் அதிகளவு கொழுப்புப் பொருட்களை உண்பதும் இரத்தக் கொலஸ்டரோவை அதிகரிக்கிறது. முக்கியமாக trans fatty acids
அதிகமுள்ள உணவுகளை உண்பது காரணமாகிறது. French fries என்று சொல்லப்படுகிற உருளைக்கிழங்குப் பொரியல் அத்தகையது.
மார்ஐரினும் அது கலந்த உணவுகளும், பேக்கரித் தயாரிப்பு உணவுகளும், பொரித்த உணவுகளும் கொலஸ்டரோலை அதிகரிக்கும்.

உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையும் கொலஸ்டரோல் அளவை அதிகரிப்பதற்கான இன்னுமொரு காரணமாகும்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்புடன் தொடர்புடைய இன்னுமொரு
காரணியாகும். அதேபோல இருதயநோய்களுக்கும் காணமாகிறது.

மனஅமைதியின்மை, உணர்ச்சிப் பாதிப்புகள் ஆகியனவும் இரத்தத்தில் கொலஸ்ட்ரோலை அதிகரிக்கச் செய்கின்றன.

ஆண்கள் பெண்களைவிட கொலஸ்டரோல் பாதிப்பிற்கு ஆளாவது அதிகம். மாதவிடாய் நின்ற பின் பெண்களும் ஆண்களைப் போன்ற
பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக பொருளாதார நிலைகளுக்கும் இரத்தக் கொலஸ்டரோல் அளவிற்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். சமூக பொருளாதார நிலையின் உயர் நிலையிலும், அடிமட்டத்திலும் இருப்பவர்கள் கொலஸ்டரோல் பிரச்சினைக்கு ஏனையவர்களைவிட அதிகம்.

தனிமை வாழ்க்கைக்கும் கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக இன்னுமொரு அறிக்கை கூறுகிறது. திருமணம் செய்யாதவர்களும், தமது வாழ்க்கைத் துணையை இழந்தவர்களும், விவாகஇரத்துப் பெற்றவர்களும், திருமணவாழ்வில் சந்தோ‘மும் திருப்தியும் பெறாதவர்களும் கொலஸ்டரோல் பாதிப்பிற்கு ஆளாவது அதிகமாக இருக்கிறது.

இரத்த கொலஸ்டரோலும் உணவிலுள்ள கொலஸ்டரோலும்

உங்களது இரத்தத்தில் உள்ள கொலஸ்டலோலுக்கும் உங்கள் உணவிலுள்ள கொலஸ்டரோலுக்கும் உள்ள தொடர்பு என்ன?

தங்களது உணவிலுள்ள உள்ள கொலஸ்டரோல்தான் தங்கள் இரத்தத்தில் பிரதிபலிக்கறது எனப் பலரும் தவறாகக் கருதுகிறார்கள். உண்மையில் இரண்டிற்கும் இடையே தொடர்பு மிகக் குறைவே. உங்கள் உணவில் உள்ள கொலஸ்டரோல் அப்படியே உங்கள் இரத்த கொலஸ்டரோலாக மாறும் என்றில்லை. ஒருவரது இரத்த கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு அவரது சகலவிதமான உணவு முறைகளும், பரம்பரைக் காரணங்களும், வாழ்க்கை முறைகளும் காரணமாகின்றன.

உண்மையில் உங்கள் உணவில் உள்ள கொ¨ஸ்டரோலுக்கும் உங்கள் இரத்த கொலஸ்டரோலுக்கும் உள்ள தொடர்பு மிகக் குறைவே. இதனால்தான் தமது உணவில் மிகச் சிறிய அளவு கூட கொலஸ்டரோலை உட்கொள்ளாத முழுமையான தாவர உணவார்களுக்கும் கூட இரத்த கொலஸ்டரோல் பிரச்சினையும், இருதய நோய்களும் வரச் செய்கின்றன.

மறுதலையாகப் பார்க்கும்போது தாய்வான், ஐப்பான், பிரான்ஸ், மெக்ஸிகோ, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் தமது
உணவில் அதிகளவு முட்டையையும், வேறு அதிக கொலஸ்டரோல் உணவுகளையும் உட்கொண்டு வந்த போதும் அவர்களுக்கு இருதய நோய்கள் வருவது குறைவாக இருக்கறது. அதாவது முழுமையான தாவர உணவாளர்களைவிடவும் பாலுணவும் சேர்த்து எடுக்கும் தாவர உணவாளர்களை விடவும் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இப்படிக் கூறுவதின் அர்த்தம் கொலஸ்டரோல் உணவுகளை வேண்டியளவு உண்ணுங்கள், உங்கள் இரத்த கொலஸ்டரோலுக்கு எதுவும் நடக்காது என்பதல்ல. உங்கள் இரத்த கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பதற்கு உணவைத் தவிர வேறு பல காரணங்களுக்கும் இருக்கின்றன, அவற்றையும் கவனித்தல் அவசியம் என்பதேயாகும்.

ஒருவரது கொலஸ்டரோல் வகைளில் முக்கியமானது கெட்ட கொலஸ்டரோல் என்று சொல்லப்படும் LDL கொலஸ்டரோலும்,
ரைகிளிசரைட் (Triglyceride) கொலஸ்டரோல் ஆகிய இரண்டுமாகும். இவற்றின் அதிகரிப்பிற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகள்
75%மும், உணவு சார்ந்த காரணிகள் 25% ஆகும்.

கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளாவன

1 பரம்பரை 15%
2 அதிகரித்த எடை 12%
3 ஹோர்மோன்களும், நொதியங்களும் 8%
4 உயர் இரத்த அழுத்தம் 8%
5 அதிக மது பாவனை 2%
6 மனப்பழுவும், உணர்ச்சி நிலைகள், சமூக பொருளாதார நிலையும் 8%
7 நீரிழிவு 7%
8 உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை 6%
9 புகைத்தலும், சூழல் மாசுக்களும் 6%
10 பால், வயது, மருந்துகள், ஏனைய காரணிகள் 5%

இரத்தத்தில் கொழுப்பை கட்டுப்படுத்த
நீங்கள் செய்ய வேண்டியவை!


உங்கள் உணவிலும், வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களை செய்தால் உங்கள் இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைக்க முடியும்.

1. கொலஸ்டரோல் மிகுந்துள்ள
உணவுகளைக் குறையுங்கள்!

எமது உடலிலுள்ள கொலஸ்டரோல் இரண்டு வழிகளில் கிடைக்கிறது.

1. நாம் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்டரோல்.
2. எமது உடல் உற்பத்தி செய்யும் கொலஸ்டரோல்.
நாம் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்டரோலாலில் மூன்றில் ஒரு வீதமே (1/3%) மட்டுமே உடலால் உறிஞ்சப்படுகிறது. ஆயினும்
உட்கொள்ளும் உணவில் உள்ள மொத்தக் கலோரிப் பெறுமானம், மொத்தக் கொழுப்பு ஆகிய இரண்டுமே கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாயிருக்கின்றன. இதோடு ஒப்பிடும்போது நாம் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்டரோலால் முக்கியமானது அல்ல எனக் கருதப்படுகிறது. எனினும் அதிக கொலஸ்டரோல் உள்ள உணவுகளான, முட்டை மஞ்சள் கரு, இறைச்சி வகைகள், பாலுணவு, நண்டு, இறால் போன்றவற்றை உங்கள் உணவில் கட்டுப்படுத்துங்கள்.

2. உணவில் கொழுப்புப் பொருட்க¨ளின்
அளவைக் குறையுங்கள்!

நாம் உணவில் உட்கொள்ளும் கொழுப்பும், கொழுப்பு அமிலங்களும் எமது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பெரிதும்
பாதிக்கின்றன. கொழுப்பு அமிலங்களில் இரண்டு வகை உண்டு
றக்கிறது. நிரம்பாத கொழுப்பு அமிலங்களில் (UnSaturated fatty acids) இரண்டு வகைகள் உண்டு

Mono-UnSaturated fatty acids
Poly-UnSaturated fatty acids

எமது உணவில் ஓரளவு Poly-UnSaturated fatty acids சேர வேண்டும். அதிலும் முக்கியமாக டு¨ழெடந¨உ ( Omega 6), Linolenic (Omega 3)
ஆகியன சேர வேண்டும். ஏனெனில் இவை எமது உடலால் உற்பத்தி செய்ய முடியாதவை. ஆனால் இவை இரண்டும் எமது உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாசியமானவை. இதனால் இவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் ( Essential fatty acids- EFA ) என
அழைக்கப்படுகின்றன.

Poly-UnSaturated fatty acids கொலஸ்டரோலையும் பித்த அமிலங்களையும் மலத்துடன் அதிகளவு வெளியேற்றுகின்றன. இதனால் இரத்த கொலஸ்டரோல் அளவு குறையும்.

பெரும்பாலான தாவர இன எண்ணெய்களில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் EFA- உண்டு. ஆனால் இறைச்சி வகைகளில் அதிகம் இல்லை.

மீனிலும் மீன் எண்ணெய்களிலும் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவைக் குறைக்கிறது.
அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் -EFA- முக்கியமாக Omega 3 வகை கொழுப்பு அமிலம் ஆழ்நீர் வாழ் மீன் எண்ணெயில் இருக்கிறது. சிறிய மீன்கள் Salaya, Hurulla, Kumbalawa போன்றவற்றில் Omega 3 வகை கொழுப்பு அமிலம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. Kellawalla – Tuna, Thalapath போன்ற செந்நிற மீன்களிலும் Omega 3 வகை கொழுப்பு அமிலம் இருக்கிறது. ஆயினும் Thora, Paraw
போன்ற வெள்ளை மீன்களில் Omega 3 வகை கொழுப்பு அமிலம் குறைவாகவே இருக்கிறது.

பிரதான கொழுப்பு அமிலங்கள் இன்னுமொரு வழியிலும் இருதய நோய்களுக்கு எதிராக உதவுகின்றன. இவை புரஸ்டோகிளன்டின் என்ற பொருளை உற்பத்தி செய்து இரத்தம் உறைதலை குறைக்கிறது.

தேங்காய் எண்ணெயில் 88 வீதமும், பாம் எண்ணெயில் 48 வீதமும் நிரம்பிய கொழுப்பு அமிலம் இருப்பதால் அவை கொலஸ்டரோல்
அளவை அதிகரிக்கும். சோளத்தில் 60 வீதமும், சோயாவில் 58 வீதமும், சூரியகாந்தியில் 56 வீதமும், நல்லெண்ணெயில் 51 வீதமும் பிரதான கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் அவற்றை நீங்கள் ஓரளவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சூரியகாந்தி, சோயா மற்றும் சோள எண்ணெய்களில் முன்பு குறிப்பிட்டது போல நிரம்பாத கொழுப்பு அமிலங்கள் (£Poly-UnSaturated fatty acids) இருப்பதால் அவற்றை அளவோடு உட்கொள்ளும்போது இரத்தத்தில் கெட்ட கொ¨ஸ்டரோல் எனப்படும் LDL குறைவடையும். ஆனால் இவற்றையும் கூட நீங்கள் அதிகமாக உட்கொண்டால் அது உங்களின் இரத்ததில் உள்ள நல்ல கொலஸ்டரோல் ஆன HDL ன் அளவைக் குறைக்கச்செய்துவிடும். எனவே உங்களுக்குச் சிபார்சு செய்யப்பட்ட எண்ணைகளையும் கூட அதிகம் உட்கொள்ளாமல் அளவோடு சேர்ப்பது நல்லது.

அத்துடன் உங்களுக்குச் சிபார்சு செய்யபட்ட சூரியகாந்தி, சோயா மற்றும் சோள எண்ணெய்களையும் பொரிப்பபதற்குப் பாவிக்கும்போது ஒருமுறை பாவித்த எண்ணெயை மீண்டும் பொரிப்பதற்குப் பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் பாவிக்கும்போது கீட்ரோன் (Ketones), அல்டிகைட் (Aldehyde) போன்ற நச்சுப் பொருட்கள் அங்கு உட்பத்தியாகின்றன. இவை உங்களுக்கு ஆரோக்கியக் கேட்டை விளைக்கலாம். ஆயினும் தேங்காய் எண்ணெயில் இப்பிரச்சனை இல்லை என்பதையும் நாம் கவனத்தில் எடுக்கலாம். மீண்டும் மீண்டும் அதே தேங்காயெண்ணயைப் பாவித்தபோதும் அத்தகைய நச்சுப் பொருட்கள் தோன்றுவதில்லை.

3. உணவில் அவதானிக்க வேண்டிய \
ஏனைய விடயங்கள்!

அ. நார்ப் பொருட்கள்- உணவில் உள்ள நார்ப் பொருட்கள் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவைக் குறைக்கின்றன. இது இரண்டு விதத்தில் நடைபெறுகிறது.

1. பித்த அமிலங்களுடன் இணைந்து கெலஸ்டரோலை மலத்துடன் வெளியேற்றுகின்றன.

2. நார்ப்பொருள் உணவில் அதிக இடத்தைப் எடுப்பதால் உட்கொள்ளப்படும் கலரிப் பெறுமானத்தைக் குறைக்கிறது.

எனவே நார்ப்பொருள் அதிகமுள்ள உணவுகளாவன, சுத்திகரிக்கப்டாத தானியங்கள்- உதாரணம் தவிடுடன் கூடிய அரிசி, மா, ஆட்டாமா, குரக்கன், பயறு இன உணவுகள், காய்கறிவகைகள், பழவகைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
ஆ. உணவில் புரதங்கள்- தாவர உணவிலிருந்து பெறப்படும் புரதங்கள் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவைக் குறைக்கின்றன. எனவே இரத்தத்தில் அதிக கொலஸ்டரோல் உள்ளவர்களுக்கு தாவர உணவு நன்மையளிக்கக் கூடும்.
இ. உணவிலுள்ள மொத்தக் கலரிப் பெறுமானம்- மாப் பொருட்களும் இனிப்புப் பொருட்களும் உணவில் உள்ள மொத்தக் கலரிப் பெறுமானத்தை அதிகரிக்கின்றன. இவை எமது உடலின் தேவைக்கு அதிகமானால் எடை அதிகரிக்கும். இரத்தத்திலும் கொழுப்பு அதிகரிக்கும். அத்துடன் அதிகமாக இனிப்புப் பொருட்களை உண்பது இருதய நோய்களுக்கு இட்டுச் செல்லும்.

இரத்தக்கொழுப்பை குறைப்பதற்கான உணவுமுறைகள்
தவிர்க்க வேண்டிய உணவுகள்!


1. இறைச்சி வகைகள்: ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, சொ§ஐசஸ், பேகன், ஈரல், மூளை, சிறுநீரகம், நிணம், கண்ணில்
தென்படக்கூடிய இறைச்சியிலுள்ள எல்லாக் கொழுப்புகளும், நண்டு, இரால், கணவாய்,

2. எண்ணெய்களும் கொழுப்புகளும்: பட்டர், நெய், தேங்காயெண்ணய், பாம் எண்ணெய், சிறகவரை எண்ணெய், பட்டாணி எண்ணெய்,
மார்ஐரீன் (Hydrogenated Margarines),

3. இனிப்புகளும், சிற்றுணவுகளும்: பட்டர் மார்ஐரின் முட்டை மஞ்சற் கரு போன்றவை சேர்க்கப்பட்ட கேக், பிஸ்கட், புடிங், பேஸ்டிஸ்
ஆகியனவும் சொக்கிளற், ஐஸ்கிறீம்

4. முட்டை: மஞ்சற்கருவுடன் எனில் வாரத்திற்கு இரண்டிற்கு மேற்படாமல்

5. பால் மற்றும் பாற்பொருட்கள்: முழுமையான பால், பாற்பவுடர், டின்பால், கிறீம், சீஸ்,

6. பழவகைகள்: அவகாடோ பழம் கூட தவிர்க்கப்பட வேண்டியது அல்ல என அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன. Monounsaturated fat
அதிகமும் Poly unsaturated fat நடுத்தர அளவுமுள்ள அவகாடோ பழம், கஐ£ கொட்டை ஆகியவற்றை போதியளவு உட்கொள்ளுங்கள்.
இவை குருதியில் L.D.L கொலஸ்டரோல் அளவைக் குறைக்க உதவும்.

7. காய்கறிகளும் கிழங்குவகைகளும்: தவிர்க்கப்பட வேண்டியவை எதுவும் இல்லை.

8. பாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், தேங்காய்ப்பால், அதிகம் சேர்த்துச் சமைக்கப்பட்ட அரிசி உணவுகள் உதாரணமாக பொங்கல்,
பாற்சோறு, நெய்சோறு, புரியாணி,

9. பயறு வகைகள்: சிறகவரை, பட்டாணி

10. எண்ணெயில் பொரித்த, தாளித்த உணவுவகைகள்.
Poly Unsaturated தாவர எண்ணெய்களான Corn Oil, Sunflower oil, Canola Oil, and Soya Oil ஆகியவற்றைப் பொரிப்பதற்குப் பாவிப்பது
நல்லதல்ல. ஏனெனில் இவற்றில் ஏற்கனவே வசயளெ கயவவல யஉனைள உள்ளன. பொரிக்கப் பயன்படுத்தும் போது இந்த வசயளெ கயவவல யஉனைள அளவு மேலும் அதிகரிக்கிறது. Trans Fatty Acids L.D.L கொலஸ்டரோல் அளவை மேலும் அதிகரிக்கின்றன. Trans Fatty Acids என்பன கொலஸ்டரோலை விட மோசமான நச்சுப் பொருட்களாகும். அவை நீரிழிவு, புற்று நோய், இருதய நோய்கள், மற்றும் Multiple sclerosis, Diverticulosis போன்ற நோய்களோடும் தொடர்புடையன.

எனவே பொரிப்பதற்கு பாதுகாப்பான எண்ணெய் கலப்படமில்லாத தேங்காய் எண்ணெய்தான் என்று சொல்லப்படுகிறது.

ஏனெனில் தேங்காய் எண்ணெயில் பொரிக்கும்போது ஆபத்தான trans fatty acids உண்டாவதில்லை. தேங்காய் எண்ணெயில் இருப்பது
Medium chain fatty acid. Medium chain fatty acid உண்ணும் போது அவை L.D.L கொலஸ்டரோல் அளவை அதிகரிப்பதில்லை. ஏனெனில்
அவை ஈரலில் சக்தியாக உரு மாற்றம் பெறுகின்றன.

தவிர்க்கத் தேவையற்ற உணவுகள்!

1. மாமிச உணவுகள்: கோழியிறைச்சி போன்ற கொழுப்பற்ற இறைச்சிகள், மீன் வகைகள்.

2. எண்ணெய்களும் கொழுப்புகளும்: சோயா எண்ணெய், சோள எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய். ஆயினும் எந்த
எண்ணெய் ஆயினும் குறைந்தளவே சேருங்கள்.

3. இனிப்புகளும், சிற்றுணவுகளும்: சீனி, சர்க்கரை, கற்கண்டு, கருப்பட்டி, தேன், ஐ¡ம், ¦ஐலி, போன்ற எல்லா இனிப்புவகைகளையும்
அளவோடு பாவிக்கவும். அதிகம் உட்கொண்டால் எடை அதிகரிப்பதோடு அதனோடு கூடிய பிரச்சனைகள் யாவும் ஏற்படலாம்.

4. முட்டையின் வெள்ளைப் பகுதி வேண்டிய அளவு.

5. பால் மற்றும் பாற்பொருட்கள்: ஆடை நீக்கப்பட்ட பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால்மா.

6. பழவகைகள்: அவகாடோ பழம் உட்பட எவையும் தவிர்க்கப்பட வேண்டியதில்லை.

7. காய்கறிகளும் கிழங்குவகைகளும்: சகல காய்கறிவகைகள், இலை வகைகள், கீரை வகைகள், உருளைக்கிழங்கு, மரவெள்ளி, வத்தாளை
அடங்கலான சகல கிழங்குகள் உண்ணப்படக் கூடியவை. வெள்ளைப்பூடு, வெங்காயம், தேநீர் போன்றவை இதயநோய்களுக்கு நல்லவை என சில ஆய்வுகள் கூறுகின்றன.

8. தானிய வகைகள்: சோறு, பாண், குரக்கன், நு¡டில்ஸ், மக்கரோனி, மற்றும் அரிசிமா, கோதுமை மாவில் செய்யப்படும் இடியப்பம், புட்டு, ரொட்டி, தோசை, அப்பம் போன்றவை. இவற்றை தயாரிக்கும்போது மிகக் குறைந்தளவிலேயே தேங்காய்பூ, தேங்காய் எண்ணெய், ஆகியவற்றை சேர்க்கப்படலாம்.

9. பயறு வகைகள்: சிறகவரை, பட்டாணி தவிர்ந்த ஏனையவை.

10. எண்ணெயில் பொரித்த தாளித்த உணவுவகைகளைக் குறைக்கவும். அவசியமெனில் முன்பு கூறிய எண்ணெய் வகைகளை குறைந்தளவில் பாவிக்கவும்.

11. சமையலுக்கு இரண்டாம் மூன்றாம் தேங்காய்பால் உபயோகிக்கவும். அதற்கு பதிலாக சோயாப்பால் அல்லது கொழுப்பு நீக்கிய பசுப்பால்
உபயோகிப்பது நல்லது.

4. கொலஸ்டரோலைக் குறைப்பதற்கான
ஏனைய ஆலோசனைகள்!

அ. நீங்கள் புகைப்பராயின் அதை உடனடியாக நிறுத்துங்கள்.

ஆ. தினசரி ஏதாவது உடற் பயிற்சி செய்யுங்கள். நடத்தல், ஓடுதல், துள்ளல் நடை, சைக்கிள் ஓட்டம், நீச்சல் பயிற்சி, தோட்ட வேலை
போன்ற ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள்.தினசரி செய்வது நல்லது. முடியாவிட்டால் வாரத்தில் நான்கு நாட்களுக்காவது செய்யுங்கள்.

இ. எடை உங்கள் உயரத்திற்கு அதிகமானால் அதை சரியான அளவிற்கு குறையுங்கள். உங்கள் எடை எவ்வளவு மேலதிகமாக
இருக்கிறதோ அந்தளவுக்கு உங்கள் இரத்தத்திலும் கொழுப்பு அதிகரிக்கும்.

ஈ. மதுபானத்தைத் தவிருங்கள்

உ. தேவைப்பட்டால் வைத்திய ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்ளுங்கள்.

கொலஸ்டரோலைக் குறைக்கும் மருந்துகள்!

கொலஸ்டரோலைக் குறைப்பதில் மருந்துகளுக்கும் நிச்சயம் ஒரு இடம் இருக்கவே செய்கிறது.

பலவகை மருந்துகள் இருக்கின்றன. அவற்றிக்கான தேவைகளும் பயன்பாடுகளும் மாறுபடும். இவற்றை மிக நீண்ட காலம் உபயோகிக்க வேண்டியிருக்கும். ஆயினும் இப்பொழுது பரவலாகப் பயன்படுத்தப்படுபவை இரண்டு முக்கிய வகை மருந்துகளாகும்.

ஓன்று ¦ஐம்பிவ்ரிஸோல் (Gemfibrisol) என்ற மருந்தாகும்.

மற்றது ஸ்டரின் (Statin) வகை சார்ந்த மருந்துகளாகும்.

¦ஐம்பிவ்ரிஸோல் (Gemfibrisol)

என்ற மருந்து முக்கியமாக ரைகிளிசரைட் மட்டும் அதிகரித்தவர்களுக்கு பயன்படுகிறது.

இம் மருந்துகளுக்கு பக்க விளைவுகள் இல்லையா? அவற்றை நீண்ட காலம் உபயோகிப்பது ஆபத்தல்லையா என நீங்கள் கேட்கக் கூடும். சில பக்கவிளைவுகள் எதிலுமே இருக்கவே செய்யும். இம் மருந்திலும் சில பக்கவிளைவுகள் இருக்கவே செய்கின்றன.

பசியின்மை, வயிற்றுப் பொருமல், வயிற்றேட்டம், வயிற்று வலி போன்ற சாதாரண பக்கவிளைவுகள் சிலரில் ஏற்படலாம். மலச்சிக்கலும் ஏற்படலாம். வேறு சிலரில் தோலில் தடிப்பு, அரிப்பு போன்ற அலர்ஐ¢ அறிகுறிகள் ஏற்படலாம்.

இன்னும் சிலரில் தலையிடி, தலைப்பாரம், தலைச்சுற்று, பார்வை மந்தம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

இவை எதுவுமே நிரந்திரப் பாதிப்புகள் அல்ல. சில நாட்கள் செல்லத் தானாகவே மறைந்துவிடும். அல்லாவிடினும் மருந்தை நிறுத்த மறைந்துவிடும்.

மிக அரிதாக ஈரலில் பாதிப்பு ஏற்படலாம். இப்பாதிப்பு ஏற்படுகிறதா என ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ள இரத்தப் பரசோதனை
செய்வார்கள். SGPT என்ற பரிசோதனையை செய்து பார்ப்பார்கள். குறிப்பிடத்தக்க பாதிப்பு இருந்தால் மருந்தை நிறுத்தக்கூடும்.
இலலையேல் அவதானத்துடன் மருந்தைத் தொடரக் கூடும்.

தசைநார்களில் வலி (Myalgia) மிக அரிதாக ஏற்படும் இன்னும் ஒரு பாதிப்பாகும். ஆயினும் எமது நாட்டைப் பொறுத்தவரையில் இன்னும் அரிதானதாகும்.

ஸ்டரின் Statin

ஸ்டரின் என்ற வகை மருந்துகளே இன்று அதிகமாகப் பாவிக்கப்படுகிறன. இதில் பல வேறு மருந்துகள் இருக்கின்றன. அவையாவன.

லோவஸ்டரின்
சிம்வாஸ்டரின்
அஸ்ட்ரோவஸ்டரின்
பரவஸ்டரின்

இம்மருந்துகள் குருதியில் உள்ள கொலஸ்டரோலை நன்கு குறைக்கின்றன. இவை ஒரே இனவகையான மருந்துகளான போதும் அவற்றின் செயற்பாட்டில் சில வித்தியாசங்கள் உள்ளன. ஓவ்வொருவரின் தனிப்பட்ட தேவைகளையும் கருத்தில் கொண்டு மிகப் பொருத்தமான மருந்தை வைத்தியர் உங்களுக்குச் சிபார்சு செய்வார். இவ்வகை மருந்துகளிலும் சில பக்கவிளைவுகள் இருக்கவே செய்கின்றன. பசியின்மை, வயிற்றுப் பொருமல், வயிற்றேட்டம், வயிற்று வலி போன்ற சாதாரண பக்கவிளைவுகள் சிலரில் ஏற்படலாம்.

இன்னும் சிலரில் தலையிடி, தலைப்பாரம், தலைச்சுற்று, பார்வை மந்தம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மிகச் சிலரில் ஈரலில் பாதிப்பு ஏற்படலாம். முன்பு குறிப்பிட்டதுபோல SGPT என்ற பரிசோதனையை செய்து பார்ப்பார்கள். மருந்தை ஆரம்பித்த இரண்டு மாத இறுதியில் முதல் தடைவ செய்து பார்ப்பார்கள். பாதிப்பு இல்லாவிடின் மருந்தைத் தொடர்வார்கள்.

ஜயா பெரியவரே தூக்கம் வரவில்லையா?

ஜயா பெரியவரே தூக்கம் வரவில்லையா?உடல் தளர்ந்து, கண்களும் சோர்ந்திருந்த அவரது முக்கிய பிரச்சனை 'நித்திரை வருகுதில்லை' என்பதுதான்.உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்த்மா போன்ற நோய்களும் அவருக்குத் தொல்லை கொடுக்கின்றன. "பகல் முழுதும் கதிரையில் இருந்து தூங்குவார். இரவும் எட்டு மணிக்கே படுத்திடுவார். ஆனால் எப்பவும் நித்திரை இல்லை எண்டுதான் சொல்லூர்" என்று அலட்சியமாகக் கூறினாள் கூட்டிக் கொண்டு வந்த மகள்.

இது அவருடைய பிரச்சனை மட்டுமல்ல. பெரும்பாலான வயதானவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனைதான். பகலெல்லாம் தூங்கி விழுவது, நேர காலத்துடன் இரவு 7-8 மணிக்கே படுத்துத் தூங்குவதும், அதிகாலை 3-4 மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்து எழுந்து சிரமப்படுவதும் பல வயதானவர்ளைப் பாதிக்கும் பிரச்சனை தான். இதற்குக் காரணம் வயதாகும் போது எமது உடலியக்கத்தின் ஒழுங்கு லயத்தில் ஏற்படும் குழப்பங்களே ஆகும். இதனை முன்நகர்ந்த நித்திரை (Advanced Sleep Phace) என்பார்கள். அதாவது தூக்க நேரம் முன்னகர்கிறது. உண்மையில் இது தூக்கக் குழப்பமே அன்றித் தூக்கக் குறைபாடு அல்ல. அத்தோடு தூக்கக் குறைபாடும் இருக்கக் கூடும்
என்பதை மறுப்பதற்கில்லை.

பொதுவாக மனிதர்களுக்கு 6 முதல் 7 மணிநேர நித்திரை தினசரி தேவை.அவ்வாறு தூங்கினால்தான் உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்.
தூக்கம் குறைந்தால் அல்லது குழப்பமான தூக்கமாக இருந்தால் உடல் சோர்வடையும், மனத்தை ஒருமுகப்படுத்த முடியாது. சிந்தனைத் திறனும் குறையும்.

மேற் கூறிய முன்நகர்ந்த நித்திரையைத் தவிர வேறு பல காரணங்களாலும் வயதானவர்களின் தூக்கம் குறையலாம். மூட்டு வாதம், பார்க்கின்சன் நோய், ஆஸ்த்மா, இருதய நோய்கள், உணவுக் கால்வாய் நோய்கள், பக்கவாதம், மனச் சோர்வு போன்ற பல்வேறு மூப்புக் கால நோய்களும் அவர்களது தூக்கததைக் குறைக்கும்.

வயதாகும் போது பல்வேறு நோய்கள் உடலைத் தாக்கக் கூடும் அல்லவா? ஆஸ்தமா, பிரஜர், தைரொயிட் சுரப்பி நோய்கள், மனச்
சஞசலம் போன்ற பல்வேறு நோய்களுக்கு தினசரி உபயோகிக்கும் மருந்துகளும் தூக்கக் குழப்பத்திற்குக் காரணமாகிறது.
எனவே தூக்கக் குழப்பம் உங்களைத் துன்பப்படுத்துகிறதாயின் உங்கள் வைத்தியருடன் வெளிப்படையாகக் கதையுங்கள். அவரது
ஆலோசனைகள் உங்கள் பிரச்சனைக்கான காரணத்தைக் கண்டு பிடிக்கவும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் உதவும். வேறு நோய்களுக்கு எடுக்கும் மருந்துகள்தான் காரணம் என அவர் கருதினால் அம் மருந்துகள் உட்கொள்ளும் நேரத்தை மாற்றக் கூடும் அல்லது மருந்தையே மாற்றவும் கூடும்.

உங்கள் தூக்கக் குழப்பத்தை தீர்க்க நீங்களும் சில முயற்சிகள் செய்யலாம். உங்களுக்கு உற்சாகத்தை ஊட்டும், உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் அல்லது பரபரப்பை ஏற்படுத்தும் எந்தச் செய்கையிலும் படுக்கைக்குப் போவதற்கு முன்னரான ஒரு மணி நேரத்திற்குள் ஈடுபட வேண்டாம். உதாரணமாக விறுவிறுப்பான தொடர் நாடகங்களை ரீவியில் பார்ப்பது, ஆர்வமூட்டும் நூல்களைப் படிப்பது, சுவார்ஸமான விவாதங்களில் ஈடுபடுவது, உணர்ச்சி மயப்படுவது போன்ற செய்கைகளை படுக்கைக்குச் செல்லும் தருணங்களில் நீங்கள் தவிர்க்க வேண்டும்.

கடுமையான வெளிச்சமும், இரைச்சலான சூழலும் உங்களைத் தூங்கவிடாது. எனவே ஆரவரமற்ற, ஒளி குறைந்த சூழலில் படுக்கைக்குப் போவதற்கு முந்திய சில நிமிடங்களைக் கழியுங்கள். படுக்குமிடமும் அத்தகையதாக இருக்க வேண்டும் என்பது சொல்லாமலே தெரியும்தானே.

நரம்புகளைத் தூண்டும் பானங்களான கோப்பி, மது, கோக் போன்றவற்றை மதியத்திற்குப் பின் அருந்த வேண்டாம். மதியத்திற்குப் பின் அதிக நீராகாரம் அருந்த வேண்டாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ நேர்ந்தால் தூக்கம் குழம்பும் அல்லவா?

தூங்கப் போவதற்கான நேரத்தை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள். உதாரணமாக இரவு 10 மணிக்குப் படுத்து காலை 5 மணிக்கு எழுவது போன்ற உங்களுக்கு உகந்த ஏதாவது ஒரு ஒழுங்கான நேர அட்டவணையை தினசரி தவறாமல் கடைப்பிடியுங்கள். மதிய உணவிற்குப் பின் தினசரி தூங்குபவராயின் அதனை 15 முதல் 30 நிமிடங்களாக மட்டுப்படுத்துங்கள். மாலை நேரத்தில் சற்று உலாவச் செல்லுங்கள். தினசரி கை கால்களைச சற்று நீட்டி மடக்கி சிறிது உடற் பயிற்சி செய்யுங்கள். இவற்கைக் கடைப்பிடித்துப் பாருங்கள் எங்கள் தூக்கத் தொல்லை தீரும்.

visit my blogs!
http://hainallama@blogspot.com

http://www.geotamil.com/pathivukal/health.html
http://suvaithacinema.blogspot.com/
kathirmuruga@hotmail.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner