|
பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
|
மணமக்கள்! |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
|
வரலாறு! |
ஆற்றல் மிகுந்த தப்பித்தல்
- குரு அரவிந்தன் -
 இன்றைய
தலைமுறையினருக்கு இரண்டாவது உலகயுத்தம் பற்றி அதிகம்
தெரிந்திருக்க முடியாது. இரண்டாவது உலகயுத்தம் நடந்தபோது
ஜரோப்பாவில் ஜெர்மனியும், ஆசியாவில் ஜப்பானும் மிகப்பெரிய
சக்திகளாக இருந்தன. தங்கள் நிலப்பரப்பைப் பெருக்குவதில் அவை
மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், இவ்விரண்டு நாடுகளுக்கும்
எதிராகத் தமது மண்ணைக் காப்பாற்றிக் கொள்ள நேசநாடுகள்
போரிடவேண்டிய நிலை உருவானது. நேசநாடுகளின் படைகள் ஜெர்மனியின்
முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அப்பகுதிகளை நோக்கி முன்னேறின.
அப்படி முன்னேறியபோது பல நேசநாட்டு இராணுவவீரர்கள் ஜெர்மனிய
இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர்.
சிறைவைக்கப்பட்டிருந்த நேசநாட்டுக் கைதிகள் சிலர் சாதுர்யமாகத்
திட்டமிட்டு ஜெர்மனியச் சிறையில் இருந்து தப்பியோடினர். அப்படித்
தப்பியோட முயன்றவர்களில் ஒருவரின் கதைதான் இது!
அவரது பெயர் ஜாக் கரிசன் (Jack Harrison). இவர் இம்மாதம்
ஸ்கொட்லதந்தில் உள்ள ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கான விடுதி
ஒன்றில் இயற்கை மரணமெய்தினார். அவர் இறக்கும்போது அவருக்கு வயது
97. தாய்மண்ணுக்காகத் தியாகங்கள் செய்யத்துணிந்த சிறந்த ஒரு
இராணுவ வீரராக அவர் கடைசிவரை மதிக்கப்பட்டார். றோயல் விமானப்படை
விமானியாக இருந்த இவர் நெதர்லாந்தில் உள்ள டென்ஹெல்டர் (Den
Helder ) என்ற துறைமுகத்தில் தரித்து நின்ற ஜெர்மனிய கப்பலைத்
தாக்குவதற்காக 1944ம் ஆண்டு நவம்பர்மாதம் சென்றபோது, இவரது
விமானம் ஜெர்மனியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டுக் கைதியாகப்
பிடிக்கப்பட்டார். கிழக்கு ஜெர்மனியில் உள்ள சகன் (Jack
Harrison) என்ற இடத்தில் இருந்த மூன்றாவது சிறைமுகாமில் (Stalag
Luft prison camp III ) இவர் கைதியாக வைக்கப்பட்டார்.
ஜெர்மனியர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட நேசநாட்டுக் கைதிகளில்
சிலர் அந்தச் சிறையில் இருந்து தப்பிச் செல்வதற்குத்
தீர்மானித்தனர். அப்படித் தப்பிச் செல்லத் துணிந்தவர்களில்
இருந்து 200 கைதிகள் மட்டுமே சிறையில் இருந்து தப்பிச்
செல்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டனர். ஜெர்மனியர்களிடம்
அகப்பட்டால் இராணுவ நீதிமன்றத்தில் மரணதண்டனை கிடைக்கும் என்ற
பயத்தில் சிலர் தப்பிச் செல்வதற்கோ, அல்லது அதற்கான
ஒத்துழைப்புத் தருவதற்கோ மறுத்து விட்டனர். தப்பிச் செல்வதற்காக
மூன்று சுரங்கப்பாதைகளை ஏனைய சிறைக்கைதிகள் ஒன்று சேர்ந்து
இரகசியமாக அமைத்தனர். 1944ம் ஆண்டு மார்ச்மாதம் 24ம் திகதி
அவர்கள் திட்டமிட்படியே சிறையில் இருந்து தப்பிச் சென்றனர்.
காவலாளிகள் அவர்கள் தப்பிச் செல்லும்போது கண்டுவிட்டபடியால்,
இரண்டு சுரங்கப்பாதைகளை ஜெர்மனிய இராணுவ வீரர்கள் கண்டு பிடித்து
அடைத்து விட்டனர். எஞ்சியிருந்த மூன்றாவது சுரங்கப்பாதையால் 76
கைதிகள் மட்டுமே தப்பிச் செல்ல முடிந்தது. அப்படித்
தப்பியவர்களில் 50 மேற்பட்ட கைதிகள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு
ஜெர்மனிய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் ஆறு கனடியர்களும் அடங்குவர். 23கைதிகள்
மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டனர். மொத்தத்தில் மூன்று கைதிகளால்
மட்டுமே, இரண்டு நோர்வே வீரர்களும், ஒரு நெதர்லாந்து வீரரும்
தங்கள் நாட்டிற்குத் தப்பிச் செல்ல முடிந்தது. ஜாக்கரிசனின்
பெயர் பட்டியலில் 98வதாக இருந்ததால் அவரால் தப்பிக்க
முடியவில்லை. சிறை முகாமின் தோட்டத்திற்கு கைதிகளில் ஜாக்கரிசனே
பொறுப்பாக இருந்தார். சுரங்கம் தோண்டியபோது வெட்டி எடுத்த மண்ணை
தினமும் வெளியே கொண்டுவந்து தோட்டத்து மண்ணோடு கலப்பதற்கு
ஜாக்கரிசன் மிகவும் உதவியாக இருந்தார்.
சென்ற வருடம் ஒரு நேர்காணலின்போது ‘தப்பிப்போவது ஒன்றும்
எங்களுக்கு முக்கிய காரியமாக இருக்கவில்லை. ஹிட்லரையும்,
ஜெர்மனிய இராணுவத்தையும் தந்திரத்தால் வெல்ல முடியம் என்பதைக்
காட்டவே அப்படிச் செய்திருந்தோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தப்பிப்போவதற்குத் தயாராக இருந்த அவர் ஏனைய கைதிகள் அகப்பட்டுக்
கொண்டதை அறிந்ததும் தனது தப்பிப்போகும் திட்டத்தைக்
கைவிட்டுவிட்டார். உடனடியாகவே மீண்டும் சிறைக் கைதியின் ஆடைகளை
அணிந்து கொண்டு தனக்கு எதுவுமே தெரியாது என்பதுபோல நடந்து
கொண்டதாகத் தெரிவித்தார்.
மேற்கு நேசநாடுகளின் தாக்குதல் ஒருபக்கமும், ரஸ்யாவின் தாக்குதல்
மறுபக்கமும் ஜெர்மனியை நிலைகுலைய வைத்தது. கடும்பனி கொட்டும்
காலத்தில் ரஸ்ஸிய மண்ணில் நின்ற ஜெர்மனிய போர்வீரர்கள் குளிர்
தாங்கமுடியாமல் பின்வாங்கித் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.
அதேபோல யப்பான்மீது அமெரிக்காவால் போடப்பட்ட அணுக்குண்டும்
யப்பானைத் தோல்வியடைய வைத்தன. தோல்வியடைந்த நாடுகளான
ஜெர்மனியும், யப்பானும் இனிமேல் இராணுவ ஆயதங்கள் உற்பத்தி
செய்யக்கூடாது என்று வெற்றியடைந்த நேசநாடுகளால்
தடைவிதிக்கப்பட்டன. இந்த இரண்டு நாடுகளும் ஆயுத உற்பத்தியில்
ஈடுபடாமல், ஏனைய தொழில் நுட்பத்துறைகளில் கவனம் செலுத்திக்
கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
போர் முடிவடைந்ததும், விடுதலை செய்யப்பட்ட ஜாக்கரிசன் தனது
ஆசிரியர் தெழிலிலேயே மீண்டும் ஈடுபட்டார். 1975ம் ஆண்டு ஆசிரியர்
தொழிலில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். பிறருக்கு உதவ
வேண்டும் என்ற நல்ல மனம் கொண்ட இவர், நன்கொடை சேகரிப்பதற்காக
தனது எழுபதாவது வயதிலும் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கு பற்றிப்
பணம் சேகரித்துக் கொடுத்திருந்;;தார்.
நேசநாட்டுக் கைதிகள் தப்பியோடிய நிகழ்வை வைத்து கிறேட் எஸ்கேப்
(The Great Escape ) என்ற பெயரில் ஆங்கிலத் திரைப்படம் ஒன்று
எடுத்திருந்தார்கள். 1963ம் ஆண்டு யூலை மாதம் வெளிவந்த
இந்தப்படத்தை அனேகமான வாசகர்கள் பார்த்திருப்பார்கள் என்றே
நினைக்கின்றேன். நீண்ட காலத்தின் பின் காங்கேசன்துறையில் இருந்த
இராஜநாயகித் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்து நான்
வியந்திருக்கிறேன். சிறைக் கைதிகள் ஜெர்மனியச் சிறையில் எப்படி
வைக்கப்பட்டிருந்தார்கள், அவர்கள் பட்ட கஷ்டங்கள் எப்படிப்பட்டவை
போன்ற தகவல்களை இந்தத் திரைப்படம் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு
எடுத்துக் காட்டியிருந்தனர். அதியுயர் பாதுகாப்புச் சிறையில்
இருந்து அவர்கள் எப்படித் தப்பிச் சென்றார்கள் என்பதே படத்தின்
மூலக்கதையாக இருந்தது. இதில் ஸ்ரீவ் மக்குயின், ஜேம்ஸ் காணர்,
றிச்சாட்அற்ரன்பறோ போன்றவர்கள் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து
மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். போல்பிறிக்கிலின் நாவலை,
ஜோன்சேர்கஸ் நெறியாள்கை செய்திருந்தார்.
kuruaravinthan@hotmail.com
|
|
|
|
|
|
©>©
காப்புரிமை 2000-2010 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|