இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2008 இதழ் 108 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சினிமா!

மீள்பிரசுரம்: தினத்தந்தி!
நடிகர் எம்.என்.நம்பியார் மறைவு!

சென்னை, நவ.20- பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89. ரஜினிகாந்த் - கமலஹாசன் உள்பட நடிகர், நடிகைகள் நம்பியார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழ் திரைப்பட உலகில் வில்லன் வேடங்களில் கொடி கட்டி பறந்து, ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர், எம்.என்.நம்பியார்.

தனிமுத்திரை

இரண்டு கண்களையும் உருட்டிக்கொண்டு, கைகளை பிசைந்தபடி அவர் நடிக்கும்போது, சூழ்ச்சி, சதி, கோபம், ஆவேசம், மிரட்டல் என வில்லனுக்குரிய அத்தனை அம்சங்களையும் தனது முகத்தில் கொண்டு வந்து, ரசிகர்களை பயத்தில் மூழ்க வைப்பதில் நம்பியார் தனி முத்திரை பதித்தவர்.மறைந்த மாபெரும் கலைஞர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்."எங்க வீட்டு பிள்ளை'', "ஆயிரத்தில் ஒருவன்'', "படகோட்டி'', "திரிசூலம்'', "தில்லானா மோகனாம்பாள்'' போன்ற படங்களில் அவருடைய `வில்லன்' நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

1000 படங்கள்
திரையுலகில் புகை பழக்கம், மது பழக்கம் போன்றவை இல்லாத ஒரு சில நடிகர்களில் எம்.என்.நம்பியாரும் ஒருவர். 70 வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

உடல்நலம் பாதிப்பு
முதுமை காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வந்தார். இருதயம், சிறுநீரகம் போன்றவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல உடல்நிலையுடன் அவர் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். 89 வயதாகிவிட்ட முதுமை காரணமாக சமீபகாலமாக அவர் தனது ஞாபக சக்தியை இழந்தார்.

மரணம்
நேற்று பகல் 12 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் நம்பியார் மதிய உணவு சாப்பிட்டார். 12.30 மணியளவில் அவர் தூங்க ஆரம்பித்தார். பகல் 1 மணிக்கு அவர் திடீரென மரணம் அடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. நம்பியாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது.

நடிகர்-நடிகைகள் அஞ்சலி
நம்பியார் மரணம் அடைந்த தகவல், சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. தகவல் அறிந்ததும், நடிகர் ரஜினிகாந்த் விரைந்து வந்து நம்பியார் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "இந்த புண்ணிய ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்'' என்றார். ரஜினிகாந்தை தொடர்ந்து, நடிகர்கள் கமலஹாசன், பிரபுதேவா, ஸ்ரீகாந்த், ராதாரவி, செந்தில், எஸ்.வி.சேகர், கரண், ராஜேஷ், நடிகைகள் கே.ஆர்.விஜயா, மனோரமா, விஜயகுமாரி, டைரக்டர்கள் முக்தா சீனிவாசன், சி.வி.ராஜேந்திரன், பி.வாசு, படஅதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, எஸ்.ராமநாதன், கே.டி.குஞ்சுமோன், ராம்குமார், ஒளிப்பதிவாளர் டி.என்.சுந்தரம், டான்ஸ்மாஸ்டர் சுந்தரம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து நம்பியார் உடலுக்கு மாலை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், போலீஸ் டி.ஜி.பி.(பயிற்சி) விஜயகுமார் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

இன்று இறுதி சடங்கு
நம்பியாரின் இறுதி சடங்கு இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

குடும்பம்
நம்பியாருக்கு ருக்குமணி என்ற மனைவியும், சுகுமாரன், மோகன் என்ற 2 மகன்களும், சினேகலதா என்ற மகளும் இருக்கிறார்கள். நம்பியாரின் உயிர் பிரியும்போது, அவருடைய மனைவி ருக்குமணி அருகில் இருந்தார். மூத்த மகன் சுகுமாரன் நேற்று முன்தினம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டார். இளைய மகன் மோகன் கோவை சென்றிருந்தார். மகள் சினேகலதா அவருடைய மகனை பார்ப்பதற்காக அமெரிக்கா போய் இருந்தார். இவர்கள் 3 பேருக்கும் நம்பியார் மரணம் அடைந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் சென்னைக்கு புறப்பட்டார்கள்.

ஜெயலலிதா இரங்கல்
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- "பழம்பெரும் திரைப்பட நடிகரும், நாடக நடிகரும், தீவிர ஐயப்ப பக்தருமான எம்.என்.நம்பியார் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். ஏராளமான திரைப்படங்களில் நான் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். எல்லோரிடமும் மிகுந்த கலகலப்புடனும், நகைச்சுவை பாங்குடனும் பேசக்கூடியவர். நம்பியாருடன் படிப்பிடிப்பு என்றாலே வேலைப்பளுவும் தெரியாது. பொழுது போவதும் தெரியாது. நம்பியார் என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பு வைத்திருந்தார். நம்பியாரின் இழப்பு திரைப்படத்துறையினருக்கு மட்டுமல்லாமல் ஆன்மீக வாதிகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்.'' இவ்வாறு ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

பாரதீய ஜனதா தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

www.dailythanthi.com/.../20/2008


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner