இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2010  இதழ் 131  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
தமிழ் ஸ்டுடியோ.காமின் மற்றொரு புதிய முயற்சி: படிமை!  - ஆதவன் -
தமிழ் ஸ்டுடியோ.காமின் மற்றொரு புதிய முயற்சியாக புதிய கலைஞர்களை கண்டுப்பிடிக்கும் முயற்சியாக (மாற்று திரைப்படங்களை உருவாக்கும் முயற்சிக்கு முன்னோடியாக) பத்து ஆர்வலர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திரைப்படம் சார்ந்த பயிற்சியளித்து ஒரு புதிய தலைமுறை கலைஞர்களை உருவாக்க தமிழ் ஸ்டுடியோ.காம் முனைந்துள்ளது. இதன் படி திரைப்படம் மட்டுமின்றி இலக்கியம் சார்ந்தும், ஒவ்வொரு பகுதி சார்ந்தும் அந்தந்தப் பகுதி சார்ந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை புரிந்துக் கொள்ளவும் இந்த பயிற்சி உதவும். இதெல்லாம் பயிற்சிக் கொடுத்து எப்படி புரிய வைக்க முடியும் என்கிற வாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், தீவிர பயிற்சியின் மூலம் எதுவம் சாத்தியப்படலாம் என்கிற உண்மையும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்தப் பயிற்சி எல்லாப் பயிற்சிகளும் போன்று தன்னுடைய இயல்புத் தன்மையுடன் இருக்காது. முற்றிலும் மாறுபட்ட, ஒருவிதத் தேடலுடன் இருக்கும் என்பது திண்ணம். பயிற்சிக்கு ஏதும் கால அளவுக் கிடையாது. இவர் ஒரு நல்லக் கலைஞராக வெளிவருவார் என்று தமிழ் ஸ்டுடியோ.காம் கருதும் வரை அவர்களுக்கான பயிற்சி தொடரும். திரைப்படத்தை வெறித்தனமாக நேசிக்கும் எவரும் இந்தப் பயிற்சியில் கலந்துக் கொள்ளலாம்.

அதற்கான நிபந்தனைகள்:
1. திரைப்படத்தின் மீது தீராக் காதலும், எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வமும்,
2. அதிகமாக இலக்கியங்களை தேடித் பிடித்து படிக்கும் வழக்கமும்,
3. தொய்வில்லாமல் ஊர் சுற்றும் பழக்கமும் மட்டுமே இதற்கான தகுதிகள்.

இந்தப் பயிற்சிக்காக கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் எல்லா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் பயிற்சியில் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும். பயிற்சி எல்லா சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை நடக்கும்.

பயிற்சி பற்றி சில வரிகள்:
இதில் நடிப்பு, திரைக்கதை அமைப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை கோர்ப்பு, படத்தொகுப்பு, இயக்கம் என எல்லாத் துறை சார்ந்தும் பயிற்சி அளிக்கப்படும். ஆனால் இதற்கு முன்னர் ஆர்வலர்களை தயார் படுத்துவதற்காக இந்தியா முழுவதும் சுற்றிப் பார்க்கவும், மிக அதிகமாக ஆர்வலர்கள் விவாதத்தோடு படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாக இருக்கும். தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், அவர்களின் வட்டார மொழி நடை போன்றவற்றை ஆய்வு செய்வதும் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இதுப் போன்ற தொடர் பயிற்சிகளின் மூலம் ஒருவர் தன்னுடைய உருவாக்கத் (Creative) திறனை வளர்த்துக் கொள்ளலாம். மாதம் ஒரு முறை நிச்சயமாக ஒரு ஊருக்கு ஆர்வலர்கள் ஒன்று கூடியோ, தனித் தனியோ பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

இது தமிழ் ஸ்டுடியோவின் கனவுத் திட்டம். ஆர்வமும், துடிப்பும் மேற்சொன்ன தகுதிகளும் உள்ள எவரும் இதில் கலந்துக் கொள்ளலாம். வெறும் கல்லாய் வாருங்கள்..உங்களை அழகிய உயிரோட்டமுள்ள சிலையாய் வடிக்க தமிழ் ஸ்டுடியோ.காம் காத்திருக்கிறது.

இதற்கான கலந்தாய்வுக் கூடம் எதிர்வரும் சனிக்கிழமை (16-10-2010) காலை பத்து மணியளவில் தமிழ் ஸ்டுடியோ.காம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆர்வலர்கள் முன்பதிவு செய்துவிட்டுக் கலந்துக் கொள்ளலாம்.

முகவரி:
No. 41, Circular Road, United India Colony, Kodambaakkam, Chennai 600026
Opposite to Liberty theater, neary by kodambakkam Park.


மேலும் விபரங்களுக்கு:
9840698236, 9894422268

http://thamizhstudio.com/shortfilm_sf_guide_padimai.php

அன்புடன்
அருண் & குணா

தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

thamizhstudio@gmail.com

 
aibanner

 ©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்