இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சினிமா / அரசியல்!
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்!
வருத்தம் தெரிவித்த விகடன்!
கூண்டுக் கிளி திரைப்ப்டத்தில் நடிகர் திலகமும் , மக்கள் திலகமும்...[ அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பதிவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரைப் பற்றி நகைச்சுவையென்ற பெயரில் ஒரு கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஒரு நடிகர் மட்டுமல்லர். இலட்சக்கணக்கான மக்களின் மனங்கவர்ந்த ஓர் அரசியல் தலைவர் கூட. அதன் காரணமாகத்தான் மக்கள் அவரை அவரது குறை நிறைகளுடன் தங்களது வீட்டுப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கையின் கடினமான பக்கங்களை, வறுமையின் துயரங்களை அவரைப் போல் ஜெயமோகன் அனுபவித்திருப்பாராயென்பது சந்தேகமே. எமஜிஆரின் திரைப்படங்களைப் பற்றி, அவரது நடிப்பைப் பற்றியெல்லாம் சுந்ததிரமாக விமரிசிப்பதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் அதே சுதந்திரத்தின் அடிப்படையில் அவரது உடல் ஊனமொன்றினை வைத்து நையாண்டி செய்வது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. குண்டடி பட்டு, குண்டுச் சிதறல்கள் தொண்டைப் புறத்தில் தங்கிவிடப்பட்ட நிலையில், எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் முயற்சியெடுத்து பேச்சுப் பயிற்சியெடுத்து, மீண்டும் திரையுலகில் மக்கள் ஆதரவுடன் கொடிகட்டிப் பறந்தவர் எம்ஜிஆர். வாழ்வின் பலவேறு கோணங்களையெல்லாம் கண்டு தனது படைப்புகளில் சித்திரிக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் இவ்வளவு சின்னத்தனமாக அந்தக் குறைபாட்டினைக் கேலி செய்திருப்பதை ஒருபோது ஏற்க முடியாது. அது போல் நடிகர் திலகத்தின் இறுதிக் காலத்துப் படைப்புகளை வைத்து நையாண்டி செய்திருக்கும் ஜெயமோகன் அவரது 'பாகப் பிரிவினை', 'பாசமலர்'... போன்ற பழைய திரைப்படங்களில் வரும் சிவாஜியின் தோற்றத்தினையும், நடிப்பினையும் கவனத்திலெடுத்திருக்க வேண்டும். தமிழ்த்திரையுலகில் ஒரு காலத்தில் பாடல்கள் கொடி கட்டிப் பறந்தன. பின்னர் வசனங்களின் ஆட்சியிருந்தது.  அத்தகையதொரு காலகட்டத்தில், வசனங்களின் ஆட்சியின்போது, கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் திலகம். இன்றைய காலகட்டத்தில் அவர் இருந்திருந்தால் இன்றும் இக்காலகட்டத்துககுரிய வகையில் தனது நடிப்பாற்றலால் சிறந்து விளங்கியிருப்பார். ஜெயமோகனின் அவ்வலைப்பதிவு தேவையற்றதொன்று என்பது எமது தனிப்பட்ட கருத்து. அது பற்றித் தமிழகத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்து அதனை மீள்பிரசுரம் செய்த விகடன் தனது மன்னிப்பைக் கேட்டுள்ளதாக வெளிவந்த செய்தியிது. ] எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்காக தமிழ்த் திரையுலகத்திடம் ஆனந்த விகடன் வருத்தமும், மன்னிப்பும் கேட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில், ஜெயமோகன் தனது இணையதள பிளாக்கில் எழுதிய ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. எம்.ஜி.ஆர், சிவாஜியை ஜெயமோகன் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். அதை ஆனந்த விகடன் வெளியிட்டது மிகவும் தவறான செயல் என தமிழ் திரையுலகம் கோபத்துடன் கண்டித்தது. இதுதொடர்பாக நடிகர் சங்கம், கண்டனக் கூட்டத்திற்கு கடந்த 9ம் தேதி ஏற்பாடு செய்தது. அதில் திரையுலகின் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். நடிகர், நடிகையர் விகடனையும், ஜெயமோகனையும் காராசரமாக விமர்சித்தனர்.

விகடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், அதுவரை விகடன் நிறுவனத்தின் சினிமா தொடர்பான எதற்கும் ஒத்துழைப்பு தர மாட்டோம் என அக்கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. ஜெயமோகனுக்கும் இதேபோன்ற எச்சரிக்கை விடப்பட்டது. நடிகர் சங்கத்தின் இந்த முடிவுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில், பெப்சி தொழிலாளர் சம்மேளனம் ஆகியவையும் ஆதரவு தெரிவித்தன. இதனால் விகடன் நிறுவனத்தின் விகடன் டாக்கீஸ் தயாரிக்கும் முதல் படமான சிவா மனசுல சக்தி படத்தின் ஷூட்டிங்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பெப்சியின் தடையால் தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புக்கு வரவில்லை. இதேபோல ஜெயமோகன் தற்போது தொடர்புடைய நான் கடவுள், அங்காடி தெரு ஆகிய இரு படங்களின் ஷூட்டிங்கும் கூட பாதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஆனந்த விகடனின் லேட்டஸ்ட் இதழில் ஜெயமோகன் கட்டுரையை பிரசுரித்ததற்காக வருத்தமும், மன்னிப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் மற்றும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் ரசிகர்களின் மனங்களைப் புண்படுத்தியதற்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் அதில் விகடன் கூறியுள்ளது. இருப்பினும் ஜெயமோகன் இதுவரை தனது எழுத்துக்காக மன்னிப்பு கேட்கவில்லை.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்! http://thatstamil.oneindia.in/movies/specials/2008/03/14-vikatan-conveys-its-regrets-and-apology.html

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner