இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரில் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நலந்தானா? நலந்தானா?
முரண்டு பிடிக்கும் எயிட்ஸ் வைரஸ்!

- 'டாகடர்' எம்.கே.முருகானந்தன்
-

முரண்டு பிடிக்கும் எயிட்ஸ் வைரஸ்தடுப்பூசி இருந்தால் எவ்வளவு நல்லது. பயப்பட வேண்டியது இல்லைதானே! பலரின் அங்கலாய்ப்பு இது. முக்கியமாக அங்கும், இங்கும் எங்குமாக பாலுறவுக்கு ஆள் தேடுபவர்களின் நப்பாசைக் குரல் தான் இது. எந்த நோயைப் பற்றிக் கேட்கிறார்கள் என்கிறீர்களா? எயிட்ஸ் நோய்க்குத்தான்! ஆம் மக்களை மிகவும் பீதி கொள்ள வைக்கும் நோயாக எயிட்ஸ் இருக்கிறது.  ஏன்? விரைவாகத் தொற்றுவதால் கொள்ளை நோய் எனவும், குணப்படுத்த முடியாதது என்பதால் மிக ஆபத்தான நோய் எனவும் பலரையும்
கலங்க வைக்கிறது. பாலியல் தொடர்புகளில் கட்டுப்பாடாக இருப்பவர்கள் தப்பிவிடுவார்கள். சபல புத்தியுள்ளவர்கள் பாடு திண்டாட்டம் தான். பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் நிலையோ மிகவும் பரிதாபம். பணமிருந்தால் இன்று மருந்துகள் மூலம் நோயை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மையே.

"இரண்டு வருடங்களுக்குள் தடுப்பூசி தயாராகிவிடும்"என்றார்கள் 1984 ஆம் ஆண்டில்.

அதாவது, எயிட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை முதலில் கண்டுபிடித்தவுடன். 23 ஆண்டுகள் கழிந்து விட்டன. உலகெங்கும் 32 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், ஒவ்வொரு நிமிடமும் 4 பேர் இந்நோயால் மரணிக்கிறார்கள். இந்நிலையில் தடுப்பூசி பற்றி நம்பிக்கைக் கீற்று தென்படுகிறதா என்றால் இல்லை என்று தான் இன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.

அண்மையில் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அது மனிதர்களில் கள ஆய்வுக்கும் விடப்பட்டது. ஆனால், அதன் முடிவுகள் தடுப்பூசி
ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அனைவரையுமே அதிர்ச்சித் திகிலில் ஆழ்த்திவிட்டது. காரணம் என்னவென்றால் தடுப்பூசி போட்டவர்களுக்கு தடுப்பூசி போடாதவர்களை விட அதிகமாக எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளது.

காரணம் என்ன?

தடுப்பூசி தரம் கெட்டதா, அல்லது அதன் வீரியம் போதாதா, அல்லது தடுப்பூசியினுள் எயிட்ஸ் கிருமி தவறுதலாக இருந்ததா?

எதுவுமே இல்லை!

இத் தடுப்பூசியானது மனித உடலில் ரி செல் கலங்களின் செறிவை அதிகரிக்க வைப்பதை அடிப்படையாகக் கொண்டது. ரி. செல் என்பது இத் தடுப்பூசியானது மனித உடலில் ரி செல் கலங்களின் செறிவை அதிகரிக்க வைப்பதை அடிப்படையாகக் கொண்டது. ரி. செல் என்பது
எமது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியின் ஒரு அங்கமாகும். இது எயிட்ஸ் கிருமி தொற்றிய கலங்களைக் கண்டறிந்து அழிக்க வல்லது. எனவே,  இதன் உற்பத்தியை அதிகரித்தால் ஒருவரது உடலில் எயிட்ஸ் கிருமி தொற்றிய கலங்களை அழித்து நோய் ஏற்படாமல் தடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அவ்வாறு தான் இவ்வளவு காலமும் நம்பப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. மாறாக ரி செல் அதிகரித்த போது கிருமி தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்தது.

எனவே, தடுப்பூசி தயாரிப்பு என்பது மீண்டும் ஆரம்ப கட்டத்திற்கே போய்விட்டது. ஏனெனில், இந்தத் தடுப்பூசி மட்டுமின்றி இதுவரை
தயாரிப்பு நிலையில் இருந்த தடுப்பூசிகள் யாவுமே இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே (அதாவது ரி செல் அதிகரித்தால் நோய் தொற்றாது) தயாரிக்கப்பட்டன. ஆனால், கள ஆய்வு முடிவு எதிர்மாறாக அமைந்து விட்டது. இதனால், இந்த நம்பிக்கையின்
அடிப்படையில் தயாரிப்பில் இருந்த அனைத்துத் தடுப்பூசி ஆய்வுகளையும் தயாரிப்புகளையும் கிடப்பில் போட வேண்டியதாயிற்று.

ஆம் தடுப்பூசிக்குள் அகப்படமாட்டேன் என முரண்டு பிடிக்கிறது. எயிட்ஸ் வைரஸ்.

இந்தக் கள ஆய்வின் போது தடுப்பூசி போட்டும் நோய்க் கிருமி தொற்றிய அனைவருமே ஆண்கள் என்பது இன்னுமொரு முக்கியமான விடயமாகும். பெண்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலாளர்கள் ஆன போதும் அவர்கள் எவருக்குமே எயிட்ஸ் கிருமி
தொற்றவில்லை என்பதும் மிக முக்கியமாக அவதானிக்கபட வேண்டியதாகும்.

இது எதனைக் குறிக்கிறது?

ஆண் பங்காளியானவர் ஆணுறை அணிய வேண்டியது மிகமிக அவசியம்.பெண் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஆணுறை அணியாமல் உறவு வைக்க அனுமதிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு தொற்றவில்லை. ஆனால், தடுப்பூசி போட்ட ஆண்கள் கவலையீனமாக இருந்திருக்க வேண்டும். அதாவது, உறவின் போது பாதுகாப்பாக இருக்க வில்லை. அதனால் தான் தொற்றியது எனலாம். இது அனுமானம் மாத்திரமே. நிச்சயமான ஆய்வு முடிவல்ல. இவற்றிலிருந்து நாம் பெறக் கூடிய செய்தி என்ன? தடுப்பூசி வரலாம், வராமல் விடலாம். அல்லது அது வருவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. உடலுறவின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். அதாவது, திருமண உறவுக்கு வெளியே பாலியல் தொடர்பு வைக்க வேண்டாம். அப்படி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஆண் பங்காளியானவர் ஆணுறை அணிய வேண்டியது மிகமிக அவசியம்.

இப்பொழுது ஒரு புதிய செய்தி.

Anatomy of the Aids Virus.ஆல்பேர்டா பல்கலைக்கழக (
University of Alberta) விஞ்ஞானிகள் எச்.ஐ.வி வைரஸ் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட TRIM22 என்ற
ஒரு பரம்பரை அலகைக் (Gene) கண்டுபிடித்துள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளார்கள். இது பற்றிய செய்தி
scienceblog.com ல்
வெயியாகியுள்ளது. இந்த பரம்பரை அலகானது எச்.ஐ.வி வைரஸ் மனித கலங்களில் பெருகுவதைத்த தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதை அவர்கள் ஆய்வுகூடப் பரிசோதனைகளிலேயே கண்டுள்ளனர்.  ஆயினும் எச்.ஐ.வி வைரஸ் தொற்றிய மனிதர்களில் இது ஏன் செயற்பட்டு கிருமி பெருகுவதைத் தடுக்க முடியவில்லை என்பதை அவர்களால் இன்னமும் அறியவில்லை. அதனை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த ஜீனைக் கண்டுபிடித்ததன் மூலம் எதிர்காலத்தில் எயிட்ஸக்கு எதிரான புதிய இன மருந்தையோ அல்லது தடுப்பு மருந்தையோ கண்டு பிடிக்க முடியும் எனவும் நம்புகிறார்கள்.

நம்பிக்கையோடு காத்திருப்போம்! ஆயினும் இன்னும் எத்தனை தசாப்தங்கள் காத்திருக்க வேண்டுமோ?

Dr.M.K.Muruganandan
Family Physician

http://hainallama.blogspot.com
http://suvaithacinema.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html

kathirmuruga@hotmail.com

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner