இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரில் 2010  இதழ் 124  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நேர்காணல்:!
'கடலோடி' நரசையாவுடன் ஒரு நேர்காணல்!

- கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர் )


கடலோடி' நரசையா
கமலாதேவி அரவிந்தன்தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அப்பல நரசய்யா தமிழிலக்கியத்துக்குப் புதியவரல்ல. இவரது முதல் நூலான கடலோடி வாசகர் வட்டம் லக்‌ஷ்மி கிருஷ்ணமூர்த்தியால் வெளியிடப்பட்டு, கடலோடி நரசையா என்றே அறியப்படுகிறார். இலக்கிய ஜாம்பவான் சிட்டி அவர்களின் தமக்கை மகனான, நரசையா, இலக்கிய ஆரவம், இவரது பாரம்பரியத்திலேயே உண்டு என்கிறார். ஆனந்தவிகடனில் வெளிவந்த இவரது முத்திரைக்கதைகள் வாசகர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறுகதைக்காகவும், இவரது வரலாற்று நூல்களுக்காகவும், மூன்றுமுறை மாநில பரிசுகளைப் பெற்றுள்ளார். ஆங்கிலத்திலும் எழுதும் திரு நரசையா அவர்கள், அண்மையில்
சிங்கையின் தங்கமுனை பேனா விருதின் போட்டிக்கு,சிறுகதைத் தேர்வாளராக வருகை புரிந்திருந்தார். நேர்காணலுக்காக அவரை
சந்தித்தபோது,மிக மென்மையாக, எந்த பாசாங்குமே இல்லாமல், அவர் எடுத்தியம்பிய கருத்துக்கள் சுவாரஸ்யமானவை. சிந்திக்க
வைப்பவை. தன்னுடைய பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். -

நேர்காணல் செய்பவர் ----கமலாதேவி அரவிந்தன்.[தமிழ், மலையாள, எழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளர்,.நாடகாசிரியர்,]

1]கமலம்--உங்களுள் ஒரு கலைஞன் ,அல்லது,ஒரு இலக்கியவாதி உருவான அந்த கால கட்டத்தை சொல்லுங்கள்?

நரசையா--நான் பள்ளியில் படிக்கையிலேயே எழுதும் ஆர்வம் உண்டானது; அப்போது எங்கள் மூத்த சகோதரர் திரு கிருஷ்ணமூர்த்தி
அவர்கள் திருச்சியில் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே “விநாயகா” என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். அதற்கு சிட்டி அவர்கள் உந்துத்லும இருந்தது. ஆனால் அவ்ர் அப்போது ஆர்மியில் சேர்ந்து விட்டதால், நானும் அண்ணா சிட்டியும் (ஒரிஜினல் சிட்டி இவ்ர் தான். அப்பெயரை மாமா தனது புனைப் பெயராக எடுத்துக் கொண்டார்) தம்பி கோவிந்தனும் சேர்ந்து அரியலூரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையை அதே பெயரில் 1945 ஆம் ஆண்டில் ஆரம்பித்தோம். ஆகையால் இதுதான் ஆரம்பம் என்று சொல்லலாம்.

2]கமலம்--மலையாளீயான ஞான் தமிழ் எழுத முயன்றபோது மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன்.மலையாளத்திலிருந்து தமிழுக்கு சொற்களை வடிவமைக்க,தமிழர்களின் பேச்சை ஒலிநாடவில் பதிவு செய்து கொண்டும், மனனம் செய்தெல்லாம் , எழுத முயன்றிருக்கிறேன். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தாங்களுக்கு அப்படி ஏதும் சிரமமிருந்ததா? எப்படி தமிழில் எழுதும் ஆர்வம் ஏற்பட்டது? தாய்மொழியான தெலுங்கில் ஏதும் எழுதியிருக்கிறீர்களா?

நரசையா--சொல்லவே கூச்சப்படுவ்து எனது தாய் மொழியில் எழுதப்படிக்கத் தெரியாது என்பது தான்! சிறு வய்திலேயே தமிழ் நாட்டிற்கு வ்ந்து விட்டோம். திருச்சியில் ஆங்கிலத்தில் பயின்றோம். பின்ன்ர் அரியலூரில் ஆங்கிலப் ப்ள்ளி இல்லாததால் தமிழ் கற்றோம். எம் தந்தையாருககுத் தமிழ் பற்றிருந்தது.ஆகையால் ஆரம்ப காலத்தில் தமிழ் கற்க முடிந்தது. தெலுஙகில் எழுதிய்தில்லை. பின்னர் கடற்படையில் சேர்ந்த பிறகு (1949) தமிழ் தாக்கமே இல்லாதிருந்தது. ஆகையால் தமிழில் எழு்துவ்து மிக்க சிரமமாகத்தான் இருந்தது.ஆங்கில்த்தில் வார்த்தைக்கு வார்த்தை தமிழில் மொழி பெயர்த்து தான் எழுத முடிந்தது. ஆகையால் ஒரு கதை எழுதவே சில நாட்களாகும்!

3].கமலம்--தாங்கள், முதன்முதலாக எழுதிய சிறுகதை எது? முதன்முதலாக எழுதிய நாவல் எது?

நரசையா---அப்படி மிக்க ஆலோசித்துச் ச்ந்தேகத்துடன் கோவிந்த ஜெய்ந்தி என்ற கப்பலில பணி புரிகையில் தேய்பிறை என்ற ஒரு சிறுகதை எழுதி (அப்போது அக்கப்பல் கல்கத்தா துறை முகத்தில் இருந்தது) ஆனந்தவிகடனுக்கு அனுப்பிவிட்டு கப்பலில் கடலூர் சென்று விட்டேன். சில நாட்களில் விகட்னிலிருந்து ஒரு கடிதம் வந்தது. வருத்த்ம் தெரிவிப்பதாக இருக்கும் என் எண்ணித் திறந்து பார்த்தால் அக்க்தை முத்திரைக் கதையாக் ஏற்றுக் கொள்ளப்ப்ட்டதாக இருந்த்து!

4.]கமலம்--நரசையா என்றாலே, ஆனந்தவிகடன் எனுமளவுக்கு, தங்களின் பல முத்திரைக்கதைகள் ஆனந்த விகடனில் படித்திருக்கிறேன். ஏன் சார் விகடனுக்கு மட்டும் அந்த முக்கியத்துவம் ?

நரசையா---அது என்க்கு தமிழ் சரியாகத தெரியாத நிலையிலும் கதைகளின் தரத்தைத் தெரிந்து கொண்டு அவர்கள் என்னை ஊக்குவித்ததை மறக்க இயலாது., ,அவ்வப்போது பாலசுப்பிரமணியன் பேசுகையில் சிலாகிப்பார்., தவிரவும் ஏதாவது மாற்றம் செய்வதாகக இருந்தால் பேசி முடிவெடுப்பார். விகடன் பவழவிழாவின் போது ‘விகடனும் நானும்’ என்ற தலைப்பில் என்னை எழுதச் சொன்னது மறக்க முடியாத நினைவு!

5] கமலம்--இன்று எழுதப்படும் சமகாலப் படைப்புக்கள் கூட மறு பரிசீலனைக்குட் படுத்தும் நிலையில் தான் உள்ளது, எனும் சில விமர்சகர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வீர்களா?

நரசையா--மாறி வரும் உலக நிலையில் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கின்றன். ஆகையால் விமர்சகர்களும்,முக்கியமாக இணைய தளம் மூலமாக பல மேலை நாட்டு ஆய்வு முறைகளைத் தெரிந்து கஅர்கள் கருத்துொள்ளும் வாய்ப்பு பெற்றவர்களாக் உள்ளனர். ஆகையால் அவர்கள் கருத்துகளை உதறவிட முடியாது!

6] கமலம்---இப்போது இலக்கியத்தில், என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

நரசையா---சமீப காலமாகவே எனது ஈர்ப்பு சரித்திரஆய்வு பக்கமே திரும்பியுள்ள்து. மதராசபட்டினம், ஆலவாய் மற்றும் கடல் வழி வணிகம் முதலிய நூல்கள் ந்ல்ல வெற்றியும் வரவேற்பும் பெற்றுள்ளதாலும் அதே போல எனது ஆங்கில நூல்களும் வரவேற்பு பெற்ற்மையால், அங்கே தான் கவனத்தைத் திருப்பியுள்ளேன்.

7]கமலம்--டால்ஸ்டாய், டாஸ்டாவ்ஸ்கி, செக்காவ், போன்ற மகத்தான இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை, தமிழில் நம்மால் உருவாக்க முடிந்ததே இல்லை, எனும் குற்றசாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா?

நரசையா-- அப்படிச் சொல்லமுடியாது கமலம். ஆனாலும் வ்ஙகம், குஜராத்தி, மலையாளம் கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்களைக் கொணடதாக தமிழ் இருப்பதாக்ச் சொல்லமுடியாது! விதி விலக்காக் ஜெயகாந்தன், போன்ற எழுத்தாளர்கள் இருக்கிறர்கள். இளைய தலை முறை நம்பிக்கையை அளிக்கிற்து. ஆனால் வெளிக்கொணர பத்திரிகைகள் முன்வரவேண்டும்.

8]. கமலம்--இலக்கியத்துக்கு அடிப்படை என்பது வெறும் மொழியலங்காரம் மட்டுமல்ல, உத்தி, உள்ளீடு, உருவகம், எல்லாவற்றுக்கும் மேலாக, அழகியல் இருத்தல், எனப் பல தகுதிகளை மலையாளத்தில் எதிர்பார்க்கிறோம்? ஒப்புவமையோடு கூடிய நடையழகை மலையாளத்தில் பெரிதும் வரவேற்கிறோம்.ஆனால் தமிழில் இன்னும் இந்த உத்தி,பரவலாக்கப்படவில்லையே? ஏன்?

நரசையா---கேள்வியிலேயே ப தில் உள்ளது! தமிழ் நாட்டில் இன்னும் அந்த எதிர்பார்ப்பும் இல்லை விழிப்புண்ர்வும் வரவில்லை என்றே கருதுகிறேன். தமிழ் நாட்டு அரசியலும் ஒரு காரணம். தொலைக்காட்சியில் அழுத கண்களுடன் தொடர்களைப் பார்ப்பதில் தான் கவனம் செலுத்தப்படுகிறது. அரசியல் கட்சிகளும் அவர்களைப் போற்றுபவர்களையே ஏற்றுக் கொள்வதால் சாதாரண எழுத்தாளனுக்கு சமூகத்தில் அந்தஸ்து குறைந்து விடுகிறது!

9] கேள்வி--உலகளாவிய தரத்தில் தமிழில் இன்னும் கதைகள் எழுதப்படவே இல்லை, எனும் சில விமர்சகர்களின் அபிப்ராயத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படியாயின் இதுவரை நாம் கொண்டாடி வந்த எழுத்துக்களை எப்படி நிர்ணயிப்பது?

நரசையா--நன்றாக எழுதப்ப்ட்ட நாட்களில், சிற்ந்த எழுத்துகள் உண்டாயின். ஆனால் அப்போது அவ்வாறு எழுதியவர்கள் எல்லோரும் ஆங்கிலத்தாக்கத்தில் தான் எழுதி வ்ந்தனர் என்பது தான் உண்மை. (கு. ப ரா, சிட்டி பிச்ச்மூர்த்தி, புதுமைப்பித்தன்) பின்னர் சரியான் கவனிப்பு இல்லாததால் எழுத்தாள்ர்கள் ஏழ்மையில் வாடவேண்டியதாயிற்று. தற்காலத்தில் உலகத்தரத்தில் எழுதக்கூடியவர்கள் உள்ளன்ர்ஆனால் ஆதரிப்பார் எவ்ருமில்லை! அவ்ர்கள் கருத்துக்களை இணைய தள்த்தில் சொல்ல மட்டும் தான் அவ்ர்களால் முடிகிறது. நிர்ணயிக்கவே வல்லுன்ர் இல்லாத போது கொண்டாடி வந்ததை மட்டும் பற்றிச் சொல்ல இயலுமா?

10]கமலம்--ஒரு தமிழ் எழுத்தாளராக நிறைவான எழுத்தை எழுதிவிட்டேன், எனும் ஆத்ம திருப்தியைத் தந்த எழுத்து என்று தாங்கள் சுட்டிக்காட்ட விரும்பும் எழுத்து எது?

நரசையா--முதலில் கடலோடி என்னைத தமிழுல்கத்திற்கு அறிமுக்ப்படுத்திய் அந்த பயணக்கட்டுரை நூல் தான. பின்னர் சில சிறுகதைகள். தேய்பிறை, திருப்தி, ஜகத்தினை அழித்திடுவோம், சொல்லொணாப்பேறு, ஒளியின் வழியில, அவசரம், ஏக்கங்கள் போன்ற கதைகள்.கடந்த 45 வருடங்களாக , இந்த இலக்கியப் பயணம் எனக்கு நிறைவையே தந்துள்ளது சமீப காலத்தில்ஆய்வு நூல்களான ஆலவாயும் மதராசபட்டினமும; அவைகளுக்காக நான் மேற்கொண்ட ஆய்வுகளும் பெரியவர் ஐராவதத்துடன நடத்திய ஆலோசனைக் கூட்டங்களும் மனத்தில் பதிந்து விட்டவை

11]கமலம்--உலக இலக்கியங்களில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்? யார்?

நரசையா--Ernest Hemingway, Somerset Maugham and P G Wodehouse12]

12.] கமலம்--எப்படி இருந்தால் அது எழுத்து? அல்லது இலக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நரசையா--படிக்கும் போதே சிந்திக்கத்தூண்டவேண்டும்; எழுத்தாளரைப் பார்க்கவேண்டும் அல்லது பார்த்திருக்கவேண்டும் என்று தோன்றவேண்டும்; வார்த்தைகளுக்கு நடுவில் ஏதோ ம்ற்றொரு வார்த்தை இருப்ப்து போல்த் தோன்றவேண்டும்; கண்களில் நீர்மல்கவேண்டும். அதாவ்து நாம் கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போகவேண்டும்

13]கமலம்-- அருமையான பதில் சார். இரண்டு தலைமுறை எழுத்தாளர்களோடு எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?ஆனால் இன்றைய
இலக்கியத்தின் அசுர வளர்ச்சியில், பின் நவீனத்துவ எழுத்து பெற்றுள்ள உச்சத்தை சமூகக்க்கதைகளும் பெற்றுள்ளதாக நினைக்கிறீர்களா??

நரசையா--எழுத்துகள் அப்போதைய சமூகத்தினைத் தான் பிரதிபலிக்கின்றது. ஆகையால் சுற்றுச் சூழலால் பெரிதும் எழுத்தாளன் பாதிக்கப்ப்டுகிறது உண்மை. மாறிவரும் கோட்பாடுகளும், foreign literary exposure முதலானவும் வேறுபாடுகளைக் கொணர்கின்றன். சென்ற தலைமுறையிலும் இப்போதைய தலை முறையிலும் ஆங்கிலத்தில் படித்தவர்கள் தான் நவீனத்துவம், முத்லான் கருத்துகளைப் பற்றிப் பேசுகிறர்கள். மேலை நாட்டு இலக்கிய வளர்ச்சியை அப்படியே தமிழில் கொண்டுவர முடியாது என்பது எனது கருத்து. பழமையிலிருந்து நவீனத்துவமும், பின் நவீனத்துவமும் அங்கு வளர்ந்தன. நாகரீக் வளர்ச்சியில் நாம் மறுபடியும் சக்கரத்தைக் கண்டுபிடிக்க் முயல்வது போலத்தான் அவர்களது வளர்ச்சியை நாம் தமிழில் கொணர முயல்வது. தமிழில் அன்று உரு மாற்றி எழுதியவர்கள் கு. ப. ரா புதுமைப்பித்தன் முதலியோர். ஒரு புரட்சியையே உண்டாக்கி ஜெயகாந்தன் காட்டினார். இன்றைய ச்மூகம் மேலை நாட்டு பாதிப்பில் உள்ளதால் அசுர வளர்ச்சி தெரிகிறது. அதே பிரதிபலிப்பு இலக்கியத்திலும் தெரியாமலில்லை.

14] கமலம்--பின் நவீனத்துவ உத்தி, பரிசோதனை முயற்சி,போன்ற நவீன இலக்கியத்தில் உங்கள் பங்கு என்ன?

நரசையா--எழுத்து உள்ளத்தின் பிரதிபலிப்பு; செய்ற்கையாகக் கொணர முடியாது. என் எழுத்திலும் முயன்றால் நவீனத்துவத்தையும் பின்
நவீனத்துவத்தையும் காணலாம். எல்லாமே பார்வையில் தான் உள்ளது கமலம். It is only a perception!

15] கமலம்--உங்கள் எழுத்துக்கு வரும் எதிர்வினை, அல்லது உங்கள் மேல் வைக்கப்படும் இலக்கிய விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?

நரசையா-- சாதாரணமாக் எழுதுபவர்களைப் பொறுத்தே எதிர் கொள்வேன் subjective ஆக இருந்தால் கண்டுகொள்வதில்லை. objective ஆக இருந்தால் கருத்தை ஏற்றுக் கொள்வேன்.

16]கமலம்----மேலை நாட்டு இலக்கியத்தை அடி ஒற்றி , நடையை கொஞ்சம் செப்பிடு வித்தை காட்டி மாற்றி, எழுதும் கதைகள் தான் சில இடங்களில் பேசப்படுகிறது.அப்படியானால் இங்கே சமகால இலக்கியத்தின் பார்வை என்ன?

நரசையா-- முன்னரே சொன்னது போல் பார்வைதான் காரணம் கமலம்.,. சமகால இலக்கியத்தில், சமூகப்பார்வை நிறையவே உள்ளது. பல இளைஞர்கள் சிறப்பாகவே எழுதுகின்றன்ர். முக்கியமாக வெளிநாட்டு தமிழ் எழுத்தாளர்கள் ந்ல்ல சேவை செய்கின்றன்ர். நீங்கள் சொன்ன மாதிரியான் எழுத்துக்கள் நிலையானவையல்ல்; காலத்தில் மறைந்து விடும். ஆகையால் அவற்றைக் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.

17] கமலம்----கதையிலிருந்து கதையை வெளியேற்றுவது, வேறும் மோன நிலையிலேயே கதைகள் புனைவது, கதாபத்திரமோ, நிகழ்வுகளோ, எதுவுமே அற்ற பாழ் வெளியில் கதையைப் பேசவைப்பது என பல கோணங்களில் கதைகள் , நம்மிடையே உலா வருகின்றன.இதில் உங்களுக்கு உவப்பான பாணியைப்பற்றி சொல்லுங்களேன்.

நரசையா---எழுதும் போது தோன்றும் முறைதான் என்னுடையது. வடக்குவாசலில் ஒரு வித்தியாசமான கதை என்று ஒரு கதை எழுதியிருந்தேன். சில மாறிய கோணங்களில் எழுதுவ்து எனக்குப் பிடிக்கும்.

18] கமலம் --சிங்கப்பூர் இலக்கியம் பற்றி--?

நரசையா ---போட்டிக்கு வந்த கதைகள் எல்லாமே அறிமுக எழுத்தாளர்களின் கதைகள் தான், என்றறிந்தபோது.இந்த ஆரம்ப எழுத்தாளர்களின் முயற்சியை மதிக்கிறேன். சிட்டிமாமா அவர்கள் எழுதிய நூலில் சிங்கை, மலேசிய இலக்கியம் பற்றி அந்நாளிலேயே புகழ்ந்து எழுதியுள்ளார். அனுபவ எழுத்தாளர்கள் இவர்களுக்கு உதவலாம்.

கமலாதேவி---நன்றி சார்! .வணக்கம் .

நரசையா--- உங்களுக்கும் நன்றி.கமலம்.

Kamala Devi <kamaladeviaravind@hotmail.com>

 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்