இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2010  இதழ் 129  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நூல் விமர்சனம்!
தி.ஜாவின் ‘அம்மா வந்தாள்’ ....

- ஜெயந்தி சங்கர் -


தி.ஜானகிராமன்ஜெயந்தி சங்கர்சுமார் ஏழெட்டாண்டுகளுக்கு முன்னர் ‘அம்மா வந்தாள்’ நாவலை முதல்முறையான வாசித்தபோது, எழுதப்பட்ட காலத்தை கணக்கிலெடுத்து, மிகவும் வியந்து ரசித்தேன். அக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து எழுதிய ஆசிரியரின் துணிச்சல் எனக்குள் ஒருவித உற்சாகத்தைக் கொணர்ந்தது.சுமார் ஏழெட்டாண்டுகளுக்கு முன்னர் ‘அம்மா வந்தாள்’ நாவலை முதல்முறையான வாசித்தபோது, எழுதப்பட்ட காலத்தை கணக்கிலெடுத்து, மிகவும் வியந்து ரசித்தேன். அக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து எழுதிய ஆசிரியரின் துணிச்சல் எனக்குள் ஒருவித உற்சாகத்தைக் கொணர்ந்தது. அதேநேரம், நாவலாக்கம் குறித்து எனக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்தன. மோகமுள் நாவலை ஏற்கனவே வாசித்திருந்தேன். வாசிப்புப் பழக்கமுடைய ஒரு நண்பரிடம் என்னுடைய கருத்துக்களை வெளியிட நான் முயன்றபோது, ‘மோகமுள் ஒருமாதிரி அழகு, இது வேறொரு விதத்தில் அழகு’, என்று மிக எளிமையாகக் கூறிவிட்டு நகர்ந்து விட்டார். அதன்பிறகு தான் ‘செம்பருத்தி’ வாசித்தேன்.

எழுதப்பட்ட நாளில் ‘அம்மா வந்தாள்’ பற்றி மிரண்டும் எதிர்த்தும் (கலாசாரக் காவலர்கள்) நிறைய பேர் பதிந்தாகி விட்டது. இசை, உணவு, பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள், பாத்திர வார்ப்பு ஆகிய பலவற்றைக் குறித்த வர்ணைனைகள் என்று பலவும் தி.ஜானகிராமனின் புனைவுகளில் ரசிக்கக் கூடியவை. ஒவ்வொன்றும் சுவாரஸியமும் இயல்பும் நிறைந்தவை. உற்சாகமான விஷயங்கள் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அத்துடன், தண்டபாணி, கோபு, சிவசு, இந்து, பவானியம்மாள், அலங்காரத்தம்மாள் போன்ற முக்கிய பாத்திரங்கள் முதல் குதிரை வண்டிக்காரன், ஆற்றோரம் அப்புவைச் சந்திக்கும் காது கேட்காதவர் போன்ற சிறிய பாத்திரங்கள் வரை அவ்வந்த பாத்திரத்தை நேர்த்தியாகவே வடித்தெடுத்திருப்பார்.

சுமார் ஏழெட்டாண்டுகளுக்கு முன்னர் ‘அம்மா வந்தாள்’ நாவலை முதல்முறையான வாசித்தபோது, எழுதப்பட்ட காலத்தை கணக்கிலெடுத்து, மிகவும் வியந்து ரசித்தேன். அக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து எழுதிய ஆசிரியரின் துணிச்சல் எனக்குள் ஒருவித உற்சாகத்தைக் கொணர்ந்தது.அப்புவின் தந்தை தண்டபாணி என்ற ஒரே ஒரு பாத்திர உதாரணம் கூடப் போதுமானது. பல்வேறு மொழிகளில் புரூஃப் ரீடிங் செய்வது, தன்னுடைய முதலாளியுடன் ஐந்து நிமிடம் ஒதுக்குவது, ஊழியர்களை கம்பீரமாக விரட்டுவது, மாலையில் முதலாளியுடன் காரில் போய் பெரிய மனிதர்களுக்கு வேத, உபநிஷத்துகளிலிருந்து சொல்லிக் கொடுப்பது, அலங்காரத்தை ஆராதிப்பது, அவளுக்குக் கீழ்ப்படிவது, காமம் கட்டுக்கடங்காமல் போகும் போது அவள் மீது வெறி கொள்வது, அவள் மறுத்தால் மனதுக்குள் கண்டபடி திட்டுவது, எண்ணம் ஈடேறினால் அலங்காரத்தை ஏகத்துக்கு மனதுக்குள் புகழ்வது, காலைவேளைகளில் எழுந்து அடுத்தடுத்து அன்றாட பணிகளில் ஈடுபடுவது, நம்பிக்கை இல்லாமலே ஜாதகம் பார்த்துச் சொல்லி சில்லறை தேற்றுவது, சாப்பிடும் போது தன் மக்களோடு சகஜமாக உரையாடுவது, சிவசு வரும் போது நழுவுவது தெரியாமலே மாடிக்கு நழுவுவது, அப்புவோடு கடற்கரையில் பேசுவது, குடும்பத்தின் நலனுக்காக மனைவி செய்ததைப் பொருட்படுத்தாமல் அப்படியே ஏற்று வாழ்வது என்று மிக அழுத்தமான பாத்திரக் கட்டமைப்பு. சிறுவயது அப்புவை பாடசாலையில் கொண்டுபோய் விடும் போதும், அவனது வாலிபத்தில் கடற்கரையில் மிகத் தீவிரமான விஷயம் பற்றிப் பேசும் போதும் தண்டபாணியின் வாஞ்சையும் தந்தைமையும் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும்.

சற்றே கூர்ந்து நோக்கினால் தண்டபாணி பாத்திர உருவாக்கத்திலும் நூலாசிரியர் முன்னெச்சரிக்கை கொண்டிருப்பதாகவே படும். தன் மனைவி அலங்காரத்தம்மாளை ‘வெறுமன வேடிக்கை’ பார்ப்பதாகச் சொல்கிற தண்டபாணி விலகியும் போகாமல் அவளை விலக்கிவிடவும் முடியாமல் இருப்பதையே மனைவியின் ஆளுமை அவருக்குள் ஏற்படுத்தும் பெருந்தாக்கம் என்று நிறுவுகிறார் ஆசிரியர். இதன் மூலமாக அலங்காரம் பாத்திரத்தை உயர்த்தும் பணியில் கணிசமான வெற்றியையும் அடைந்து விடுகிறார். அலங்காரத்தைப் பற்றி அறிந்த பிறகும் எப்படி இந்த ஆள் தன் போக்கில் ஒன்றுமே நடக்காதது போல இருக்கிறான் என்ற கேள்வி எழும் என்று முன்னுணர்வதால் தானோ என்னவோ இப்பாத்திரத்தின் குணச்சித்தரிப்பில் சற்று அதிகமாகவே கவனம் செலுத்தியிருப்பார்.

சுமார் ஏழெட்டாண்டுகளுக்கு முன்னர் ‘அம்மா வந்தாள்’ நாவலை முதல்முறையான வாசித்தபோது, எழுதப்பட்ட காலத்தை கணக்கிலெடுத்து, மிகவும் வியந்து ரசித்தேன். அக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து எழுதிய ஆசிரியரின் துணிச்சல் எனக்குள் ஒருவித உற்சாகத்தைக் கொணர்ந்தது.சிவசு அந்தக் குடும்பத்தில் ஏற்படுத்தும் மாற்றத்திற்கு கதையில் இருக்கும் முக்கியத்துவம் அந்தப் பாத்திரத்துக்கு இல்லை என்று சொல்வது போல அப்பாத்திரத்தை மற்ற ஒவ்வொரு பாத்திரத்தின் வழியாகவே சொல்வது கூட ஒரு விதத்தில் புதுமை தான். ஆனால், நேரடியாக சிவசுவின் நடவடிக்கைகளை விளக்கினால் அலங்காரத்தின் நடவடிக்கைகளையும் விளக்க வேண்டியிருக்கும் என்று தவிர்த்து விட்டது போலப் படுகிறது. அவன் செய்ததென்ன என்பதையும் ஆங்காங்கே குறிப்பால் மட்டும் உணர்த்தியபடியே செல்வார். ஊஞ்சலில் சிவசு உட்கார்ந்திருப்பதைச் சட்டென்று பார்க்கும் அப்பு, “கோபு எப்படா மீசைய எடுத்த?”, என்று கேட்பதில் மொத்த நாவலில் மொத்த மையமும் குவிந்துவிடும்.

அப்பு பாத்திரம் ஒரு முக்கிய பாத்திரமாக இருந்தும் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய அழுத்தம் கொடுக்கப் படாதது போன்றதொரு உணர்வெற்படுகிறது. அவனைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் காவேரி ஆற்றையும், அழகையும், அதைச் சுற்றிய நிலப்பரப்பு, ஊர், ஊர்மக்கள், பழக்க வழக்கம், பாடசாலை, பாடசாலையின் நடைமுறைகள் என்று தான் அதிகமும் சொல்கிறார். சொந்த வீட்டுக்கு வரும் அப்பு விருந்தாளியைப் போல உணர்வது இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது. அவனது சிந்தனையோட்டத்தில் சிறுவயதுப் பிராயமும் சிறப்பாகவே சொல்லப் படுகிறது. ஆனால், அவன் வாலிபப் பருவத்தில் காட்டியிருக்க வேண்டிய மன முதிர்ச்சி கூடி வரக் காணோம்.

இந்துவுக்காக, அப்பு இந்துவை மணம்புரிய, தன் வாழ்நாள் கனவைக் கூடமாற்றிக் கொள்ளத் தயாராகிறார் பவானியம்மாள். தானே ஒரு விதவை வாழ்க்கையை வாழ்ந்திருக்கும் அவருக்கு இருவரிடையே இருக்கும் அன்பும் காதலும் மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமாகிறது.

சுமார் ஏழெட்டாண்டுகளுக்கு முன்னர் ‘அம்மா வந்தாள்’ நாவலை முதல்முறையான வாசித்தபோது, எழுதப்பட்ட காலத்தை கணக்கிலெடுத்து, மிகவும் வியந்து ரசித்தேன். அக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து எழுதிய ஆசிரியரின் துணிச்சல் எனக்குள் ஒருவித உற்சாகத்தைக் கொணர்ந்தது.தி.ஜாவின் முக்கிய பெண் பாத்திரங்கள் எல்லோருக்குமே காதருகே கேசம் சற்றே அதிகமாக இறங்கியிருக்கும். சருமம் இழுத்துக்கட்டிய மாதிரியும் நிகுநிகுவென்றும் இருக்கும். முக்கிய பெண் பாத்திரங்கள் யாருமே சராசரித் தோற்றத்துடன் வருவதில்லை. ஆண் கதாப்பத்திரங்கள் பெண் பாத்திரங்களின் புற ஆளுமைக்குக் கொடுக்கும் கவனத்தை அவர்களின் அகத்துக்குக் கொடுக்கப் பலவேளைகளில் தவறுவதைக் காணமுடிகிறது. அம்மாவின் தோற்றத்தையும் கம்பீரத்தையும் ரசிக்கும் அப்புவும் சரி, மனைவியின் ஆளுமையை வியந்து போற்றும் தண்டபாணியும் சரி அவளது செயலுக்காக அவளிடம் நேராக நின்று எந்தக் கேள்வியும் கேட்க நினைப்பதில்லை. அப்பு படித்திருக்கும் படிப்பு கட்டுடைக்கும் மனதை அவனுக்கு அளிக்கத் தவறியதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், அம்மா பிராயசித்தமாக காசிக்குப் போகிறேன் எனும் போது அப்பு அவளைத் தடுக்கக் கூட எண்ணுவதில்லை. அவன் சொல்லும் ஸ்லோகமே அவன் மனதிலிருப்பதை உணர்த்தி விடுகிறது. மகனாக இருந்த அப்பு ஓர் ஆணாகிவிடுகிறான் எப்போது. இந்துவை மணப்பானா, தொடர்ந்தும் இப்படியே அவளுடனான உறவை ரகசியமாகவே வளர்ப்பானா என்பதையெல்லாம் வாசகனின் கற்பனைக்கே விட்டிருக்கிறார்.

க்ளப்புக்குப் போகும் மீசை வைத்த, சரோங் கட்டும் கோபுவை விவரிக்கும் போது ஆசிரியரால் அப்புவின் பாத்திர மேன்மையை மேலும் தூக்கிப் பிடிக்க முடிகிறது. பாத்திர வேறுபாட்டை ஏற்படுத்தி அழுத்தமும் கொடுக்கிறார். ஒரு பாத்திரத்தை உயர்த்த, இன்னொன்றை இறக்குவதால் முடியும் என்று நம்புகிறார். இவ்வாறான உத்தியை அவரது ‘செம்பருத்தி’யில் சட்டத்தையும் சின்னண்ணனையும் விவரிக்கும் இடங்களிலும் ‘மோகமுள்’ளில் பாபுவையும் அவனது ஒன்றுவிட்ட அண்ணனையும் விவரிக்கும் இடங்களிலும் நாம் அவதானிக்கலாம். அது தி.ஜாவின் பாணியாக இருக்கிறது.

அலங்காரத்தம்மாவுக்கு நான்கு மகன்களும் இரண்டு மகள்களுமாக ஆறு மக்கள். அப்புவின் அண்ணா, அப்பு, கோபு, வேம்பு ஆகிய நான்கு மகன்கள். அப்புவின் அக்கா மற்றும் தங்கை காவேரி ஆகிய இரண்டு மகள்கள். அப்புவிடம் அவனது அக்கா (பக்கம் 134) ‘கடைசி மூணும் தான்,.. என்று சொல்லுமிடத்திலும் அப்புவிற்குப் பிறகு மூவர் என்பது தெரிகிறது. அலங்காரத்தம்மாள் (பக்கம் 122) ‘இந்த மூணுக்கும் என்னக் கெண்டாப் பிடிக்கல’, என்று சொல்வதில் அது உறுதியாகிறது. அப்படியிருக்க, அப்புவுக்கு 1 அக்கா, 1 அண்ணா, 2தம்பிகள், 2 தங்கைகள் (பக்கம்.4) இருப்பதாகச் சொல்லுமிடமும் ‘மூன்றாவது பெண்’ என்று வரும் (பக்கம் 56) இடமும் பிழை கொண்டிருப்பது புரிகிறது. பதினோராவது பத்திப்பு வரை பதிப்பாளருக்குத் தோன்றாதது தான் ஆச்சரியம்.

மோகமுள் செம்பருத்தி போன்ற நாவல்களை ஒப்பு நோக்க, ‘அம்மா வந்தாள்’ நெடுகவே இடைவெளிகள் மிக அதிகம் என்று தோன்றியபடியே இருந்தது. நாவலின் உரையாடல்களில் கூட விவாதங்களோ தர்க்கங்களோ நிகழ்ந்திருக்க வேண்டிய இடங்கள் கொஞ்சங்கூட வளராமல் சட்டென்று விரைந்து கடந்து விடுகின்றன. வாசகன் இட்டு நிரப்பிக் கொள்ளலாம் தான். நமது வாசக மனம் பழகியும் இருக்கிறது. இருப்பினும், எனக்குள் தோன்றிய போதாமையானது நாவலை ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும் அதிகமானபடியே தான் இருந்தது.

சுமார் ஏழெட்டாண்டுகளுக்கு முன்னர் ‘அம்மா வந்தாள்’ நாவலை முதல்முறையான வாசித்தபோது, எழுதப்பட்ட காலத்தை கணக்கிலெடுத்து, மிகவும் வியந்து ரசித்தேன். அக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து எழுதிய ஆசிரியரின் துணிச்சல் எனக்குள் ஒருவித உற்சாகத்தைக் கொணர்ந்தது.‘அம்மா வந்தாள்’ளில் இந்துவைப் போலவே, செம்பருத்தியில் சின்னண்ணி, மோகமுள்ளில் தங்கம் ஆகிய பெண் பாத்திரங்கள் ஆண் பாத்திரத்தைத் தாமே அணுக வருவார்கள். முதல் இருவரும் விதவைகள், மூன்றாமவள் கிழவனைக் கட்டிக்கொண்ட இளவயதுப் பெண் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால், அலங்காரம் பாத்திரம் எங்கேயும் யாரையும் தேடிப் போகாது. சிவசு தான் வீட்டுக்கு வந்தபடியே இருப்பான். இவர்களிடையில் ஏற்பட்ட உறவில் முதலடியை எடுத்து வைத்தது யார், சிவசுவில் அவள் எதைக் கண்டு விழுந்தாள், தொடர்ந்தும் அவ்வுறவு நீடிக்கிறதா என்பது போன்ற கேள்விகள் வாசகனில் எழுந்தால் அவரவர் கற்பனை வளத்தைப் பொருத்து இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டியது தான். சந்தர்ப்ப சூழலால் தான் அலங்காரத்துக்கு திருமணத்தைத் தாண்டிய உறவு ஏற்பட்டுவிட்டதென்று சொல்லாமல் சொல்லவே முயல்கிறார் ஆசிரியர்.

‘செம்பருத்தி’யில் சின்னண்ணி மற்றும் ‘அம்மா வந்தாள்’ளில் இந்து ஆகிய இரண்டு விதவைப் பெண்களையும் தி.ஜா சித்தரிக்கும் விதம் அவர் விதவைகளையும் அவர்களது மனோதிடத்தையும் குறைத்து மதிப்பிடுவது போலவே இருக்கின்றது. குறிப்பாக, இப்பெண்கள் தாமே நெருங்கிப் போகும் போது செம்பருத்தியில் சட்டமும் (இறுதிவரை) அம்மா வந்தாளில் அப்புவும் (முதலில்) மறுப்பது போலவே தான் சொல்வார். இரண்டிலுமே பால்ய/இளமை நினைவுகள் ஆண்களுக்குள் இருக்கும். இரண்டு பெண்களுமே காமம் மிகும் போது அவ்வாறு அணுகி மறுக்கப்பட்டதால் கோபமும் விகாரமும் கொள்வது போல எழுதுவார். இரண்டு ஆண்களும் அதிர்ந்து, பின்னர் பரிதாபப்பட்டு, பின்னர் மன்னிக்கவோ இசையவோ செய்வர். அலங்காரம் குறித்து எழுதினால் எழக்கூடிய ஆபத்தைத் தவிர்க்கத் தான் அதிக கவனமெடுத்து விட்டார். இந்து, சின்னணி போல இணைப்பாத்திரங்களாக இல்லாமல்
அலங்காரம் தி.ஜாவுக்கு மிக முக்கிய லட்சியப் பாத்திரம்.

தி.ஜாவுக்கு பெண் பாத்திரங்கள் மிக மிக முக்கியம். அலங்காரம் என்ற பெண் பாத்திரப் படைப்பு அவருக்குத் தேவையாக இருக்கிறது. அக்காலத்தில் அவ்வாறான பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், சிலவற்றை நாவலில் அப்பட்டமாகச் சொல்வதில் அவருக்குள் பலவித மனத் தடைகள் இருந்திருக்கின்றன. இதற்கு அக்காலச் சமூகத்தில் முக்கிய எதிப்புக் காரணிகள் பலவும் இருந்ததை மறுப்பதற்கில்லை. இருப்பினும், அத்தடைகள் படைப்பாளியில் இல்லாதிருக்கும் பட்சத்தில் அம்மா வந்தாள் மேலும் செறிவுடனும் விரிவுடனும் நமக்குக் கிடைத்திருக்கும். அலங்காரத்தம்மாள் மேலும் உயிர்ப்போடு இருந்திருப்பாள்; அப்பு பாத்திரத்தின் பரிணாம வளர்ச்சியும் இன்னும் அழுத்தமாகவே விழுந்திருக்கும்.

சுமார் ஏழெட்டாண்டுகளுக்கு முன்னர் ‘அம்மா வந்தாள்’ நாவலை முதல்முறையான வாசித்தபோது, எழுதப்பட்ட காலத்தை கணக்கிலெடுத்து, மிகவும் வியந்து ரசித்தேன். அக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து எழுதிய ஆசிரியரின் துணிச்சல் எனக்குள் ஒருவித உற்சாகத்தைக் கொணர்ந்தது.ஆசிரியரால் அலங்காரம் பாத்திரத்தின் மீது ஒருவித பரவசத்துடன் கூடிய புனிதத் தன்மையை ஏற்றித் தான் படைக்க முடிகிறது. இதை சக்தி உபாசனைக்குச் சமமாகச் சில விமரிசகர்களும் வாசகர்களும் சொல்லலாம். ஆனால், இந்தக் கூடுதல் கவனம் பாத்திரத்திலும் கதையோட்டத்திலும் சிறப்பாகக் கூடிவந்திருக்க வேண்டிய இயல்பை மழுங்கடிக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆசிரியரின் மற்ற நாவலின் பாத்திரங்களை வாசிக்கும் போது இந்நாவலில் நாம் இதை மேலும் நன்றாக உணரமுடியும்.

பாபுவுக்கு தங்கம், யமுனா என்று இரு பெண் பாத்திரங்களை உருவாக்கும் போதும், சட்டத்திற்கு சின்னண்ணி, யமுனா ஆகிய இரு பெண் பாத்திரங்களை உருவாக்கும் போதும் தி.ஜா காட்டும் கவனம் முற்றிலும் வேறொரு தளத்தில் இருப்பதை உணர முடியும். அதே இயல்போ ஆழமோ அழுத்தமோ சிவசு, தண்டபாணி ஆகிய இரு ஆண்கள் பங்கேற்கும் அலங்காரத்தின் வாழ்வைச் சித்தரிக்கும் போது ஆசிரியரிடம் இருப்பதில்லை. முக்கிய இடங்களில் கூட பூசி மெழுகிக் கொண்டே போகிறார். ஆகவே, வாசிக்கும் போது ஒருமாதிரி தட்டையாகத் தோன்றுகிறது. ஆசிரியருக்குள் இருக்கும் ஆண் மனதுக்குள் உருவாகியிருக்கும் பல்வேறு மதிப்பீடுகள் தான் அவரிடம் இந்தப் பெரும் வேறுபாட்டைக் கொணர்கின்றன.

அப்பு வேதம் படித்து வந்ததும் அவன் காலடியில் தன்னைப் போட்டுப் பொசுக்கிக் கொள்ள நினைக்கும் அலங்காரம், அவன் இந்துவைத் தேர்ந்தெடுத்துமே காசியை நாடுகிறாள். தானே பார்த்து அவனது திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தால் அவளுக்கு காசிக்குப் போக வேண்டிய நிலையே இல்லை என்ற கருத்தாக்கமே இளைய தலைமுறைக்குப் புரியாது. ஒரு விதவையான இந்துவை அப்பு ஏற்றுக் கொள்வதால் அலங்காரம், தான் காண விரும்பும் தனக்குள் இருக்கும் அப்பு சட்டென்று மாறி விடுவதாக ஏன் நினைக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிய கேள்வி வாசகனுக்குள் கண்டிப்பாக எழும்.

சுமார் ஏழெட்டாண்டுகளுக்கு முன்னர் ‘அம்மா வந்தாள்’ நாவலை முதல்முறையான வாசித்தபோது, எழுதப்பட்ட காலத்தை கணக்கிலெடுத்து, மிகவும் வியந்து ரசித்தேன். அக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து எழுதிய ஆசிரியரின் துணிச்சல் எனக்குள் ஒருவித உற்சாகத்தைக் கொணர்ந்தது.எழுதப்பட்ட காலத்தில் புரட்சியாகவும் அதிர்ச்சியாகவும் இருந்திருக்கும் அலங்காரம் பாத்திரம். ஆனால், இக்காலத்திலும் அதேபோன்ற தாக்கத்தைக் கொணருமா என்றால் சந்தேகம் தான். அரைநூற்றாண்டுக்கு முன்பு நடந்திருக்கக் கூடியதென்ற பிரக்ஞையுடன் வாசித்தால் வாழும் பாத்திரங்களாகத் தோன்றலாம். கலாசாரப் பின்னணி அறியாமல் இந்நாவலின் பாத்திரங்களைப் புரிந்து கொள்வது சற்றே கடினமாக இருக்கலாம். அந்தக் காலகட்டத்து தமிழ் சமூகம் குறித்தும், மரபுகள், நெறிகள், விழுமியங்களெனக் கருதப்பட்ட எதையும் அறிந்திருக்க முடியாத இந்தியாவுக்கு வெளியில் பிறந்து வாழும் இளையோருக்குப் புரியாமல் போகவே அதிக வாய்ப்புண்டு. இவை தற்காலத்துக்குப் பொருந்தாத மதிப்பீடுகள் என்று கூட அவர்களுக்குத் தோன்றும். திருமணம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு, மறுமணம் போன்றவற்றைக் குறித்து இன்றைக்கு இருக்கும் கருத்தோட்டங்களே வேறு. இந்துவுக்கு அப்புவைப் பிடிக்கிறதா, திருமணம் செய்து கொள்ளட்டுமே, திருமணம் வேண்டாமென்றால், சரி வேண்டாம்; ஒருவருக்கொருவர் பிடித்தால், பகிரங்கமாகச் சேர்ந்திருக்கட்டுமே, அதற்கேன் பவானியம்மாளுக்குள் இத்தனை குழப்பங்கள் என்று தான் இளம் வாசகன் வினவுவார்கள். அதேபோல அலங்காரம் பேசாமல் தண்டபாணியை விவாகரத்து செய்து விடலாமே, எதற்கு அவளுக்கு இந்த இரட்டை வாழ்க்கை என்றும் கேட்பர். அல்லது, இதென்ன பெரிய விஷயமா என்று கேட்டுவிட்டு நகர்ந்து விடுவர். தி.ஜா அந்தப் பாத்திரத்தைத் தூக்கிப் பிடிக்கும் அளவில் பத்தில் ஒருபகுதி கூட அவர்களுக்குள் அலங்காரம் உயரவும் மாட்டாள் உறையவும் மாட்டாள் என்றே தோன்றுகிறது. நம்பிக்கை விசுவாசம் போன்ற மதிப்பீடுகளின் மீது கட்டமைக்கப் படும் நெறிகள் கொண்ட நவீன சமூகம் அவளை நம்பிக்கைத் துரோகி என்று வேண்டுமானால் சொல்வர்.

இவை அனைத்தையும் கடந்தும் கூட ஒரு வாசகியாகவும் படைப்பாளியாகவும் ‘அம்மா வந்தாள்’ எனக்கு முக்கிய ஆக்கம் என்ற எனது கருத்தில் எந்தவித ஐயமுமில்லை.


அம்மா வந்தாள் - நாவல்
ஐந்திணைப் பதிப்பக வெளியீடு
பக்கங்கள் 172+6 விலை ரூ.90/-


'வாசிப்பை நேசிப்போம்' இயக்கத்திற்காக சிங்கப்பூர் அங்மோகியோ நூலகத்தில் 15-08-2010 அன்று நடந்த வாசகர் வட்டக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட
கட்டுரை


http://sankari01sg.blogspot.com/
http://jeyanthisankar.wordpress.com/
http://kafafa.com/jeyanthisankar/
http://jeyanthisankar.blogspot.com/

jeyanthisankar@gmail.com

 
aibanner

 ©>© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்