இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2007 இதழ் 89 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சிறுவர் புதினம்!
ரினோ!
- கனிஷ்கா (தென்காசி, தமிழ்நாடு) -

அத்தியாயம் 3!

எழுத்தாளர் கனிஷ்காவின் சிறுவர் புதினம்: ரினோ"இது நட்புத்துரோகம் இல்லையா? சுதர்சனனுக்குத் தெரிஞ்சா என்னஆகும்?"

"ஒன்றும் ஆகாது. நாம் ஃபார்முலாவை எடுத்துக்கொண்டு தேசிகன்கிட்ட செல்வோம். அவங்கிட்ட பணத்தை வாங்கிட்டு யாருக்கும் தெரியாத இடத்துக்குப் போய் நம்முடைய வேலையைத் தொடங்குவோம்."

"ராம்நாம் அவசரப்பட வேண்டாம். கொஞ்ச நாள் காத்திருப்போம்.சுதர்சனனிடம் திரும்பவும் பேசுவோம்.
அவன் ஒத்துக்கொள்ளலைன்னா நீ சொல்வதுபோல செய்யலாம்."முகுந்தனின் யோசனையை அரைமனதோடு ஒத்துக்கொண்ட ராம்"சரி பார்க்கலாம்" என்றான்.

ஆனால் பலமுறை வற்புறுத்தியும் சுதர்சனன் அவர்களது விருப்பத்திற்கு உடன்படவில்லை. அதனால் ராமும் முகுந்தனும் தேசிகனைசந்தித்து தங்களது விருப்பத்தை அவனிடம் தெரிவித்தனர்.ஆனால் தேசிகன் சுதர்சனனும் வந்தால்தான் அவர்கள் கேட்கும்உதவியைச் செய்யமுடியும் என்றான்.

காரணம் அவர்கள் மூவரில்சுதர்சனன் மிகவும் சாமர்த்தியம் நிறைந்தவன் மட்டுமல்ல நேர்மையானவனும்கூட.கல்லூரியில் படிக்கும்பொழுது சுதர்சனன் தேசிகனை கண்டுகொள்ளவே மாட்டான். தேசிகன் ஏதாவது தொந்தரவு கொடுத்தாலும் அதையும் அலட்சியப்படுத்தி விடுவான்.

அதையெல்லாம் மனதில் வைத்திருந்ததேசிகன் சுதர்சனனை எபபடியாவது தன்னிடம் உதவிபெற வைக்கவேண்டும் என்று எண்ணினான்.அதனால் ராம்முகுந்தனிடம் "சுதர்சனனை அழைத்து வாருங்கள்.நீங்கள் கேட்ட உதவி உடனே கிடைக்கும்." என்றான்.

"சுதர்சனன் இதற்கு ஒருபோதும் சம்மதிக்கமாட்டான். அதனால்அவனுக்கே தெரியாமல் இந்த ஆராய்ச்சியைத்
தொடங்க நாங்க முடிவுபண்ணியிருக்கிறோம்." என்று ராம் சொன்னதும்"இல்லை. அவனுக்குத் தெரியவேண்டும். அவனுடைய ஆசைஎன்னோட உதவியால்தான் நிறைவேறப் போகுதுன்னு அவன் தெரிஞ்சுக்கணும்." என்று தேசிகன் சொன்னது அவனுடைய பழி வாங்கும்குணத்தை வெளிப்படுத்தியது.

ராமும் முகுந்தனும் 'தேசிகனின் பழைய குணம் மாறவில்லை.அவன் நேரத்திற்கு தகுந்தாற் போல் வேஷமிட்டுக் கொண்டிருக்கிறான்.இவனிடம் உதவி கேட்டிருக்க வேண்டாமோ அவசரப்பட்டுவிட்டோமோ'என்று எண்ணினார்கள்.

அவர்களின் எண்ணம் அறிந்தவன்போல் தேசிகன் அவர்களிடம்"கவலைப்படாதீங்க உங்களோட ஆசை நிச்சயம் நிறைவேறும். என்னைநம்பி வந்திட்டிங்கல்ல. ஆனால்.. அதற்கு முன்பு நான் நிறைவேற்றவேண்டிய முக்கியமான காரியம்
ஒண்ணு இருக்கு. அதை முதல்லமுடிச்சிக்கிறேன்.

அப்பொழுதுதான் உங்களோட ஆராய்ச்சிக்கு எந்த இடையூறும் ஏற்படாது." என்று சொல்லிவிட்டு முகுந்தனின் செல்போனை பிடுங்கி சுதர்சனனை அழைத்தான்.

"ஹலோ தோழா என்ன உன் நல்ல குணங்களெல்லாம் இன்னும்மாறல போலிருக்கு. இந்த காலத்தில இப்படியெல்லாம் இருந்தால்பிழைக்கிறது கஷ்டம் தெரியுமா?" என்று சற்று நக்கலுடன் கேட்டான். "ஏய்நீ யார்? இது முகுந்தன் மொபைல் நம்பராச்சே." என்று சுதர்சனன் மறுமுனையில் கோபமுடன் பேசினான்.

"சுதர்சனா இப்பவே கோபப்பட்டா எப்படி. நான் சொல்லப்போறதைக்கேட்டு நீ நிறைய.கோபப்பட வேண்டியிருக்கும். உன் உயிர்த்தோழர்கள் அதுதான் ராம்முகுந்தன் இருவரும் இப்போ எங்கே இருக்காங்கதெரியுமா?" தேசிகனின் பேச்சில் வில்லத்தனம் வெளிச்சம் காட்டியது.

ராம்முகுந்தன் இருவருக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்ற பயத்தில் சுதர்சனன் தேசிகனிடம் "டேய் முதலில் நீ யார்என்று சொல். அவர்கள் இருவருக்கும் என்ன ஆச்சு?" என்று கோபம்தெரிக்க கேட்டான்.

"அமைதி நண்பா அமைதி. ஓ.. .. நான் யாருன்னு சொல்லல இல்ல. தேசிகன் உன் அலட்சியத்திற்குரிய தேசிகன். உன் நண்பர்களுக்கு
ஒன்றும் ஆகலை அவங்க பிழைக்கத் தெரிஞ்சவங்க. புத்திசாலித்தனமாஎன்கிட்ட வந்து சேர்ந்துட்டாங்க. ஆனால்.. உனக்குத்தான் ஏதோகெடுதல் ஆகப்போவதாக என் மனசு சொல்கிறது.""தேசிகா நீ செய்யும் அநியாயத்திற்கு முதல்ல உனக்குத்தான்கெடுதல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. என் நண்பர்களுக்கு உன்னால்ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் நான் உன்னை சும்மா விடமாட்டேன்"

"சுதர்சனா! எதிரியான என் குணத்தைப் புரிந்துகொண்ட அளவுக்கு உன் அருகிலேயே இருந்த உன் நண்பர்களின் குணத்தை நீ
அறியலியே.. உன்னை நினைச்சா எனக்குப் பாவமா இருக்கு."

"என்ன உளர்றே.""உளறல் இல்லை நண்பா உண்மை. அந்த உண்மை உனக்குத்தெரியுமா?. மனசை கொஞ்சம் திடமா வைச்சிக்கோ. இது உன்னுடையஉயிருக்கே உலை வைக்கிற உண்மை. உனது உயிர் நண்பர்கள் என்று நினைச்சிட்டிருக்கியே அவங்க ரெண்டுபேரும் இப்பொழுதுஇங்குதான் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லை உங்கள் கண்டுபிடிப்புக்கான ஃபார்முலாவும் இப்பொழுது என்கையில்."

"டேய். நீ அவங்களைக் கடத்தி வந்துட்டியா?"

"அதற்கு அவசியமே இல்லாமல் செய்துட்டாங்க. அவங்களே என்கிட்ட உதவிகேட்டு வந்துட்டாங்க. இன்னொன்று உனக்குத் தெரியுமா?உனக்குத் தெரியாமலே அவங்க ரெண்டுபேரும் ஆராய்ச்சியைத் தொடங்கப் போறாங்களாம். உன்னை நினைச்சா எனக்குப் பாவமாக இருக்கு."

"நிச்சயமாக அவங்க அப்படி செய்யமாட்டாங்க. நீதான் ஏதோ சதிசெய்கிறாய். இப்பொழுதே போலீஸில் சொல்லி நீ செய்த அக்கிரமங்களுக்கெல்லாம் உனக்குத் தண்டனை பெறச்செய்யிறேன்." என்று சுதர்சனன் சொல்லி முடிக்கும் முன்பு"சுதர்சன எங்களை மன்னிச்சிடு" என்று ராமின் குரல் கேட்டது.

சுதர்சனனுக்கு இதயத்தில் நெருப்பை அள்ளி வீசியது போலிருந்தது."ராம் தேசிகன் சொல்றது உண்மையா?" என்று கேட்டான்.
"சுதர்சனா சேதிகனின் சுயரூபம் தெரியாமல் உனக்குத் துரோகம்செய்துட்டோம்." என்று ராம் சொல்லிக்கொண்டிருக்கும்
போதே தேசிகன்அவனிடமிருந்து மொபைலை பிடுங்கினான்.

"என்ன சுதர்சனா! இப்பொழுது புரிகிறதா பணம் எதையும் செய்யும் என்று. இப்பொழுதும் ஒன்றும் ஆகிவிடலை. நீ மட்டும் சரின்னு சொல்.உனக்காக நான் எத்தனை கோடி வேண்டுமானாலும் தருகிறேன். உன்ஆராய்ச்சியைத் தொடங்கு. நீங்கள்
கண்டுபிடித்திருக்கும் இந்த ஃபார்முலா என்னை மிகவும் கவர்ந்துவிட்டது."

"டேய்நிறுத்துடாஸயாருக்கு வேணும் உன் பணம். துரோகிகள் உன்னுடன் சேர்த்து அவங்களையும் ஜெயிலுக்கு அனுப்புறேன்." என்றுசொல்லிவிட்டு மொபைலை நிறுத்தினான்.

பல ஆண்டுகள் சகோதரர்கள் போல் இருந்த நண்பர்கள் செய்ததுரோகம் சுதர்சனனின் உள்ளத்தில் ஆயிரம் தேள்கள் கொட்டுவது போல் இருந்தது. பல இரவும் பகலும் கஷ்டப்பட்டு எழுதிய ஃபார்முலா.இப்பொழுது ஒரு கொடூரன் கையில். நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சில் வேதனை குடிகொண்டது.

'அந்த துரோகிகளை சும்மா விடக்கூடாது' என்று நினைத்தவன்காவல் நிலையம் செல்ல புறப்பட்டான். அப்பொழுது அவன் மனைவி"என்னங்க வெளில எங்காவது போறீங்களா? கொஞ்சம் போற வழியில் கோயில்ல என்னை இறக்கிவிட்டுட்டு போயிடுங்க" என்று அவன்பதிலுக்கு காத்திராமல் காரில் ஏறி உட்கார்ந்துவிட்டாள். சுதர்சனன்இருந்த மனநிலையில் அவளை எதுவும் சொல்ல முடியவில்லை.

சுதர்சனனின் அமைதியையும் இருக்கமான முகத்தையும் பார்த்தஅவனது மனைவி " என்னஸ ஒருமாதிரி இருக்கீங்க. ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்டாள்."ஒன்றுமில்லை" என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னான்.அதே நேரம் அவர்களுக்கு எதிரில் எமன் போல வந்து கொண்டிருந்தது ஒரு லாரி. சுதர்சனனை அழிக்க தேசிகன் அனுப்பிய எமன்தான் அந்த லாரி என்பது யாருக்கும் தெரியாது. கண் இமைக்கும்நேரத்திற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.சுதர்சனனின் மனைவி அதே இடத்திலேயே உயிர் துறந்தாள்.சுதர்சனன் தன் தந்தைக்காக உயிரைப்பிடித்திருந்தான் போலும். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட சுதர்சனன் உயிருக்குப் போராடிய
நிலையிலும் தந்தையிடம் ராம்முகுந்தன் இருவரும் செய்த துரோகத்தையும்தேசிகனின் கொடூர எண்ணத்தையும் நடந்தது விபத்தல்ல நண்பர்களின் துரோகத்தால் ஏற்பட்ட கொலை. என்று சொல்லிவிட்டு உயிர்துறந்தான்.

ஆனால் காவல்துறை அதை விபத்து என்று பைலையே மூடிவிட்டனர். தேசிகனின் அரசியல் செல்வாக்கை மீறி அவனை எதுவும் செய்யமுடியாது. அப்படி அவனை எதிர்த்தாலும் ரிஷிக்கும் எங்களுக்கும்ஆபத்து என்பதால் ரிஷியின் பெற்றோர் இறந்தவுடன் அங்குள்ள வீடுநிலம் அனைத்தையும் வித்துட்டு இங்கே வந்துட்டோம்.உயிர் நண்பர்களின் பேராசையே என் மகனையும் மருமகளையும் அழித்துவிட்டது. இன்று அந்த துரோகிகள் தேசிகனின் பிடியில்சிக்கியிருக்காங்க. தேசிகனால் அவங்க அழியப்போறது உறுதி.
அனைத்தையும் சொல்லிமுடித்திருக்கையில் பாட்டியின் கண்களில்கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

பாட்டி மட்டுமாஸரிஷியும் தனது பெற்றோருக்கு ஏற்பட்ட கதியைக்கேட்டு அழுதான். ஆனந்தும் மிகுந்த வேதனையுற்றார். இருந்தாலும்பாட்டிஇ ரிஷி இருவரையும் சகஜ நிலைக்குத்திருப்ப நினைத்தார்."சரி. நடந்ததை இப்போ விட்டு விடுவோம். நடக்கப் போறதைப்பார்ப்போம். இப்பொழுது தேசிகன் அவர்கள் இருவரையும் எங்கே வைத்திருப்பான். முதலில் அதைக் கண்டுபிடிக்க வேண்டும்." என்றார்." அவன் அவர்களை எங்கு வைத்திருந்தால் என்ன. அவர்கள்அழிந்தால் போதும்" என்று வெறுப்புடன் கூறினாள் பாட்டி.

அதற்கு ரிஷி " இல்லை பாட்டி அவர்களை நிச்சயம் கண்டுபிடிக்கணும். அந்த தேசிகனையும் அழிக்கணும்"என்று ஏதோ சபதம் எடுப்பவன்போல் கூறினான். ரிஷி கூறியதைக் கேட்ட பாட்டிக்கு மனதில் கவலை ஏற்பட்டது." ரிஷி.வேண்டாம் தேசிகன் கொடூரமானவன். அவங்கிட்ட மோதவேண்டாம். உன்னையும் இழந்துவிட நான் விரும்பல. இதையெல்லாம்மறந்துட்டு உன்னோட படிப்பில் மட்டும் கவனம் செலுத்து" என்று ரிஷியிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.

"ஆமாம் ரிஷி. அவங்க சொல்றதுதான் சரி. நீ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதே. இவங்களைக் கண்டுபிடிச்சு அழிப்பதுதான் இனிஎன் முதல் வேலை." என்று ஆனந்த் கூறினார்.

"அங்கிள். காசி ஜான் என்று ரெண்டு கிரிமினல்களை பிடிச்சுவைச்சிருக்கீங்களேஸ அவங்ககிட்ட விசாரிச்சாகூட தேசிகன் எங்கிருக்கான்னு தெரிஞ்சிக்கலாம். ஏன்னா அவங்க தேசிகனோட கையாட்கள்."என்று ரிஷி சொன்னவுடன்

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் ரிஷி?" என்று கேட்டார்.

"முதல்ல அவங்களை விசாரிங்க. அப்புறம் எல்லாம் சொல்றேன்."

"சரி.நீங்க எதுக்கும் கவலைப்படாம இருங்க. நான் எல்லாம் பார்த்துக்கிறேன்." என்று சொல்லிவிட்டு ஆனந்த் கிளம்பினார்.பாட்டி சொன்னவற்றை உள்ளேயிருந்து கேட்டுக்கொண்டிருந்தரினோ ஆனந்த் சென்ற அடுத்த செகண்ட் கண்களில் கண்ணீர் வடியபாட்டி ரிஷி இருவரிடமும் ஓடி வந்தது.

அதே நேரம் தொலைபேசி ஒலித்தது.பாட்டிஎடுத்துபேசினாள்.பேசிமுடித்தவள் ரிஷி ரினோ இருவரையும் பார்த்தாள். இருவருக்கும்ஒன்றும் புரியவில்லை."என்ன பாட்டி என்ன விஷயம்?" என்று ரிஷி கேட்டான்.

"ஊர்ல உன் அத்தைக்கு ஏதோ ஆபரேஷனாம். அதனால ஒருமாதம் அங்கே வந்து இருக்கணுமாம். அதுதான் என்ன செய்றதுன்னுதெரியல."

"இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு பாட்டி. நீங்கதானே அவங்களுக்கு உதவிசெய்யணும். அதனால உடனே கிளம்புங்க." என்றுரிஷி கூறினான்.

"ஆமாம் பாட்டி அத்தை பாவம் அவங்களுக்கு உதவி செய்யவேற யார் இருக்காங்க." என்று ரினோ கூறியதும்"டேய்என்ன ரெண்டு பேரும் விளையாடுறீங்களா. உங்களைவிட்டுட்டு நான் எப்படிப் போகமுடியும்?. அதனால ரிஷிக்கு பரீட்சைமுடியட்டும். எல்லாரும் போகலாம். இன்னும் ரெண்டு நாள்தானே.சமாளிச்சுக்கச் சொல்லிடலாம்." என்று சொல்லிவிட்டு பாட்டி உள்ளேசென்றுவிட்டாள்.

ரினோ ரிஷியின் அருகில் வந்து அவனிடம் மெதுவாக "ரிஷி! இதுதான் நல்ல சந்தர்ப்பம். உனக்குப் பரீட்சை முடிந்தவுடன் பாட்டியை எப்படியாவது ஊருக்கு அனுப்பிடணும். அப்படினாத்தான் நாம தேசிகனைக்கண்டுபிடிக்க முடியும்."என்றது.

"நிச்சயமா அவனையும் அந்த துரோகிகளையும் கண்டுபிடிச்சுஅழிப்பதுதான் என் முதல் வேலை" என்று பேசினான்.அன்று இரவு ரிஷிக்கு தூக்கமே வரவில்லை.

"ரினோ" என்று மெல்லிய குரலில் அழைத்தான்"என்ன ரிஷி நீ இன்னும் தூங்கலியா?"என்று கேட்டது ரினோ.

"தூக்கம் வரல ரினோ. ரினோ நீ யார்? அந்த பறக்கும் தட்டு எப்படிஇங்கு வந்தது. அது தேசிகனை அழிக்கப் பயன்படுமா? உனக்கு மட்டும் எப்படி பறக்கும் சக்தி கிடைத்தது? என்னால் பறக்க முடியுமா? ரினோ நான் அந்த பாவிகளை அழிக்கணும். எனக்கு ஏதாவது உதவிசெய்யேன்."

"ரிஷி! இன்னும் ரெண்டு நாள் பொறுத்திரு. உனக்குள் இருக்கும்சக்தியை நீயே அறிவாய். நீ இப்பொழுது எதைப்பற்றியும் கவலைப்படாதே. தேசிகனுடைய அழிவு நிச்சயம் உன் கையால்தான்"ரினோவின் வார்த்தைகள் ரிஷிக்கு தைரியத்தை ஊட்டியது.

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டான் ரிஷி. ரினோ வழக்கம்போல் எங்கோ சென்றிருந்தது. ரிஷி பாட்டியை அழைத்தான். ஆனால்பாட்டியிடமிருந்து பதில் இல்லை.பாட்டியின் அறைக்குச் சென்று பார்த்தான். தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடும் பாட்டி அன்று ஏனோ எழுந்திருக்கவில்லை. நன்றாகப் போர்த்தி படுத்திருந்தாள்.பயந்துபோன ரிஷி பாட்டியின் அருகில் சென்று "பாட்டிஸ" என்றுஅழைத்தான் அப்பொழுதும் பதிலில்லை. ரிஷி அழுதேவிட்டான். பாட்டிபோர்த்தியிருந்த போர்வையை விலக்கி பாட்டியைத் தொட்டுப்பார்த்தவன்அதிர்ந்தே போனான்.பாட்டியின் உடம்பு அனலாகக் கொதித்தது. ரிஷி தொட்டவுடன்பாட்டி முனங்கினாள்.

அப்பொழுது உள்ளே நுழைந்த ரினோ"ரிஷி பாட்டிக்கு என்ன ஆச்சு?" என்று பதறியபடி ஓடி வந்தது."ரினோ பாட்டிக்கு காய்ச்சல். உடம்பு ரொம்பச் சுடுது. எனக்குப்பயமா இருக்கு ரினோ." என்று அழுதான் ரிஷி.
"ரிஷி! அழாதே முதலில் டாக்டருக்கு போன் பண்ணி வரச்சொல்லலாம்" என்று சொல்லிக்கொண்டே டைரியை எடுத்து அதில் எழுதிவைத்திருந்த டாக்டர் கிருஷ்ணனின் நம்பருக்கு டயல் செய்தது ரினோ.டாக்டர் கிருஷ்ணன் அவர்களது குடும்ப நண்பர்."ஹலோ" என்றது ரினோ.ரிஷி ஓடி வந்து ரிசீவரைப் பிடுங்கிக் கொண்டான்.

"உன் குரலைக்கேட்டா வெட்னரி டாக்டர்தான் வருவார். நானேபேசுறேன்." என்றான் ரிஷி.போன் பண்ணிய சிறிது நேரத்தில் டாக்டர் வந்தார். பயப்பட ஒன்றுமில்லை அதிகமான வேலைப்பழுதான் காய்ச்சலுக்குக் காரணம். ஒருஊசி போடுகிறேன் எல்லாம் சரியாகிவிடும்." என்று சொல்லிவிட்டு ஊசிஎடுத்து போடப்போனார்.டாக்டர் வந்ததும் பாட்டியின் கட்டிலுக்கடியில் ஒளிந்திருந்த ரினோ ஊசி என்றதும் 'ஸ்'என்று சத்தம் எழுப்பியது.

ரிஷி டாக்டருக்குத்தெரியாமல் ரினோவை ஒரு உதை விட்டான்.

"ரிஷி அது என்னப்பா சத்தம்?" என்று ஊசி போட்டுக்கொண்டேடாக்டர் கேட்டார்.

"ஒன்றுமில்லை அங்கிள் அங்கே வேற ஏதோ சத்தம்." என்று சமாளித்துவிட்டு " பாட்டிக்கு மாத்திரை ஏதாவது கொடுக்கணுமா அங்கிள்?" என்று கேட்டான்.

" ஆமா ரிஷி இந்தா இந்த மாத்திரையைக் கொடு. நான் சாய்ந்திரம் வந்து பார்க்கிறேன். பாட்டியை நல்லா ரெஸட் எடுக்கச்சொல்." என்றுசொல்லிவிட்டுக் கிளம்பினார்.சிறிது நேரத்தில. பாட்டி மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். ரினோவும் ரிஷியும் அருகிலேயே அமர்ந்திருந்தனர்.வாடிய முகத்துடன் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து "டேய் எனக்கு ஒன்றுமில்ல. லேசா காய்ச்சல்தானே. சரியாயிடும். வாங்க முதலில்உங்களுக்குச் சாப்பிட ஏதாவது செஞ்சுதர்றேன்"என்று எழுந்திருக்கமுயன்றாள். ஆனால் உடம்பு அசதியாக இருந்தது. முடியவில்லை.உடனே ரிஷி "பாட்டி! நீ ரெஸட் எடு நானே பார்த்துக்கொள்கிறேன்.உனக்கு முதலில் டீ போட்டுத் தருகிறேன். பிரெட் சாப்பிட்டு மாத்திரையைப் போட்டுட்டுத் தூங்கு." என்று சொல்லிக்கொண்டே சமையலறையை நோக்கிச் சென்றான்.

"ரிஷி நான் உனக்கு உதவி செய்றேன்"என்று ரினோ அவன் பின்னாடியே ஓடியது. ரிஷி டீ போடுவதற்காக டீத்தூள் டப்பாவைத் தேடினான். அப்பொழுது மிளகாய்ப்பொடி டப்பா அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்து "ரினோ இந்தா இதைச் சாப்பிடு டேஸ்டா இருக்கும்." என்றுரினோவிடம் கொடுத்தான்.ரினோவும் ஏதோ சாப்பிடத்தான் தருகிறான் என்று நினைத்து டப்பாவிலிருந்து கொஞ்சம் தட்டி வாயில் போட்டது. காரம் நாக்கை எரித்தது. ஆனால் ரிஷியிடம் காட்டிக்கொள்ளாமல் சிறிது தண்ணீர்எடுத்துக் குடித்து விட்டு
"ரிஷி இது என்னது? நிஜமாவே ரொம்ப டேஸ்டா இருக்கு." என்றது. ரிஷிக்கு குழப்பம். 'வேறு எதையாவது மாற்றிக்கொடுத்து விட்டோமோ' என்று சந்தேகப்பட்டு ரினோவிடமிருந்து டப்பாவை வாங்கிஅதில் சிறிது எடுத்து நாக்கில் வைத்துப்பார்த்தான்.

"ஆ.... எரியுதே" என்று சொல்லிக்கொண்டே தண்ணீர் எடுத்துக்குடித்தான். ரினோ கைகொட்டி சிரித்தது."டேய் வாலா சிரிச்சது போதும் நிறுத்துடா" என்று ரிஷி அதட்டினான்." ரிஷி அங்க பாரு மாஷா டீச்சரோட பாட்டுச்சத்தம். உனக்குகேக்குதா?""இப்படிக் கத்தினா ஊருக்கே கேக்கும். சே! இவங்களுக்கு மெதுவாகவே பாடத்தெரியாதா. முதல்ல இதுக்கு ஒரு வழி பண்ணனும்.""ரிஷி நீ சாப்பாடு ரெடி பண்ணிட்டிரு நான் இதோ வந்திடுறேன்."என்று சொல்லிவிட்டு ரினோ மறைந்தது.

'இவன் திடீர்னு எங்க போறான்? ஏதாவது வம்பு செய்துட்டுவரக்கூடாதே' என்று எண்ணினான் ரிஷி.மாஷா டீச்சர் தன்னை மறந்து கண்களை மூடிக்கொண்டு 'ஆ....ஆ என்று ராகம் இழுத்து பாடிக்கொண்டிருந்தாள். அதேநேரம் அங்கு சென்ற ரினோ கையில் வைத்திருந்த மிளகாய்ப் பொடியை மாஷாவின் வாயில் கொட்டிவிட்டு மறைந்துவிட்டது.

"ஐயோ.... அம்மா.எரியுதே ஏய் யாரது" வாயில் ஏற்பட்ட எரிச்சல் தாங்காமல் கத்தினாள் மாஷா டீச்சர்.மாஷா டீச்சரின் அலறல் கேட்ட ரிஷி 'என்ன ஆச்சு இந்த டீச்சருக்கு. ஏன் திடீர்னு கத்துறாங்க? ஏய் ரினோ நீ போய் ஏதாவதுசெஞ்சியா?' என்று அருகில் வந்து நின்ற ரினோவிடம் கேட்டான்.

"சே! சே! நான் ஏன் அங்க போகப்போறேன். அவங்க கண்ணைமூடிட்டுப் பாடியிருப்பாங்க அப்போ தேள் ஏதாவது கொட்டியிருக்குமோ என்னவோ" ரினோ இப்படிச் சொன்னாலும் ரிஷிக்கு அதன் மீதுசந்தேகம்தான்.

"நான் போய் என்னன்னு பார்த்துட்டு வந்துடுறேன்"என்று சொல்லிவிட்டு மாஷா டீச்சர் வீட்டை நோக்கி நடந்தான்.மாஷாவிடம் "டீச்சர்ஸஎன்ன ஆச்சு ஏன் கத்துனீங்க?" என்றுகேட்டான்.

"ரிஷி. நான் பாடிட்டு இருக்கும்போது யாரோ வாயில் மிளகாய்ப்பொடியைக் கொட்டிட்டாங்க எரியுது ரிஷி. கொஞ்சம் தண்ணீர் எடுத்துதாயேன்." என்று சொன்ன மாஷாவின் கண்களில் நீர் வடிந்தது."டீச்சர் இந்தாங்க முதல்ல தண்ணி குடிங்க. இனி ஒருவாரத்திற்குவாயே திறக்காதீங்க. நான் போய் இந்த வேலையைச் செய்தது யார்னுகண்டுபிடிக்கிறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க" என்று சொல்லிவிட்டுவீட்டுக்கு வந்தான் ரிஷி. எதுவுமே தெரியாததுபோல் அமைதியாக இருந்த ரினோவிடம்

"டேய். ஏண்டா அப்படி செஞ்சே?" என்று கேட்டான்.

"அவங்க பாடுறது எனக்குப் பிடிக்கல. பாட்டிக்கும் தொந்தரவாஇருக்கும். அவங்கபாடுறேன்னு சொல்லிட்டு இப்படிக்கத்தினா யாருக்குத்தான் எரிச்சல் வராது."என்றது ரினோ.

"உன் கர கர குரலைவிட அவங்க குரல் நல்லாத்தான் இருக்கு."

"ரிஷி நீ என்னை ரொம்ப கிண்டல் பண்ணினே அப்புறம் நானும்பாட ஆரம்பிச்சிடுவேன்." என்று சொல்லிவிட்டு"அப்படிப்போடு போடு.. மாஷா டீச்சர் வாயில் மிளகாப்பொடியைப் போடு" என்று பாட ஆரம்பித்தது. ரிஷி இரு காதுகளையும் பொத்திக்கொண்டு "டேய் கண்ணா வேண்டாண்டா. உன் குரல் பெஸ்ட் கண்ணா பெஸ்ட். இதோடு நிறுத்திக்கோ. இல்லைன்னா அடுத்து மிளகாப்பொடி இல்ல ஆஸிட்தான் ஊற்றுவேன் உன் வாயில்." என்றான்.

"சரிஇ ரசிக்கத்தெரியாத உங்கிட்ட நான் பாடலை. பசிக்குது சாப்பாடுரெடியா?""என்ன ஆனாலும் திங்கிறதில மட்டும் கவனமா இருப்பியே."ரினோவுக்கு சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு பாட்டிக்கு மாத்திரையைக் கொடுத்தான். மாலையிலும் டாக்டர் வந்து பார்த்துவிட்டு ஒரு ஊசியைப்போட்டுவிட்டு போனதும் பாட்டி சற்று தெம்பானாள். எழும்பி உட்கார்ந்தவள்ரிஷி ரினோ இருவரிடமும்"என்னடா ரெண்டுபேரும் சாப்பிட்டீங்களா?" என்று கேட்டாள்."ஆமா பாட்டி. உங்களைவிட ரிஷி நல்லா சமைக்கிறான்" என்றுசொல்லிய ரினோ "பாட்டி டிவி போடட்டுமா?" என்று கேட்டது"ஏற்கனவே டிவியில் கண்ட கண்ட நிகழ்ச்சியைப் பார்த்து வாய்ரொம்ப பேசுற. அதனால இப்ப நியூஸ் மட்டும் கேட்கலாம்." என்றுசொல்லிவிட்டு ரிஷி டிவியை ஆன் செய்தான்.

"க்கும்.. காலையில சொன்ன செய்தியைத்தான் திரும்பத் திரும்பசொல்லிட்டு இருப்பாங்க." என்று முணுமுணுத்தது ரினோ.டிவியில் செய்தி வாசித்துக்கொண்டிருந்த பெண்மணி ' மக்களுக்குஒரு முக்கிய அறிவிப்பு' என்றதும் அனைவரின்
கவனமும் அவள்பக்கம் திரும்பியது.

'சென்னை நகரில் புதிதாக ஒரு வினோத மனிதன் தோன்றியுள்ளான். அவனை மனிதன் என்பதா? மிருகம் என்பதா? ஒரு பெரியமிருகம் போல்தான் இருக்கிறான். ஆனால் அவனது செய்கைகளும்பேச்சும் அவனை மனிதனாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. அவன்இருபது அடி உயரமும் இரும்பு போன்ற உடம்புடனும் மிகவும்பலமுள்ளவனாகவும் காணப்படுகிறான்.

அவன் பறக்கும் சக்தியையும் பெற்றுள்ளான். அவன் மக்களைத்துன்புறுத்த நினைக்கலாம். அதனால் யாரும் வெளியில் அவசியமின்றிநடமாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.' என்ற அறிவிப்பைத் தொடர்ந்து டிவியில் அந்த மனிதனின் உருவம் காட்டப்பட்டது.

'யார் இவன்? வேற்றுக்கிரகத்து மனிதனா? அல்லது மாயாவியா?அல்லது கதைகளில் வருவதுபோன்ற பூதமா? ஏற்கனவே ரினோஎன்று யாரோ ஒருவன் மாயாவிபோல் அவ்வப்பொழுது வந்துகொண்டிருக்கிறான். இப்பொழுது இந்த ராட்சஸ மனிதன். இவர்களெல்லாம் யார்?' என்ற கேள்விகளும் எழுத்து வடிவில் டிவியில் ஓடியது. அடுத்து அவன் பேசினான். "ஹா...ஹா....." அவனது சிரிப்பு இடி இடிப்பது போல் இருந்தது.

"எனதருமை மக்களே! நான்தான்'ராக்போ'. நான்தான் உங்கள் கடவுள். நீங்கள் இனிமேல் என்னைத்தான்வணங்கவேண்டும். என்னை நன்றாகப் பாருங்கள்." கர்ணகடூரமாகஇருந்தது அவனது குரல்.அவனைக்கண்டு மக்கள் அலறி ஓடினார்கள்."ஓடாதீர்கள்.வாருங்கள்.... வந்து என்னை வணங்குங்கள். பயப்படாதீர்கள் நான் உங்கள் கடவுள். நான் இப்பொழுது போகிறேன் மறுபடியும் வருவேன். என்னை வணங்கத் தயாராகுங்கள்"என்று சொல்லிவிட்டு பறந்து காணாமல் போனான்.

டிவியை அணைத்துவிட்டு ரிஷி "ரினோ யாரிவன்?. எங்கிருந்துவந்திருப்பான்.?" என்று கேட்டான்."தெரியல ரிஷிஸஆனால் கண்டுபிடுச்சுடலாம். அதுக்கு முன்னாடிபாட்டியை ஊருக்கு அனுப்பணும்." என்று பாட்டிக்கு கேட்காமல் ரிஷியிடம் ரகசியமாக சொன்னது ரினோ."என்னடா ரகசியம் பேசுறீங்க ரெண்டுபேரும்"பாட்டி கேட்கும்பொழுது போன் அலறியது. ரிஷி எடுத்து பேசினான். அத்தைதான் பாட்டியை வரச்சொல்லி நினைவுபடுத்தினாள்.

"யாருடா போன்ல?""அத்தைதான் பாட்டி. நீங்க உடனே புறப்பட்டு வரணுமாம்""உங்களை விட்டுட்டு எப்படிடா போறது?""பாட்டி கவலைப்படாம போயிட்டு வாங்க. ரிஷி உங்களைவிடசூப்பரா சமைக்கிறான். நாங்க சமாளிச்சுக்குவோம்." என்றது ரினோ."ஏண்டா என்னை அனுப்புறதில அப்படி என்ன உனக்குசந்தோஷம். உன்னை நினைச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு. நீஏதாவது ஏடாகூடமா பண்ணி ரிஷியை தொந்தரவு பண்ணுவியே."

"ஐயோ! பாட்டிஸஅப்படியெல்லாம் எதுவும் செய்யமாட்டேன். அத்தைபாவம் இல்லியா. அதுதான் உங்களைஅவசரப்படுத்துறேன்."

"ஆமா பாட்டிஸ அத்தை பாவம் நீங்க காலையில கிளம்புங்க. ரினோவை நான் பார்த்துக்கிறேன்." என்று ரிஷி சொன்னதும் பாட்டிஅரைமனதுடன் சம்மதித்தாள.;பாட்டிக்கு இரவு வெகு நேரமாகியும் தூக்கமே வரவில்லை.எழுந்து ரிஷியின் அறைக்குள் சென்றாள். ரிஷி நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்தான். பாட்டி ரினோவின் அருகில் சென்று அதை மெதுவாக எழுப்பினாள். எழும்பிப்பார்த்த ரினோவை சத்தம் போடாமல்வெளியே வா என்று சைகை காட்டினாள்.ரினோ எழுந்து பாட்டி பின்னால் வந்தது. ஹாலில் வந்து பாட்டியுடன் உட்கார்ந்த ரினோ "பாட்டி என்ன விஷயம்?."என்றது.

"ரினோ! நீ இப்பவாவது உண்மையைச்சொல். நீ யார்?. தினமும்எங்கே போறே? இதெல்லாம் தெரியாம நான் ஊருக்குப்போக மாட்டேன்.இப்பவும் நீ சொல்லலைன்னா ரிஷியையும் என்னோட அழைச்சிட்டுப்போறேன். நீ எங்கேயிருந்து வந்தியோ அங்கேயே போயிடு." என்றாள்பாட்டி.

"சரி பாட்டி நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன். சொல்லக் கூடியநேரமும் வந்தாச்சு. ஆனால் உங்கக்கிட்ட மட்டுமில்ல ரிஷிக்கிட்டேயும்சொல்லணும். அதனால் முதல்ல ரிஷியை எழுப்பி அழைச்சிட்டு வர்றேன்." என்று சொல்லிவிட்டு ரிஷியை எழுப்பச் சென்றது. பல நாட்கள் தெரியாமல் இருந்த ரகசியம் இன்றாவது தெரியப்போகிறதே என்று பாட்டி ஆவலுடன் காத்திருந்தாள்.

"டேய்ஸ.ஏண்டா இப்படி தூக்கத்தில் எழுப்பிக் கூட்டிட்டு வர்றே?.எதுவானாலும் காலையில் பேசிக்கலாண்டா." என்று ரினோவைத்திட்டிக்கொண்டே எழும்பி வந்த ரிஷி ஹாலில் பாட்டி உட்கார்ந்திருப்பதைப்பார்த்ததும் "பாட்டி இந்த நேரத்தில நீங்க ஏன் இங்கே உட்கார்ந்திருக்கீங்க? தூக்கம் வரலியா?" என்று கேட்டான்.

"இல்ல ரிஷி இந்த ரினோ ஏதோ சொல்லப்போறானாம். உட்கார்.என்னன்னு கேட்போம்"டேய் அப்படி என்னடா முக்கியமான விஷயம் இந்த ராத்திரிநேரத்தில?" என்று கேட்ட ரிஷியிடம் ரினோ "ரிஷி அந்த ரோடாஸை ஓட்டிப்பார்க்கணும்னு ஆசை மனதில்இருக்குதா?" என்று ரினோ கேட்டது.

'ரோடாஸ்' என்றதும் ரிஷிக்கு தூக்கம் எல்லாம் பறந்து போனது.

"இப்ப ஓட்டிப்பார்க்கலாமா?" என்று கண்கள் விரிய கேட்டான்.

"அதுக்கு முன்னாடி இந்த கடிதத்தைப் படி"வத்ஸாசர் எழுதிய கடிதத்தை ரிஷியிடம் கொடுத்தது ரினோ.கடிதத்தை வாங்கி முன்னும் பின்னும் திருப்பினான். "அதை பிரித்துப்படி" என்றது ரினோ.

கடிதத்தைப் படித்து முடித்த ரிஷி "ரினோ யார் இந்த வத்ஸாசர்?என்னைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும்.?" என்று கேட்டான்.
ரினோ ஓடிச்சென்று ஒரு போட்டோ ஆல்பத்தை தூக்கிக் கொண்டுவந்தது."எதுக்குடா ஆல்பத்தைத் தூக்கிட்டு வர்றே?

"ரினோ ஆல்பத்தை புரட்டி அதில் இருந்த ஒருவரைக்காட்டி "ரிஷிஇது யார்ன்னு தெரியுதா?"என்று கேட்டது.ரிஷி அவரைப் பார்த்துவிட்டு "இவர் என் பெரிய தாத்தா வசந்தன்என்று தர்மா தாத்தா சொல்லியிருக்காரே. இவர் காலேஜ் படிக்கும்பொழுது ஏதோ கோபத்தில் வீட்டை விட்டுப் போயிட்டார்னு சொன்னார். இப்போ இவரை ஏன் காட்டுறே?" என்று கேட்டான்அவனுக்குப் பதில் சொல்வதற்கு முன்பு ரினோ தான் வரைந்து வைத்திருந்த வத்ஸாசரின் உருவ படத்தைக்காட்டி"இது யார்னு தெரியுதா?" என்று கேட்டது." தெரியும். இவரை நான் பார்த்திருக்கிறேன். இவர் சென்னையில்நான் படித்த ஸ்கூலுக்கு வந்திருக்கிறார்." என்றான் ரிஷி.

"அப்படின்னா. அன்றைக்கு நான் இதை வரைந்து காட்டும்பொழுது நீ எதுவுமே சொல்லலியே ஏன்?""அப்பொழுது எனக்கு சொல்ணும்னு தோணல""ரிஷி இதுவரை இதை நீ என்கிட்ட சொல்லவேயில்லையே"என்றாள் பாட்டி.

"அவனுக்கு அது யாரென்றே தெரியாது அப்புறம் எப்படி சொல்வான். இப்பொழுது நான் சொல்கிறேன். இவர் யாரென்று. "இவர்தான் வத்ஸாசர். கடிதத்தில் இருக்கிறதே வசந்தன் என்ற வத்ஸாசர் என்றுஅவர் இவரேதான்."

"இவரை நாம் பார்க்கலாமா? எங்கிருக்கிறார்?""இவர் இப்பொழுது உயிருடன் இல்லை.""உனக்கு எப்படி இவரை தெரியும்?""என்னை உருவாக்கியவரே இவர்தானே. முதலிலிருந்து எல்லாவற்றையும் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு வத்ஸாசரைப்பற்றி சொல்லஆரம்பித்தது ரினோ.வீட்டைவிட்டுச் செல்லும்பொழுது வசந்தன் 'இந்த உலகத்தில் இது வரை யாரும் செய்யாத சாதனையை செய்து காட்டவேண்டும்.இந்த உலகத்தையே தன் சாதனையால் வியக்க வைக்க வேண்டும்'என்ற ஒருவித வெறியுடன்தான் சென்றார்.

பல நாள் எங்கெங்கோ சுற்றித்திரிந்தார். ஒரு நாள் இமயமலையில்இருந்து வந்திருந்த ஒரு சந்நியாசிகள் கூட்டத்தைச் சந்தித்தார். அவர்கள் கூடவே பல இடங்களுக்கு சுற்றித்திரிந்தவர் கடைசியில் அவர்களுடனே இமயமலைக்குச் சென்றுவிட்டார்.

சொந்தம் பந்தம் ஆசை அனைத்தையும் துறந்து இமயமலையில் நாற்பது வருடங்களுக்கு மேல் கடும் தவத்தை மேற்கொண்டார்.
அங்கிருந்த துறவிகள் அனைவரும் அவர்மேல் மிகவும் மரியாதைவைத்திருந்தனர். அதுவே அவருக்கு ஒரு மமதையை ஏற்படுத்தியது.தான் மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்ற எண்ணம் அவர் மனதில்ஏற்பட்டது.ஒருநாள் முனிவர் ஒருவர் வசந்தனைச் சந்திக்க வந்திருந்தார். இதற்கு முன்பு அந்த முனிவரை யாரும் பார்த்ததில்லை. அவர் யார்என்று யாருக்கும் தெரியவும் இல்லை. அவரிடம் ஒரு ஒளி தெரிந்தது. பார்ப்பதற்கு 'தேவரிஷி' போல் இருந்தார். அவர் வசந்தனிடம் வந்தார். வசந்தனின் கண்களை தன் கண்களால்ஊடுருவினார். அவர் வாய்திறந்து எதுவும் பேசவில்லை. ஆனால் மனதில் பேசினார். அது வசந்தனுக்கு மட்டுமே கேட்டது.

"வசந்தா! நீ இனிமேல் வசந்தன் அல்ல வத்ஸாசர். அதுதான் இனிஉன் பெயர். உனது நாற்பது வருட தவத்தின் பலனை நீ அடையலாம்.இங்கிருந்து உடனே பொதிகைமலைக்கு செல். அங்குள்ள அகத்தியர்மலையிலிருந்து நூற்றி எட்டு மைல்கல் வடமேற்கு திசை நோக்கிகாடு மலை ஆறு மேடு பள்ளம் அனைத்தும் கடந்து நடந்து சென்றால் அங்கு சித்தர் மலை இருக்கும். அதில் ஒரு அருவி உண்டு.அந்த அருவியில் குளித்தால் எந்தவிதமான நோய்களும் தீர்ந்துவிடும். அதுமட்டுமல்ல அந்த மலையில் உலகிலேயே எங்கும் காணமுடியாதமூலிகைகள் உண்டு. அந்த மூலிகைகளைக் கொண்டு மண்ணைபொன்னாக்கலாம். பொன்னை சாம்பலாக்கலாம்.

அந்த சித்தர் மலையில்தான் சித்தர்கள் அனைவரும் ஒருசேரஇறைவன் அருளைப் பெற்றனர். அதுமட்டுமல்ல அங்கு ஒரு தேவரகசியம் புதைந்து கிடக்கிறது.நீ அங்கு சென்றால் அதை தெரிந்து கொள்ளலாம். அங்கு ஒருகுறிப்பிட்ட இடத்தில் மட்டும் செடிகொடிகளோ மரங்களோ வளர்ந்திருக்காது. அங்குதான் அந்த ரகசியம் புதைந்திருக்கிறது.

நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடித்தால் வெற்றி பெறுவாய். கோபமும் அவசரமும் தற்பெருமையும் கொண்டாயானால் உன்செயலே உன்னை அழித்துவிடும். உடனே இங்கிருந்து புறப்படு."என்று சொல்லிவிட்டு அந்த முனிவர் மறைந்து விட்டார். சிறிது நேரத்தில் வத்ஸாசரும் அங்கிருந்து புறப்பட்டார். யாருக்கும்எதுவும் புரியவில்லை. அவரிடம் எதுவும் கேட்கவும் தோன்றவில்லை. அவர் செல்வதையே தங்களை மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர். இமயமலையில் இருந்து திரும்பிய வத்ஸாசர் அகத்திய மலைக்குப்போகும் முன்பு அவர் பிறந்த ஊருக்குப் போய் பார்த்து வர விரும்பிஅங்கு சென்றார். அங்கு தம்பி தர்மாவின் நண்பரைச் சந்தித்தார். அவர்மூலமாக தனது தம்பியையும் மற்றவர்களைப் பற்றியும் அறிந்து கொண்டார். பின்பு நேராக ரிஷி படிக்கும் பள்ளிக்குச் சென்றார். அங்கு பள்ளியின்தலைமை ஆசிரியர் மூலம் ரிஷியைச் சந்தித்தார். ஆனால் தான் தான் ரிஷியின் பெரிய தாத்தா என்று சொல்லிக்கொள்ளவில்லை. ரிஷியைப்பார்த்து புன்னகைத்து அவன் தலையில் கைவைத்துஆசிர்வாதம் செய்துவிட்டு சென்றுவிட்டார். அங்கிருந்து அகத்திய மலை சென்றவர் அங்கு ஒருநாள் ஓய்வெடுத்தார். மறுநாள் சூரிய உதயத்தின் போது சித்தர் மலைநோக்கிதனது பயணத்தைத் தொடர்ந்தார்.உடம்பிலும் மனதிலும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது போல்உணர்ந்தார். அவரது நடையின் வேகம் காற்றைக் கிழிப்பது போல்இருந்தது. யாரும் எட்டிப் பிடிக்க முடியாத வேகம். அவரதுவேகத்தைக் கண்ட விலங்குகள்கூட விலகி வழிவிட்டன.பல மைல்கல் நடந்து சென்றிருப்பார்.

அங்கு ஓரிடத்தில் காட்டுமரங்களை வெட்டிக் கொண்டிருந்தது ஒரு கும்பல். அந்த கும்பலின்தலைவன் தில்லைநாயகம் என்ற தில்லை தன் அடியாட்களிடம் "டேய்!ஏதோ சலசலப்பு கேட்குது. யாரோ வர்றாங்க போலிருக்கு. சிறிது நேரம்வேலையை நிறுத்துங்க யார்னு பார்ப்போம்." என்று சொல்லி விட்டுபையிலிருந்த துப்பாக்கியை கையிலெடுத்து வைத்துக்கொண்டு சுற்றும்முற்றும் பார்த்தான்.சிந்தனையெல்லாம் சித்தர் மலையிலிருந்த வத்ஸாசர் தில்லைநாயகத்தையோ அவனது கும்பலையோ கவனிக்கவில்லை. அவரது நடையின்வேகமும் குறையவில்லை. ஆனால் தில்லை 'வத்ஸாசரால் தங்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்படுமோ' என்று எண்ணி அவரை நோக்கி "ஏய்ஸநீ யார்? இங்கு ஏன்வந்தே? சொல்ஸ.. இல்லைன்னா சுட்டுவிடுவேன்" என்று கோபத்துடன்கத்தினான். வத்ஸாசர் தில்லை பேசியதை காதில் வாங்கிக் கொண்டதாகவேதெரியவில்லை. 'என்ன எதுவுமே பேசாமா போய்க்கிட்டிருக்கான்.இவன் யாராக இருக்கும்? ஒரு வேளை இவன் பைத்தியமோ! 'என்றுதனக்குள்ளே சொல்லிக் கொண்ட தில்லை வத்ஸாசரை நோக்கி "ஏய் பித்தா" என்று கத்தி அழைத்தான்.இதுவரை அவன் பேசிய வார்த்தைகள் எதுவும் காதில் வாங்காத வத்ஸாசருக்கு 'பித்தா' என்ற வார்த்தை மட்டும் இதயத்தில் இடி இறங்கியது போல் கேட்டது. நாற்பது வருடங்களுக்கு முன்னால் தனது தந்தையும் மற்றவர்களும் தன் செயலைக் கண்டு தன்னை 'பித்தா'என்று அழைத்தது ஒரு வினாடி மனதில் மின்னலென தோன்றி மறைந்தது.

மீண்டும் அதே வார்த்தையைக் கேட்டதும் புயலென திரும்பி தில்லையை நோக்கினார். அவர் திரும்பிய வேகமே தில்லையை பயமுறுத்தியது. அவர்பார்த்த பார்வை நெருப்பு அம்புகள் தன்னை நோக்கி வருவது போல் இருந்தது. அவ்வளவு தான் தில்லை திரும்பிப் பார்க்காமல் ஓடியேவிட்டான். அவன் பயத்துடன் ஓடிவருவதைப் பார்த்து மற்றவர்கள் "அண்ணேஎன்னாச்சு அவன் யார்?" என்று கேட்டார்கள்.

"அவர் சாதரண மனிதரல்ல. பெரிய முனிவர்போல் தெரிகிறது.நாம்அவருக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடாது.
அதனால் நாம் உடனேஇங்கேயிருந்து போயிடலாம் வாங்க" என்று தில்லை சொன்னவுடன்அவன் ஆட்களில் ஒருவன்

"ஆனால் வேலை பாதியிலேயே நிற்குதே. எப்படி விட்டுட்டு போகமுடியும்"என்றான்.அதற்கு தில்லை "பரவாயில்லை அதனால் ஒன்றும் நஷ்டம் எற்படப்போவதில்லை. உடனே கிளம்புங்கள்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பை நோக்கிநடந்தான்.

சூரியன் அஸ்தமனமாகும் பொழுது வத்ஸாசர் சித்தர் மலையைஅடைந்தார். முதலில் அங்குள்ள சித்தர் அருவியில் குளித்தார். புதிதாகபிறந்தது போல் உணர்ந்தார்.பின் முனிவர் சொன்ன இடத்தைத் தேடினார். 'மரம் செடி கொடிமுளைக்காத இடம் என்றாரே ஆனால் அப்படி எந்த இடமும் இல்லையே' என்று யோசித்துக்கொண்டே வந்தவர் ஓரிடத்தில் நின்றார்.

சுற்றிலும் பெரிய பெரிய மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்க அவர் நின்றிருந்த இடத்தில் மட்டும் எந்தவொரு மரமும் வளர்ந்திருக்கவில்லை.மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது வத்ஸாசருக்கு. அருகிலிருந்த ஒருமரத்திலிருந்து ஒரு கம்பை ஒடித்து அந்த இடத்திலிருந்த செடிகளைஅகற்றிப்பார்த்தார். பக்கத்தில் வளர்ந்திருந்த செடி கொடிகளே அந்தஇடத்தில் படர்ந்திருந்தது. அனைத்தையும் அகற்றினார்.முனிவர் சொன்னதுபோல் அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் எந்தசெடிகளும் முளைத்திருக்கவில்லை. அந்த இடத்திலிருந்த மண்ணும் இதுவரை அவர் பார்த்திராத வித்தியாசமான மண்ணாகவும் இருந்தது. சிறிது கையில் எடுத்துப் பார்த்தார்.

'இங்குள்ள ரகசியம் என்னவாகஇருக்கும்'என்று யோசித்துக்கொண்டே சுற்றிலும் பார்வையிட்டார்.எதுவுமே அவரால் உணரமுடியவில்லை. அந்த தரையில் அப்படியேபடுத்துவிட்டார். தரையில் படுத்துறங்குவது அவருக்கு ஒன்றும் புதிதல்லவே! விலங்குகள் நிறைந்த அடர்ந்த காடுதான் என்றாலும் பயம்என்ற உணர்வு அவர்மனதில் இருக்கவில்லை. அந்த இடத்திற்கு எந்தவிலங்குகளும் வரவில்லை.ஆளரவமற்ற நடுக்காட்டில் தனிமையில் இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றவில்லை. மாறாக அவரைச்சுற்றி நான்குபுறமும் சுற்றுச்சுவரால் சூழப்பட்டது போல் உணர்ந்தார்.

அது எப்படி என்று அவருக்குப் புரியவில்லை. பயணக்களைப்பு கண்ணயர்ந்தார். தூங்கிக் கொண்டிருந்தவருக்குபூகம்பம் வந்தது போல் 'டமால்'என்று சத்தம் கேட்டது. திடுக்கிட்டுஎழுந்தார். என்ன சத்தம் என்று யோசித்துக்கொண்டே சுற்றிலும் பார்த்தார். அவர் நின்றிருந்த இடம் இரண்டாகப் பிளந்தது.மணல் உள்பக்கமாக சரிந்து விழுந்தது. மணலோடு சேர்ந்து வத்ஸாசரும் உள்ளே விழுந்தார். சரிந்து விழுந்த மண் எங்கே சென்றதுஎன்று தெரியவில்லை. ஆனால் வத்ஸாசர் மட்டும் உள்ளே நின்றிருந்தார். உள்ளே விழுந்தவருக்கு அங்கு அவர்கண்ட காட்சி ஆச்சர்யத்தைஏற்படுத்தியது.'பூமிக்கடியில் இதென்ன அதிசயம்!. இங்குதான் முனிவர் சொன்னரகசியம் இருக்குமோ' என்று நினைத்தார்.அப்படி என்ன அதிசயம் இருந்தது அந்த இடத்தில்.அந்த இடத்தில் ஒரு பெரிய விசாலமான அறை இருந்தது.

மிகவும்குளிர்ச்சியான சீதோஷணநிலை அங்கு நிலவியது. இதுவரை உணர்ந்திராத நறுமணம் வீசியது. சில தூண்கள் காணப்பட்டன. ஆனால்அவை கல்லாலோ சிமென்டாலோ கட்டப்பட்டிருக்கவில்லை. அந்ததூண்களுக்கு நடுவில் வட்டவடிவ அமைப்பில் ஓர் சிறு நீர்நிலை காணப்பட்டது. அதில் ஒரு தாமரை மொட்டு கண்ணாடி இழைகளால் செய்யப்பட்டது போல் இருந்தது.

'இந்த மலர் இயற்கையா? செயற்கையா? அல்லது மாயத்தோற்றமா?ஆனால் என்னைத் தொட்டுப்பார் என்று சொல்வதுபோல் இருக்கிறதே.சரி.என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம்'என்று தனக்குள் சொல்லிக்கொண்ட வத்ஸாசர் அந்த தாமரை மலரின் அருகில் சென்றார்.அருகில் சென்றவர் சிறிது நேரம் அந்த மலரையே பார்த்துக்கொண்டிருந்தார் மெல்ல கையை நீட்டி அதை தொட்டார்.அவ்வளவுதான் அவர் காதுகளை செவிடாக்குவது போன்ற பெரும்சத்தம் 'படார்ஸ.' என்று கேட்டது.

வத்ஸாசர் தூக்கி எறியப்பட்டார். சில நொடிகள் நிலை தடுமாறித்தான் போனார். பின்பு நிதானித்துஎழுந்தவர் அந்த மலர் என்ன ஆனது என்று நோக்கினார்.தாமரை மொட்டு இப்பொழுது தாமரை மலராக விரிந்திருந்தது.மலருக்கு நடுவிலே ஏதோ இருப்பதுபோல் தோன்றியது. அருகில்சென்று பார்த்தார். இரண்டு சுவடிகள் இருந்தன.'இதை எடுக்கலாமா?' என்று முதலில் யோசித்தவர் பின்பு 'எடுத்தேஆகவேண்டும்'என்ற முடிவுடன் இரண்டு சுவடிகளையும் மெதுவாகத் தொட்டு எடுத்தார்.

அந்த இரு சுவடிகளும் காகிதத்தால் ஆனதுஅல்ல. ஒரு செடியின் காய்ந்த இலைபோன்ற தன்மையுடனும்இநிறத்துடனும் காணப்பட்டது.சுவடிகளை கையிலெடுத்த வத்ஸாசருக்கு மீண்டும் ஆச்சர்யம்.'இப்படி ஒரு சுவடிகளா? இவற்றில் என்ன இருக்கும்? இதுதான்ரகசியமா' என்று நினைத்து, அதில் ஒன்றை முதலில்புரட்டினார்.

அப்படி என்ன சுவடிகள் அவை? அவற்றில் என்ன எழுதியிருந்தது?அந்த சுவடியின் முதல் பக்கத்தில் 'கல்பாவின் ஜீவ சிருஷ்டை'என்று எழுதியிருந்தது.அடுத்ததை புரட்டினார். அதில் 'கல்பாவின் மாய சிருஷ்டை' என்றிருந்தது. இந்த கல்பான்னா என்னவாக இருக்கும்.

இந்த சுவடிகளைஎழுதியவரின் பெயராக இருக்குமோ' என்று யோசித்தவர் சுவடிகளைமேலும் புரட்டிப் பார்த்தார். யாருக்கும் கிடைக்காத அரிய பொக்கிஷம்தனக்குக் கிடைத்திருக்கிறது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். என்ற ஒரு தீர்க்கமான முடிவுடன் சுற்றிலும் ஒருமுறைபார்த்தார். பின் மண் சரிந்து தான் கீழே விழுந்த இடத்தை நோக்கினார்.

அப்பொழுது மீண்டும் இடிபோன்ற சத்தம் ஏற்பட்டது. இப்nhழுதுவத்ஸாசர் தடுமாறவில்லை. மாறாக அடுத்து என்ன நடக்கப்போகிறதுஎன்று கவனிக்கலானார்.அவர் கவனம் மாறும் முன்பு வத்ஸாசர் பூமியின் மேற்பரப்பில் நின்றிருந்தார். பூமி பிளந்ததற்கான அடையாளம் எதுவுமே இல்லை.அப்பொழுது சூரியன் உதித்திருந்தது.

முதலில் அந்த இடத்தில் ஒரு குடிலை அமைத்தார். தியானம் செய்துவிட்டு இமயமiலையில்சந்தித்த முனிவரை மனதில் நினைத்துக்கொண்டு முதல் சுவடியைஎடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.

'இந்த சுவடியில் உள்ள ஜீவன்கள் கல்பாவில் சிருஷ்டிக்கப்படவேண்டியவை.' என்று முதல் சுவடியின் முதல் பக்கத்தில் எழுதியிருந்தது.அடுத்த பக்கங்களைப் புரட்டினார். ஒவ்வொரு பக்கங்களிலும் ஒருவினோதமான வடிவத்தில் விலங்குகளின் படம் தத்ரூபமாக காணப்பட்டது. அவற்றை உற்று நோக்கினால் உயிருடன் இருப்பதுபோல்தோன்றிது.மறு பக்கத்தில் அந்த ஜீவன்களை எப்படி படைப்பது என்பதுபற்றியும் சில மந்திரங்களும் எழுதியிருந்தன.வத்ஸாசர் தினமும் தியானம் செய்துவிட்டு அந்த சுவடியைப் படிக்கத்தெடங்கினார். 'இது இந்த பூலோகத்துக்குரிய சுவடி அல்ல என்பதாலோஅல்லது யாருக்கும் கிடைக்காத தேவலோக ரகசியம் தனக்கு கிடைத்திருக்கிறது இதை யாரும் தன்னிடமிருந்து அபகரித்துக் கொண்டு சென்றுவிடுவார்களோ' என்ற பதற்றம் ஏற்பட்டதாலோ வத்ஸாசரின் மனம்நிதானத்தை இழந்து வேகமாக செயல்பட்டது.சுவடியில் உள்ளதுபோல் ஒரு ஜீவனை உருவாக்கிவிட வேண்டும்என்று எண்ணினார். அதற்காக சில விலங்குகளின் உயிரணுக்கள்அவருக்குத் தேவைப்பட்டது.

அதற்காக என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்;அப்பொழுது குடிலுக்கு வெளியே யாரோ நடந்து வரும் சத்தம்கேட்டது. யாராக இருக்கும் என்று எண்ணிய வத்ஸாசர் சுவடிகளைமறைத்து வைத்து விட்டு குடிலுக்கு வெளியில் வந்து பார்த்தார்.அங்கு தில்லை வந்து கொண்டிருந்தான்.'இவன் ஏன் இங்கு வருகிறான்?' என்று யோசித்தார். வத்ஸாசரைப் பார்த்தவுடன் இரண்டு கைகளை எடுத்து அவரை வணங்கிக் கொண்டே தில்லை அவரை நோக்கி வந்தான். அருகில்வந்தவுடன் "ஐயா என்னை மன்னிச்சிடுங்க. தங்களைச் சந்தித்ததிலிருந்து நான் புது மனிதனாக மாறிட்டேன். எனது தீய குணங்களையும் செயல்களையும் விட்டுவிட்டேன். இப்பொழுது நான் இங்கு உங்களுக்கு சேவை புரிய விரும்புகிறேன். என்னை உங்களுடன் தங்குவதற்கு அனுமதியுங்கள்"என்று சொல்லிக்கொண்டே வத்ஸாசரின் காலில் விழுந்தான்.

வத்ஸாசருக்கும் சில வேலைகள் செய்ய ஆள் தேவைப்பட்டதால் தில்லையை அவருடன் தங்குவதற்கு அனுமதித்தார். ஆனால் சில நிபந்தனைகளை விதித்தார்."நீ இங்கே தங்க வேண்டுமானால் நான் சொல்வதை மட்டும் கேட்கவேண்டும். என்னிடம் எதைப்பற்றியும் கேள்விகள் கேட்கக்கூடாது.எனக்கு தொந்தரவு தருவதுபோல் எந்தவொரு காரியத்தையும் செய்யக்கூடாது."என்றார்.தில்லையும் அதற்கு சம்மதித்தான். அவருக்குப் பலவிதங்களிலும்உதவி செய்தான். குடிலைப் பெரிதாக்கினான். தனக்காக தனியாக ஒருகுடிலை உருவாக்கிக் பால் தரும் பசுவைக் கொண்டு வந்தான்.பழங்கள் பறித்து வந்தான். அவர் கேட்ட முலிகைகளைக் கொண்டுவந்தான். தில்லை ஆர்வமுடன் செய்த உதவிகள் வத்ஸதசரைக்கவர்ந்தது.

அவனுடைய உதவியும் அவருக்குத் தேவைப்பட்டது.அவர் தியானத்திலும் ஆராய்ச்சியிலும் மட்டுமே கவனமாக இருந்தார்.
அதனால் அவருடைய மற்ற தேவைகள் அனைத்தையும் தில்லையேபார்த்துக் கொண்டான்.ஒருமுறை தில்லையை இரண்டு நாட்களாகக் காணவில்லை.வத்ஸாசரிடம் அவன் எதுவும் சொல்லிவிட்டும் போகவில்லை.இரண்டு நாள் கழித்து திரும்பி வந்தவனிடம் "தில்லை என்னிடம்சொல்லாமல் எங்கு சென்றாய்?" என்று சற்று கோபத்துடனே கேட்டார்.

"ஐயா சொந்த வேலை ஒன்று பாக்கியிருந்தது. அதை முடித்துவிட்டு வருகிறேன். இனி எங்கும் போவதற்கு அவசியம் இருக்காது."என்றான் தில்லை.வத்ஸாசரும் அவனை நம்பியதாலோ என்னவோ "சரி பரவாயில்லை"என்று விட்டுவிட்டார்.தில்லை எங்கு சென்றான்? எதற்காக சென்றான்?தில்லை அங்கிருந்து நேராக தன் வீட்டுக்குச் சென்றான்.அவனைக்கண்ட அவன் மனைவியும் மகனும் "எங்கே போனீங்கஸஇவ்வளவுநாளும்?.

எங்கே போறேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்கலாமே!. நாங்கள் எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா" என்றனர்."இவ்வளவு நாளும் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடப்போனேன்.நான் நல்ல தந்தையாக இல்லாததினால்தான் என்மகனையும் நல்லவனாக வளர்க்கமுடியல. நான் செய்த தவறுகளுக்காக ரொம்ப வருந்துகிறேன்."என்று சொல்லிவிட்டு மகனை நோக்கி "தேசிகா" என்று அழைத்தான்.ஆம். அதே தேசிகன்தான் தில்லைநாயகத்தின் மகன்.தில்லையின் பேச்சு வழக்கத்தைவிட வித்தியாசமாக இருப்பதைப்பார்த்த தேசிகனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அவர்அழைத்தவுடன் "என்ன?" என்று கேட்டான்.

"தேசிகா நான் இதுவரை பல தவறுகள் செய்திருந்தாலும் எந்தகொலையும் செய்ய துணிந்ததில்லை. ஆனால் நீ இப்பொழுதே கொலைசெய்வது போன்ற பெரும் தவறுகள் எல்லாம் செய்கிறாய். அதனால்உன்னை இப்பொழுதே திருத்திக்கொள்.""அப்பா என்ன இது திடீரென்று ஞானதோயமா? இதை உங்களோடவே வச்சுக்கிடுங்க"

"தேசிகா. நீ தவறு செய்வதற்கு நானும் ஒரு காரணமாயிட்டேன்.அதனால்தான் சொல்றேன். நான் சொல்றதைக் கேள். உன் தீய குணங்களையெல்லாம் விட்டுவிடு.""விட்டுவிடுகிறேன்.ஆனால் இப்பொழுதல்ல.. உங்களை மாதிரிஅறுபது வயசுக்கு மேல"

"டேய்நீ நான் சொல்றதைக் கேக்கலைன்னா என் சொத்தெல்லாம் அனாதை இல்லங்களுக்கு எழுதிவச்சிடுவேன். இதெல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது இல்லை. ஊரையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிச்சேர்த்தது.""ஹா...ஹா... "என்று வில்லத்தனமான சிரிப்பு சிரித்தான் தேசிகன்."ஏண்டா சிரிக்கிறே?""இங்க பாருங்க.

ஏதோ செய்த பாவத்துக்குப் பரிகாரம் தேடப்போறதா சொன்னீங்களே. அங்கே அம்மாவையும் அழைச்சிட்டுப்போங்க.சொத்துக்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.""டேய். நான் இவ்வளவு சொல்லியும் நீ கேட்க மாட்டேங்கிறே.இனி உங்கிட்ட பேசிப்பயனில்லை. எனக்கு என்ன செய்யணும்னு தெரியும். உன்னை ஒன்றும் இல்லாதவனாக நடுவீதிக்கு கொண்டுவந்தால்தான் சரி வருவேன்."

"அப்படி ஒரு நிலைமை எனக்கு நடக்கப்போறதுன்னு தெரிஞ்சாமுதல்ல அப்பான்னுகூட பார்க்கமாட்டேன் உயிரை எடுத்துடுவேன்."இருவர் பேசியதையும் அதுவரை மௌனமாகவும் ஒருவித பயத்துடனும் பார்த்துக்கொண்டிருந்த தேசிகனின் தாய் தந்தையைக் கொலைசெய்ய தயங்கவும் மாட்டேன் என்று தேசிகன் சொன்னதும் பதறிவிட்டாள்.

"டேய் தேசிகாஅவர் உனக்கு அப்பாடா. அவரைப்போய் இப்படிக்கொலை செய்வேங்கிறியே! . அவர் சொன்னதில் அப்படி என்னடா தப்பு இருக்கு?" என்றாள்."அவர் சொல்றது எல்லாமே தப்புத்தான்" என்று தேசிகன் சொன்னதும் தில்லைக்கு கோபம் பொங்கியது. துப்பாக்கியை எடுத்து தேசிகனை நோக்கி நீட்டிக்கொண்டே"டேய்.இனியும் உன்னை உயிரோடு விட்டால் அந்த சுதர்சனனைஅழிச்சமாதிரி இன்னும் பலரை அழிச்சிடுவே" என்று தேசிகனை சுடப்போனான். அப்பொழுது அவன் தாய் குறுக்கே புகுந்தாள். தந்தை தன்னைச்சுட வருவதைக்கண்ட தேசிகன் மனதில் வெறித்தனம் குடிகொண்டது. தாயைப் பிடித்து தள்ளி விட்டுவிட்டு தில்லையைத் தாக்கமுனைந்தான்.அதே நேரம் அவன் வேகமாக தள்ளியதால் ஒரு சுவற்று தூணில்மோதி பலத்த அடியுடன் கீழே மயங்கி விழுந்தாள் தேசிகனின் தாய்.

தில்லை ஓடி வந்து அவளைத் தூக்கினான். அவள் மயக்கித்திலிருப்பதைப் பார்த்து பதறி அவளைத் தூக்கி காரில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான்.ஆனால் மூளையில் அடிபட்ட அவள் பிழைக்கவில்லை. 'தேசிகனேஅவன் தாயின் மரணத்திற்கு காரணமாகிவிட்டான்'என்று எண்ணியதில்லைக்கு தேசிகனைப் பார்க்கவோ பேசவோ பிடிக்கவில்லை. முன்புதன் தொழிலுக்கு உதவிய தனது ஆட்கள் காசி ஜான் என்ற இருவரையும் அழைத்துக்கொண்டு காட்டை நோக்கிச் சென்றான்.

அவர்களின் உதவியால் வத்ஸாசர் கேட்ட விலங்குகளை குடிலுக்குக்கொண்டுவந்தான். வத்ஸாசர் தில்லையிடம் அந்த இருவரையும் உடனேஅங்கிருந்து அனுப்பிவிடுமாறு கூறினார்.தில்லையும் அவர்களிடம் தான் இங்கிருப்பது தேசிகனுக்குத் தெரியவேண்டாம் என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டான்.

வத்ஸாசர் தீவிரமாக ஆனால் அவசரமாக தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார். அவரது அவசரத்தால் ஆரம்பித்த பல முயற்சிகள்தோல்வியில் முடிந்தன. அவர் உருவாக்கிய ஜீவன்கள் முழுமையடையாமல் குறையுள்ளதாகவே இருந்தன. இதனால் அதிருப்தியடைந்தவத்ஸாசர் அவற்றை தான் கண்டுபிடித்த மூலிகைத் திரவத்தால் பஸ்பமாக்கினார்.இந்த நிலையில் ஒருநாள் இமயமலையில் சந்தித்த முனிவர் இவத்ஸாசரின் கனவில் தோன்றி "நீ தேவரகசியங்களைக் காப்பாற்றத் தவறிவிட்டாய்.

கல்பாவில் படைக்கப்பட வேண்டிய பல உயிர்களை அழித்து விட்டாய். இனி பிரம்மனே நினைத்தாலும் அவற்றை உருவாக்க முடியாது. 
[தொடரும்]

kalpa2011@yahoo.com

ரினோ!
- கனிஷ்கா (தென்காசி, தமிழ்நாடு) -

அத்தியாயம் 4!

எழுத்தாளர் கனிஷ்காவின் சிறுவர் புதினம்: ரினோநீ உனது பேராசையால் உண்மையை மறைத்து உனக்குச் சொல்லப் பட்ட கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டாய்.
நீ ஒரு சித்தனின் மறு பிறப்பு. அதனால்தான் உன்னிடம் இந்த கடமை ஒப்படைக்கப்பட்டது. கடமை தவறிய நீ கொடூரமான முறையில்அழிவாய்." என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். ஆனால் வத்ஸாசர் 'இந்தச் சுவடிகள் எனக்குத்தான் சொந்தம். இதிலுள்ள ஜீவன்களைப் படைத்து இந்த உலகையே ஆளச்செய்வேன். அதுதான் இனி என் கடமை. என்னை யாரும் அழிக்க முடியாது.'என்று மமதைகொண்ட வத்ஸாசர் அதன்பின்பு அந்த சுவடியில் உள்ளது போன்ற ஒரு முழுமையான ஜீவனை உருவாக்கினார்.

அதன்வளர்ச்சி சற்று வேகமாகவே இருந்தது. ஒரு மாதத்திலேயே ஒரு அடி வளர்ந்திருந்தது. பாம்பு போன்றுவழு வழுப்பான உடல் உருண்டையான பெரிய கண்கள். ஒற்றைக்கொம்பு. மேல்நோக்கி வளைந்த வால். குட்டை குட்டையான கைகால்கள். பார்ப்பதற்கு வினோதமாக இருந்தாலும் அழகாக இருந்தது. இது வளர வளர வத்ஸாசருக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. தான் வெற்றிபெற்று விட்டோம் என்று பெருமிதம் கொண்டார்.

தில்லையிடம் அதைக் காட்டி "தில்லை இதைப்பார். இது சாதாரண மான பிராணிஅல்ல. சிறிது நாளில் இது பேசிவிடும்.
ஏன்! பறக்கக்கூட செய்யும். மனிதனைவிட அதிக சக்திபெற்றதாக இருக்கும்.அப்படி நான் நினைப்பதுபோல் இது இருந்துவிட்டால் இதைப்போல் இன்னும் பலவற்றை உருவாக்கி மனிதனுக்குப் போட்டியாக நடமாடவிடுவேன். அதுமட்டுமல்ல இந்த உலகத்தையே ஆளச்செய்வேன்."என்று கர்வமுடன் பேசினார். தில்லைக்கு அவரது கர்வமான பேச்சு பிடிக்கவில்லை. இருந்தும்எதுவும் பேசவில்லை. ஆனால் அந்த புது ஜீவன் மட்டும் வத்ஸாசரின் ஒவ்வொரு செய்கையையும் மிகவும் கூர்மையாகக் கவனித்தது. வத்ஸாசர் அதனிடம் தினமும் பேசினார்.

"இங்கே பார் நான் உருவாக்கிய ஜீவனே! சீக்கிரம்பேசு உன்னால் முடியும். உனக்கு ஒரு பெயர்வைக்கப்போகிறேன் இல்லை நான் வைக்கவில்லை இந்தச் சுவடிலேயே உனக்குரிய பெயர் என்ன வென்று உள்ளது. அது என்ன என்று வாய்திறந்து கேள். பேசு உன்னிடம் சில ரகசியங்கள் சொல்லப் போகிறேன்."என்று தினமும் ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார். இப்படியே மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. வத்ஸாசரின் எதிர்பார்ப்பும் உச்சநிலை அடைந்தது.

மூன்று மாதத்தில் இரண்டடிக்கு மேல்வளர்ந்திருந்தது அந்த விலங்கு. அதனால் பேச முடிந்தது. பறக்கவும் முடிந்தது. ஆனால் வத்ஸாசரிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு நாள் வத்ஸாசர் அதனிடம்வந்து " எனதருமை கல்பாவின் ஜீவனே! அதோ பார். அது என்னவென்று தெரிகிறதா?" என்று கையை நீட்டிக்கேட்டார். அவர் கைநீட்டிய இடத்தில் ஒரு பறக்கும் தட்டு ஒளி வீசும் பென்னிறத்தில் நின்றிருந்தது.

"பார்த்தாயா அதுதான் 'கல்பாவின் ரோடாஸ்' கல்பாவின் வாகனம்.அதுமட்டுல்ல. உன்பெயர் என்ன தெரியுமா? 'ரினோ'. கல்பாவின் ரினோ. 'ரினோ' உனது பெயர் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தாயா!.இப்பொழுதுபார்" என்று சொல்லிவிட்டு ஏதோ மந்திரத்தை உச்சரித்தார். உடனே ஒரு அழகிய ஆடை அவர் கையிலிருந்தது. "இதெல்லாம் கூட கல்பாவின் மாயசிருஷ்டைதான். ரினோ! இதையாருக்காக உருவாக்கினேன் தெரியுமா? ரிஷி... ரிஷிக்காக. அவன் யார்என்று உனக்குத் தெரியாது. அவன் சாதாரணமானவன் அல்ல. அவனுக்கு பிறவியிலேயே ஒரு அசாதாரண சக்தி இருக்கிறது. அது யாருக்கும் இதுவரை தெரியாது. இந்த ரோடாஸ் மூலம் அதை நான் வெளிப்படுத்தப் போகிறேன். உன்னையும் அவனிடம்தான் அனுப்பப் போகிறேன்."என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ மந்திரத்தைச் சொன்னார்.அவர் கையிலிருந்த ஆடை காணாமல் போனது. "என்ன ரினோ! காணாமல் போய்விட்டது என்று ஆச்சர்யப்படுகிறாயா. அது தகுந்த சமயத்தில் ரிஷிக்கு கிடைக்கும். இப்பொழுது நீ மட்டும்பேச ஆரம்பித்து விட்டால் அடுத்து நான் உன்னைப்போல் பல நூறுஜீவன்களை உருவாக்குவேன். ரிஷியின் தலைமையில் உங்களை இந்தஉலகையே ஆளச்செய்வேன். அதனால் நீ சீக்கிரம் உனது சக்தியைவெளிப்படுத்து. உன்னால் எல்லாம் முடியும்." என்றார். ஆனால் ரினோவுக்கு வத்ஸாசர் பேராசைப்படுவதாகத் தோன்றியது. அதனால் அது அவரிடம் தனது சக்தியைக் காட்ட விரும்பவில்லை. ஆனால் அவருடனே இருந்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்டது. அவர் படித்த மந்திரங்கள் பலவற்றை மனதில் பதியவைத்துக்கொண்டது. வத்ஸாசர் தான் வீட்டைவிட்டுப் வந்ததுமுதல் ரினோவை உருவாக்கியதுவரை அனைத்தையும் ரினோவிடம் கூறினார். அவருடைய பேச்சில்கர்வம் நிறைந்திருந்தது.

'இவர் சுவடிகளைத் தவறான வழிக்குப் பயன்படுத்தி விடுவாரோ' என்று பயந்தது ரினோ. அவரது பேராசை விபரீதத்தை ஏற்படுத்தி விடுமோ என்று அஞ்சியது. அதனால் அவரிடம் உள்ள அந்த இரண்டு சுவடிகளையும் எப்படியாவது மறைத்துவிடவேண்டும் என்று நினைத்தது. ஒருநாள் அதிகாலையில் வத்ஸாசர் தியானத்தில் இருந்தார். தில்லையும் வெளியில் சென்றிருந்தான். ரினோ அந்த இரு சுவடிகளையும் தேடஆரம்பித்தது. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.'எங்கு தேடியும் கிடைக்கவில்லையே! ஒரு வேளை மந்திரத்தால்மறைத்து வைத்துவிட்டாரா' என்று எண்ணிக்கொண்டு நின்றிருந்த ரினோவின் கண்களில் ஒரு கண்ணாடி பேழை தென்பட்டது.
ரினோ அந்த பேழையைத் திறந்து அதற்குள் என்ன இருக்கிறதுஎன்று பார்க்க நினைத்தது. ஆனால் அதால் திறக்க முடியவில்லை.அப்பொழுது ரினோவுக்கு வத்ஸாசர் சொன்ன சில மந்திரங்கள் நினைவுக்கு வந்தது. இதில் ஏதாவது ஒரு மந்திரத்தைச் சொன்னால் பேழை திறக்கிறதா என்று பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டே ரினோ சிலமந்திர வார்த்தைகளை உச்சரித்தது. ஆனால் பேழை திறக்கவில்லை.வத்ஸாசர் தியானம் முடியும் வேளை நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்குள் எப்படியாவது அந்தச் சுவடிகளை எடுத்து மறைத்துவிடவேண்டும் என்று நினைத்து மீண்டும் ஒரு முறை அந்த கண்ணாடிப்பேழையை திறந்து பார்க்கலாம் என்று எண்ணி ரினோ அதில்கைவைத்தது. என்ன ஆச்சர்யம்! பேழை திறந்து கொண்டது.

ரினோ எதிர்பார்த்தது போலவே இரு சுவடிகளும் அதற்குள்தான் இருந்தன. ரினோ அவற்றை எடுத்துக் கொண்டுபோய் தில்லை இருந்த குடிலில் ஒரு இடத்தில் மறைத்து வைத்தது. ஏனென்றால் வத்ஸாசர் தில்லையின் குடில் பக்கம் போவதேயில்லை. வத்ஸாசர் தியானத்திலிருந்து எழும்பும் முன்பு ரினோ அமைதியாகஎதுவுமே நடக்காததுபோல் அவர்முன் வந்து அமர்ந்து விட்டது. அப்பொழுது தில்லையும் வத்ஸாசருக்கும் ரினோவுக்கும் உணவாக பாலும்பழங்களும் கொண்டுவந்து வைத்துவிட்டு வத்ஸாசருக்காக காத்திருந்தான். தியானத்திலிருந்து எழுந்த வத்ஸாசர் உணவருந்திவிட்டு சுவடிகளைஎடுத்துப் படிப்பதற்காக கண்ணாடிப் பேழையை நோக்கிச் சென்றார்.அங்கு பேழை திறந்திருப்பதைப் பார்த்து ஆத்திரமுற்ற வத்ஸாசர் மிகுந்த கோபத்துடன் தரை அதிர தில்லையை நோக்கி நடந்து வந்தார்.

தில்லையிடம் "ஏய் பாதகா அந்த பேழையை எப்படியடா திறந்தாய்? அதில் இருந்த சுவடிகளை எங்கே வைத்திருக்கிறாய்? உண்மையைச்சொல். இல்லாவிட்டால் உன்னை அழித்துவிடுவேன்"என்று வார்த்தைகளில் அனல் தெறிக்க கேட்டார்.

"ஐயா எனக்கு எதுவுமே தெரியாது. என்னை நம்புங்க நான் எதையும் திறக்கவுமில்லை எடுக்கவும் இல்லை."என்று தில்லை பயத்துடன்கூறினான். "அப்படியென்றால் வேறு யாரும் இங்கு வந்தார்களா? அப்படியே வந்திருந்தாலும் அவர்களால் நிச்சயமாக அதை திறக்க முடியாதே." "ஐயா நான் பழங்களைப் பறிக்கிறதுக்காக போயிட்டு சற்று முன்னாடிதான் வந்தேன்." என்று தில்லை சொன்னதும் வத்ஸாசருக்கு ரினோவின் மேல் சந்தேகம் எழுந்தது. "ஏய் ரினோ! உனக்குத் தெரியும் சொல். யார் அந்த சுவடிகளைஎடுத்தது? நீதான் எடுத்தாயா? பேசு வாய் திறந்து இப்பொழுதாவது பேசு. இல்லையென்றால் உன்னை உருவாக்கியதே வீண் என்றுநினைத்து உன்னை பஸ்பமாக்கிவிடுவேன். சொல் ரினோ சொல்" என்றுகாடே அதிர்வதுபோல் கத்தினார். ரினோ எப்பொழுதும் போல் அமைதியாகவே இருந்தது. அதுவே வத்ஸாசருக்கு மேலும் கோபத்தைத் தூண்டியது. "நீ பேசமாட்டாயா? உன்னை உருவாக்கியது வீண்தானா? இனியும் நீ வாழ்ந்து பயனில்லை. உன்னை என்ன செய்கிறேன் பார்"என்றுகோபத்தோடு சென்றவர் கையில் மூலிகை திரவத்தோடு திரும்பி வந்தார். ரினோவின் அருகில் சென்று "உன்னை இப்பொழுதே அழித்து விடுகிறேன்." என்று சொல்லிவிட்டுதிரவமிருந்த பாட்டிலைத் திறந்தார்.

என்ன நடக்கப்போகிறதோ என்று பயந்து கொண்டு நின்றிருந்ததில்லை "ஐயா வேண்டாம். ரினோ பாவம். அதற்கு எதுவும் தெரிந்திருக்காது. அதை ஒன்றும் செய்துவிடாதீர்கள்." என்று வத்ஸாசரை தடுத்தான். இப்பொழுது வத்ஸாசரின் கோபம் தில்லையிடமும் திரும்பியது."உங்கள் இருவரையுமே அழித்துவிடுகிறேன்" என்று சொல்லிக்கொண்டே முலிகை திரவத்தை இருவர் மீதும் ஊற்றப்போனார்.
அப்பொழுது தடதட என்று யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது.வத்ஸாசரும் தில்லையும் யாராக இருக்கும் என்று நினைத்து சத்தம் வந்த திசையில் நோக்கினர். அங்கே தேசிகன், காசி, ஜான் மூவரும் உள்ளே நுழைந்தனர். அவர்களைப் பார்த்த தில்லை "டேய் காசி இவனை ஏன் இங்குஅழைச்சிட்டு வந்தே? இவன் கொலைகாரன்." என்று காசியைப் பார்த்துகோபமுடன் கேட்டான். "மன்னிச்சிடுங்க. நீங்க எங்களைத் திடீர்னு கைவிட்டு விட்டதால் எங்களோட பிழைப்புக்கு வழியில்லை. அதனாலதான் இவர்கிட்ட சேர்ந்திட்டோம்." என்றான் காசி.

'துரோகிகள்...' என்று தில்லை அவர்களைத் திட்டிக்கொண்டிருக்கும் போதே "டேய் என்னடா பேச்சு. முதல்ல இவங்களைப் போட்டுத்தள்ளுங்க. அப்புறம் இந்தக் கிழவன் என்ன ஆராய்ச்சி பண்ணியிருக்கிறான்னு கண்டுபிடிப்போம்"என்றான் தேசிகன்.
உடனே ஜான் கையில் வைத்திருந்த தடியால் வத்ஸாசரை தாக்கப்போனான். தில்லை அவனைத் தடுத்து " அவரை ஒன்றும் செய்துவிடாதே" என்று வத்ஸாசரின் முன்னே சென்று அவரை மறைத்துக்கொண்டு நின்றான். அடுத்து ரினோவைப் பார்த்து 'ரினோ ஓடிவிடு"என்று சொனனான். அப்பொழுது வத்ஸாசர் கையில் வைத்திருந்த அமிலத்தை ஜானைநோக்கி ஊற்றப்போனார். அதற்குள் ஜான் தடியால் அவரது கையில் ஒருபோடு போட்டான். அடுத்து அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சி மூவரையும் ரத்தம் உறைய வைத்தது.
ரினோவும் அதிர்ச்சியுடனும் வேதனையுடனும் பார்த்துக்கொண்டிருந்தது. அப்படி என்ன நடந்தது அங்கே?ஜான் கம்பால் வத்ஸாசரின் கையில் தட்டியதும் அவர் கையிலிருந்ததிரவப் பாட்டில் உடைந்து தில்லை வத்ஸாசர் இருவர் மீதும் சிதறித்தெறித்தது. சில நொடியில் இருவரும் பஸ்பமாகினர். பயத்தால் அதிர்ந்திருந்த தேசிகன் "டேய் வாங்கடா ஓடிவிடுவோம். அதோ அங்கு நிக்கிறது என்ன? அதுதான் ரினோவாக இருக்கும். பார்க்கிறதுக்கு வினோதமா இருக்கே! . அதுகிட்ட ஏதோ விசேஷத்தன்மை இருக்கும் போல தெரியுது. அதைத் தூக்கிக்கொண்டு வாங்கடா" என்றான். அதைக்கேட்ட ரினோ 'கொலைகாரங்க இவங்கக்கிட்ட மாட்டினாநமக்கும் ஆபத்துதான்' என்று நினைத்து அங்கிருந்து விர்றென்று பறந்தது.

மூன்றுபேரும் அதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அது எங்கு சென்றது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.தேசிகனுக்கு எரிச்சல் வந்தது. "சே! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலியே!. காசி ஜான் அது எங்கு சென்றாலும் எப்படியாவது கண்டுபிடிச்சுடணும்." என்றான்.அங்கிருந்து பறந்து சென்ற ரினோ அவர்கள் சென்றதும் மீண்டும்குடிலுக்கு வந்தது. வத்ஸாசர் பஸ்பமாகிய இடத்தையே சிறிது நேரம்பார்த்துக் கொண்டிருந்தது. பின்பு தில்லையின் குடிலுக்குச் சென்றுமறைத்து வைத்திருந்த சுவடிகளை எடுத்து வந்தது. அவற்றைமீண்டும் கண்ணாடிப் பேழைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு குடிலுக்குவெளியே வந்தது.ரினோ வெளியில் வந்த சில நொடிகளில் 'டமால்'என்று சத்தம்கேட்டது. ஏதோ நிகழப்போகிறது என்று உணர்ந்த ரினோ உடனேமேலெழும்பி பறந்து சற்று தூரத்தில் சென்று என்ன நடக்கப்போகிறதுஎன்று கவனித்தது.

குடில் இருந்த இடம் இரண்டாகப் பிளந்தது. சிறிது நேரத்தில்அந்த இடத்தில் இருந்த எந்த பொருளுமே இருந்த இடம் தெரியாமல் மறைந்து சம தரையாகக் காணப்பட்டது.ரினோ சிறிது நேரம் அங்கேயே நின்றது. பின்பு அதற்கு 'உன்னையும் ரிஷியிடம் தான் அனுப்பப்போகிறேன்'என்று வத்ஸாசர் சொன்னதுநினைவுக்கு வந்தது. அடுத்து 'ரிஷியிடம் எப்படிப் போவது' என்றுயோசித்து வத்ஸாசரை நினைத்து தியானித்தது. அப்பொழுது ஒரு ஒளிஒன்று ரினோமுன் தோன்றி அப்படியே மேல்நோக்கிச் சென்றது. ரினோவும்அதைத் தொடர்ந்து சென்றது. இறுதியில் ரிஷியின் வீட்டை அடைந்ததும் ஒளி மறைந்துவிட்டது. இப்படித்தான் இந்த ரினோ இங்கே வந்து சேர்ந்தது.

ஒரு கதையைப்போல் அனைத்தையும் ரினோ சொல்லிமுடித்ததும் ரிஷி அதனிடம்"ரினோ அந்த சுவடிகளும் மறைஞ்சிட்டுதா?" என்று கேட்டான்."ஆமாம். எல்லாமே மறைஞ்சிருச்சி. இங்கு வந்தபின் தர்மா தாத்தாவைப் பார்த்ததும் வத்ஸாசரைப் பார்ப்பது போல் தோன்றியது. ஆனால்அவரும் மறைந்தவுடன் என்னை உருவாக்கிய வத்ஸாசரின் நினைவே எப்பொழுதும் மனதில் தோன்றிக்கொண்டு இருந்தது. அவரது மரணத்திற்கு நான்கூட ஒரு காரணமாக இருந்துவிட்டேன். அதனால் அவரிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டி தியானம் செய்யவேண்டும் என்று நினைத்து தினமும் அதிகாலையில் அந்த குடில் இருந்த சித்தர் மலைக்கு சென்று வந்தேன். அதுமட்டுமல்ல என்றாவதுஒரு நாள் அந்த சுவடிகள் கிடைத்து விடாதா என்று தினமும்அந்த இடத்தில் சிறிது நேரம் காத்திருப்பேன்." என்றது ரினோ. அனைத்தையும் சொல்லிவிட்டு பாட்டியிடம் "பாட்டி இப்பவாவது ரிஷியிடம் உள்ள சக்தியை நம்புறீங்களா?" என்று கேட்டது."ஆனால் ரினோ.. இதனால் ரிஷிக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்.." என்று பாட்டி சிறிது சந்தேகத்துடன் சொன்னதும்"ஒன்றும் ஆகாது. நீங்க கவலைப்படாமல் காலையில் ஊருக்குப்புறப்படுங்க" என்றது ரினோ.காலையில் பாட்டி புறப்பட ஆயத்தமானாள்.

தூங்கிக்கொண்டிருந்தரினோவையும் ரிஷியையும்"டேய் எழும்பிவாங்கடா நான் புறப்பட்டாச்சு" என்று அழைத்தாள். இருந்த இருவரும் பாட்டியின் சத்தம்கேட்டதும் மெதுவாக எழும்பி வந்தனர்."என்ன பாட்டி புறப்பட்டாச்சா" என்று கேட்டுக்கொண்டே வந்தரிஷியும் ரினோவும் அங்கு சுமோ நிற்பதைப்பார்த்து திகைத்தனர். 'இவன்எப்படி இங்கே வந்தான்?' என்று எண்ணிக்கொண்டு சுமோவைப் பார்த்தார்கள்."என்ன ரிஷி அவனைப் புதிசா பார்க்கிற மாதிரி பார்க்கிற. நான்தான்உங்களுக்குத் துணையா இருக்கட்டுமேன்னு வரச்சொன்னேன்.
அவனுக்கென்று யாருமில்லை. அவங்க தாத்தா மட்டும் இருந்தாரு. அவரும்சமீபத்தில இறந்திட்டாரு. எனக்கு அவரை நல்லாத் தெரியும். சுமோரொம்ப நல்ல பையன். இனிமே நம்மகூடத்தான ; இருப்பான்." என்றாள்பாட்டி.சுமோ ரினோவையே பார்த்துக் கொண்டிருந்தான். "நீதான் ரினோவா? மூக்கும் முழியுமா பார்க்கிறதுக்கு என்னைவிட நல்லாத்தான் இருக்கே"என்று சொல்லிக்கொண்டே ரினோவை ஒரு முறை சுற்றி வந்து "ஓ..வாலெல்லாம்கூட இருக்கா உனக்கு". என்றான். அப்பொழுது ரினோசுமோவை வாலில் சுற்றி தலைகீழாகத் தலைக்கு மேலே தூக்கியது.சுமோ கையையும் காலையும் உதறிக் கொண்டு "யப்பா நான் எந்ததப்பும் பண்ணல என்ன ஒண்ணும் செஞ்சிராதே. ஐயோ! குடலெல்லாம்கீழே விழறமாதிரி இருக்குதேஸஐயா ரினோஸஎன்னை கீழவிட்டுருப்பா"என்று புலம்பினான்.
"ரினோ அவனை விட்டுரு. அவன் இங்கதானே இருக்கப்போறான் உன் விளையாட்டை அப்புறம் வச்சுக்கோ. டேய் சுமோ நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்ல. வா வா ஆட்டோ வந்தாச்சு சாமான்எல்லாம் எடுத்துவை. ரிஷிஸரினோ ஜாக்கிரதை" என்று சொல்லிவிட்டு கிளம்பப்போனாள் பாட்டி. அப்பொழுது ரிஷி "பாட்டி இந்த சுமோ.. இங்கே.."என்று ஏதோசொல்ல வந்தான். அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்துகொண்ட பாட்டி "ரிஷி சுமோ ரொம்ப நல்ல பையன். அவங்க அப்பாஎனக்கு ஏற்கனவே தெரியும்.
அவங்கிட்ட ரினோவைப் பற்றி எல்லாம்சொல்லியிருக்கிறேன். நான் வர்றவரைக்கும் உங்களுக்கு சமையல் பண்ணிக்கொடுத்திட்டு இங்கேயே இருப்பான். யாருகிட்டேயும் எதுவும் சொல்லமாட்டான். உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கமாட்டான். சுமோ.....ரெண்டுபேரையும் நல்லா கவனிச்சுக்க" என்று சொல்லி விட்டு கிளம்பினாள். "நான் இவங்கள கவனிக்கிறோனோ இல்லையோ இவங்க ரெண்டுபேரும் பார்க்கிறத பார்த்தா என்னைத்தான் நல்லா கவனிப்பாங்கன்னுநினைக்கிறேன். நல்லா மாட்டி விட்டுட்டீங்க இவங்ககிட்ட. என்ன பாடுபடப்போறேனோ! முதனாளே தலைகீழா தொங்க விட்டுட்டான். இன்னும்என்னவெல்லாம் செய்யப் போறாங்களோ. எதுக்கும் நான் நல்லா இருக்கேன்னான்னு அடிக்கடி போன் பண்ணிக்கேட்டுக்காங்க" என்று சொல்லிக்கொண்டே ஆட்டோவில் சாமான்களை ஏற்றினான்.

பாட்டி சென்றதும் உள்ளே நுழைந்த சுமோ இருவரிடமும் "என்னப்பா தம்பிகளா. சூப்பரா சூடா டீ போட்டுக் கொண்டுவர்றேன். சீக்கிரம் பல் விளக்கிட்டு வாங்க. அப்புறம் ஒரு விஷயம். நான் உங்களைவிட கொஞ்சம்தான் பெரியவன். என்ன மிஞ்சி மிஞ்சிப் போனா ஒருபத்து வயசுதான் கூட இருக்கும்"என்று சொல்லியவனை ரிஷி இடைமறித்து"அதனால் இப்ப என்னண்ணே?" என்று கேட்டான் "பாத்தியா இதுக்குத்தான் சொல்லவந்தேன். நீங்க இனிமேல் என்னை'அண்ணன்'அப்படின்னு எல்லாம் கூப்பிடவேண்டாம் சுமோன்னே கூப்பிடலாம்"என்றதும் இருவரும் "சரிடா சுமோ" என்றனர்."ஆ.. சரி 'டா' வா! ஆகா உங்கக்கிட்ட ரொம்ப கவனமா இருக்கணும்" என்றான். ரினோ அவனிடம் ஏதாவது குறும்பு செய்து பார்க்கலாம் என்றுநினைத்து "சுடலைமுத்து காலையில குளிச்சியா?" என்று கேட்டது. "ரினோ கண்ணா! சுமோன்னு கூப்பிடக்கூடாதா. சரி பரவாயில்ல. நீஎப்படிக் கூப்பிட்டாலும் நல்லாத்தான் இருக்கும்.
ஆமா என்ன கேட்ட...குளிச்சாச்சான்னா. அட எங்கப்பா! காலையில எழும்பின உடனே பல்கூடவிளக்காம ஓடிவந்துட்டேன். அப்புறம் எங்க குளிக்க?" "அப்படின்னா முதல்ல அந்த வேலையை முடிச்சிட்டு வா" "சரி" என்று சொல்லிவிட்டு சென்றான் சுமோ.பின்னாடியே சென்றது ரினோ. சுமோ பேஸ்டையும் பிரஷ்ஷையும்வைத்துவிட்டு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தான். ரினோ அந்தபேஸ்டில் சுமோவுக்குத் தெரியாமல் ஓரு இலையின் சாறைப் பிழிந்துவிட்டு வந்துவிட்டது. பிரஷ்ஷை எடுத்து பல்விளக்கிய சுமோ முகத்தைச் சுளித்தான்.ரினோவும் ரிஷியும் தற்செயலாக வருவதுபோல் அங்கு வந்தனர்."என்ன சுமோ. மூஞ்சியெல்லாம் ஒருகோணலாப் போகுது" என்றுகேட்டான் ரிஷி. " கோணலா மட்டுமா போகுது! வாய்க்குள்ள எரியிற எரிச்சல்லஅந்த மூஞ்சியே காணாமப் போயிடும் போல இருக்கு தம்பி" "ஐயய்யோ.. சுமோ என்ன ஆச்சு" என்று மிகவும் பாவமாகக் கேட்டது ரினோ. "அதுவா இந்த பேஸ்ட்டைத்தான் தேச்சேன். ரிஷி அதை கொஞ்சம் நல்லா பாரு அது பேஸ்ட்தானே? இப்படித்தான் ஒரு தடவை எங்கதாத்தா சொரிபுண்ணுக்குப்போட வாங்கி வச்சிருந்த களிம்பை பேஸ்ட்னு நினைச்சு தேச்சுட்டேன்." என்றான். ரினோ ஒரு இலையைக்கொடுத்து "சுமோஸ இதைச்சாப்பிடு சரியாயிடும்" என்றது. அதை வாங்கிச் சாப்பிட்ட சுமோ "ஆமா சரியாயிடுச்சு" என்று சொல்லிக்கொண்டே ரினோவை சந்தேகத்துடன் பார்த்தான். "தம்பி ரினோ.. எப்படி அவ்வளவு கரெக்டா கையில மருந்துவச்சிருக்கே? இப்பப்புரியுது. இதெல்லாம் உங்க வேலைதானா ஆங்...பாட்டி வர்ற வரைக்கும் எப்படித்தான் உங்க ரெண்டுபேரையும் சமாளிக்கப் போறேனே!" என்றான். சுமோ போட்டுக்கொடுத்த டீயைக் குடித்துப்பார்த்த ரிஷி "சுமோஸ.டீ சூப்பர்" என்றான். ரினோவும் "ஆமா சுமோஸ நிஜமாவே நல்லாத்தான்போட்டிருக்கே" என்றது."அப்படியா! நல்லா இருக்கா ரொம்ப நன்றிப்பா" என்று சொல்லிவிட்டுஅவனும் டீயைக்குடித்துப் பார்த்தான். ஒருவாய் வைத்துவிட்டு 'என்னடீ நல்லாத்தானே போட்டோம்! இவங்களும் ரொம்ப சூப்பர்ங்கிறாங்க!நம்ம வாய்க்குத்தான் ஏதாவது கோளாறா' என்று நினைத்துக்கொண்டேஇருவரையும் ஒரு மாதிரி பார்த்து "டீ நல்லா இருக்கு? குடிங்ககுடிங்க" என்று தலையை ஆட்டினான். இருவரும் ரசித்துக் குடித்துக்கொண்டே டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். சுமோவுக்கு 'அது எப்படி நம்ம டீ மட்டும் இப்படி இருக்கு.ரெண்டுபேரும் ரொம்ப ருசிச்சுக் குடிக்காங்களே' என்று மண்டைகுடைந்தது. உடனே "ரிஷி. டீ நல்லா இருக்கா?" என்று மீண்டும்கேட்டான்."ஆமா நல்லா இருக்கு. இந்தா நீ வேணா குடிச்சுப் பாரேன்."என்று ரிஷி தம்ளரை சுமோவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் டிவியில் மூழ்கினான் . தம்ளரை வாங்கிக் குடித்துப்பார்த்த சுமோ " ஆமா நல்லாத்தான் இருக்கு. அதெப்படி மூணுபேருக்கும் ஒன்னுபோல போட்டடீ எனக்கு மட்டும் கசாயம் மாதிரி ஆயிடுச்சு." என்றான். ரினோ "டேஸ்டுக்காக உப்பு மசாலா ஏதாவது சேர்ந்திருக்கும்"என்றது. "சேர்ந்திருக்குமா? சேத்திட்டீங்களா? பாட்டி என்னை இப்படி மாட்டிவிட்டுட்டு போயிட்டேயே!" என்று புலம்பிய சுமோவை ரினோ வாலால் ஒரு அடி குடுத்து '''

"இங்க பாரு ராக்போவை" என்று டிவியைக்காட்டியது. ராக்போ ஒரு கட்டிடத்தின்மேல் நின்று கொண்டு சிதறி ஓடும் மக்களைப்பார்த்து கத்திக்கொண்டிருந்தான்.

"ஓடாதீர்கள் நான் உங்களைஒன்றும் செய்ய மாட்டேன். என்னை வணங்குங்கள். நான்தான் கடவுள்"என்றான்.இருபது அடி உயரம். உடலெங்கும் ரோமம் நீள நீளமமாகவளர்ந்திருந்தது. பூனையின் கண்கள்போன்று தோற்றமுடைய பெரிய இரு விழிகள் பார்ப்பவர்களைப் பயமுறுத்தியது. பெரிய பெரிய காதுகள். இவன் மனிதனா? மிருகமா? கண்களில் வெறித்தனம் குடியிருந்தது. கைகள் எதையாவது அழிக்கவேண்டும் என்று பரபரப்பில் எப்பொழுதும் அசைந்துக் கொண்டே இருந்தன. குரலில் கொடூரம் தென்பட்டது.கட்டிடத்தின் மேலிருந்து கூச்சலிட்டவன் மக்கள் பயந்து ஓடுவதைப் பார்த்து கீழே பறந்து வந்து நடுரோட்டில் நின்று கத்த ஆரம்பித்தான். அவன் பறக்கும்போது அவன் உடம்பிலுள்ள ரோமங்கள்காற்றில் ஆடியது.

ராக்போ நடுரோட்டுக்கு வந்ததும் மக்கள் அதிக பயத்துடன் அங்கும் இங்கும் சிதறி ஓடினார்கள். யாரும் தன்னுடைய பேச்சைக் கவனிக்காமல் ஓடியது அவனுக்கு பெரும் கோபத்தை வரவழைத்தது. கோபத்தில் கையில் அகப்பட்டவர்களைப் பிடித்து தூக்கி வீசினான்.பல கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் உருட்டித்தள்ளினான். உடைத்தும் எறிந்தான். அவனுடைய அட்டாகாசம் அதிகரித்துக்கொண்டே போனது. அப்பொழுது ஒரு பெரிய போலீஸ் படையே அங்குவந்தது.

ராக்போவைச் சுற்றி நின்று கொண்டு துப்பாக்கியால் அவனைநோக்கி சுட ஆரம்பித்தனர். அதேநேரம் வீட்டில் ரினோ ரிஷியை அவசரப்படுத்திக் கொண்டிருந்தது. "ரிஷி சீக்கிரம் புறப்படு. ராக்போ மக்களைத் துன்பப்படுத்திக்கொண்டிருக்கிறான். அவனை உன்னால் மட்டும்தான் அழிக்கமுடியம். உனக்கு மட்டும் தான் அந்த சக்தி உண்டு." என்றது.

"இல்லை ரினோ! இதில் மட்டும் நான் உன் பேச்சைக் கேட்கமாட்டேன். உன் உயிரைப் பணயம் வைத்து அவனை அழிக்க வேண்டும்என்றால் அது என்னால் முடியாது.""ரிஷி தயங்காதே நீ சரியான நேரத்திற்கு திரும்பி வந்து விட்டால் எனக்கு ஒன்றும் ஆகாது. சீக்கிரம் புறப்படு ரிஷி"ரிஷி எதுவுமே சொல்லாமல் அமைதியாக உடகார்ந்து விட்டான்.

"ரிஷி உனக்கு இரக்கமே இல்லையா? அங்கு மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீ என்னன்னா இப்படி அடம்பிடிக்கிறியே."

"ரினோஸ எனக்கு முதல்ல நீதான் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்தான்"ரிஷி மட்டும் சென்றால் ரினோவுக்கு அப்படி என்ன ஆபத்து? ரிஷி ஏன் தனியாக செல்ல மறுக்கிறான்? ரிஷியின் பிடிவாதத்தைப் பார்த்த ரினோ "சரி ரிஷி நீ விரும்பியதுபோல் உன்னுடன் நானும் வருகிறேன் புறப்படு" என்று ரினோ சொன்னதும் ரிஷி சந்தோஷமானான். அறையை விட்டு வெளியே வந்தனர்.
சுமோ கண் இமைக்காது டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.

இவர்களைக்கவனிக்கவில்லை. ரோடாஸ் இருந்த அறைக்குச் சென்றனர். ரிஷி அதில்ஏறி உட்கார்ந்தான். உட்கார்ந்த சில நொடிகளில் அவனுடைய கெட்டப்பே மாறிவிட்டது. வத்ஸாசர் ரினோவிடம் காட்டிய அந்த ஆடை இப்பொழுது ரிஷியின்உடம்பில். அந்த ஆடையிலும் பெரிதாக 'ரினோ' என்று எழுதியிருந்தது. ரிஷியின் உடையும் அழகிய கண்ணாடியுடன் கூடிய ஹெல்மட் போன்றதொப்பியும் ரிஷியை வித்தியாசமான மனிதனாக்காட்டியது. அவன் சாதாரணமனிதனல்ல என்று நினைக்கத் தோன்றியது. அவன் இப்பொழுது ரிஷியல்ல. பெயரால் அனைவருக்கும் ரினோவானான். நம்ம ரினோ மட்டும் என்ன குறைச்சலா. இரண்டு கைகளையும்உயரே தூக்கிக்கொண்டு ஏதோ மந்திரம் சொன்னது. உடனே தொப்பியும் கண்ணாடியும் வித்தியாசமன ஆடையுடனும் கலக்கலா மாறிவிட்டது. வால் மட்டும் ஆடைக்கு வெளியே வளைந்து கொண்டிருந்தது ஒற்றைக் கொம்பு தொப்பிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

ரினோவும் பறக்கும் தட்டில் ஏறி உடகார்ந்தது. "ரிஷி! ஸ்டார்ட்"என்றது. ரிஷி கைப்பக்கம் இருந்த ஒரு பட்டனை அழுத்தினான். உடனேஇருவரும் ரோடாஸ_டன் மறைந்துவிட்டனர். போலீஸ் துப்பாக்கியால் சுட்டும் துப்பாக்கிக் குண்டுகள் ராக்போவைஒன்றுமே செய்யவில்லை. அதைக்கண்டு திகைத்து நின்றது போலீஸ்படை. ராக்போ அவர்களை நோக்கி கோபமாக நடந்தான். அவன்நடந்துவரும்போது நிலமே அதிர்வது போலிருந்தது. அனைவரும் பயத்தால்ஓடினார்கள்.

அவர்களின் ஜீப்புகளையும் கார்களையும் பைக்குகளையும் ரக்போஉடைத்தெரிந்தான். அவன் மூச்சுவிடுவதே உர் உர்ரென்று உறுமதுவதுபோல் இருந்தது."கடவுளே! இந்த அரக்கனிடமிருந்து எங்களைக்காப்பற்ற மாட்டியா! ரினோ தப்பு செய்த மனிதர்களை எல்லாம் தண்டிப்பதற்காக உடனேவருவாயே. இப்பொழுது இந்த கொடூரனிடமிருந்து எங்களைக் காப்பாற்ற வரமாட்டியா.." என்று மக்கள் ஒவ்வொரும் மனதில் நினைத்தனர்.

அப்பொழுது இனிய நாதம் போல் ஒரு இசை கேட்டது. 'இதென்ன.. இனிமையான இசை சத்தம். இது எங்கிருந்து வருகிறது? இந்த ராக்போவிடமிருந்தா? சே! சே! இருக்கமுடியாது. இவன்மூச்சுவிட்டாலே பன்றி உறுமுற மாதிரி இருக்குது. இது வேறு எங்கிருந்தோ வருகிறது' என்று அனைவரும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கும்பொழுது அங்கே ரோடாஸில் ரினோவும் ரிஷியும் "ஹாய்ஸஏய்ராக்போ. ஹாய் பிரண்ட்ஸ்"என்று கையை ஆட்டிக்கொண்டே பறந்துவந்தனர்.

அவர்களுடைய ரோடாஸ்தான் அந்த இனிய இசையுடன் பறந்தது.அவர்களைப் பார்த்ததும் மக்கள் முதலில் பயந்தனர். 'இதென்னவினோத உயிரினங்கள் வேற்றுக் கிரகத்திலிருந்து பூமிக்குப் படையெடுத்துள்ளதா? ஐயோ! இவையெல்லாம் சேர்ந்து நம்மை என்ன செய்யப்போகிறதோ?' என்று அஞ்சினார்கள்.அவர்களைப் பார்த்து ரிஷியும் ரினோவும் "ஹாய் பிரண்ட்ஸ் பயப்படாதீங்க. நாங்கதான் ரினோ உங்களையெல்லாம் ராக்போவிடம் இருந்துகாப்பாற்றத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்." என்றனர்.

அவர்கள் அப்படிச் சொன்னதும் ராக்போவுக்கு கோபம் அதிகரித்தது."டேய் பொடியன்களாஸ நீள்கள் யார்? இந்த முட்டாள்களை என்ன்pடமிருந்து நீங்கள் காப்பாற்றப் போகிறீர்களா. முதலில் உங்களை யார் காப்பாற்றப் போகிறார்கள் என்று பார்க்கலாம்."என்று கர்ஜித்தான்."ஏய் ராக்போ உனக்கு சமாதி கட்டுவதுதான் எங்கள் முதல்வேலை.""டேய் நீங்கள் முதலில் தலை குனிந்து என்னை வணங்குங்கள்.நான்தான் இனி அனைவருக்கும் கடவுள். என்னைத்தான் அனைவரும்வணங்க வேண்டும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்."

" நீ கடவுளா! முட்டாள் நீ சாத்தான். உன்னைத் தலைவணங்க நாங்கள் வரவில்லை. உன் தலையை எடுக்க வந்திருக்கிறோம்."

"ஹா....ஹா...என்னை உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. நீங்கள் இன்றோடு ஒழிந்தீர்கள்." என்று கத்திக்கொண்டே அவர்களை நோக்கிப்பாய்ந்தான் ராக்போ. ரிஷி அவன் அருகில் வரும்வரைக் காத்திருந்து பின் சட்டென விலகினான். அதனால் ராக்போ பாய்ந்த வேகத்தில் ஒரு பெரிய கட்டிடத்தின் மீது மோதினான். ம்....ம்.... என்று உடலை ஒரு உதறு உதறினான். மீண்டும் வெறியோடு ரிஷியை நோக்கிப் பாய்ந்தான். ரிஷி அப்பொழுது ஒரு கட்டிடத்தின்மேல் நின்றிருந்தான். ராக்போபறந்து அருகில் வந்ததும் ரினோ மேலே பறந்து வாலைச் சுழற்றி அவனை அடித்தது. அதே வேகத்தில் ரிஷி ரோடாஸை அவன்மீதுமோதினான். இருவரின் தாக்குதலால் ராக்போ கட்டிடத்தின் மேலிருந்தஒரு தண்ணீர்த்தொட்டியில் போய் மோதினான்.தொட்டி உடைந்து ராக்போவின்மேல் தண்ணீர் கொட்டியது.

ராக்போஉடலெல்லாம் தண்ணீரால் நனைந்தது.அப்பொழுது ரிஷியும் ரினோவும் மக்களைப் பார்த்து கைகளைஆட்டி "பயப்படாதீர்கள். நாங்கள் ராக்போவை அழிக்கவே வந்திருக்கிறோம். நாங்கள் உங்கள் நண்பர்கள் 'ரினோ'" என்றனர்.உடனே மக்கள் ஆர்ப்பரித்தனர்.

"ரினோ! ரினோ! அந்த ராக்போவைக் கொன்றுவிடுங்கள்"என்று கூச்சலிட்டனர்.இதைக்கேட்டு ராக்போவிற்கு எரிச்சலும் கோபமும் அதிகரித்தது. பற்களை நற நற வென்று கடித்துக்கொண்டே உடம்பை வேகமாக உதறினான். உடம்பிலிருந்து தண்ணீர் பல அடி தூரத்திற்கு தெரித்தது."டேய்ஸபொடியன்களா நான் உங்களை அழிக்காமல் விடமாட்டேன்.இப்பொழுது செல்கிறேன் மீண்டும் வருவேன்." என்று கத்திக்கொண்டேபறந்துவிட்டான்.

ரினோவையும் ரிஷியையும் பார்த்து பயந்து ராக்போ ஓடிவிட்டான்என்று நினைத்தமக்கள் "ரினோ! ரினோ1" என்று இருவரையும் பார்த்துகைகளை அசைத்தனர். அவர்களும் கைகளை ஆட்டிவிட்டு ரோடாஸில்பறந்தார்கள்.

"ரினோஸ ராக்போ எங்கு சென்றான்?"என்று ரிஷி கேட்டான்."தெரியலை ரிஷி.அவன் ரொம்ப வேகமாக பறந்துபோயிட்டான்."இருவருக்கும் ராக்போவைத் தொடரமுடியாதது ஏமாற்றம் அளித்தது. ரிஷி மீண்டும் பட்டனை அழுத்தினான். சில நொடியில் அறையில் இருந்தனர். ரோடாஸை விட்டு இறங்கியதும் சாதாரண நிலைக்கு மாறினான் ரிஷி. ரினோ அப்படியே அறையைவிட்டு வந்தது. அதைப்பார்த்து ரிஷி"ரினோ என்ன அப்படியே இருக்கே" என்றான்.

"கொஞ்சம் வேடிக்கையைப் பாரு" என்ற ரினோ சுமோவைத்தேடிச்சென்றது.இவ்வளவு நேரமும் டிவி பார்த்துக்கொண்டிருந்த சுமோ அப்பொழுதுதான் சமையலறைக்குச் சென்று " இந்த ரினோவோட சாகசத்தைப்பாத்துக்கிட்டிருந்ததுல சமையல் பண்ண நேரமாயிடுச்சே. ரிஷியும் ரினோவும் இப்ப வந்துடுவாங்களே!" என்று தனக்குள்ளே பேசிக்கொண்டுவேகமாக சமைக்க ஆரம்பித்தான். அப்பொழுது "சுமோ. அந்த ரினோவை எங்கே? அவன் இங்கதான் இருக்கான் எனக்குத் தெரியும். சொல் இல்லைன்னா உன்னைகடிச்சித் தின்னுடுவேன்"என்று ராக்போவின் குரல் கேட்டது.

"ஆ.. இது அந்த படுபாவி ராக்போ பய குரல் மாதிரியில்ல இருக்கு.ரினோ இங்க இருக்கிறது இவனுக்கு எப்படித்தெரியும்? சண்டாளன் கடிச்சித் தின்னுருவேன்னு சொல்றானே. இவன் இப்படி மனுசக் கறியத்தின்னுதான் இப்படி வளர்ந்திருக்கானோ!.

ஐயோ இந்த ரினோவாவது இப்ப வரக்கூடாதா. இந்த ரிஷியைத்தேடி வீதிவீதியா அலைஞ்சு கடைசியில விதி ராக்போகிட்ட அழைச்சிக்கிட்டு வந்துடுச்சே." என்று சுமோ புலம்பினான். அவன் உடலெல்லாம்பயத்தால் நடுங்கியது."டேய் என்ன புலம்பறே. இப்ப ரினோ எங்கேன்னு சொல்லப்போறியா இல்ல உன் குரல்வளையில் கடிச்சி ரத்தத்தைக் குடிக்கட்டா.""ஐயோ! கடிச்சித் தின்னுருவேங்கிறான் ரத்தத்தைக் குடிப்பேங்கிறான்.யப்பா ராக்போஸஅந்த ரினோ யாருன்னே எனக்குத் தெரியாதுப்பா. நீ என்னை வேணும்னா கொல்லு. கடி என்ன வேணும்னாலும் செய்துக்கோ.

நான் இந்த உலகத்துல இருந்து என்னத்த சாதிக்கப் போறேன்.ஆனா ஒண்ணு உன்னை நேரில் பார்க்கிற தைரியம் எல்லாம்எனக்குக் கிடையாது. அதனால நான் கண்ணை மூடிக்கிறேன்.சட்டுப் புட்டுனு கொன்னுறு. இந்தப் பாட்டி என்னை இங்க கூட்டிட்டுவந்து இப்படி கொலைக்களத்தில நிக்க வச்சமாதிரி நிக்க வச்சுட்டாங்களே. எங்க அப்பா அம்மாஇ தாத்தா எல்லாரும் போன இடத்துக்குநானும் போகவேண்டியது தானாஸ. கடவுளே! ம்....நம்ம விதி அவ்வளவுதான்"என்று புலம்பிக் கொண்டே கண்களை இறுக மூடிக்கொண்டான். பயத்தால் உடம்பு நர்த்தனம் ஆடியது.சிறிது நேரம் எந்த சத்தமும் கேட்காததால் "என்ன சத்தமேயில்லை.போயிட்டானா?" என்று லேசா கண்களைத் திறந்தான்.

அப்பொழுது"ப்பே" என்று பயமுறுத்துவது போன்று சத்தம் கேட்டது.ஏற்கனவே ராக்போ பயத்தில் இருந்தவன் இந்த சத்தத்தால்"யம்மா... யப்பா..." என்று அலறிவிட்டான். அங்கே ராக்போ குரலில் பயமுறுத்திக் கொண்டு நின்றது ரினோதான். ரிஷியும் அருகில் சிரித்துக்கொண்டே நின்றிருந்தான்."ஏய் சுமோ என்னாச்சு? ஏன் அலறினே?" என்று கேட்டது ரினோ.சுமோ அப்படியே தரையில் உட்கார்ந்து கொண்டு வேகமாக மூச்சுவிட்டுக்கொண்டு ஒன்றுமில்லை என்பதுபோல் கையை அசைத்தான்.அடுத்து தண்ணீர் வேண்டும் என்று சைகையிலேயே கேட்டான்.

ரிஷிதண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததும் அதை வாங்கிக் குடித்துவிட்டுஇ"யப்பாஸஒரு அப்பாவி மனுசனை ஒரு நிமிஷத்துல இப்படி ஆடவைச்சிட்டீங்களே. உங்களுக்கே இது நல்லா இருக்கா? அநியாயமாஒரு உயிரைக் கொல்லப்பார்த்தீங்ளே." என்று அப்பாவிபோல் கேட்டான்.

"சுமோ நீ ரொம்ப நல்லவன்தான். உன் உயிர் போனாலும் பரவாயில்லைன்னு நினைச்சியே அதுவே உன்னை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு." என்றான் ரிஷி.

"நான் நல்லவனான்னு தெரிஞ்சுக்க அப்படி ஒரு சோதனை தேவையா?. சரி அதை விடுங்க. ரினோ ராக்போவை சும்மா புரட்டிஎடுத்துட்டல்ல. ஆனா அந்தப்பய தப்பிச்சட்டானே." என்று சொல்லிவிட்டு ரிஷியை ஒரு மாதிரி மேலிருந்து கீழாகப் பார்த்தான். அதைக்கவனித்த ரிஷி "ஏய் என்ன என்னை அப்படிப் பார்க்கிறே?" என்று கேட்டான்.

"ஆமா காலையிலிருந்து நீ எங்க போன கம்ப்யூட்டர் கிளாசுக்கா?இதை நான் நம்பணுமாக்கும்? உண்மையைச் சொல். ரினோகூடஇருந்த அந்த ஸ்கைமேன் நீதானே?""ஸ்கைமேனா! இதென்ன புதுப்பேரு! நீயே பேரு வச்சிட்டியா?""ஆமா நீ ஸ்கைமேன்தான்! ரிஷி! உண்மையைச்சொல். நீதானேஅது. நீயேதான் இதப்போயி உங்கிட்ட ஏன் கேக்கணும். உன் உதட்டிலஇருக்கிற அந்த மச்சம்தான் சொல்லுதே அது நீதான்னு. கண்ணா..அந்த பறக்கும் தட்டை அதுதாம்பா ரோடாஸ் அதை ஒரே ஒருமுறை எங்கிட்ட காட்டுங்களேன். என்ன பளபளப்பு! என்ன மினுமினுப்பு! நம்ம நகைக் கடக்காரங்க மட்டும் பார்த்தாங்கன்னா உரசி எடுத்து உருக்கிஉருத்தெரியாம பண்ணிடுவாங்க.

நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்எனக்கு மட்டும் காட்டுங்கப்பா."
"நீ உரசி எடுத்துரக்கூடாதே.""ரினோ நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன் ராசாஸ"" ஆனால் அது அப்பவே மறைஞசிட்டுது. இனி நாளைக்குத்தான்பார்க்க முடியும்"

"அப்படின்னா நீ போட்டிருக்கிற கண்ணாடியையும் தொப்பியையுமாவது தா. நான் கொஞ்சம் போட்டுப் பார்த்துட்டு தர்றேன்."ரினோ தொப்பியையும் கண்ணாடியையும் கழற்றி சுமோவிடம் நீட்டியது.

சுமோ அதை வாங்கும் பொழுது இரண்டும் மறைந்து விட்டது."ஆகாஸஉங்களுக்கு மாய மந்திரமெல்லாம் தெரியுமா? ஐய்யா! ராசாக்களா இப்பவாவது நீங்க யாருன்னு சொல்லிடுங்கப்பா. என் மண்டைவெடிக்கிறமாதிரி இருக்கு."

உடனே ரினோ "சுமோ நாங்க யாருன்னுதானே தெரியணும். சொல்றேன். உனக்கு ஸ்பைடர்மேன் தெரியுமா?" என்று கேட்டது."வேண்டாம்.. நீங்க சொல்லவே வேண்டாம். நான் இனிமேல் கேட்கவே மாட்டேன். எனக்கு சமையல் கட்டுல வேலையிருக்கு. நான்வர்றேன்"என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.ரிஷி டிவியை ஆன் செய்தான். அனைத்துச் சேனல்களிலும் ரினோராக்போ பற்றிய செய்திகள்தான்.'ராக்போவைத் தொடர்ந்து மேலும் வாய் பேசக்கூடிய ஒரு வினோதமிருகமும் அதனுடன் மற்றொருவனும் பறக்கும் தட்டு போன்ற வாகனத்தில் வந்தார்கள்.

அவர்கள் தங்களை 'ரினோ' என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் அந்த வாகனம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அதில் 'கல்பாவின் ரோடாஸ்'என்று எழுதியிருந்தது.'கல்பா' என்றால் என்ன? ஒருவேளை கல்பா என்ற பெயரில் யாராவது இவர்களுக்குத் தலைவனாக இருக்கக்கூடுமோ? என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த ரோடாஸில் வந்த அந்த வினோத மிருகம்தான் இதுவரை ரினோ என்ற பெயரிலும் தப்புகள் செய்தவர்களை போலீஸில் சரணடையச் செய்தது என்று அதை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.அதனால் இந்த ரினோவால் பொது மக்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

இந்த அதிசய மனிதர்கள் இன்றைய விஞ்ஞான உலகத்தில் யாரோஒரு விஞ்ஞானியால் ரகசியமாக உருவாக்கப்பட்ட இயந்திர மனிதர்களாகவும் இருப்பதற்கு சாத்தியமிருப்பதாக சில விஞ்ஞானிகள் கருத்துதெரிவித்தனர்.மேலும் சிலர் இவர்கள் வேற்று கிரகத்து மனிதர்களாகவும் இருக்கலாம் என்கின்றனர். இவர்களைப் பற்றி ஆராய்வதற்காக உலகிலுள்ளவிஞ்ஞானிகள் பலர் சென்னைக்கு வர இருக்கின்றனர்.ராக்போ மிகவும் கொடூரமானவனாக இருக்கிறான். ஆனால் ரினோஅபபடியல்ல. ராக்போவிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வந்திருப்பதாகச்சொல்வதால் ரினோவால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றுநம்பப்படுகிறது.'டிவி பார்த்துக்கொண்டிருந்த ரிஷியிடம்"ரிஷி உன்னைத் தேடி அந்த இன்ஸ்பெக்டர் ஆனந்த் வந்திருந்தாருப்பா.

நீ வந்த உடனே உன்னை அவர் வீட்டுக்கு வரச்சொன்னார்."என்று சுமோ வந்து சொன்னவுடன் ரிஷி டிவியை அணைத்துவிட்டு" இதை ஏன் அப்பவே சொல்லல." என்று கேட்டான்"நீங்க பண்ணுன களேபரத்துல எங்க அப்பா அம்மா யாருன்னேமறந்திட்டேன். அப்புறம் இது எப்படி ஞாபகம் வரும்."" நான் எங்க போயிருக்கேன்னு சொன்னே.?"" இரு.. இரு நான் முதல்ல இருந்து என்ன நடந்துச்சுன்னு சொல்லிடுறேன். இல்லாட்டி நீ கேள்வி மேல கேள்வியா கேட்பே. நான் குழம்பிப்போய் எதையாவது உளறிடுவேன்." என்று சொல்லிவிட்டு நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.

காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும் டிவி பார்த்துக் கொண்டிருந்த சுமோ 'இது எந்த புண்ணியவான் டிவி பார்க்க விடாம தொந்தரவு செய்யிறது' என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தான்.அங்கு ஆனந்த் நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும் 'இவரு எதுக்கு இங்கே வந்திருக்காரு.'என்று யோசித்தான்.ஆனந்துக்கும் ஏற்கனவே சுமோவைத் தெரியும் என்பதால் அவனிடம் "ஏய் நீ இங்கே என்ன செய்யிறே? மற்றவங்களெல்லாம் எங்க?"என்று கேட்டார்."பாட்டி ஊருக்குப் போயிருக்காங்க. அதனால ரிஷிக்குத் துணையாஎன்னை இங்கே இருக்கச் சொல்லியிருக்காங்க."" ரிஷி எங்கே?""ரிஷி வெளியில போயிருக்கான். ரினோ கம்ப்யூட்டர் கிளாஸ் போயிருக்கான்.""ரினோவா அது யாரு?""ஓ.... டிவியை பார்த்துட்டு இருந்தேனா அந்த ஞாபகத்திலே உளறிட்டேன்.

ரிஷிதான் கம்ப்யூட்டர் கிளாஸ் போயிருக்கான். ரினோ அதோகலக்கிட்டு இருக்கான் பாருங்க" என்று டிவியைக் காட்டினான்." ரினோ யாரிது? இவங்களை உனக்குத் தெரியுமா?""எனக்கு மட்டுமா தெரியும் இந்த உலகத்துக்கே நல்லா தெரிந்திருக்குமே.""இவங்க எங்கிருந்து வந்தாங்க?""அது யாருக்குத் தெரியும்? அங்க பாருங்க அவங்க அந்த ராக்போ பயலைத் தாக்குறதை. ஆங்.. அப்படித்தான். அடி குத்து" என்றுசொல்லிக் கொண்டு பக்கத்திலிருந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தை அடிக்ககையை ஓங்கிவிட்டான். அதற்குள் சுதாரித்துக் கொண்டு"சார் மன்னிச்சிடுங்க டிவியைப் பார்த்திட்டு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்." என்றான்.

"நீ இன்னொரு தடவை உணர்ச்சி வசப்படுறதுக்குள்ள நான்கிளம்புறேன். இல்லை அப்புறம் நானும் உணர்ச்சிவசப்பட்டுருவேன். நீஎன் அடியைத் தாங்கமாட்டே. ரிஷி வந்தவுடன் நான் வரச்சொன்னேன்னு
சொல்லு".

"சார் டீ போட்டுத்தர்றேன் சாப்பிட்டுட்டுப் போங்க"

"உன்னோட டீயை அந்த ராக்போவுக்குக் கொடு" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.சுமோ சொல்லி முடித்துவுடன் ரிஷி ஆனந்தைப் பார்க்கக் கிளம்பினான். வழியில் மாஷா டீச்சர் அவனைப் பார்த்து "ரிஷிஸ என்ன உன்னைக் கெஞ்ச நாளா பார்க்கவே முடியலியே. பாட்டியையும் காணோம்?"என்று கேட்டாள.;

"பாட்டி ஊருக்குப் போயிருக்காங்க. நான் இங்கேதான் இருக்கேன்.கம்ப்யூட்டர் கிளாசுக்குப் போயிட்டிருக்கேன்.""இப்ப எங்க கிளம்பிட்டே?""கோபி வீட்டுக்கு""ரிஷி. நானும் கோபியை ஒரு விஷயமா பார்க்க வேண்டியிருக்கு.அதனால் உங்கூட நானும் வர்றேன்."'இவங்க எதுக்கு கோபியைப் பார்க்கணும்?'என்று மனதில் நினைத்தரிஷி "சரி வாங்க" என்றான்.மாஷா டீச்சர் என்னன்னவோ பேசிக்கொண்டே வந்தார். ரிஷி எதுவுமேகாதில் வாங்கவில்லை. அவனது மனம் 'ஆனந்த் அங்கிள் எதற்காகவரச்சொன்னார். ஒருவேளை தேசிகனை கண்டு பிடித்துவிட்டாரோ?'என்று எண்ணிக் கொண்டிருந்தது.

ஆனால் மாஷா டீச்சர் திரும்ப திரும்ப கோபியின் பெயரையே சொல்வது போல் தெரிந்தது. அப்பொழுதுதான் ரிஷி மாஷா என்ன பேசுகிறார்என்று கவனிக்க ஆரம்பித்தான்."ரிஷி! கோபி பாவம் அம்மா இல்லாத பையன். அவங்க அப்பாவும்ரொம்ப நல்லவருதான்"இப்படியே போய்க்கொண்டு இருந்தது மாஷாவின் பேச்சு. ரிஷிக்கு ஏதோ புரிவதுபோல் இருந்தது.

'ஓகோ.. இப்படிப்போகிறதா விஷயம்'என்று நினைத்து மனதிற்குள்ளே சிரித்துக் கொண்டான்.ஆனந்த வீட்டில் கோபிதான் இருவரையும் வரவேற்றான். சிறிதுநேரம் கழித்து ஆனந்த் வந்தார். ர்pஷியுடன் வந்த மாஷாவைப் பார்த்துயாரென்று கேட்டார். ரிஷி மாஷாவைப் பற்றி சொல்லிவிட்டு "அங்கிள்இவங்களுக்கு கோபின்னா ரொம்ப இஷ்டம். அவனுக்கு அம்மா இல்லைன்னு தெரிஞ்சதும் ரொம்பவே வருத்தப்பட்டாங்க."என்றான்.

"ஓஅப்படியா! ஏன் இவங்க அவனுக்கு அம்மாவா இருக்கப்போறாங்களா?" என்று சிரித்துக் கொண்டே மாஷாவைப் பார்த்தார்.மாஷா வெட்கத்துடன் சிரித்தாள். பின்பு ஆனந்த்இ"தப்பா எடுத்துக்காதீங்க சும்மா வேடிக்கைக்குச் சொன்னேன்"என்று சொல்லிவிட்டுஇ"கோபிஸஅவங்ககூடப் பேசிக்கிட்டிரு. ர்pஷிஸ நீ என்கூட வா" என்று ரிஷியை அழைத்துக் கொண்டு தனிமையான இடத்திற்குச் சென்றார்."என்ன அங்கிள் என்ன விஷயம்? எதற்காக வரச்சொன்னீங்க?"என்று ரிஷி கேட்டான்.

"ரிஷி அந்த ஜான்இகாசி ரெண்டுபேரையும் விசாரித்தோம். ஆனால்அவங்க தேசிகனைப்பற்றி எதுவுமே சொல்ல மாட்டேங்கிறாங்க. தேசிகன்யாருன்னே தெரியாதுங்கிறாங்க."

" ஓ அப்படியா! நான் அவங்களைப் பார்க்கலாமா?"" உங்கிட்ட மட்டும் சொல்லிடுவாங்களா?" ஆனந்தின் கேள்வியில்ஏளனம் தெரிந்தது. ரிஷி அதைக் கண்டு கொள்ளவில்லை."நிச்சயம் சொல்வாங்க." என்றான்.

"சரி! அதையும் பார்க்கலாம்"என்று சொல்லிவிட்டு ரிஷியை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். "அங்கிள் நான் மட்டும் அவங்ககிட்ட போய்க் கேட்கிறேன். நீங்கள்வந்தால் அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க." என்று ரிஷி சொன்னதும் ஆனந்தும் 'சரி' என்று சொல்லி விட்டார்.

ரிஷிக்கு அவர் உடனே சம்மதித்தது ஆச்சர்யமாக இருந்தது.ஆனால் அவர் வேறு மாதிரி திட்டம் போடுகிறார் என்பது அவனுக்குத்தெரியாது. இல்லையென்றால் அவனை ஏன் இங்கு அழைத்து வரப்போகிறார்.ரிஷி ஜான்காசி இருந்த செல்லுக்குச் சென்றான். அவர்கள் இருவரும் இவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே.

"என்ன தம்பி பிக்பாக்கட்டா? பார்க்க டீசன்டா படிச்ச பையன் மாதிரி இருக்கே. எப்படிமாட்டினே?" என்று கேட்டார்கள்.ரிஷி அவர்கள் பேச்சை சட்டை செய்யவில்லை. அவனுக்கு அவர்களைப் பார்த்தவுடன் அப்படியே நசுக்கிவிடலாமா என்று தோன்றியது.

இறுக்கமான முகத்துடன்" தேசிகன் எங்கே இருக்கிறான்?" என்று கேட்டான்."இங்க பாருடா வந்துட்டாரு கேள்வி கேட்க சிபிஐ ஆபிசர். தம்பி நீ யாருன்னே எங்களுக்குத் தெரியாது. பார்த்தா நல்ல பையனா தெரியுறே. பேசாம போயிடு அப்புறம் நாங்க வெளியில வந்தவுடன் உன்னைத்தான் முதல்ல தேட வேண்டியிருக்கும்." என்று காசி சொன்னதும் ரிஷிக்கு கோபம் அதிகரித்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் "தேசிகன் எங்கே இருக்கிறான்?" என்று மீண்டும் சற்று அதட்டலுடன் கேட்டான்"ஏய் காசிஸ இவன் உதை வாங்காம போகமாட்டான் போலிருக்கு"என்ற ஜானை முறைத்துப் பார்த்த ரிஷி

"டேய்ஸஎன்னை யாருன்னுஉங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களுடைய சரித்திரமே எனக்குத்தெரியும். எல்லாத்தையும் சொல்லவா?" என்றான்."டேய் நம்ம சரித்திரமே தெரியுமாண்டா. இப்ப இவன் சரித்திரத்தைமுடிச்சருவோமா?" என்று சொல்லிக் கொண்டு இருவரும் ரிஷியைத்தாக்க வந்தார்கள். ரிஷி இரண்டு கைகளாலும் அவர்களின் கழுத்தைப் பிடித்துத்தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு "நீங்கள் ரெண்டுபேரும் தில்லையோட சேர்ந்து சட்டவிரோதமான காரியங்களைச் செய்தது அடுத்து தேசிகனோட சேர்ந்து தில்லையையும் வத்ஸாசரையும் கொன்னது ரினோவைத் தேடுவது எல்லாம் தெரியும். இப்போ தேசிகன் எங்கே இருக்காங்கிற உண்மையைச் சொல்லலேன்னா தில்லைக்கு ஏற்பட்ட நிலைமைதான் உங்களுக்கும் ஏற்படும்."என்றான்.

ரிஷி தில்லையையும் வத்ஸாசரையும் நினைவு படுத்தியவுடன் இருவரும் சற்று ஆடித்தான் போய்விட்டார்கள். 'இவன் யார் இவனுக்குஎப்படி இதெல்லாம் தெரியும்?' என்று நினைத்தனா.;

"ஏய் நீ யார்? என்ன கதை விடுறே. எங்களுக்கு தேசிகனையும் தெரியாது தில்லையையும் தெரியாது யாரையும் தெரியாது" என்றனர்"அப்படின்னா உங்களோட இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கோங்க இன்னும் சில நொடியில் நீங்களும் பஸ்பமாகப் போறீங்க‌" என்று ரிஷிசொன்னவுடன் இருவரும் அப்படி ஏதும் நடந்துவிடுமோ என்றுபயந்து "சொல்லிவிடுகிறோம்" என்றார்கள்.

"ம்.. சொல்லுங்க. ஆனால் முதல்ல இருந்து எதையும் மறைக்காமசொல்லணும்" என்ற ரிஷி இருவரையும் பொத்தென்று கீழே போட்டான். காசி உணமைகளைச் சொல்ல ஆரம்பித்தான். வத்ஸாசரின் குடிலைவிட்டு வந்தவுடன் தேசிகன் மிகவும் ஏமாற்றமான மனநிலையில் இருந்தான்.

ரினோவைத் தவற விட்டதும் வத்ஸாசரின்கண்டுபிடிப்பு என்ன என்று தெரிந்து கொள்ள முடியாததுமே அவனதுஏமாற்றத்திற்கு காரணம். வத்ஸாசர் தில்லை இருவரின் மரணமும் மனதில் பயத்தை ஏற்படுத்தியதால் மீண்டும் அந்த குடிலுக்குச் செல்ல தேசிகனின் மனதில் தைரியம் ஏற்படவில்லை. இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் "டேய்ஸ.காசி அந்த முகுந்தனையும் ராமுவையும் அழைச்சிட்டு வாங்க" என்றான். இருவரையும் அவன் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்தான்.

சுதர்சனை இவன்தான் கொன்றான் என்பது இருவருக்கும் தெரியும்என்பதாலும் இவர்களை எந்த விதத்திலாவது பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைத்ததாலும் அவர்களை வெளியே விடவில்லை.இருவரும் அழைத்து வந்தவுடன். தேசிகன் அவர்களிடம்"என்ன ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க? இப்ப உங்களோடஆசையை நிறைவேற்றலாம்னு நினைக்கிறேன். உங்கள் ஆராய்ச்சியைத்தொடங்க நேரம் வந்து விட்டது." என்றான்.

"டேய் துரோகி! கொலைகாரா! உன் கபடமான எண்ணத்தைத்தெரிஞ்சிக்காம உன்னைத்தேடி வந்ததுக்கு பரிசா எங்க நண்பனையே கொன்னுட்டியே பாவி. உன் உதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்எங்களை விட்டு விடு. நாங்கள் இனிமேல் எங்கள் வாழ் நாளிலேயே இந்த ஆராய்ச்சியைப் பற்றி நினைக்கமாட்டோம்." என்று ராம் கோபமாகப் பேசினான்."ஏய்ஸநிறுத்து உன் முடிவை யார்கேட்டது. இனி நான் எடுக்கும்முடிவைத்தான் நீங்க ஏத்துக்கிடணும். நீங்கள் உங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கணும். அதோ அந்த தொலைபேசியில் உங்க வீட்டிற்குபோன் செய்து 'ஆராய்ச்சிக்காக வெளியூர்ல இருக்கிறதாச் சொல்லுங்க.வேறு ஏதவும் பேசக்கூடாது.

மீறினால் உங்க குடும்பம் அதை நானேசொல்லவேண்டாம் என்னைப் பற்றித்தான் உங்களுக்கு நல்லா தெரியுமே.என்னோட வாங்க. " என்று அவங்களை அழைச்சிக்கிட்டு போயிட்டான்.ஆனால் அவன் எங்கே போனான்? இப்போ எங்கே இருக்கிறான்?ஒன்றுமே எங்களுக்குத் தெரியாது. ஏதாவது முக்கியமான விஷயம்என்றால் மட்டும் போனில் பேசுவோம். இப்போ சிலமாதங்களா அவனைத்தொடர்பு கொள்ளவே முடியல.

மத்தவங்ககிட்ட கேட்டா அவன் வெளிநாடு போயிருக்கிறதா சொல்றாங்க..காசி சொல்லிய அனைத்தையும் கேட்டுவிட்டு ரிஷிஇ ஆனந்திடம்திரும்பி வந்தான்."என்ன ரிஷி...ஏதாவது சொன்னாங்களா?" என்று ஆனந்த் கேட்டார்.

"இல்லை அவங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றாங்க"என்று ரிஷி சொன்னதும் அவனை சந்தேகத்துடன் பார்த்த ஆனந்த்." அதுதான் நான் முதலிலேயே சொன்னேனே அவங்க உன்கிட்டஎதுவும் சொல்ல மாட்டாங்கன்னு." என்றார்" ஆமா அங்கிள்நீங்கள் சொன்னது சரிதான். நான் வர்றேன்."என்று சொல்லி விட்டு ரிஷி கிளம்பினான்.
அப்பொழுது......

[தொடரும்]

kalpa2011@yahoo.com


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner