இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2007 இதழ் 91 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சிறுவர் புதினம்!
ரினோ!
- கனிஷ்கா (தென்காசி, தமிழ்நாடு) -

அத்தியாயம் 5!

எழுத்தாளர் கனிஷ்காவின் சிறுவர் புதினம்: ரினோ"ரிஷி ஒரு நிமிஷம்"என்று ஆனந்த் அழைத்ததும் ரிஷி திரும்பி'என்ன?' என்பது போல் பார்த்தான்." ரிஷி. வத்ஸாசர் யார்?" என்று கேட்டார்'ஓ.. காவல் துறையல்லவா! கடமையை நன்றாகத்தான் செய்கிறது. இப்பத்தான் புரியுது. இவர் ஏன் காசியையும் ஜானையும் சந்திக்கிறதுக்கு உடனே சம்மதிச்சார்னு. சரி.ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியதுதான.' என்று மனதில் நினைத்தபடி "வத்ஸாசர் யாருன்னு எனக்குத் தெரியாது. ஒருமுறை அவங்கரெண்டுபேரும் பேசினதைக் கேட்டிருக்கேன். அதை வச்சுத்தான் உண்மையை வரவழைக்கிறதற்காக வத்ஸாசரை தெரிந்தவன் மாதிரி அவங்ககிட்ட காட்டிக்கிட்டேன். அதுமட்டுமல்ல ரினோவைப் பற்றியும் அவங்க பேசினாங்க." என்று மருத்துவ மனையில் நடந்ததைச் சொன்னான் ரிஷி.

'ரிஷியை நம்புவதா வேண்டாமா. ஆனால் இவங்கிட்ட ஏதோ ரகசியம்இருக்கிறமாதிரி தெரியுதே. எங்கிட்ட எதுவுமே சொல்லாதவங்க இவங்கிட்ட எப்படிச்சொன்னாங்க?' என்று அவரது மனம் சிந்தித்தது."நான் இப்ப போகலாமா அங்கிள்.?" என்று ரிஷி கேட்டதும்.

"சரி இரு நானே உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன்" என்றுசொல்லிவிட்டு அவரும் கிளம்பினார்.சென்னை நகரில் ராக்போ வந்து விடுவானோ என்ற பயத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்பட்டனர். விஞ்ஞானிகள் பலர் ராக்போ ரினோ இவர்களின் வருகையை எதிபார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால். நீண்ட நேரமாகியும் ராக்போவோ ரினோவோ யாருமே வரவில்லை. ராக்போ சென்னைக்கு வந்தானா? அல்லது வேறு எங்காவதுசென்று விட்டானா? இல்லை இனி வரவே மாடட்டானா?

வந்தான்.. ராக்போ வந்தது சென்னைக்கல்ல மதுரை நகருக்கு. ராக்போ வருகையை எதிர்பார்த்திருக்காத மதுரை நகர மக்கள் அவனைக் கண்டதும் தலைதெறிக்க சிதறி ஓடினார்கள். சிலரோ ரினோவின்வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

"ஓடுங்கள்...ஓடுங்கள்....ராக்போ வந்துவிட்டான்"என்ற சத்தம் நகரெங்கும் கேட்டது. ராக்போ உயரமான ஒரு கட்டிடத்தின் மேல் நின்று கொண்டு கர்ஜித்தான்.

'ஏய்ஸமுட்டாள்களே எங்கே ஓடுகிறீர்கள். நில்லுங்கள். நின்றுஎன்னை வணங்குங்குள். நான்தான் உங்கள் கடவுள் வந்திருக்கிறேன். "மக்கள் ஓடுவதைப் பார்த்து கோபத்துடன்" எனக்குப் பணியாதஉங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்.." என்று கத்திக் கொண்டேவேகமாக கீழ்நோக்கி பறந்து வந்தான். அவன் பறந்து வந்த வேகம் ஒரு புயல் வீசியதைப் போன்றிருந்தது. பலர் கீழே விழுந்து எழும்பி ஓடினார்கள். கையில் அகப்பட்டவர்களைக் கொத்தாக அள்ளி வீசினான்.

அனைவரும் "ரினோ. எங்களைக் காப்பாற்று" என்று கூச்சலிட்டனர். ரினோ என்ற பெயரைக் கேட்டதும் ராக்போவிற்கு கோபத்தை மேலும் தூண்டியது."அந்தப் பொடிப்பயல்கள் வரமாட்டார்கள். வந்தால் இன்றோடு ஒழிந்தார்கள்." என்று சொல்லியவன் வேகமாகச் சென்று அங்கு ஓரிடத்தில் ஒரு சிறுவனைப்பிடித்து தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு

" ஏய்சிறுவனே 'ராக்போ வாழ்க' ன்னு சொல்" என்றுஅதட்டினான்.ஆனால் அந்த சிறுவன் அழுதுகொண்டே "சொல்லமாட்டேன் ரினோ வாழ்கன்னுதான் சொல்வேன் அவங்களைத்தான் எனக்குப் பிடிக்கும். நீபார்க்கவே அசிங்கமா இருக்கே. உன்னைப் பிடிக்கல" என்றான்.

அதைக்கேட்டு ராக்போவிற்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே" தொலைந்து போ! இப்பொழுது அந்த ரினோ உன்னை எப்படிக்காப்பாற்றுகிறான்னு பார்க்கிறேன்"என்று சொல்லிக் கொண்டே அந்தசிறுவனை மேல்நோக்கி வீசி எறிந்தான். சிறுவனின் பெற்றோர் "ஐயோ! என் மகனை யாராவது காப்பாற்றுங்களேன்." என்று கதறினர். அப்பொழுது மனதை வருடும் அந்த இனிய இசை கேட்டது. "ரினோ வந்துவிட்டான் ரினோ வந்துவிட்டான். " என்று மக்கள் சந்தோஷக் கூச்லிட்டனர். ரோடாஸில் இருந்த ரினோ ரிஷியிடம் "சிறுவன் கீழே விழும் முன்பு அவனைக் காப்பாற்றவேண்டும். நீ பாய்ந்துசென்று அவனைப் பிடி. உடனே செல் அவனைக் காப்பாற்று." என்றது.

ரிஷி பாய்ந்து சென்று அந்த சிறுவனைக் காப்பாற்றி அவனதுபெற்றோரிடம் ஒப்படைத்தான். ரினோவைக் கண்டதும் 'இனி பயமில்லைஎன்று நினைத்து ராக்போவுக்குப் பயந்து ஓடியவர்கள் நின்றுவிட்டார்கள்.வீட்டிற்குள் இருந்தவர்கள் ரினோவைப் பார்பப்பதற்காக வெளியேவந்தார்கள்.

"ரினோஸ.ராக்போவை அழித்துவிடு. ராக்போ ஒழிகஸ" என்று சத்தமிட்டார்கள். ரினோவைப் பார்த்தவுடன் ராக்போவிற்கு மேலும் மேலும்கோபம் அதிகரித்தது. ராக்போவால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப்பார்த்து ரிஷிக்கும் ரினோவிற்கும் ஆத்திரம் ஏற்பட்டது. ரோடாஸைமின்னல் வேகத்தில் செலுத்தி ராக்போமீது மோதினான்.இந்த திடீர் தாக்குதலால் ராக்போ சற்று தடுமாறினாலும் உடனேசுதாரித்துக் கொண்டு வேகமாக ரோடாஸ் மீது பாய்ந்து ஒரு கையால்ரிஷியை அப்படியே தூக்கி ஒரு மரத்தை நோக்கி வீசினான்.

மரத்தில்மோதுவதுபோல் வேகமாக போன ரிஷி அதே வேகத்தில் ராக்போவைநோக்கித் திரும்பி பறந்து வந்தான்.அதற்குள் ரினோ ரோடாஸை ராக்போ மீது செலுத்தி அவனை ஒருகட்டிடத்தில் மோதச் செய்தது. இருவராலும் மேலும் மேலும் ராக்போ தாக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது. அதைக்கண்டு வெறுப்புற்ற ராக்போ "டேய்ஸரினோ ஜெயிச்சுட்டதா நினைக்காதீங்க. மீண்டும் வருவேன். உங்களையும் உங்களைப் பாராட்டும்இந்த மக்களையும் அழிப்பேன்."என்று கர்ஜித்து விட்டு பறந்து சென்றுவிட்டான்.

அவனைப் பின் தொடர நினைத்த ரிஷியையும் ரினோவையும் மக்களின் குரல் தடுத்தது."ரினோ ஒரு ஆட்டோகிராப் ப்ளீஸ். ரினோ. ஒரு போட்டோ ப்ளீஸ்." என்று பல திசைகளிலிருந்து பல குரல்கள் வந்தாலும் ரிஷியைத்தடுத்து நிறுத்திய குரல் ரீனாவுடையதுதான்.

ரீனா, ரிஷியைப் பார்த்துக் கைகளை ஆட்டிக்கொண்டே" ரினோ!என் பெயர் ரீனா. நீ ரொம்ப அழகாயிருக்கே. நீ என்ன ஸ்கை மேனா?
இந்தா இந்த பூங்கொத்து உனக்குத்தான் வாங்கிக்க. உன்னால் எனக்கொரு உதவி ஆகவேண்டும். நான் உன்னை சந்திக்க வேண்டும்.எங்கே எப்படி சந்திக்கலாம்." என்று கத்தியபடி பூங்கொத்தை நீட்டினாள்.

"ரினோ! ரீனாவுடைய குரல் மட்டும் வித்தியாசமானதா இருப்பதைக் கவனிச்சியா? அவள் நம்மிடம் ஏதோ உதவி கேட்கிறாளே என்னவாக இருக்கும்? " என்று ரிஷி ரினோவிடம் கேட்டான். உடனே ரினோ,
"வேற என்ன. 'நான் என் பெற்றோரிடமிருந்து தொலைந்து விட்டேன் என்னை அவர்களிடம் சேர்த்துவிடு' என்று சொல்வாள்"என்றது.

"அவள் கேட்கப் போகும் உதவி சாதாரணமானதா இருப்பதுபோல்தெரியல. இது அவள் குரலிலேயே தெரியுது ரினோ.""சரி முதலில் ராக்போவின் கதையை முடிப்போம். அதன் பின்பு ரீனாகிட்ட அவளுக்கு என்ன உதவி செய்யணும்னு கேட்கலாம்." என்றுரினோ சொன்னதும் ரிஷி கண் இமைக்கும் நேரத்தில் ரீனா கையிலிருந்த பூங்கொத்தை வாங்கிக் கொண்டு ரோடாஸி;ல் பறந்து விட்டான். அதற்குள் ராக்போ மறைந்து விட்டதால் அன்றும் அவர்களால்
அவனைத் தொடரமுடியவில்லை. "ரினோ. இன்றும் ராக்போ தப்பிவிட்டானே." என்ற ரிஷியிடம்

"ரிஷி நீ ஒன்றைக் கவனிச்சியா? நாம் எவ்வளவுதான் தாக்கினாலும் அவனுக்கு சிறிய காயம்கூட ஏற்படலியே" என்றது."ஆமாம் ரினோஸஅவனை அழிக்கணும்னா முதல்ல அவன் யார்னுகண்டு பிடிக்கணும்" என்றான் ரிஷி. ரினோ என்ற பெயர் மக்களிடம் ஏற்கனவே பிரபலமாகியிருந்தது. இப்பொழுது ரினோவை நேரில் பார்த்துவிட்டதால் ரினோ என்ற பெயர்அனைவரையும் கவர்ந்து பல பொருட்களுக்கு 'ரினோ' என்று பெயர்வைக்கும் அளவுக்கு மாறிவிட்டது. அவர்கள் அணிந்திருந்த கண்ணாடி தொப்பி போன்று கடைகளில் ரினோ தொப்பி ரினோ கண்ணாடிஎன்று விற்க ஆரம்பித்தார்கள்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரினோவால் கவரப்பட்டு எங்கும்ரினோவைப்பற்றிய பேச்சே அதிகமாக இருந்தது.வேறு பெயரில் இருந்த டிவி சேனலைகூட ஒருவர் 'ரினோ டிவி'என்று மாற்றிவிட்டார். ரினோ என்ற பெயர் ஹீரோவாக மக்கள் மனதில் பதிந்தது..ராக்போவும் ரினோவும் சென்னைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்துஏமாந்த விஞ்ஞானிகள் மறுநாள் அவர்கள் எங்கு வந்தாலும் செல்வதற்குத் தயாராக இருந்தனர்.முதல் நாள் அடிபட்டுச் சென்ற ராக்போ மறுநாள் ஒரு பாறாங்கல்லைஇரு கைகளாலும் உயரே தூக்கிப் பிடித்துக் கொண்டு மீண்டும்சென்னையை நோக்கிப் பறந்து வந்தான்.

அங்குஒரு கட்டிடத்தின் மேல்நின்று கொண்டு "முட்டாள் மக்கள்ஸஎன்னை மதிக்காத உங்களைஅழித்தே தீருவேன்" என்று கூச்சலிட்டான். ராக்போ கையில் பாறாங்கல்லைப் பார்த்த மக்கள் பயந்து ஓடினார்கள்.அவன் மட்டும் அதை கீழே போட்டால் என்ன ஆகும் என்று நினைத்தாலே அனைவருக்கும் கைகால் நடுங்கியது. ஆனால் அதற்குள் அங்குரோடாஸ் வந்துவிட்டது.

ராக்போவைப் பார்த்த ரினோவும் ரிஷியும் அதிர்ச்சியுற்றனர். "ரிஷி..முதலில் ராக்போவின் கவனத்தை நம் பக்கம் திருப்பி அவனை நகருக்கு வெளியே அழைத்துச்சிட்டுப் போகணும்." என்றது.உடனே ரிஷி ரோடாஸிலிருந்து வெளியில் வந்து நின்று கொண்டு"ஏய் ராக்போஸ. உன்னால் முடிந்தால் முதலில் என்னிடம் மோதிப்பார்.வா.... வந்து மோது.." என்று ராக்கோவிற்கு சவால் விட்டான்.

"என் கை பட்டாலே நசுங்கி விடுவாய். நீயா எனக்கு சவால் விடுகிறாய். இதோ வருகிறேன். இன்று நீ தொலைந்தாய்"என்று கொலைவெறியோடு ரிஷி மீது பாறாங்கல்லைப் போடுவதற்காக அவனை நோக்கிப் பாய்ந்தான். ஆனால் ரிஷி அதற்குள் ரோடாஸிற்குள் தாவி"ராக்போஸவாஸஉன்னால் முடிந்தால் எங்கள் மீது போட்டுப்பார்"என்று சொல்லியபடி ரோடாஸை செலுத்தினான்.

ராக்போ அவர்களைப்பின்தொடர்ந்தான். நகரைவிட்டு வெளியே
வந்ததும் ஆள் நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தில் ரோடாஸின் வேகத்தைக் குறைத்து ராக்போவிற்குமிக அருகில் வந்து நின்றார்கள்.ராக்போ "ஒழிந்து போங்கள்"என்று சொல்லிக் கொண்டே பாறாங்கல்லை ரோடாஸை நோக்கி எறிந்தான். அது அவர்களை வந்தடையும் முன் ரிஷி ரோடாஸை வேகமாக செலுத்தி உயரே கொண்டுபோய் விட்டான். அதற்குள் அங்கு ஒரு விஞ்ஞானிகள் கூட்டம் ஹெலிஹாப்டரில் வந்து இறங்கியது.

"ஏய் ராக்போ ரினோ. நீங்களெல்லாம் யார்? எங்கேயிருந்து வந்திருக்கீங்க? சொல்லுங்க. உங்களைப் பற்றி நாங்கள் ஆராய்ச்சி செய்யவந்திருக்கிறோம். பயப்படாமல் சொல்லுங்க. நாங்க உங்களுக்குப் பாதுகாப்பு தர்றோம்" என்று அவர்களில் ஒருவர் சொன்னதும்இரிஷி "முதலில் உங்களுக்குப் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுங்க."என்றான்.

"கொஞ்சம் கீழே இறங்கி வாங்க. உங்களோட ரத்தத்தை சோதித்து அது மனித ரத்தத்தோடு ஒத்துவருகிறதா? என்று பார்க்க விரும்புகிறோம்." என்று மற்றொருவர் சொன்னதும் ராக்போ பறந்துசென்று அவரைப்பிடித்துத் தூக்கி"ஒழுங்கா திரும்பிப் போ! இல்லாவிட்டால் உன் உடம்பில் ரத்தம்இருக்காது" என்று சொல்லி அவரை கீழே போட்டுவிட்டு பறந்து விட்டான்.

ரோடாஸ் அவனைப் பின் தொடர்ந்தது. புயலாய்ப் பறந்த ராக்போஇறுதியில் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் இருந்த ஒரு கட்டிடத்திற்குள் சென்றுவிட்டான். ரிஷிக்கும் ரினோவுக்கும் ஆச்சர்யமாகஇருந்தது. 'இவன் ஏன் அங்கே செல்கிறான்? வேறு யாரும் அங்குஇருப்பார்களோ?' என்று சந்தேகப்பட்டனர்."ரினோ நாமும் உள்ளே செல்வோமா?" என்று ரிஷி ரினோவிடம்கேட்டான்."வேண்டாம் ரிஷி
ஒரு வேளை அங்கு வேறு யாரேனும் இருக்கலாம். நம்மைப் பார்த்ததும் ராக்போவுக்கு கோபம் வரும்.

அதனால்அங்கிருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம். மேலும் ராக்போ இல்லாதநேரம் நாம் சென்றால்தான் உள்ளே என்ன நடக்கிறது. இவன் ஏன்அங்கு சென்றான் என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடியும்." என்றுரினோ சொன்னதும் ரிஷிக்கு சரியென்று பட்டது. உடனே ரோடாஸைத்திருப்பிவிட்டான்.மறுநாள் சீக்கிரமாகவே இருவரும் ராக்போ சென்ற கட்டிடத்திற்குச்சென்றனர்.

ஒரு இடத்தில் மறைவாக நின்று கொண்டு ராக்போவின்வருகைக்காகக் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் ராக்போ வெளியில்பறந்தான். அவனைத் தொடர்ந்து ஒரு ஜீப் வெளியில் வந்தது. அதில்அடியாட்கள் போல் சில தடியர்கள் இருந்தார்கள்.அவர்கள் சென்றதும் ரிஷியும் ரினோவும் உள்ளே நுழைந்தனர்.அங்கேயும் சில தடியர்கள் நின்றிருந்தார்கள். இவர்கள் உள்ளே நுழைந்ததும் இவர்களைத் தாக்குவதற்காக ஓடிவந்தனர். உடனே ரினோ "ரிஷி...இவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். கட்டிடம் ரொம்ப பெரிசா இருக்குது. அதனால நீ உள்ளே போய் அங்கே வேற யாரும் இருக்காங்களான்னு பார்." என்றது.

ரிஷி ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்தான். ரினோவிடம்மாட்டிய தடியர்கள் படாதபாடு பட்டார்கள். "டேய் தடியர்களாஸ. இங்கவாங்கடா" என்ற ரினோ. அவர்கள் தாக்குவதற்காக அருகில் வந்தவுடன் மேலெழும்பி பறந்து விடும். அவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு ரினோவை அடிக்க வைத்திருந்த ஆயுதங்களால் அவர்களுக்குள்ளே அடித்துக் கொண்டார்கள். ரினோ அதைப் பார்த்து கைகொட்டி சிரித்தது. மீண்டும் கீழே வேகமாக பறந்து வந்து அவர்களில் ஒருவனைஅலக்காக தூக்கியது. அவன் கைகால்களை உதறிக் கொண்டு "ஐயோஅம்மா டேய் காப்பாத்துங்கடா" என்று கத்தினான். ரினோ அவனை மற்றதடியர்கள் மேல் வீசி எறிந்தது.

அனைவரும் கீழே விழுந்து 'ஆ...அம்மா.... அப்பா..' என்று கத்தினார்கள். ரினோ அவர்களை மீண்டும்எழும்பி விடாதபடி வாலால் விளாசியது. அவர்களுக்கு அது சாட்டையால் அடிப்பதுபோல் இருந்தது. அதன்பின்பு யாராலும் அசையக்கூடமுடியவில்லை.பின்பு ரினோ ரிஷியைத் தேடி உள்ளே சென்றது. ரிஷி ஒரு பெரியஅறையில் நின்றிருந்தான்.

அங்கு சென்ற ரினோ அந்த அறையைப்பார்த்ததும் வியப்புற்றது. அந்த அறை ஒரு ஆராய்ச்சிக்கூடமாக இருந்தது. அங்கு பெரிய பெரிய இயந்திரங்கள் கம்ப்யூட்டர்கள் கண்ணாடிக் குடுவைகள் என்று இவர்களுக்குப் புரியாத பலவும் இருந்தன. அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்தவர்கள் ஒரு அறையில்இருவர் அடைக்கப் பட்டிருப்பதைக் கண்டார்கள். வேகமாகச் சென்றுபூட்டை உடைத்து அவர்களை நெருங்கிய ரிஷி அப்படியே அதிர்ச்சியடைந்தான்.

'இவர்கள் ராம் முகுந்தன் அல்லவா. பாவிகள் என் பெற்றோர் மரணத்திற்கு காரணமானவர்கள் இவர்களை முதலில் அழிக்கவேண்டும்'என்று கோபத்தோடு அவர்கள் அருகில் சென்றவன் பின்னர்'தேசிகன்கிடைக்கும் வரை பொருத்திருப்போம்' என்று நினைத்துக் கொண்டுஅவர்களிடம் "நீங்க ரெண்டுபேரும் யார்?" என்று கேட்டான்.

"நான் ராம் இவன் முகுந்தன்."என்று ராம் பதில் சொன்னான்.
"நீங்க எப்படி இங்கு வந்தீங்க? அந்த ராக்போ யார்?" என்று ரினோகேட்டது."முதல்ல எங்களை இங்கேயிருந்து காப்பாற்றுங்க. அப்புறம் நாங்கஎல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்றோம்." என்றார்கள் இருவரும். ரிஷி ஏதோ யோசித்ததை அறிந்த ரினோ " ரிஷி என்ன யோசிக்கிறே.?" என்றது."ரினோஸ இப்போ ராக்போ எங்கேபோய் யாரையெல்லாம் துன்பப்படுத்திக்கிட்டு இருக்கிறானோ தெரியல அவர்களையும் காப்பாற்றணும்.

இவங்க ரெண்டுபேரையும் ரகசியமா பாதுகாப்பான இடத்தில் வைக்கணும். அதுதான் என்ன செய்றதுன்னு யோசிக்கிறேன். இவர்களை ரோடாஸில் ஏற்றி நம்ம வீட்டிலேயே
அடைச்சிவைப்போமா?"

"பாவிகளுக்கு கல்பாவின் ரோடாஸில் இடமில்லை. ரிஷி. இந்தா செல்போன். இன்ஸ்பெக்டர் ஆனந்துக்கு போன் பண்ணு." என்று ரினோ செல்போனை நீட்டியது."ஏய் உனக்கு ஏதுடா செல்போன்?.""அதோ அந்த தடியன் வச்சிருந்தான். அவசரத்துக்குப் பயன்படுமேன்னு எடுத்து வச்சேன்."

"அடுத்தவங்க பொருளை எடுக்கிறது தப்புடா."

"தப்பு செய்தவர்களைத் தண்டிப்பதற்காக ஒரு சிறு தப்பு செய்தால்அதில் தப்பில்லை."
ரிஷி ரினோவிடம் மொபைலை வாங்கி ஆனந்துக்கு போன் செய்து"மிஸ்டர் ஆனந்த் நான்தான் ரினோ பேசுறேன். நீங்கள் உடனே நான்சொல்ற இடத்துக்குத் தனியா காரில் வாங்க." என்று கட்டளையிட்டான்.
'ரினோ' என்றதும் ஆனந்துக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. 'ராக்போவை எதிர்க்கும் ரினோ நம்மிடம் பேசுகிறானே!என்னவாக இருக்கும்'என்று யோசித்தவர் சிறிதும் தாமதிக்காமல் ரிஷிசொன்ன இடத்திற்குச் சென்றார்.ரிஷி அவரிடம் ராம் முகுந்தன் இருவரையும் காட்டி "இவங்க ராக்போவைப்பற்றிய ரகசியங்கள் தெரிஞ்சவங்க. இவங்களப் பாதுகாப்பாஉங்க வீட்டில் வைச்சிருக்கணும். நாங்க அங்கே வர்ற வரைக்கும்நீங்க இவங்கக்கிட்ட எதுவும் கேட்கக்கூடாது. இவங்களைப் பற்றி யாரிடமும் சொல்லவும் கூடாது." என்றான்.

அவரும் "சரி..சரி..... நீங்க சொல்றதுபோலவே செய்கிறேன்."என்றார்.

"மிஸ்டர் ஆனந்த்ஸராக்போ இப்போ எங்கேயிருக்கிறான்?" என்றுரினோ கேட்டது.
"அவன் இப்போ திருச்சியில் இருக்கும் தேசிகனோட வீட்டைத்
துவம்சம் செய்துகிட்டிருக்கிறான்." என்று அவர் சொன்னதும்
'இவன் ஏன் தேசிகன் வீட்டுக்குப் போனான்' என்று ரிஷியும் ரினோவும்யோசித்தார்கள். அப்பொழுது ராம் ஏதோ ரிஷியிடம் சொல்ல வந்தான். ஆனால்அதற்குள் ரோடாஸ் தேசிகன் வீட்டை நோக்கிப் பறந்துவிட்டது. 'மக்கள் யாரும் தனது பேச்சை கேட்டுத் தனக்குப் பணியவில்லையே' என்று கோபவெறியோடு பறந்த ராக்போ வழியில் தேசிகனின் பிரமாண்டமான வீட்டைப் பார்த்ததும் அங்கே சென்றான். அங்கே காவலுக்கு நின்றவர்கள் ராக்போவைப் பார்த்ததும் துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்கள். ராக்போ அவர்களின் துப்பாக்கிகளைப் பிடிங்கி நொறுக்கி எறிந்தான். அவர்கள் அனைவரையும் எலியைத் தூக்கி எறிவது போல் எறிந்துவிட்டு வீட்டிற்குள் நுழைந் தான்.

அங்கிருந்த அனைவரும் அவனைப் பார்த்ததும் அலறி ஓடினார்கள். ராக்போ தேசிகனின் மனைவி மகன் இருவரையும் பார்த்து இரண்டு கைகளையும் அசைத்து "வாருங்கள் வாருங்கள். ஓடாதீர்கள்."என்றான். ஆனால் யாரும் அவனது பேச்சைக் கேட்பதாக இல்லை.
அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்து ஓடி ஒளிந்தார்கள். அதனால் வெறியேறிய ராக்போ கண்ணில் கண்ட பொருட்கள் அனைத்தையும் உடைத்தெறிந்தான். வீட்டையே நாசம் செய்துவிட்டு உர்... உர்....என்று உறுமிக் கொண்டே வெளியே வந்தான். அங்கு நின்ற கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் காலால்மிதித்து நசுக்கினான். அதற்குள் அந்த வீட்டைச் சுற்றி போலீஸ் படைகுவிக்கப்பட்டது. ஆனால் அவர்களால் ராக்போவை ஒன்றும் செய்யமுடியவில்லை. அவர்களைத்தான் ராக்போ தாக்கினான்.

அப்பொழுதுஒரு ஹெலிஹாப்டர் அங்கே வந்தது. அதிலிருந்து கம்பியால் பின்னப்பட்ட ஒரு பெரிய வலை ராக்போவை நோக்கி வீசப்பட்டது.இது ராக்போவைப் பிடிக்க காவல்துறை செய்த ஏற்பாடு. ராக்போவலையில் மாட்டினானா?வலையில் சிக்கிய ராக்போ பற்களைக் கடித்துக் கொண்டு உறுமினான். கைகால்களை உதறி கூச்சலிட்டான். ராக்போ வசமாக மாட்டிக்கொண்டான் என்று அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அவனைத்தூக்கி செல்வதற்காக ஒரு பெரிய கிரேன் வந்தது.ஆனால் ராக்போ வலையோடு பறந்துவிட்டான். பறந்து கொண்டேவலையைக் கிழித்து எறிந்தான். எறிந்த வலையின் ஒரு பகுதி ஒருபோலீஸ் ஜீப்பின் மீது விழுந்து ஜீப் தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. மற்றொரு பகுதி மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டே செல்போன்பேசியவன் மீது விழுந்தது. மோட்டார் சைக்கிள் ஒரு பள்ளத்தில் போய்விழுந்தது.

கட்டிடத்திற்குத் திரும்பிய ராக்போ அங்கே ரினோவிடம் அடிபட்டுக்கிடந்தவர்களைப் பார்த்தான்.

"டேய் இங்கே என்ன நடந்தது?" என்றுகேட்டான்.ஒருவன் மெதுவாக 'ரினோ' என்று சொல்லிவிட்டு ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் ராக்போ கோபமாக அவனை உதைத்துதள்ளிவிட்டு 'ரினோ நீ இங்கேயும் வந்து விட்டாயா' என்று கத்திக்கொண்டே ராம் முகுந்தன் அடைக்கப் பட்டிருந்த அறைக்குச் சென்றான். அங்கு அவர்கள் இல்லையென்றதும் அவன் வெறிகொண்டவன்போல் மாறினான்.கைகளில் அகப்பட்ட எல்லா பொருள்களையும் உடைத்தெறிந்தான்.ஆராய்ச்சிக் கூடத்திற்குள் சென்று அங்கிருந்த இயந்திரங்கள் கம்ப்யூட்டர்கள் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் அடித்து நொருக்கி தீவைத்துக் கொளுத்தினான்.

பின்பு "டேய்ஸரினோஸஎன்னோட கோபத்தை அதிகரித்து விட்டாய்.உன்னை அழிக்காமல் விடமாட்டேன்." என்று சொல்லிக் கொண்டுகால்களைத் தரையில் ஓங்கி மிதித்தான். அங்கும் இங்கும் ஓடினான்.பின்பு ஒரு இடத்தில் போய் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தான்.திடீரென்று இரண்டு கைகளாலும் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு ஓவென்று அழுதான்.

அப்பொழுது ரினோவிடம் அடிவாங்கிக் கிடந்த அடியாட்கள் தேசிகனின் செய்கைகளைப் பார்த்து 'இவன் நம்மை ஏதும் செய்துவிடுவானோ' என்று பயந்து மெதுவாக எழும்பி சத்தம் இல்லாமல் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

இதற்கிடையே ராக்போவைத் தேடி தேசிகன் வீட்டிற்குச் சென்றரிஷியும் ரினோவும் அங்கு அவனால் பொது மக்களுக்கு எதுவும்ஆபத்தில்லை என்றதும் ரோடாஸை ஆனந்த் வீட்டிற்கு திருப்பினர்.ரோடாஸ் ராம் முகுந்தன் இருவரையும் மோதுவது போல் வந்துஅவர்கள் அருகில் நின்றது. ஒரு கணம் அவர்கள் மட்டும் அல்லஅவர்களுக்குக் காவலாக இருந்த சுமோவும் அப்பொழுது அங்குநுழைந்த ஆனந்தும் கூட அதிர்ந்தார். ரோடாஸிலிருந்து இறங்கிய ரினோவும் ரிஷியும் அங்கு சுமோ இருப்பதைப் பார்த்து 'இவன் எப்படி இங்கு வந்தான்'என்று நினைத்தார்கள்.ஆனால் அவனைத் தெரியாதது போல "ஏய்நீ யார்?" என்று ரிஷிகேட்டான்.'யப்பா எப்படித் தெரியாதது மாதிரி நடிக்கிறாங்க. புரிஞ்சிக்கிட்டேம்பா' என்று மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டான். அதற்குள் ஆனந்த்"ரினோ எனக்கு வெளியில் ஒரு முக்கியமான வேலை இருந்ததால் இந்த சுமோவை இவங்களுக்குக் காவலாக வைத்தேன். இவன் ரொம்ப நம்பிக்கையானவன்." என்றார்.ஆனந்த் ஏதோ திட்டத்துடன் செயல்படுகிறார் என்று ரிஷி நினைத்தான். அவர் திட்டம் என்ன என்று ஆராய்வதற்கு இது நேரமில்லைஎன்பதால் முதலில் ராம் முகுந்தன் இருவரிடமும் ராக்போவைப் பற்றிவிசாரித்தான்.

அவர்கள்"தேசிகன்தான் ராக்போ" என்று சொன்னதும் அனைவருக்கும் அதிர்ச்சியாயிருந்தது."தேசிகனா! அவன் எப்படி ராக்போவா மாறினான்.?" என்று ரிஷிகேட்டதும் ராம் அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான்.

தேசிகனிடம் அகப்பட்ட எங்கள் இருவராலும் தேசிகனை மீறி எதுவும் செய்ய முடியவில்லை.திருநெல்வேலிக்குப் பக்கத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒருஇடத்தில் தேசிகன் கடத்தல் பொருள்களை பதுக்கி வைப்பதற்காக ஒருபெரிய கட்டிடம் கட்டி வைத்திருந்தான். அங்குதான் அவன் சமூகவிரோதிகளைச் சந்தித்து ரகசிய திட்டங்களையும் தீட்டுவான். ஆனால்எல்லோரும் அந்த கட்டிடத்தை ஏதோ தொழிற்சாலை என்று எண்ணினார்கள்.எங்கள் இருவரையும் அங்குதான் அழைத்துச் சென்றான். எங்கள்ஆராய்ச்சிக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிட்டு "ஆரம்பியுங்கள் உங்கள் ஆராய்ச்சியை. இதோ உங்கள் ஃபார்முலா. இதன் விளைவை நான் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கிடைக்கச் செய்கிறேன்.இங்கிருந்து தப்பிக்க மட்டும் நினைக்காதீர்கள். அப்புறம் உங்ககுடும்பத்தில் யாரையும் உயிரோடு பார்க்க முடியாது. சீக்கிரம் உங்களதுஆராய்ச்சியை முடித்தால் உடனே உங்களை இங்கிருந்து அனுப்பிவிடுவேன்." என்று ஆணையிடுவதுபோல் பேசினான்.'இவனிடமிருந்து சீக்கிரம் சென்றால் போதும்' என்று நினைத்துநாங்கள் எங்களது ஆராய்ச்சியைத் தொடங்கினோம். எங்களைத் தப்பிக்கவிடாமல் பார்த்துக்கொள்ள சில அடியாட்களை எங்களுக்குக் காவலாகவைத்தான்.

தேசிகன் அவசரப் படுத்தியதால் இருவரும் இரவு பகலாக ஆராய்ச்சியில் மூழ்கினோம். சில மாதங்களிலே எங்களது ஆராய்ச்சியின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டோம். அப்பொழுது எங்களுக்கு ஒரு மனதிடம் நிறைந்த மனிதன் தேவைப்பட்டான்.எங்களது ஆராய்ச்சியைப் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும்தேசிகன் ஏற்கனவே எங்களிடம் ஆரம்பத்திலேயே கேட்டு தெரிந்துவைத்திருந்ததால் தன்னையே அந்த சோதனைக்கு உடபடுத்த விரும்பினான்.
நாங்களும் அவனை சோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றோம். சோதனைக் கூடம் முழுவதும் பெரிய பெரிய இயந்திரங்களும் திரவங்கள் நிறைந்த கண்ணாடிக் குழாய்களும் இருந்தன. எங்குபார்த்தாலும் மின் இணைப்புகள். இவை அனைத்தும் எங்களுக்காகதேசிகன் ஏற்படுத்திக் கொடுத்தது.அங்கு ஒரு பெரிய இயந்திரப் படுக்கையில் அவனைப் படுக்கவைத்து அவனது கைகளையும் கால்களையும் அதோடு பொருத்தினோம்.

இயந்திரப் படுக்கையின் பல பக்கங்களிலும் மின் இணைப்புகளும்திரவக்குழாய்களும் பொருத்தப்பட்டன.
தேசிகன் உடலின் பல இடங்களில் சோதனைக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும்பொருத்திவிட்டு. அடுத்து ஒரு பெரிய கண்ணாடியால் செய்யப்பட்டமூடியால் இயந்திரப் படுக்கை மூடப்பட்டது.எங்களது ஆராய்ச்சியின் விளைவு எப்படி அமையப் போகிறதோஎன்று இருவரும் ஆவலுடனும் ஒருவித பயத்துடனும் தேசிகனைக் கவனித்துக் கொண்டிருந்தோம்..தேசிகனின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது.

உடல் வளர வளர அவனது உடல் உறுப்புகளில் மாற்றமும் ஏற்பட்டது. உடலெங்கும் உரோமங்கள் முளைத்தன.அதைப் பார்த்த இருவருக்கும் மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டது.அவசரத்திலும் பயத்திலும் எங்களது சோதனையில் ஏதோ ஒரு தவறுநடந்துவிட்டதை உணர்ந்தோம்.தேசிகன் உடலில் மாற்றம் ஏற்படும்போது ஒவ்வொரு நொடியும்அவன் மரண வேதனையில் துடித்தான். இருவரும் என்ன செய்வதுஎன்று தெரியாமல் குழம்பி நின்றோம். இதே நிலையில் தேசிகன் எழும்பிவந்தால் அவன் ஒரு கொடூரமானவனாகத் தான் இருப்பான். இதைஎப்படி தடுப்பது என்று யோசித்தோம்.

திடீரென்று முகுந்தன் "ராம் தேசிகன் எழுந்தவுடன் இந்த திரவத்தை அவனோட உடம்பில் செலுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்."
என்றான்.

"அவன் எழும்பும்வரைக் காத்திருந்தால் அதற்குள் விபரீதம் ஏற்பட்டுவிடும். அதனால் உடனே இதை அவன் உடம்பில் செலுத்தியாகணும்."என்று சொல்லிவிட்டு நான் இயந்திரப் படுக்கையுடன் பொருத்தப்பட்டகண்ணாடி மூடியைக்கழற்றினேன். பின் முகுந்தன் கொடுத்த திரவத்தைஒரு ஊசியில் எடுத்து அதை தேசிகன் உடம்பில் செலுத்தினேன்.ஆனால் ஊசி அவன் உடலில் செல்லாமுடியாமல் உடைந்து விட்டது.

இருவருக்கும் பயம் அதிகரித்தது. தேசிகன் உடல் இருபது அடியாக ஒரு ராட்சத உருவமாக மாறியது. அவனது முகம் பார்ப்பதற்கு கொடூரமாகத் தெரிந்தது. ஒரு பூதம் போல் இருந்தான்.அதுவரை உடம்பில் ஏற்பட்ட மாற்றத்தால் ரணவேதனை அனுபவித்த தேசிகன் இப்பொழுது எந்த சலனமும் இல்லாமல் பிணம்போல்கிடந்தான். எந்த விபரீதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைத்தநான் மீண்டும் வேறொரு பெரிய ஊசியில் திரவத்தை எடுத்து தேசிக னின் உடலில் செலுத்தினேன். ஆனால் துரதிருஷ்டம் மீண்டும் தோல்வியே ஏற்பட்டது. இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றோம். அப்பொழுது தேசிகனிடமிருந்து ஏதோ சத்தம் வந்தது. திடீரென்று இடி இடிப்பது போன்றபெரும் சத்தத்துடன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு எழுந்தான்.இருபது அடி உயரத்தில் ஒரு மலை அசைந்து வருவதுபோல்நடந்து வந்தான். அவனது குணம் எப்படி மாறியிருக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்பிய முகுந்தன் தேசிகனிடம்"தேசிகா இப்போ உனது மனநிலை எப்படி உள்ளது?" என்றுகேட்டான்.'ம்...ம்..' என்று தேசிகன் கைகால்களை உதறிக் கொண்டு உறுமினான்."தேசிகா, இப்பொழுது நீ மிகவும் பலமுள்ளவனாக உணர்கிறாயா?உன்னால் பறக்கக்கூட முடியும் முயன்று பார்"என்றேன்."டேய்ஸயாருடா தேசிகன்?. நான்தான் 'ராக்போ' இனி நான்தான்அனைவருக்கும் கடவுள் என்னை முதலில் வணங்குங்கள்." என்றுசொல்லிவிட்டு 'ஹா..ஹா..' என்று கர்ண கடூரமாக சிரித்தான்.
அவனது பேச்சும் செயலும் இருவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. சுதர்சனுக்கு செய்த துரோகத்துக்கு இன்று பெரிய பாவத்தை சம்பாதித்து விட்டதாக வருந்தினோம்.

தேசிகன் என்ற ராக்போ எங்களை நெருங்கி "நீங்கள் இனிமேல்எந்த ஆராய்ச்சியையும் செய்யக்கூடாது." என்று சொல்லியவன் நாங்கள்வைத்திருந்த ஃபார்முலாவை எடுத்து தீ வைத்து கொளுத்தினான்.அடுத்து அவன் எங்கள் இருவரையும் சிறிது நேரம் முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்தான். 'இவன் அடுத்து நம்மை என்ன செய்யப்போகிறானோ? இப்படி முறைத்துப் பார்க்கிறானே' என்று பயத்தில் உடலெல்லாம் நடுங்கிக் கொண்டே நின்றோம்.தேசிகன் எங்கள் அருகில் மெதுவாக வந்தான். இருவரையும்இரண்டு கைகளினால் தூக்கி 'ஹா...ஹா....நான்தான் கடவுள் என்னையாரும் அழிக்க முடியாது.

அனைவரையும் எனக்கு அடிமையாக்குவேன். என்னை வணங்கச் செய்வேன்." என்று ஆணவத்தால் கொக்கறித்தான்."தேசிகா! மக்களுக்கு நல்லது செய்யவே உன்னை உருவாக்கினோம்.உன் உடல் பலத்தாலும் சக்தியாலும் நீ நாட்டுக்கு நன்மை தரக்கூடியவனாய் இரு. இப்பொழுது எங்களை விட்டு விடு. நாங்கள் எங்கள்குடும்பத்தாரிடம் போய்ச்சேர்ந்து விடுகிறோம். இனி எந்த ஆராய்ச்சியிலும்ஈடுபட மாட்டோம்." என்று இருவரும் தேசிகனிடம் கெஞ்சினோம்.

"நான் தேசிகன் இல்லை ராக்போ" என்று சொல்லி விட்டு இருவரையும் பொத்தென்று கீழே போட்டான். அடுத்து எங்களை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு ம்.. ம்.. என்று சத்தமிட்டுக் கொண்டே வந்தவனைப் பார்த்த அவனது அடியாட்கள் அவனது உருவத்தைப்பார்த்துபயத்தால் அலறி ஓடினார்கள்.அவர்களை ஓடவிடாமல் தடுத்து "டேய் தடியங்களா.. நான்தான்தாண்டா ராக்போ நீங்கள் என் பேச்சைக் கேட்டால் உங்களை ஒன்றும் செய்யமாட்டேன். தப்பி ஓட நினைத்தால் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை உயிரோடு சமாதியாக்கி விடுவேன்." என்று எச்சரித்தான்.
உயிருக்குப் பயந்து அனைவரும் "சரி நீங்கள் சொல்வதைக்கேட்கிறோம். நாங்கள் தப்பி ஓடமாட்டோம்." என்றனர்."அப்படியென்றால் அந்த அறையில் இருக்கும் இரண்டு பேரும்தப்பிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் சில நிமிடங்களில் வந்துவிடுகிறேன்"என்று சொல்லிவிட்டு பறந்து விட்டான்.அந்த தேசிகன்தான் இப்பொழுது ராக்போ என்று சொல்லிக்கொண்டிருக்கிறான்.' என்று ராம் தேசிகன் ராக்போவாக மாறியகதையை சொல்லிமுடித்தான்.

ரிஷிக்கும் ரினோவுக்கும் அவர்கள்மேல் கடும் கோபம் ஏற்பட்டது."உங்களது ஆராய்ச்சி வெறியால் எத்தனை பேருக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறதுன்னு உங்களுக்குத் தெரியுமா? முதல் பலி உங்களோடநண்பரும் அவரது மனைவியும். இப்போ அங்கே பாருங்க" என்றுசொல்லிவிட்டு ரினோ தனது வலது கையை நீட்டி இரண்டு விரல்களைசுழற்றியது. உடனே முன் அறையில் இருந்த டிவி அந்த அறைக்குவந்தது.அதில் ராக்போ செய்த அட்டாகாசங்களும் ரினோ அவனுடன் மோதியதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதைப் பார்த்துவிட்டு இருவரும் "இல்லை......... நாங்கள் இவனைஉலகிலேயே உயராமான அதிக பலமுள்ளவனாகத்தான் மாற்ற நினைத்தோம். எங்களது ஃபார்முலாவும் அதுதான். ஆனால் ஏதோ தெரியாமல்நடந்த சிறு தவறால் இப்படி ஆகி விட்டது." என்று அழுதுகொண்டேகூறினார்கள்.

"இது சிறு தவறில்ல. உங்களை உயிர் நண்பர்கள்னு நினைச்சுஏமாந்த சுதர்சனனுக்கு நீங்கள் செய்த துரோகத்துக்குக் கிடைச்ச பரிசு.இப்போ உங்களைக் கொண்டு போய் மக்கள் முன்னாடி நிறுத்தி"இவங்கதான் ராக்போவை உருவாக்கினவங்க" என்று சொன்னால்என்ன நடக்கும் தெரியுமா? கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. என்ன!உயிரே போய்விடும்னு பயமா இருக்குதா?" என்று ரிஷி வேதனையும்கோபமும் கலந்து பேசினான்."ரினோ எங்களை மன்னித்துவிடு. ராக்போவின் பலம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகும். உடனே ராக்போவை அழிக்கவேண்டும். தாமதித்தால் அவனை அழிப்பது கடினம். அவன் இந்தநிலைக்கு மாறிய ஏழு நாட்களுக்குள் அழிக்காவிட்டால் அதன்பின்புஅவனை யாராலும் எதுவும் செய்யமுடியாது.

தீயிலிருந்துகூட அவன்வெளியேறிவான். அவனனோட குணம் மேலும் மேலும் கொடூரமானதாகமாறிவிடும்." ராம் சொல்லியதைக் கேட்ட அனைவருக்கும் பெரும்அதிர்ச்சி ஏற்பட்டது."அதுக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குது?" என்று ஆனந்த்கேட்டார்.

"நாளை ஒருநாள் தான்."இதைக்கேட்டதும் மீண்டும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்."ஐயா விஞ்ஞானிகளா.. இப்படி ஒருநாளுதான் இருக்குன்னு என்னவோ பரீட்சை எழுதிட்டு ரிசல்ட்டுக்குக் காத்துக்கிட்டு இருக்கிறமாதிரி சொல்றீங்களே அவனை முதல்லே ஏதாவது விஷத்தைக் கொடுத்தாவது காலி பண்ணியிருக்கலாமில்ல." அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சுமோ ஆத்திரமுடன் கேட்டான்.

அதற்கு முகுந்தன்"எந்த விஷமும் அவனை ஒன்றும் செய்யாது." என்றான். உடனேசுமோ"அடப் பாவிகளாஸ படிச்ச படிப்புக்கு பாவம் பண்ணிட்டீங்களே.ஏதோ கடவுளா பார்த்து அனுப்பி வச்ச மாதிரி இந்த ரினோ புண்ணியவான்க வந்தாங்க. இல்லைன்னா என்ன ஆகும். யாரு பெத்த புள்ளைகளோ நல்லா இருக்கட்டும். ரினோ கண்ணுங்களா ஒரு நாளைக்குஎங்க வீட்டுக்கு வாங்க உங்க வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுறேன்"என்றான்.

ரிஷியும் ரினோவும் மனதுக்குள் 'சுமோ நல்லாத்தான் நடிக்கிறான்'என்று நினைத்து சிரித்துக்கொண்டனர்."சுமோ நீ இவங்ககூடவே இரு. நாங்க வர்றம்வரை எங்கேயும்போகக்கூடாது. இவங்க இங்கிருக்கிறது யாருக்கும் தெரியக்கூடாது. புரியுதா. மிஸ்டர் ஆனந்த் உங்களையும் தான் சொல்றோம். நாங்க நீங்களும் வெளியே போகக்கூடாது." என்று சொல்லிவிட்டு ரிஷியும்ரினோவும் ரோடாஸில் பறந்தனர்.

ஆனந்த் 'ரிஷிதான் ரினோ' என்று அவர்கள் பேச்சிலிருந்தே கண்டுபிடித்துவிட்டார். இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

"ரிஷிஸ. நான் சொல்வதைக் கேள். ராக்போவை அழிக்க இதைத்தவிர வேறு வழியே இல்லை.""இல்லை ரினோ இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். உன் உயிரைப்பணயம் வைச்சுத்தான் ராக்போவை அழிக்கணும்னா அது தேவையேயில்லை."

"ரிஷிஸ ஒன்றும் ஆகாது. என்னை உருவாக்கிய அந்த வத்ஸாசரும் நமது கல்பா தெய்வமும் நமக்குத் துணையிருந்து நம்மைக்காப்பாற்றுவார்கள். நீ தயங்காதே ராக்போ இப்பொழுது மிகவும் வெறிகொண்டவனாக இருப்பான். இன்று ஒரு நாள்தான் பாக்கியிருக்கிறது.நாம் விரைந்து செயல்படணும்."ரிஷி எதற்கு தயங்குகிறான்?. ரினோவின் உயிரை ஏன் பணயம்வைக்க வேண்டும்.?

ராக்போ வந்த முதல் தினமே ரினோ "ரிஷி. ராக்போவை எளிதில்அழிப்பதற்கு ஒரு வழியிருக்கிறது."என்றது."என்ன வழி?""ராக்போ மிகவும் பலமுள்ளவனாகத் தெரிகிறான். அதனால் இரண்டுசக்திகள் ஒன்றாக இணைந்தால் அவனை எளிதில் அழிச்சிடலாம்.""அதற்கு நாம என்ன செய்யணும்?""என் சக்தியை நான் உனக்குத் தரப்போறேன்.""நீ என்ன சொல்றே ரினோ?""ரிஷி ராக்போ போன்ற பலம் நிறைந்த கொடியவனை உன்னால் மட்டும்தான் அழிக்க முடியும். அதுமட்டுமல்ல இது சாதாரண மனிதர்களுக் கிடையே நடக்கும் போராட்டமல்ல.

விஞ்ஞானத்துக்கும் மெய்ஞானத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம். கல்பாவுக்குச் சொந்தக்காரனானநீ உன் பிறப்பால் இப்போ பாதி சக்திதான் பெற்றுள்ளாய். நீ முழு சக்தியையும் பெற்றால்தான் ராக்போவை அழிக்க முடியும்.""அந்த சக்தியைப்பெற நான் இப்பொழுது என்ன செய்யணும்." "அதற்காகத்தானே வத்ஸாசர் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்.நான்தான் உனக்கு அந்த சக்தியைத்தரப் போகிறேன். ""நீயா? ஓ!.உனக்குத் தெரிந்த மந்திரத்தாலா?""எனக்கு அந்த அளவுக்கெல்லாம் மந்திரங்கள் தெரியாது. ஆனால்உனக்கு சில மந்திர வார்த்தைகளைச் சொல்லித்தர்றேன். நன்றாக மனதில் பதியவைத்துக்கொள்,"ரினோ சொன்ன மந்திர வார்த்தைகளை ரிஷி மனதில் பதித்துக்கொண்டான்.

"ரிஷிஸ.நீ ராக்போவை எதிர்த்துப் போராடப் புறப்படும்பொழுது என்தலையில் கைவைத்து இந்த மந்திர வார்த்தைகளைச் சொன்னால்உனக்கு முழு சக்தியும் கிடைத்துவிடும். ஆனால்ஸ" என்று ரினோஎதையோ சொல்ல தயங்கிக்கொண்டிருக்கும் பொழுது ரிஷிஇ மந்திரத்தைசோதித்துப் பார்க்க விரும்பினான். ரினோவிடம் சொல்லாமலே அதன்தலையில் கையை வைத்து மந்திரத்தைச் சொல்லிவிட்டான். ரினோஇதை எதிபார்க்காததால் அவனைத் தடுக்கமுடியவில்லை.ரிஷி மந்திரத்தைச் சொன்ன மறுநிமிடம் அங்கு நடந்த விபரீதத்தைப் பார்த்து ரிஷி நடுங்கி விட்டான்.
அப்பொழுதுதான் அவனுக்கு ரினோ அந்த மந்திர வார்த்தைகளைப் பற்றி ஏதோ சொல்ல வந்ததுநினைவுக்கு வந்தது. ஆனால் அது என்னவென்று சொல்லுமுன்பேரிஷி அவசரப்பட்டுவிட்டான்.ரிஷி ரினோவின் தலையில் கைவைத்து மந்திர வார்த்தைகளைச் சொன்னதும் ரினோ அடுத்த வினாடி பிணம் போல் தரையில் விழுந்தது.ரிஷிக்கு எதுவுமே புரியவில்லை.ரினோவின் அருகில் உடகார்ந்து "ரினோ...எழும்பு ரினோ உனக்குஎன்ன ஆச்சு? ஐயோ கடவுளே! இப்பொழுது நான் என்ன செய்வேன்.அந்த மந்திர வார்த்தைகளால் தானே ரினோ இப்படி மாறினான். அதைஇனி நான் ஒருநாளும் சொல்லமாட்டேன்." என்று வருத்தத்தில் ஏதேதோ புலம்பிக்கொண்டிருந்தான்.சிறிது நேரம் கழித்து கண்களை மூடி பிரார்த்தனை செய்தான்.

"ரினோவை உருவாக்கிய வத்ஸாசரே என் ரினோவைக் காப்பாற்றுங்கள்." என்றான். அப்பொழுது அவனது கண்களுக்கு முன்பு ஏதோஒளி ஒன்று தெரிவது போல் இருந்தது. கண்களை திறந்து பார்த்தான்.அவன்முன்னே பிரகாசமான ஒரு ஒளி அசைந்து கொண்டிருந்தது.ரிஷியின் காதில்"ரிஷி அந்த மந்திர வார்த்தைகளை மீண்டும் சொல்"என்ற வார்த்தைகள் அவன் காதில் கேட்டது. அவனையறியாது ரினோவின் தலையில் கைவைத்து அந்த மந்திர வார்த்தைகளை உச்சரித்தான்.

உடனே ரினோ மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது.ர்pஷிக்குத் தன் உயிரே போய்விட்டு திரும்பி வந்தது போல் இருந்தது. ரினோவை கட்டிப்பிடித்து "ரினோ ஸாரிடா. நீ சொன்னதைக்கேட்காததால் உன்னையே நான் இழக்கப் பார்த்தேன். ரினோ ஏன் இப்படி நடந்தது?" என்று வருத்தத்துடன் கேட்டான்.

"ரிஷி.நான் அனைத்தையும் சொல்லிமுடிக்கும் முன்பே நீ அவசரப்பட்டுட்டே. நீ என் தலையில் கைவைத்து மந்திர வார்த்தைகளைஉச்சரித்தவுடன் எனது முழு சக்தியும் உன் உடலுக்கு மாறிவிடும்.அதன்பின் என் உடல் சக்தியற்றதாக ஆகிவிடும். மீண்டும் நீ ஆறுமணிநேரத்திற்குள் அதே போல் அந்த மந்திர வார்த்தைகளைச் சொன்னால் நான் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவேன்.ஆனால் ஆறு மணிநேரம் கடந்துவிட்டால் அப்புறம் ஒன்றும்செய்யமுடியாது. நீ முழு சக்தியையும் நிரந்தரமாகப் பெற்று விடுவாய்.எனது ஆயுள் அத்துடன் முடிந்துவிடும்."இப்படி தன் உயிரைப் பணயம் வைத்துதான் ராக்போவை அழிக்கவேண்டும் என்று ரினோ ரிஷியை ஒவ்வொரு முறையும் வற்புறுத்தியது.

ஆனால் ரிஷி "ரினோஸஇந்த வீபரீதமான செயலெல்லாம் வேண்டாம்." என்று மறுத்து வந்தான்.ரினோ டிவியை ஆன் செய்தது. அதில் 'சென்னை நகரில் ராக்போவின் அட்டகாசம் அதிகரிப்பு. வழக்கம்போல் ராக்போவிடமிருந்து மக்களைக்காப்பாற்றும் ரினோ எங்கே? ராக்போவிற்குப் பயந்து ஓடிவிட்டானா?' என்று சொல்லியதைக் கேட்டதும் ரினோவும் ரிஷியும் அதிர்ச்சியுற்றார்கள். ரிஷி, ரினோ சொன்னதைக் கேட்டானா? ராக்போவை அழித்தானா?ராக்போ நகரத்தில் பெரும் ரகளை பண்ணிக் கொண்டிருந்தான்.கையில் அகப்பட்டவர்களைப் பிடித்து துன்புறுத்தினான். பெரிய பெரியகட்டிடச் சுவர்களை உடைத்து உள்ளே புகுந்தான்.அவனைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் பயந்து அங்கும் இங்கும்ஓடினார்கள். ராக்போ சிலரைத் தூக்கி சன்னல் வழியே வெளியே எறிந்தான்.

அங்கிருந்த மேஜை நாற்காலிகளை உடைத்தான்.இப்படியே அவனது அட்டாகாசம் அதிகரித்துக்கொண்டே போனது.ரினோ வந்து தங்களைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. சிலர் "ரினோ! எங்களைக் காப்பாற்ற வரமாட்டாயா?" என்று கூக்குரலிட்டனர்.

"டேய் முட்டாள்களே! அந்த ரினோ இனிமேல் வரமாட்டான். அவன்பயந்து ஓடிவிட்டான்" என்று ராக்போ கொக்கரித்தான்."ஹேய் ராக்போ! இந்த ரினோவுக்கு பயம் என்ற உணர்வே ரத்த்தில்கிடையாது. இன்றுதான் உனக்கு இறுதிநாள்." ரிஷி சொல்லிக்கொண்டேரோடாஸில் பறந்துவந்து ராக்போவின் முன்னால் நின்றான்.ரிஷியுடன் ரினோ வரவில்லை. ஆனால் ரினோவின் சக்தியும் அதன்உயிரும் ரிஷியுடன் சேர்ந்து வந்தது.

அது மட்டுமா! ரிஷி இன்னொருஆபத்தையும் அவனுடன் எடுத்து வந்திருந்தான். அதுதான் வத்ஸாசரின்மூலிகைத் திரவம். கரணம் தப்பினால் மரணம். ரிஷிக்கு மட்டுமல்ல ரினோவுக்கும் சேர்த்துதான். இப்படியொரு ஆபத்தான நிலையில்தான் ரிஷி, ராக்போவை அழிக்க வந்திருந்தான். அவனைப் பார்த்த மக்கள் "ரினோ! ராக்போவை விடாதே அழித்துவிடு" என்று கத்தினார்கள்.ராக்போ கொலைவெறியுடன் ரிஷி மீது பாய்ந்தான். ரிஷி அவனதுகைகளைப்பிடித்து சுழற்றி எறிந்ததில் ராக்போ ஒரு கட்டிடத்தின்மீதுபோய் மோதினான். மீண்டும் "டேய்." என்று கத்திக்கொண்டே பாய்ந்தான். இருவரும்பயங்கரமாக மோதினார்கள். ஒருவரையொருவர் தாக்கினார்கள். அவர்களின் மோதல் மக்களுக்குப் பயத்தை அளித்தது. ஏனென்றால் ராக்போவழக்கத்தைவிட அதிக பலமுடன் தாக்கினான்.
ரிஷியின் ஆடைக்குள் வைத்திருந்த மூலிகை திரவம் ரிஷி அசையும் பொழுதெல்லாம் அங்கும் இங்கும் குலுங்கிக் கொண்டிருந்தது.திரவப் பாட்டிலின் மூடி சிறிது திறந்தாலும் ஆபத்துதான். இப்படியொரு ஆபத்தான நிலையில் ராக்போவுடன் மோதிக் கொண்டிருந்த ரிஷி"ராக்போவை எப்படியாவது தரையில் சாய்த்துவிட வேண்டும்" என்றநோக்கிலேயே ராக்போவைத் தாக்கிக்கொண்டிருந்தான்.

இந்த நிலையில் திடீரென்று ரிஷியைக் காணவில்லை.அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. "ரினோ பயந்து ஓடிவிட்டானா?" என்று நினைத்தார்கள். ராக்போ வெற்றிக்களிப்பில் 'ஓடிட்டான்ஸ.. ஓடிட்டான்'என்று சிரித்தான்."ராக்போஸநான் இங்கிருக்கிறேன்"ஒரு உயரமான கட்டிடத்தின்மேல் நின்று சத்தம் போட்டான் ரிஷி. உடனே ராக்போ அவனைநோக்கிப் பாய்ந்தான்.

ஆனால் அதற்குள் ரிஷி மறைந்து விட்டான்.சிறிது நேரம் ரிஷியின் சத்தம் எங்கும் கேட்கவில்லை.ராக்போ சுற்றிலும் திரும்பி திரும்பி பார்த்தான். ரிஷியைக் காணவில்லை. சின்னப் பயல் பயந்து ஓடிவிட்டான் என்று நினைத்தான்.ஆனால் ராக்போவின் கண்ணுக்குத் தெரியாமல் வேறு இடத்தில் மறைந்திருந்த ரிஷி அவன் எதிர்பாராத வேளையில் திடீரென ரோடாஸை மோதினான்.ராக்போ நிலைதடுமாறி மல்லாந்து கீழ்நோக்கி சாய்ந்தான். ரிஷி அவன்சுதாரித்து விடாதவாறு மேலும் மேலும் மோதி அவனை தரையில்சாய்த்தான். ராக்போ கீழே விழுந்ததும் அங்கு நின்றிருந்த மக்கள் விலகிஓடினர். அடுத்து ரிஷி சிறிதும் தாமதிக்காமல் தனது ஆடைக்குள்வைத்திருந்த மூலிகை திரவத்தை எடுத்து ராக்போ மீது ஊற்றினான்.சில வினாடிகளில் ராக்போ பஸ்பமானான். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் 'இப்படியும் நடக்குமா?' என்று அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றனார்கள்.

ரிஷிதான் "ஹலோ நண்பர்களே ராக்போ அழிந்துவிட்டான். இனிமேல் உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை."என்று சொல்லி அவர்களை அதிர்ச்சியிலிருந்து மீட்டான். உடனே அனைவரும் ராக்போ அழிந்துவிட்ட சந்தோஷத்தில்கூச்சலிட்டார்கள்.

"ரினோ வாழ்க! ரினோ வாழ்க!"

"ரினோ நீ யார்? நீ எங்கிருந்து வந்தாய்?""ரினோ கல்பான்னா என்ன?""ரினோ ஒரு ஆட்டோகிராப் பிளீஸ்""ரினோ இன்று உன் நண்பன் மற்றொரு ரினோ எங்கே?"இப்படி எல்லா திசைகளிலிருந்தும் ரிஷியை நோக்கி குரல்கள் வந்தன."ரினோ நீ ஏன் ராக்போவை அழித்தாய்? அவனை உயிரோடு எங்களிடம்பிடித்து தந்திருக்கலாமே. அவன் யார்? எங்கிருந்து வந்தான்? என்பதையெல்லாம் கண்டுபிடித்து இருப்போமோ" இதைக் கேட்டவுடன் ரிஷிக்குகோபமாக வந்தது. 'எந்த முட்டாள் இப்படிச்சொல்வது' என்று நினைத்துக் கொண்டு குரல் வந்த திசையை நோக்கினான்.

அதே விஞ்ஞானிகள். அவர்களைப் பார்த்து ரிஷிக்கு எரிச்சலாக வந்தது. விஞ்ஞானத்தின் விளைவைத் தானே இதுவரை மக்கள் அனுபவத்தார்கள் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் அப்பொழுதுகடிகார மணியோசை கேட்டது. ரிஷி திடீரென்று ஞாபகம் வந்தவனாகமணியைப் பார்த்தவன் அதிர்ந்தான்.இன்னும் பத்து நிமிடங்கள்தான் பாக்கி. அதற்குள் திரும்பாவிட்டால்நினைத்துப் பார்த்த ரிஷிக்கு உயிரே நின்றுவிடும் போல் இருந்தது.உடனே ரோடாஸைத் திருப்ப யத்தனித்தவனை" ரினோ,போகாதே எங்களுடன் வா. நாங்கள் உன்னைப்பற்றிதெரிந்து கொள்ளவேண்டும்." என்று விஞ்ஞானிகளின் குரலும் "ரினோ!இந்தா இதை வாங்கிக்கோ உன்னைக் கண்டிப்பாக நான் சந்திப்பேன்.எனக்கு உதவி செய்யக்காத்திரு" என்ற ரீனாவின் குரலும் தடுத்தது.

ரீனா நீட்டிய பூங்கொத்தை வாங்கிக்கொண்ட ரிஷி நொடியில் காணாமல்போனான்.ராக்போவை அழித்து விட்டு வெற்றியுடன் திரும்பிய ரிஷி ரோடாஸிலிருந்து இறங்கி சில நிமிடங்களே இருக்கும் நிலையில் ரினோ இருக்கும் அறைக்கு ஓடினான். அறையைத் திறந்து சலனமற்ற நிலையில்பிணம்போல் கிடந்த ரினோவின் தலையில் கைவைத்து மந்திர வார்த்தைகளை உச்சரித்தான். சில நொடிகளில் ரினோ எழுந்து சாதாரணநிலைக்கு மாறியது.

ரிஷி ரினோவைக் கட்டிப்பிடித்து "ரினோ ராக்போ அழிந்து விட்டான்."என்று சந்தோஷமாக் கூறினான்.

"ஆமா ரொம்ப மகிழ்ச்சி. ரிஷி உனது வெற்றிக்குப்பரிசா ரீனா கூடபூங்கொத்து கொடுத்தாளே"

"அது எப்படி உனக்குத் தெரியும்?""உனக்கு நான் தந்தது என் சக்தியை மட்டுமல்ல. என் உயிரையும்தான்."

"நீ என்ன சொல்றே ரினோ?"" என் உயிரை விட்டு சக்தியை தனியாகப் பிரிக்க முடியாது.அதனால் என்உயிரும் உன்னோடு கலந்தே இருந்தது.அதனால் இன்றுநடந்த அனைத்தையும் நான் அறிவேன்.

ரிஷி இப்பொழுது இதையெல்லாம் பேச நேரமில்லை. முதலில் நாம் முகுந்தன்இராம் இருவரையும்போய்ப்பார்க்கணும். புறப்படு" ரிஷிக்கு ரினோவைப்பார்த்து மிகவும் பெருமையாக இருந்தது. இருவரும் ரோடாஸில் ஆனந்த் வீட்டை நோக்கி புறப்பட்டார்கள்.

"மிஸ்டர் ஆனந்த் இவங்க ரெண்டு பேரையும் பத்திரமா அவங்கஊருக்கு அனுப்பி வைங்க." என்று ரிஷி ஆனந்திடம் சொன்னான்."இல்லை ரினோஸ.இவங்க சட்டவிரோதமான காரியம் பண்ணியிருக்காங்க அதனால் இவர்கள் மேல் கேஸ் புக் பண்ணணும்."

"கேஸ் புக் பண்ணி என்ன பண்ண பண்ணப் போறீங்க. இவங்கதான் தேசிகனை ராக்போவா மாற்றினதுன்னு பேப்பரிலும் டிவியிலும் காட்டப் போறீங்களா? அப்படிச் செஞ்சீங்கன்னா அதைவிட முட்டாள்தனம்வேறயில்லை. இந்த அறிவாளிகளின் செயலைப் பார்த்து நாளை வேறு யாராவது இது போன்ற செயலில் ஈடுபட மாட்டாங்க என்பது என்ன நிச்சயம். அதனால் ராக்போ எங்கிருந்தோ வந்தவனாகவே இருக்கட்டும் இவங்களைப்பற்றி யாருக்கும்
தெரிவிக்க வேண்டாம்."ரிஷியின் சொல்லுக்கு ஆனந்த்
கட்டுப்பட்டார்.

ஆனால் அவர் மனதில் ஓடிய எண்ணங்களை யாரும் அறியவில்லை.ஆனந்த் ரிஷியின் வீட்டிற்கு முதன்முறை சென்றபொழுதே ரினோவைப் பார்த்து விட்டார். ஆனால் அதை உறுதிபடுத்த முடியவில்லை.அப்பொழுதிலிருந்தே ரிஷியின் மேல் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ராக்போவைத் தாக்குவதற்கு ரினோவுடன் சென்றது ரிஷிதான் என்றுஅவர் நம்பினார். ஆனால் ரிஷியின் சக்தி அவரைப் பயமுறுத்தியதால்அவர் ரிஷியிடம் எதுவும் கேட்கவில்லை.காசி ஜான் மூலமாக வத்ஸாசரைப் பற்றியும் அவர் உருவாக்கியதுதான் ரினோ என்பதையும் ராக்போ பற்றியும் தெரிந்து கொண்ட ஆனந்த்'முதலில் சதாராவை சந்தித்து அனைத்தையும் சொல்லவேண்டும்.'என்றுமுடிவு செய்தார்.
ராமும் முகுந்தனும் ரிஷியிடமும் ரினோவிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு புறப்பட்டார்கள்."எங்களோட வேலை முடிந்து விட்டது நாங்க புறப்படுகிறோம்"என்று சொல்லிய ரினோவையும் ரிஷியையும் சுமோ தடுத்தான்.

"அதுக்குள்ள போனா எப்படி? இருந்து ஆனந்த் சார் கல்யாணத்தை நடத்திட்டு போங்க" என்று சுமோ சொன்னதும்"கல்யாணமா?" என்று இருவரும் ஆச்சர்யத்துடன் கேட்டனர்."ஆமா மாஷா டீச்சருக்கும் சாருக்கும் கல்யாணம். நான் இங்கவந்து மாட்டிக்கிட்டதே அந்த மாஷா டீச்சராலதானே."

'ஓ .. கல்யாணம் வரை போய்விட்டதா!' என்று மனதில் எண்ணிக்கொண்டே "கண்டிப்பா கல்யாணத்துக்கு வர்றோம்" என்று சொல்லிவிட்டு பறந்தார்கள்.ரிஷிக்கு விடுமுறை முடிய இன்னும் சில நாட்களே இருந்ததால் பாட்டி ஊரிலிருந்து வந்துவிட்டாள். ரினோ ரிஷி இருவரையும் நினைத்துப் பெருமைப்பட்டாள். சில செயல்களுக்காக வருத்தமும் பட்டாள்.வழக்கம் போல் அதிகாலையில் சித்தர்மலைக்குச் சென்ற ரினோ திரும்பி வரவில்லை. ஒருநாள் இரண்டு நாள் எனப் பல நாட்களாகியும்ரினோ வரவில்லை.பாட்டி ரினோவுக்காக தினமும் பால்பாயசமும் கேக்கும் செய்துவைத்துக் கொண்டு காத்திருந்தாள். ரிஷி ரினோவைக் காணாமல் பள்ளிக்குப்போக மறுத்தான்.ரினோ எதுவுமே சொல்லாமல் எங்கே சென்றது? திரும்பி வந்ததா?'கல்பா' ன்னா என்ன?மக்களின் பெரும் கூச்சலுக்கு மத்தியில் ரீனாவின் குரல் மட்டும் ரிஷிக்கு எப்படி கேட்டது.

ரீனா யார்? ரிஷி ரீனாவை மீண்டும் சந்தித்தானா? அவள் அவனிடம் கேட்ட உதவி என்ன? ரீனாவையும் சுவடிகளையும் தேடிக் கண்டுபிடிப்பதற்காக சக்தியைஅனுப்புகிறார் ரோகி.

இந்த ரோகியும் சக்தியும் யார்?. அவர்கள் ஏன் ரீனாவையும் சுவடிகளையும் தேடுகிறார்கள்?ஆனந்த் சந்திக்கப் போகும் 'சதாரா' யார்? இவர்கள் மட்டுமா? இன்னொரு முக்கியமான நபர் ஒருவன் வரப்போகிறான். அவன்தான் " அத்ரி " இவர்கள் அனைவருடனும் சுமோவும் சேர்ந்து கலக்கப்போகிறான் ரினோவின் இரண்டாம் பாகத்தில்.--------------!

kalpa2011@yahoo.com....

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner