இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2006 இதழ் 77 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
கள்ளிக்காடும் கண்ணீர்நாடும் - 2 

- குரு அரவிந்தன் -

Kavinjar Vairamuthuஒருவர் இறந்தால் இறுதிச் சடங்குகள் செய்யும் முறையில் தமிழீழக் கலாச்சாரம் சற்று மாறுபட்டிருக்கிறது. கோயிலுக்கு சரீரத்தொண்டு செய்யும் குறிப்பிட்ட சிலபிரிவினரும், கிழக்குமாகாணத்தில் சில பகுதிகளில் சில பிரிவினரும் இறந்தவரை இப்படியான அமர்ந்த திருக்கோலத்தில் அலங்காரம் செய்து, தேர்கட்டி மயானத்திற்கு எடுத்துச் செல்வார்கள். பொதுவாக மற்றவர்கள் பாடைகட்டிப் பிணத்தைச் சுமந்து செல்வதுதான் வழக்கம். பாடையைப் பற்றிப் பேசும்போது, ‘பாடைகட்டி ஊர்சுமந்து போகும் போதும் பைந்தமிழின் ஓசையாங்கொலிக்கவேண்டும்,’ ‘ஓடையிலே என் சாம்பல் கரையும்போதும் ஒண்டமிழின் ஓசைய ங்கு கேட்கவேண்டும்’ போன்ற தமிழீழக் கவிஞர்களின் உணர்ச்சிக்கவிதை வரிகள்தான் நினைவிற்குவருகின்றன. பொதுவாகப் பெண்கள் மயானத்திற்குச் செல்வதில்லை. பிணத்தைப் பெட்டியில் படுக்கவைத்து,பெட்டியை மூடித்தான் மயானத்திற்குக் கொண்டு செல்வார்கள். இந்துக்களில் பெரும்பாலானோர் பிணத்தைத் தகனம் செய்வதுதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இறுதியாக வாய்க்கரிசி போடுவது முக்கியமாகக் கருதப்படுகிறது. தகப்பனுக்கு மூத்தமகனும், தாய்க்கு இளைய மகனும் கொள்ளி வைப்பதுதான் இன்றும் சம்பிரதாயமாக இருக்கிறது. எட்டாம் நாள் செய்யும் சடங்கை 'எட்டுச் செலவு' என்பார்கள். சிலபகுதிகளில் காடாத்துவது என்றும் சொல்வார்கள். சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்ப நாட்கள் மாறுபடலாம். இறந்தவரைப்போல ஒரு உருவம் செய்து, அவருடைய புகைப்படத்தையும் வைத்து அவருக்குப் பிடித்தமான உணவு வகைகளைப் படைத்து, அவரது ஆத்மா சாந்தியடைய குடும்பத்தவர்கள் பிரார்த்திப்பார்கள். முப்பத்தி யோராம் நாள் சடங்கை அந்தியேட்டி என்பார்கள்.

விவசாயக்கலாச்சாரத்தில் கடவுளாகவும், வேலைக்காரனாகவும் இருப்பது மாடுதான் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அந்த மாடுகளுக்கு த்தான் தைப்பெங்கலை அடுத்து வரும் பட்டிப்பொங்கல் அல்லது மாட்டுப் பொங்கலன்று நன்றிக்கடன் (தாங்ஸ்கிவ்விங்) செலுத்து கின்றோம். கதாபாத்திரத்தின் செவலக்காளையும் மயிலக் காளையும் தமிழீழத்தில் வருடாவருடம் தைப்பொங்கல், வருடப்பிறப்பை முன்னிட்டு நடத்தப்படும் மாட்டுவண்டில் சவாரியில் பங்குபற்றும் காளைகளை ஞாபக மூட்டுகின்றன. மாட்டை அடித்துத் தின்னுவது என்பது குடும்பத்தில் ஓர் ஆளை அடித்துச் சாப்பிடுவது மாதிரி, கள்ளிக்காட்டு விவசாயி மாட்டுக்கறி தின்னமாட்டான் என்று ஓர் இடத்தில் குறிப்பிடும் ஆசிரியர் சாப்பிடமாட்டான் என்பதற்குப் பதிலாக தின்னமாட்டான் என்ற வார்த்தையை பிரயோகிக்கின்றார். புலம் பெயர்ந்த நாடுகளில் பட்டிப் பொங்கலுக்குரிய தேவை இல்லாததால், தைப்பொங்கலை மட்டும் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

மாடு யாருக்கச் சொந்தம் என்ற பிரச்சனை வந்தபோது அங்கே வாக்குவாதம் ஏற்படுகின்றது. நெல்லு சிந்தினா அள்ளலாம், சொல்லுச்சிந்தினா அள்ள முடியுமா? என்று அருமையான வார்த்தைப் பிரயோகம் செய்யும் ஆசிரியர் அனாவசியமாய் விழுந்த ஒருவார்த்தை மண்ணெண்ணெயில் விழுந்த தீக்குச்சியாய்ப் பட்டென்று பற்றிக் கொண்டது என்று குறிப்பிடுகின்றார்.

எதிரி தாக்கவந்தபோது ஊரே ஒன்றுபட்டு எதிர்க்க, ஊரே ஒண்ணுகூடி இன்னைக்கி மானம் காப்பாத்திட்டாகளப்பா! இந்த மனுசங்கள மறக்க முடியுமா? இந்த மண்ணைத்தான் மறக்க முடியுமா? என்று கதாபாத்திரத்தின் மூலம் ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்பதையும், ஒவ்வொரு சொல்லும் சொல்லப்படும்போது, அனாவசியமான வார்த்தையாடல்களை விட்டு ஊருலகம் நம்பக்கூடியதாகச் சொல்லவேண்டும் என்பதையும், மறைமுகமாய் ஆசிரியர் ஒவ்வொரு தமிழனுக்கும் எடுத்துச் சொல்கின்றார்.

இலங்கையில் வேலிகளுக்குக்கூட காலிருப்பதால், அங்கே அடிக்கடி நடக்கும் மாட்டுச் சண்டைக்குப் பதிலாக இங்கே வேலிச்சண்டை ஏற்படும். வேலிச்சண்டை என்பது சாதாரணமாக வேலிக்குக்கதியால் போடும்போது அல்லது வேலி அடைக்கும் போது ஒற்றுமை இல்லாத, அடுத்தடுத்து இருக்கும் சில வீடுகளுக்கிடையே நடப்பது வழக்கம். வேறுபல காரணங்கள் இருந்தாலும் இந்த வேலியைச்சாக்காக வைத்துத்தான் பொதுவாக பிரச்சனையே ஆரம்பமாகும். வாய்ச்சண்டையில் ஆரம்பித்து வெட்டுக்கொத்தில் முடிந்த கதைகள் இங்கேபல உண்டு. இன்று தமிழ் ஈழத்தில் இப்படியான சில்லறைத்தனமான சண்டைகள் எல்லாம் அருகிப்போய்விட்டன. ஆட்டைக் காணவில்லை, மாட்டைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் சமீபத்தில் ஊருக்குப் போய்வந்த நண்பர் சொன்னார் தங்கள் வீட்டுக் கொல்லைப் பக்கத்தில் இருந்த கிணற்றையே காணவில்லை என்று! கிணற்றையே கொள்ளையடிக்கும் திருட்டுவேலிகளும் அங்கே இருக்கின்றன என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது!

ஈழத்தமிழன் தானுண்டு தன்பாடுண்டு என்று பலதலைமுறையாய் அமைதியாய் வாழ்ந்து வந்த சொந்தமண்ணே அவனுக்குச் சொந்தம் இல்லை என்று, பேரினவாதிகளால் ஒதுக்கித் தள்ளப்பட்டபோது வேலியைப் பற்றி நினைக்கவோ, அதற்காகச் சண்டைபோடவோ யாருக்கு நேரம் வரும். வேலியும் வேண்டாம், போலி வார்த்தையும் வேண்டாம், மண்ணைத் தக்கவைத்தாலே போதும் என்ற நிலையில்தான் தமிழன் இன்று வாழ்ந்து வருகின்றான். குட்டக்குட்ட இனியும் குனியமுடியாது என்ற நிலைக்கு, ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் உள்ள தமிழ்மக்கள் வந்து விட்டார்கள். பலஸ்தீனத்தில் மக்கள், எதிரிகள் மீது கல் எறிவதுபோல இங்கேயும் ஆக்கிரமிப்பாளர்மீது பொதுமக்கள் கல்லெறியத் தொடங்கி விட்டார்கள். இதுஆரம்பம், இனியும் பொறுக்கமுடியாது, வாழ்வா அல்லது சாவா என்ற நிலைவந்தால் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் இன்று தொடரும் இந்தப்போராட்டம் மக்கள்போராட்டமாக, வெகுஜன சக்தியாக உருவெடுத்து எந்தநேரத்தில் வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

கள்ளிக்காட்டில் உள்ள வயதான புளியமரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, வாலைக்குமரியாய்ப் பசபசவென்று பரவி, குலப்பெண்தன் கற்பைக் காப்பது போல் தன்பச்சை நிறம் காத்து நிற்கும் மரம் என்று ஆசிரியர் குறிப் பிடுகின்றார். அந்தமரத்தை யாரோ வெட்ட முயற்ச்சி செய்தபோது ;இது பஞ்சாயத்துக்குப் பாத்தியப்பட்டமரம். எவனும் விக்க முடியாது. எவனும் வெட்டமுடியாது. ரோட்ல போறவன் எல்லாம் ரோட்ட விக்கமுடியுமா? இது என்னப்பா நியாயம்? என்று ஒரு பாத்திரத்தின் மூலம் ஆசிரியர் தட்டிக் கேட்கின்றார்.

தமிமீழ மண்ணில் இன்று ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அங்கே உள்ள தெருவோர மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ‘கற்பகவிருட்சம்’ என்று தமிழீழ மக்களால் பாதுகாக்கப்பட்ட பனைமரங்களும், ஏழ்மையில் வாடும் குடும்பங்களுக்கு வருவாய்தரும் தென்னைமரங்களும் தறிக்கப்பட்டு ஆக்கரமிப்பாளர்களின் பாதுகாப்பரண்களுக்குப் பாதுகாப்புக்காகப் பாவிக்கப்படுவதை யார்தட்டிக் கேட்பது? அப்படித் தட்டிக்கேட்டாலும் சமாதானகாலத்திலும் துப்பாக்கிதானே அதற்குப்பதில் சொல்கிறது!

ஊர்ச்சாராயம் காச்சுவதற்கு கடுக்கா, நவச் சாரக்கட்டி, வாழப்பழத்தொலி, பேரிச்சம் பழம், பேட்ரிசெல்லு. தீப்பெட்டி, பொத்தக்கள்ளி, மனுச எலும்பு எல்லாம் போட்டுக் காய்ச்சவேண்டும் என்று ஒரு கதாபாத்திரத்திணூடாகச் சொல்லும் போதுகொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆட்டுக்கால்சூப் என்று கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் மனிதஎலும்பு போட்டுச் சாராயம் காய்ச்சுவதை இப்போதான் கேள்விப்படுகிறேன். ஆக்கிரமிப்புக்காரரின் பிடியில் சிக்கி இருக்கும் தமிழீழமண்ணின் சில பகுதிகளில், பனைமரத்தில் இருந்து பதனீர் எடுத்து கருப்பட்டியும், பனங்கல்கண்டும் காச்சிய சில இடங்களில், அதற்குப்பதிலாக இன்று நார்க்கத்தாளை, பல்லி, அறணை, ஓணான், கரப்பொத்தான் போன்ற பலவற்றையும் போட்டுக் கள்ளச்சாராயம் காய்ச்சி, அதை அப்பாவி இளைஞர்களுக்குக் கொடுத்து, அடுத்த தலைமுறையிலும் எங்கள் தமிழ் இனம் எழுந்து நிற்றமுடியாமல் ஊரையே ஆக்கிரமிப்பாளர்கள் கெடுப்பதாகக் கேள்வி!

 (தொடரும்)

 

kuruaravinthan@hotmail.com

கள்ளிக்காடும் கண்ணீர்நாடும் - 1...உள்ளே 

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner