இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2009 இதழ் 116  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அவுஸ்திரேலியா என் அவுஸ்;திரேலியா!

 பொருளாதாரம்

 - நடேசன் - 

இந்த இரண்டாவது நிகழ்வுக்கு காரணம் 80களில் நிதி அமைச்சரக இருந்த போல் கீரிங்நடேசன்எனது கிளினிக்கில் ஒரு இந்தாலியர் தனது நாயை குணமாக்கியதற்காக தந்த நோட்டைப்பார்த்தேன். அது கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு புழக்கத்தில் இருந்து ஒழிந்து போன கடுதாசியிலான பத்து டொலர் நோட்டாகும். அதை மனைவியிடம் கொடுத்துச் சொன்னேன். இந்த நோட்டுகள் தலையணையுறையுள்ளோ அல்லது குளிர்பதனப் பெட்டியுள்ளோ பலவருடங்களாக இருந்திருக்கும் என்று.   ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு அவசர தேவையின் நிமித்தம் எங்கள் மகனிடம்  பத்தாயிரம் டொலர்கள் கடன் வாங்கி இருந்தோம். அந்தக்காசை கொடுப்பதற்காக சிறுக சிறுக சேமித்து வைத்தபணம்

சிலமாதங்களாக வீட்டில் இருந்தது 

'.நாங்கள் இந்தப் பணத்தை வீட்டில் வைத்திருப்பதிலும்

பார்க்க வங்கியில் வைத்தால் மகனுக்கும வட்டி வரும் அத்துடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் 

நல்லது' என்று மனைவி சொன்னார்.

இப்படியான ஒரு வார்த்தையை நான் எதிர்பார்க்;கவில்லை. மருத்துவத்தில் மட்டுமே தனது கவனத்தை செலுத்திவந்த எனது மனைவியை பொருளாதாரத்திலும்; விற்பன்னராக்கியது தற்போதைய  உலகப் பொருளாதார மந்த நிலையே ஆகும.;              

அவுஸ்திரேலியாவில் தற்பொழுது பொருளாதாரம் இறங்கு நிலையில் உள்ளது. 2008 ஒக்ரோபரில் இருந்து டிசம்பர் மாத காலத்துக்கான பொருளாதாரம் சரிவடைந்து உள்ளது. ஏவ்வளவு தெரியுமா? அரை வீதம். பொருளாதார நிபுணர்களின் அளவு கோலின் படி இன்னும் மூன்று மாதங்கள் வளர்ச்;;சி சரிவடைந்தால் பொருளாதார இறங்கு முக நாடாக கணிக்கப்படும்;. வானெலி பத்திரிகை தொலைக்காட்சி எங்கும் இந்த பொருளாதார நிலை பற்றிய பேச்சுதான் கேட்கிறது. நல்லவேளையாக ஜனவரி 2009 இல் இருந்து மார்ச் மாதத்திற்கான பொருளாதாரம் 0.4 வீதமாக வளர்நதிருப்பதால் அவுஸ்திரேலியா பொருளதார இறங்கு முகத்தில் இருந்து தப்பியுள்ளது. வளர்ச்;சியடைந்த நாடுகளில் பொருளாதார இறங்குமுகத்தில் இருந்து தப்புவதற்கு பல பில்லியன்கள் டொலர்கள் செலவு செய்யவேண்டி இருந்தது 

அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த வருட இறுதிப்பகுதியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பணம் கொடுத்தது. அத்துடன் குழந்தைகள் உள்ளவர்களை  ஊக்குவிக்கவும் பணம.; கொடுத்தார்கள். இதன் பின்பும் பொருளாதாரம்

இறங்குவதைக் கண்டதும் சகல அவுஸ்திரேலியர்களுக்கு 600-1000 டாலராக கொடுத்தார்கள்;. இந்தப்பணத்தை ஏற்கனவே இறந்து போனவர்களும் பெற்றார்கள். முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வழக்கமாக கொடுக்கும் 7000 டொலரை இரண்டு மடங்காக்கினார்கள். இதை விட புதிதாக வீடுகட்டுபவர்களுக்கு இந்தத் தொகை மூன்று மடங்காகியது.  

இப்படியாக மக்களிடம் சென்ற பணத்தை செலவழிக்கவைத்து அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற தொழிற்கட்சி அரசாங்கம் முயற்சி செய்து தற்போது வெற்றி பெற்றதாகத் தெரிகிறது

அவுஸ்திரேலியாவில் ஊடகங்கள் முக்கியமாக தொலைக்காடசிகள் தொடர்ச்சியாக பொருளாதாரம் சம்பந்தமான செய்திகள் உரையாடல்கள் மூலமாக மக்களின மனங்களில்  தொடர்ச்சியாக மரத்தை கொத்திக் கொண்டிருக்கும் மரக்கொத்தி பறவை போல் துளையிடுகிறார்கள்அவுஸ்திரேலியாவில் ஊடகங்கள் முக்கியமாக தொலைக்காடசிகள் தொடர்ச்சியாக பொருளாதாரம் சம்பந்தமான செய்திகள் உரையாடல்கள் மூலமாக மக்களின மனங்களில்  தொடர்ச்சியாக மரத்தை கொத்திக் கொண்டிருக்கும் மரக்கொத்தி பறவை போல் துளையிடுகிறார்கள். பத்திரிகை சம்பந்தமான துறையில் இருப்பதால் இந்த செய்திகள் உரையாடல்கள் எனக்கு தவிர்க்க முடியாததாகிறது. பங்கு சந்தையில் இறக்கம் 55 வீதமானவர்களை கவலையில் ஆழ்த்தக் கூடியது அவுஸ்திரேலியாவில் சுப்பரெனுவேசன் எனப்படும் ஓய்வூதியம் அவுஸ்திரேலிய பங்கு சந்தையில் முதலிடப்பட்டுள்ளதால் பங்கு சந்தையின் இறக்கமான பீர் (டிநயச) மார்கட் எல்லோரையும் கவலைப்பட வைக்கிறது. வேலையில் ஓய்வு பெற எண்ணியவர்கள் தொடர்ச்சியாக வேலையில் நீடிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். கடந்த ஒன்பது மாதங்களாக பலர் வேலைகளை இழந்தும் சிறு தொழில் செய்பவர்கள் தங்கள் வருமானம் குறைந்த நிலையிலும் உள்ளார்கள்.

இதே வேளையில் அரசாங்கம் செலவு செய்து நுகர்வோர்

மற்றும் வீட்டு சந்தை மூலம் அரசாங்கம் நாட்டுப் பொருளாதார நிலையை சீர்செய்கிறது. சிறுவியாபாரிகளினது பொருளாதாரத்தை தக்க வைத்துக் கொள்கிறது

நாங்கள் சிறுவயதில் இருந்து சேமிப்பு மூலம் பொருளாதார வசதியை பெருக்கலாம் என படித்தோம் ஆனால் இன்று செலவு செய்வதன் மூலம் பொருளாதாரம் அவுஸ்திரேலியாவில் காப்பாற்றப்படுகிறது. ஆச்சரியமாக இல்லையா? ஏந்த கோட்பாடுகளும் நிரந்தரமற்றது. காலத்துக்கேற்ற கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது

வளர்ந்; நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இன்னும் பொருளாதார மந்த நிலையில் தவிக்கும் போது எப்படி அவுஸ்திரேலியாவால் இவ்வளவு துரித கதியில் பொருளாதார மந்த நிலையில் இருந்து வர முடிந்தது?

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன

உலகப்nhருளாதாரத்தில் அவுஸ்திரேலியா இணைக்கப்பட்டிருந்தால் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டிருந்தாலும் பலவிடயங்கள் சாதகமாக உள்ளன.

அவுஸ்திரேலிய பொருளாதாரம் மற்ற வளர்ந்த நாடுகளைப் போல் அல்லாது வெளி நாட்டுக்கு மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. நிலக்கரி இரும்புகனிமம் இதை விட அவுஸ்திரேலிய கோதுமைக்கும் நல்ல விலை கிடைக்கிறது.  உள்நாட்டில் வீடு கட்டுதல் கல்விச் சேவை நகர் உள்கட்டுமானம் போன்ற மனித சேவைப் பொருளாதாரக் கூறுகளைக் கொண்டது. இதனால் மக்களின் நுகர்வு பொருளாதார மந்த நிலையில் இறக்குமதி குறைவடைந்து ஏற்றுமதி அதிகரிக்கிறது. அவுஸ்திரேலிய பொருளாதாரம் மற்ற வளர்ந்த நாடுகளைப் போல் அல்லாது வெளி நாட்டுக்கு மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. நிலக்கரி இரும்புகனிமம் இதை விட அவுஸ்திரேலிய கோதுமைக்கும் நல்ல விலை கிடைக்கிறது உள்நாட்டில் வீடு கட்டுதல் கல்விச் சேவை நகர் உள்கட்டுமானம் போன்ற மனித சேவைப் பொருளாதாரக் கூறுகளைக் கொண்டது. இதனால் மக்களின் நுகர்வு பொருளாதார மந்த நிலையில் இறக்குமதி குறைவடைந்து ஏற்றுமதி அதிகரிக்கிறது

இரண்டாவது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் போல் அவுஸ்திரேலிய வங்கிகள் எதுவும் வங்குரோத்தாகவில்லை

அவுஸ்திரேலியாவில் உள்ள நாலு பெரிய வங்கிகள் உலகத்தின் பத்து சிறந்த வங்கிகளின் வரிசையில் உள்ளன.

மேலும் அவுஸ்திரேலிய வங்கிகள் கடன் வினியோகம் தன்னிச்சையான அமைப்பினால் கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் இப்படியான பொறுப்பான கடன் வழங்கும் தன்மையினால் பாரிய அளவில் வங்குரோத்தாகும் கம்பனிகள்

இருக்கவில்லை.    அரசாங்கம் பொருளாதார இறக்கத்தின் ஆரம்பத்திலே மக்களின் சேமிப்புவங்கி வைப்புகளுக்கு உத்தரவாதம் கொடுத்திருந்தது. இதனால் வங்கிகளின் பங்குகள் சந்தையில் குறைந்த போது மக்களிடம் பதற்றம் ஏற்படவில்லை.  

இந்த இரண்டு காரணங்களும் அவுஸ்திரேலியாவை உலகப்பொருளாதார இறங்குமுகத்தில் இருந்து பாதுகாத்திருப்பதால் தற்போது பங்கு சந்தை கூடிவருகிறது.  

வேலை இல்லாமை சிறிது கூடி இருந்தாலும் அப்படியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களை உதவி ஊதியப்பணம் (சோசல் செக்கியூரிட்டி கொடுத்து அத்துடன் புதிய வேலைக்கு பயிற்சி அளித்தும் மீண்டும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது

இந்த இரண்டாவது நிகழ்வுக்கு காரணம் 80களில் நிதி அமைச்சரக இருந்த போல் கீரிங் (Paul Keating) ஆவார்.

அக்காலத்தில உலகத்தில் சிறந்த  நிதி அமைச்சர் என பெயர் பெற்றார். இன்று அவரை நினைத்துப்பார்க்கிறேன்.

uthayam@optusnet.com.au


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்