இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2007 இதழ் 87 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
கலை!
ஓவியர் ரவிவர்மா!
- நடேசன் -

ஓவியர் ரவிவர்மா!பதினாலு வயதுப்பருவத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் காலத்தில் நடந்த சம்பவம்; நினைவுக்கு வருகிறது. நியூபோடிங் எனப்படும் பாரிய மண்டபத்தில் வரிசைவரிசையாக கட்டில்களும் இரண்டு பக்கங்களில் சிறிய அலுமாரிகளும் அமைந்திருந்தன. அப்படி ஒரு அலுமாரி ஒவ்வொரு மாணவனுக்கும் சொந்தமானது.

ஒரு நாள் நவராத்திரி காலம். காலை ஆறுமணியளவில் எனது பக்கத்துகட்டில் மாணவன் பயபக்தியாக ஒரு படத்தின் முன்பு நின்று 'வெள்ளை கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு.." என்ற சரஸ்வதி தோத்திரத்தை பயபக்தியுடன் பாடிக்கொண்டு நின்றான். நெற்றியில் திருநீறு, நெஞ்சில் சந்தனம். பொடியன் பக்திப்பழமாக தோற்றமளித்தான்.

எட்டிப் பார்த்தேன். அழகான மூன்று சினிமா நடிகைகள் அந்த படத்தில் இருந்தனர். சாவித்திரி, தேவிகா, கே.ஆர்.விஜயா என்ற நடிகைகள் மூவரினதும் படத்தை ஒன்றாக்கி படமாக்கப்பட்டிருந்தது.

அவனிடம் கேட்டேன் 'சினிமா நடிகைகளிடம் இவ்வளவு பக்தியா?"

கெட்டவார்த்தையால் பேசிவிட்டு 'நவராத்திரி காலத்தில் விடிய எழும்பி சரஸ்வதி தோத்திரம் பாடினால் படிப்பு மூளையில் பதியும் என்று அம்மா சொன்னா" என்றான்.

'இது சிவாஜிகணேசன் நடித்த சரஸ்வதி சபதத்தில் வந்த நடிகைகள்" என்றேன்.

சரஸ்வதிஅவன் நம்பவில்லை. 'சினிமா பார்த்த அனுபவமும் இல்லை. கடைசிவரையும் சாவித்திரி, தேவிகா, கே.ஆர்.விஜயாவை வணங்கி வழிபட்டான். அவனைக் குறைகூறிப் பிரயோசனமில்லை. கேரளத்து ஓவியர் ரவிவர்மா சரஸ்வதி, லட்சுமி என்று அழகான பெண் உருவங்களை உருவாக்கினார். சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அழகான சேலைகளையும் நகைகளையும்கொண்டு அவர்களை அழகு செய்தார். உதாரணமான இந்தியப்பெண் உருவத்தையும் உருவாக்கினார். இதுதான் இந்தகாலத்திலும் அழகான பெண்ணைப்பார்த்ததும் 'மகாலட்சுமி போல் இருக்கிறாய்" என்ற வசனத்துக்கு காரணமாகியது.

ரவிவர்மாவின் காலத்துக்கு முன்பு பெரும்பாலான இந்துப்பெண் தெய்வங்களை சிலைகளிலும் ஓவியங்களிலும் ஒவ்வாத (unpropotional உடல் அமைப்புகளுடன் செதுக்கப்பட்டு, வரையப்பட்டு இருந்தன. ஆபிரிக்க பெண்களின் முலைகளையும் பின்பகுதியையும் ஐரோப்பிய பெண்களின் கால் அமைப்பையும் கொண்ட சிற்பங்கள், ஓவியங்கள் செதுக்கப்பட்டன, வரையப்பட்டன.

தற்காலத்திற்கு ஏற்ப விரசம் எற்படாது வரைந்த ரவிவர்மா கடந்த வருடம் ஒக்ரோபர் இரண்டாம் திகதியில் இறந்து நூறு வருடங்களாகிறது. இவரது ஓவியங்கள் நிரந்தரமாக இளமையுடன் நித்தியமானவை.

இரண்டு வருடங்களுக்கு முன் திருவனந்தவரத்திற்கு குடும்பமாக சென்றபோது எனது குடும்பத்தில் மற்றவர்கள் சொப்பிங்போனபோது ஆட்டோவை எடுத்துக்கொண்டு ரவிவர்மாவின் ஓவியங்கள் உள்ள மியூசியத்துக்கு சென்றேன். 'நிலா ஒளியில் பெண்" என்ற ஓவியத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு இருந்தேன். மூன்று மணி நேரம் மட்டுமே என்னால் அங்கு செலவழிக்க முடிந்தது என்ற கவலையுடன் வெளிவந்தேன்.

உலகப் புகழ்பெற்ற ஐரோப்பிய ஓவியர்களான வான்கொக் பிக்காசோ, சல்வடோர் டாலி போன்றவர்கள் சாதாரண மக்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. படித்தவர்களிடம் மட்டுமே இவர்கள் புகழ்பெற்றார்கள். வேதாகமங்களை வரைந்த லியனடோடாவின்சி போன்றவர்களினதும் ஓவியங்கள் சாதாரண கிறிஸ்தவர்களுக்கும் தெரியாது. இதேவேளை இந்தியாவின் தெருக்களில் படம்கீறிப் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனிடமும் அவனை அறியாமல் ரவிவர்மாவின் தாக்கம் பதிந்துள்ளது.
கேரளாவின் கிளிமனுர் என்ற சிறுகிராமத்தில் பிறந்து சிறுவயதில் மாமாவால் வாட்டர்க்கலர் ஓவியங்களையும் பின்பு ஒயில் ஓவியங்களை திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆதரவிலும் பயின்றார். ராஜா ஆயிலிய திருநாளால் இவரது ஓவியத்திறமை ஊக்குவிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இராஜகுடும்பம், பிரித்தானிய பிரபுக்களின் உருவங்களை வரைந்தார். 1873ல் வீயன்னாவில் நடந்த ஓவிய கண்காட்சியில் பரிசுபெற்று இந்தியாவின் தலைசிறந்த ஓவியர் என பெயர் பெற்றார்.

சமஸ்கிருத செவ்விலக்கிங்களான இராமாயணம், மகாபாரதம், சகுந்தலம் என்பவற்றின் காட்சிகளுக்கு வண்ணவடிவம் கொடுத்து கோடிக்கணக்கில் பதிப்பிக்கப்பட்டது. இவரால் வரையப்பட்ட கடவுளர் உருவங்கள் படங்களாகவும் காலண்டர்கள் ஆகவும் இன்னும் வீடுகளிலும் பூசை அறைகளிலும் கோடானகோடி மக்களிடம் உள்ளது. எத்தனை பேருக்குத் தெரியும், இவர்கள் வணங்குவது ரவிவர்மாவின் ஓவியத்தைதான் என்பது!?

uthayam@optusnet.com.au
Courtesy Ravivarma painting web
© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner