இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2009 இதழ் 116  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

அம்பையுடன் ஒரு இலக்கியச் சந்திப்பு

நவஜோதி ஜோகரட்னம் ( லண்டன் ) _


அம்பைநவஜோதி ஜோகரட்னம்“தமிழ்ச்சூழலில் ஆண் எழுத்தாளர்கள் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தவுடன் அவர்களைப் பிதாமகர்களாகவும், குருக்களாகவும் ஏற்றுக் கொண்டு மரியாதை வழங்கத் தயாராக உள்ளவர்கள்இ அந்தக் குருபீட அந்தஸ்தை பெண் எழுத்தாளர்களுக்கு வழங்குவது இல்லை. ராஜம் கிருஷ்ணன்இ கிருத்திகா போன்ற தமிழின் தலைசிறந்த மூத்த பெண் எழுத்தாளர்களுக்கும் ஒருபோதும் உயர்ந்த கௌரவம் வழங்கப்பட்டது கிடையாது” என்று பிரபல தமிழகப் பெண்ணிய எழுத்தாளர் அம்பை லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசியபோது தெரிவித்தார்.

ஆண் எழுத்தாளர்கள் படைக்கும் பாத்திரங்கள் சர்வவியாபகம் கொண்டவையாகக் கருதப்படும் நிலையில், பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் ஏதோ பெண்களின் மன உணர்வுகளை மாத்திரமே சித்தரிப்பதாக ஒரு வரையறைக்குட்படுத்தி பார்க்கின்ற மனோபாவமே தமிழகத்தில் காணப்படுகின்றது. சமூக வாழ்க்கையில் இன்றும் ஒரு பெண் தனித்து வாழ்வதில் ராஜம் கிருஷ்ணன் போன்ற புகழ்மிக்க எழுத்தாளர்கள்கூட மிகுந்த கஷ்டங்களை தனது முதுமையான வயதிலும்கூட அனுபவித்து வருவதை கண்கூடாகக் காணமுடிகிறது. ராஜம் கிருஷ்ணன் தனது மரணமுற்ற கணவரின் ஓய்வூதியப் பணத்தை பெறுவதற்குச் சென்றபோது, அவருக்கு ராஜம் கிருஷ்ணன்தான் ஒரே மனைவி என்பதை நிரூபிக்குமாறு ஒரு தாசில்தார் கேட்டிருக்கிறார் என்றால் ஆண்மேலாதிக்க மனோபாவம் எவ்வளவு தூரம் வியாபித்திருக்கிறது என்று காணமுடிகிறது. ராஜம் கிருஷ்ணன் இன்று தமிழகத்தில் கவனிப்பாரற்ற நிலையில் அனுபவிக்கும் கஷ்டங்கள் பெண் எழுத்துகளுக்கு ஒரு சமூகம் வழங்குகின்ற அவமரியாதையாகவே கருதமுடியுமென்று அம்பை மேலும் தெரிவித்தார்.

தமிழின் முன்னோடிப் பெண் எழத்தாளரான அம்பை லண்டனில் இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டு மிக இயல்பாகவும், ஆழமாகவும் தனது எழுத்துலக வாழ்வின் அனுபவங்களை மிகச் சுவையோடு விபரித்தார். எழுதுவதில் மட்டுமல்ல, கருத்தாடலிலும் மிகச் சுவையாக கதை சொல்லும் தன் லாவகத்தை அம்பை இந்;தச் சந்திப்பிலும் வெளிப்படுத்தியிருந்தார்.

கோ.வி.மணிசேகரன் என்ற பிரபல எழுத்தாளர் தமிழகத்தில் நடைn;பற்ற ஒரு கூட்டத்தில் பேசும்போது அவர் ஆற்றிய உரையினை அம்பை இச்சந்திப்பிலே நினைவு கூர்ந்தார். கோ.வி.மணிசேகரன் ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது, தற்போது விதவைகளுக்கும், திருமணமான பெண்களுக்குமிடையில் வித்தியாசமே காணமுடியாத நிலையில் எல்லாமே மாறிக்கொண்டு வருகிறதென்று தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி தான் அரசாங்க அலுவலகத்தில் தொழில் பார்ப்பதாகவும், தான் விதவை என்றும் ஆனால், விதவை என்ற பாரம்பரிய அடையாளத்தை சுமந்து திரியவேண்டிய அவசியம் இல்லை என்று எழுந்து நின்று தன் கருத்தைத் தெரிவித்தார். அதற்கு மேடையிலிருந்த கோ.வி.மணிசேகரன் பதில் கூறும்போது “நான் நடத்தை கெட்ட பெண்களைப் பற்றி பேசவில்லை” என்று கூறியிருக்கிறாகோ.வி.மணிசேகரன் என்ற பிரபல எழுத்தாளர் தமிழகத்தில் நடைn;பற்ற ஒரு கூட்டத்தில் பேசும்போது அவர் ஆற்றிய உரையினை அம்பை இச்சந்திப்பிலே நினைவு கூர்ந்தார். கோ.வி.மணிசேகரன் ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது, தற்போது விதவைகளுக்கும், திருமணமான பெண்களுக்குமிடையில் வித்தியாசமே காணமுடியாத நிலையில் எல்லாமே மாறிக்கொண்டு வருகிறதென்று தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி தான் அரசாங்க அலுவலகத்தில் தொழில் பார்ப்பதாகவும், தான் விதவை என்றும் ஆனால், விதவை என்ற பாரம்பரிய அடையாளத்தை சுமந்து திரியவேண்டிய அவசியம் இல்லை என்று எழுந்து நின்று தன் கருத்தைத் தெரிவித்தார். அதற்கு மேடையிலிருந்த கோ.வி.மணிசேகரன் பதில் கூறும்போது “நான் நடத்தை கெட்ட பெண்களைப் பற்றி பேசவில்லை” என்று கூறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட எழுத்தாளர் அம்பை ஆண் எழுத்தாளர்கள் எவ்வளவு தூரம் அச்சமின்றி பெண்களை இழிவுபடுத்தும் வாசகங்களை மேடையில் உதிர்க்க முடிகிறது என்று எனக்கு இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பெண்கள் தனியே பெண்களாக வாழ்வதென்பது இன்னும் மிகுந்த சவால்களை எதிர்கொள்ளும் விதமாகவே இருக்கிறது என்றும் தெரிவித்தார். பெண்களை விபச்சாரம் செய்ய அனுமதிக்கும் ஆண் சமூகம்இ பெண்கள் தலைநிமிர்ந்து தங்களையும் சமூகத்தின் ஒரு சமத்துவமான மனுசியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோருவதை ஏற்றுக்கொள்ளும் நிலையை எழுத்தாளர்கள் மட்டத்திலேயேகூட காணமுடிவதில்லை என்றும் தெரிவித்தார்.

குட்டிரேவதியின் ‘முலைகள்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியானபோது, அதற்கு எதிராக ஆண் எழுத்தாளர்களிடமிருந்து மிக ஆபாசமான எதிர்வினைகளே வெளிப்பட்டன என்று குறிப்பிட்டார். குட்டிரேவதி தன் உடல் குறித்து எழுதிய மிக அழகிய கவிதைகளை மோசமான கண்டனத்துக்குள்ளாக்கிய ஆண் எழுத்தாளர்களின் செயற்பாடுகள், அருவருப்பூட்டுவன என்றும் தெரிவித்தார். தங்கள் உடல் குறித்துஇ தங்களின் வலி குறித்து, தங்களின் மன உணர்வுகள் பற்றி எழுதுவதற்கு, எழுதவரும் பெண்களை சகிப்பதற்குக்கூட ஆண் எழுத்தாளர்கள் தயாராக இல்லை என்றும் அம்பை தெரிவித்தார்.

அம்ரிதா ப்ரித்ம் போன்ற பெண் எழுத்தாளர்கள் தங்கள் சமூகத்தில் பெற்ற கௌரவத்தை தமிழ் பெண் எழுத்தாளர்கள் தமிழ் சமூகத்தில் பெறுவதற்கு மிக நீண்ட பயணம் செய்யவேண்டிய நிலை இருக்கிறது என்றும் அம்பை மேலும் தெரிவித்தார்.

‘The face behind the mask; Women in tamil literature’ 1984 என்று அம்பை 1984 இல் வெளியிட்ட நூலில் தமிழ் இலக்கியத்தில் பெண் கதாபாத்திரங்கள் எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய பகுப்பாய்வை வெளியிட்டிருந்தார். அதனையடுத்து 19 ஆம் நூற்றாண்டு தமிழ்ப்; பெண்களின் சமூக வாழ்வு பற்றிய ஆராய்ச்சியில் அம்பை ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த சமூக வாழ்வை எழுதுவதற்காக பெண்ணின் அரிய, பழைய புகைப்படங்களையும், ஏனைய பிரசுரங்கள்இ பேச்சுக்கள், கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் போன்றனவற்றைத் தேடித் தொகுத்திருக்கிறார். இந்த ஆராய்ச்சியில் இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் பெண்கள் ஆற்றிய பங்களிப்பு எவ்வளவுதூரம் மறைக்கப்பட்டிருக்கிறது என்று தனது ஆராய்வில் தெரிய வந்ததாகவும் அம்பை தெரிவித்தார்.

சாதாரண நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்பவர்களாகத் திகழ்வதை அம்பை தன் சொந்த அனுபவங்களிலிருந்து சுட்டிக்காட்டிய விதம் மிகச் சிறப்பானதாக இருந்தது. தன் தந்தை இறந்தபோது தனது தாய் அவரது இறுதிக் கிரியைகள் நடத்தும் மயானத்திற்கு செல்லும் முடிவை மிக இயல்பாக எடுத்தார் என்று அம்பை குறிப்பிட்டார். அறுபது ஆண்டுகாலம் வாழ்ந்த தன் கணவரின் இறுதிக் கிரியைகளைத் தான் பார்ப்பதில் என்ன தவறு என்றும், மனைவி தன் கணவரின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் மயானத்திற்குச் செல்லக் கூடாதென்று எந்தச் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தன் தாய் கேள்வி எழுப்பியதை நினைவு கூர்ந்தார். தன் தந்தை தனது திருமணம் தொடர்பாக முடிவுகளை மேற்கொள்ளத் தயங்கியபோது தன் தாய் எடுத்த தீர்மானங்கள் முற்போக்கானதாக இருந்தன என்று அம்பை குறிப்பிட்டார்.

இதனைவிட மும்பையிலிருந்து பெண்களின் ஆராய்ச்சிக்கான ஆவணக் காப்பகம் ஒன்றை
‘Sparrow’ என்ற அமைப்பின் மூலம் நடத்தி வரும் அம்பை, இந்தியாவில் நடனம், சங்கீதம், நாடகம், ஓவியம் ஆகிய கலைத்துறைகளில் ஈடுபாடு மிகுந்த ஆனால், அதிகம் பேசப்படாத பெண்மணிகளுடனான நேர்காணலை விரிவாக நடாத்தி அவற்றைத் தமிழ்இ ஆங்கிலம், மராத்தி ஆகிய மொழிகளிலே வெளிக்கொணர்ந்திருக்கிறார். நிதிப்பலம் இல்லாத நிலையில் தான் அந்த அமைப்பைக் கொண்டு நடாத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை அம்பை விபரித்தார்.

விம்பம் ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில் மீனாள் நித்தியானந்தன் தலைமை வகித்துப் பேசும்போது “கடந்த 40 ஆண்டுகளாக எழுதிவரும் அம்பை எந்தச் சந்தர்ப்பத்திலும் சமரசத்திற்கு இடம்கொடுக்காத எழுத்தாளர் என்றும், இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நுணுக்கமாகவும், கொஞ்சம் கிண்டலாகவும் அம்பை எழுதும் எழுத்துக்கள் கனதியானதும், கலாபூர்வமானதென்றும் தெரிவித்தார். மிக நவீன பெண்ணியப் பிரச்சனைகளை துணிச்சலுடன் எழுதும் அம்பை தனது இந்தப் புனைபெயரை ஆயிரம் ஆண்டுகாலப் பழமை வாய்ந்த மகாபாரதக் கதைகளிலிருந்து எடுத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிடுவதில் எனக்குச் சந்தோஷம்” என்று குறிப்பிட்டார். அம்பை என்ற மகாபாரதப் பெண் சவாலிட்ட ஆண் சாதாரண ஆண் அல்ல என்றும் பிதாமகனென்று அறயப்பபட்ட பீஷ்மரை எதிர்கொண்டவள் என்று தெரிவித்த மீனாள் நித்தியானந்தன் அம்பை பன்னிரண்டு வருடங்கள் கடுந்தவம் மேற்கொண்டு சிகண்டி என்ற ஆண்வடிவம் பெற்று பீஷ்மரை அழித்த கதையை விரிவாகக் கூறினார். அத்தகைய மன உறுதியும், வைராக்கியமும் கொண்ட பெண் அம்பை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று மீனாள் நித்தியானந்தன் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.

இங்கே அமர்ந்திருக்கும் லக்சுமி என்ற பெண் சிகண்டியுமல்ல, நீங்கள் யாரும் பீஷ்மருமல்ல என்று மீனாள் நித்தியானந்தன் தனது தலைமை உரைக்கு முத்தாய்ப்பு வைத்தது சுவையாக இருந்தது.

இந்தக் கலந்துரையாடலில் மு.நித்தியானந்தன், நிர்மலா ராஜசிங்கம், ஜெயஅழகி அருணகிரிநாதர், ராகவன், கே.கிருஷ்ணராஜா, எஸ்.மகாலிங்கசிவம், பத்மநாப ஐயர், சாள்ஸ், மாதவி சிவலீலன், நவஜோதி ஜோகரட்னம் ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்கள் தெரிவித்திருந்தனர்.

ஈழத்து முற்போக்கு முன்னோடிக் கவிஞர் இ.முருகையனின் மறைவு குறித்து இக்கலந்துரையாடலின்போது அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.

13.7.2009.
navajothybaylon@hotmail.co.uk


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்