இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2007 இதழ் 95  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
அண்ணை றைற் - இலங்கை வானொலி புகழ் - கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா!

- குரு அரவிந்தன் -

அண்ணை றைற் - இலங்கை வானொலி புகழ் - கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா!சென்ற ஞாயிற்றுக்கிழமை, அக்ரோபர் மாதம் 2007, 7ம்திகதி கனடிய தமிழ் கலைஞர்கள் கழகம், பாரதி புரடக்ஷனின் ஏற்பாட்டில் கே. எஸ்.
பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு அடங்கிய இறுவட்டு வெளியீட்டு விழா, கனடா ஒன்ராரியோ ரொறன்ரோவில் உள்ள ஏஜியன்கோட் சனசமுக நிலையத்தில் மாலை 5:30 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் அதைத் தொடர்ந்து கனடிய தேசியகீதமும் இடம் பெற்றன. தாய்மண்காக்க தாயகத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்காக ஒரு நிமிட மௌம் அஞ்சலி, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு.பொ.கனகசபாபதியின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் நிகழ்ச்சிகளை சிறந்த நடிகரும், கலைஞருமான துசி ஞானப்பிரகாசம் மிகவும் சிறப்பாகக் கொண்டு நடத்தினார்.

பாரதி கலைக்கோயில் அதிபரும், பிரபல நடிகர், திரைப்பட இயக்குனருமான திரு. எஸ். மதிவாசன் ஆரம்ப உரை நிகழ்த்தும்போது, இலங்கை வானொலியில் தன் குரல் வளத்தால் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களை உருவாக்கிய கே.எஸ். பாலச்சந்திரன்தான் தன்னையும் கலை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்றும், இன்று இந்த இறுவட்டு வெளிவருவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டு, பாலா அண்ணாவிற்குப் புகழாரம் சூட்டிப் பாராட்டினார். தொடர்ந்து உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவருமான ஆர். என். லோகேந்திரலிங்கம், மேற்குலக நாடுகளில் உள்ளது போன்ற தனிமனித நடிப்புக் கலையை முதன்முதலாக தமிழ் நாடக
உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்றும், கடந்த நாற்பது ஆண்டுகளாக நாடக, திரைப்படத்துறையில் தன்னை அர்ப்பணித்துள்ளார் என்றும் தனது வாழ்த்துரையில் அவரைப்பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

அடுத்து தலைமை உரையாற்றிய அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள், கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எங்கோ பிறந்திருந்தால் இன்று எங்கேயோ போயிருப்பார் என்று ஒரு உண்மையான, சிறந்த கலைஞனைப் பாராட்டத் தயங்கும் எங்கள் தமிழ் சமுதாயத்தின் குறைபாட்டை மறைமுகமாய்ச் சுட்டிக் காட்டினார். மேலும் நகைச்சுவை வாய்மொழியாயும், உடல்மொழியாயும் வெளியே வரும்போது அது காலத்தால் அழியாமல் நின்றுவிடுகிறது. என். எஸ்.
கிருஸ்னனின் நகைச்சுவைகள் போலவே கே.எஸ்.பாலச்சந்திரனின் நகைச்சுவையும் எல்லோர் மனதிலும் பல ஆண்டுகளின் பின்பும் நிலைத்து நிற்கின்றது என்பதையும், எல்லாவற்ருக்கும் மேலாக அவரை ஒரு உயர்ந்த பண்பாளராக, மனிதநேயம் மிக்க ஒரு நல்ல மனிதராக மதிக்கிறேன் என்றும் குறிப்பிட்டு, அவரைப் பாராட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ரூபவாகினி தமிழ்துறை பணிப்பாளரும், இலங்கை வானோலி தமிழ் நாடகத் தயாரிப்பாளரும், கடனா ரீவிஐ பணிப்பாளருமான ப. விக்னேஸ்வரன் காங்கேயன்துறையைச் சேர்ந்த நடிகமணி வி.வி. வைரமுத்துவைப் போலவே கே.எஸ்.பாலச்சந்திரனும் நடிப்புத்துறையில் வெகுஜன அங்கீகாரம் பெற்ற மிகச்சில ஈழத்தமிழ் கலைஞர்களில் ஒருவர் என்றும், எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து ஈழத்தமிழர்களால் நன்கு அறியப்பட்ட கலைஞர், நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என்று பல பரிமாணங்கள் இவருக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டு அவரைப் பாராட்டினார்.

வெளியீட்டு உரை நிகழ்த்திய கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள், தொல்காப்பியத்திலே எட்டாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சுவை நகைச்சுவை என்றும், அந்தச்சுவை கே.எஸ்.பாலச்சந்திரனுக்குக் கைவந்த கலை என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த இந்த இறுவட்டில் ஓடலி ராசையா, தியேட்டரில் மூத்ததம்பி, உகண்டா வானெலிச் செய்திகள், சப்ளையர் சத்தியமூர்த்தி, அண்ணைறைற் ஆகிய தனிநபர் நகைச்சுவை நிகழ்ச்சிகள் பதியப்பட்டு
இருப்பதாகவும், தன்னை அதிகம் கவர்ந்தது உகண்டா வானொலிச் செய்திகள்தான் என்றும் குறிப்பிட்டு இறுவட்டை வெளியீடு செய்துவைத்தார். சி.ரி.பி.சி வானொலி அதிபரும், சிறந்த நாடக நடிகருமான இளையபாரதி அவர்கள் பல வருடங்களாகவே கே.எஸ்.பாலச்சந்திரனைத் தனக்குத் தெரியும் என்றும், சிறு பையனாக இருக்கும்போது யாழ்ப்பாணத்தில் நடந்த ஒருவிழாவில் அவரைப்பற்றி உரையாற்றுவதற்கு தனக்குச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டுப் பெருமைப் படுவதாகவும் குறிப்பிட்டு, பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

அடுத்து ஜேர்மணியில் இருந்து வெற்றிமணி ஆசிரியர் அனுப்பி வைத்த வாழ்த்துக் கவிதையை நடிகரும், நகைச்சுவை எழுத்தாளருமான கதிர் துரைசிங்கமும், அமெரிக்காவில் இருந்து கே.எஸ்.பாலச்சந்திரனின் நண்பர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை எழுத்தாளரும், சட்டத்தரணியுமான மனுவல் ஜேசுதாசன் அவர்களும் வாசித்து அவரைப் பாராட்டினார்கள்.

ஆசியுரை வழங்கிய திரு. விஜயகுமாரக்குருக்களும், தொடர்ந்து உரையாற்றிய எஸ்.எஸ். அச்சுதனும் தமிழ் மக்களிடையே அதிகம் செல்வாக்குப் பெற்ற நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் என்பதைக் குறிப்பிட்டு உரையாற்றினர். தொடர்ந்து இறுவட்டுப் பிரதிகள் வெளியிடப்பட்டன. ஏற்புரையில் கே. எஸ். பாலச்சந்திரன் இந்த விழா சிறப்பாக நடைபெற முன்னின்று உழைத்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக மதிவாசன், ரஜீவ்கரன்,
விக்னேஸ்வரன், ராஜ் சுப்பராயன், டிஜிமீடியா கருணா, மிடி மெலோடிஸ் எஸ் வி. வர்மன், துசி ஞானப்பிரகாசம் ஆகியோரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.

சின்னவயதிலே இலங்கை வானொலி மூலம் கே.எஸ்.பாலச்சந்திரனின் ரசிகனாக நானிருந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் அவரோடு
பழகுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம்கிடைத்தது. 1997ல் தமிழ் ஆரம் என்ற சிறுவர்களுக்கான ஒளிநாடாவை நான் வெளியிட முயற்சிகள் செய்து
கொண்டிருந்தபோது கலையகத்திற்குச் தற்செயலாக வந்த அவர் அதைப் பார்த்துவிட்டு தன்னை அறிமுகம் செய்து, அடுத்த தலைமுறை உங்களை என்றென்றும் ஞாபகம் வைத்திருக்கும் என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அதன் பின்பு இலக்கியச் சந்திப்ப்புகளில் அடிக்கடி அவரைச் சந்தித்து உரையாடுவேன். நல்ல ஞாபக சக்தியும், ஆழ்ந்த நாவல் இலக்கிய அறிவும் அவரிடம் இருப்பதை அச்சந்தர்ப்பங்களில் அவதானித்தேன். அவரிடம் உள்ள
திறமைகளையும், அனுபவங்களையும் நாடகப் பட்டறை மூலம் வெளிக் கொண்டுவந்து, அவற்றை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எனது தற்போதைய ஆசை. அது மற்றவர்களின் ஆசையாகவும் இருக்கக்கூடும்!

செவிக்கு விருந்து தரும் அண்ணை றைற் போன்ற இறுவட்டு, பல நல்ல மனம் கொண்ட நண்பர்களின் உதவியால் இன்று வெளிவந்திருப்பதைப் போல, கண்ணுக்கு விருந்தளிக்கும் காணொளி ஒளிவட்டுக்களும் அவருடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தாங்கி விரைவில் வெளிவர ஆவன செய்யவேண்டும் என்று ரசிகர்களாகிய நாங்கள் அவரிடம் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக ரீ.வீ.ஐயில் காண்பிக்கப்படும் வைத்திலிங்கம்சோ போன்ற நகைச்சுவை காட்சிகள் அடங்கிய ஒளிவட்டு வெளிவந்தால் சர்வதேசத்திலும் பரந்து வாழும் தமிழர்களை அது மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமே
இல்லை. புகழ் பெற்ற நல்ல கலைஞர்களை வாழும்போதே கௌரவிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்டட கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. எமது இனத்தவரை, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களை, நாமே முன்னின்று பாராட்டத் தயங்கினால் வேறுயாரும் பாராட்ட முன்வரப் போவதில்லை. பாலா அண்ணா நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்து தனது நகைச்சுவை நடிப்பு மூலம் எங்களை மகிழ்விக்க
வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகின்றோம். வாழ்க, வளர்க நலமுடனே!

kuruaravinthan@hotmail.com

© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner