இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2006 இதழ் 82 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!
23,24 செப்டம்பர் மாதம் 2006!
கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் லண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு!
'
இலங்கைத் தமிழரின் படைப்புக்களும் மனித உரிமைகளும்''

இலண்டன் தமிழ் இலக்கியச் சந்திப்பு 2006ஐரோப்பாவில் வாழும் இலங்கைத்தமிழர்களின்; 33வது இலக்கிய சந்திப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23,24ம் திகதிகளில் லண்டனில் நடைபெறவிருக்கிறது. இலங்கையில் நடந்து கொண்டிருந்த இனப்படுகொலைகளிருந்து தப்புவதற்காக ஐரோப்பாவில் குடியேறிய தமிழ் இலக்கியவாதிகள், சிறுபத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என்போரால் இவ்விடக்கியச் சந்திப்பு தொடங்கப்பட்டது. இன,மொழி, சாதி,பால் வித்தியாசமின்றி இவ்விலக்கியச் சந்திப்பு மூலம் தமிழ் சமூகத்திலுள்ள முற்போக்குவாதிகள் பலர் தங்கள் படைப்புக்கள், பங்களிப்புக்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

1988ம் ஆண்டடில் ஜேர்மனியிலுள்ள ஹேர்ண் நகரில் ஆரம்பிக்கப்பட்ட இலக்கிய சந்திப்பு இதுவரை 32 முறைகள் கனடா உட்பட பல மேற்கு நாடுகளின் முக்கிய நகரங்களில்; நடைபெற்றிருக்கின்றன. லண்டனில் 1994ல் இலக்கிய சந்திப்பு முதற்தரம் நடந்தபின் இவ்வருடம் இரண்டாம் முறையாக நடக்கவிருக்கிறது;.

இலங்கை , இந்தியா, கனடா,அவுஸ்திரேலியா, அமெரிக்காபோன்ற பல நாடுகளிலிருந்து மிகச்சிறந்த தமிழ் சிந்தனாவாதிகள், எழுத்தாளர்கள்,வரைபடக் கலைஞர்கள், திரைப்படஇயக்குனர், புகைப்படக்கலைஞர்கள்;, பெண்ணியவாதிகள், மனித உரிமைவாதிகள்,பத்திரிகையாளர்கள்,தலித்தியப் போராளிகள் போன்ற பலர் கடந்து சென்ற 32 இலக்கிய சந்திப்புக்களில் பங்கு பற்றியிருக்கிறார்கள்.

இனவாதத்தைத் தூண்டும் குறுகிய அரசியற் கருத்துக்கள், மனித உரிமைகளுக்கு, பெண்களின் சுதந்திரத்திற்கு, மதத்தின் பெயரிலும் சாதியின் பெயரிலும்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்துக்கள் இலக்கிய சந்திப்புக்களில் தவிர்க்கப் படுகின்றன. அத்துடன் மேற்கண்ட கருத்துக்கள் மனித மேம்பாட்டுக்கு எதிரானவை என்பதால் இலக்கிய சந்திப்புக்களில் இக்கருத்துக்கள் மிகவும் பாரதூரமாக எதிர்க்கப்படுகினறன. அப்படியானவர்களின் பங்கீடுகள் தடைசெய்யப் படுகின்றன.

இந்தச் சந்திப்பு விளிம்பு நிலை மக்கள், பெண்கள், இளம்தலைமுறையினர், முஸ்லிம், மலையகப்; படைப்புக்ககளை முன்னேடுக்கும் சந்திப்பாகும்.

இவ்வருடம் லண்டனில் நடக்கவிருக்கும் இலக்கிய சந்திப்பில் முஸ்லிம், தமிழ் முற்போக்கு சிந்தனையாளர்களின் ஆக்கங்கள், பெண்கள், இளம் தலைமுறையினரின் ஆக்கங்கள், நாடகங்கள் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. இலக்கிய சந்திப்புக்கு வரவிரும்புமவர்கள் லண்டனில் தங்கும் வசதி போன்ற விபரங்களுக்குத தயவு செய்து காலம் தாழ்த்தாமல் தொடர்பு கொள்ளவும்.

பேச்சாளர்கள்: ஐரோப்பாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் பல தமிழ், முஸ்லிம், மலையகப் பேச்சாளர்கள் பங்குபற்றுகிறார்கள்

இடம்: கிழக்கு லண்டன்; பல்கலைக்கழகம், ஸ்ரார்ட்வோர்ட் காம்பஸ்,ஸ்ரார்ட்வோர்ட், லண்டன் கிழக்கு 15

The Venue: University of East London, Stratford Campus, Stratford, London E 15

திகதிகளும் நேரமும்: 23,24 செப்டம்பர் மாதம் 2006:
23.09.06: காலை 9.30 இருந்து மாலை 10.00 மணிவரை
24.09.06 காலை 9.30 இருந்து மாலை 8.30 மணிவரை

நிகழ்ச்சி நிரல், அழைப்பிதழ்.....உள்ளே


மேலதிக விபரங்களுக்கு: இராஜேஸ் பாலா 0208 889 7827
rajesbala@hotmail.com

கிருஷ்ணராஜா 0208 470 7883, 0795 490 694
chanthippu33@aol.com

Nearest Station Tube/ Railaways: Startford
Buses: 25,86


தகவல்:
rajesbala@hotmail.com

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner