இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2010  இதழ் 123  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள் / அறிவித்தல்!
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.
பதிவுகள் அறிவித்தல்அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா 2010 மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சர்வதேச தமிழ்ச்சிறுகதை, கவிதைப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

சிறுகதை, கவிதைப் போட்டிகளுக்கான பொது விதிகள்

1.போட்டியில் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவரும் பங்குபற்றலாம்.

2.ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பற்றலாம். அத்துடன் எத்தனை ஆக்கங்களையும் அனுப்பலாம்.

3.ஆக்கங்கள் போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும். போட்டிக்கென அனுப்பப்படும் சிறுகதை, கவிதை
மொழிபெயர்ப்பாகவோ தழுவலாகவோ இருப்பின் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

4.ஆக்கங்கள் கையெழுத்தாகவோ அல்லது தட்டச்சாகவோ இருக்கலாம். ஆனால் தாளின் ஒரு பக்கத்தை மாத்திரம் உபயோகப்படுத்துதல் வேண்டும்.

5.போட்டிக்கு அனுப்பப்படும் ஆக்கம் அமைந்துள்ள தாளிலன்றிப் பிறிதொரு தாளில் போட்டியாளர் தனது பெயர், முகவரி, மின்னஞ்சல்
முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை எழுதி இணைத்து அனுப்புதல் வேண்டும். சிறுகதை அல்லது கவிதை இடம்பெறும் எந்தத் தாளிலும் மேற்படி விபரங்கள்; இருத்தல் கூடாது.

6.ஆக்கங்கள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப் பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைத்தளங்கள் உட்பட)  இருத்தல் கூடாது. போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை - படைப்பை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்.

7.போட்டியில் தேர்வு பெறும் ஆக்கமெதையும் சஞ்சிகையெதிலும் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய
கலைச்சங்கத்திற்கு உரித்துண்டு.

.கவிதைகளின் பாடுபொருள் பின்வரும் துறைசார்ந்த விடயங்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ உள்ளடக்கியனவாக இருத்தல்
வேண்டும். குறித்த கவிதைக்கான பொருத்தமான தலைப்பைப் போட்டியாளரே கொடுத்தல் வேண்டும்.

உலகம் வெப்பமடைதல், உலகமயமாதல் புலம் பெயர்ந்த தமிழர்களின் சமூக, பொருளாதார, வாழ்க்கை முறைகள், ஈழத்தமிழர் எதிர்காலம்,
தமிழ் மொழி, பண்பாடு, தமிழ் இலக்கியம்.

9.இப்போட்டிகளுக்கான முடிவுத்திகதி: 30-03-2010 ஆக்கங்களைத் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் மின்னஞ்சலூடாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

அனுப்பவேண்டிய முகவரி:

ATLAS
P. O . BOX 620
PRESTON
VICTORIA 3072
AUSTRALIA

மின்னஞ்சல்:
atlas2001@live.com

10.போட்டி முடிவுகள் 2010 மே மாதம் இரண்டாவது வாரம் வெளியிடப்படும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

சிறுகதைப்போட்டி - முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளாக முறையே $300, $200, $100 அவுஸ்திரேலியன் வெள்ளிகள். தேர்வு
பெறும் ஒன்பது சிறுகதைகளுக்கு ஆறுதல் பரிசாக $50 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்.

கவிதைப்போட்டி - முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளாக முறையே $200, $150, $100 அவுஸ்திரேலியன் வெள்ளிகள். தேர்வு
பெறும் ஒன்பது கவிதைகளுக்கு ஆறுதல் பரிசாக $50 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்.

வாசகர் வட்டம் சார்பாக.....
பதிவுகள் அறிவித்தல்அன்புள்ள நண்பர்களுக்கு, வாசகர் வட்டம் நாளை ஞாயிறு 21-2-10 அங் மோ கியோ நூல் நிலையத்தில் மாலை 4.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. சிறப்புப் பேச்சாளர்: முனைவர் திருராஜீ ஸ்ரீனிவாசன் தலலைப்பு: நேற்றிருந்தோம் ஜலான் பேசார் வட்டாரத்தைப் பற்றி பேசவிருக்கிறார்.

இடம்: டொமேட்டோ அறை முதல் மாடி அங் மோ கியோ நூல் நிலையம் நேரம்:  4.30  நாள்: 21-2-10 ஞாயிறு

அனைவரும் வந்து நிகழ்ச்சிக்கு ஆதரவு தருக!!!

அன்புடன்
வாசகர் வட்டம் சார்பாக
சித்ரா
chitra.kjramesh@gmail.com

காற்றுவெளி: 2010
பதிவுகள் அறிவித்தல்புதிய ஆண்டில் காலடி வைத்திருக்கும் இதழ் காலாண்டு இதழாக வரவுள்ளதால் தங்களின் ஆக்கங்களை நாம் வேண்டி நிற்கிறோம். சிறுகதையாக, கவிதையாக, கட்டுரையாக, நேர்காணலாக எழுதி அனுப்பலாம். நூல் விமர்சனத்துக்கு 2 நூல்கள் அனுப்ப வேண்டும்.
நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு:

R. Mahendran
34, Red Riffe Road,
Plaistow,
London,
E13 0JX
mullaiamuthan_03@hotmail.co.uk

தகவல்: mullaiamuthan_03@hotmail.co.uk

'துணையிழந்தவளின் துயரம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா
பதிவுகள் அறிவித்தல்வருகிற பிப்ரவரி 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராயர் நகர், 51. ஜி. என். செட்டி சாலை (பாரதிராசா மருத்துவமனை எதிரில்) ஹோட்டல் பெனின்சுலா நிகழ்ச்சி அரங்கில்

கவிஞர் அறிவுமதி அவர்கள் தலைமையேற்கவும், திரு அ.சாதிக் பாட்சா அவர்கள் வரவேற்புரை ஆற்றவும், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கவும், மதுரா பாலன், கவிஞர் சேதுகுமணன் ஆகியோர் நூலைப் பெற்று வாழ்த்தவும், திரு தமிழ்முழக்கம் சாகுல் அமீது, திரு இனியவன் ஹாஜி,, திரு மின்வெளி தனபால், திரு கீற்று இரமேஷ் ஆகியோர் சிறப்புப்பிரதிகளை பெறவும், கவிஞர் பழநிபாரதி,
இயக்குநர் மீராகதிரவன்,திருமதி நங்கை குமணராசன்
திரு வன்னிஅரசு ஆகியோர் கருத்துரை வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்கள்... நீங்களும் அவசியம் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பிப்பீர்கள் என நம்புகிறேன். தங்கள் வருகையில் மகிழும்-

இசாக் மற்றும் உறவும் நட்பும்

thuvakku@gmail.com

கனடா: கூர் கலை, இலக்கிய நிகழ்வு; பங்குனி 06-2010,
கூர்-2010: இரவு எரிந்து கொண்டு இருக்கிறது (கனடா கலை இலக்கியத் தொகுப்பு)1


கூர்-2010: இரவு எரிந்து கொண்டு இருக்கிறது (கனடா கலை இலக்கியத் தொகுப்பு)1தொகுப்பு வெளியீடும், செ. டானியலின் இயக்கத்தில் வெளிவந்த 'புனிதவதி' தென்மோடிக்கூத்து ஒளிப்பேழைக் காட்சியும்..

இடம்:
scarborough civic centre
காலம்: பங்குனி 06-2010,
சனி மாலை 3 மணி
மேலதிகத் தொடர்புகளுக்கு:
தேவகாந்தன் 416 458 9426 டானியல் ஜீவா-416 500 9016

தகவல்: DANIEL JEEVA danieljeeva@rogers.com

பௌர்ணமி இரவு ( அரியத் திரைப்படங்கள் திரையிடல் & கலந்தாய்வு நிகழ்வு )
வணக்கம், நகரின் சப்தங்கள் அனைத்தும் ஆர்பரித்துப் பின்னர் அடங்கிப் போன பின்பனி இரவு, முழு நிலவு, மனதுக்கு மிக நெருக்கமான அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்ட வெளியில், புல் தரை மீது அமர்ந்து நாம காணக் கிடைக்காத பல அரியத் திரைப்படங்கள், உலக குறும்படங்கள் மற்றும் நம் நண்பர்கள் உருவாக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகியவற்றை, நிலா சோறு உண்டுக் கொண்டே பார்க்கும்போது ஏற்படும் பரவச நிலை பல ஆண்டுகள் செய்யும் தவத்திற்கு சமம். அத்தகைய தவ நிலைக்கு, அல்லது பரவச நிலைக்கு உங்களை அழைத்து செல்ல நாங்கள் தயார். வருவதற்கு நீங்கள் தயாரானால்!வணக்கம், நகரின் சப்தங்கள் அனைத்தும் ஆர்பரித்துப் பின்னர் அடங்கிப் போன பின்பனி இரவு, முழு நிலவு, மனதுக்கு மிக நெருக்கமான அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்ட வெளியில், புல் தரை மீது அமர்ந்து நாம காணக் கிடைக்காத பல அரியத் திரைப்படங்கள், உலக குறும்படங்கள் மற்றும் நம் நண்பர்கள் உருவாக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகியவற்றை, நிலா சோறு உண்டுக் கொண்டே பார்க்கும்போது ஏற்படும் பரவச நிலை பல ஆண்டுகள் செய்யும் தவத்திற்கு சமம். அத்தகைய தவ நிலைக்கு, அல்லது பரவச நிலைக்கு உங்களை அழைத்து செல்ல நாங்கள் தயார். வருவதற்கு நீங்கள் தயாரானால்!

தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தின் குறும்பட வட்டம் நிகழ்வு கடந்த பதினேழு மாதங்களாக மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஊடகங்களும், ஆர்வலர்களும் கொடுத்த பேராதரவே இதற்கு காரணம். அதே அளவிற்கான ஆதரவை எதிர்பார்த்து மேலும் ஒரு திரையிடல் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருக்கிறது. எப்போதும் வெறும் வார்த்தையளவில் நாம் பேசிக்கொண்டிருக்கும் சில திரைபபடங்கள், விமர்சகர்கள் கொண்டாடும் சில இயக்குனர்களின் காணக்கிடைக்காத அரியத் திரைப்படங்கள், உலக அளவில் புகழ் பெற்ற குறும்படங்கள், உலகின் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆவணப்படங்கள், தமிழிலும் முயற்சி செய்கிறோம் என பறைசாற்றும் குறும்படங்கள் போன்றவை இந்த நிகழ்வில் திரையிடப்படும்.

மேலும், தமிழில் குறும்படம் எடுக்க விரும்பும், அல்லது அந்த குறும்படத்தில் பங்கேற்க விரும்பும் அல்லது குறும்பட உதவி வேண்டும் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்குள் குழுவாக பிரிந்து அது பற்றி விவாதிக்கும் நிகழ்வும் இந்த பெவுர்ணமி இரவில் நடைபெறும். தங்கள் மனதுக்குள் இருக்கும் பல்வேரு பிரச்சனைகளால் தாங்கள் உருவாக்க நினைத்த குறும்பட முயற்சியை தள்ளி வைத்த அனைத்து நண்பர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்கள் சிறப்பாக குறும்படம் எடுக்க இந்த நிகழ்வில் வழிநடத்தப்படும்.

உலகப் படங்கள் பற்றியான ஒரு புரிதலை ஏற்படுத்தவும், அதுபற்றி கலந்துரையாடவும், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு பார்வையாளர் பௌர்ணமி இரவில் நம்முடன் பங்கேற்பார். ஆர்வலர்கள் அந்த மாதம் பௌர்ணமி இரவில் திரையிடப்படும் படங்களை அந்த சிறப்பு பார்வையாளருடன் சேர்ந்து பார்த்துவிட்டு அந்தப் படம் குறித்து அவருடன் கலந்துரையாடலாம்.

முதல் மாத பௌர்ணமி இரவு நிகழ்வு; ஞாயிறு, 28-02-2010
இரவு 8 மணிக்கு. நிகழ்வு முடிய இரவு 12.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும். ஆனால் அதற்காக ஆர்வலர்கள் இருபது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

திரையிடப்படும் படங்கள்:
உலக அளவில் அனைவரும் பார்க்க வேண்டிய அரிய திரைப்படம்:
உலக அளவில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட குறும்படம்: லிட்டில் டெர்ரரிஸ்ட்.  லிட்டில் டெர்ரரிஸ்ட் குறும்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0425200/plotsummary

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம். என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம் குறும்படத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள: http://www.imdb.com/title/tt1402517/

இந்த மாதத்திற்கான சிறப்பு பார்வையாளர், மற்றும் முதல் மாத நிகழ்வை தொடங்கி வைப்பவர்:திரைப்பட நடிகர், வி. டி. எம். சார்லி M.A., M.Phil.

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268


அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268

தமிழ் ஸ்டுடியோ thamizhstudio@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்