இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2010  இதழ் 132  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
நிருத்த நிறைஞர் பட்டமளிப்பு விழா - 2010

- மாலினி அரவிந்தன் -


ஒரு சிறிய அசைவையும் நாம் லயத்தோடும் நயத்தோடும் முழுமனத்தோடும் செயற்படுத்துகின்றபோது அது நாட்டியம் எனப்படுகின்றது. தொன்மை வாய்ந்த எமது பரதக்கலை திராவிட கலாச்சாரத்தின் சின்னமாக விளங்குவது மட்டுமல்ல, அது தனித்துவம் வாய்ந்ததுமாகும். அத்தகைய பரதநாட்டியக் கலையில் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துருவை அதிபராகக் கொண்ட கனடா கலைமன்றத்தின் நிருத்த நிறைஞர் 2010ம் ஆண்டு பட்டமளிப்புவிழா 10-10-2010;ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை யோக்வூட் நூலக மண்டபத்தில் காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இது 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலைமன்றத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழாவாகும்.

ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துருவை அதிபராகக் கொண்ட கனடா கலைமன்றத்தின் நிருத்த நிறைஞர் 2010ம் ஆண்டு பட்டமளிப்புவிழா 10-10-2010;ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை யோக்வூட் நூலக மண்டபத்தில் காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இது 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலைமன்றத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழாவாகும். விழாவில் கவிநாயகர் கந்தவனம், எழுத்தாளர் குரு அரவிந்தன், சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் ஆகியோர் அமர்ந்திருக்கும் காட்சி.இந்த விழாவிற்கு தமிழர் தகவல் முதன்மை ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் தலைமை தாங்கினார். கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்களும் நடனக் கலைஞர் ஜனக் கே. ஹென்றி அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். தமிழ் வாழ்த்து, கனடிய தேசியகீதம் ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரை நிகழ்ந்தது. அடுத்து கலைமன்றத்தின் அதிபர் குரு. நிறைஞ்சனா சந்துரு ‘கலைகள் மனித வாழ்க்கையைப் பண்படுத்துகின்றன. எனவே கலைகளைக் கற்போம், கற்றதைப் பேணிக்காப்போம். கலைகளின் மகிமை நேர்த்தி என்பன குன்றாது புதியன புகுத்தி அடுத்த சந்ததியினருக்குக் கற்பிப்போம்’ என்று தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டு, நிகழ்வில் பங்குபற்றிய விருந்தினர், பெற்றோர் ஆசிரியர், மாணவர்கள் அனைவரையும் பாராட்டினார்.

ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துருவை அதிபராகக் கொண்ட கனடா கலைமன்றத்தின் நிருத்த நிறைஞர் 2010ம் ஆண்டு பட்டமளிப்புவிழா 10-10-2010;ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை யோக்வூட் நூலக மண்டபத்தில் காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இது 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலைமன்றத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழாவாகும்.2010ம் ஆண்டுக்கான நிருத்த நிறைஞர் பட்டத்தை (
Niruththaniraignar) செல்வி அனுஷா ஜெயன், செல்வி விக்னேஸ்வரி சிவாஸ்கர், செல்வி ஜெனித்தா ரூபரஞ்சன், செல்வி மஜின்டா மகேந்திரதாஜன், செல்வி கௌதமி இராமநாதன் ஆகிய ஐந்து மாணவிகளும் பெற்றுக் கொண்டனர். ஆசிரியர்தர டிப்ளோமா பட்டத்தை (Teachers Grade) செல்வி ஹரின்யா ராஜசேகரன், செல்வி கவினா சத்தியசோதி, செல்வி ஸ்ரெவ்னி அன்ரன் ஜெயபாலன், செல்வி லிஸானா தர்மபாலன், செல்வி மதுமிதா சண்முகநாதன் ஆகிய ஐந்து மாணவிகளும் பெற்றுக் கொண்டனர்.

2010ம் ஆண்டுக்கான நிருத்த நிறைஞர் பட்டத்தை (Niruththaniraignar) செல்வி அனுஷா ஜெயன், செல்வி விக்னேஸ்வரி சிவாஸ்கர், செல்வி ஜெனித்தா ரூபரஞ்சன், செல்வி மஜின்டா மகேந்திரதாஜன், செல்வி கௌதமி இராமநாதன் ஆகிய ஐந்து மாணவிகளும் பெற்றுக் கொண்டனர். ஆசிரியர்தர டிப்ளோமா பட்டத்தை (Teachers Grade) செல்வி ஹரின்யா ராஜசேகரன், செல்வி கவினா சத்தியசோதி, செல்வி ஸ்ரெவ்னி அன்ரன் ஜெயபாலன், செல்வி லிஸானா தர்மபாலன், செல்வி மதுமிதா சண்முகநாதன் ஆகிய ஐந்து மாணவிகளும் பெற்றுக் கொண்டனர்.நிருத்த நிறைஞர் பட்டம் பெற்றவர்களான செல்வி. அனுஷா ஜெயன் அவர்களை ரொறொன்ரோ கல்விச்சபையின் ஓய்வுபெற்ற பல்கலாச்சார ஆலோசகர் திரு.பொ.கனகசபாபதியின் சார்பில் கவிஞர் வி. கந்தவனம் அவர்களும், செல்வி விக்னேஸ்வரி சிவாஸ்கர் அவர்களை அரசியல் ஆய்வாளர் திரு குயின்ரஸ் துரைசிங்கம் அவர்களும், செல்வி ஜெனித்தா ரூபரஞ்சன் அவர்களை கவிஞர் வி. கந்தவனம் அவர்களும், செல்வி மஜின்டா மகேந்திரதாஜன் அவர்களை எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும், செல்வி கௌதமி இராமநாதன் அவர்களை கவிஞர் மா. சித்திவினாயகம் அவர்களும் சபையோருக்கு அறிமுகம் செய்து அவர்களது திறமைகளைப் பாராட்டினார்கள்.

மதிய இடைவேளையின் பின் கலைமன்றத்தின்; தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையிலான பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலாநிதி திரு. திருமதி பாலசுந்தரம், திரு. திருமதி கந்தவனம், திரு. திருமதி சித்திவினாயகம், எழுத்தாளர் குரு அரவிந்தன், குயின்ரஸ் துரைசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். தரம் ஒன்றில் 30 மாணவர்களும், தரம் இரண்டில் 26 மாணவர்களும், தரம் மூன்றில் 30 மாணவர்களும், தரம் நான்கில் 12 மாணவர்களும், தரம் ஐந்தில் 31 மாணவர்களும் சித்தியடைந்திருந்தனர்.

ந்த நிகழ்வில் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துருவின் கலைமன்றம், ஸ்ரீமதி லலிதாஞ்சனா கதிர்காமனின் அமிர்தாலயா, வனிதா குகேந்திரனின் கலைக்கோயில், சிந்துஜா ஜெயராஜின் சிந்து கலைமன்றம், ஜலனி தயாபரனின் யாழ் நாட்டிய கலைமன்றம், கார்மிளா விக்னேஸ்வரமூர்த்தியின் கலை கார்மிளாலயம், அனுசியா ஜெயனின் சந்திரசேகரா நாட்டியக் கல்லூரி, நிந்துஜா நடேசனின் பரத கலைமன்றம் ஆகியவற்றின் மாணவ, மாணவிகள் பங்குபற்றிச் சிறப்பித்தனர். இதுவரை 26 நிருத்த நிறைஞர்களும், 8 ஆசிரியர்தர டிப்ளோமா பட்டதாரிகளும் கலைமன்றத்தின் பரீட்சையில் சித்தியடைந்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துருவின் கலைமன்றம், ஸ்ரீமதி லலிதாஞ்சனா கதிர்காமனின் அமிர்தாலயா, வனிதா குகேந்திரனின் கலைக்கோயில், சிந்துஜா ஜெயராஜின் சிந்து கலைமன்றம், ஜலனி தயாபரனின் யாழ் நாட்டிய கலைமன்றம், கார்மிளா விக்னேஸ்வரமூர்த்தியின் கலை கார்மிளாலயம், அனுசியா ஜெயனின் சந்திரசேகரா நாட்டியக் கல்லூரி, நிந்துஜா நடேசனின் பரத கலைமன்றம் ஆகியவற்றின் மாணவ, மாணவிகள் பங்குபற்றிச் சிறப்பித்தனர். இதுவரை 26 நிருத்த நிறைஞர்களும், 8 ஆசிரியர்தர டிப்ளோமா பட்டதாரிகளும் கலைமன்றத்தின் பரீட்சையில் சித்தியடைந்திருக்கிறார்கள்.

பரீட்சையில் சித்திபெற்ற நாட்டிய தாரகைகளான நிருத்தநிறைஞர்களுக்கும், பரதக்கலையைக் கற்பிக்கும் நடன ஆசிரியர்களுக்கும், கலைமன்றத்து அதிபர் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துருவிற்கும், ஆக்கமும் ஊக்கமும் தரும் பெற்றோருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.

maliniaravinthan@hotmail.com


 
aibanner

 ©©©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்