இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2010  இதழ் 130  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்
இணையத்தில் தமிழ்!

- முனைவர் துரை.மணிகண்டண் -


முனைவர் துரை.மணிகண்டண்25-8-2010 புதன் கிழமை திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூரி சிதம்பரபிள்ளை மகளிர் கல்லூரியில் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் நான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினேன். கல்லூரி முதல்வர் முனைவர் கி.சேகர் தலைமையில் கல்லூரித் தமிழ்த் துறைத்தலைவர் இரா.மணிமேகலை முன்னிலையில் பேசினேன். இணையத்தில் தமிழ் தோற்றம், இணைய அறிமுகம் மற்றும் தமிழ் மொழொயின் சிறப்பு,தமிழ் இணைய இதழ்களின் வளர்ச்சி, தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் தோற்றம் அவற்றில் உள்ள தமிழ் நூல்கள் ,தமிழ் மரபு அறக்கட்டளையின் பயன்பாடு குறித்தும் பேசப்பட்டது.

மாணவிகள் இணையத்தை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற காட்சிமுறையில் விளக்கிக் குறிப்பிட்டேன்.பலர் கேட்ட வினாவிற்குத் தெளிவானமுறையில் இணையத்தைக்கொண்டு பதில் கொடுத்தேள்ளேன்.

தமிழ்த்துறைப்பேராசிரியைகள் பலர் இது குறித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டனர். எம்மோடு பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பணியாற்றும் கணிதத்துறைப்பேராசிரியர் திரு. வீரமணியும் உடன் வந்திருந்தார்.

mkduraimani@gmail.com

********************
'பிலிப் டிவி' நடாத்திய குறும்படப் போட்டி முடிவுகள் பற்றி...

- வடிவேற்கரன் -


வணக்கம். 3 நிமிடத்துக்கு மேற்படாமலும் தரப்பட்ட 6 வசனங்களை மட்டுமே கொண்டதாகவும் பரலெல் லைன்ச் என்ற தலைப்பின் கீழ் பிலிப்ச் ரீவீ நிறுவனம் யூரியூப்புடன் இணைந்து நடத்திய குறும்படப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட படங்களில் 308 படங்களே போட்டிக்குத் தெரிவாகின.வணக்கம். 3 நிமிடத்துக்கு மேற்படாமலும் தரப்பட்ட 6 வசனங்களை மட்டுமே கொண்டதாகவும் பரலெல் லைன்ச் என்ற தலைப்பின் கீழ் பிலிப்ச் ரீவீ நிறுவனம் யூரியூப்புடன் இணைந்து நடத்திய குறும்படப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட படங்களில் 308 படங்களே போட்டிக்குத் தெரிவாகின.

தெரிவாகிய எனது இரண்டு படங்கள்:
http://www.youtube.com/watch?v=D56GWZAZa_Q&feature=channel

http://www.youtube.com/watch?v=DasIygYqFZk&feature=channel

308 படங்களைப் பார்க்கவும், அவற்றுள் கதையம்சம், தொழில்நுட்பம் என்பவற்றின் அடிப்படையில் தரமானவையாகத் தெரிந்தெடுக்கப்பட்ட 10 படங்களில் உங்களுக்குப் பிடித்த்துக்கு வாக்களிக்கவும்

http://www.youtube.com/philipscinemat தளத்துக்கு செல்லலாம்.
பலருக்கும் அனுப்பிவையுங்கள்.

vadivetkaran1953@aol.com

********************

'கம்யூனிஸ்ட்' கார்திகேயன் நினைவுகள்!
கம்யூனிஸ்ட் கார்திகேயன் மாஸ்டர்'இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் சிறந்த கல்விச் சிந்தனையாளருமாகிய கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அவர்களது மறைவின் 33வது வருட நினைவுகூரல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. லண்டனில் நீண்டகாலமாக வாழ்ந்து தற்போது யாழ் சென்று பணிபுரிகின்ற சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையின் மூன்று சமூகங்களில் இருந்தும் பேச்சாளர்கள் கொம்யுனிஸ்ற் கார்த்திகேயனின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்வை கொம்யுனிஸ்ற் கார்த்திகேயன் அறக்கட்டளை நிதியம், இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், யாழ் ஆய்வறிவாளர் அணியம் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

காலம்:
19.09.2010 ஞாயிறு மாலை 3.30 மணி.

இடம்: யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடம்,
(யாழ் பிரதம தபாலகத்திற்கு அருகில்)
கே.கே.எஸ். வீதி,
யாழ்ப்பாணம்.

தலைமை: திரு ரெங்கன் தேவராஜன், வழக்கறிஞர்.

பேச்சாளர்கள்:
திரு எஸ்.ஜி.புஞ்சிகேவா, வழக்கறிஞர்.
திரு எம்.ஜி.பசீர், ஜே.பி, யாழ் மாநகர முன்னாள் துணை முதல்வர்.
கலாநிதி செல்வி திருச்சந்திரன், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன பணிப்பாளர்.
திரு வீ.சின்னத்தம்பி, இளைப்பாறிய ஆசிரியர்.

ஏற்பாட்டாளர்கள்:
கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியம்
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
யாழ் ஆய்வறிவாளர் அணியம்,
த.பெ.இலக்கம் 165,
யாழ்ப்பாணம்

தகவல்: ஆர் குகதாசன்
http://thesamnet.co.uk/?p=22184

பதிவுகளுக்கு அனுப்பியவர்: விசாகப்பெருமாள் வசந்தன்
visagaperumal_vasanthan@yahoo.co.uk

********************

பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்.... "சொல் புதிது" இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
விக்டர் யூகோ அரங்கில் விமரிசையாக எதிர்வரும் செப்.19ம்தேதி நடைபெறவுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து விழா தலைமையை பாரீஸ் அலன் ஆனந்தன் அவர்களும் வரவேற்புரையை பொன்னம்பலம் நிகழ்த்த முன்னிலையை கிருபானந்தன் வகிக்க வாழ்த்துரையை மரியதாஸ், மதிவாணன், ஓஷ் இராமலிங்கம், அண்ணாமலை பாஸ்கர், இலங்கைவேந்தன், சிவாஜி,முத்துக்குமரன், பாரீஸ் பார்த்தசாரதி ஆகியோர் வழங்கவுள்ளனர்.

கவிதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா
சாகித்திய அகாதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினரும் கவிஞர்,கலை விமர்சகர்,மொழிபெயர்ப் பாளருமான எழுத்தாளர் கவிஞர் இந்திரன்வாழ்த்துரைகளைத் தொடர்ந்து கவிமலரை பாரீஸ் கவிஞர் கணகபிலனார் வழங்குகிறார் ஒரிய கவிஞர் முனைவர் மனோரமா பிஸ்வாஸ் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு ஸ்ட்ராஸ்பூர் நகரசபைத் தலைவர் துணை மேயர் தனியல் பயோ தலைமை தாங்கிடவும் சாகித்திய அகாதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினரும் கவிஞர்,கலை விமர்சகர்,மொழிபெயர்ப் பாளருமான எழுத்தாளர் கவிஞர் இந்திரன் ஸ்ட்ராஸ்பூர் அருட்தந்தை மறைதிரு.ழெரார், திருமதி குரோ, திருமதி மனெ, திருவாளர்கள் தெபல் சவியெ, குப்தா ஆகியோர் பங்கேற்கவும் உள்ளனர்.

அறமும் தமிழும்...
ஓவியக்கலைஞர் ஏ.வி.இளங்கோ தமிழ் கூறும் நல்லுலகம் தலைப்பிலான அரங்கிற்கு இலண்டன் பதிப்பாளர் பத்மனாப அய்யர் தலைமை தாங்க, ஓவியக்கலைஞர் ஏ.வி.இளங்கோ அவர்கள் முன்னிலையில் அறமும் தமிழும் என்ற தலைப்பில் தளிஞ்சான் முருகையன், காதலும் தமிழும் என்ற தலைப்பில் புலவர் பொன்னரசு,கலையும் தமிழும் என்ற தலைப்பில் திருமதி லூசியா லெபோ, அவர்களும்,பொருளும் தமிழும் என்று புலவர் பாலகிருஷ்ணன், தருக்கமும் தமிழும் என்ற தலைப்பில் நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரும் உரையாற்றுகின்றனர். இதனைத் தொடர்ந்து சாகித்திய அகாதமி உறுப்பினர் கவிஞர் இந்திரன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

பட்டிமன்றம்...
தொடர்ந்து பட்டிமன்றம் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமையில் நடைபெறுகிறது. "கோவலன் தலை சிறந்தவனே" என்ற அணியின் சார்பில் பாரீஸ் அடியார்க்கன்பன் கோவிந்தசாமி ஜெயராமன்,ஸ்ட்ராஸ்பூர் கியோம் துமோன்,பாரீஸ்அறிவழகன் ஆகியோரும்,

"கோவலன் நிலை இழிந்தவனே" என்ற அணியின் சார்பில்
பாரீஸ் கவிதாயினி பூங்குழலி பெருமாள் அவர்களும்,ஸ்ட்ராஸ்பூர் திருமதி இராஜ்ராஜேஸ்வரி பரிஸ்ஸோ அவர்களும், திருமதி உஷாதேவி நடராசன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

இறுதியாக தமிழ்ச் சோலை சிறார்களின் நடனமும் மெல்லிசை விருந்தும் நிகழவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு ஏற்பாட்டாளர்கள் நாகரத்தினம் கிருஷ்ணா(03 88 32 83 93),கிருபானந்தன்(03 88 81 65 61), பொன்னம்பலம் வடிவேலு
(03 88 79 08 36) ஆகியோரை அடைப்புக்குறிக்குள் உள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு நிகழ்வின் விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

செய்தி:ஆல்ப‌ர்ட்,அமெரிக்கா
albertgi@gmail.com


********************

எழுத்தாளர் மட்டுவில் ஞானகுமாரன்
கனடாவில்...

எழுத்தாளர் மட்டுவில் ஞானகுமாரன் தற்போது கனடாவிற்கு வந்திருக்கின்றார். தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான எழுத்தாளர்களிலொருவர். 'பதிவுகள்' வாசகர்களுக்கு இவர் மிகவும் அறிமுகமானவர். இவரது சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் பல 'பதிவுகள்', 'வீரகேசரி', 'தினக்குரல்', 'ஞானமெ'னப் பலவேறு சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. தமிழ் கவிஞர் வட்டத்தின் (தகவம்) 2008 ம் ஆண்டின் முதல் காலாண்டின் சிறந்த சிறுகதைக்கான விருது, வீரகேசரியில் வெளியான இவரது 'பள்ளிக் கூடம்' சிறுகதைக்குக் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இங்கு அவர் சக எழுத்தாளர்களை, இலக்கிய ஆர்வலர்களைச் சந்திப்பதற்கு ஆர்வமாகவுள்ளார். அவருடன் தொடர்பு கொள்ள விரும்புவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்: தொலைபேசி இலக்கம் - 647-200-1420. அவரது மின்னஞ்சல் முகவரி:
maduvilan@hotmail.com.

********************

திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா!
திலகபாமாவின் 'கழுவேற்றப்பட்ட மீன்கள்' நாவல் விமரிசன விழா!19.9.10 அன்று சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா நடைபெற்றது. அதில் இராஜேஸ்வரி வரவேற்புரை வழங்க கவிஞர் அமிர்தம் சூர்யா நிகழ்வை தொகுத்து வழங்க நடைபெற்றது. இதில் நாடக ஆசிரியர் விஜயேந்திரா, கவிஞர் மனுஷிஇ பேராசிரியர் மோஹன் குமார்இ நாவலாசிரியர் பா.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தமிழச்சி தங்கப் பாண்டியன் நூலை வெளியிட நாவலாசிரியர் சோ. தர்மர் நூலை பெற்றுக் கொண்டார். தமிழச்சிதங்கப் பாண்டியன் சிறப்புரை நிகழ்த்த விழா விமரிசன விழாவாகவே நடந்தது.விமரிசகரும்இ பேராசிரியருமான சி. கனகசபாபதியின் துணைவியாரின் 77 வயது பிறந்த நாள் விழாவும் அவரது இலக்கிய செயல்பாடுகளை நினைவு கூறுவதன் மூலம் கொண்டாடப்பட்டது.


திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா

அனுப்பியவர்: தி.பாமா mathibama@yahoo.com

********************

தேடகம்
தோழர் சிவம் நினைவுக்கூட்டம்

தேடகம்தோழர் சிவம்
தோழமையின் தடம்
நினைவு பேருரை :- சி . கா. செந்திவேல் (இலங்கை )
இடம் ;-
Scarborough Village Rc
3600 kingston road @ ( markham )

காலம் ;- 02-10 -2010 சனிக்கிழமை
4.30 மணிக்கு

அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்
தேடகம்

thedakam@gmail.com

********************

டென்மார்க் நாட்டில் நூல் அறிமுகமும் புத்தகக் கண்காட்சியும் - வி. ரி. இளங்கோவன் -
டென்மார்க் நாட்டில் நூல் அறிமுகமும் புத்தகக் கண்காட்சியும்டென்மார்க் நாட்டில் தமிழ் இலக்கிய நூல்களின் அறிமுகவிழாவும், புத்தகக் கண்காட்சியும் நடைபெறவுள்ளன. இம்மாதம் 10 -ம் திகதி (10 - 10 - 2010) ஞாயிறு டென்மார்க் விஜென் (எநதநn) நகரில் நடைபெறவுள்ள இவ்விழாவில் கலையரசன் எழுதிய 'ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா", வி. ஜீவகுமாரன் எழுதிய 'யாவும் கற்பனை அல்ல", வேதா இலங்காதிலகம் எழுதிய 'உணர்வுப் பூக்கள்" த. துரைசிங்கம் எழுதிய 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்" உட்பட மற்றும் சில நூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன், ஜீவகுமாரன், பௌசர், வேதா இலங்காதிலகம், கரவைதாசன் உட்படப் பலர் கருத்துரை வழங்கவுள்ளனர். ஈழத்து எழுத்தாளர் பலரின் நூல்கள், சஞ்சிகைகள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

டென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் 'இனி" சஞ்சிகை - இணையத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து 'கலையகம்" வாசகர் வட்டம், பாரிஸ் 'முன்னோடிகள்"; இலக்கிய வட்டம் சார்பில் இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் கலை இலக்கிய இரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.

டென்மார்க் நாட்டில் நூல் அறிமுகமும் புத்தகக் கண்காட்சியும்

vtelangovan@yahoo.fr

********************

பாரிஸ்: அக்டோபர் 16, 2010
ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் பெருமையுடன் வழங்கும் படைப்பாளிகள் கலந்து சிறப்பிக்கும் இரு நிகழ்வுகள்!

யமுனா ராஜேந்திரன்லெனின் சிவம்

'புத்தனின் பெயரால் : திரைப்பட சாட்சியம்' என்னும் ஈழத்துப் போராட்டக் காலத்தின் சினிமா பற்றிய விவரண நூலினை எழுதிய யமுனா ராஜேந்திரன், மற்றும் 1999 ஆங்கிலத் திரைப்படத்தினை இயக்கிய லெனின் சிவம் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்வுகள்

ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் பெருமையுடன் வழங்கும் படைப்பாளிகள் கலந்து சிறப்பிக்கும் இரு நிகழ்வுகள்!

தகவல்: யமுனா ராஜேந்திரன் rajrosa@gmail.com
.


 
aibanner

 ©©©©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்