இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூலை 2007 இதழ் 91  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அறிவித்தல்!
மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்!

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இம்மாத நடுப்பகுதியில், றிஷானா நபீ£க்கின் மேல்முறையீடு காலாவாதியாகிறது. இதுவரை இவரைப்பாது காக்கக் கூடியவிதமான எந்த நடவடிக்கையும் இலங்கை அரசாங்கம் உருப்படியாக முன்னெடுக்கவில்லை என்று ஆசிய மனித உரிமைச்சங்கத்தின் முது அதிகாரியான பசில் பெர்னான்டோ தெரிவிக்கிறார். பல பத்திரிகைகளின் செய்திகளின்படி, இந்த ஏழைப்பெண்னின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்தின் கடைமையாயிருந்தும் இதுவரையும் இந்தப்பெண்னின் அப்பீல் வழக்கு சம்பந்தமாக எந்தவிதமான துரித நடவிடிக்கையும் எடுக்கப்படவில்லை.அப்பீல் வழக்குக்கு இலங்கைப்பணத்தின்படி Rs 60.000 தேவைப்படுகிறது. மூதுரைச்சேர்ந்த இந்த இளம் பெண்னின் பெற்றோர்களால் இந்தப் பெரிய தொகையைத் திரட்டுவதும் அப்பீல் வழக்குக்கு ஒரு சட்டவல்லுனரை அமைப்பதும் அவர்களால் முடியாத விடயம் என்று கதறி அழுகிறார்கள். ஆசிய மனித உரிமை அமைப்பின் முது அதிகாரி பசில் பெர்னாண்டோ,சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை ஸ்தானிகராலயத்தைத் தொடர்பு கொண்டு, இந்தப்பெண்ணின் நிலைக்கு இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று விசாரித்தபோது, தாங்கள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இதுவரையும் ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டதாக அறிவித்திருக்கிறார்.

அப்பீல் செய்வதற்குத் தேவையான பல அத்தாட்சிகள் இருப்பதாக ஆசிய மனித உரிமைச்சங்கம் சொல்கிறது.

-இந்தப் பெண் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்பட்ட 2005ம் ஆண்டு இவருக்கு 17 வயதாகும்.
-அகில உலகச்சட்டத்தின்படி, இப்படி இளம் பெண்களை அயல்நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவது பாரிய குற்றமாகும்.
-தான் இந்தக் கொலையைச் செய்ததாக றிஷானா நபீக் வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தெரியாத மொழியில் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.
- றிஷானா தனது வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தேவையான சட்ட உதவிகள்(Legal assistance) கொடுக்கப்படவில்லை.
- றிஷான தான் முதலில் கொடுத்த வாக்குமூலம் தவறானது என்று வாக்கு மூலத்தை வாபஸ் பண்ணச் சொல்லிக்கேட்டிருக்கிறார், அதாவது குற்றம் சாட்டியபடி தனது பாதுகாப்பிலிருந்த குழந்தையைத் தான் கொலை செய்யவில்லை என்று கூறிருக்கிறார். குழந்தையின் மரணத்திற்குப் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தைக்குத் தொண்டையில் பால் சிக்கித் திணறி (Chacking) இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.
- கொலைக் குற்றம் சாட்டப்பட முதல் அவர் தனது வாக்கு மூலத்தில் தன்னை வேலைக்கு வைத்த குடும்பத்தினர் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக றிஷானா வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.
- இவரைக் குற்றவாழியாகக் காட்ட அவரது வாக்குமூலம் மட்டும் ( அவருக்குத் தெரியாத மொழியில் நடத்தப்பட்ட வழக்கு) உபயோகிக்கப்பட்டிருக்கிறது, அவருக்கான சட்டப் பாதுகாலர்களின் உதவி இருந்திருக்கவில்லை.

மூதுரில் உள்ள ஏழை முஸ்லிம் குடும்பத்தைச்சேர்ந்த றஷினா நபீக், அவ்வூரில் உள்ள சபீக் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த றிஷானா நபீக். குடும்ப வறுமை காரணமாக சவூதிக்கு வேலைக்குச் சென்றார். அந்தப்பெண் தனது வீட்டாருக்கு எழுதிய கடிதத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக எழுதியிருந்தாள். வீட்டு வேலைகளுடன் பத்துக்குழந்தைகளையும் பார்க்கும் பொறுப்பு என்னிடம் சுமத்தப்பட்டிருக்கிறது. காலையில் மூன்று மணிக்கு எழுந்து இரவில் நீண்ட நேரம் வரையும் ஓயாமல் வேலை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததாக BBC நிருபரின் செய்தியொன்று சொல்கிறது.

அன்னிய நாடுகளில் கொடுமைசெய்யப்படும் குடும்பங்களில் றிஷானா போன்ற பல பெண்கள் பல விதமான கொடுமைகளை அனுமவிக்கிறார்கள். அடி உதை, பாலின வதைகளுக்கு முகம் கொடுக்கும் இலங்கைப் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். 500.000 பெண்கள் வேலைக்காரிகளாக அயல் நாடுகளில் அவதிப்படுகிறார்கள்.தங்களின் வறுமையைப் போக்க, தங்களின் குடும்பத்தைப் பாதுகாக்க வெளி நாடுகளுக்கு வேலை தேடிச்செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஏழைப்பெண்களுக்கு சட்ட ரீதியாக எந்தப்பாதுகாப்பும் கிடையாது. வயதுக் கட்டுப்பாடு கிடையாது. குடும்ப நிலை பார்க்கப்படுவதில்லை. அதாவது வேலைக்குப்பொகும் பெண் ஒரு இளம் தாயா அல்லது பல குழந்தைகளுக்குத் தாயா என்றெல்லாம் பார்ப்பதில்லை. வேலைக்குப்போவோரின் மனநிலை பற்றிய எந்தவிதமான கணிப்பும் கிடையாது. குழந்தை பராமரிப்புக்குப்போவோருக்கு உருப்படியான பயிற்சி கொடுபடுவதில்லை.இதைப்பற்றி இலங்கை வெளிவிவகார அதிகாரிகள் கவலைப்படுவதாகவும் தெரியாது.

இந்தப்பெண்னை அனுப்பிய ஏஜென்சியிடம் (திரு. சவுல் லதிப்) விசாரித்தபோது' வயது விவகாரங்களை மாற்றிப் பாஸ் போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்குப் போவது இலங்கையில் சாதாரணமாக நடக்கும் விடயமெனச் சொல்லியிருக்கிறார். இலங்கையிற் தொடரும் போர்ச் சூழ்நிலை அதிலும் கிழக்குப்பகுதியில் நடக்கும் தொடர்ந்த தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் என்பன மக்களை மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளி¢ விட்டிருக்கிறது. வறுமையால் வயிற்றுப்பிழைப்புக்கு வெளிநாடு செல்லும் ஏழைப்பெண்களின் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது. சவூதி அரேபியா மட்டுமல்லாமல் மத்திய தரைக்கடல் நாடுகள், தென்னாசிய நாடுகள் பலவற்றில் எங்கள் நாட்டுப்பெண்கள் பணிப்பெண்களாகச் சென்று கோடி கோடியான வெளிநாட்டு செலவாணியை இலங்கைக்கு எடுத்துக் கொடுக்கிறார்கள்.இலங்கையில் உள்ள ஊழல் ஆட்சியில் இப்படியான கொடுமைகள் விஷவிருட்சமாக வளர்ந்து நாட்டிலுள்ள பல சமுதாயங்களையும் அல்லற் படுத்துகிறது. இலங்கை அரசாங்கம் வெளிநாடு செல்லும் பணிப்பெண்களைப்பற்றியோ அவர்களின் தகுதியோ பற்றியோ பெரிய அக்கறை எடுக்கவில்லை என்பது இந்த வழக்கு விவகாரத்திலிருந்து தெரிய வருகிறது. நான்கு மாதக் குழந்தையை றிஷானா கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஆனால் குழந்தைக்குப் பாலூட்டும்போது குழந்தையின் தொண்டையில் பால் சிக்கித் திமிறியபோது குழந்தையின் நிலைக்கு நிவாரணம் தேடக் குழந்தையின் கழுத்தைத் தடவியதாக றிஷினா நசீக் தனது வாக்குமூலத்தில் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. 4 மாதக் குழந்தைக்குச் சரியாகப் பாலூட்டும் அனுபவம் 17 வயதுப் பெண்ணுக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே. இறந்த குழந்தை சரியாகப் பால் குடிக்க முடியாத நிலையில், அதாவது வேறு வருத்தகாரணமாகச் சோர்ந்த்திருந்ததா அதனால் பால் தொண்டையில் சிக்கித் திணறியதா என்ற விசாரணை ஏதும் நடத்தப்பட்டதா என்பதும் தெரியாது.

றிஷானா நபீக் என்ற ஏழைப்பெண் இலங்கையிலிருந்து 4.05,05ல் சவூதி போயிருக்கிறார். 7.06.05ல் ( 33 நாட்களின் பின்) இலங்கை ஸ்தானிகராலயத்திற்கு றிஷானா நபீ£க் பராமரித்த குழந்தை இறந்த கொலை விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. றிஷானா நபீக்கின் பிறந்த நாள்ச் சேர்ட்டிபிக்கட்டின்படி, கொலை நடந்த கால கட்டத்தில் அவரின் உண்மையான வயது 17 ஆகும்( 04.02.1988). ஆனால் அவரின் பாஸ்போர்ட்டின் (02.02.1982)படி அவரின் வயது 23 (என்று சொல்லப்படுகிறது. இப்படிப் பொய் ஆவணங்களையுண்டாக்கி ஆள் சேர்ந்த்து வெளிநாடு அனுப்புவது பற்றி இலங்கை அரசாங்கம் கண்மூடித்தனமாக இருப்பதற்கு றிஷானா நபீ£க் போன்ற ஏழைப் பெண்களின் வாழ்க்கை பாழாவதை மனித உரிமை விடயங்களில் அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பது மிகவும் அவசியம். வீட்டு வேலைகளுக்கு என்று சொல்லிவிட்டு குழந்தையைப் பராமரிப்பதுபோன்ற வேலைகளில் வயதும் குழந்தையைப் பராமரிக்கும் அனுபமவும் இல்லாதவர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜான்சிக்காரர்களும் அவர்களைக்கண்டும் காணாதமாதிரி ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கமும்தான் கூண்டில் நிறுத்தப்படவேண்டிய பெரிய குற்றவாளிகள்.

இலங்கையின் ஏற்றுமதியில் முக்கிய மூலதனம் எங்கள் நாட்டு ஏழைப்பெண்களின் உழைப்பாக்கும். இந்தப் பெண்கள் பலைன் இவர்களின் உழைப்பை வைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகள், மந்திரிகள் என்போருக்கு எதிராகக் குரல் கொடுப்பது மனித உரிமையில் அக்கறை கொண்ட அத்தனைபேரினதும் கடமையாகும். றிஷாவின் விடுதலைக்கு உதவ நல்ல மனிதர்களின் முயற்சி கிடைத்தால் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்.

றிஷானா நபீக்கைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய இறந்த குழந்தையின் பெற்றோரின் மன்னிப்புக் கிடைத்தால் மட்டுமே றிஷானா நபீக்கு விடுதலை கிடைக்கும். இறந்த குழந்தையின் பெற்றோர் றிஷானாவை மன்னித்தால் கடவுள் றிஷானை மன்னிப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை என்பதால் குழந்தை இறந்ததற்குச் சரியான காரணங்களைக் கண்டறியாமல் வறுமை காரணமாகத் தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்த ஏழைப்பெண்ண்ணில் பழிபோட்டு அவளின் தலயைவெட்டி மரணதண்டனை கொடுக்கச் சொல்வது மனித தர்மமல்ல.

ஒரு இளம் பெண்(பதினேழு வயது) ஒரு பணக்கார வீட்டில் வேலைக்கு வருகிறாள். தன்னை அந்த வீட்டுத் தலைவி மிகக் கொடுமையாக அடித்து உதைத்துக் கொடுமை செய்திருக்கிறாள். நான்குமாதக்குழந்தை இளம் பெண்ணின் பரமரிப்பில் விடப்படுகிறது. வேலை சரியாகச்செய்யத் தெரியாது என்று அடிபோடும் வேலைக்காரியிடம் குழந்தையின் பராமரிப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின் ஒருமாதத்தின்பின் அந்த இளம் பெண் கொலைகாரியாக்கப்படுகிறாள். அதன்பின் அந்த வீட்டுத் தலைவி , வேலைக்கார இளம் பெண்ணின் உயிர்போகவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்பதின் பின்னணியில் எத்தனையோ விடயங்கள் அடங்கியிருக்கலாம் என்பதை ஊகிக்கத் தோன்றுகிறது. அந்த வீட்டில் நடந்த உண்மையாகப் பல விடயங்கள் பின்னணி தெரியாமல் ஒரு உயிர் போவதைத் தடுப்பது நியாயத்திற்குப்போராடும் ஒவ்வொருத்தர்ன் பணியென நினைக்கிறேன்.

குழந்தையின் தாய் தகப்பனின் கருணை கிடைத்தால் மட்டுமே றஷினா நபீக் விடுதலை செய்யப்படுவார் என்பதால் இறந்த குழந்தையின் பெற்றோரின் கருணையைக் கேட்டுக் கடிதம் எழுதும்படி மிக மிகப் பணிவாகவும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன். எத்தனை கடிதங்கள் போகின்றனவோ அவ்வளவுக்கு நாங்கள் அந்தப் பெண்ணுக்கு உதவுவோம்.

இறந்த குழந்தையின் தாய் தகப்பன், றிஷானா என்ற இளம் பெண்ணுக்குக் கருணை காட்டி மன்னிப்புக் கொடுப்பதற்கு இறைவன் துணைபுரிய எங்கள் உளமார்ந்த பிரார்த்தனைகளைச் செய்வோம். காலம் தாழ்தாமல் உடனடியாகச் சிலவரிகள் எழுதி எ இமெயில் மூலமாகவோ fபக்ஸ் மூலமாகவோ அனுப்புங்கள்.

தயவு செய்து,உங்கள் கடிதங்களை உடனடியாக அனுப்பவும்.

Father of the dead child,(re Rizana Nafeek)
Mr. Naif Jiziyan Khalaf Al Otaibi
c/o, Sri Lankan Embassy,
Po Box,94360
Riyadh-11693
Soudi Arabia

Fax.00 9661 460 8846, e mail--. lankaemb@sabakah.net.sa


என்ற விலாசத்திற்கு அனுப்பவும். இன மத மொழி பேதமின்றி இந்த ஏழைப்பெண்ணுக்கு உதவுவோம். கடிதம் எழுத எடுக்கும் ஒரு சிறு நேரப் பணி ஒரு உயிரைக்காப்பாற்றும் என்பதை மனதில் வைக்கவும். ஆற அறிந்து வழங்குவதே உண்மையான நீதி என்பதைத் தர்மமாகப் படித்த சமுதாயத்திலிருந்து வந்த நாங்கள் றிஷானா நபீக் என்ற பெண்ணுக்குச் நீதி கிடைக்க உதவுவோம்.

rajesbala@hotmail.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner