இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2010  இதழ் 132  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல்!

கனடியச் சிறுபான்மையினப் படைப்பாளிகள் கவனிக்க!
பல்லினச் சமூகமும், கனடிய இலக்கியமும்!
- வ.ந.கிரிதரன் -

கனடா ஒரு பல்சமூகங்கள் வாழும் நாடு. ஒவ்வொரு வருடமும் சுமார் 200,000 வரையிலான புதிய குடியேற்றவாசிகள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கனடாவுக்குக் குடிபெயர்கின்றார்கள். இவ்விதமாகக் குடிபெயரும் குடியேற்றவாசிகளில் பெரும்பாலானவர்கள் டொராண்டோ , மான்ரியால் போன்ற மாநகரங்களிலேயே தங்கிவிடுகின்றார்கள்கனடா ஒரு பல்சமூகங்கள் வாழும் நாடு. ஒவ்வொரு வருடமும் சுமார் 200,000 வரையிலான புதிய குடியேற்றவாசிகள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கனடாவுக்குக் குடிபெயர்கின்றார்கள். இவ்விதமாகக் குடிபெயரும் குடியேற்றவாசிகளில் பெரும்பாலானவர்கள் டொராண்டோ , மான்ரியால் போன்ற மாநகரங்களிலேயே தங்கிவிடுகின்றார்கள். இதற்கு முக்கியமான காரணங்களில் சில ... மேற்படி நகரங்களில் பல்வேறு இனமக்கள் நீண்ட காலமாகக் குடியேறி வாழ்ந்து வருவதால் இம்மாநகரங்களில் 'குட்டி இந்தியா'( Littel Indai), 'சைனா டவுண்' (China Town), 'குட்டி இத்தாலி' (Littel Italy)... இவ்விதமாகப் பல்வேறு மக்களுக்குமுரிய அடையாளங்களைப் பிரதிபலிக்கும் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் போன்றவற்றைக் காணலாம். இதனால் இங்கு புதிதாகக் குடிபெயரும் வேற்றினத்து மக்கள் ஏற்கனவே அதிக அளவில் பிறதேசங்களிலிருந்து வந்த குடிவரவாளர்களால் நிறைந்திருக்கும் மேற்படி நகரங்களில் வாழும்போது தத்தமது சொந்த நாடுகளில் வாழுவதைப் போன்றதொரு இயல்பான உணர்வினை அடைகின்றார்கள். ஏற்கனவே இங்கு வாழும் தம்மினத்தைச் சேர்ந்த கனடியர்கள் மூலம் வேலை வாய்ப்பு போன்ற பல்வகையான உதவிகளை, தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றார்கள். வணங்குவதற்குரிய அவர்கள் பின்பற்றும் சமயஸ்தலங்கள், நோய்தீர்க்க வைத்தியர்கள், சட்டரீதியிலான பிணக்குகளைத் தீர்க்கச் சட்டவல்லுநர்கள்.. எனப் பல்துறைகளிலும் வசதிகளுள்ளன. இவ்விதமாகக் கனடாவுக்குக் குடிபெயரும் புதிய குடியேற்றவாசிகள் காலப்போக்கில் கனடியவாசிகளாகிவிடுகின்றார்கள். இவ்விதமாகக் கனடிய சமூகத்தில் பல்லினமக்கள் வாழ்ந்தபோதும் கனடிய இலக்கியம் என்றதும் , கனடாவின் உத்தியோக மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியவற்றில் வெளிவரும் படைப்புகளையே பிரதானமாகக் கருதுகின்றார்கள். ஏனைய மொழிகளில் வெளிவரும் இலக்கியப் படைப்புகளைப் பற்றிப் பெரிதாக யாரும் கவனமெடுப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் எழுதினால் மட்டுமே கவனிக்கின்றார்கள். நீண்ட காலமாகக் கனடாவில் தமிழில் எழுதிவரும் எழுத்தாளன், சிறுபான்மைக் கனடியன் என்ற நோக்கில் கனடாவின் இலக்கியம் பற்றி ஓரளவுக்கு ஆராய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம்.

கனடிய இலக்கியம் என்றால் என்ன?
கனடிய இலக்கியம் என்றால் ஆங்கில மற்றும் பிரெஞ்சு இலக்கியம் மட்டுமல்ல. ஏனென்றால் கனடா ஒரு பல்-கலாச்சார நாடு. பல்மொழியினரும் வாழும் நாடு. கனடாவின் உத்தியோக மொழிகள் ஆங்கிலமும், பிரெஞ்சும். ஆனால் ஏனைய இனத்தைச் சேர்ந்த கனடியர்களுடைய மொழிகள் உத்தியோக மொழிகள் இல்லாவிட்டாலும் அவர்களது கலை, இலக்கியங்களெல்லாம் கனடாவின் கலை, இலக்கியத்தின் பகுதிகளே. ஆனால் இங்குள்ள சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கனடிய எழுத்தாளர்கள் படைக்கும் படைப்புகளையெல்லாம் இங்குள்ள கலை, இலக்கிய அமைப்புகள் (அரசு சார்ந்த , சாராத) கனடிய இலக்கியத்தின் அங்கங்களாகக் கருதுவதாகத் தெரியவில்லை. அவ்விதம் கருதினால் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த கனடிய இலக்கியவாதிகளால் தத்தமது தாய்மொழிகளில் படைக்கப்படும் இலக்கியப் படைப்புகளையும் கனடிய அரசின் அங்கங்களான நடுவண் அரசு, மாநில அரசு, மாநகர அரசு ஆகியவற்றைச் சேர்ந்த கலை, இலக்கிய ஆலோசனைச் சபைகள் (Toronto Arts Council, Ontario Arts Council போன்ற) ஆங்கிலம், பிரெஞ்சு தவிர்ந்த ஏனைய மொழிகளில் எழுதப்படும் படைப்புகளையும் கனடிய இலக்கியத்தின் முக்கிய பகுதிகளாக அங்கீகரித்து, அவற்றைக் கனடாவின் பிரதான உத்தியோக மொழிகளான ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகியவற்றிற்கு மொழிபெயர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு நிதியுதவி போன்ற விடயங்களில் உதவிட வேண்டும். அவர்களிடன் கேட்டால் இவற்றிற்குத் திட்டங்கள் ஏற்கனவே உள்ளன என்ற காரணத்துடன் பொதுவான பதிலொன்றைத் தருவார்கள். ஆனால் நடைமுறையிலுள்ள நிபந்தனைகள் சிறுபான்மையினப் படைப்பாளிகள் தத்தமது தாய்மொழிகளில் படைக்கும் படைப்புகளுக்கு , கனடாவின் உத்தியோக மொழிகளில் படைக்கப்படும் படைப்புகளுக்கு உள்ளதைப்போன்று இலகுவாக உதவும் வகையில் இருப்பதில்லை. இதற்கு முதற்படியாக சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கனடிய எழுத்தாளர்களின் படைப்புகளை பல்மொழிகளுக்குரிய படைப்புகளைச் சேகரித்து கடனாகக் கொடுக்கும் நூலகங்களின் பிரிவுகள் மேற்படி கனடிய எழுத்தாளர்களின் படைப்புகளை நேரடியாகவே வாங்குவதற்கு வழிவகைகளைச் செய்ய வேண்டும். செய்கின்றார்களா?

நூலகங்களும், பன்மொழிப் பிரிவுகளும், தேர்வுச் செயற்பாடுகளும் பற்றி ...
இதற்கு ஒரு சிறிய வரலாற்றுக் கதையினைக் (!?) கூறவேண்டும். இது பற்றி இங்குள்ள டொரண்டோ பொதுசன நூலகத்தின் பிரதான அலுவலகத்திற்குக் கடிதமொன்றினை 1996 கோடை காலத்தில் எழுதியிருந்தேன். அதில் சிறுபான்மையினக் கனடிய சமூகத்தைச் சேர்ந்த படைப்பாளிகளும் கனடியர்களே. கனடியர்களான அவர்கள் படைக்கும் படைப்புகளும் கனடிய இலக்கியத்தின் ஒரு பகுதியே. எனவே அவர்களது நூலுருப் பெறும் படைப்புகளை நூலகங்கள் பல்மொழிபிரிவுகளுக்காக வாங்கவேண்டும். கனடாவின் பல்வேறு பிரதான நகரங்களிலுமுள்ள , பல்மொழிப் பிரிவுகளை உள்ளடக்கிய நூலகக் கிளைகள் நூற்றுக் கணக்கிலுள்ளன எனக் கருதுகின்றேன். உதாரணத்திற்கு நூறு நூலகக் கிளைகள் ஒரு படைப்பாளியின் நூல்களில் இரு பிரதிகளை வாங்குமென்றால், அது படைப்பாளிகள் தங்களது படைப்புகளை மேலும் மேலும் வெளியிடுவதற்கு உதவியாகவிருக்கும். அக்கடிதத்தில் கனடியர்களல்லாத பிற நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையெல்லாம் வாங்கும் நூலகங்கள் கனடியர்களான சிறுபான்மையினக் கனடியர்கள் கனடாவிலிருந்துகொண்டு படைக்கும் நூல்களையும் வாங்கவேண்டுமென்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு மே 8 , 1996 திகதியிடப்பட்ட கடிதமொன்றினை டொராண்டோ நூலகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான (Chief Executive Officer) Gabriele Lundeen என்பவர் பதிற் கடிதமொன்றினை , 281 Front Street East முகவரியிலிருந்து, அனுப்பியிருந்தார். அக்கடிதத்தின் பிரதியியொன்றினை 'நூற் சேகரிப்பு நிர்வாகியான' சூசன் கரோன் (Susan Caron) என்பவருக்கும் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் என் கேள்விக்குப் பதிலளித்த பிரதான நிர்வாக அதிகாரி பின்வருமாறும் குறிப்பிட்டிருந்தார்:

'Toronto Public Library often buys local authors' books for the multilingual collections. As you probably know, we have Tamil collections at three of our branch libraries and we would be happy to purchase local authors' books for the collections, if they fall within our selection guidelines. Our multilingual collections consists of popular well- known fiction, including romance, suspence and some classics; and non- fiction topics such as current events, health care, basic history and geography of the home country, folk tales, biographies of prominent people, hobbies, and so on. Titles within these categories will be considered for purchase. .........

Authors may submit one copy of a title, along with an invoice, and our Tamil Language selector will asess it according to our collections needs. Our Acquisitions Department will then contact the author to arrange payment, or to return the item to him/her. Authors may contact Ms. Parveen Inam, Multilingual Collections Assistant, in the Acquisitions Department , for further information, at 393-7760.

I am sure that the other Metropolitan Toronto Library systems have similar procedures for purchaseing local authors' titles, and encourage you to contact them as well. Best wishes in your future endeavours.'

மேற்படி கடிதம் ஒரு பொதுவான பதிற் கடிதம். மேற்படி கடிதமே இவர்களது திட்டங்களிலுள்ள குறைபாடுகளையும் தோலுரித்துக் காட்டுகிறது. அவர் குறிப்பிட்டவாறு பலவகையான பிரிவுகளில் தமிழ் நூல்கள் இங்குள்ள நூலகங்களிலுள்ளன. ஆனால் அவையெல்லாம் மேற்படி நூலகப் பிரிவுகளால் வாங்கப்பட்டவை. அவ்வகையான நூல்களில் பெரும்பாலானவற்றை (அன்றைய காலகட்டத்தில்) எழுதியவர்களான பாலகுமாரன், நாஞ்சில் பி.டி.சாமி, ரமணிசந்திரன், சாண்டிலயன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஸ்குமார், சுபா, காஞ்சனா ஜெயதிலகர் .. இவர்கள் போன்ற தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களெல்லாரும் (!?) தங்களது படைப்புகளின் பிரதிகளை அல்லது அவற்றை வெளியிட்ட பதிப்பகங்கள் உரிமையாளர்கள் இங்குள்ள நூலகங்களின் சேகரிப்புப் பிரிவுகளுக்கு அனுப்பினார்களா? (நான் அவ்விதம் நினைக்கவில்லை). அதன் பின்னர் தமிழ் நூல்களைத் தேர்வு செய்யும் அதிகாரி தேர்வு செய்தாரா? கனடியத் தமிழ் எழுத்தாளர்கள் கனடியர்கள். அவர்கள் தங்களது படைப்புகளின் பிரதிகளை அனுப்ப வேண்டும். ஆனால் இன்னுமொரு நாட்டைச் சேர்ந்த கனடியர்களல்லாதவர்களான தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிடும் பதிப்பகங்கள் இவ்விதம் எதுவும் செய்யாமலேயே தங்கள படைப்புகளால் நூலகங்களை நிறைத்துவிட முடியும்.

நானும் அந்தப் பிரதான நிறைவேற்று அதிகாரியின் ஆலோசனைக்கேற்ப என்னிடமிருந்த தமிழகத்திலிருந்து ஸ்நேகா கனடாவிலிருந்து மங்கை பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு', 'அமெரிக்கா' ஆகிய நூல்களிரண்டின் பிரதிகளை அனுப்பி வைத்தேன். சிறிது காலம் பொறுத்துப் பதிலெதனையும் காணாத நிலையில், பிரதான நிறைவேற்று அதிகாரி இது சம்பந்தமாகத் தொடர்பு கொள்ளக் குறிப்பிட்ட அதிகாரியுடன் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அதன் பின்னர் மேற்படி இரு நூல்களுக்கும் உரிய பணத்தினை அனுப்பி வைத்தார்கள். அவ்விதம் அவர்கள் பணம் அனுப்பியிருந்தபடியால் என் நூல்களிரண்டினையும் நூலகத்தின் தமிழ் நூல்களைத் தேர்வு செய்யும் அதிகாரி தேர்வு செய்து விட்டதாக அறிந்தேன்; அல்லது புரிந்து கொண்டேன். ஏனெனில் பிரதான நிறைவேற்று அதிகாரியின் கடிதத்தின்படி எழுத்தாளர்கள் அனுப்பும் நூல்களைத் தெரிவு செய்தால் மட்டுமே அவர்கள் அதற்குரிய பணத்தினை அனுப்பி வைப்பார்கள். ஆனால் அதன் பின்னர் அவர்கள், பல்மொழிச் சேகரிப்புக்குரிய நூலகப் பிரிவினர், ஏனைய கிளைகளுக்கு எனது நூல்களின் அதிகப்படியான பிரதிகளைக் கோரி எந்தவிதத் தொடர்புகளையும் கொள்ளவில்லை. சிறிது காலம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு எனது நூல்களின் மேலும் பத்துப் பிரதிகளை ஸ்கார்பரோக் கிளையொன்றுக்கு எனது பெயர், முகவரி போன்ற விபரங்களுடன் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு வந்தேன். சிறிது காலத்தின்பின்னர் அந்நூல்களை நூலகங்கள் சிலவற்றில் கண்டேன். ஆனால் நூலகப் பிரிவினர் யாருமே இதுவரையில் தொடர்புகொள்ளவில்லை. அப்பொழுதுதான் புரிந்து கொண்டேன். அன்று கடமையாற்றிய தமிழ் நூல்களைத் தேர்ந்தெடுத்த அதிகாரி ரமணிசந்திரனின், பட்டுக்கோட்டை பிரபாகரின், ராஜேஸ்குமாரின், சுபாவின் தீவிர வாசகரென்ற விடயம். ஆனால் தற்போது நிலைமையில் சிறிது மாற்றம். கோணங்கியின் பாழியினை வாசிக்கும் தரத்திலுள்ள நூல்களைத் தேர்வு செய்யும் அதிகாரி இருப்பதாகத் தெரிகிறது.  ஆயினும் தற்போதுள்ள அதிகாரியும் இங்குள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை அதிக அளவில் வாங்குவதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

மேற்படி நூலகங்களில் நூல்களைத் தேர்வு செய்யும் அதிகாரியாகப் பணிபுரிபவருக்குப் பொறுப்புகள் பல உள. உதாரணமாகத் தமிழ் நூல்களைத் தெரிவு செய்யும் அதிகாரியாகப் பணிபுரிபவரை எடுத்துக் கொண்டால், அவர் அப்பணிக்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பது கனடா மற்றும் ஏனைய நாடுகளில் வெளியிடப்படும் பல்வேறு பிரிவுகளிலான தமிழ் நூல்களைத் தெரிவு செய்வதற்காக. இதனை அவர் இரகசியமாகச் செய்யத் தேவையில்லை. மிக அதிக அளவில் பிறநாடுகளிலிருந்து தமிழ் நூல்களைக் கண்ணை மூடிக் கொண்டு தெரிவு செய்யும் அவ்வதிகாரி (நூலகங்களிலுள்ள நூல்கள் பலவற்றைப் பார்க்குபோது அப்படித்தான் தெரிகிறது) கனடியத் தமிழ்ப் படைப்பாளிகளிலிருந்து, கனடியத் தமிழ்ப் பதிப்பகங்களிலிருந்து நூல்களை வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அடுத்தது இலங்கையில் வெளியிடப்படும் தமிழ் நூல்களைத் தேர்வு செய்வதற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். குமுதம், விகடன் போன்ற சஞ்சிகை வாங்குவதற்குக் கொடுக்கும் முன்னுரிமையினை இங்கு வெளிவரும் 'காலம்' போன்ற சஞ்சிகைகளை வாங்குவதற்கும், இலங்கையிலிருந்து வெளிவரும் 'ஞானம்', 'மல்லிகை' போன்ற சஞ்சிகைகளை வாங்குவதற்கும் கொடுக்க வேண்டும்.

மேலும் நூலகங்கள் எவ்விதம் நூல்களைத் தெரிவு செய்கின்றன என்பது பற்றிய கருத்தரங்குகளை நூலக அரங்குகளில் தமிழ் இலக்கியவாதிகளை அழைத்து நடாத்த வேண்டும். நூலகத்தின் மேலதிகாரிகளுடன் இது பற்றியெல்லாம் கதைத்து இங்குள்ள படைப்பாளிகள், பதிப்பகங்கள் ஆகியனவற்றின் நூல்களை அதிக அளவில் அனைத்து நூலகக் கிளைகளுக்கும் வருடா வருடம் வாங்குவதற்குரிய திட்டங்களின் உருவாக்கி நடைமுறைப்படுத்திட வேண்டும். இவையும் அவரின் பணிகளாகத்தான் நாம் கருதுகின்றோம். அது மட்டுமின்றி நூலகத்திற்குத் தெரிவு செய்யப்படும் நூல்களைப் படைத்த படைப்பாளிகள் பற்றிய விபரங்களைச் சுருக்கமாகவாவது தொகுத்து (கனடிய உத்தியோக மொழிகளிலானா ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில்) நூலகங்களின் தேர்வு செய்யும் உயர் அதிகாரிகளுக்கு, இத்தகைய முயற்சிகளுக்கு உதவி செய்யும் அரசு சார்ந்த அல்லது சாராத கலை, இலக்கிய ஆலோசனைச் சபைகளுக்கும் அனுப்பி அத்தகைய அமைப்புகளும் கனடாவின் உத்தியயோக மொழிகளில்லாத மொழிகளில் படைக்கப்படும் கலை, இலக்கிய முயற்சிகள் பற்றிய போதுமான அறிவினைப் பெறுதற்கு உதவி செய்ய வேண்டும். தேவையானால் மேற்படி அமைப்புகளிடம் தமது படைப்புகளை மொழிபெயர்ப்பதற்கு உதவிகளை நாடும் படைப்பாளிகளுக்கு ஆதரவாக தங்களது சிபாரிசுக் கடிதங்களையும் கொடுத்துதவலாம். இத்தகைய செயற்பாடுகளையும் செய்வதற்குத் தமிழ் நூல்களைத் தேர்வு செய்யும் பணியில் அமர்த்தப்பட்ட அதிகாரி முயலவேண்டும்.

எனவே தற்போதுள்ள சூழலைப் பயன்படுத்திக் இங்கு, கனடாவில் குறிப்பாகத் டொராண்டோவில் தங்களது நூல்களை வெளியிடும் 'காலம்' போன்ற பதிப்பகங்கள் , தேவகாந்தன் போன்ற எழுத்தாளர்கள் தங்களது நூல்களின் பிரதிகளை, அதற்குரிய விலைப்பட்டியலுடன் நூலகப் பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கலாம். இங்குள்ள நூலகப் பிரிவுகளின் பன்மொழிப் பிரிவுகளுக்காகச் சுமார் 50 நூல்களை வாங்கினாலே அவர்களது அச்சுச் செலவுக்குரிய சுமையினைச் சிறிது குறைத்துவிட உதவுமென்ற நம்பிக்கை எனக்குண்டு. இவ்விதம் அனுப்புவர்கள் பதிவுகள் இணைய இதழில் வெளிவரும் இக்கடிதத்தையும் குறிப்பிட்டு எழுதினால் பயனுண்டு என்ற நம்பிக்கை எனக்குண்டு. அவ்விதம் பயன்பெறும் பட்சத்தில் அதனை அறியத் தந்தால் மகிழ்ச்சியாகவிருக்கும். இத்தனை வருடங்களாக இங்குள்ள எழுத்தாளர் அமைப்புகளால் செய்யாத ஒன்றினை இக்கட்டுரையால் செய்ய முடிந்ததேயென்ற திருப்தியாவது ஏற்படும்.

ngiri2704@rogers.com


 
aibanner

 ©©©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்