இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2010  இதழ் 124  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல்!
பத்மாதேவி: ஓடினாள்! ஓடினாள் ! வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்!
பத்மாதேவி: ஓடினாள்! ஓடினாள் ! வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்!'
ஓடினாள்! ஓடினாள்! வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்!' கலைஞர் கருணாநிதியின் புகழ்பெற்ற வசனங்களிவை. பராசக்தி திரைப்படத்தில் வரும் மேற்படி வசனங்கள் ஒரு காலத்தில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தவை. தமிழகத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாம்களிலொன்றான கரூர் அகதிகள முகாமைச் சேர்ந்த பத்மாதேவி என்னும் ஈழத்தமிழ் பெண்ணுக்கு நிகழ்ந்த துயரகரமான முடிவு மேற்படி கலைஞரின் வசனங்களைத்தான் எமக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகின்றது. இவரது கணவரான குமார் என்பவர் அங்கு நடைபெற்ற கொலைச்சம்பவமொன்றில் சந்தேக நபராக அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்துதான் பத்மாதேவியின் வாழ்க்கையிலும் கரூர் காவற் துறையினரின் வடிவத்தில் புயலடிக்கத் தொடங்கியது. கணவரின் கொலைச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் வீடு திரும்பியதும் தன்னைத்தானே தீயிட்டு மாய்த்துக் கொண்டுள்ளார். அவர் தனது இறுதி வாக்கு மூலங்களில் கரூர் காவ்ற் துறையினர் தன்னைக் கொடுமைப்படுத்தியதை வெளிப்படுத்தியுள்ளார். கரூர் காவற் துறையினரால் குழுப் பாலியற் வன் புணர்ச்சிக்குள்ளாக்கப் பட்டுள்ளதால்தான் பத்மாதேவி தன்னையே மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக பல்வேறு மானுட உரிமை அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இத்தகையதொரு சூழ்நிலையில் கரூர் காவற்துறையின் உயர் அதிகாரிகள் த்ங்களைக் காத்துக் கொள்ள முற்படுவதாகவே தெரிகின்றது. கணவர் கொலைகாரனென்றதால் மனமுடைந்துதான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அறிக்கை விடுவதைவிட்டு முழுமையான , சுதந்திரமான விசாரணை நடைபெற்று உண்மைகள் கண்டறியப்பட்டு, வேலியே பயிரை மேய்ந்த நிலையினைக் கண்டறிந்தால் குற்றவாளிகளுக்குக் கடுமையான தணடணை வழங்குவோம். அதுவரை அமைதி காக்கவுமென அறிக்கை விடுவதற்குப் பதில் குற்றத்தை மூடிமறைக்க முற்படுவது காவற்துறையினர் மேல் சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தும்.

பத்மாதேவியின் கணவர் மிகவும் பயங்கரமான படுகொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளிலொருவர். பச்சிளம் குழந்தைகளிருவரை ஈவு, இரக்கமின்றி படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பவர்களிலொருவர். காவற்துறையினர் அது சம்பந்தமாக முழுமையான விசாரணகள் நடாத்தி நீதியினை நிலைநாட்டவேண்டியது அவசியம். ஆனால், அதற்காக அவரது மனைவியை விசாரணையென்ற பெயரில் , முறையான சட்ட ஆவணங்களேதுமில்லாமல், காவல் நிலையத்திற்கு ஆண் காவற்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டது ஏற்கமுடியாததொரு செயல்.  இது போன்று அவ்வப்போது தமிழகக் காவற்துறையினரால் ஈழத்தமிழ் அகதிகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுவது வ்ழக்கம். காந்திய அமைப்பின் தலைவர்களிலொருவரான கட்டடக்கலைஞர் டேவிட் ஐயா அவர்கள் கூட ஒரு சமயம் தனக்கேற்பட்ட நிலையினை விபரித்திருந்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது. தாய்த் தமிழகத்தை நாடி அபயம் தேடி வந்த ஈழத்துத் தமிழ அகதிகள் ஆண்டுக்கணக்காக அகதிகள் முகாம்களில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்வதாக அவ்வப்போது அறிக்கைகள், செய்திகள் வந்து அடங்கிப் போவது வழக்கம். குறிப்பாக மேற்படி முகாம்களில் வாழும் இளம் தமிழ்ப் பெண்கள் பல்வேறு வழிகளில் துன்பங்களை அனுபவிப்பதாகச் செய்திகள் வெளிவருவதனைக் குறிப்பிடலாம். முதல்வர் கூட சென்ற ஆண்டு அமைச்சர்கள் சிலரை மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை மேற்படி முகாம்களுக்கு அனுப்பி நிலைமைகளை அவதானித்துத் தனக்கு அறிவுறுத்தும்படி கட்டளையிட்டதைப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவை ஏதாவது நற்பயனை ஈழத்தமிழ் அகதிகளுக்கு ஏற்படுத்தினவா?

பத்மாதேவியின் மரணம் மீண்டுமொருமுறை தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள்பால் கவனத்தைத் திருப்பியிருக்கின்றது. பராசக்தியில் கல்யாணிக்கேற்பட்ட நிலைகண்டு 'ஓடினாள்! ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்' என்று மனம் வெம்பிக் குமுறிய கலைஞர் இன்று தமிழகத்தின் முதல்வர். வேண்டிய அளவுக்கு அதிகாரங்கள் அவரிடமுண்டு. பத்மாதேவியின் மரண வாக்குமூலத்தை அவரும் கேட்டிருப்பார் என்பதில் எந்த அளவும் சந்தேகமில்லை. இந்த விடயத்தில் அவர் தனது சட்டரீதியான அதிகாரங்களைப் பாவித்து கடுமையான நடவடிக்கையினை எடுப்பாரென எதிர்பார்ப்போம். காவல்நிலயங்கள் கொடியவரின் கூடாரங்கள் ஆகிவிடக் கூடாதென்பதற்காகவாவது கலைஞரின் கடுமையான நடவடிக்கை மிகவும் அவசியம். இல்லாவிட்டால் கலைஞரின் ஆட்சியில் வேலியே பயிரை மேய்வதா? என்று அனைவரும் கேட்கும் நிலை ஏற்பட்டுவிடலாம்.
- ஊர்க்குருவி -

பத்மாதேவியின் மரண வாக்குமூலம் (மிகவும் துயரகரமானதொரு வாக்குமூலம். மரண விளிம்பிலும் பத்மாதேவியின் குரலில் தொனிக்கும் பாதிப்பின் துயரம் பார்ப்பவர்,கேட்பவரின் நெஞ்சினை நிலைகுலைய வைத்திடும் தன்மை மிக்கது.): http://www.youtube.com/watch?v=fAM88_pD6Cs

 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்