இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நூல் விற்பனை!

காந்தளகத்தின் தமிழ்நூல் விற்பனைத்தளங்களிரண்டு!

- மறவன்புலவு க. சச்சிதானந்தன் -


தமிழ்நூல்.காம்!
தமிழ்நூல்.காம்!தமிழ்நூல் விற்பனைத் தளங்களைப் பட்டியலிட்டுள்ளீர்கள்.
www.tamilnool.com தளத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பது என் கடன். அனைத்துப் பதிப்பாளரிடமும் இருப்பிலும் விற்பனைக்குமிருக்கும் ஏறத்தாழ 40,000 தலைப்புகளை 80 பாட வாரியாகப் பகுத்து, தேடலை எளிதாக்க, தட்டச்சுத் தேடலை அறிமுகம் செய்து, தலைப்பையோ, ஆசிரியரையோ, பாட வகையோ கொண்டு தேடும் வசதியைக் கொடுத்து, தேடிக் கிடைத்த நூலைக் கூடைக்குள் ஒவ்வான்றாகப் போட்டுச் சேர்ந்ததும் பெயர் முகவரி முதலியன சேர்த்து உறுதி செய்தால் உடன் அப்பட்டியல் சென்னை காந்தளகத்துக்கு வரும், இருப்பு மற்றும் விலை, பொதி கூலி விசாரித்து உடனுக்குடன் பதிலில் கூறுவிலை அனுப்பி வைக்கிறோம். பணம் அனுபியதும் நூல்களை உரியவாறு அனுப்புகிறோம். ஏறத்தாழ 60 நாடுகளில் வாழும் தமிழரும் தமிழரல்லாதோரும் பயனடைகின்றனர்.

தேவாரம்.ஆர்க்!
அவ்வாறே உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்காகவும், சைவர்களுக்காகவும் தமிழ் தெரியாத, ஆனால் திருமுறைகளைப் பயில விளையும் பிற மொழியாளருக்காகவும் பன்னிரு திருமுறையின் 1256 தலைப்புகளுள் அடங்கும் 18,246 பாடல்களை
www.thevaaram.org மின்னம்பல தளத்தில் வெளியிட்டு உள்ளோம். பாடல்பெற்ற 285 கோயில்களின் வரலாறும் பாடியருளிய 27 ஆசிரியர்களின் வரலாறும் உண்டு. பாடலின் முதற் சொல்லையோ, இடையில் உள்ள ஒரு சொல்லையோ தெரிந்த ஒருவர், அச்சொல்லைத் தட்டச்சுச் செய்து பாடலை, பதிகத்தை, ஆதிரியரை, கோயலை தேடும் வசதியை உள்ளடக்கினோம். 18,246 பாடல்களுக்கும் பொழிப்புரை உண்டு, குறிப்புரை உண்டு, ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டு. வடமொழி மற்றும் மலையாள மொழிபெயர்ப்புகளையும் தேடிச் சேர்க்கிறோம். பிற மொழிபெயர்ப்புகளையும் தேடுகிறோம். தெலுங்கு, கன்னடம் , மலையாளம், சிங்களம், தேவநாகரி, அரபி, பர்மியம், சீயம், யப்பான், உருசியன், ஆபிரிக்கான்சு, மலாய், இந்தோனீசியா, பிடிசின், கிறியோல், சுவாகிலி, ஆங்கிலம் ஆகிய வரிவடிவங்களில் ஒலிபெயர்த்துத் தந்துள்ளோம். தமிழ்ச் சொல்லையோ தொடரையோ மேற்காணும் மொழிகளுக்கு ஒலிபெயர்க்கும் கருவியை அத்தளத்தில் அடக்கி உள்ளோம்.

அன்புடன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
tamilnool@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner