இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2007 இதழ் 92  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!

நன்றி: புதினம்.காம்!
வேண்டவே வேண்டாம் யுத்தம்: முன்னாள் வான்படைத் தளபதிகள் மூவர் கருத்து!

NO WAR!இலங்கைத் தீவில் யுத்தம் வேண்டமே வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் வான்படைத் தளபதிகள் மூவர் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிங்கள வார ஏடான "ராவய"வுக்கு மூவரும் அளித்துள்ள நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறிலங்காவின் முன்னாள் வான்படைத் தளபதி எயார் வைஸ் மார்சல் ஹரி குணதிலக்க:

முழு உலகும், எமது நாட்டின் பெரும்பான்மையினரும் இந்தப் பிரச்சினையை யுத்தத்தினால் தீர்க்க முடியாது என்றுதான் கூறுகின்றனர். எனினும் எமது நாட்டில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சிறு பிரிவினர் இந்தப் பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் எனக் கூறுகின்றனர். நான் நீண்டகாலம் வான்படையில் சேவையாற்றியிருக்கிறேன். யார் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நான் என் அனுபவத்தைக் கொண்டே இதனைக் கூறுகின்றேன்.

எமக்கு யுத்தம் செய்வதற்கு போதுமான அளவு இராணுவத்தினர் இருக்கிறார்களா? யுத்தம் செய்வதற்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு எம்மிடம் பணம் இருக்கிறதா? என நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். இவை இரண்டுமே இல்லையென்றே நான் கூறுகிறேன். அதனால் இந்த யுத்தத்தை எம்மைப் போன்ற நாட்டால் தாங்கிக்கொள்ள இயலாது.
ஆகையால் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் அதேவேளையில் இந்தப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்கொண்டு வர வேண்டும்.

1983 யுத்தம் தொடங்கிய ஆண்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியானது 1.7 பில்லியன் ரூபாவாகும். இந்தத் தொகையானது 2002 ஆம் ஆண்டளவில் 60 பில்லியன் ரூபாவானது. 2002 முதல் 2004 வரையிலான காலப்பகுதிக்குள் சமாதான நடவடிக்கைகளினால் யுத்தத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி 60 பில்லியன் ரூபாவிலிருந்து 58,57 பில்லியனாக குறைவடைந்தது. 2006 ஓகஸ்ட் வரை நாட்டின் பாதுகாப்புச் செலவீனமானது 69.5 பில்லியன் ரூபாவாக இருந்தது. 2006 ஓகஸ்ட் மாதம் முதல் 2007 மார்ச் வரை இந்த செலவானது 139.6 பில்லியன் வரை சென்றுள்ளது.

அதன் பின்னர் மார்ச் மாதத்தில் விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் நடத்திய பின்னர் எமது வான்படையினர் அதற்கு முகம் கொடுப்பதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டது. எமது கருத்திற்கேற்ப இந்த செலவுகளுடன் 2007 ஆம் ஆண்டு இறுதியில் பாதுகாப்பு செலவீனங்கள் 200 பில்லியன் வரை அதிகரிக்கும்.

நான் வான்படைத் தளபதியாக இருந்த காலப்பகுதியில் வான்படைக்கு ஒரு வருடத்திற்கு வரவு - செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டது. இன்று அது ஒருநாளைக்குச் செலவாகிறது. இதுதான் யுத்தத்தின் உண்மையான நிலை. யுத்தம் செய்ய வேண்டும் எனக் கூறுபவர்கள் இவற்றை அறிவார்களா என எனக்குத் தெரியாது.

மற்றையது இந்திய விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அண்மையில் எமது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மகிந்த ஆலோசகர் பசில் ராஜபக்சவும் இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியையும் அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசகர் எம்.கே.நாராயணனையும் சந்தித்தனர்.

அவ்விருவரும் என்ன சொன்னார்கள்? நாம் உங்களுக்கு ஆயுதங்களை தருகின்றோம். ஆனால் அவை பாதுகாப்பிற்கே தவிர தாக்குதல் நடத்துவதற்கு அல்ல என்றார்கள். அதனால் "மல்ட்ரிபரல் ரொக்கட் லோஞ்சர்" கேட்க வேண்டாம் எனத் தெரிவித்தனர். அதனால் இந்த வெற்றியுடன் யுத்தத்தை வடக்கிற்கு திருப்பினால் இந்தியா அதற்கு இடமளிக்காது. அது நிச்சயம். அதனால் இந்த யுத்தம் வேண்டும் என கூறுபவர்கள் அதனைப் பற்றியும் எண்ணினால் நல்லது. எனது கருத்து உடனடியாக அரசியல் தீர்வைப் பெற பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும் என்பதாகும். அது தவிர இதற்கு வேறு தீர்வுகள் கிடைக்காது.

முன்னாள் வான் படைத் தளபதி எயார் வைஸ் மார்சல் ஒலிவர் ரணசிங்க:

1983 ஆம் ஆண்டிலிருந்து இந்த பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் காலத்திற்குக் காலம் நிலவி வந்துள்ளது. எனினும் இதுவரை அதனை முடிவிற்குக் கொண்டுவர முடியாது போயுள்ளது. யுத்தத்தினால் தீர்ப்பதற்கு முயன்று எமக்கு பல விடயங்கள் இல்லாமல் போயுள்ளன.

எனினும் சிலர் யுத்தத்தையே வேண்டுகின்றனர். யுத்தத்தின் மூலம் தீர்வைத் தேடுபவர்கள் இன்னும் உள்ளனர். இதில் சிக்கல் என்னவென்றால் யுத்தத்தை வேண்டி நிற்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் யுத்தம் தொடங்கப்பட்ட காலத்தில் சிறுவர்களாக இருந்தமையாகும்.

யுத்தத்தை வேண்டும் இவர்களுக்கு யுத்தத்தைப் பற்றிய எவ்வித அனுபவமும் இல்லை. அதிலிருக்கும் சிக்கல்கள் என்னவென்பதை அவர்கள் அறியாதவர்கள். இந்த கோரிக்கையினை யுத்தத்திற்கு வெளியிலிருந்தான கோரிக்கையாகவே நான் காண்கின்றேன். யுத்தம் செய்தவர் என்ற வகையிலும் அதனை வழி நடத்தியவர் என்ற வகையிலும் இவர்கள் எதற்காக யுத்தத்தைக் கோருகின்றனர் என என்னால் எண்ணிப் பார்க்க முடியாதுள்ளது.

யுத்தத்திற்குச் செல்லும் சிப்பாய் எங்கோவொரு தூரத்தில் இருக்கும் கிராமத்தில் பெரும் பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் ஒருவராவார். ஏதேனுமொரு பொருளாதார பலத்தினைப் பெற்றுக் கொள்வதே அவர் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கான முதல் காரணியாகும். அதனுள் நாட்டு மற்றும் இனப்பற்றும் இருக்கலாம்.

அவர்கள் முடிவிற்கு கொண்டுவர விரும்புவது யாரை? வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களையா? இல்லை. எமது நாட்டில் வாழும் தமிழ் மக்களையே. ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையில் இடம்பெறும் யுத்தம் அல்ல இது. இந்த யுத்தத்தை வேண்டுபவர்களையிட்டு நான் ஆச்சரியமடைகிறேன். யுத்தத்தின் மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியுமாயின் அதற்கு முதலில் இணங்குவது முப்படையினராகும்.

எனினும் இந்த 25 வருடங்களில் எமது எவ்வளவு உயிர்களும் சொத்துக்களும் அழிந்து போயுள்ளன. அவர்களுக்கும் அப்படியே. பிரச்சினைகளுக்கு, சிக்கல்களுக்கு ஆயுதங்களின் மூலம் தீர்வுகாண முடியாது. ஆயுதங்கள் செய்வது அந்தப் பிரச்சனையை கீழ்த் தள்ளுவதேயாகும். இதன் பலன் எந்த வேளையிலும் அந்த பிரச்சனை மீண்டும் எழுவதாகும். நாம் பல தசாப்த இராணுவ அனுபவங்களைக் கொண்டே இவற்றைக் கூறுகின்றோம். பொய்யாக வீரக்கதைகளை எம்மாலும் கூற முடியும். அதனை இப்பொழுது மிக இலகுவாக செய்யலாம். ஏனெனில் நாம் இப்பொழுது இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்களாவர்.

யுத்தம் வேண்டும் எனக் கூறுபவர்களோ அவர்களின் உறவினர்களோ இராணுவத்தில் இல்லை. யுத்தத்திற்குச் செல்வது கிராமப்புறங்களில் இருக்கும் அப்பாவி இளைஞர்களே. இது வடக்கிற்கும் ஏற்புடையதே. நான் வான் படையில் சேவையாற்றிய காலத்தில் இருந்து அந்தந்த அரசியல் தலைவர்களுக்கு இந்தப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கொண்டுவருமாறே கூறினேன். ஆனால் இன்றுவரையில் அதற்கு நியாயமான தீர்வு கிட்டவில்லை.

எமது கடந்த கால யுத்த வரலாற்றைப் பார்த்தோமானால் நாம் அடித்துப் பெறுவோம். மீண்டும் தோல்வியடைவோம். மீண்டும் அடிப்போம். மீண்டும் தோற்போம். இதுதான் இப்பொழுதும் நடைபெறுகிறது. இதில் முடிவே இல்லை. அழிவு மட்டுமே ஏற்படும். யுத்தத்தை வென்றிருப்பதாக பொதுமக்களுக்கு காண்பிக்க முயல்வதே இப்பொழுது நடக்கிறதே தவிர நாட்டிற்கு வெற்றி பெற்றதை காண்பிப்பதல்ல. இவை இன்றைய நாளுக்காக செய்யப்படுவதேயன்றி நாட்டிற்காக செய்யும் வெற்றிகள் அல்ல. இதுதான் எந்நாளும் நடைபெறுவது.

வடக்கிலும் கிழக்கிலும் யுத்தம் செய்து யுத்த மோகத்தை ஏற்படுத்தி நாட்டு பிரச்சினைகளில் சிக்கித் திணறிப் போயிருக்கும் மக்களுக்கு தங்களின் பிரச்சினைகளை தற்காலிகமாக மறைத்துக் கொள்வதற்கு தற்காலிகமாக திருப்தியடைவதற்கு ஏற்றது. நாடென்ற வகையில் இதனால் மேலும் மோசமான நிலையே ஏற்படும். இது யுத்தத்தை வேண்டுபவர்கள் விருப்பத்துடன் மறக்கும் ஒருவிடயம் இதுவாகும். இந்த பொய்மையில் இருக்கும் வரை நாடென்ற வகையில் எமக்கு எதிர்காலம் ஒன்று இல்லை.

முன்னாள் வான் படைத் தளபதி எயார் வைஸ் மார்சல் டி.சி.பெரேரா:

ஒரிரு வெற்றிகளைப் பெறுவதால் இந்த பிரச்சினையை யுத்தத்தினால் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் அது பிழையாகும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும். அதனை அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். எனினும் யாரும் எண்ணிப் பார்க்காத விடயம் தான் ஏன் பயங்கரவாதம் தொடங்கியது என்பது.

இராணுவத்தால் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும். எனினும் அதனை முடிவிற்குக் கொண்டுவர முடியும் என நான் எண்ணவில்லை. அதனை இந்த நாட்டினை ஆள்பவர்களே செய்ய வேண்டும். பிரபாகரனையோ விடுதலைப் புலிகளையோ அழிப்பதால் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது. அதனை யுத்தத்தை வேண்டுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து நாம் கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்றுவதன் ஊடாகவே இதனை முடிவிற்குக் கொண்டு வர முடியும். குடும்பிமலை வெற்றியுடன் வடக்கிலும் தாக்குதல் நடத்தி இதனை முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமென சிலர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கின்றனர். இது கெரில்லா இயக்கத்துடன் செய்யும் யுத்தம்.

அவர்கள் நாட்டின் எல்லா இடத்திற்கும் இந்த யுத்தத்தைக் கொண்டு செல்கின்றனர். தமிழ் மக்களும் அவர்களுக்கு உதவுகிறார்கள். இவ்வாறு யுத்தம் செய்யச் சென்றால் மேலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் மறைமுகமாக சம்பந்தப்படுவார்கள்.

மீண்டும் அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும். எமது பக்கத்திலிருந்து இன்னும் இதற்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. அந்தத் தீர்வு தமிழ் மக்களுக்கு நியாயம் ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது போன்று எமது அரசியல் செயற்பாடுகள் பக்கத்திலிருந்து இதற்கு தீர்வு எங்கே? தமிழ் மக்கள் எப்படி எம்மீது நம்பிக்கை வைப்பார்கள். அவ்வளவு அடித்தோம் இவ்வளவு அடித்தோம் என்பதே இந்த 25 வருடங்களில் நாம் சொல்லியிருப்பது.

யுத்தத்தை வேண்டுபவர்களுக்குத் தேவை இந்த நாட்டை இன்னுமொரு பலஸ்தீனமாக்குவதற்கா? இல்லையேல் ஆப்கானிஸ்தானாக்குவதற்கா? நாம் எமது அனுபவங்களைக் கொண்டே இவற்றைக் கூறுகின்றோம். இந்தப் பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்க்க முடியாது என்றே நான் மீண்டும் கூறுகின்றேன். முடியும் என்று நினைப்பார்களாயின், கூறுவார்களாயின் அவர்களை யுத்தம் செய்ய அனுப்ப வேண்டும். யுத்தம் செய்ய வேண்டும் என கூறுபவர்கள் மிகச் சொற்பமானவர்களாவர்களே. இந்த சொற்பமானவர்ள் கூறும் விடயங்களால் தமிழ் மக்கள் எம்மிடமிருந்து விலகிச் செல்லல் மேலும் அதிகரிக்கக்கூடாது.

இந்த நாட்டின் முட்டாள் அரசியல்வாதிகள் தான் யுத்தம் தீர்வென்று கூறுகின்றனர். பௌத்த மத குருமாரும் யுத்தம் வேண்டும் எனக் கூறுவதைத் தான் என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியாதுள்ளது. நாம் படையில் பணியாற்றிய காலத்தில் எமது நண்பர்களாக தமிழர்கள் இருந்தனர். இன்றும் அந்த நட்பு இருக்கிறது. நாம் எமது சேவையை செய்தோம் சண்டித்தனமான கதைகளைக் கூறவில்லை. நாம் அரசியல்வாதிகளின் வேலைகளைச் செய்யவும் போகவில்லை. நாம் இப்பொழுதாவது இந்தக் குழியிலிருந்து வெளியே வர வேண்டும். இல்லையேல் இந்தப் பிள்ளைகளுக்கு எதிர்காலம் இருக்காது.

இந்த யுத்தத்தினால் இலட்சக்கணக்கானவர்கள் அனாதைகளாகியுள்ளனர். இவ்விதம் தொடர்ந்து சென்றால் இந்த நாட்டை ஒரு கொடிய நாடாக அனைத்துலகம் தீர்மானிக்கும். அதனால் யுத்தத்தை வேண்டுபவர்களை அவ்வளவு பொருட்படுத்தத் தேவையில்லை.

http://www.eelampage.com/?cn=32786


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner